Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்

சுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம்.  கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம்.

 

விதிமுறைகள்:

அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு,


எதிர்வரும் 30.03.2017 அன்று யாழ் இணையம் தனது 19ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. 1999ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் நாள் தொடங்கப்பட்ட யாழ் இணையம், பல்வேறு தடைகளையும், மேடு பள்ளங்களையும் தாண்டி, தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகமான மாற்றங்களுக்கும், சமூக வலைத்தளங்களின் துரித வளர்ச்சிக்கும் ஈடுகொடுத்து இன்று தன்நிகரற்ற தமிழ் இணையத்தளமாய் வளர்ந்துள்ளது. உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு குடிலாக, தமிழர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் காலக்கண்ணாடியாக, உலகத் தமிழர்தம் கருத்துக்களை காவும் ஒரு உறவாக யாழ் இணையம் உள்ளது.

யாழ் இணையம் 19 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் நாளினைச் சிறப்பிக்கும் முகமாக கள உறுப்பினர்களின் சுயமான ஆக்கங்களைக் கோருகின்றோம்.

சுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம்.  கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம்.

எனினும் இச் சுய ஆக்கங்களில் யாழ் களம் 19ஆவது அகவையில் காலடி வைப்பதற்கான வாழ்த்து விடயங்களை தவிர்ப்பது நல்லது.

எமது நோக்கம் அனைத்து கள உறவுகளையும் அவரவர் திறமைகளுக்கேற்ப சுயமான ஆக்கங்களைப் படைப்பதற்கான வெளியை யாழ் கருத்துக்களத்தில் வழங்குவதேயாகும். இதன் மூலம் கள உறவுகள் தேங்கிப்போயுள்ள தமது படைப்புத் திறனை வெளிக்காட்டுவார்கள் என்று நம்புகின்றோம். எனவே அனைவரையும் உற்சாகத்துடன் பங்குகொள்ளுமாறு கோருகின்றோம்.

யாழ் களம் 19 ஆவது அகவைக்குள் காலடி வைக்கும் 30.03.2017 அன்று யாழ் கள உறவுகளின் சுய ஆக்கங்களுக்கான சிறப்புப் பக்கத்தை வெளியிடுவோம். கள உறவுகள் சுய ஆக்கங்களைத் தயார்படுத்தவும், மெருகேற்றவும் ஒரு மாத காலம்தான் இருக்கின்றது. நாட்கள் விரைந்து ஓடிவிடும் என்பதால், காலந்தாழ்த்தாது சுய ஆக்கங்களைத் தயார்படுத்த இப்போதே ஆயத்தமாகுங்கள்.

விதிமுறைகள்:

  1. யாழ் கள உறுப்பினர்கள் மட்டுமே ஆக்கங்களை படைக்கலாம். உறுப்பினர்கள் அல்லாதவர்கள் உறுப்பினர்களாக இணைந்து ஆக்கங்களை இணைத்துக் கொள்ளலாம்.
  2. ஆக்கங்கள் கள உறுப்பினர்களின் சுயமான ஆக்கங்களாக இருக்கவேண்டும்.
  3. கருப்பொருள் எதுவாகவும் இருக்கலாம் (வாழ்த்துக்களைத் தவிர்த்து). எனினும் ஆக்கங்களின் உள்ளடக்கத்திற்கு  உறுப்பினர்களே முழுப் பொறுப்பும் ஏற்க வேண்டும்.
  4. கள உறுப்பினர் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட ஆக்கங்களைப் படைக்கலாம்.
  5. கள உறுப்பினர் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட வகைமைகளில் ஆக்கங்களைப் படைக்கலாம்.
  6. ஆக்கங்கள் யாழ் களத்திற்கென எழுதப்பட்டதாக/தயாரிக்கப்பட்டதாக இருக்கவேண்டும்.
  7. ஆக்கங்கள் இதற்கு முன் வேறெங்கும் பிரசுரம் ஆகாததாக இருக்கவேண்டும்.
  8. ஆக்கங்கள் யாழ் கள விதிகளை மீறாத வகையில் அமையவேண்டும்.
  9. யாழ் களத்தில் பிரசுரம் செய்து ஒரு வாரம் தாண்டும் வரையிலும் வேறெங்கும் பிரசுரம் செய்யலாகாது.

