Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழும் நயமும்

இலக்கணம் | இலக்கியம் | கலைச்சொற்கள் | பழந்தமிழ்க் காப்பியங்கள்

பதிவாளர் கவனத்திற்கு!

தமிழும் நயமும் பகுதியில் இலக்கணம், இலக்கியம், கலைச்சொற்கள், பழந்தமிழ்க் காப்பியங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழ் மொழி, செவ்வியல் இலக்கியம், இசை, பெருங்காப்பியங்கள் சம்பந்தமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. [size=4]எழுத்தாளர்கள் எப்போதுமே அடித்துக் கொள்கிறார்கள் என்று பொதுவாக ஒரு கருத்து உண்டு. [/size][size=4]பாமரரிலிருந்து பத்திரிகையாளர் வரை இந்தக் கருத்தை நிலைநாட்டியும் வருகிறார்கள். [/size][size=4]எழுத்தாளர்களுக்குள் அவ்வப்போது கருத்து மோதல்கள் உண்டே தவிர வேறு விதமான விருப்பு வெறுப்புகள் இருப்பதில்லை. [/size] [size=4]சமீபத்தில் ஷோபா சக்தி என் நாவல் ராஸ லீலாவை குப்பை என்று எழுதியிருக்கிறார். உடனே நான் அவரை ஜென்ம வைரியாக நினைக்க வேண்டும். மாட்டேன். அவருக்கு அந்த நாவல் குப்பை என்று தோன்றுகிறது. அதற்கு அவருக்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். [/size] [size=4]சினிமாக்காரர்களைப் போல் பாராட்டு விழாவில் “இப்படி ஒரு படம் வந்ததே இல்லை; இந்தப் படத்தை ஹாலிவுட் காரன் பார…

  2. இன்று ஏதோ தேடும்போது இதை வாசிக்கக் கிடைத்தது உங்களுடனும் பகிர்கிறேன். நன்றி மலையக மக்களின் வாழ்வியலோடு பின்னிப்பிணைந்த நாட்டுப்புறப் பாடல்கள்.. நான் வலைப்பதிவுக்கு வந்த ஆரம்ப நாட்களில் இடுகையிட்ட மலையக நாட்டுப்புற பாட்டு... எனும் மீண்டும் இடுகையிடுகிறேன். நான் வலைப்பதிவுக்கு பிரவேசித்த ஆரம்ப நாட்களில் இடுகையிட்டதனால் இந்த மலையக நாட்டுப்புறப் பாடல்கள் பலரைச் சென்றடைந்து இருக்க வாய்ப்பு இல்லை என்பதனாலே மீண்டும் பதிவிடுகிறேன். தமிழருக்கென்று ஒரு தனித்துவமான கலை,கலாசார, பாராம்பரியங்கள் இருக்கின்றது.அவற்றில் குறிப்பாக தமிழர்களது கலைகள் தமிழ் மக்களின் வாழ்வோடு பின்னிப்பிணைநத ஒன்றாக காணப்படுகின்றது. தமிழருக்கே தனித்துவமான பல கலைகள் இருக்கின்றன. அதிலும் கிராமங்கள்…

    • 3 replies
    • 9.4k views
  3. மலையக மக்களின் அடையாளமான காமன் கூத்தும் கிழக்கில் காமண்டியும் – கிரிஜா மானுஶ்ரீ. written by admin August 2, 2025 மனிதனின் ஆர்வம், எதிர்பார்ப்பு எத்தகையது என்பது உலகறிந்த விடயமே. விடுக்கப்பட்ட அழைப்பிற்கிணங்க கிழக்கில் காமண்டி எவ்வாறு இருக்கப் போகின்றது என்ற ஆர்வத்துடன் அனைவரும் ஒன்றுத்திரண்டு சென்றோம். தப்பிசை ஒலி முழங்க வண்ணமயமான ஒளி அமைப்புகளுடன் வரவேற்றது காமண்டி. மலையகத்தில் ஒவ்வொரு வருடமும் மாசி மாதத்தில் அமாவாசை மூன்றாம் நாள் காமன் கூத்து நிகழ்த்தப்படுகின்றது. பிரித்தானியரால் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட தமிழக மக்களின் 200வது ஆண்டினை நினைவு கூறுவதாகவே காமன் கூத்து சுவாமி விபுலாநந்த அழகியல் கற்கைகள் மாணவர்களால் கிழக்கில் காமண்டி என்ற பெயரில் நிகழ்த்தப்பட்டது. கடந்த வ…

