கவிதைக் களம்
கள உறுப்பினர்களின் கவிதைகள் | கவிதை மொழியாக்கங்கள்| பாடல் வரிகள்
கவிதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.
773 topics in this forum
-
மண்ணில் விழுந்த மழையாய் உன்னில் கலந்தேன் ஜீவநதியாய்... சரவிபி ரோசிசந்திரா
-
- 0 replies
- 728 views
-
-
ஞானம் எனக்குப் பிறக்காதாநானவ் விறையை உணரேனாஊனுள் கலந்து உள்ளுருகிஉளத்தில் நிறைந்த தெய்வதத்தின்மோன நிறைவில் முழுதாகமூழ்கிப் பிறப்பின் முழுநோக்கைஆன மட்டும் புரிந்தந்தஅறிவின் தெளிவில் இவ்வுலகில்ஏனென் இருப்பு என்பதனைஎனது மனதில் உணரேனா?எங்கும் நிறைந்த சக்திதனைஎன்னைப் படைத்த திருவருளைஅங்கும் இங்கும் என்னாதுஅனைத்தும் நிறைக்கும் அன்புருவைபொங்கும் மகிழ்வில் உளமாரப்புரிந்து சிலிர்க்கும் நற்பேறைதங்கு தடைகள் இல்லாதுதமியன் அடைய முடியாதா?ஒன்றும் இல்லாச் சூனியத்தில்உதித்ததிந்தப் பேரண்டம்என்றோ ஒருநாள் உருவழிந்துஎங்கும் எதுவுமில்லாமல்இன்று நேற்று நாளையெனும்எதுவுமில்லாப் பரவெளியில்ஒன்றிக்கலந்து போய்விடுமாம்உயிர்ப்பேயற்று உறைந்திடுமாம்.என்றிவ்வாறாய் அறிஞா் பலர்எமக்கு விளக்கம் கூறுகிறார்நன்ற…
-
- 7 replies
- 1.7k views
-
-
டிட்வா!துயர். **************** மண் சரிவு இது மற்றவர்களுக்கு ஒரு செய்தி. நாளை விடிந்தால் மகிழ்வான.. எத்தனை எண்ணங்கள் எத்தனை கனவுகள்.. எத்தனை குழந்தைகளின் மழலைப் பேச்சுக்கள் வேலை, பாடசாலை. திருமணங்கள்.காதல். கொ̀ண்டாட்டங்கள். அத்தனையும் ஒரு நொடியில் உயிரோடு மண்ணுக்குள் புதைக்கப்பட்டு விட்டதே! இறைவா! அப்பா,அம்மா,அண்ணன்,தம்பி அக்கா,தங்கை நண்பர்களென வெளியில் நின்று தேடும் உறவுகளுக்குத் தான் தெரியும் மூடிய மலையைவிட பெரியது. இந்த இழப்புகளின் வலியென்பது. மண்சரிவு இது மற்றவர்களுக்கு ஒரு செய்தி. துயருடன் -பசுவூர்க்கோபி.
