சமூகவலை உலகம்
முகநூல் | இன்ஸ்ராகிராம் | டுவிட்டர் | வாட்ஸப்
சமூகவலை உலகம் பகுதியில் முகநூல், இன்ஸ்ராகிராம், டுவிட்டர், வாட்ஸப் போன்ற சமூகவலைத் தளங்களில் இருந்து பதிவுகள் இணைக்கப்படலாம். எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
இப்பகுதியில் சமூகவலைத் தளங்களில் இருந்து தரமான பயனுள்ள பதிவுகள், பொழுதுபோக்கு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
ரசிக்கத்தக்க படங்கள், நாகரீகமான துணுக்குகள், மகிழ்வூட்டும் நகைச்சுவை விடயங்கள், கருத்துப்படங்கள் போன்றவற்றைப் இணைப்பதும் பகிர்வதும் அனுமதிக்கப்படுகின்றது.
இவ்வாறு இணைக்கப்படுபவை கருத்துக்கள விதிமுறைகள் பிரிவு 7 இலுள்ள விதிமுறைகளைக் கவனத்தில் கொண்டு பதிவுகள் இணைக்கப்படல் வேண்டும்.
முக்கியமாக சமூகவலைத் தளங்களை மட்டும் ஆதாரமாகக் கொண்டு செய்திகள், அரசியல் அலசல்கள் இணைப்பது தவிர்க்கப்படல் வேண்டும். எனினும் நம்பகத்தன்மை வாய்ந்தவர்களில் முகநூல் குழுமம், பக்கம், சுவர் பகுதிகளில் இருந்து இணைக்கப்படும் காத்திரமான பதிவுகள் அனுமதிக்கப்படும்.
1006 topics in this forum
-
கம்மாரிசு எல்லாரும் ஒழுங்கையில நாலு மணீல இருந்து கிளிபூர் விளையாடாமல் wait பண்ணிக்கொண்டு இருந்தம். இப்ப வாற நேரம் சரி அண்டைக்கும் உதே நேரம் தான் வந்தவன் , எண்டு அன்பழகன் சொல்ல ஆதித்தன் மாமா வீட்டு மதிலில ஏறி எல்லாரும் இருந்தம். இவன் வாறதாலை இண்டைக்கு விளையாட்டும் இல்லாமல் போட்டு எண்டு செந்தில் புறுபறுக்க நாங்களும் பொறுமை இழந்து வெளிக்கிடுவம் எண்ட சத்தம் கேட்டிச்சு. உடனே Panasonic Radio வில FM ஐ மாத்தினம். அப்ப MW வில தான் எல்லாம் , BBC மட்டும் SW 2 இல கேக்கிறது. நாங்கள் தான் இலங்கையில FM ஐ முதல் கேட்டது, அதுகும் ஒட்டுக் கேட்டது. அவன் கதைக்கிற பாசையை translate பண்ணிறதுக்கும் கிருபான்டை அப்பா இருந்தவர். இந்தா கண்டிட்டானாம் , பதியிறானாம் , கோயில் தெரியுதாம் எண்டு…
-
- 3 replies
- 719 views
-
-
கற்கண்டு அம்மம்மா மறிச்சுக் கேட்டதுக்கு “ இப்பிடியே நேர போய் இடது பக்கம் திரும்பினா வரும், 20 ம் வாட்டு எண்டு கேட்டாக் காட்டுவினம்“ எண்டு ஒரு வெள்ளை உடுப்புக்காரர் சொல்ல , நான் இவரும் டொக்டரோ எண்டு கேட்டன். “பறையாம வா அது ஓடலி” எண்ட படி அம்மம்மா இழுத்துக்கொண்டு போனா. ஆஸ்பத்திரியில வெள்ளை உடுப்போட திரியிற பொம்பிளை எண்டால் நேர்ஸ் , ஆம்பிளை எண்டால் டொக்டர் எண்டு தான் நான் நெச்சிருந்தனான். முந்தி மூண்டு தலைமுறைக்கு Dr.கங்கம்மா தான் இணுவிலில பிள்ளைப் பெறு பாத்தவ எண்டு சொல்லிறவை. எழுவதுகளில தான் பெரியாசுபத்திரிக்கு பிள்ளைப்பெறுக்கு கூட ஆக்கள் வாறது. ஊரில அப்ப பொலீஸ் ஸ்டேசன் போனாலும் பெரியாசுப்பத்திரிக்குப் போனாலும் ஏதோ கதை முடிஞ்சிது எண்டு மாதிரித்தான் சனம் பய…
