Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழும் நயமும்

இலக்கணம் | இலக்கியம் | கலைச்சொற்கள் | பழந்தமிழ்க் காப்பியங்கள்

பதிவாளர் கவனத்திற்கு!

தமிழும் நயமும் பகுதியில் இலக்கணம், இலக்கியம், கலைச்சொற்கள், பழந்தமிழ்க் காப்பியங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழ் மொழி, செவ்வியல் இலக்கியம், இசை, பெருங்காப்பியங்கள் சம்பந்தமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. இருபதாம் நூற்றாண்டில் மூன்று இயக்கங்கள் தமிழ்நாட்டில் முதன்மைபெற்றன. அவை தமிழக இலக்கியப்போக்குகளையும் தீர்மானித்தன. தேசியம்-காந் தியம் என்பது முக்கியமான ஓர் இயக்கமாகச் சுதந்திரத்திற்கு முற்பட்ட காலத்தில் அமைந்தது. பாரதி, வ.வே.சு.ஐயர் முதற்கொண்டு பல எழுத்தாளர்கள் தேசிய இயக்கத்தில் ஈடுபட்டவர்கள். அதற்குப் பின் திராவிட இயக்கம் மதிப்புப் பெற்றது. கடைசியாகத் தமிழகத்தில் வந்த இயக்கம் மார்க்சியம். காந்திய இயக்கத்தினர் நாவல், சிறுகதை, கவிதைத் துறைகளில் ஓரளவு ஆக்கம் புரிந்தபோதிலும் திறனாய்வுத்துறையில் அவ்வளவாக ஈடுபடவில்லை. இருபதாம் நூற்றாண்டில் காந்தியவாதிகளாகவும் திறனாய்வாளர்களாகவும் எஞ்சியவர்கள் நாமக் கல் கவிஞரும் சி.சு. செல்லப்பாவும் மட்டுமே. ஆங்கிலேயர்கள் ஏறத்தாழ இந்…

  2. கலை / இலக்கியம்! தேங்கோ நடனம் : காதலின் கலை வடிவம் - யமுனா ராஜேந்திரன் - 1 தகதகவெனக் கொழுந்துவிட்டு மூண்டெழுந்து நடனமிடும் நெருப்பு. ‘ஆரத்தழுவி எனக்குள் மூழ்கிக் கலந்து விடு’ என, ஆண்பெண் உடல்கள் எதிர்பாலிடம் விடுக்கும் விரகத்தின் அழைப்பு. அடர்ந்த இரத்தத்தின் அடையாளமாகி கிளர்ச்சியூட்டும் சிவப்பு நிறத்தின் தவிப்பு. ‘ஸல்சா’ முதல் ‘தேங்கோ’ வரையிலுமான இலத்தீனமெரிக்க நடனங்களை நினனைக்கும் தோறும், இந்த மூன்று பிம்பங்களும், இவைகளின் அப்படைகளையேனும் அறிந்தவர்ககு முன்வந்து, பரவசம் எமது நரம்புகளில் பரவுவதை அனுபவிக்க முடியும். ஸ்பானியத் திரைப்பட இயக்குனரான கார்லோஸ் ஸவ்ராவின் ‘இரத்தத் திருமணம்’( Blood wedding 1981) திரைப்படம…

  3. தமிழ் அறிவுலகில் தொடர்ச்சியாக நிகழ்ந்து வரக்கூடிய சிந்தனைப்போக்குகள் என சில உண்டு. 1. சங்க இலக்கிய ஆராய்ச்சியும் ரசனையும் 2. கம்பராமாயண ஆராய்ச்சி 3. குறள் ஆய்வு 4. சித்தர் மரபு மீதான ஆய்வு 5. வள்ளலார் ஆய்வுகள் 6. பாரதி ஆய்வுகள். சைவ வைணவ இலக்கியங்களைப்பற்றிய ஆய்வுகள் உண்டென்றாலும் அவை மரபார்ந்த ஒரு பார்வையை மட்டுமே கொண்டவை. சீரான ஒரு வளர்ச்சிப்போக்கு அவற்றில் இல்லை. மேலே சொன்ன ஆறு சரடுகளில் சங்க இலக்கிய ஆய்வுகளின் பொற்காலம் என்பது ஐம்பது அறுபதுகள்தான். மெல்ல மெல்ல சாராம்ச வல்லமை கொண்ட ஆய்வுகள் அருகி விட்டன. அதற்கான காரணங்கள் பல. முக்கியமானது, சங்க இலக்கியத்தில் தகவல்கள் சார்ந்து செய்யப்படவேண்டிய ஆய்வுகள் எல்லாமே செய்யப்பட்டுவிட்டன என்பதுதான். சங்க இலக்கி…

