யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்
சுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம்.
அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு,
எதிர்வரும் 30.03.2017 அன்று யாழ் இணையம் தனது 19ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. 1999ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் நாள் தொடங்கப்பட்ட யாழ் இணையம், பல்வேறு தடைகளையும், மேடு பள்ளங்களையும் தாண்டி, தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகமான மாற்றங்களுக்கும், சமூக வலைத்தளங்களின் துரித வளர்ச்சிக்கும் ஈடுகொடுத்து இன்று தன்நிகரற்ற தமிழ் இணையத்தளமாய் வளர்ந்துள்ளது. உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு குடிலாக, தமிழர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் காலக்கண்ணாடியாக, உலகத் தமிழர்தம் கருத்துக்களை காவும் ஒரு உறவாக யாழ் இணையம் உள்ளது.
யாழ் இணையம் 19 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் நாளினைச் சிறப்பிக்கும் முகமாக கள உறுப்பினர்களின் சுயமான ஆக்கங்களைக் கோருகின்றோம்.
சுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம்.
எனினும் இச் சுய ஆக்கங்களில் யாழ் களம் 19ஆவது அகவையில் காலடி வைப்பதற்கான வாழ்த்து விடயங்களை தவிர்ப்பது நல்லது.
எமது நோக்கம் அனைத்து கள உறவுகளையும் அவரவர் திறமைகளுக்கேற்ப சுயமான ஆக்கங்களைப் படைப்பதற்கான வெளியை யாழ் கருத்துக்களத்தில் வழங்குவதேயாகும். இதன் மூலம் கள உறவுகள் தேங்கிப்போயுள்ள தமது படைப்புத் திறனை வெளிக்காட்டுவார்கள் என்று நம்புகின்றோம். எனவே அனைவரையும் உற்சாகத்துடன் பங்குகொள்ளுமாறு கோருகின்றோம்.
யாழ் களம் 19 ஆவது அகவைக்குள் காலடி வைக்கும் 30.03.2017 அன்று யாழ் கள உறவுகளின் சுய ஆக்கங்களுக்கான சிறப்புப் பக்கத்தை வெளியிடுவோம். கள உறவுகள் சுய ஆக்கங்களைத் தயார்படுத்தவும், மெருகேற்றவும் ஒரு மாத காலம்தான் இருக்கின்றது. நாட்கள் விரைந்து ஓடிவிடும் என்பதால், காலந்தாழ்த்தாது சுய ஆக்கங்களைத் தயார்படுத்த இப்போதே ஆயத்தமாகுங்கள்.
விதிமுறைகள்:
- யாழ் கள உறுப்பினர்கள் மட்டுமே ஆக்கங்களை படைக்கலாம். உறுப்பினர்கள் அல்லாதவர்கள் உறுப்பினர்களாக இணைந்து ஆக்கங்களை இணைத்துக் கொள்ளலாம்.
- ஆக்கங்கள் கள உறுப்பினர்களின் சுயமான ஆக்கங்களாக இருக்கவேண்டும்.
- கருப்பொருள் எதுவாகவும் இருக்கலாம் (வாழ்த்துக்களைத் தவிர்த்து). எனினும் ஆக்கங்களின் உள்ளடக்கத்திற்கு உறுப்பினர்களே முழுப் பொறுப்பும் ஏற்க வேண்டும்.
- கள உறுப்பினர் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட ஆக்கங்களைப் படைக்கலாம்.
- கள உறுப்பினர் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட வகைமைகளில் ஆக்கங்களைப் படைக்கலாம்.
- ஆக்கங்கள் யாழ் களத்திற்கென எழுதப்பட்டதாக/தயாரிக்கப்பட்டதாக இருக்கவேண்டும்.
- ஆக்கங்கள் இதற்கு முன் வேறெங்கும் பிரசுரம் ஆகாததாக இருக்கவேண்டும்.
- ஆக்கங்கள் யாழ் கள விதிகளை மீறாத வகையில் அமையவேண்டும்.
- யாழ் களத்தில் பிரசுரம் செய்து ஒரு வாரம் தாண்டும் வரையிலும் வேறெங்கும் பிரசுரம் செய்யலாகாது.