-
- 2 replies
- 809 views
-
-
Nadarajah Kuruparan கொட்டபொல பலநோக்கு கூட்டுறவுச் சங்க தேர்தலில் JVP சார்பு அணி பெரு வெற்றி. மக்கள் மாற்றி யோசிக்கிறார்களா! 80களின் நடுப்பகுதியில் இருந்து 90களின் இறுதிவரை இலங்கையின் தென் மாவட்டங்கள் JVPஎன்ற மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் கோட்டைகளாக விளங்கியிருந்தன. குறிப்பாக ஜே.வி.பியின் இரண்டாவது கிளர்ச்சியின் போது, புலிகள் காலத்தில் வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, வடமராட்சிப் பகுதிகளைச் சேர்ந்த இளையவர்களை இலங்கைப் படையினர் எப்படி விசேடமாக கண்காணித்தனரோ அவ்வாறு காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை அடையாள அட்டையைக் வைத்திரு…
-
- 1 reply
- 622 views
-
-
மறதியாளர்களாகவும், மன்னிப்பவர்களாகவும் இருப்பதை தவிர தமிழர்களுக்கு வேறு வழியில்லையே! Nadarajah Kuruparan யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் எடுக்கப்பட்ட இந்தப்படத்தில் முன்னிலையில் இருப்பவர்கள் ஜாதிக ஹெல உறுமயவின் முன்னாள் முக்கியஸ்த்தரும், முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினரும், 43ஆவது படையணியின் இணைப்பாளருமான, பாட்டளி சம்பிக்க ரணவக்க. (Patalee champika ranawaka.) இவர் கடுமையான இனவாதக் கருத்துகளின் முன்னைநாள் சொந்தக்காரராகவும் இருந்தவர். நல்லாட்சி அரசாங்கத்தில் 50 வீத ஞானோதயத்தைப் பெற்றவர். மற்றையவர் சிறிலால் லக்திலக (Shiral Lakthilaka) 9…
-
- 2 replies
- 796 views
-
-
சிங்களவர்கள் யாராக இருந்தாலும் தமிழ் மக்களுக்கு தீர்வைத் தரமாட்டார்கள்! – யோகரட்ணம் யோகி. தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் ஒரு விடயத்தை திரும்ப, திரும்பக் கூறி வருகிறார். அது இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் போதும் தெரிவிக்கப்பட்டதுதான். இந்திய-இலங்கை ஒப்பந்தங்களை நாங்கள் ஏற்காதபோதும் ஏதோ ஒரு வகையில் அதனைச் செயற்படுத்தி தமிழ் மக்களினது விருப்பங்களைத் தீர்க்குமாக இருந்தால் நாங்கள் ஒத்துழைக்கிறோம் என்று தலைவர் பிரபாகரன் கூறிய போதும் ஒன்றைச் சுட்டிக்காட்டினார். சிங்கள இனவாத பூதமானது இதனையெல்லாம் விழுங்கிவிடும் என்றார். ஆனால் அப்போது அதனைக் கேட்கவில்லை. பலர் அதனைச் சாட்டாக வைத்துக்கொண்டு ஆயுதங்களை ஒப்படைத்து விட்டதாகவும் மக்களாட்சி முறைக்…
-
- 21 replies
- 1.9k views
-
-