"நாமார்க்கும் குடியல்லோம்"

நன்றி

யாழ் இணைய நிர்வாகம்

  1. துருக்கியும்.... நானும். - தமிழ் சிறி. - நான் வேலை செய்யும், இடத்தில்... சந்தித்த, பல... துருக்கி ஆட்களின், 30 ஆண்டு கால... நினைவு மீட்டல். ------ ஒவ்வொரு துருக்கியரும்.... ஜனவரி முதலாம் திகதி பிறந்திருப்பார்.

  2. துருச்சாமி . சாமியுடன் ஒருநாள். (நகைச்சுவை). என்னுரை: இந்தக் காவியத்தில் பாலகர் காண்டம், வாலிபர் காண்டம் என இரு காண்டங்கள் உள்ளன. பாலகர் காண்டத்தில் ஆறு படலங்கள் இருக்கின்றன. அவையாவன: 1) வழித்தேங்காயைத் தெருப் பிள்ளையாருக்கு உடைத்தல் படலம். 2) பாதயாத்திரைப் படலம். 3) அற்புதங்கள் அருளாசி வழங்கும் படலம். 4) நினைவேந்தல் படலம். (பிளாஷ்பேக் வாசகர் சிரமம் தவிர்க்க). 5) பந்திபோஜனப் படலம். 6) நீதிவழங்கும் படலம். இந்த ஆறு காண்டங்களும் பத்து மாதத்தில் இருந்து நூறு வயதுவரை வாழ்பவர்கள் படித்துப் பயன்பெற வேண்டியது. அடுத்து வாலிபர் காண்டம். இதில் இரண்டு படலங்கள் இருக்கின்றன. இதை வாசிக்க சில கட்டுப்பாடுகளை கம்பெனி விதித்துள்ளது. அ…

  3. டிக் என்று வந்து விழுந்த மெசெஞ்சரின் சத்தம் அவளைத் திடுக்கிட்டு எழ வைத்தது. பதட்டத்துடன் கணவனை எட்டிப் பார்த்தவளுக்கு அவன் விழிக்கவில்லை என்று தெரிந்து நின்மதிப் பெருமூச்சு ஒன்று எழுந்தது. நல்ல காலம் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கிறார். இல்லை எனில் ஆரவன் உனக்கு இந்த நேரத்தில மெசேச் அனுப்புறான் என்று .......... எதேதோ கேட்டுப் பிரச்சனையாகியிருக்கும். போனை எடுத்து சத்தத்தை நிறுத்திவிட்டு மீண்டும் போர்வையைப் போர்த்தியவளுக்கு மனதில் சொல்லவொண்ணாத் துயரம் ஏற்பட்டது. முன்னர் இவளின் முகநூலில் 1300 பேர் நட்பில் இணைந்திருந்தனர். அவர்களில் பலரை இவளுக்கு தெரியாதுதான். ஆனால் அவர்கள் போடும் பதிவுகளைப் பார்த்தது, பிரச்சனை இல்லாதவர்கள் என்று மனதில் பட்டதில் நட்பில் இணைத்திருந்தாள். ஆனாலு…

  4. Started by கிருபன்,

    இருட்டடி பாகம் - 1 எங்கள் ஊரும் பிற ஊர்களைப் போலவே செழிப்பான தோட்டங்கள், தோப்புக்கள், பனங்கூடல்கள், வெட்டைகள், புல்வெளிகள் நிறைந்த ஒரு சாதாரண கிராமம். எல்லா ஊர்ப் பிள்ளைகளையும் போலவே பள்ளிக்குடம், ரியூசன் என்று இளம் பிராயத்து சிறுவர்கள் முதல் வளர்ந்த மாணவர்கள் வரை நித்தமும் படிக்கவென்று ஓடுப்பட்டுத் திரிந்தாலும், கிடைக்கும் சொற்ப இடைவேளைகளில் விளையாட்டுக்களுக்கும் வேறு பொழுதுபோக்குகளுக்கும் எங்களால் நேரத்தை ஒதுக்கக் கூடியதாகத்தான் இருந்தது. ஓவ்வொரு வயதுக் குழுவிலும் இருப்பவர்கள் காலநேரத்துக்கு ஏற்றபடி வேறுவேறு விளையாட்டுக்கள் விளையாடுவோம். கிட்டிப்புல், கிளித்தட்டு, சிரட்டைப்பந்து போன்ற கிராமத்துக்கேயுரிய பாரம்பரிய விளையாட்டுக்கள் முதல் கிரிக்கெற்…