"நாமார்க்கும் குடியல்லோம்"
நன்றி
யாழ் இணைய நிர்வாகம்
53 topics in this forum
-
அம்மா….இண்டைக்கு வசதிக்கட்டணம் கட்டட்டாம் ! மூன்று வருஷமாய்ப் பணம் கட்டப்படவில்லையாம் !இல்லாவிட்டால், வாற கிழமை சோதினை எழுத விட மாட்டினமாம்! பரீட்சையுடன் சம்பந்தப்பட்டிருத படியால்...அடுத்த சம்பளம் வரட்டும் என்ற வழமையான பதிலை...அம்மாவால் சொல்ல முடியவில்லை! சரியப்பு...அப்பாவிட்டைச் சொல்லுறன்! ஏன் தான் வசதிக்கட்டனம் எண்டு பேர் வைச்சிருக்கினமோ தெரியாது! வச்தியில்லாததுகளிட்டையும் பலவந்தமாய்ப் பறிக்கினம்...என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினாள் அம்மா! அன்று காலை அப்பா கொஞ்சம் வழமைக்கு மாறாகக் கடு கடுப்பாகவே இருந்தார்! அவர் ஒரு ஆசிரியர்! அம்மாவும் ஒரு ஆசிரியை! அவர்களது சம்பளத்தில் தான் ஐந்து பேரைக்கொண்ட குடும்பம் நடத்தப்பட வேண்டும்! தனது விரலுக்கு மேலால கொஞ்சம்…
-
- 17 replies
- 3.1k views
-
-
ஆனந்தம் விளையாடும் வீடு இது ஆனந்தம் விளையாடும் வீடு 5 அன்றில்கள் ஒன்றான கூடு இது தான் அவர்களால் அவர்கள் வீட்டில் அநேகம் பாடப்பட்ட பாடல். அன்பான அம்மா அடித்தே இருக்காத அப்பா வசதியான நாடு திறமையான பிள்ளைகள் மேல் படிப்புக்கள்...என எல்லாமே நன்றாகவே போய்க்கொண்டிருந்தன பட்டப்படிப்பு முடிக்கும் தருணம் அவனுக்கு காதல் ஒன்று அரங்கேறியது சாதி வந்து குறுக்கிட்டது குடும்பம் சின்னாபின்னமாகியது தகப்பனார் கோமா நிலையில் வைத்தியசாலையிலிருந்தார் கோமா நிலையிலிருந்த தகப்பனை காட்டி அவர் பெற்ற பிள்ளை பாசமாக வளர்ந்த வளர்த்த படித்த பிள்ளை சொன்னது சாதி வெறியன் ஒருவன் சாகக்கிடக்கிறார் என்று.
-
- 14 replies
- 1.4k views
-
-
நான் அந்தக் கட்டடத்தின் பெரிய அறை ஒன்றைத் திறந்து கொண்டு உள்நுழைகிறேன். "நான் ஆர்? நான் ஆர்? நான் ஒருத்தனுக்குத்தான் மூண்டு பிள்ளையளையும் பெத்தனான். ஒருத்தன் என்னைப் பாத்து என் நடத்தையில பிழை எண்டு சொல்லட்டும். அவன்ர வாயைக் கிழிச்சு வச்சுத் தச்சுப்போடுவன். எளிய நாய் அவன். எளிய நாய். என்னோட படுத்து மூண்டு பிள்ளைப் பெத்த பிறகும் என்னைப்பற்றி கூடாமல் சொல்லிக்கொண்டு திரியிறான்" என்ற பெரிய கூச்சலைக் கேட்டபடி தொடர்ந்து உள்ளே செல்வோமா அல்லது இப்பிடியே நிர்ப்போமா என்று மனதில் குழப்பத்துடன் நின்ற என்னைப் பார்த்து "வாங்கோ வந்து இருங்கோ" என்று விட்டு " அமைதியாய் இருங்கோ. ஆக்களுக்கு முன்னால உப்பிடிக் கத்தக் கூடாது என்று கத்திய பெண்ணை முதுகில் தடவி அமைதிப்படுத்தியபடி என்னைப் பார்க்…
-
- 33 replies
- 4k views
-
-