கனவிலேம் நித்திரை ….. சாரத்தை இழுத்து தலையப்போத்த காலும், காலைப் போத்த காதும் குளிர்ந்திச்சுது. “அங்க பார் பக்கத்து வீட்டு அண்ணா இன்னும் நித்திரை கொள்ளாமல் இரவிரவாப் படிக்கிறான், நீ எழும்பாட்டி வாளியோட தண்ணியை ஊத்துவன்” எண்டு திட்டின படி அம்மா போனா. மழை பெய்யேக்க எழும்பீட்டு திருப்பி ஒருக்காப் ஐஞ்சு நிமிசம் படுக்கிறன் எண்டு படுக்கிற சுகம் இருக்குதே அது ……. . அப்ப மனிசியை சுழட்டேக்க ஒழங்கை வளிய நிண்டு மனிசியோட கதைக்கிற காலத்தில வந்து பத்து நிமிசத்திலயே மனிசி அவசரப்படும் “ யாரும் பாக்க முதல் வெளிக்கிடிறன் எண்டு” ஒரு ஐஞ்சு நிமிசம் எண்டு சொல்லிச்சொல்லி நிண்டு கதைக்கிறதும் அம்மாட்டை இதே dialog ஐ இன்னும் ஐஞ்சு நிமிசம் படுக்கிறன் எண்டு சொல்லி மழைக்குளிருக்க திருப்பித் …
-
- 1 reply
- 642 views
-
-
நேற்று வெளியாகியுள்ள புகைப்படம் ஒன்று தான், உலகில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சில தினங்களுக்கு முன்னர் தாய்லாந்து நாட்டில் நடந்த தேசிய அழகிப் போட்டியில் 17 வயதான , மின்ட் என்னும் பெண் வெற்றிபெற்று அழகு ராணியாக முடிசூடிக்கொண்டார். அவர் நிகழ்ச்சி முடிந்த பின்னர் அப்படியே சென்று, குப்பை தொட்டிகளை கழுவி சுத்தம் செய்துகொண்டு இருக்கும் தனது அம்மாவிடம் சென்று ஆசிர்வாதம் வாங்கியுள்ளார். குறித்த புகைப்படம் வெளியாகி , ஆசிய நாட்டவர்களை மட்டும் அல்ல, பல மேற்குலக மக்களையும் உணர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.அழகியின் அம்மா பல வருடங்களாக குப்பை தொட்டிகளை கழுவி. அதில் இருந்து கிடைக்கும் பணத்தில் தான் தனது மகளை வளர்த்து வந்துள்ளார். கடும் கஷ்டப்பட்டு தன்னை வளர்த்து ஆளாக்கியமைக்காகவே…
-
- 0 replies
- 739 views
-
-
கலியாணத்தன்று மழை “இரவில அட்டை கிட்டை ஏதும் ஏறி இருக்கும் , கழுவிப்போட்டு அரை “எண்டு அம்மா சொன்னா. அம்மியையும் குழவியையும் கழுவீட்டு தண்ணியை வளிச்சு ஒரு பக்கம் தள்ளி விட்டிட்டு தண்ணி ஒரு பக்கமா காஞ்சும் சில இடம் காயாமை இருக்கிறதையும் தள்ளித்தள்ளி விளையாடீட்டு தட்டையும் வாங்குப்பலகையையும் தூக்கிக் கொண்டு எல்லாம் இருக்கா எண்டு check பண்ணிக்கொண்டு போனன். போய் நிண்டு கொண்டு உப்பைக்கொண்டா புளியைக்கொண்டா எண்டா சாமான் வராது, “ என்ன ஆட்டத்துக்கு இப்ப சம்பல் அரைக்கப் போனீ “ எண்டு பேச்சுத் தான் விழும். வீடு கட்டேக்க குசினீக்குள்ள அம்மியை வைக்கிறேல்லை , கொஞ்சம் தள்ளி அதுகும் நிலத்தோடயோ இல்லாட்டி கட்டு ஒண்டு கட்டித் தான் அம்மியை வைக்கிறது . கிணத்தடி மாதிரி அம்மியடிக்கும்…
-
- 15 replies
- 1.4k views
- 2 followers
-
-
வாங்க இண்டைக்கு நாம எங்கட பனம் தோட்டத்துக்கு பேரப்பிள்ளைகளோட போய் அங்க இருக்கிற பனக்காய்கள சேர்த்து அத பனம் பாத்தியா எப்பிடி போடுறது எண்டு பாப்பம்.
