கவிதைக் களம்
கள உறுப்பினர்களின் கவிதைகள் | கவிதை மொழியாக்கங்கள்| பாடல் வரிகள்
கவிதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.
772 topics in this forum
-
குறள்மொழி இன்பம் / ★யாம்◆ வேண்டும்◆ கௌவை★ / குறள் 1150 "வம்பு பேசும் என் ஊரே வசனம் அறிந்து அளவாய் பேசு வண்டுகள் மொய்க்கும் மலர் நானல்ல வசவி ஆக என்னை நினைக்காதே!" "வட்டம் போட்டு குந்தி இருந்து வஞ்சம் இன்றி கதை பரப்பி வதுகை ஆக என்னை மாற்ற வரிந்து கட்டிய அலருக்கு நன்றி!" "வயல் வெளியில் என்னை சந்திக்க வனப்பு மிக்க என் காதலன் வருவான் என்னை துணை ஆக்க வருந்த வேண்டாம் வாழ்த்துங்கள் அப்பொழுது!" "வளமான வாழ்வு எமக்கு அம…
-
- 0 replies
- 904 views
-
-
வையகம் உள்ளவரை வாழ்ந்திடுவாய்! ----------------------------------------------------- நூற்றாண்டைத் தொட்டுவிட்ட கவிதைகளின் பயணத்திலே யாராரோ வந்தாலும் போனாலும் ஊரெங்கும் ஊர்வலமாய் கவிபாடி நின்றாலும் புதுக்கவிதை பாடியெங்கும் புதுமைக் கவியானவனே யுகமெங்கும் புகழ்சூடி வரலாறாய் வாழ்கின்ற புதுமையனே! பெண்ணென்றும் ஆணென்றும் வேற்றுமைகள் இல்லாத உலகொன்றைக் காண்பதற்காய் உன்சொற்கொண்டு போர்தொடுத்து விடுதலையின் முரசறைந்தே உலகின் கூன் அகலும் நிலையைக் காண்பதற்காய் வைரநிகர் வார்த்தைகளால் உரைத்தாய் உய்யும்வகை அசைத்தாய் இவ்வுலகை! பன்முகத் திறன் கொண்டாய் புரட்சிகர மனம் கொண்டாய் அநீதிகளைக் கண்டெழுந்தே அறைகூவல் விடுத்தவனே நின் எழுத்துகளால் அரண…
-
- 6 replies
- 900 views
-
-
காதல் உன்னைக் கட்டிக்கொள்ள காமம் என்னை விட்டுச்செல்ல அடங்க வைத்தது வயது அடக்கம் செய்தது மனது வெள்ளத்தில் ஓடும் உள்ளம் பள்ளத்தில் நாடத் துள்ளும் சிற்றின்ப மாயையில் நெஞ்சம் சிலகாலம் மகிழ்வாய்த் துஞ்சும் ஆசையின் வழியோ சிறிது ஆக்கிரமிக்கும் அளவோ பெரிது அறுசுவை உணவு ருசிக்கும் அடிமையானால் அதுவுன்னைப் புசிக்கும் மோனம் உள்ளே செல்ல மோகம் வெளியே செல்லும் இருக்கும் நாட்கள் குறையும் இகவாழ்வு நாளும் கரையும் தேடி அலையாதே என்னை தேடு உனக்குள் உன்னை பார்ப்பவை எல்லாம் அழகு பார்வையை மாற்றிடப் பழகு அறிவின் வடிவே உலகு அன்பே இறையின் அலகு சரவிபி ரோசிசந்திரா
-