    • 66 replies
    • 5.9k views
  5. சிதிலமான தபால் பெட்டி - காங்கேசன்துறை

  6. இந்த தலைப்பைப் பார்க்கும் பலருக்கு இதில என்ன புதினம் இருக்கு என்று நக்கல் நழினமாக பார்க்கலாம். ஆனால் என்னோடு ஒத்த வயதினருக்கு இந்த லோங்ஸ்இன் வலி புரிந்திருக்கும். ஏறத்தாள 45 வருடங்கள் முன்பாக யாரும் நினைத்த நேரத்தில் இந்த லோங்சை மாட்ட முடியாது.அதை மாட்டுவதற்கு ஒரு தகுதி இருக்க வேண்டும் என்று எழுதாத சட்டம் ஒன்று இருந்தது. பாலர் வகுப்பிலிருந்து பத்தாவது வகுப்பு வரை சந்தோசமாக போகும் பள்ளி வாழ்க்கை ஜீசிஈ எனும் பரீட்சையில் வந்து தடம் புரழும். இதுவரை அரைக் காற்சட்டைளோடு சுதந்திரமாக திரிந்தவர்கள் இந்த பரீட்சையில் சித்தியெய்தினால் மட்டுமே அடுத்த கட்ட படிப்பு மாத்திரமல்ல எதிர் காலமே சூனியமாகிவிடும். இந்த சோதனைகளில் சித்தியடைந்தவர் மட்டும் புதிதாக லோங்ஸ் மா…

  7. கிராமத்தில் வாழும் மக்களுக்கு கிடைக்கும் பல சுக போகங்கள் நகரத்து மக்களுக்கு கிடைப்பதில்லை.அதிலே ஒன்றை எடுத்து விடலாம் என்று தொடங்குகின்றேன். எந்தக் காலங்களாலும் சரி ஏதோ ஒரு திருவிழா சன சமூக நிலையம் திறப்பு விழா அல்லது ஆண்டுவிழாஎன்று ஏதோ ஓர் கொண்டாட்டம் நடந்து கொண்டிருக்கும்.கோவில்களில் திருவிழா தொடங்கினால் கொடியேற்றத்தில் இருந்து பூங்காவனம் வரைக்கும் ஏட்டிக்கு போட்டியாக சிகரம்கள் கட்டி பெரிய மேளம் சின்னமேளம் கண்ணன் கோஸ்டி என்று விடிய விடிய கூத்துக்கள் நடக்கும்.இந்தக் காலங்களில் ஒவ்வொரு திருவிழாகாரரினதும் கூத்துக்களை விலாவாரியாக அச்சடித்து கார்களில் ஒலி பெருக்கி கட்டி காலையில் இருந்து மாலை வரை இடை இடையே பாட்டு சத்தங்களின் நடுவே அன்றைய நிகழ்ச்சி நிரலையும் சொல்லிக் கொண…

  8. "எங்களுடன் பயணித்தமைக்கு நன்றிகள் மீண்டும் ஒரு பயணத்தில் சந்திப்போம்"என்ற குரலைக்கேட்டு எல்லோரும் தங்களது இருக்கை பட்டிகளை சரிபார்த்து கொண்டனர்.நான் எனது இருக்கை பட்டியை போடாமல் இருந்தேன்.எத்தனை தரம் விமானத்தில ஏறி இறங்கிட்டன் ஒன்றும் நடக்கயில்லை பிறகு ஏன் இந்த பேல்ட் ,எனக்கு தேவையில்லை அவையளுக்கு தேவையென்றால் வந்து போட்டுவிடட்டும் என நினைத்தபடி மேலே பார்த்து கொண்டிருந்தேன். "சேர் வாசின்ட் யுஆர் சீட் பெல்ட்"என்ற படி பக்கத்தில விமானப்பணிப்பெண் புன்னகைத்தபடி நின்றாள்.உடனே நான் பேல்ட்டை தேடுவது போல நடித்து எடுத்து போட்டுக்கொண்டேன். இதுதான் உவரின்ட முதல் விமானப்பயணம் என்று சகபயணிகள் நினைத்துவிடுவார்கள் என்ற வெட்கத்தில் உடனே போட்டுவிட்டேன். முப்பது வருடங்கள…