ஆர்ட்ஸ் அண்ட் சயன்ஸ் காலம் பல அழியாத நினைவுகளை நகர்த்திக் செல்கிறது. அவற்றில் பாடசாலைக் காலம் .முக்கியமானவை ..பள்ளித்தோழர்கள் அயல் வீட்டு ..நண்பன் ..உறவுக்கு காரன் ..என பலரும் இருப்பார்கள் . அந்த ஊரின் சற்று வசதியானவர் ...ஸ்டோர் கீப்பர் ..(களஞ்சிய பொறுப்பாளர் ) சுந்தரம்பிள்ளை ... அருகில் இருக்கும் கிராமங்களுக்கான விநியோகப் பொருட்கள் இவரது மேற்பா ர்வையிலேயே நடைபெறும் . மனைவி மூன்று ஆண் மக்களோடு இனிதே வாழ்ந்து வந்தார் .. .மூத்தவன் கேசவனின் நண்பன் ..பக்கத்து வீட்டு பிரேமன். இவர்களின் தந்தை அன்றாடம் கூலி வேலை செய்பவர். அவனுக்கு ஒரு அழகான தங்கையும் இருந்தாள். கேசவனும் பிரேமனும் பாலர் பாடசாலையில் இருந்தே ஒன்றாக கல்வி கற்றார்கள்…
-
- 16 replies
- 2.1k views
-
-
அன்பர் ஒருவர் நன்றாக மது அருந்துவார் வேலை முடிய சனி ஞாயிறு எப்பொழுதும் மது தேவை அதே நேரம் அவருக்கு எப்பொழுதும் ஒருவர் துணையாக மது அருந்தணும் இவரே செலவளிப்பார்... இவ்வாறு தான் அந்த நரி இவர் வீட்டுக்குள் வந்தது.... இவரை மதுவில் மயங்க வைத்து அல்லது வெளியில் அனுப்பிவிட்டு அவரது மூத்தமகள் மீது அது வெறிகொண்டது சகல வித மாயங்களுக்கும் மயங்க மறுத்த அவள் மீது பலாத்காரத்தை பயன்படுத்தி இச்சையை தீர்த்துக்கொண்டது நாளாக நாளாக அடுத்தவள் மீது பாய்ந்தது இறுமாப்போடு தொடர்ந்தது ஒரு நாள் இதைக்கண்ணுற்ற மூத்தவள் தற்கொலை செய்ய முனைந்து இறுதி நேரத்தில் காப்பாற்றப்பட்டு நிரந்தரமாக வலது குறைந்தவளானாள். காவல்த்துறை வரை ச…
-
- 4 replies
- 1.2k views
-
-
"எங்களுடன் பயணித்தமைக்கு நன்றிகள் மீண்டும் ஒரு பயணத்தில் சந்திப்போம்"என்ற குரலைக்கேட்டு எல்லோரும் தங்களது இருக்கை பட்டிகளை சரிபார்த்து கொண்டனர்.நான் எனது இருக்கை பட்டியை போடாமல் இருந்தேன்.எத்தனை தரம் விமானத்தில ஏறி இறங்கிட்டன் ஒன்றும் நடக்கயில்லை பிறகு ஏன் இந்த பேல்ட் ,எனக்கு தேவையில்லை அவையளுக்கு தேவையென்றால் வந்து போட்டுவிடட்டும் என நினைத்தபடி மேலே பார்த்து கொண்டிருந்தேன். "சேர் வாசின்ட் யுஆர் சீட் பெல்ட்"என்ற படி பக்கத்தில விமானப்பணிப்பெண் புன்னகைத்தபடி நின்றாள்.உடனே நான் பேல்ட்டை தேடுவது போல நடித்து எடுத்து போட்டுக்கொண்டேன். இதுதான் உவரின்ட முதல் விமானப்பயணம் என்று சகபயணிகள் நினைத்துவிடுவார்கள் என்ற வெட்கத்தில் உடனே போட்டுவிட்டேன். முப்பது வருடங்கள…
-
- 40 replies
- 4.1k views
-
-
நண்பர்கள் என்பவர்கள் எம்மோடு இரண்டரக்கலந்தவர்கள் எம்மை அறிந்தவர்கள் புரிந்தவர்கள் என்பதையும் தாண்டி முகம்தெரியாமலேயே நட்பு வைத்துக்கொள்ளலாம் அதனாலும் பல நல்லது செய்யலாம் பல அரிய விடயங்களை பெறலாம் என்பதை எனக்கு அறிமுகமாக்கியது யாழ் தான். அதன் தொடர்ச்சியாக முகநூலிலும் பயணம் தொடர்கிறது கருத்து எழுதுவதில் யாழ் தந்த அனுபவம் மற்றும் அறிமுகங்களோடு முகநூல் பாவனையும் எனக்கு மேலும் நல்ல சிறந்த நட்புக்களையும் தேடல்களையும் தொடர்புகளையும் தந்திருக்கிறது. அது மேலும் மேலும் வளரும் சாத்தியமுள்ளது. எமது இலக்கிலும் நண்பர்களை சேர்ப்பதில் அவதானமாகவும் தொடர்ச்சியாக இருந்தால் முகநூலும் எமக்கு ஒரு வரப்பிரசாதமே. …