-
- 0 replies
- 178 views
-
-
தணியாத தாகம் தன்னந் தனிமையிலே தள்ளாடும் வயதினிலே ஜன்னல் ஒர வான் வெளியை வெறித்துப்பபார்க்கிறேன். வாகன ஒடடம் ஜன நடமாட்டம் விரைந்து செல்கிறது எதையோ தேடி ஓடுகிறார்கள்.அன்றாடம் இது ஆடி ஓடி ஓய்ந்து போன கிராமத்துக்கட்டை காலனின் காகித வரவுக்காய் காத்திருக்கிறேன் ஆனாலும் ஒரு தாகம் என் தாயகம் நோக்கி இருப்பினும் முன்பு ஒரு தடவை சென்று தான் பார்த்தேன். என் வீடு தரைமடடமாகி புல் பூண்டு முட் செடிகள் மூத்தவன் ஒரு தடவை ஆள் வைத்து துப்புரவாக்கியவன் இருப்பினும் பஞ்ச பூதங்கள் தீ நிலம் நீர் ஆகாயம் காற்று பொய்த்துப்போகவில்லை மீண்டும் அவை முளைத்திருந்தன நான் நண்பனுடன் குளித்த கிணறு ஓடிவிளையாடிய மைதானம் சாமி கும்பிடும் கோவில் எல்லாம் தூர…
-
- 0 replies
- 1.2k views
- 1 follower
-
-
வெளி நாட்டு சரக்கு தம்பி எங்க விருப்பமான தண்ணி தம்பி மில்லி கொஞ்சம் உள்ள போனால் விட்டமீனு தானே தம்பி வீரம் எல்லாம் ஏறும் தம்பி வீட்டிலையும் பேச்சு தம்பி வொட்கா விஸ்கி விறண்டி என்று இந்த வில்லங்கத்தை போட்டு போனா பாட்டு எல்லாம் தானா வரும் பல கூத்து எல்லாம் கூட வரும் அடிச்சுப் போட்டு இருந்தா தம்பி ஆயிரம் தத்துவத்தோட அடுக்கு மொழியில் கவிதை வரும் அரசியலும் பேச வரும் நேற்று வரை நல்ல பிள்ளை இன்று போத்தலோட போச்சுதெல்லாம் பேச்சும் மாறிப் போச்சு தம்பி பார்ட்டி ஓட வாழ்க்கை தம்பி பிறக்கும் போது இருந்த குணம் இப்போ இல்லையே புதுசா எல்லாம் தலையில் இப்போ மாறிப் போச்சுது வெளி நாட்டு வாழ்கை எல்லோ நாம வெள்ளைக்க…
-
- 3 replies
- 1.2k views
-
-
விண்ணை அளந்திடும் புள்ளினம் போல் மனம் எண்ணிலா எண்ணம் கொண்டு மிதந்திடும்; மண்ணில் சூரியக் வெளிச்சமும் விழு முன்னே கண்ணும் விழித்த கணமே துள்ளி எழ வைக்கும்; திண்ணிய மனதுடன் எண்ணிய கருமத்தை வண்ணமுறச் செய்திடும் துணிவையும் தந்திடும்; தன்னைக் கற்றுணர்ந்து கொண்ட இலட்சியம் உண்மையென நம்பி உழைக்கும் மனிதர்க்கு! *** எழிலினை எதனிலும் கண்டு நயந்திடும் பார்வையும் முழுமையிலா அவனியின் தன்மை உணர் புன்னகையும் அழுக்காறு களைந்து பிறரை வாழ்த்திடும் உள்ளமும் ஆழ்மனம் சொல்லும் வழி விலகாத வாழ்வும் கொள்ள அளவில்லாக் களிப்பில் ஆன்மா முழுமை கொள்ளும்! *** எல்லைகள் தெரியா விரிந்த வான வெளி - ஆங்கே எல்லையாய் உந்தன் மனம் இடும் வேலி. வண்ணங்கள் ஏழு அழகு வானவிலில் - உன் எண்ணக் கனவின் வண்ணங்கள் எண்ணில; க…
-
- 19 replies
- 6.2k views
-
-
தனிமை கூட இனிமையே… உன்னையே நினைத்துக் கொண்டிருப்பதால் என் தனிமை கூட இனிமையே நான் தனிமையாய் இருப்பதாய் பிறர் நினைக்கலாம் என் இல்லம் முழுவதும் நீ நிறைந்திருக்க என் உள்ளம் முழுவதும் நீ குடியிருக்க என் நிழலாக நீயும் உன் நினைவாக நானும் வாழும் இவ் வாழ்வில் என் தனிமைக்கேது கொடுமை உன் நினைவு மட்டுமே இனிமை. நூன் அழகாக உடுத்துகையில் நீ அருகிருந்து ரசிப்பதாய் நான் மகிழ்வாகச் சிரிக்கையில் நீ மன நிறைவாய்ப் பார்ப்பதாய் நான் தனிமையில் இருக்கையில் என் தலை வருடி நெகிழ்வதாய் நான் மனம் சோரும் வேளையில் நீ கனிவாக அணைப்பதாய் என் அழுகையில் என் சிரிப்பில் என் உணர்வினில் என் உயிரில் அத்தனையிலும் நீ துணையிருக்க என் தனிமைக்கேது கொடுமை உன் ந…
-
- 4 replies
- 885 views
-
-
தன்முனைக் கவிதை / "நினைவுகள்” "நினைவுகள் பறக்குது அவள் பிரிந்தது வதைக்குது! நினைவுகள்அணைக்குது அவள் வாழ்ந்தது இனிக்குது!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
-
- 2 replies
- 1.7k views
-
-
-
- 0 replies
- 795 views
-
-
இன்று தாய்மொழித்தினம். எமது உயிரினுமினிய தமிழன்னைக்காக நான் 21 பெப்ரவரி 2020 இல் எழுதிய கவிதையை இங்கு பதிவிடுகிறேன்.