    • 40 replies
    • 4.2k views
  9. ஈரநிலா உயிர் சுற்றிவர சிதறி விழுந்ததுபோலும், வழி தவறிய மூச்சு திகைத்து அப்படியே உறைந்ததுபோலும், இரத்தநாளங்களில் அதிர்வுகள் அடர்ந்ததுபோலும், விவரிக்க முடியாத வகையில் பிரித்தறியும் உணர்வு உறைந்ததுபோலும்…….. அந்தக் கணம் ஆட்டிப்படைத்தது. இதுவரை மானுட உணர்வில் அறியாத களேபரமாக மீனாவின் ஆன்மா தவித்தது. கசியலாமா என்று ஒரு விழியும், அகல அகன்று நோக்கலாமா என்று மறுவிழியும் உடன்பாடற்ற போட்டிக்குள் உட்பட்டிருந்த இத்தருணம்போல் அவள் இதுவரை அநுபவித்ததில்லை. அவளுக்குள் இல்லாத ஊமையை உருவாக்கி வேடிக்கை பார்த்தது விதி. ஒலி எழுப்பும் புலன் இல்லாத இடத்தில் வலி செய்தால் என் செய்யும்? அப்படி ஒரு நடப்பு அவ்விடத்தில் அரங்கேறியிருந்தது. இக்கொந்தளிப்பின் அடியில் கலங்கி ஓலமிட்டபடி மீன…

  10. “அத்தான் எழும்புங்கோ“ காலை நித்திராதேவியின் அணைப்பின் சுகம் கலைந்த கடுப்பையும் மீறி அழைத்த குரல் காதில் தேனாக நுளைந்தது. அழைத்தபடி அருகே வந்து தட்டி எழுப்பிய கையை பட்டென்று பற்றி அணைத்தான். “விடுங்கோ“ அவள் சிணுங்கிச் சிவந்தாள். சிவந்த கன்னத்தில் செல்லமாக ஒரு தட்டுத் தட்டியவன் அவள் அழகை ரசிக்கத் தொடங்கினான். சிவந்த கன்னம் அவன் கைபட்டதால் மேலும் சிவந்து நெற்றியை அலங்கரித்த குங்கும நிறத்தோடு கலந்தது. சாமியைக் கும்பிட்ட அடையாளம் அவள் நெற்றியில் மெல்லிய வெண்ணிறக் கோடாக மிளிர்ந்தது. கூந்தலில் சூடியிருந்த மல்லிகை மலரின் மணம் அவன் நாசியில் ஏறி நித்திரைச் சோம்பல் எல்லாம் விரட்டி அடித்தது. ஆறரை மணிக்கு எழுந்து காலைக் கடன்கள் எல்லாம் முடித்து வேலைக்குப் புறப்பட அவனுக்கு …

  11. அண்டைக்கும் வழக்கம் போல குளிர் தான்! போதாக்குறைக்குக் காத்தும் கொஞ்சம் வேகமாக வீசிக்கொண்டிருந்தது! விடிய எழும்பும் போதே இண்டைக்குக் கட்டாயம் தடிமன் வரப்போகுது என்று தனக்குள் நினைத்துக்கொண்டான் சந்திரன்! அல்பேர்டன் சந்திக்கு ஓருக்காப் போனால்….ஒரு ஓமப் பக்கற்றும்...கொஞ்சம் ‘பேயாவ' சோடாவும் வாங்கிக் கொண்டு வரலாம் தான்! ஆனால், இந்தக் கண்டறியாத குளிரை நினைக்கத் தான் அவனுக்குத் தயக்கமாக இருந்தது! இரண்டு.. பிஞ்சு மிளகாய் போட்டால், திரளி மீன் சொதி நல்லா இருக்குமெண்டு அவனுக்குத் தெரிந்திருந்தாலும்/ இந்தக் குளிருக்குப் பயந்து...பிஞ்சு மிளகாய் இல்லாமலேயே அவன்பல நாட்கள் சொதி வைத்ததிருக்கிறான்!ஆனால் இண்டைக்குக் கட்டாயம் போகத் தான் வேண்டுமென நினைத்தபடி, லெதர் ஜக்கெட்டை…