-
- 34 replies
- 12.4k views
- 2 followers
-
-
-
- 120 replies
- 14.8k views
-
-
விவசாயம் செய்வதற்குப் பல முறைகள் இருந்தாலும் எமது நாட்டில் வீட்டுத் தோட்டம் செய்வதற்கு மிகவும் இலகுவானதும் பயனுள்ளதுமாகக் கருதியதால் hugelkultur முறையைப் பற்றி எழுதுகிறேன். அதுமட்டுமல்லாது இம் முறையானது Permaculture எனப்படும் இயற்கை உணவுச் சுற்றை அண்டியதாகவும் உள்ளது. இப் பதிவின் இறுதியில் எனது குறுகிய hugelkultur பயிற்செய்கை அனுபவத்தையும் எழுதுகிறேன். சுருக்கமாகச் சொன்னால் hugelkultur முறையானது மரக் கிளைகள அடுக்கி மண்ணினால் மூடி அதன்மேல் பயிரை வளர்த்தலாகும். விரிவாக இது பற்றிக் குறிப்பிடும் முன்னர் இதன் பலன்களைப் பற்றிப் பார்த்தால் இப் பதிவை வாசிப்பதற்கு ஆர்வம் உண்டாகலாம். இயற்கை, இயற்கை, … இலவசம். குறுகிய இடத்தில் பயிர் நடப்படும் நிலப்பரப்பை அதிகர…
-
- 17 replies
- 4.1k views
-
-
நம்பிக்கையும் ஏமாற்றமும். “என் மகன்மீதா பழிபோடுகிறாய்…! என்ன திமிரடி உனக்கு…!!“ பத்து வீடுகளுக்குக் கேட்கும் வண்ணம் பெரும் குரலெடுத்துக் கத்தினாள் பவானியம்மாள், பக்கத்துவீட்டு ராதா படபடத்து ஒடிவந்தாள். மிதித்தால் புல்லும்கூடச் சாகாத மென்மையானவள். அந்தத் தாய் பவானியம்மாள். இருமினால்கூட இரண்டாம் ஆளுக்குக் கேட்காது இருமுவாள். அப்படிப்பட்டவளா இன்று.....? அதிர்ந்துபோய் வந்தவள், தன்தோழி நந்தினி பேயறைந்ததுபோல் நிற்க, அவள் மாமியார் பவானியம்மாள் பத்திரகாளியாக நின்றாள். “ஆருக்கடி சொல்லுகிறாய்…! என் மகனுக்கு வேறு ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்துவைச்சுப் பத்துமாத்திலை என் பேரனைக் கொஞ்சுகிறேனா இல்லையா பாரடி.“ என்று உச்சகட்டத்தில கூச்சலிட்டு ஆடினாள். நந்தினியின் கணவனோ கல்லாய்ச…
-
- 16 replies
- 2.5k views
-
-
டிக் என்று வந்து விழுந்த மெசெஞ்சரின் சத்தம் அவளைத் திடுக்கிட்டு எழ வைத்தது. பதட்டத்துடன் கணவனை எட்டிப் பார்த்தவளுக்கு அவன் விழிக்கவில்லை என்று தெரிந்து நின்மதிப் பெருமூச்சு ஒன்று எழுந்தது. நல்ல காலம் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கிறார். இல்லை எனில் ஆரவன் உனக்கு இந்த நேரத்தில மெசேச் அனுப்புறான் என்று .......... எதேதோ கேட்டுப் பிரச்சனையாகியிருக்கும். போனை எடுத்து சத்தத்தை நிறுத்திவிட்டு மீண்டும் போர்வையைப் போர்த்தியவளுக்கு மனதில் சொல்லவொண்ணாத் துயரம் ஏற்பட்டது. முன்னர் இவளின் முகநூலில் 1300 பேர் நட்பில் இணைந்திருந்தனர். அவர்களில் பலரை இவளுக்கு தெரியாதுதான். ஆனால் அவர்கள் போடும் பதிவுகளைப் பார்த்தது, பிரச்சனை இல்லாதவர்கள் என்று மனதில் பட்டதில் நட்பில் இணைத்திருந்தாள். ஆனாலு…