    • 3 replies
    • 496 views
  4. "தெள்ளிய ஆலின் சிறுபழத்து ஒருவிதை தெள்நீர்க் கயத்துச் சிறுமீன் சினையிலும் நுண்ணிதே ஆயினும், அண்ணல் யானை அணிதேர், புரவி, ஆள் பெரும்படையொடு மன்னர்க்கு இருக்க நிழல் ஆகும்மே" - வெற்றிவேற்கை நன்கு வளர்ந்த ஆலமரத்தில் உள்ள கனிந்த ஆலம்பழத்தின் உள்ள ஒரு சிறு விதையானது சிறிய மீனின் முட்டையை விடவும் சிறிதாக இருப்பினும் கூட, அந்த விதையால் உருவான ஆலமர நிழலில் யானைப்படை, தேர்ப்படை, குதிரைப்படை, காலாட் படை என்னும் நால்வகைப் படையைக் கொண்ட மன்னனும் தங்க முடியும். அதைப்போல,நீங்கள் பிறர்க்குதவும் செல்வம் குறைந்த அளவே இருப்பினும்கூட அது அவர்களுக்கு மிகப் பெரிய உதவியாகக் கூடும். இன்றைய பொழுது இனிதாக அமைய என் வாழ்த்துகள் !!

  5. 'களவும் கற்று மற' தவறாகப் பொருள் கொள்ளப்பட்டுள்ள தமிழகப் பழமொழிகளில் இதுவும் ஒன்று. இதிலும் ஒரே ஒரு எழுத்துப் பிழையால் தான் பொருள் தவறு நேர்ந்துள்ளது. அதைப் பற்றிக் காணும் முன்னர் இதன் பொருள் என்ன என்று காணலாம். ' திருட்டுத் தொழிலைக் கூட கற்றுக்கொண்டு பின்னர் மறந்துவிடு.' - இதுவே இதன் பொருள் ஆகும். எப்படி இருக்கிறது பொருள்?. மிகவும் ஆச்சர்யப்படுத்துகிறது அல்லவா?. எப்படி இதுபோன்ற பொருளில் பழமொழிகள் உலாவருகின்றன என்பதே தெரியவில்லை. இப்படித் தவறான பழமொழிகள் புழங்குவதால் தான் சமுதாயத்தில் ஒழுக்கம் குன்றி தவறுகள் அதிகரித்து விட்டன. 'ஏன் தவறு செய்கிறாய்?' என்று கேட்டால், 'களவும் கற்று மற' என்று பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்களே அதனால் …

    • 3 replies
    • 29.4k views
  6. தமிழ் இலக்கணம் தொடர்பான மின் நூல்களை பதிவிறக்கம் செய்ய: http://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு%3Aதமிழ்_இலக்கணம் ‪#‎நூலகம்‬ # Grammar ‪#‎Tamil‬ ‪#‎Language‬ ‪#‎தமிழ்‬ ‪#‎தமிழ்மொழி‬‪#‎தமிழர்‬