  12. ஒரு சாதாரண பயணம் இது கதையுமில்லை கத்தரிக்காயுமில்லை - எனது பல பயணங்களில் இதுவும் ஒன்று. இது முதற் தடவையும் இல்லை, இறுதியும் இல்லை - ஆனால் தொடரும் எனது பயணங்களில் ஒன்று. இங்கு இதே முறையில் பலதடவைகள் வந்திருந்தாலும், ஒவ்வொருமுறையும் புதிய அனுபவங்கள் + புதிய மனிதர்கள். முதற்தடவையாக பகிர்கின்றேன். பல பெயர்களை தவிர்த்துள்ளேன். கற்பனை கலக்காத ஒரு பதிவு இது. புதன் கிழமை மச்சான் நான் முதலாம் திகதி திரும்புறன் எப்படா வாறாய்? - தொலைபேசியில் ஒரு கதறலா அதட்டலா என்று புரியாத நண்பனின் குரல். இவனை சமாளிப்பது இலகுவான விடயமில்லை என்று எனக்கும் தெரியும். சிலவேளைகளில் அன்பினால் அதட்டுவதும் அதிக உரிமை எடுப்பதும் ஏற்றுக்கொள்ளக்கூடியதே. மச்சான், எனக்கு கொழும்ப…

  13. நண்பர்கள் என்பவர்கள் எம்மோடு இரண்டரக்கலந்தவர்கள் எம்மை அறிந்தவர்கள் புரிந்தவர்கள் என்பதையும் தாண்டி முகம்தெரியாமலேயே நட்பு வைத்துக்கொள்ளலாம் அதனாலும் பல நல்லது செய்யலாம் பல அரிய விடயங்களை பெறலாம் என்பதை எனக்கு அறிமுகமாக்கியது யாழ் தான். அதன் தொடர்ச்சியாக முகநூலிலும் பயணம் தொடர்கிறது கருத்து எழுதுவதில் யாழ் தந்த அனுபவம் மற்றும் அறிமுகங்களோடு முகநூல் பாவனையும் எனக்கு மேலும் நல்ல சிறந்த நட்புக்களையும் தேடல்களையும் தொடர்புகளையும் தந்திருக்கிறது. அது மேலும் மேலும் வளரும் சாத்தியமுள்ளது. எமது இலக்கிலும் நண்பர்களை சேர்ப்பதில் அவதானமாகவும் தொடர்ச்சியாக இருந்தால் முகநூலும் எமக்கு ஒரு வரப்பிரசாதமே. …

  14. நான் அந்தக் கட்டடத்தின் பெரிய அறை ஒன்றைத் திறந்து கொண்டு உள்நுழைகிறேன். "நான் ஆர்? நான் ஆர்? நான் ஒருத்தனுக்குத்தான் மூண்டு பிள்ளையளையும் பெத்தனான். ஒருத்தன் என்னைப் பாத்து என் நடத்தையில பிழை எண்டு சொல்லட்டும். அவன்ர வாயைக் கிழிச்சு வச்சுத் தச்சுப்போடுவன். எளிய நாய் அவன். எளிய நாய். என்னோட படுத்து மூண்டு பிள்ளைப் பெத்த பிறகும் என்னைப்பற்றி கூடாமல் சொல்லிக்கொண்டு திரியிறான்" என்ற பெரிய கூச்சலைக் கேட்டபடி தொடர்ந்து உள்ளே செல்வோமா அல்லது இப்பிடியே நிர்ப்போமா என்று மனதில் குழப்பத்துடன் நின்ற என்னைப் பார்த்து "வாங்கோ வந்து இருங்கோ" என்று விட்டு " அமைதியாய் இருங்கோ. ஆக்களுக்கு முன்னால உப்பிடிக் கத்தக் கூடாது என்று கத்திய பெண்ணை முதுகில் தடவி அமைதிப்படுத்தியபடி என்னைப் பார்க்…