-
- 75 replies
- 8.5k views
- 1 follower
-
-
ஏகாந்தமாய் இம்மாலையில் அன்பே, உன் தோள் சாய நான் தூங்காமல் காத்திருக்கிறேன் தூக்கத்தில் மட்டுந்தான் நீ வருவாயா? நான் விழித்திருக்கும் நேரமெல்லாம் நீ விழி மூடிக்கிடக்கிறாய். நான் விழி மூடும் நேரமெல்லாம் என் விழிகளுக்குள் நடக்கிறாய் இருவரும் சேர்ந்தே நடப்பதுவும் சேர்ந்தே விழிப்பதுவும் எப்போது? பரஸ்பரம் பகிர்ந்து கொள்ளவும் புரிந்து கொள்ளவும் எம்மால் மட்டும் முடிகிறது. உடலுக்கு மட்டுமல்ல உணர்வுகள் மனதிற்கும் உண்டு முடிவே இல்லாத வாழ்வும் பிரிவே இல்லாத உறவும் என்றுமே இருந்ததில்லை இருந்தும் ஏகாந்தத்தை இரசிப்பதுவும் நேசிப்பை ருசிப்பதுவும் எமக்குப் பழக்…
-
- 7 replies
- 1.3k views
-
-
ஈரநிலா உயிர் சுற்றிவர சிதறி விழுந்ததுபோலும், வழி தவறிய மூச்சு திகைத்து அப்படியே உறைந்ததுபோலும், இரத்தநாளங்களில் அதிர்வுகள் அடர்ந்ததுபோலும், விவரிக்க முடியாத வகையில் பிரித்தறியும் உணர்வு உறைந்ததுபோலும்…….. அந்தக் கணம் ஆட்டிப்படைத்தது. இதுவரை மானுட உணர்வில் அறியாத களேபரமாக மீனாவின் ஆன்மா தவித்தது. கசியலாமா என்று ஒரு விழியும், அகல அகன்று நோக்கலாமா என்று மறுவிழியும் உடன்பாடற்ற போட்டிக்குள் உட்பட்டிருந்த இத்தருணம்போல் அவள் இதுவரை அநுபவித்ததில்லை. அவளுக்குள் இல்லாத ஊமையை உருவாக்கி வேடிக்கை பார்த்தது விதி. ஒலி எழுப்பும் புலன் இல்லாத இடத்தில் வலி செய்தால் என் செய்யும்? அப்படி ஒரு நடப்பு அவ்விடத்தில் அரங்கேறியிருந்தது. இக்கொந்தளிப்பின் அடியில் கலங்கி ஓலமிட்டபடி மீன…
-
- 39 replies
- 3.1k views
- 1 follower
-
-
அண்டைக்கும் வழக்கம் போல குளிர் தான்! போதாக்குறைக்குக் காத்தும் கொஞ்சம் வேகமாக வீசிக்கொண்டிருந்தது! விடிய எழும்பும் போதே இண்டைக்குக் கட்டாயம் தடிமன் வரப்போகுது என்று தனக்குள் நினைத்துக்கொண்டான் சந்திரன்! அல்பேர்டன் சந்திக்கு ஓருக்காப் போனால்….ஒரு ஓமப் பக்கற்றும்...கொஞ்சம் ‘பேயாவ' சோடாவும் வாங்கிக் கொண்டு வரலாம் தான்! ஆனால், இந்தக் கண்டறியாத குளிரை நினைக்கத் தான் அவனுக்குத் தயக்கமாக இருந்தது! இரண்டு.. பிஞ்சு மிளகாய் போட்டால், திரளி மீன் சொதி நல்லா இருக்குமெண்டு அவனுக்குத் தெரிந்திருந்தாலும்/ இந்தக் குளிருக்குப் பயந்து...பிஞ்சு மிளகாய் இல்லாமலேயே அவன்பல நாட்கள் சொதி வைத்ததிருக்கிறான்!ஆனால் இண்டைக்குக் கட்டாயம் போகத் தான் வேண்டுமென நினைத்தபடி, லெதர் ஜக்கெட்டை…
-
- 36 replies
- 6.6k views
-
-