  7. சிந்து எழுத்துச் சிக்கலுக்குத் தீர்வு உலக நாகரிகங்களின் தொல்லெழுத்துகள் அனைத்தும் படிக்கப்பட்டுவிட்டன. படவுருத்தன்மை கொண்ட சுமேரிய ஆப்பெழுத்து (Cuneiform) வடிவங்களும், எகிப்திய புனிதப்பொறிப்பு (Hieroglyphs)வடிவங்களும் அவற்றின் படவுருத் தன்மையின் காரணமாகப் படிக்கப்பெற்றுவிட்டன. உயிர்மெய்யன் (Syllabary) எழுத்து முறையான இலீனியர்-பி மற்றும் சைப்ரட் எழுத்துகளும் ஒப்பீட்டு முறையில் படிக்கப்பெற்றுவிட்டன. சிந்து எழுத்து முழுமையான படவுருவன் முறைக்குரிய சொல்லசையன் (logo syllabic) எழுத்து முறையாக இருந்திருப்பின் இதற்குள் படிக்கப்பெற்றிருக்கும். 1. சிந்து எழுத்துச் சிக்கலுக்குத் தீர்வு காண உரோசட்டா (Rosetta) கல்வெட்டுப் போன்றதொரு கல்வெட்டிற்காகத் தவம் கிடக்கி…

    • 3 replies
    • 941 views
  8. தமிழ் மொழியைக் கொண்டாடும் ரஷ்யா தமிழ் மொழி கடல் கடந்தும் வாழும் என்ற நம்பிக்கையூட்டும் படியாக "ரஷ்யா நாடு தமிழைக் கொண்டாடுகிறது’’. தமிழன் தமிழில் எழுதினாலோ பேசினாலோ பாராட்டுவது நாமாகத்தான் இருப்போம். நம் மொழியை நாம் பேசவே பாராட்டுகிறோம். அந்த அளவு போய்விட்டது நம் மொழி. ஆனால், தமிழுக்குத் தொடர்பே இல்லாத ரஷிய நாடு தமிழைக் கொண்டாடுகிறது. அங்கிருக்கும் ரஷிய அதிபர் மாளிகையான கிரெம்ளின் மாளிகையின் பெயரை அவர்கள் அழகுத் தமிழில் எழுதியுள்ளார்கள். முதலாவதாக அவர்கள் தாய்மொழியான ரஷிய மொழியிலும், இரண்டாவதாக அண்டை நாட்டு மொழியான சீனத்திலும், உலகத் தொடர்புமொழி என்ற நோக்கில் ஆங்கிலத்திலும், நான்காவதாக தமிழிலும் எழுதியிருக்கிறார்கள். தமிழைவிட எத்தனையோ உலக மொழிகள் பெரும்பாலான மக்களால்…

    • 3 replies
    • 1.9k views
  9. 47 வகை நீர்நிலைகள் 01. அகழி - (Moat) கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட� �ட நீர் அரண் 02. அருவி - (Water fall)மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது 03. ஆழிக்கிணறு -(Well in Sea-shore)கடலுக்கு அருகே தோண்டி கட்டிய கிணறு 04. ஆறு -(River) - பெருகி ஓடும் நதி 05. இலஞ்சி -(Reservoir for drinking and other purposes)பல வகைக்கும் பயன்படும் நீர் தேக்கம் 06. உறை கிணறு -(Ring Well)மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வலையமிட்ட கிணறு 07. ஊருணி -(Drinking water tank)மக்கள் பருகும் நீர் நிலை 08. ஊற்று - (Spring) பூமிக்கடியிலிருந� �து நீர் ஊறுவது 09. ஏரி -( Irrigation Tank) வேளாண்மை பாசன நீர் தேக்கம் 10. ஓடை -(Brook)அடியிலிருந்து ஊற்று எடுக்கும் நீர் - எப்பொழுத…

    • 3 replies
    • 2.1k views
  10. சான்றாண்மை - சுப. சோமசுந்தரம் தற்காலத்தில் சான்றாண்மை எனும் சொல் அறிவுக் களத்தில் சிறந்து நிற்றலையே குறிக்கிறது. பரிமேலழகர் காலத்திலேயே இப்பொருள் மட்டும் குறிக்கும் வழக்கம் பரவலாக ஏற்பட்டிருக்க வேண்டும். "ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்" (குறள் 69; அதிகாரம்: மக்கட்பேறு) எனும் பொய்யாமொழிக்கு உரை சொல்ல வந்த பரிமேலழகர் "தன் மகன் கல்வி கேள்விகளால் நிறைந்தான் என்று அறிவுடையார் சொல்லக் கேட்ட தாய் தான் அவனைப் பெற்ற பொழுதை விட மகிழ்வாள்" என்றுரைக்கக் காணலாம். மணக்குடவர் 'சான்றோன்' என்பதனை விரித்துரையாமல் குறளில் உள்ளவாற…