- 0 replies
- 900 views
-
-
கவிதையைப் பிரித்த ஐபிஎல் தூய வெள்ளை அரம்பையர் நின்றுமே துணங்கைக் கூத்திட வீரர் குழாத்தினர் ஆய தம்திறன் காட்ட, எறிந்த பந்(து) அண்டை வந்திட வீசி அடித்ததை பாயச் செய்து பவுண்டரி சிக்ஸராய் பலத்தைக் காட்டும் ஐபிஎல் களமதில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அணிதிரண்டு குதிக்குமழகிலே நேயமுற்றனன் ஆதலினால் என்றன் நெஞ்சை நீங்கினளாம் கவிக்காதலி காலை மாலையிரவெனத் தேர்ந்திடாக் காதல் மேவ ஐபிஎல் லைப் பார்த்ததால் வேலையாவும் ஓர் மூலையிற் போனது வேறு நற்செயலில்லை யென்றானது. காலமோடியதாற் கவிக்காதலி காத்திருக்க விருப்பிலளாயினள் பாலையானது நெஞ்சப் பெருவெளி பாடயாதும் வராது தவிக்கிறேன் சீல மேவிய என் எழில் நங்கையை தேடி யெங்குமலைந்து திரிக…
-
- 0 replies
- 900 views
-
-
-
- 6 replies
- 897 views
-
-
தேவையானவை --------------------------- அலைபேசியில் அபாயச்சங்கு முழங்கியது நெருப்பு உங்கள் அருகில் உடனடியாக கிளம்பவும் அவசியமாக தேவையானவற்றை அளவாக எடுக்கவும் என்று அலைபேசி மின்னியது எவை தேவை என்று முகட்டைப் பார்த்தேன் முதலில் தேவை ஒரு காற்சட்டை' வீட்டிலிருந்து வேலை என்பதால் இடுப்பில் இருந்தது வெறும் சாரம் மட்டுமே அடுத்தது தேவை மட்டைகள் காசு மட்டை கடன் மட்டை அடையாள மட்டை என்று ஒரு கொத்து மட்டைகள் இருக்கின்றன் இங்கு எல்லோரிடமும் எதற்கும் கடவுச்சீட்டையும் எடுப்போம் ஓடிப் போக மெக்சிக்கோ வந்து நான் உள்ளே போய் விட்டால் திரும்பி வர அது வேண்டுமே அலைபேசியும் அ…
-
-
- 13 replies
- 895 views
-
-
படக்கவிதை / "மணமகள் மகிழ்ச்சியில் காத்து இருக்கிறாள்!" "உணர்வுகள் எல்லாம் உள்ளத்தில் பூரிக்க ஆணவம் அற்ற மனத்தைக் கொண்டு ஆணழகன் வருகையை எதிர்ப் பார்த்து மணமகள் மகிழ்ச்சியில் காத்து இருக்கிறாள்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 894 views
-
-
திலீபன் அழைத்தது சாவையா இந்த சதத்திற்கும் உதவாத தமிழ் சனத்துக்காகவா..?! மேலிருந்து பார்க்க என்னப்பா இருக்கு திலீபா.. கேடுகெட்டு குட்டிச்சுவராகிக் கொண்டிருக்குது பார் நீ கடந்து போன .. நீ விடுதலை வேண்டி நின்ற சனக் கூட்டம்.. சந்ததிகள் சில தாண்டி.!!