    • 0 replies
    • 945 views
  4. Started by Nathamuni,

    அடேயப்பா கெடுவதற்க்கு இவ்வளவு விஷயங்களா? நம், தமிழ் மூதாட்டி ஒளவையார் எவ்வளவு அழகாக சொல்லி இருக்கிறார்......(01) பாராத பயிரும் கெடும்.(02) பாசத்தினால் பிள்ளை கெடும்.(03) கேளாத கடனும் கெடும்.(04) கேட்கும்போது உறவு கெடும்.(05) தேடாத செல்வம் கெடும்.(06) தெகிட்டினால் விருந்து கெடும்.(07) ஓதாத கல்வி கெடும்.(08) ஒழுக்கமில்லாத வாழ்வு கெடும்.(09) சேராத உறவும் கெடும்.(10) சிற்றின்பன் பெயரும் கெடும்.(11) நாடாத நட்பும் கெடும்.(12) நயமில்லா சொல்லும் கெடும்.(13) கண்டிக்காத பிள்ளை கெடும்.(14) கடன்பட்டால் வாழ்வு கெடும்.(15) பிரிவால் இன்பம் கெடும்.(16) பணத்தால் அமைதி கெடும்.(17) சினமிகுந்தால் அறமும் கெடும்.(18) சிந்திக்காத செயலும் கெடும்.(19) சோம்பினால் வளர்ச்சி கெடும்.(20) சுயமில்லா வே…

    • 4 replies
    • 1.5k views
  5. வில்லுப்பாட்டு கச்சேரி என்பது, கீழ்கண்ட கருத்தில் இருக்க வேண்டும். மக்களுக்கும் புரிய வேண்டும். வில்லுப்பாட்டுக்கான கதைகள் பல்வேறு வகையில் அமைகின்றன. மரபு வழிக்கதைகள் முதல் தற்கால நிகழ்வுகள் வரை எதையும் வில்லுப்பாட்டுக்கான கதையாகக் கொள்ளலாம். ஆனால் கட்டமைப்பு நிலையில் அவை பொதுவான வடிவத்தைக் கொண்டு விளங்குவதைக் காணலாம். வில்லுப்பாட்டில் வரும் கதைகள் பொதுவாகப் பின்வருமாறு அமையும், அவை அ) தொன்மைக் கதைகள் ஆ) நாட்டுப்புறக் கதைகள் இ) தெய்வக் கதைகள் ஈ) சமுதாயக் கதைகள் உ) வரலாற்று வீரர் கதைகள் ஊ) நடப்பியல் நிகழ்வுகள் போன்றனவாகும். இவ்வகையில் அய்யன் கதை, வள்ளியம்மன் கதை, பார்வதியம்மாள் கதை, மார்க்கண்டன் தவசு, அரிச்சந்திரன் கதை, கிருட்டிணசாமி கதை, பெருமாள்சாமி கதை, மாகாளியம்மன் கதை…

  6. சேதுபதி மன்னரின் அவைப் புலவர்களில் ஒருவராக இருந்தவர் மதுரகவிராயர் . ராமநாதபுரத்துக்கு அருகில் வசித்து வந்தார். ஒரு நாள் அவரைப் பாம்பு கடித்துவிட்டது. அதனால் அவரது உயிர்நிலை அடங்கிப்போய்விட்டது. ஆனால் உறவினர்கள் அவர் இறந்துவிட்டார் என்று எண்ணி விட்டனர். ஆகையால் எல்லா இடங்களுக்கும் செய்தி சொல்லிவிட்டனர். சேதுபதி மன்னரும் தம்முடைய ஆஸ்தானப்புலவர் இறந்துவிட்டார் என்பதால் வரிசைகள் அனுப்பியிருந்தார். உடலை மயானத்திற்கு எடுத்துச் சென்றனர். அப்போது ராமேஸ்வரம் சென்றுகொண்டிருந்த வடநாட்டு பைராகிகள் கவிராயரின் உயிர்நிலை மட்டுமேஅடங்கியுள்ளதை அறிந்துகொண்டனர். கவிராயருக்கு காருட மந்திரப ்பிரயோகம், விஷ வைத்தியமெல்லாம் செய்து அவரை எழுப்பினர். சில பரிகாரங்களுடன் வீட்டில் சேர்த்துக்கொள்…