-
- 0 replies
- 724 views
-
-
உடற்பயிற்சியின்போது ஏற்படும் மாரடைப்பு-மரணமும் அதைத் தவிர்த்தலும் ================================ கடந்த மாத இறுதியில் நிகழ்ந்த கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமாரின் திடீர் மரணம் அவரது ரசிகர்களை மட்டுமன்றி ஏனைய பலரையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. அதற்கு அவரது பிரபலம் மற்றும் சமூக சேவைகள் மட்டுமே காரணமல்ல. அவர் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருப்பதற்கும் ஆரோக்கியமாக இருப்பதற்கும் அடையாளமாக இருந்த ஒருவர். அவர்களது நண்பர்களால் “உடற்பயிற்சி வெறியர்” என்று செல்லமாக அழைக்கப்பட்ட ஒருவர். அத்தோடு 2017 இல் பெங்களூரில் உள்ள Sri Jayadeva Institute of Cardiovascular Sciences and Research Institute அறிமுகப்படுத்திய “Prevent Premature Heart Attack” initiative இன…
-
- 15 replies
- 1.3k views
- 1 follower
-
-
எலோன் மஸ்க் ட்விட்டர் வாக்கெடுப்பு: ரூ. 1.5 லட்சம் கோடி டெஸ்லா பங்குகளை விற்க எலோன் மஸ்க் ட்விட்டரில் வாக்கெடுப்பு 38 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, கோடீஸ்வரர்கள் வரி மசோதாவை கடுமையாக எதிர்க்கிறார் மஸ்க் டெஸ்லா நிறுவனத்தில் தன்னிடம் இருக்கும் பங்குகளில் 10 சதவிகிதத்தை விற்க வேண்டுமா என்று ட்விட்டர் பக்கத்தில் வாக்கெடுப்பைத் தொடங்கியிருக்கிறார் கோடீஸ்வரர் எலோன் மஸ்க். அவரை ட்விட்டரில் 6.26 கோடி பேர் பின்தொடர்கிறார்கள். ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடையும் வாக்கெடுப்பைத் தொடந்து தன்னிடம் இருக்கும் சுமார் 1.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பங்க…
-
- 0 replies
- 527 views
- 1 follower
-
-
ஹோட்டல் உரிமையாளர் சாதம் பரிமாறுவதற்காக குனிந்த போது , அந்த பெரியவர் கேட்டார்.....மதிய உணவுக்கு எவ்வளவு எடுத்துக்கொள்கிறீர்கள். உரிமையாளர் சொன்னார்... மீன் குழம்புடன் 50,மீன் இல்லாமல் 20 ரூபாய்....கிழிந்த சட்டையை பாக்கெட்டில் இருந்து, கசங்கிய 10 ரூபாய் தாளை எடுத்து, உரிமையாளரை நோக்கி நீட்டினான்.... இதுவே என் கையில் உள்ளது.....இதற்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு போடுங்க.... பெறும் அன்னம்மானாலும் பரவாயில்லை...மிகுந்த பசி.நேற்று முதல் எதுவும் சாப்பிட வில்லை என்று சொல்லத் தயங்கும் அவரது வார்த்தைகள்.தொண்டையோ நடுங்குகிறது.... * ஹோட்டல் உரிமையாளர் மீன் குழம்போடு... அனைத்தையும் அவருக்கு பரிமாரினார். அவர் …