-
- 1 reply
- 892 views
-
-
கடைசி ஆயுதத்தையும் ஐயா கையில எடுத்துப் பார்த்தார் சமரச அரசியலோடு சமாதானம் வரும் என்று சிங்கக் கோ(கொ)டியை உயர்த்திப் பிடித்தார் ஐயா பாவம் இப்போ வெறும் கையோடு நிற்கிறார் அடுத்த தேர்தலைப் பார்த்தபடி அது சரி அவன் கொடுத்தா தானே ஐயாவும் வேண்டித் தருவார் சும்மா சொல்லுங்கோ ஐயா தீபாவழிக்குள் தீர்வு கிடைக்கும் என்று பாவம் சனம் நம்பி வந்து வாக்குப் போடும் ஏமாந்தே பழகப்பட்ட சனம் நாங்க ஐயா இந்தியா வரும் என்றே இருந்த சனங்க நாங்க ஐயா ஆன அவனும் இவனும் முழுசா தின்று முடிச்சான் முள்ளிவாய்க்காலை ஐயா இன்னும் ஒரு முறை ஏமாறுவதில் என்ன குறை ஐயா புலிகள் போனால் சமாதானம் வரும் என்ற சனத்தையும் சந்திச்சுப் ப…
-
- 2 replies
- 891 views
-
-
நம்பிக்கை ஒளி தெரிகிறது! ******************************** பேய்களையெல்லாம் ஓடக் கலைத்து பெருந்துயரனைத்தும் தீயில் கொளுத்தி புதுமுக வரவால் பொங்குது மண்றம் பொறுப்போம் விரைவில் விடியுமெம் தேசம். குடு குடு கிளடுகள் கதிரையில் இல்லை குடும்ப ஆட்சியும் கோட்டையில் இல்லை கொள்ளையும் திருட்டும் வரப்போவதில்லை கோயிலும் மசூதிக்கும் அழிவேதுமில்லை. இனங்களைப் பிரிக்கும் தந்தரமில்லை இளையோர் நெஞ்சில் வஞ்சகமில்லை எனிவரும் காலம் பஞ்சமுமில்லை எல்லோர் மனத்துக்கும் துன்பமுமிலை. தமிழர் தரப்பிலே ஒற்றுமையில்லை தனித் தனி சுயநலம் தேவையுமில்லை-சிலர் போரின் அவலத்தை புரிந்ததேயில்லை போன கதிரயை மறப்பதேயில்லை. தெற்கைப் போலவே திடமாய் நீ சேரு தென்றலாய் மண…
-
-
- 10 replies
- 891 views
- 1 follower
-
-
புதிரான மனிதன் எதற்குத் தோன்றினான் புதிரான உறவில் ஏன் பயணிக்கிறான் புரியாப் புதிரானதை மர்மம் என்கிறான் மர்மம் உடைக்கவே ஆறறிவில் சிந்திக்கிறான் தேடல் இன்றியே வாழ்வைத் தொலைக்கிறான் வாழ்வை எண்ணியே தேடலைத் தொலைக்கிறான்! தோற்றுப் போனதும் கண்ணீர் விடுகின்றான் வெற்றி பெற்றதும் வீண் புகழ் கொள்கிறான் ஒளி புகா இடத்தில் இரகசியம் மறைக்கிறான் வாழ்வின் இரகசியம் எதுவென்று அறியாமல் வாழ்வை வாழ்ந்தோமென வாழ்த்துச் சொல்கிறான் யார் யாரோ நடத்திய வழியில் எதுவும் புரியாப் புதிராகப் பயணிக்கிறான்! வாழ்வைத் தேடியே உறவு கொள்கிறான் உறவின் உண்மையைக் காத்துக் கொள்கிறான் பிறகு ஒருநாள் உறவையே வெறுக்கிறான் தனிமை மட்டுமே உறவாய் கொள்கிறான் எத்துணையும் இன்றி …
-
- 5 replies
- 890 views
-
-
செவ்வாய்ப் பரப்பிருந்து தெரியும் எம் பூமி - View of our Earth from Mars மனிதா உன்னைத்தான்! வானப்பரப்பினிலெம் மண்ணோர் சிறுபுள்ளி காணவும் கூடாக் கடுகு. - எதற்காக உன்னையே எண்ணி உள்ளம் கலங்குகிறாய். செவ்வாய்ப் பரப்பிருந்து, சிற்றொளியைக் காலுகிற பூமியை நோக்குகையில் புழுதிமணியாக, தோற்றமளிக்கிறது தோற்றமற்றும் போகிறது. உன்னை நீ எண்ணிப்பார் உலகத்தில் எத்தனைபேர் …