  7. வணக்கம், சூரியன், சந்திரன், உதயம் இதெல்லாம் தமிழ் சொல்லுகள் இல்லையாம்; வடமொழிச் சொல்லுகளாம். இப்பிடி வழமையில பயன்படுத்துகிற சொற்களில அரைவாசிக்கு மேல வடமொழிச் சொல்லுகளாம். ஓர் தமிழ் அறிஞருடன் கதைச்சபோது சொன்னார். அவருடன் தொடர்ந்து நான் தமிழில் (?) உரையாடிய போது இப்பிடிச் சொன்னார்: தமிழில இருக்கிற பலவித கிளைகளை பாவிச்சு தேவையான அளவுக்கு புதிய தமிழ்ச் சொல்லுகளை உருவாக்கலாமாம். உதாரணமாக, ஆங்கிலத்தில இருக்கிற குளோரபில் - Chlorophyll எனப்படுகிற சொல்லிண்ட அர்த்தத்தை புரிந்து அதற்கு நிகராக தமிழில பச்சையம் என்று ஓர் சொல் உருவாக்கப்பட்டதாம். காந்தம் எண்டுறது தமிழ்ச்சொல் இல்லையாம். நான் கேட்டன் அப்ப அதுக்கு என்ன தமிழ்சொல்லு எண்டு. அவரால் உடனடியாக பதில் சொல்ல முட…

  8. ஆரியப் புரட்டும் அயிரமீனும் பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி சமஸ்கிருதத்திலிருந்தே பல தமிழ்ச் சொற்கள் உருவாயின என்று ஆரியர்கள் காலம் காலமாகப் புளுகி வருகின்றனர். அதற்கு எடுத்துக்காட்டாக அவர்கள் பயன்படுத்தும் சொற்களில் மிகவும் முக்கியமான சொல் தமிழில் நாம் புழங்கிவரும் "ஆயிரம்" என்னும் சொல்லாகும். ஆயிரம் என்னும் சொல் 'ஸகஸ்ர' என்னும் வடசொல்லில் இருந்தே பெறப்பட்டதாகக் காட்டுவர் ஆரியர்கள். தரம் உயர்ந்த வைரம், தரம் குறைந்த வைரம் என்று வைரக்கற்களின் தரத்தைச் சோதித்து அறிய சாமானியனால் இயலாது; ஆனால், 'மணிநோட்டகன்' எனப்படும் வைரப் பரிசோதகன் எளிதில் கண்டுபிடித்துவிடுவான். அதுபோல், சொற்களின் வேர், சொற்பொருள் காரணம் போன்றவை மொழிநூல் இலக்கணம்…

  9. [size=6]தமிழ் இலக்கியத்தின் ஆரோக்கியம் இன்றும் நாளையும்[/size] [size=4]வி. ஜீவகுமாரன்[/size] [size=2] [size=4]அனைத்துலக தமிழ் மகாநாட்டில் தமிழ் இலக்கியமும் சமூகமும் இன்றும் நாளையும் என்பது பற்றி கட்டுரை எழுதுவது என்பது பூதத்தை பிடித்து பானைக்குள் அடக்கும் முயற்சியாகும். இலக்கியத்தின் ஒவ்வோர் பிரிவு பற்றி எழுதுவதாயின் அவையே பெரிய கட்டுரைக் கோப்புகளாக அமைந்து விடும். எனவே இலங்கை மற்றும் இலங்கையர் புலம் பெய்ர்நது படைக்கும் இலக்கியத்தின் ஆரோக்கியம் இன்றும் நாளையும் எவ்வாறு இருக்கின்றது அல்லது இருக்கப் போகின்றது என்பதனை பின்ணினைப்புகளுடன் கூடிய ஓர் ஆராய்ச்சிக் கட்டுரையாக அன்றி நிஜ உலகின் தரிசனங்களை மட்டும் வைத்து அலசுவதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.[/size][/size] …

