Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதைக் களம்

கள உறுப்பினர்களின் சிறுகதை | மொழியாக்க கதை| தொடர்கதை | பயண அனுபவங்கள் | நாடகம்

பதிவாளர் கவனத்திற்கு!

கதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, பயண அனுபவங்கள், நாடகம் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுயமான சிறுகதைகள்,  மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், பயண அனுபங்கள், நாடகங்கள்  மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.

  1. இரத்தக்காட்டேரி! சோழகக் காற்று சுழற்றி அடித்ததில் பால் போன்ற மணல் தரையில், தூரிகை இன்றியே காற்றின் கைகள் தன்னிச்சையாக ஒரு விதமான சித்திரங்களை வரைந்திருந்ததைப் பார்த்த அவள் கால்கள் இயல்பாகவே அவற்றை விலத்தி நடந்தன. மேடுகளாகவும் பள்ளங்களாகவும் காற்றினால் வரையப்பட்டிருந்த அந்த அழகான வேலைப்பாடுகள் நிறைத்த சித்திரங்களை அவள் எப்போதுமே ரசிப்பது வழக்கம். பனை மரங்களும் தென்னம்பிள்ளைகளும் நாவல் மரங்களும் மலை வேம்புகளுமாக பரவிக் கிடந்த அந்த காட்டு வழியில் அவள் கண்கள், பற்றைகளுக்குள் பதுங்கியிருந்து என்னைப் பறித்துக் கொள் என்று அழைப்பு விட்ட ஈச்சை பழங்களையும் பார்க்கத் தவறவில்லை. மண்ணில் அவள் கால்கள் புதைந்து எழும்போது ஏற்பட்ட இதமான உணர்வு அவளை ஆட்கொண்ட போது …

  2. அமெரிக்காவுக்கு வந்து பத்து வருடங்கள் ஆகின்றன. புதுசா வீடு வாங்கின போது அவனுக்கு இருந்த ஒரே எதிர்பார்ப்பு வீட்டுக்குப் பின்னுக்கு நிறையக் காணி வேணும். அந்தக் காணி நிறைய அப்பிள் நட வேணும் என்பதுதான். அப்பிள் நடுறதெண்டால் ஒரு மரம் நடக் கூடாதாம் ரண்டு மரம் நட்டால் தான் அதுக்குள்ளே மகரந்தச் செயற்கை நடந்து கலப்படம் இல்லாத பழம் வரும் எண்டு தெரிந்த ஒருவர் சொன்னதைக் கேட்டு, மங்களகரமாய் இருக்கட்டுமேன் எண்டு ரண்டு வருசத்துக்கு முதல் வந்த கலியான நாளுக்கு ரெண்டு அப்பிள் மரங்களை வாங்கி வந்து வீட்டின் பின் பக்கம் இருந்த காணியில் நட்டபோது அவனுக்குச் சொல்ல முடியாத மகிழ்ச்சி. சின்ன வயசில இருந்து உந்த அப்பிள் பழம் எண்டால் அவனுக்கு கொள்ளை ஆசை. ஒருக்கா தொட்டுப் பார்…

    • 3 replies
    • 1.3k views
  3. Started by theeya,

    இந்தக் கொரோனா காலத்தில எல்லாரையும் போலவே வேலைக்குப் போட்டு வாறது அவளுக்கும் ஒரு பெரிய சுமையாகத்தான் இருக்கிறது. ஆனாலும் அவளுக்கு வேறு வழி தெரியவில்லை. காரைக் கராச்சில் பார்க் பண்ணி விட்டு மாஸ்க் மற்றும் கையுறைகளை குப்பையில் போட்டு விட்டுக் கைகளுக்கு சாணரைசேர் போட்டு இரண்டு கைகளையும் ஒன்றோடு ஒன்று உரசினாள். ஐசோபிரோப்பில் போட்டு கார் ஸ்ராரிங் வீலையும் தான் கை பிடித்த எல்லா இடங்களையும் வடிவாய்த் துடைத்த பிறகு கதவைத் திறந்துகொண்டு உள்ளே வந்தவள் கைகளைச் சோப்புப் போட்டுக் கழுவி விட்டு நேராகக் குளியலைறைக்குச் சென்று களைப்புத் தீரும்வரை முழுகிய பின் கிரீமை எடுத்துப் பூசியவள் தலை முடியை அள்ளி உச்சசியில் முடிந்தபடி கண்ணாடியைப் பார்த்தாள். நாற்பது வயதிலும் இளமையும் துடிப்பும் மாறாத …