-
- 2 replies
- 890 views
-
-
We say aloud, “we are Americans” Two deadly viruses Killing Americans now! One is COVID 19, the other is RACISM. All the guns are here, only to shot towards heaven. Wings cut off the blackbirds Crushing the human heads... Here, in the legal world! There is nothing to speak in the depths of darkness Here - no one says "welcome" They only say "Go home" Never pronounced the word "justice" …
-
- 1 reply
- 889 views
-
-
Poverty will kill them before the virus Developing countries face economic collapse in Coronavirus fight, therefore the international financial organizations and rich nations must Protect Developing Nations from Coronavirus Pandemic.india’s Coronavirus lockdown means there are billions of people living with hunger .SriLanka , Pakistan ,Bangladesh facing the same problems. சுமக்க முடியாத சுமைகளை சுமந்தபடியே பெரியவர் குழந்தைகள் என தாண்ட முடியாத ஒரு தூரத்தை தாண்ட முயற்சிக்கின்றனர் நிலவின் துணையோடு நீண்டதூரம் போகிறார்கள் அன்று ஒரு நாள் போர் தின்று முடித்த பூமியில் இருந்து போனவர் போலவே ஏதோ விதி என்றும் சிலர் தமக்குள் பேசிக்க…
-
- 0 replies
- 887 views
-
-
"கார் கூந்தல் சரிந்து விழ" "கார் கூந்தல் சரிந்து விழுந்து காற்றோடு அது அலை பாய காதணி குலுங்கி இசை அமைத்து கார்த்திகை அதற்கு ஒளி வழங்க காகொடி தரும் நஞ்சை விடவும் காமப் பால் நெஞ்சில் வடிய காசனம் செய்யும் விழிகள் திறந்து காகோதரம் போல் நெளிந்து வந்தாள் !" "காசினி மேலே அன்னநடை போட்டு கால் கொலுசு தாளம் போட காஞ்சனி உடலில் தொய்யில் எழுதி காருண்யம் காட்ட என்னை அழைத்து காதல் தெளித்து ஈரம் ஆக்கி கானல் உள்ளத்தை சோலை ஆக்கி கார் மேகமாய் அன்பு பொழிந்து காலம் அறிந்து காரிகை வந்தாள் !" "காதோரம் மெதுவாய் செய்தி கூறி …
-
- 1 reply
- 887 views
-
-
எங்களுக்காக எங்கள் மாவீரர்கள் நீங்கள் மட்டுமே. மொழியாகி எங்கள் உயிர்மூச்சான மாவீரர்களே! வழி ஏதும் தெரியாமல் இன்று தட்டுத்ததடுமாறுகிறோம் தளர்ந்து தள்ளாடுகின்றோம். தனித்து போய்விட்டோமென நாளும் நாளும் தவிக்கின்றோம். தன்முனைப்பு, போட்டி பொறாமை தன்னலம்,பொருளாசை என்று மக்களை மறந்து, தம்மினம் படும் துயரங்கள் புரியாமல் மனிதம் மறந்தவர்களாக தமக்குள் தாமே முட்டி மோதிக் கொண்டு எம்மவர்கள் மாறிப்போகும் இந்த கொடுமையான உலகில,; எமக்காக உள்ளவர்கள் எங்கள் மாவீரச் செல்வங்கள் நீங்கள் மட்டுமே. உங்களுக்காக நீங்கள் ஒருபோதும் வாழ்ந்ததில்லை. பெற்றவரையும் உற்றவரையும் துறந்து, உங்கள் விருப்பு வெறுப்புகளைக் களைந்து, மக்கள் வாழ்வுக்காக மனஉ…