  10. ஔவை எனும் தமிழ்க் கிழவி, ‘அறம் செய விரும்பு’ தொடங்கி ‘ஓரம் சொல்லேல்’ ஈறாக ஆத்திச்சூடி எழுதுகிறார். இந்த ஔவையார் புற நானூறு முதலாம் சங்கப்பாடல்களில் இடம்பெற்ற ஔவையார் அன்று. சங்க கால ஔவை பாடிய பாடல்கள் மொத்தம் 59. அவரால் பாடப்பெற்றோர் 17 மன்னர்களும் மற்றவர்களும். சேரமான் மாரி வெண்கோ, பசும்பூட் பொறையன், சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, கைவண் கிள்ளி, பாண்டியன் கானப்போர் தந்த உக்கிரப் பெருவழுதி, அதியமான் நெடுமான் அஞ்சி, அதியமான் அஞ்சி மகன் பொக்குட்டு எழுனி, எழுனி, தொண்டைமான், நாஞ்சில் வள்ளுவன், பாரி, முடியன், அதியர், கோசர், மழவர், வெள்ளிவீதி, பரணர். பரணர் போல சங்க புலத்தினுள் வெள்ளிவீதியார் புகழ் பெற்ற புலவர். பெண்பாலர். அவர் எழுதிய பாடல்கள், அக நானூறு – 2 குறுந்தொகை…

    • 5 replies
    • 17.6k views
  11. டொமினிக் ஜீவா... 1927, ஜூன் 27ம் திகதி யாழ்ப்பாணத்தில் பிறந்த இவருக்கு சாதி, குல பேதங்களின் பிரச்சினைகளால் தொடர்ந்து கல்வி கற்க முடியாமல் போய் விட்டது. இதனால் மனம் உடைத்த இவரது கல்வி இடை நடுவில் நின்று போய் விட்டது. கல்வி இடை நடுவுவில் நின்று போய் விடினும் அவரது மனதுக்குள் எழுந்த கோபத்தை பொடியேனும் வெளிப்படுத்துவதற்கும், அசாதாரணத்துக்கு எதிராய் போராடுவதற்கும் இவர் படைப்பிஇலக்கியத்தை ஆயுதமாகக்கொண்டார். ஈழத் தமிழரின் தேசிய இலக்கியம் டொமினிக் ஜீவா அவர்களின் மணி விழா நூல். http://noolaham.net/project/17/1638/1638.pdf

    • 2 replies
    • 1.3k views
  12. 40 வருடங்களில் நலிந்த தமிழ் [30 - May - 2007] * `ஊருக்கு உபதேசம் உனக்கல்லடி மகளே' என்ற மனப்பான்மையால் ஏற்பட்ட பின்னடைவு தமிழக முதல்வர் கருணாநிதி ஒரு விழாவில் பேசும்போது, தமிழ் வானொலி, தொலைக்காட்சிகளில் செய்தி படிப்பவர்கள் எப்படித் தமிழை உச்சரிக்கிறார்கள் என்பதைத் தனக்கே உரிய தனி முத்திரையோடு, `வல்லுவர், சொள்ளுவர்" என்பன போன்ற எடுத்துக்காட்டுகளைக் கூறி விளக்கினார். தமிழகத்தில், "நெடுஞ்செழியன், அன்பழகன், மதியழகன், இளங்கோ, இளம்பரிதி, தொல்காப்பியன், தமிழரசி, வளர்மதி, மங்கையற்கரசி, அருள்மொழி, மான்விழி, தேன்மொழி, கனிமொழி போன்ற பெயர் கொண்டவர்களை இன்று நீங்கள் பார்த்தால், அவர்கள் அனைவரும் 99 விழுக்காடு, குறைந்தது 40 வயதைத் தாண்டியவர்களாகவே இருப்பார்கள். "…