  11. தமிழ் மொழியின் இந்தச் சகரச் சிக்கலுக்கு தீர்வே இல்லையா? கொஞ்ச நாளாகவே, இங்கு வெளிநாட்டிலேயே பிறந்த வளரும் தமிழ் சிறுமி ஒருத்திக்கு தமிழ் கற்றுக் கொடுத்து வருகின்றேன். உண்மையில், கற்பிக்கத் தொடங்கும் போதே உண்மையான ஆசிரியன் ஒருவன் உருவாகுகின்றான் என்பதை நான் உணர்ந்தேன். அவளுக்கு தமிழ் எழுத்துக்களைக் காட்டி கற்பிக்கத் தொடங்கிய போது தான், அவள் கேட்ட கேள்வி ஒன்றினால்? எனக்கே சில விடயங்கள் புரிந்தன. உலகத்தில் ஏழாயிரம் மொழிகள் இருக்கிறதாம், ஒவ்வொரு மொழியும் ஒருவிதத்தில் அழகு தான். உலகத்தில் எத்தனையோ தாய் இருந்தாலும், அவங்கவங்களுக்கு அவங்கவங்க தாய் தானே ஒசத்தி. அது போலத் ஒவ்வொரு மொழி பேசுகிற மக்களுக்கும் அவரவர் மொழி ஒசத்தி தான். நமக்கு நம் தமிழ் மொழி எப்போதுமே ஒசத்த…

    • 3 replies
    • 4.5k views
  12. ஆங்கிலம்+ஆரியத்துடன் ஒரு அக்கப்போர்! மொழிகளின் இயற்கை புரிந்துவிடு! மனிதர்க்குத் தமிழே ஆதிமொழி!-2 பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி. "பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!" - பாவேந்தர் பாரதிதாசன் "என்னப்பா! நேத்தே வந்துருவேன்னு சொன்ன! இப்பத்தான் ஊர்லந்து வர்றாப்ல இருக்கு! ஆங்கில உயிர்மெய் எழுத்து எப்படி இருக்கும் என்ற மண்டக் கொடைச்சல் தாங்கலப்பா! க்+அ=க மாதிரி b+a=ba, c+a=ca-ன்னுட்டு என்னென்னவோ கற்பனை செஞ்சு பாத்துட்டேன். கூகிள் பண்ணியும் பாத்துட்டேன்! எங்கயும் ஆங்கில உயிர்மெய் எழுத்துன்னு ஒண்ணக் கூடக் காணவே இல்லயே!", என்று அங்கலாய்த்தபடி வந்தார் நண்பர். "வாப்பா! இப்படி யோசிப்பமே! தமிழ்-ல உய…

  13. சிறப்பான ஆய்வு. வாழ்த்துக்கள் ஏழாம் அறிவில் சொன்ன மாதிரி தமிழனுக்கு இதை விளங்கப்படுத்துவது கடினம். வேற்று மொழி ஆட்கள் இலகுவில் ஏற்றுக் கொள்வார்கள்.