-
- 0 replies
- 746 views
-
-
“ ஆயிரம் பொய் சொல்லி ” “சித்தப்பா சொல்லப் போப் போறாராம் நீயும் போப்போறியே “ எண்டு சின்ன மாமி கேக்க , நானும் ஏதோ அம்மா சொன்னாத்தான் போவன் எண்ட மாதிரி அம்மாவைப் பாக்க , “ வா வந்து இந்த சட்டையை மாத்தீட்டுப் போ” எண்டா அம்மா. ஒற்றை விளப் போகோணுமாம் எண்டு ஆள் கணக்குக்கு என்னை ஏத்தி விட்டது எண்டது பிறகு விளங்கிச்சு. “ உவனை உண்ட மடியில வைச்சிரு அண்ணை “ எண்டு பெரிய மாமி சொல்ல சித்தப்பாவும் காரின்டை முன் சீட்டில இருந்த படி என்னை மடீல தூக்கி வைச்சிருந்தார். “தம்பி காரை கொக்குவிலுக்கு விடும் முதலாவதா பெரியப்பருக்கு சொல்லிப்போட்டுத்தான் மற்றாக்களுக்கு சொல்ல வேணும்” எண்டு சித்தப்பா சொல்ல காரும் பெரிய அப்பப்பா வின்டை வீட்டை போச்சுது. Morris Oxford காருக்கால என்னை விட ஆறு …
-
- 3 replies
- 860 views
-
-
உலகக்கோப்பை போட்டியில் தென் ஆப்பிரிக்காவிற்கும் மேற்கிந்திய தீவிற்கும் இடையே நடந்த போட்டி தொடங்குவதற்கு சற்று முன்பு திடீரென்று அந்த அணியின் முன்னணி வீரர் குண்டன் டீ காக் விளையாடாதது தெரிய வந்தது. அதற்கான காரணமாகக் கூறப்பட்டது உலகம் முழுவதும் உள்ள விளையாட்டு வீரர்கள் குறிப்பாக கிரிக்கெட் வீரர்கள் "BLACK LIVES MATTER MOVEMENT" என்று அடர் நிறத் தோல் கொண்ட மக்களின் உரிமைகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்றும் இந்த உலகில் பிறந்த மக்களை நிற ரீதியாக பிரித்துப்பார்ப்பது தவறென்றும். ஒருவரை விட இன்னொருவர் தாழ்ந்தவரும் இல்லை. உயர்ந…
-
- 3 replies
- 969 views
-
-