    • 25 replies
    • 4.8k views
  4. Started by nige,

    ஏனோ இந்த கேள்வி இப்போதெல்லாம் சுயாவிற்கு ஒரு வெறுப்பை ஏற்படுத்த தொடங்கி இருந்தது. அவள் எவ்வளவுதான் தன்னை கட்டுப்படுத்தி கொள்ள நினைத்தாலும் சில நேரங்களில் அது முடியாமல் போய்விடுவதும் உண்டு.அவள் தன் கட்டுப்பாட்டை இழக்கும் போதெல்லாம் அவள் கணவனிடமிருந்து வரும் விமர்சனம் இப்போதெல்லாம் அவளிற்கு பழக்கப்பட்ட ஒன்றாகிவிட்டது. அவன் தினமும் “ சுயா எதையும் மறந்து விடுவதுதான் குழந்தைகளின் இயல்பு. நீ அறிவுரை சொல்லும் நேரத்தில் அதை எவ்வளவு வேகமாக ஒரு குழந்தையால் புரிந்து கொள்ள முடியுமோ அதை விட வேகமாக அக்குழந்தை அதை மறந்தும் விடுகின்றது . நாம் வாழும் சூழலும் வாழ்கின்ற வாழ்க்கையும் முன்னுக்கு பின் முரணானது. முரண்பட்ட சூழலில் நேரான ஒரு வாழ்க்கையை வாழ்வதென்பது நமக்கே கடினமாக இருக்கின்ற போது …

    • 10 replies
    • 2.2k views
  5. Started by putthan,

    கனகரிடம் கிளாசை கொடுத்து " அண்ணே எடுங்கோவன் என்றேன்", "லட்சுக்கு சொல்லாமல் வந்திட்டேன் இரு போனில் சொல்லிபோட்டு வாரேன்" ,கனகர் அந்த காலத்தில காதலிச்சு கலியாணம் செய்த மனிதன் இன்றும் அதே காதலுடன் தான் இருக்கிறார்.மனைவியின் விசயலட்சுமி என்ற பெயரை சுருக்கி லட்சு என்று அழைக்கிறார் இன்றுவரை என்றால் பாருங்கோவன் ஐபோனை எடுத்தார் போன் ஸ்கிர்னில் லட்சுவின் இளமை போட்டோவை ஒர் சின்ன தட்டு தட்டினார் "‍‍ஹலோ " "லட்சுயம்மா நான் சுதா வீட்டை நிற்கிறேன் ,கொஞ்சம் லெட்டாத்தான் வருவன் தேடாதையும்" போனை கையால் பொத்திக்கொண்டு "லட்சுக்கு பொர் அடிக்குதாம் என்ன செய்ய" என்றார் . அவவையும் வரச்சொல்லுங்கோவன் என்றேன். "நான் சொன்னா வரமாட்டா ,சுதாவிட்ட…

  6. இன்றுடன் அவள் இங்கு வந்து இரண்டு மாதங்கள் முடிந்துவிட்டன. எட்டு மாதப் பிள்ளை அங்கு என்ன செய்கின்றதோ என்பதே எந்நாளும் இவள் கவலையாக இருக்கிறது. எத்தனை கெஞ்சியும் பிள்ளையைக் கண்ணில்க் காட்டுகிறார்களே இல்லை. அதுவும் முதல் பிள்ளை. எனக்குத் தெரியாமல் அவனுக்குப் பிள்ளையைக் காட்டுவார்களோ என்று எண்ணும்போதோ மனம் பதட்டப்படத் தொடங்கிவிட்டது தாரணிக்கு. “நீ தேவையில்லாமல் எல்லாத்துக்கும் டென்ஷன் ஆகாதை. இன்னும் கொஞ்ச நாள்த்தான். பொறுமையாய் இரு.” “நீ எண்டாலும் தருணை ஒருக்காய் போய்ப் பாரனடா. இரவிலை என்னால நித்திரையே கொள்ள ஏலாமல் இருக்கடா” “நான் இண்டைக்கே போய்க் கதைக்கிறன். நீ நின்மதியாய் இரு அக்கா” விடைபெற்றுச் செல்லும் தம்பியைக்கூட அவளால் முற்றிலுமாக நம்பமுடியாவிட…