    • 3 replies
    • 1.2k views
  14. ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை யாழ்ப்பாணத்து வசாவிளானில் கந்தப்பிள்ளை வள்ளியம்மை தம்பதியருக்கு 1860ம் ஆண்டு பங்குனி மாதம் 6ம் திகிதி கல்லடி வேலுப்பிள்ளை பிறந்தார். அவரது இயற்பெயர் வேலுப்பிள்ளை. அவர் வீட்டருகே இருந்த ஒரு பெரிய கல் அவரது வீட்டைக் குறியீடு செய்ய வாய்ப்பாகியதோடு, அவர் பெயருடன் சேர்ந்து கல்லடி வேலுப்பிள்ளை என வழங்கச் செய்து விட்டது. இயல்பாக பாடக்கூடிய திறன்வாய்ந்தவராயிருந்ததால் ஆசுகவி எனும் அடைமொமியும் அவர் பெயருடனாயது. இவ்வாறாக இவர் பெயர் ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை என்று வழங்கலாயிற்று. சிறுவயதில் அகஸ்டின் என்பாரிடமும் பின்னர் பலாலி வேலுப்பிள்ளை உபாத்தியாயரிடமும் ஆரம்பக்கல்வியை பெற்ற பின்னர், ஆவரங்கால் நமசிவாயப் புலவரிடமும், புன்னாலைக்கட்டுவன் கதிர்காம…

  15. "உயர் வள்ளுவம்".பற்றிய இந்த தொடர் சொற்பொழிவு, நாம் கற்ற திருக்குறளை வேறு கோணத்தில் அணுகுவதை பார்த்து, நீங்களே.. ஆச்சரியப் படுவீர்கள்.

  16. தமிழும் நடையும் January 20, 2022 / த.ராஜன் அவசரம் நம் காலத்தின் குணங்களுள் ஒன்று. துரித உணவு தொடங்கி துரிதச் செய்திகள், துரிதப் புத்தகங்கள் என எங்கும் அவசரம். எதையும் சரியாகச் செய்ய வேண்டும் என்பதற்குப் பதிலாக வேகமாகச் செய்துவிடும் எண்ணம் வளர்ந்திருப்பதால், தவறுகள் நிகழ்வது அதிகரித்திருக்கிறது. அதனாலேயே, அதை சகஜமாக எடுத்துக்கொள்ளும் எண்ணமும் வளர்ந்திருக்கிறது. ஓரிரு வாக்கியங்கள் மட்டுமே இடம்பெறும் விளம்பரங்கள், செய்தி சேனல்கள் – தலைப்புச் செய்திகள் உட்பட, செய்தித்தாள்கள், ஆளுமைகளின் ட்வீட்கள், அரசியல் தலைவர்களின் அறிக்கைகள் போன்ற முக்கியமான இடங்களில்கூட பிழைகள் மலிந்திருக்கின்றன; பொருள் மயக்க வாக்கியங்கள் நிறைந்திருக்கின்றன. சினிமா, தொலைக்காட்சி, ஓடிடி என வெக…

    • 3 replies
    • 1.6k views
  17. *தமிழுக்கு இனிமை என்றொரு பெயர் உண்டு காரணம் ஏன் தெரியுமா?*.. தேன் கொண்டு வந்தவனை பார்த்து, நேற்று ஏன் தேன் கொண்டு வரவில்லை? என்று ஒருவர் கேட்கிறார். அதற்கு அவன் கூறிய இனிமை பொருந்திய பதில்.... ஐயா நீங்கள் கூறியதை நினைத் தேன் ! கொல்லிமலைக்கு நடந் தேன்! பல இடங்களில் அலைந் தேன்! ஓரிடத்தில் பார்த்தேன் ! உயரத்தில் பாறைத் தேன்! எப்படி எடுப்பதென்று மலைத் தேன்! கொம்பொன்று ஒடித் தேன்! ஒருகொடியை பிடித் தேன் ! ஏறிச்சென்று கலைத் தேன்! பாத்திரத்தில் பிழிந் தேன்! வீட்டுக்கு வந் தேன்! கொண்டு வந்ததை வடித் தேன்! கண்டுநான் மகிழ்ந் தேன்! ஆசையால் சிறிது குடித் தேன் ! மீண்டும் சுவைத் தேன் ! உள்ளம் களித் தேன்! உடல் களைத் தேன் ! உடனே படுத் தேன்! கண் அயர்ந் தேன்! காலையில் கண்வி…