புனித் ===== புனித் ராஜ்குமாரை 'கன்னடத்தின் விஜய் ' எனலாம். கிட்டத்தட்ட இருவருக்கும் ஒரே வயது. 'பவர் ஸ்டார்' என்பது தமிழ்நாட்டில் கொஞ்சம் காமெடியான பட்டம். அங்கே கர்நாடகாவில் பவர் ஃபுல்லான பட்டம். ஒட்டுமொத்த மாநிலமே 'அப்பு' என்று செல்லமாக அழைக்கும் பாசக் குழந்தை அவர். 46 வயதில் அவரது மரணம் பல்வேறு விஷயங்களை நம்மை யோசிக்க வைத்து இருக்கிறது. எந்த நேரத்திலும் மரணம் வந்து 'நலமா, என் பழைய நண்பனே!' என்று நம் கதவைத் தட்டக் கூடும் என்பதை இந்த மரணம் மீண்டும் நிரூபித்து இருக்கிறது. 'நேற்று இருந்தவன் இன்று இல்லை என்னும் பெருமையை இந்த உலகம் தன்வசம் வைத்துள்ளது' என்னும் வள்ளுவப் பாட்டனின் வாய்மொழியும் நிரூபணம் ஆகி இருக்கிறது. நேற்று முன் தினம் இரவு 12 மணி வரையிலும் பர்த்-டே …
-
- 12 replies
- 1.2k views
- 1 follower
-
-
“ பூதம் கிளம்பிச்சு “ “ சின்னவா அண்ணா இண்டைக்கு முட்டாள் வேலைக்கு போட்டான் நீ வாறியா” , எண்டு நான் கேக்க முதல் அவன் ஓடிப்போய் வெறும் காச்சட்டையை மட்டும் போட்டுக்கொண்டு வந்தான் . “ இவன் சின்னவன் என்னத்துக்கு பக்கத்து வீட்டு ராசையா அண்ணையை கேளுங்கோவன் “ எண்டு மனிசி சொல்ல, அவன் மூஞ்சை சுருங்கிச்சுது. அவரையும் கேக்கிறன் இவனும் வந்து பழகட்டும் எண்டு கூட்டிக் கொண்டு வெளிக்கிட்டன் . பிளாஸ்டிக் bagக்குக்குள்ள சாவிகள் மூண்டு , குறுக்கால வாற கொப்புக்களையும் சிவரில முளைக்கிற ஆலமரத்தையும் வெட்டக் கத்தி, சிங்கர் ஒயில் சூப்பிக்குள்ள பெற்றோல் , பழைய plugகுகள் , மிசினுக்க விட மண்ணெண்ணை போத்தில் , இரண்டு பக்கமும் முடிச்சுப் போட்ட நைலோன் கயிறு ,பழைய துணி எல்லாம் எடுத்து வைச்சிட…
-
- 1 reply
- 802 views
-
-
இன்று வெள்ளிக்கிழமை (22/10/21), தனது “காலைக்கதிர்” மின்-ஏட்டில், நண்பர் வித்யாதரன், “இனி இது ரகசியம் அல்ல”, என்ற வழமையான அங்கத்தில் கொஞ்சம் நீட்டி நீளமாக ஒரு சம்பவத்தை எழுதியுள்ளார். அதை என் கவனத்துக்கு நியுசிலாந்து நண்பர் “வரதா” கொண்டு வந்துள்ளார். (செய்தி யாழ்ப்பாணத்திலிருந்து, நியுசிலாந்து ஓக்லன்ட் சென்று கொழும்புக்கு வந்துள்ளது.!) எனது கட்சி/கூட்டணியில் இன்று இல்லாத, “திரு. பிரபா கணேசனை சந்தித்து நான் அரசியல் பேசியுள்ளேன்” என்பதே செய்தி சுருக்கம். 1970 களிலிருந்து கொழும்பில் வாழும், யாழ் நல்லூரை சேர்ந்த எமது குடும்ப நண்பர் ஸ்ரீகாந்தாவின் தனிப்பட்ட விவகாரம் ஒன்றின் தொடர்பாக, பிரபாவை நீண்ட காலத்தின் பின், நண்பர் ஸ்ரீகாந்தின் அழைப்பின் பேரில் ச…