துருச்சாமி . சாமியுடன் ஒருநாள். (நகைச்சுவை). என்னுரை: இந்தக் காவியத்தில் பாலகர் காண்டம், வாலிபர் காண்டம் என இரு காண்டங்கள் உள்ளன. பாலகர் காண்டத்தில் ஆறு படலங்கள் இருக்கின்றன. அவையாவன: 1) வழித்தேங்காயைத் தெருப் பிள்ளையாருக்கு உடைத்தல் படலம். 2) பாதயாத்திரைப் படலம். 3) அற்புதங்கள் அருளாசி வழங்கும் படலம். 4) நினைவேந்தல் படலம். (பிளாஷ்பேக் வாசகர் சிரமம் தவிர்க்க). 5) பந்திபோஜனப் படலம். 6) நீதிவழங்கும் படலம். இந்த ஆறு காண்டங்களும் பத்து மாதத்தில் இருந்து நூறு வயதுவரை வாழ்பவர்கள் படித்துப் பயன்பெற வேண்டியது. அடுத்து வாலிபர் காண்டம். இதில் இரண்டு படலங்கள் இருக்கின்றன. இதை வாசிக்க சில கட்டுப்பாடுகளை கம்பெனி விதித்துள்ளது. அ…
-
- 104 replies
- 14.9k views
- 1 follower
-
-
அழகோ அழகு பள்ளிச் சிறுமி பருவம் அடைந்ததும் பேரழகு பருவப் பெண் மண மேடையில் இன்னும் அழகு மணப்பெண்ணுக்கு மாலையிடட மணமகன் அழகு மணமக்களுக்கு முதற்குழந்தை பரிசு பெற்ற அழகு அழகுக்கு குழந்தையின் மழலை ப் பேச்சு அழகு தத்தி த்தவளும் மழலையின் முதலடி அழகு தத்தி நடைபயிலும் மழலையின் ஒவ்வொரு அசைவும் அழகு அழகுக்கு அழகு சேர்க்கும் பெண் குழந்தை இன்னும் அழகு புரிந்து நடக்கும் மனையாள் ஆடவனுக்கு அழகு பெற்றோருக்கு முதற் குழந்தை பெருமித அழகு என் பையன் என் பொண்ணு என்ற அப்பாக்கு கர்வம் கொண்ட அழகு ஆண் பிள்ளையும் ப…
-
- 6 replies
- 5k views
-
-
************ சிறு பருவத்திலிருந்து ஒரு பழக்கம் அதை பழக்கமென்பதைவிட கணிப்பு என்று சொல்லலாம் ஒருவர் குடித்திருந்தால் அவருடன் எந்த பேச்சுவார்தையும் அன்று வைப்பதில்லை. இது எனது தகப்பனாரின் குடிக்குப்பின்னாலான நடவடிக்கைகளை பார்த்து வந்து அதன் பின் நண்பர்கள் உறவுகள் என தொடர்ந்து வந்திருக்கிறது எல்லோரது செயலும் எனது கணிப்புக்கு உரமேற்றியிருக்கின்றனவே தவிர ஒரு போதும் வலுவிளக்கச்செய்ததில்லை. நான் தான் இப்படியான கணிப்பு வைத்திருக்கின்றேன் என்றில்லை குடிப்பவர்களே மற்றொரு குடிப்பவரை பார்த்து இவ்வாறு தான் சொல்கிறார்கள் எமது சமுதாயமும் இப்படித்தான் ஒரு கணக்கு போட்டு வைத்துக்கொள்கிறது எனது தகப்பனார் என்னிடம் ஒரு முறை சொன்னார் …
-
- 22 replies
- 2.4k views
-
-
அதிகாலைப் பனியில் அரை றாத்தல் பாணுக்காய் ஆலாய்ப் பறந்த அம்மையாரின் காலம். கூப்பன் அரிசியில் அரை வயிற்றுக் கஞ்சியும் மரவள்ளிக் கிழங்கும் மக்கள் உயிர்வாழ ஒத்துழைப்புச் செய்தன. பத்தாம் வகுப்புச் சித்தியடைந்தபின் தொடர்ந்து படிக்க வேண்டுமென்ற எனது ஆசை நிறைவேற்றப்படாமல் ஆண்டொன்று கழிந்தது. காரணம் எங்கள் கிராமப் பாடசாலையில் அப்பொழுது உயர்தர வகுப்புகள் ஆரம்பிக்கப் படவில்லை. தினமும் நகரப் பள்ளிகளுக்குச் சென்று வருவதும் கடினம். ஏனக்கோ எப்படியாவது உயர்தரம் படித்து ஓர் ஆசிரியையாக வரவேண்டுமென்ற கனவு. எனது விருப்பப்படி எப்படியோ ஓர் கல்லூரியில் அனுமதியும் கிடைத்து விட்டது. ஆனாலும் அங்கு தங்கிப் படிக்க வீட்டு நிதிநிலமை இடம் தராது. எனவே அதிபர் ஆசிரியர்களின் ஆலோசனையுடன் என்னைப்போல எதிர்க…