-
- 3 replies
- 1k views
-
-
புலம் பெயர் தேசங்களில் வாழும் பெற்றோர்களே…ஆங்கிலம்,பிரான்ஞ்,டொச்,டச்,டெனிஸ்,என பலமொழிகளில் கல்விகற்றுக்கொண்டிருக்கும் பிள்ளைகளுக்கு கட்டாயம் தமிழ் மொழியின் அவசியம் பற்றி நெதர்லாந்து மேடையொன்றில் படித்த சிறு கவிதை இது. தமிழே பொது மொழி அதுவே உயிர் மொழி..! சின்னம் சிறார்கட்கு சிறந்த நம் தமிழ் மொழியை சிந்திக்க வைக்க-பெற்றோரே சிந்தியுங்கள் சிறப்பாகும். பிற மொழிகள் படிப்பித்து பெரியோர்களாகினாலும்-எம் பிறப்பு மொழியில்லை என்றால் பெற்றோர்களும் இல்லை பேரனுடன்,பேத்தியுடன் பேசவேண்டும் என்றெண்ணி பாசமுடன் பெற்றோர்கள் பல மைல்கள் அங்கிருந்து நேசமுடன் தொடர்பெடுத்தால் ஓப்பா,ஓமா என ஒரு கு…
-
- 0 replies
- 1k views
-
-
தமிழை நேசி என்றுமெம் தமிழ் அன்னை தன்னைத் தம் இதயம் வைப்பவர் சோா்ந்திடார் ஏழ்மை வாழ்விலும் துயரிலாழ்ந்து தம் இனிய பண்பினை விட்டிடார் கன்றுதாயிடம் காட்டுமன்புபோல் கனிவை எங்கணும் காட்டுவார் காதலுற்றவர் பூதலத்தினில் கருணைமிக்கவர் ஆகுவார். நன்றிலாதன செய்திடார் பிறர் நலனை நெஞ்சிலிருத்துவார் வென்று தம்பகை யன்பினால் வரும் வெற்றியாலுல காளுவார்......... கவிதையில் ஆர்வமுள்ளோர் இதனைத் தொடர்வீர்.