  7. பனி படர்ந்த ஊதல் காற்று ஒரு காது வழியே ஊசியாய்த் துளைத்து மற்றைய காது வழியே வெளியேறி அவனை ஒரு வழிப் பண்ணிக்கொண்டிருந்தது. பனித்துகள்கள் மெல்லிய மலர் இதழ்களாய் காற்றோடு இழைந்து பூமியெங்கும் வெண்மையான நிலவிரிப்பை படர விட்டிருந்தது. கிராமப்புறமாதலால் பனிக்காலத்தில் கூட பசுமை மாறாத பச்சை மரங்களும் இலை உதிர்ந்திருந்த சாலையோரத்து மரங்களும் பனி படர்ந்து வெள்ளை வெளேரென நத்தார்ப் பண்டிகை மடலில் காட்சியளிப்பது போன்ற தோற்றத்தை அவனுக்கு நினைவூட்டியது. இன்று போலத்தான் அன்றொரு நாள் கொட்டிய பனியும் நடந்த சம்பவமும் அவனுக்கு ஒரே சம்பவம் மீண்டும் அதே போல நடப்பது போன்றதொரு மாயையைத் தோற்றுவிக்கிறது. நினைவுகள் அசை போட்டன. கெலி அவனோடு வேலை பார்க்கும் வயோதிபத்தை நெருங்கும…

    • 38 replies
    • 5.3k views
  8. Started by shanthy,

    Saturday, July 4, 2020 குற்றம் 1 ----------+-++---- அன்று குடும்ப நீதிமன்றிற்கு காலை 10.20 மணிக்கு 74வது இலக்க அறைக்கு அழைக்கப்பட்டிருந்தேன். 24.12.2015 என்மீது நிகழ்த்தபட்ட வன்முறைக்கு எதிராக காவல்துறையினரால் வழக்கு பதியப்பட்ட வழக்கு விசாரணை நாளது. திருமதி.ஆனந்தா அவர்கள் 24.12.2015 அன்று நள்ளிரவு ஈடார் ஓபஸ்ரைன் மலைக்கோட்டை தேவாலயத்திற்கு தனது காதலருடன் போய் வந்திருந்தார். …

    • 0 replies
    • 1.5k views
  9. காலக்கடனும் கடமையும். 27. 12. 2019 காலை 10மணிக்கு வவுனீத்தாவும் நானும் பார்த்திபனிடம் போய்க்கொண்டிருந்தோம். மழைத்தூறலுடன் கூடிய மெல்லிய காற்று வீசிக்கொண்டிருந்தது. 4மாதங்களின் பிறகு அவளும் நானும் சேர்ந்த பயணமது. இம்முறை நத்தார் விடுமுறைக்கு பார்த்தி எங்களிடம் வரவில்லை. அவன் விடுமுறையிலும் வேலை செய்து கொண்டிருக்கிறான். சப்பாத்தைக் கழற்றிவிட்டு காலை மடித்து சப்பாணி கட்டியிருந்தபடி கதைத்துக் கொண்டிருந்தாள். சிறுவயது ஞாபகங்கள் முதல் இன்று வரையான அவளது கதைகள் கேட்டபடி காரோடிக் கொண்டிருக்கிறேன். வெளிவரவிருக்கும் அவளது பாடல்களைத் தனது மொபைலில் இருந்து காருக்கு மாற்றிப் போட்டாள். எனக்குள் இன்னும் குழந்தையாகவே இருக்கும் அவளது எண்ணங்கள் சிந்தனைகள் எப்…