    • 3 replies
    • 950 views
  18. உலகின் மிகவும் பிரபலமான பல்கலைக்கழங்களில் ஒன்றான ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தனியாகத் தமிழ்துறை ஒன்று தொடங்கப்படவுள்ளது. ஹார்வர்டில் தனித் தமிழ்துறை விரைவாக அமையவுள்ளது. ஆறு மில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீட்டில் இந்தத் துறை ஹார்வர்டில் ஆரம்பிக்கபடவுள்ளது என இந்த முன்னெடுப்பைச் செய்தவர்களில் ஒருவரான டாக்டர் விஜயராகவன் ஜானகிராமன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். அவரும் அவரது நண்பரும் சக மருத்துவருமான திருஞானசம்பந்தனும் ஆளுக்கு அரை மில்லியன் டாலர்களை இதற்காக அளித்துள்ளதாகவும், இதர ஐந்து மில்லியன் டாலர்களை வட அமெரிக்காவில் வாழும் தமிழர்களும், தமிழ்ச் சங்கங்களும் அளிக்க முன்வந்துள்ளதாகவும் அவர் கூறினார். இதற்கான கொள்கை அளவிலான ஒப்புதலை அப்பல்கலைக்கழகம் சில தினங்களுக்கு…

    • 2 replies
    • 1.9k views
  19. - ரிஷியா அவனைக் கண்ட அந்தநாள். விழிமொழியால் பேசிய நாள் அது. விழிவழியே வந்த காதல் இதயத்தில் நிறைந்தது. என்புவரை சென்று உயிரைத் தாக்கியது. எனக்கு மட்டுமா இந்த நிலை? அவனுக்கு? கண் வழியே நெருப்புப் பூக்கள் உடலெங்கும் மலர்ந்த தருணம் அது. விழிமொழியால் பேசப்படாத வார்த்தைகளை விரல்மொழியால்தானே பேச இயலும். விழிமொழிக்குக் காதல் என்று பெயரிட்டால், விரல்மொழிக்குக் காமம் என்று பெயரிடலாமே! விழியும் விரலும் பேசினால்தானே அன்பின் அத்தியாயங்கள் வாழ்க்கை என அரங்கேறும். இதை அவன் உணர்ந்தானா? உணரவில்லையே! அவனை விரும்பி, இணைந்து, பிணைந்து கொள்ள என் துயர் தீர்க்க அவன் வரவில்லை. என்னை ஊரறிய ஏற்றுக் கொள்ளவும் எந்த முனைப்பும் காட்டவில்லை. எனக்குள் மலர்ந்த அக்னிப்பூக்கள் அவனுக்குள் மலரவில்லையா…

  20. என்ன செய்யப் போகிறோம்? தமிழ் திரையுலகத்துக்கு உள்ள சக்தியை நம்மால் அளவிட முடியாது. 20, 30 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான திரைப்படத்தின் பாடலை நாம் வானொலியில் கேட்டிருப்போம். அந்தப் பாடலை இப்போது கேட்டாலும் அது குறிப்பிட்ட திரைப்படத்தின் பாடல்தான் என உடனே நமது நினைவுக்கு வரும். இது அன்றைய திரைப்படப் பாடல்களுக்கு உள்ள தனிச் சிறப்பு. இதைச் செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயமும், அவசியத் தேவையும் கூட. பாரதியார் எழுதிய பாடல்களில் "நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே நீங்களெல்லாம் சொற்பனந்தானோ?' - இந்தப் பாடல் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான "பாரதி' என்ற திரைப்படத்தில் இடம்பெற்றிருந்தது. அந்தப் பாடலைப் பாடிய திரைப்படப் பின்னணிப் பாடகருக்கு தேசிய விருதும் கிடைத்தது. இது…