-
- 0 replies
- 709 views
-
-
“ போதி மரம்” காலமை எழும்பி கடனை முடிக்க கிணத்தடிக்குப் போனா ,அடுப்புச் சாம்பலையும் கரியையும் கலந்து தும்பால இயத்துக்களை மினுக்கின படி “ கொஞ்சம் தண்ணி அள்ளித்தாவான்” எண்டு அம்மம்மா கேட்டா . மனிசிக்கு விடியல் கிணத்தடீல தான். அள்ளிக்குடுத்திட்டு் நானும் ,கடனை வைக்காமல் முடிக்க வேண்டும் இல்லாட்டி துன்பம் தான் எண்ட படியாத்தான் காலைக கடன் எண்டு சொல்லிறவங்களோ ? எண்டு யோச்சபடி வாளியோட நடந்தன் ,கடனை அடைக்க. ஒவ்வொருத்தனுக்கும் கிணத்தடியும் கக்கூசும் கூட போதி மரங்கள் தான் ஏனெண்டால் இங்க தான் கன பேருக்கு தத்துவம் பிறக்கிறது. ஓட்டைக்கிணத்து வாளீல தண்ணி அள்ளி ஒழுகிற கக்கூஸ் வாளீக்குள்ள விட்டிட்டு போய் குந்தி இருந்து போட்டு ,எட்டிப்பாக்க தண்ணி இல்லை எண்டேக்க தான் எனக்கு விளங்…
-
- 3 replies
- 938 views
- 1 follower
-
-
வாங்க இண்டைக்கு நாம யாழ்ப்பாணத்தில கச்சாய் துறையில இருந்து ஒரு சின்ன தீவுக்கு போவம், இது பாக்க மாலைதீவுகளில இருக்க ஒரு சின்ன தீவு மாதிரி வடிவான ஒரு இடம், ஆனா யாருமே இங்க இப்போ இல்லை, ஒரே ஒரு சின்ன கோவில் மட்டும் இருக்கு, வாங்க நாங்க போய் எப்பிடி இருக்கு எண்டு பாப்பம்.
-
- 10 replies
- 1.3k views
-
-
ஜனாதிபதி வழக்கறிஞர் எம்.ஏ.சுமந்திரனுக்குப் பகிரங்க மடல்- கிளிநொச்சி கண்டாவளையில் பெரும்போக விதைப்பில் ஈடுபட்ட நீங்கள்------ அரசியலில் குறிப்பாக ஜெனீவா மனித உரிமைச் சபை பற்றிக் கூறும் உங்கள் கருத்துக்கள் பொய்யானவை, அதாவது ஜெனீவா நடைமுறைகள் தெரிந்திருந்தும் இருட்டடிப்புச் செய்து அரசாங்கத்துக்கு ஏற்றாற்போல், நீங்கள் வாதிடுகிறீர்கள் என்பதை உங்கள் நெல்விதைப்பு வீடியோக் காட்சி காண்பிக்கின்றது. முதலில் நெல்விதைப்புப் பற்றிய விளக்கம் உங்களுக்கு உண்டா? நெல்விதைப்பு மூன்று வகைப்படும் ஒன்று- புழுதி விதைப்பு இரண்டாவது- சேற்று விதைப்பு (பலகையடித்தல்) முன்றாவது- நாற்று நடுதல் ஓன்று-- மாட்டு உழவில் ஈடுபடும் மாடுகள் …
-
- 4 replies
- 813 views
-
-
ஒரு இஸ்லாமியர்.... உடை, தொப்பி, தாடி... இஸ்லாமியர் சிவா, சிவா என்று சிவ பெருமை பேசுகிறார். எம்மதமும் சம்மதம் என்கிறார்.