    • 0 replies
    • 1.8k views
  10. ‘டளிடா…’-சிறுகதை-சாத்திரி நடு இணைய சஞ்சிகைக்காக .... வரிசை மெதுவாகவே நகர்ந்துகொண்டிருந்தது. வருச கடைசி வேற. நத்தாருக்கு பரிசு அனுப்புகிறவர்கள் பொதிகளோடு காத்து நின்றார்கள். நான் பணம் அனுபுவதுக்காக வெஸ்ரன் யூனியன் படிவத்தை நிரப்பி கையில் வைத்திருந்தபடி நின்றிருந்தேன். இந்த நாட்டில் எனக்கு போகப் பிடிக்காத இரண்டு இடங்கள்: முதலாவது வைத்திய சாலை,இரண்டாவது தபாலகம். இரண்டிடத்திலும் வரிசையில் காத்திருப்பதென்பது எனக்கு கொலைக்களத்தில் காத்திருப்பது போல. அவளுக்கு வழமைபோலக் கொடுத்த வாக்குறுதிக்காக வரிசையில் காத்திருப்பதை தவிர வேறுவழியில்லை. மெதுவாகநகர்ந்த வரிசையில் சுமார் அரை மணித்தியாலம் கழித்து எரிச்சலோடு அதைக் காட்டிக் கொள்ள…

    • 22 replies
    • 4.4k views
  11. Started by pri,

    சின்னவளுக்கும் பெரியவளுக்கும் பள்ளிக்கூடம் கிடையாது. எனக்கும் வேலை ஏதும் இல்லை. நீச்சலுக்கும் வேறெந்த வகுப்புக்கும் ஏத்தி இறக்கவேண்டிய தேவையும் கிடையாது. புலம்பெயர் வாழ்வில் வீட்டில் எல்லோரும் சும்மா இருக்க கிடைப்பது எப்போதாவது நடக்கிற குட்டி அதிசயம். கொரோனாவின் புண்ணியத்தில் அது இன்றைக்கு வாய்த்திருக்கிறது. குட்டி அதிசயங்கள் எப்படியும் நிகழலாம். வட்ஸ்அப்பின் புண்ணியத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னம் அது நடந்தது. சின்ன வயதில் பள்ளியில் கூடப் படித்து எண்பதுகளின் மத்தியில் தொலைந்துபோன நண்பர்கள் சிலர் கனடாவில் கிடைத்தார்கள். சின்ன வயது முகங்களும் ஒரு தொகை சம்பவங்களும் பத்திரமாகவே இருந்தது. பார்த்த மனிதர்களோடு பொருத்தி பார்த்தேன். சிலருக்கு சாயல் தெரிந்தது. …

    • 11 replies
    • 3.7k views
  12. தந்தையுமானவன்.....! அன்று நல்ல முகூர்த்தநாளாக இருக்க வேண்டும். சந்நதி முருகன் ஆலயத்தில் வள்ளி அம்மன் ஆலய முன்றலில் அன்று இருபது திருமணங்கள் வரை நடந்தன.எதிர்பாராமல் அவசரம் அவசரமாக இருபத்தியொராவது திருமணமாக கதிர்வேலுக்கும் வசந்திக்கும் திருமணம் நடக்கின்றது. விதி மிகவும் விசித்திரமானது. அன்று காலை சுன்னாகத்தில் ஒரு பனங்கூடலுக்குள் மென்பந்தில் நண்பர்களுடன் கிரிக்கட் விளையாடும் போதோ அல்லது மத்தியானம் அம்மா திட்டிக் கொண்டு சாப்பாடு போடும்போதோ ( இது அம்மாவின் டெக்னிக்,தான் திட்டாது விட்டால்,அப்பா ஆரம்பித்து அவன் சாப்பிடாமல் வெளியே போய்விடுவான்). அதனால் அம்மா முந்திக் கொண்டு அவனைப் பேசிக்கொண்டு தாராளமாய் சாப்பாடு போடுவாள். அவர்களுக்கு தெரியாது அன்று அங்கு கதிர்வேலுக்கு …