  15. Started by suvy,

    வந்தனா கொஞ்சம் நில்லுங்கோ, இன்று எனக்கொரு பதிலைச் சொல்லி விட்டுப் போங்கோ. நான் என்ன சொல்ல வேண்டும் என்று எதிர் பார்க்குறீங்கள் சந்திரன். பிள்ளைகள் பள்ளிகூடத்தால வந்திருப்பினம், இனித்தான் நான் போய் சமைக்க வேண்டும். வந்தனா எத்தனை நாட்கள் நாங்கள் இந்தக் கந்தோரில இரவுப் பணியாற்றி இருக்கிறோம். என்னுடைய ஆசையை நான் கூறிவிட்டேன் , நீங்கள்தான் பிடிகொடுக்காமல் நழுவுறீங்கள். என் நிலைமையை புரிந்து கொள்ளுங்கோ சந்திரன். தெரியும் வந்தனா, உங்களுக்கு இந்த வேலைகூட நான்தானே வாங்கித் தந்தனான். வாறகிழமை 30ம் தேதி விடுமுறையும் கூட ஒருமுறை என்ன சொல்லுங்கோ. என்னால் வரமுடியாது சந்திரன். ஆனால் நான் உங்களுக்கு ஒரு உதவி செய்யலாம். என்ன என்ன உதவி, ஆசையாய் இருக்கு கெதியாய் சொல்லுங்கோ. சும்மா ப…

  16. பாடசாலை முடிவதற்க்கான மணிச்சத்தம் எப்படா கேட்க்கும் என்று இருந்த மாணவர்கள் மணி அடித்த அடுத்த நொடியே வெளி வாசலை நோக்கி ஓடினார்கள்.துர இடம் போகிறவர்கள் அருகில் வீடு உள்ளவர்கள் என்று பேதம் இல்லாமல் பாடசாலைக்கு முன் உள்ள சைக்கில் கடையில் கூடி விடுவார்கள்.சைக்கிளுக்கு காத்தடிக்வோ அல்லது லைக்கில் திருத்தவோ இல்லை அந்தக்டையில் விற்க்கும் குச்சி ஐஸ பழம் வாங்கத்தான் இவளவு வேகமும்.50 சதம் விற்க்கும் அந்தப்பழத்தை வாங்கிக் முழுவதுமாக குடித்து முடிப்பதற்குள் அரைவாசி கரைந்து ஓடி விடும்.கரைந்தது உருகியது எல்லாம் நக்கி முடிந்து வீதியோர தண்ணிக்குளாயில் கையை களுவிய பின் தான் தங்கள் வீிடு நோக்கி செல்வார்கள்.இவளவு கூத்துக்களையும் ஓர ஓரமாக நின்று எக்கத்துடன் பாத்துக்கொன்டிருப்பான் பாபு.காரனம் …

  17. கைபேசியில் அலாரமாக இந்த அழகான பாடல் காற்றில் மிதந்து காதில் வருட இன்று என்னவோ காலையில் எழுந்திருக்க மனமில்லாமல் மிகவும் அசதியுடன் தன் அதிகாலை பணிகளை நினைத்தவாறே திரும்பி நேரத்தை பார்க்கின்றாள் வைதேகி. இன்னும் சிறிது நேரம் செல்ல எழும்பலாம் என்று நினைத்து திரும்பி படுக்கும் போது அவளின் மன ஓட்டம் 30 வருடங்களை பின்நோக்கி இழுத்துசெல்கின்றது. என்ன அழகான ஒரு வாழ்க்கை! சிட்டுக்குருவிகளை போல் நண்பிகளுடன் சிறகடித்து எந்த கவலையும் இல்லாமல் பாடசாலை, மாலைநேர வகுப்பு என்று இனிமையான காலங்கள். அந்த இனிமைக்காலத்தில்தான் தன்னோடு படித்த வாமனை சந்திக்க நேர்ந்தது. அவனின் அமைதியும் அறிவும் இவளை காதலில் விழவைத்தது. அதே போன்று வாமனும் வைதேகியின் அன்பான குணத்தாலும் அழகாலும் தைதேகி மேல் கா…