  13. இணையத்தில் தகவல்களைத் தேடும் எவரும் செய்யும் முதல் ‘க்ளிக்’ விக்கிப்பீடியாதான். அறிவுப் புரட்சியின் குறியீடாக அது மாறிவருகிறது. அது லாப நோக்கு இல்லாமல், பலரால் கூட்டாகத் தொகுக்கப்படும், பல மொழிகளில் உள்ள இணையக் கலைக்களஞ்சியம். வரும் காலங்களில் மாணவர்களையும், விக்கிப்பீடியாவையும் பிரிக்க முடியாது. அவர்களின் கல்விக்கும், அறிவுத் திறன்களின் தோழனாக அது மாறியுள்ளது. பள்ளிகளில் பேச்சுப் போட்டிகள், கட்டுரைப் போட்டிகளில் ஆரம்பித்து கல்லூரிகளில் செய்யும் புராஜெக்ட்கள் வரை மாணவர்கள் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்துகிறார்கள். 2001 -முதல் செயல்படும் விக்கிப்பீடியா உலகம் முழுவதும் 280 மொழிகளில் இயங்குகிறது. இந்தியாவில் 22 மொழிகளில் விக்கிப்பீடியா இயங்குகிறது. 2003 முதல் செயல்படும் தமி…

  14. பண்பாடு என்னும் சொல்லே, 1937ஆம் ஆண்டு ரசிகமணி என்று சொல்லப்பட்ட பி.கே. சிதம்பரநாத முதலியாரால் தமிழுக்குப் புதிதாகக் கொண்டுவரப்பட்டது என்கிறார் வையாபுரிப்பிள்ளை. "கல்ச்சர்' எனப்படும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையானதாக அவர் மொழிபெயர்த்திருக்கிறார். அதே காலகட்டத்தில் பலர் அதைக் "கலாச்சாரம்' எனக் கொண்டார்கள். இந்தக் "கல்ச்சர்' என்னும் சொல் குறித்தும் இங்கிலாந்திலேயே 1870ஆம் ஆண்டுகளை ஒட்டிப் பெரிய சொற்போர் நடந்ததாகவும் பிள்ளை கூறுகிறார். "கல்ச்சரை' ஆங்கிலத்தில் பெருவழக்காகக் கொண்டு வந்தவர் மேத்யூ அர்னால்டு. தமிழில் பண்பாடு இல்லையா எனக் கேட்டுவிடக் கூடாது. இருந்தது. வேறு சொல்லாக இருந்தது. சால்பு, இச்சொல்லை அடிப்படையாகக் கொண்டு பிறந்த சான்றாண்மை முதலான சொற்கள் பண்பாட்டைச் சுட்டியி…

  15. தமிழரின் கலைவடிவங்களில் ஒன்றான வில்லிசையை இலங்கையிலும் மலேசியா, இந்ததியா போன்ற நாடுகளிலும் 80ம் ஆண்டுகளில் மிகவும் பிரபலமாக நிகழ்த்தியோரில் கலாவிநோதன் சின்னமணி கணபதிப்பிள்ளை அவர்களும் ஒருவர். அவர் தாயகத்திலிருந்து வந்து சுவிஸ் நாட்டில் 2004ல் நிகழ்த்திய 'வள்ளி திருமணம்' என்ற வில்லிசை நிகழ்வு யாழின் ஒளித்தடம் பகுதியில் உள்ளது.

    • 26 replies
    • 7k views
  16. தாய்மொழியின் சமத்துவமும், அயல்மொழியின் ஆதிக்கமும்! மொழிகளின் இயற்கை புரிந்துவிடு! மனிதர்க்குத் தமிழே ஆதிமொழி!-5 பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி. "பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!" - பாவேந்தர் பாரதிதாசன் "காக்கா எல்லா நாட்டுலயும் கா கா -ன்னுதான் கத்துது! எல்லா நாட்டுலயும் குயில் கூகூ-ன்னுதான் கூவுது; எல்லாக் காட்டு யானையும் ஒரே மாதிரித்தான் பிளிறுது; இந்த மனிதன் மட்டும் ஊரூருக்கு வேற வேற மொழி பேசறானே! அதெப்படிப்பா?", என்றபடியே வந்தார் நண்பர். "மொழிகளின் இயற்கை குறித்துச் சொல்றேன்னு சொன்னது உண்மைதான்! அதுக்காக என்ன வைச்சு செய்யதுன்னு முடிவு பண்ணிட்டியாப்பா!", என்றேன் சற்று பயத்துட…