-
- 8 replies
- 1.1k views
-
-
மனப்பொருத்தம் பூமிப் பந்தின் சுழற்சிக்கு ஏற்ப கால நிலை மாறுகிறது. அது போலவே மனிதனின் வாழ்வும் சுழன்று கொண்டே இருக்கிறது . வருடங்கள் காலச் சுழன்றோ ட சக்கரத்தில் மனிதனின் வளர்ச்சியும் மாறிக் கொண்டே இருக்கிறது ... மாற்றங்கள் எப்போதுமே மாறாதவை . கருணாகரன் க லாவதி தம்பதிகளும் ,போர்க் .காலச் சூழ்நிலையால் புலம் பெயர்ந்து பிரான்சின் நகரப்பகுதிக்கு அண்மையில் ,மூன்று பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தைக்ளுமாய் வாழ்வை ஆரம்பித்தார்கள். கருணாகரன் ஆரம்பத்தில் எந்த வேலை கிடைத்தாலும் செய்வான். பின்பு குடும்பத்தி ன் செல்வைக்க கட்டுப்படுத்தமுடியாமல் மேலும் ஒருபகுதி நேர வேலையாக கடைக்கு கணக்கு எழுதும் வேலையும் செய்து வந்தான் . அவர்கள் ஊதியமாக சி…
-
- 12 replies
- 1.3k views
-
-
பால் சுரக்கும் ஆண்கள். தாத்தாவை சீண்டி விட்டு தாவி ஓடுகையில் தாவிவரும் கைத்தடியும் காலில் பட்டுவிட பாதத்தில் பால் சுரக்கும். அழுக்கு முந்தானையில் அதிரசம் முடிந்து வைத்து உனக்குத்தான், ஒழிச்சு சாப்பிடு என்ற பாட்டியின் பாசத்தில் - என் கேசத்தில் பால் சுரக்கும். கன்னத்தில் நீர் உறைந்திருக்க கட்டிலில் தான் படுத்திருக்க தான் அடித்த தழும்பில் பரிவுடன் தடவிடும் தந்தை கையில் பால் சுரக்கும். அண்ணனுக்கு அடித்ததென்று கன்னத்தில் அடித்துவிட்டு கிட்ட வந்து பாக்கட்டில் பணம் வைக்கும் சித்தப்புவிடம் பால் சுரக்கும். ஆடுபுலி ஆடடத்தில் அளாப்பி விளையாட அக்காவு…
-
- 13 replies
- 2k views
-
-
இது ஒரு பொன் மாலைப்பொழுது….. என் முன் ஆளுயர நிலைக்கண்ணாடி உற்றுப் பாா்க்கிறேன் இது நானா? இதில் தொியும் விம்பம் என்னதா? அடடா, காலம் என்னையும் எனது இளமையையும் எத்திப் பறித்து விட்டதா? தினமும் பாா்க்கும் கண்ணாடிதான் ஆனாலும் இன்றுபோல் பாா்க்கத் தவறி விட்டேனா? மீண்டும் கண்களை இடுக்கி நிதானமாக உற்றுப் பாா்க்கிறேன் சந்தேகமில்லை இது என் உருவம் தான் முகத்தில் சுருக்கம் முடி அடியில் வெண்மையின் நெருக்கம் துடிப்பும் துள்ளலும் ஆடங்கிய கை கால்களில் சிறிது நடுக்கம் அத்தனை விடயங்களையும் அட்டவணைப்படுத்தும் என் ஞாபகச் சிறகுகளில் சற்று…
-
- 17 replies
- 3.5k views
- 1 follower
-
-
சபிக்கபட்ட இனமென்று தெரிந்திருந்தும் உன்னை நிமிர்த்திட நான் துடித்தேன். யாருக்கும் கிடைக்காத பொக்கிசமாய் அர்சுனனை மீண்டும் உன் குடியில் பிறக்கவைத்தேன்! ஆயிரம் ஆயிரம் அபிமன்யூக்களை உனக்கென்று கொடுத்து வைத்தேன்! சதுரங்க ஆட்டத்தின் வித்தைகள் தெரிந்தவனை உன் கூட்டத்தின் தளபதியாக்கினேன்! சுதந்திரத்தின் வாசம் புரியட்டும் உனக்கு என்று பறவைகளை உன் வாசலுக்கு அனுப்பி வைத்தேன்! நல்ல எண்ணங்கள் புத்தியில் வரட்டுமென வாசனை மலர்களை உன் வீட்டு வாசலில் வைத்தேன்! கிடுகு வேலிக்குள் சண்டியனாய் நீ வளர்ந்தாய்! வடக்கென்றும் கிழக்கென்றும் தீவென்றும் பிரிவுகள் பல பேசி கோமணமும் இல்லாது அம்மணமாய் நீ…