-
- 0 replies
- 886 views
-
-
மகிந்த மாமா வீட்டு மைத்திரி அங்கிள்… ஜனவரி 28, 2015 · Filed under ஈழத் துயர், ஈழம், கவிதை, கவிதைகள், சமூகம், தமிழீழம் அலரி மாளிகை மாடி வீட்டு மகிந்த அங்கிள் வர்ணக் கிளி வளர்க்க குறுனி தூவி… ஏசி றூமில் நாய் வளர்க்க நாய்க்கு ஒரு நாலு பெயர் வைச்சு அழகு பார்த்த மைத்திரி அங்கிள்… கொடூர சுறா வளர்த்து குஞ்சு மீனை தீனியாக்கி அது துடிச்சுச் சாக துள்ளிக் குதித்து குரூரமாய் ரசித்து மகிழ்ந்த கோத்தா எனும் கொடூரன் குருவி சுடுவது போல் தமிழனை சுட்டு தள்ள கைக்கட்டி வேடிக்கை பார்த்த மைத்திரி அங்கிள்… செம்மணி…
-
- 0 replies
- 884 views
-
-
நான் மட்டும் தனித்திருக்கிறேன் கொடுமையான நீ தோற்றுவிட்டாய். உன்னாலும் முடியவில்லை. எவராலும் முடியாது என்பது தெளிவாகவே எனக்கு தெரிகிறது. உலகையே ஆட்டிப் படைக்கும் உன்னாலும் முடியாது. கொரோனாவே முடியாது. உன்னாலும் முடியாது. உனது பார்வையிலிருந்து தப்ப எல்லோரும் வீட்டில் இருந்தே ஆகவேண்டும் என்ற போது பயத்திலும் ஓர் மகிழ்ச்சி எனக்குள் எட்டிப் பார்த்தது. வீட்டில் எல்லோரும் ஒன்றாக, ஆனாலும் இடைவெளி விட்டிருந்து மனம்விட்டு பேசலாம் என மனதுக்குள் நினைப்பு எழுந்தது. ஆனால் எல்லாமே பொய்த்துப்போனது. தொடர்ந்தும் தனித் தீவுகளாகவே வாழ்க்கை நகருகின்றது. கணவன் தன் காதலியுடன் பொழுதைப் போக்க, மகன் தன் நண்பர்களுடன் அரட்டை அடித்து வ…
-
- 0 replies
- 883 views
-
-
தனிமை கூட இனிமையே… உன்னையே நினைத்துக் கொண்டிருப்பதால் என் தனிமை கூட இனிமையே நான் தனிமையாய் இருப்பதாய் பிறர் நினைக்கலாம் என் இல்லம் முழுவதும் நீ நிறைந்திருக்க என் உள்ளம் முழுவதும் நீ குடியிருக்க என் நிழலாக நீயும் உன் நினைவாக நானும் வாழும் இவ் வாழ்வில் என் தனிமைக்கேது கொடுமை உன் நினைவு மட்டுமே இனிமை. நூன் அழகாக உடுத்துகையில் நீ அருகிருந்து ரசிப்பதாய் நான் மகிழ்வாகச் சிரிக்கையில் நீ மன நிறைவாய்ப் பார்ப்பதாய் நான் தனிமையில் இருக்கையில் என் தலை வருடி நெகிழ்வதாய் நான் மனம் சோரும் வேளையில் நீ கனிவாக அணைப்பதாய் என் அழுகையில் என் சிரிப்பில் என் உணர்வினில் என் உயிரில் அத்தனையிலும் நீ துணையிருக்க என் தனிமைக்கேது கொடுமை உன் ந…
-
- 4 replies
- 883 views
-
-
Friday, December 6, 2013 ஆபிரிக்காவின் விடிவெள்ளியே மண்டேலா ! நிறவெறிக்கெதிராய் நெருப்பெடுத்த கறுப்புச் சுடர். காலம் ஆபிரிக்க இருளகல கைபிடித்தேற்றிய பேரொளி. இருள் கொன்று ஆபிரிக்கர் ஒளிகொண்டெழ உதித்த மூத்தவன் மண்டேலா. …
-
- 4 replies
- 880 views
-
-