  18. அ ன்பு உள்ளங்களே..... அ ன்பு காலை வணக்கம் ..... அ திகாலை எழுத்தவன் ...... அ திசக்தி ஆதவ்னையே..... அ ருகில் வரவைப்பான்......! அ ன்பினால் ... அ கிலத்தையே வெல்லலாம் .... அ ங்கிகள் தொடக்கம் ... அ ருகில் உள்ள உயிர்வரை ... அ ன்பு செலுத்துங்கள் .....! அ ற்புதங்கள் என்பது .... அ திசயம் செய்வதல்ல ... அ ன்புக்கு கட்டுபட்டு ... அ ண்ட சராசரத்தோடு .... அ டக்கமாவதே .........! அ ன்று சொன்னதை செய்ததை .... அ ன்றே மறப்பவனே .... அ தி உயர் மனிதன் .... அ தையே நினைத்துகொண்டிருந்தால் ... அ ன்றைய இன்பத்தை இழப்பாய் ....! அ ந்தி சாயும் நேரம் .... அ ன்றைய நிகழ்சிகளை ... அ சைபோட்டுபாருங்கள் .... அ ருவருப்பான செயல் …

    • 25 replies
    • 14.1k views
  19. Started by விசுகு,

    ************ சிறு பருவத்திலிருந்து ஒரு பழக்கம் அதை பழக்கமென்பதைவிட கணிப்பு என்று சொல்லலாம் ஒருவர் குடித்திருந்தால் அவருடன் எந்த பேச்சுவார்தையும் அன்று வைப்பதில்லை. இது எனது தகப்பனாரின் குடிக்குப்பின்னாலான நடவடிக்கைகளை பார்த்து வந்து அதன் பின் நண்பர்கள் உறவுகள் என தொடர்ந்து வந்திருக்கிறது எல்லோரது செயலும் எனது கணிப்புக்கு உரமேற்றியிருக்கின்றனவே தவிர ஒரு போதும் வலுவிளக்கச்செய்ததில்லை. நான் தான் இப்படியான கணிப்பு வைத்திருக்கின்றேன் என்றில்லை குடிப்பவர்களே மற்றொரு குடிப்பவரை பார்த்து இவ்வாறு தான் சொல்கிறார்கள் எமது சமுதாயமும் இப்படித்தான் ஒரு கணக்கு போட்டு வைத்துக்கொள்கிறது எனது தகப்பனார் என்னிடம் ஒரு முறை சொன்னார் …

  20. உன்......... கதவில்லாதா ...... உறங்கும் அறைபோல் ...... என் இதய அறைக்குள் .... நீ .................................! உன் .......... கூந்தல் காற்றில் ஆடும் ...... கண பொழுதெல்லாம் ....... இதயம் படும் வேதனையை ....... எப்போது அறிவாயோ ......? உன்னை நினைத்து ....... எழுதும் கவிதையை ....... காதல் தெரியாதவர்கள் ....... காதல் பித்தன் என்பார்கள் ...... உனக்கு புரிந்தால் போதும் ..... நான் உன் காதல் சித்தன் .......! & கவிப்புயல் இனியவன் ஏனடி காதலால் கொல்லுகிறாய்

    • 21 replies
    • 4.2k views
  21. கூடைப்பந்து மைதானத்தில் நாலு பக்கம் கோடு போட்ட - நான்முகன் நடுவில் இட்ட புள்ளி நீயே ! காதிலும் வளையம் மூக்கிலும் வளையம் நாக்கிலும் வளையம் -நாபி உன்னிலும் மின்னுது வளையம் ! கண் இமைக்கு கருமை கைகளுக்கு மருதாணி - தொப்புள் உன்னிலும் ஒளிருது ஸ்டிக்கர் ! கோடிகள் கொட்டும் திரையிலும் கொடியிடை அசைவினில் - குளோசப் முழுதும் கொள்ளையடிக்கின்றாய் ! நடிகைக்கு தரும் நான்கு கோடியில் மூன்று கோடி - முழுதும் முகம் காட்டி முழுங்குகின்றாய் ! எதிர்த்து வரும் வாலிபர் வெறித்த கண்கள் கருத்தாய் மேயும் - தாவணியில் மின்னும் ஆவணியும் நீதானே ! காலையில் கல்லூர…