-
- 0 replies
- 1.7k views
-
-
1876- 1878 ஆண்டுகளில் மதுரை மிக மோசமான பஞ்சத்தை சந்தித்தது, எங்கள் பாட்டி வீடு 19 கீழ் அனுமந்தராயன் கோவில் தெருவில் 137 ஆம் வயதில் இன்னும் உள்ளது, இந்த தெருவில் மாற்றம் காணாத பழைய வீடென இது மட்டுமே எஞ்சியுள்ளது, இந்த வீட்டிற்கு ஒரு துயரமான சாபம் உண்டு ,அது ஒரு சிறுமியின் சாபம்., நவராத்திரி சமயத்தில் பட்டுப்பாவாடை அணிந்து அக்கம் பக்கம் சுற்றி விளையாடிய சிறுமி அன்று நெல் களஞ்சியத்தின் கதவு திறந்து வைத்திருப்பதைக் கண்டதும் அதன் உள்ளே உள்ள உயரமான பானைகளில் ஒன்றில் சென்று ஒளிந்து கொள்கிறாள்,பின்னர் உறங்கியும் போகிறாள். மகாபஞ்சத்தின் எதிரொலியால் மக்கள் அந்தந்த பருவங்களில் என்ன உணவு தானியங்கள் கிடைக்கிறதோ? அதை வாங்கி சேர்த்து வைக்கத் துவங்கியிருந்த கால…
-
- 1 reply
- 1.3k views
-
-
டேட்டிங், ஃபேஸ்புக் போலி நபர்கள் வலையில் விழும் இந்தியர்கள் - சுங்கத்துறை பெயரில் தொடரும் மோசடி எம்.ஏ.பரணிதரன் பிபிசி தமிழ் 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்திரிப்புப்படம் இணையம் வழியாக உங்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதல்கள், அதனால் நீங்கள் சந்திக்கும் சவால்கள், அதற்கான தீர்வுகள் குறித்து விரிவாகச் சொல்லும் பிபிசி தமிழின் Cyber Security தொடரின் ஐந்தாம் பகுதி இது. ஆன்லைன் டேட்டிங், ஃபேஸ்புக், டெலிகிராம் போன்ற சமூக ஊடக தளங்கள் அல்லது செயலிகள், காதலை வளர்க்க மட்டும் உதவாமல் மோசடியில் ஈடுபட கருவியாகவும் பயன்…
-
- 0 replies
- 620 views
- 1 follower
-
-
ஒரு குமரை கரை சேக்கிறது….. நீளமான ஒரு மட்டப் பலகை , சின்ன கைபிடி போட்ட மட்டப் பலகை ( மணியாஸ் கட்டை), சாந்தேப்பை மற்ற எல்லாச் சாமாங்களையும் எடுத்துக்கொண்டு வயிரவர் கோயிலடிக்கு வந்து ,”இண்டைக்கு பத்துப்பேராவது வேணும் எண்டனான் சின்ராசு “எண்டு நான் ஞாபகப்படுத்த , ஓம் எடுபிடிக்கும் இன்னுமொருத்தன் புதுசா வாறான்” எண்டார் சின்ராசு . புதுசா வாறவன் கீழ மட்டும் வேலை செய்யட்டும் நல்லாப் பழகும் வரை சாரத்தில ஏற விட வேண்டாம் . அவனுக்கும் சேத்து அரை றாத்தல் பாண் வாங்கும் எண்டு சொல்லி புது வரவை apprentice ஆக சேத்துக்கொண்டு வேலைக்கு வெளிக்கிட விடிய ஆறு மணி தாண்டீட்டு. கல்லுண்டா வெளியால கஸ்டப் பட்டு எதிர்க்காத்தில சைக்கிள் உழக்கி கட்டிற வீட்டடிக்கு வர ,அராலி மேசன் மார் எண்டா…
-
- 0 replies
- 896 views
-
-
வாங்க இண்டைக்கு கடந்த காணொளியில் தொடர்ச்சியா கோப்பாயில இருக்க எங்கட தோட்டத்தை சுத்தி பாப்பம் பகுதி 2 இந்த காணொளியில் நாங்க காட்டுற கொஞ்ச மரங்கள் அம்பிரலங்காய் பப்பாளி கருணைக்கிழங்கு பட்டர் ஃபுரூட் / அவகோடா சின்ன நெல்லி - Small Gooseberry முசூட்டை கறுவா பலா ஊர் அன்னமுன்னா திப்பிலி தூதுவளை வேப்பமரம் ஆடாதோடை இரசவள்ளி Purple Jam பயிற்றை முடக்கொத்தான் கொடித்தோடை Passion fruit) லாவுடு ஸ்டார் பழம் விலும்பிலி மாதுளை வெற்றிலை betel சப்போட்டா பூசணி கறிவேப்பிலை முருங்கை drumstick பெருங்குறிஞ்சா கரிசலாங்கண்ணி …
-
- 0 replies
- 564 views
-