-
- 2 replies
- 997 views
-
-
அ ன்பு உள்ளங்களே..... அ ன்பு காலை வணக்கம் .....அ திகாலை எழுத்தவன் ......அ திசக்தி ஆதவ்னையே.....அ ருகில் வரவைப்பான்......!!!அ ன்பினால் ...அ கிலத்தையே வெல்லலாம் ....அ ங்கிகள் தொடக்கம் ...அ ருகில் உள்ள உயிர்வரை ...அ ன்பு செலுத்துங்கள் .....!!!அ ற்புதங்கள் என்பது ....அ திசயம் செய்வதல்ல ...அ ன்புக்கு கட்டுபட்டு ...அ ண்ட சராசரத்தோடு ....அ டக்கமாவதே .........!!!அ ன்று சொன்னதை செய்ததை ....அ ன்றே மறப்பவனே ....அ தி உயர் மனிதன் ....அ தையே நினைத்துகொண்டிருந்தால் ...அ ன்றைய இன்பத்தை இழப்பாய் ....!!!அ ந்தி சாயும் நேரம் ....அ ன்றைய நிகழ்சிகளை ...அ சைபோட்டுபாருங்கள் ....அ ருவருப்பான செயல் எது ...?அ ரவணைப்பு செயல் எதுவென...! @ கவிப்புயல் இனியவன் ஆதவன் துயில…
-
- 30 replies
- 4.1k views
-
-
தம்பரும், சுப்பரும்! **************** தம்பர்.. மக்கள் விரும்பியே மன்னனைத் தெரிந்தும்-பின் மாபெரும் போருக்கேன் வந்தனர். சுப்பர்.. மக்களை மறந்துமே மந்திரி சபைக்குத்தான் மாபெரும் சலுகைகள் செய்ததால். தம்பர்.. சிங்கள மக்களே சீறும் சிங்கமாய் சினம் கொண்டு வீதிக்கேன் வந்தனர். சுப்பர்.. பங்களா கட்டியே வாழும் தலைவர்கள் வறுமைக்குள் மக்களை விட்டதால். தம்பர்.. போரை வெண்றவர் புதுமைகள் செய்தவர் போற்றிய மக்களேன் வெறுத்தனர். சுப்பர்.. போரை சொல்லியே இனத்தை பிரிக்கின்ற பொய்கள் அவர்கட்கு தெரிந்ததால். தம்பர்.. விமானத்தளம், வீதிகள்,விளக்குகள்…
-
- 1 reply
- 420 views
-
-
மிரட்டுகின்ற மிடியனைத்தும் மிரண்டு ஓட மிடிமையிலும் மிடுக்குடனே ஒற்றுமையைப் பேண வேண்டும் அறத்தின் நெறி காக்கின்ற செயலைச் செய்து மனிதர் நாம் மனிதத்துடன் வாழ வேண்டும்! அருமை பெருமையுடன் தாய்மொழியைப் பேண வேண்டும் அரும் பெரும் புகழை எமதாக்கிக் கொள்ள வேண்டும் இருள் சூழ்ந்த நிலை போக்கி என்றும் வாழ்வில் இழப்பின்றி எம்மவர்கள் எழுச்சியுடன் ஆள வேண்டும்! கருமமே கண்ணாகக் கொள்ள வேண்டும் களவின்றிப் பொய்யின்றி வாழ்தல் வேண்டும் இளகாதோர் மனமிளகச் செய்ய வேண்டும் இளமையிலே உரிமை தனை வெல்ல வேண்டும்! அரும்பாடு பட்டேனும் அறவோர் நாளும் அறிவுக்கண் திறக்க வழி செய்ய வேண்டும் அறமில்லாச் செயலுக்கு முற்றுப் புள்ளி அறிவு கொண்டே எவருமிங்கு வைக்க வேண்டும்! ந…
-
- 2 replies
- 675 views
-
-
தண்டனையே! தரமுயர்த்தும் நாட்டை! ********************************************* அன்று.. பசியில் பாண் திருடி தம்பி தங்கைக்கும் பசியாற்றிய பாலகிக்கு திருடியெனும் பட்டம் கொடுத்து மரத்தில் கட்டிவைத்த செய்தி…. இலங்கையின் இரக்கமற்ற நீதி இன்றோ.. மக்கள் பணத்தை கோடி கோடியாக திருடி கொள்ளையடித்த வெள்ளை வேட்டி கள்ளர்களை விட்டுவைத்த-பழய அரசர்களையும் திருடர்களையும் அதியுச்சத் தண்டனை கொடுப்பதே! நாட்டு மக்களுக்கான இன்றைய மனுநீதியாகும். அன்புடன் -பசுவூர்க்கோபி.