இன்னும் அவர்கள் இசைந்தும் அசைந்தபடியும் தான் இருக்கின்றனர். பெருங்குரலெடுத்து அழமுடியாத அவலம் கொண்டவர்கள் தினமும் மகிழ்வாய்க் கண்மூடித் தூங்கி அறியாதவர்கள் சிலநாட்களேனும் பாரங்களின்றிப் பசியாற முடியாதவர்கள் பசிக்கும் வயிறைப் பானைத் தண்ணீரில் நிரப்பியபடி பிள்ளைகள் வயிற்றை நிரப்பத் துடிப்பவர்கள் கோடை வெயில் கொடுமழை கண்டும் கால்கடுக்கத் தினம் கனவு நெய்பவர்கள் கணவனின் அணைப்பின்றி மனது தகிக்கையில் கண்டவர் பார்வையில் கசங்கித் துடிப்பவர்கள் அடிமுடி தேடியும் அகப்படா அன்பின் அகலமும் நீளமும் ஆழமும் அறியாத எரிதளலின் எச்சமாய் இருப்பவர்கள் இடர்கள் கடந்தும் கடக்காததுவாய் தொடரும் துயரில்…
-
- 6 replies
- 873 views
-
-
பாடா அஞ்சலி வ.ஐ.ச.ஜெயபாலன். . உதிர்கிற காட்டில் எந்த இலைக்கு நான் அஞ்சலி பாடுவேன்? . சுனாமி எச்சரிக்கை கேட்டு மலைக் காடுகளால் இறங்கி கடற்கரைக்குத் தப்பிச் சென்றவர்களின் கவிஞன் நான். பிணக்காடான இந்த மணல் வெளியில் எந்த புதைகுழியில் எனது மலர்களைத் தூவ யாருக்கு எனது அஞ்சலிகளைப் பாட. . வென்றவரும் தோற்றவரும் புதைகிற உலகோ ஒரு முதுகாடாய் உதிர்க்கிறது. எந்தப் புதைகுழியில் என் மலர்களைச் சூட எந்த இலையில் என் அஞ்சலிகளை எழுத... . இந்த உலகிலும் பெரிய இடுகாடெது? பல்லாயிரம் சாம்ராட்சியங்களைப் புதைத்து புதிய கொடிகள் நாட்டப்படுகிற பெரிய அடக்கத் தலம் அது. நடுகற்களின் கீழ் அடிபட்ட பாம்புகளாய் கிழிந்த எங்களூர…
-
- 4 replies
- 871 views
-
-
மீன்பாடும் தேன்நாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் . வங்கக்கடலுக்கோ வெண்பட்டு மணல்விரிப்பு மலையகத்து அருவிகட்கோ பச்சை வயல்விரிப்பு பாடும்மீன் தாலாட்டும் பௌர்ணமி நிலாவுக்கு ஒயிலாக முகம்பார்க்க ஒய்யாரமாய்த் தூங்க மட்டு நகரில் வாவியிலே நீர்விரிப்பு. எங்கிருந்தோ வந்தவர்கள் எல்லாம் அனுபவிக்க சொந்தங்கள் இங்கே துயரம் சுமக்கிறது. காலமெல்லாம் இங்கே கணபதியும் எங்கள் காக்கா முகம்மதுவும் தெம்மாங்குபாட திசைகாணும் தாய் எருமை. திசைதோறும் புற்கள் முலைதொட்ட பூமியிலே கன்றை நினைந்து கழிந்தபால் கோலமிடும். . காடெல்லாம் முல்லை கமழும் வசந்தத்தில் வயல்புறங்கள…
-
- 0 replies
- 870 views
-
-
-
இன்பத்தில் மகிழ்ந்து துன்பத்தில் துவண்டு வாழ்க்கையே முடிந்ததென அலைபாயும் மானிடா, சோகங்கள் மட்டுமே வாழ்க்கையல்ல மகிழ்வான தருணங்களை எண்ணிப்பா பார் கட்டிளம் காளையாய் மண மேடையில் மகிழ்வை அமர்ந்திருந்த தருண ங்கள் உறவுகளின் வாழ்த்துமழையில் பூரித்த தருணங்கள். அன்பு மனையாள் உன் உயிர் சுமந்த சேதி வாய் மலர்ந்த இன்ப அதிர்வு வினாடிகள் கருவாகி உருவாகி ஜனித்து துணி பொதிந்து சிறு மலராக குறு வென்ற பார்வையில் பிஞ்சு விரல்களும் எட்டி உதைக்கும் கால்களையும் கொண்டு பொக்கிஷமாய் உன் கை சேர்ந்த தருணங்கள். "அப்பா "என பதவி கொடுத்த குழந்தைகளை கண்டு குடும்ப பொறுப்போடு மனைவி மக்களை …
-
- 5 replies
- 869 views
- 1 follower
-