  17. பிரித்தானியாவில் ஈழத்தமிழர்கள் உள்ளிட்ட தமிழர்களின் மருத்துவத்துறைக்கான பங்களிப்பு எப்போதும் வெகுந்து பாராட்டப்பட்டு வரும் நிலையில்.. பிரித்தானியாவுக்கான.. என்ற உயிரியல் மருத்துவத்துறை புலமைசார் நிறுவனம்.. தமிழர் பாரம்பரிய மாதமாக தை மாதத்தை.. தமிழ் மரபுத் திங்கள் என்று அடைமொழியோடு.. அனுஷ்டித்து தமிழர்கள் உயிரியல் மருத்துவத்துறையில் ஆற்றி வரும் பங்களிப்பை கெளரவப்படுத்தி உள்ளது. Celebrating Tamil Heritage Month 2024 2 January 2024 This January we're celebrating Tamil Heritage Month by speaking to our Tamil members about their heritage Lavanya Kanapathypillai, Biomedical Scientist, Cellular Pathology, Royal Berkshire NHS …

  18. சீறும் பாம்பை நம்பினாலும் சிரிக்கும் பெண்ணை நம்பக்கூடாது ஏன்? சீறும் பாம்பை நம்பினாலும் சிரிக்கும் பெண்னை நம்பக் கூடாது என்று பன்னெடுங்காலமாகவே கூறிவருகிறோம். அதற்கு காரணங்களும் பலவாகவே கூறப்பட்டு வருகின்றன.. பாம்பை விட கொடிய விசத்தன்மை கொண்டவளா பெண்? உயிரைக் கொல்லும் தன்மையுடையவளா பெண்? பெண் இல்லாத உலகை நினைத்துக் கூடப் பார்க முடியாது. தாயாக, சகோதரியாக, மனைவியாக, குழந்தையாக என ஒவ்வொருவர் வாழ்விலும் பெண் தவிர்கமுடியாதவளாகவே இருக்கிறாள் ஆயினும்… ஏன் சீறும் பாம்பை நம்பு சிரிக்கும் பெண்ணை நம்பாதே என்ற கூறினர்..? சங்க இலக்கியத்தில் குறுந்தொகையிலிருந்து ஓர் சான்று, இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கும் தலைமகன் பாங்கர்க்கு உரைத்தது. (தலைவியை இயல்பாக ஓரிடத்…

  19. தனித்தமிழ் இயக்கம் வெளியிட்ட நுட்பவியல் கலைச்சொற்கள் WhatsApp - புலனம் Facebook - முகநூல் Youtube - வலையொளி Instagram - படவரி WeChat - அளாவி Messanger - பற்றியம் Twitter - கீச்சகம் Telegram - தொலைவரி Skype - காயலை Bluetooth - ஊடலை WiFi - அருகலை Hotspot - பகிரலை Broadband - ஆலலை Online - இயங்கலை Offline - முடக்கலை Thumbdrive - விரலி Hard disk - வன்தட்டு Battery - மின்கலம் GPS - தடங்காட்டி CCTV - மறைகாணி OCR - எழுத்துணரி LED - ஒளிர்விமுனை 3D - முத்திரட்சி 2D - இருதிரட்சி Projector - ஒளிவீச்சி Printer - அச்சுப்பொறி Scanner - வருடி Smartphone - திறன்பேசி Sim Card - செறிவட்டை Charger - மின்னூக்கி Digital - எண்மின…