-
-
- 4 replies
- 530 views
-
-
வித்து.... விதைக்கப்பட்டு.. மரமாகிறது..... ! மரத்தின் இலைகள்.... புதைக்கப்பட்டு.... உரமாகிறது.... ! விதைத்தாலும்... புதைத்தாலும்.... பயன் இருக்கிறது.... ! நம் மண்ணில்..... உடலங்கள்... இலட்சக்கணக்கில்..... புதைக்கப்பட்டன.... ஆயிரக்கணக்கில்... விதைக்கப்பட்டன...! புதைத்ததால் நம்.. இனத்தை உலகறிந்தது... ! விதைத்ததால் நாம்... தலைநிமிர்ந்து... வாழ்கிறோம்..... !!! @ கவிப்புயல் இனியவன்
-
- 0 replies
- 945 views
-
-
தாகமெடுத்துத் தவிக்கும் தமிழ்நாடே சற்றுப் பொறு விரிகுடா வங்கத்தை விவாகரத்துப் பண்ணிவிட்டு காவிரித் தோழியைக் கட்டித்தழுவக் கங்கை வருகிறாள். எண்ணி ஓர் ஐம்பது ஆண்டுகள்தான். இப்போதே இமயத்திலிருந்து வரும் பனிக்கட்டிகள் எண்ணக் கனவுகளில், எங்கள் உச்சிகளைக் குளிர்விக்கின்றன. எம் கனவில் வங்கத்தைப் பிரியும் கங்கை வளம்தனைக் கொழித்து நிற்க சிங்க மராட்டியத் தலைமை வந்து ‘‘சிஸ்டம் சரியில்லை தீர்த்து வைக்கிறேன் வையத் தலைமை கொள்ள வந்து நிற்கிறேன்‘‘ என்று கவிதை பாடுகிறது. தந்தங்களைப் பிடுங்கிப் பரிசளிக்க சட்டமில்லை! அதனாலென்ன? காவிரி வெற்றிலையைப் பரிசளிப்போம். எப்படியோ மாறிச் சுழித்து பாரதியே நீ கண்ட கனவு நனவாகப் போகிற…
-
- 0 replies
- 1.2k views
-
-
தாத்தாவின் நம்பிக்கை - - - - - - தை பிறந்தால் வழி பிறக்கும் என்று தாத்தா இந்த முறையும் சொன்னார் பல தையும் போய் பாவம் தாத்தா பார்த்திருந்தார் பல தடவை காணியும் போலீசும் வரும் என்று காத்திருந்தார் சில தடவை திரும்பவும் யாரோ தீர்வு பற்றி கதைத்ததால் தீபாவளிக்குள் தீர்வு வரும் என்று காத்திருக்கிறார் இந்தத் தடவையும் தாத்தா.
-
- 0 replies
- 679 views
-
-
தாத்தாவுக்கு பேரன் எழுதும் கடிதம்-பா.உதயன் அன்பின் தாத்தாவுக்கு உங்கள் பேரன் எழுதுவது தாத்தா சுகமா தாத்தா எங்கள் வீட்டல் முன்பு போல் யாரும் நத்தார் கொண்டாடுவது இல்லை எங்கள் வீட்டு பூ மரம் பூக்க மறந்து விட்டது தாத்தா அப்பா அம்மா யுத்தம் முடிவு இல்லாமல் தொடர்கிறது நானும் சமரசம் செய்து களைத்து விட்டேன் காலைச் சூரியன் எங்கள் கதவடியில் வந்து கன காலம் ஆகிவிட்டது தாத்தா நத்தார் இம்முறை உங்களோடு கொண்டாட முடியுமா தாத்தா உங்களுக்கு பிடித்தமான காந்தி சிலையை நத்தார் பரிசாக கொண்டு வருகிறேன் தேவன் வருகையை உங்களோடு பாடி மகிழ்வதில் எத்தனை சந்தோசம் தாத்தா எல்லாக் கடவுளுமே சொல்லும் …
-
- 8 replies