-
- 13 replies
- 1.2k views
-
-
1 அரை மனிதர்களாக இன்னும் எத்தனை காலம் வாழப்போகின்றோம்? அனைத்துலகப்பெண்கள்நாள் ஆண்டுதோறும் சிறப்பாக, உலகெங்கும் கொண்டாடப்பட, அழுவதே நாளாந்த வாழ்வாகிப்போன அவலம் சுமக்கும் பெண்கள் உலகம் ஒன்று உள்ளது என்பது எத்தனை பேருக்கு தெரியும்? உறவுகள் தொலைத்தவர் துயரை எத்தனைபேரால் புரிந்திட முடியும்? இழப்புக்கள் தரும் வலிகளோடு அனுதினமும் போராடி போராடி, அழுவதைத்தவிர வழியே இல்லாமல் அல்லாடி அல்லாடி அவலம் சுமக்கும் எங்கள் தாயகப்பெண்கள் நிலை எத்தனை பேருக்கு தெரியும்? வாழ இடமின்றி தத்தளித்து தவித்து உயிரே போனாலும் சரி எம் நிலம் மீட்க எமக்காக நாமே போராடுவோம் என தனித்து நின்று போராடும் எங்கள் மண்ணின் பெண்கள் அன்றாடம் படும் அவலங்கள் எ…
-
- 11 replies
- 1.4k views
-
-
கிராமத்தில் வாழும் மக்களுக்கு கிடைக்கும் பல சுக போகங்கள் நகரத்து மக்களுக்கு கிடைப்பதில்லை.அதிலே ஒன்றை எடுத்து விடலாம் என்று தொடங்குகின்றேன். எந்தக் காலங்களாலும் சரி ஏதோ ஒரு திருவிழா சன சமூக நிலையம் திறப்பு விழா அல்லது ஆண்டுவிழாஎன்று ஏதோ ஓர் கொண்டாட்டம் நடந்து கொண்டிருக்கும்.கோவில்களில் திருவிழா தொடங்கினால் கொடியேற்றத்தில் இருந்து பூங்காவனம் வரைக்கும் ஏட்டிக்கு போட்டியாக சிகரம்கள் கட்டி பெரிய மேளம் சின்னமேளம் கண்ணன் கோஸ்டி என்று விடிய விடிய கூத்துக்கள் நடக்கும்.இந்தக் காலங்களில் ஒவ்வொரு திருவிழாகாரரினதும் கூத்துக்களை விலாவாரியாக அச்சடித்து கார்களில் ஒலி பெருக்கி கட்டி காலையில் இருந்து மாலை வரை இடை இடையே பாட்டு சத்தங்களின் நடுவே அன்றைய நிகழ்ச்சி நிரலையும் சொல்லிக் கொண…
-
- 44 replies
- 7k views
- 1 follower
-
-
பாடசாலை முடிவதற்க்கான மணிச்சத்தம் எப்படா கேட்க்கும் என்று இருந்த மாணவர்கள் மணி அடித்த அடுத்த நொடியே வெளி வாசலை நோக்கி ஓடினார்கள்.துர இடம் போகிறவர்கள் அருகில் வீடு உள்ளவர்கள் என்று பேதம் இல்லாமல் பாடசாலைக்கு முன் உள்ள சைக்கில் கடையில் கூடி விடுவார்கள்.சைக்கிளுக்கு காத்தடிக்வோ அல்லது லைக்கில் திருத்தவோ இல்லை அந்தக்டையில் விற்க்கும் குச்சி ஐஸ பழம் வாங்கத்தான் இவளவு வேகமும்.50 சதம் விற்க்கும் அந்தப்பழத்தை வாங்கிக் முழுவதுமாக குடித்து முடிப்பதற்குள் அரைவாசி கரைந்து ஓடி விடும்.கரைந்தது உருகியது எல்லாம் நக்கி முடிந்து வீதியோர தண்ணிக்குளாயில் கையை களுவிய பின் தான் தங்கள் வீிடு நோக்கி செல்வார்கள்.இவளவு கூத்துக்களையும் ஓர ஓரமாக நின்று எக்கத்துடன் பாத்துக்கொன்டிருப்பான் பாபு.காரனம் …
-
- 27 replies
- 6.7k views
-