    • 2 replies
    • 776 views
  21. நாலு கோடியா? ...........காசில்லப்பா, பாடல்! - ஒளவையின் புலமை. சோழமன்னன் ஒருநாள் தனது ஆஸ்தான கவிஞர்களை அழைத்து, நாளை விடிவதற்குள் நாலு கோடிக்குப் பாடல் பாடி வரவேண்டும் என கட்டளை இட்டான்.இந்தக் கவிஞர்கள் அரண்மனையிலே சும்மா தினமும் சாப்பிட்டுக் கொண்டிருக்கலாமா?; அவர்களுக்குச் செய்ய ஒரு வேலை கொடுக்க வேண்டாமா என சோழமன்னன் நினைத்தானோ என்னவோ, இதை ஒரு வீட்டு வேலையாகச்(Homework) செய்து வர, பணித்திருந்திருக்கலாம். அதை கேட்ட கவிஞர்கள், "நாலு கோடிக்கு எங்கே போவது?", எனக் கவலையுடன் வீடு திரும்பினார்கள். அன்று அவ்வழியாக வந்த ஒளவையார் அந்தக் கவிஞர்கள் கவலையுடன் இருப்பதைக் கண்டு, " ஏன் கவலையோடு இருக்கிறீர்கள்?" என்று கேட்டார். " ஒளவையே, எம்மை சோழ மன்னன் நாளை சூரிய உதயத்திற்கும…

  22. கோவில் என்பதே இலக்கணப்படி சரியானது . கோயில் என்பது பேச்சு வழக்கு .

  23. எனக்கு மிகவும் பிடித்த ஒரு மேடைநாடகத்தைப் பற்றியது இந்தக்கட்டுரை. கூடவே எனக்கு மிகவும் பிடித்த நடிகர்களும் இந்த நாடகத்தில் நடித்திருப்பதால் இந்த கட்டுரையை எழுதுவது சந்தோசமான அனுபவமாகவிருக்கிறது. இந்த நாடகம் எங்கே ஆரம்பித்தது? பாரதக்கதையின் ஒரு கிளைக்கதைதான் இது என்றாலும் வியாசரின் மகாபாரதத்தில் தொட்டதைவிட வில்லிபுத்தூராழ்வார் தமிழில் இயற்றிய 'வில்லிபாரதம்' என்ற நூலையே அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. பி.எஸ்.ராமையா இந்தநாடகத்தை எழுதியவர், மணிக்கொடி எழுத்தாளர் பி.எஸ்.ராமையா. அக்காலத்தின் பிரபல நாடகநடிகரான எஸ்.வி.சகஸ்ரநாமம் (பின்னாளில் குணசித்திரபாத்திரங்களில் திரைப்படங்களில் நடித்தவர்) நடத்திவந்த சேவாஸ்டேஜ் நாடகக்குழுவிற்காக பி.எஸ்.ராமையா எழுதிய…

    • 2 replies
    • 3.4k views
  24. - ரிஷியா Source : http://www.varalaaru.com கா... கா... கா... என்று கரைந்தது மரத்தின் மீது அமர்ந்திருந்த கரியகாகம். அவன் இன்றும் வரவில்லையே என்று பிரிவுத் துயரால் முற்றத்தில் இருந்த தலைவி வெளியே ஓடி வந்தாள். காக்கை கரைகிறதே, இது ஒரு நல்ல நிமித்தமே, பரவசப்பட்டாள். காக்கை கரைந்தால் விருந்து வருமே. மனம் குதூகலிக்க வீட்டிற்குள் ஒடினாள். ஒருவேளை அவன் வருவானோ... அவன் இன்று வருவானா? என் கண்ணீர் துடைப்பானா? என் சோகம் இன்று தீருமா? எல்லாம் கேள்விக் குறிகள். கா.... க்கா....... அந்த கரிய காகம் எதற்காய் இப்படிக் கரைகிறது? வாசலுக்கும் முற்றத்திற்குமாய் நடையாய் நடந்தாள். தூரத்தில் குதிரைக் குளம்பொலி கேட்டது. பழகிய அந்த ஒலி அவளுக்கு எல்லையில்லா மகிழ்வைக் கொடுத்தது. அவனேத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.