- 4.1k views
- 1 follower
-
-
தாமரை தாமரைதான் பூக்களிலே பெரியதென்பார்;-தம்பி தாமரைப்பூ ஊர்க்குளங்கள் அழகாய்த் தோன்றும்! "தாமரை'யில் "தா' என்னும் எழுத்தை நீக்கு;-அங்கே "மரை' என்ற மானின் பெயர் துள்ளி ஓடும்! 'மரை'என்ற இரு எழுத்தை மறைத்து விட்டால்? "தா' என்ற ஓரெழுத்துதானே மிஞ்சும் -அது 'கொடு' என்றே உனைப் பார்த்து கொடுக்கச் சொல்லும்! தாமரையில் நடு "ம'வை நீக்கிப் பார்த்தால்-அழுவோர் கண்களிலே கண்ணீர்தான் "தாரை' தரையாக வார்க்கும்! நன்றி பொன்னியின் செல்வன்
-
- 3 replies
- 1.2k views
-
-
தாய்மடி நோக்கி..! கிராமத்தில் வாழ்ந்தேன் நகரம் பிடித்தது நகரத்தில் வந்தபின் நரகமாய் ஆனது. கட்டிடக் காடும் இயந்திரக் கடலும் நெத்திரை குன்றிய நேரத்தின் வேகமும். புல் தரை பொசுக்கும் சூரிய எரிச்சலும் புளுங்கிக் குளிக்கும் வாகன நெருச்சலும். வந்த எனக்கு வாட்டுது நகரம்-இங்கு நெருப்புக்கும் காசு நீருக்கும் காசு அனைத்துப் பொருளோடு அன்புக்கும் காசு மூச்சுக்காற்றும் காசுக்கு வருமுன்.. முடிவாய் இருக்கிறேன்-என் கிராமத்தை நோக்கியே.. -பசுவூர்க்கோபி-
-
- 2 replies
- 646 views
-
-
-
- 0 replies
- 607 views
-
-
கடற்கோள் கொண்ட நினைவுநாளில் கவியோடு வந்திருக்கும் நான்கொண்ட தலைப்பு "திரும்பியது வேரறுந்த வாழ்வு!" திரும்பியது வேரறுந்த வாழ்வு! "அலைவந்து தாலாட்டும் சிறுதீவு" யென்றான் தேசியக்கவியன்று - அந்த அலையேவந்து ஆழிப்பேரலையானதோ அடயன்று! அன்றாடங்காய்ச்சிகள் முதல் அன்னைமண் காத்தோர் வரை உன்னிலுதிக்கும் ஞாயிற்றின் நாளில் - அவன் உதித்திட முன்னரே காவுகொண்டாய்! புத்தனை வணங்கிய பேய்கள் ஓய்ந்தனவென்றிருக்க, புதுப்பேயாய், நாம் வணங்கிய தாயே நீ வந்ததேனோ? தூங்கும் பாயே பாடையாகிட - பனைவட்டிடையே தொங்கி மிதந்தனர் தமிழீழ மாந்தரன்று - என்ன? ஓமோம்! (தூங்கும்) அவர் நடந்த கரையோரம், திரைதொட்ட காலம் மலையேறிட, அவர் கிடக்கக் கரையெங…
-
- 4 replies
- 2k views
- 1 follower
-
-
கருத்துக்கள உறவுகள் பதியப்பட்டது 36 minutes ag திறமைகள்..! ********** ஒவ்வொரு உயிரினத்துக்கும் ஒரு திறமையுண்டு-மனிதா உன் திறமை எங்கே? கசக்கினால் இறக்கும் கறையான்கூட அதன் உமிழ்நீரில் மண்குழைத்து அடுக்குமாடி கட்டி அதற்குள் வாழுது புற்றெனும் வீட்டில். ஓரிடத்தில் இருந்தே வலை பரப்பி வீடு கட்டி வந்து விழும் உணவை உண்டு உயிர்வாழும் சிலந்தி. உயரத்தில் இருந்தும் ஒழுகாமல் தேனை அ…
-
- 1 reply
- 1.3k views
-