  20. சே, என்னமா சொல்லித்தராரு? “ஏண்டா தினேஷ், இன்னிக்கு ஒரு சில்லறை மேட்டரோட ஆரம்பிக்கலாமா?” “அது என்னடா சில்லறை மேட்டர்?” “போன முறை நாம இந்த ர/ற பத்திப் பேசினோமே. அப்போ சில்லறையா சில்லரையான்னு பேசாம விட்டுட்டோமேன்னு சொல்லி இருக்காரு எழுத்தாளர் இரா முருகன். நியாயப்படி சேர்த்து இருக்க வேண்டிய விஷயம்தான். அதை இப்போ சொல்லிடலாம். சில்லரைன்னா சில அரைகள் அப்படின்னு சொல்லறது மாதிரி ஆகிடும். சில என்றால் இரண்டுக்கும் மேல். உதாரணமா ஒரு நூறு ரூபாயை மாத்தினோமுன்னா, நூறு ரூபாய் மதிப்புதானே திரும்பக் கிடைக்கும். ஆனா சில அரைன்னு சொன்னோமுன்னா நூறு ரூபாய்க்கு மேல கிடைக்கணும்தானே. அதனால அது தப்பு. அதே சமயம் சில்லறைன்னா சில பகுதிகளாக நறுக்குவதால் அறுப்பது என்பது போல அறை என்பது வரும். எனவே…

  21. இவ்விடுகை அடிபாட்டியலில்(hopology) விருப்பம்/நாட்டம் உள்ளோரிற்கு நல்ல விருந்தாக அமையும். இங்கே தெறுவேயங்களில் இருக்கும் உறுப்புகளை பட்டியலிட்டு அவற்றின் செயல்களையும் விளக்கியுள்ளேன். குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு உறுப்பினையும் கீழே உள்ள படிமத்தில் கண்டுகொள்ளவும். பீரங்கி என்பது தமிழல்ல. சரியான தமிழ்ச் சொல் தெறுவேயம் என்பதாகும். → தெறுவேயம் - Cannon எதிர்மறை வெளி(Negative space):- துளை(Bore): மூட்டுப்படை(Ordance) (நொய்யகோ(wad), குளிகை(pellets) போன்றவை) நிரப்பப்படும் துளையின் தளம் அல்லது துளையின் அடி எனப்படும் துளைக்கு அருகிலுள்ள முடிவு உட்பட அனைத்தும் உள்ளீடற்ற உருளை போன்று தெறுவேயத்தின் மையத்தின் கீழ் வரை துளைக்கப்பட்டுள்ளது. இதில் தெர…

  22. Started by pryanka,

    தமிழர் சமுதாயம் பல கலாசார, பண்பாட்டு விழுமியங்களைத் தன்னகத்தே கொண்ட சமுதாயமாகும். நம் முன்னோர்கள் பல நம்பிக்கைகளையும் சடங்குகளையும் எமக்கு விட்டுச் சென்றுள்ளார்கள். அவற்றை நாம் பின்பற்றும் காரணத்தால் தலைமுறைகள் பலவற்றைக் கடந்தாலும் எமது சமுதாயம் உயிர்ப்புடன் வாழ்கிறது என்றால் அது மிகை இல்லை. விரல்களில் மோதிரங்களை அணிவதால் மருத்துவப்பயன்பாடு கிடைப்பதாக பலர் கருதுகிறார்கள். பலருக்கு தங்கள் கை விரல்களை மடக்குவதற்கு அல்லது நீட்டுவதற்கு இலகுவாக இருப்பதில்லை. அதிலும் பெண்களுக்கு இவ்வாறான பிரச்சனைகள் அதிகமாக உள்ளன. பெண்களுக்கு அதிகளவான இரத்த இழப்பு ஏற்படுவதோடு அவர்களின் எலும்புகள் விரைவில் பலவீனமடைவதே இதற்கு காரணம் என தற்கால வைத்தியர்கள் விதந்துரைக்கிறார்கள். எது எப்படி என…

  23. தவறவிடாதீங்க.. பிறகு வருத்தப்படுவீங்க.. முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு! சென்னை: தமிழ் நூல்களை மொழியாக்கம் செய்ய தமிழ்நாடு அரசால் மொழிபெயர்ப்பு மானியமாக 3 கோடி ரூபாய் Translation grant வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார். எழுத்தாளர்களுக்கு - பதிப்பாளர்களுக்கு - மொழிபெயர்ப்பாளர்களுக்கு இது மிகப்பெரிய வாய்ப்பு என்றும் இதனை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது; மொழிபெயர்ப்பு மானியம் தமிழ் மொழியை உலகெங்கும் எடுத்துச் செல்லும் வகையில் தமிழ் மொழியின் சிறந்த படைப்புகளை உலக மொழிகளிலும் இந்திய மொழிகளிலும் மொழியாக்கம் செய்ய …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.