  22. Started by putthan,

    ஞாயிற்றுக்கிழமை காலையில் நீச்சல் தடாகத்திற்கு செல்வது சுரேஸின் வழக்கம்..தடாகத்திலிருந்து வெளியே வந்து நீச்சல் உடை அழகிகளை ரசித்தபடி உடை மாற்றும் அறைக்கு செல்ல தயாரானான். "சுரேஸ்"குரல் வந்த திசை திரும்பி பார்த்தான் கந்தர் டெனிஸ் விளையாடுற உடுப்போடு கறுத்த கண்ணாடியுணிந்து அமர்ந்திருந்தார். "என்னடா ,எப்ப தொடக்கம் நீச்சலுக்கு வார எல்லா வகை நீச்சலும் இப்ப பழகிட்டியோ" "நீச்சலுக்கு வரயில்லை" "பின்ன என்னத்துக்கு ஐசே தடாகத்துக்கு வாரீர் சுவிமிங் சூட் போட்ட பெட்டைகளை பார்க்கவே" "சும்மா போங்கண்ணே உங்களுக்கு எப்பவும் லொள்ளுதான், அதுசரி நீங்கள் கறுத்த கண்ணாடி போட்டுங்கொண்டு ரசிக்கிறியள் போலகிடக்கு" "என்னதான் வயசு போனாலும் உந்த விசயத்தில் மன…

    • 19 replies
    • 2.1k views
  23. Started by விசுகு,

    நத்தார் அன்று பரிசிலிருந்து 100 கிலோமீற்றரிலுள்ள Chartres தேவாலயத்துக்கு குடும்பமாக செல்வது கிட்டத்தட்ட 30 வருடப்பழக்கம். 2016 நத்தார் அன்றும் அப்படித்தான் மக்கள் எல்லோரையும் கூட்டிக்கொண்டு தேவாலயத்துக்கு போனோம் சுத்தி வணங்கி மெழுகு திரியை கொழுத்திவிட்டு வெளியில் வந்து கொஞ்ச நேரம் இருந்து விட்டு அடுத்த புரோக்கிறாம் என்ன என்று கேட்டபோது மக்கள் சொன்னார்கள் இன்று நீங்க எங்களுக்கு பின்னால வாருங்கள் என்று. கூட்டிக்கொண்டு ஒரு உணவகத்துக்குள் நுளைந்தார்கள் அங்கு ஏற்கனவே எமக்காக மேசை ஒதுக்கப்பட்டிருப்பது தெரிந்தது அது ஒரு பிரேசில் உணவகம் சாப்பிட்டு விட்டு பில் வந்தபோது மக்கள் அதை எடுத்துக்கொண்டு க…

  24. அன்புள்ள அக்கா இது உங்களுக்கு நீங்கள் இதுவரை முகம் அறியாத உங்கள் தம்பிகளில் ஒருவன் எழுதுவது. காலங்கள் தம் சுவடுகளை பதிந்துவிட்ட அப்பால் நகர்ந்து செல்கின்றன. மனிதன் தன் வாழ்வின் எச்சங்களை இந்தப் பூமிப்பந்தில் விட்டே அப்பால் சென்றுவிடுகின்றான். அந்த எச்சங்கள் பல்கிப்பெருகி விழுதுகளாகிப் படர்ந்து இந்தப்பாரெல்லாம் பரவிக் கிடக்கின்றன. விரிந்த மணற்பரப்பில் பதிந்திருக்கும் அழகான ஆழமான சுவடுகளைத் தொடர்ந்து சென்றுகொண்டிருந்தேன். இடையிடையே அள்ளி வீசிய காற்றின் வேகத்தால் சுவடுகள் அழிந்து போயிருந்தன. சில தேடல்களின் பின்னர் அந்த அழகான சுவடுகள், என்மனதின் எதோ ஒரு மூலையில் உறங்கி கிடந்த அந்த ஆழமான சுவடுகள் அந்த மணற்பரப்பில் மீண்டும் என் கண் முன்னே தோன்றின.…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.