  13. Started by sathiri,

    நானும்அவனும் …................................. ஜீவநதிக்காக .எதோ ஒரு கதை.. சாத்திரி …. இரவு பன்னிரண்டை தாண்டிக்கொண்டிருந்தது வெளியே இடி மின்னலோடு பெரு மழை நீ சாப்பிட்டால் சாப்பிடு இல்லாட்டி பட்டினியா படு ,என்று சொல்லிவிட்டு உணவை ஒரு தட்டில் போட்டு மைக்கிரோவானில் வைத்து விட்டு மனைவி படுக்கைக்கு போய்விட்டார் . இன்னொரு கிளாஸ் குடித்து விட்டு சாப்பிடலாமென நினைத்து படுக்கையறை கதவு சாத்தும் சத்தம் கேட்டதும் .மெதுவாக போத்தலை திறந்து கொஞ்சம் விஸ்கியை கிளாசில் ஊற்றி விட்டு காஸ் வெளியேறும் சத்தம் கேட்காமல் சோடாவை திறப்பதெப்படி என யோசித்துக்கொண்டிருக்கும் போதே இடி இடித்த சத்தத்தில்சட்டென்று சோடாவை திறந்து கிளாசில் ஊற…

    • 8 replies
    • 2.7k views
  14. Started by pri,

    வாழ்க்கை கனவுகள் நிறைந்தது. சிலசமயம் அது மெய்யாகிறது முன்னொரு காலத்தில் நடந்தது. கட்டிட திணைகளத்தில் வேலை கிடைத்த செய்தியோடு கடிதம் ஒன்று வீடு தேடி வந்தது. முதன்மை பொறியியளாரரை(chief engineer - ce) கண்டி அலுவலகத்தில் பார்த்தேன் . படிப்புக்கும் வேலைக்கும் பெரிய இடைவெளி இருப்பதை சொன்னார். வில்கமுவவில் புதிதாக முளைக்கிற கட்டிடத்துக்கு தள பொறியாளர்(site engineer)வேலை. பயணத்துக்கு அரசாங்க வாகனம் தரமுடியாது என்றார். தங்கியிருந்து வேலை செய்தாக வேண்டும். தங்குமிடம் தரமுடியாது என்றார். முதல் வேலையில் எல்லாவற்றுக்கும் தலையாட்ட வேண்டும் என்கிற எழுதப்படாத விதி தெரியும். அப்படியே செய்தேன். நியமன கடிதம் …

    • 11 replies
    • 3.4k views
  15. பச்சைப்பாவாடை கவி அருணாசலம் அப்போ எனக்கு பதினைந்து வயது. வல்லிபுரக்கோவில் கடல் தீர்த்தத்திற்குப் போயிருந்தேன். வழமைபோல் என்னுடன் தொற்றிக் கொள்ளும் கலையரசனும் மகேந்திரனும் வந்திருந்தார்கள்.நாங்கள் மூவரும் சேர்ந்து கொண்டால் சேட்டைகளுக்கு அளவேயில்லை. வல்லிபுர ஆழ்வார் ஊர்வலமாய்ப் போய் கடலில் தீர்த்தம் ஆடி கோயிலுக்குத் திரும்பி வந்துவிட்டார். கோயில் கிழக்கு வாசலில் அவருக்குப் பெரிய பூசை நடந்து கொண்டிருந்தது. எங்கள் கண்கள் கலர்கள் தேடி சுழன்று கொண்டிருந்தன. முட்டி மோதும் சனங்களுக்குள் பட்டுப் பாவாடைகள் சரசரக்க பெற்றோர்களுடன் ஒட்டி நின்ற பாவையர்களில் பச்சையில் ஒருத்தி பளபளத்தாள். எங்களுக்குள் சுரண்டிக் கொண்டோம். மூவரது பார்வையும் ஒருங்கிணைந்து தாக்கியதால…

  16. Started by putthan,

    தொலை பேசி ,முகப்புத்தகம்,யுடுயுப்,வட்சப் இது இல்லாமல் நம்மட வாழ்க்கை இல்லை என்ற காலம் இப்ப பொழுது . ஒருகாலத்தில் முற்சந்தி ,படலையடி ,பொட்டுகள் வாசிகசாலை,விளையாட்டு மைதானங்கள் தான் எமது கருத்து பரிமாற்றங்கள் வீட்டு வேலை செய்ய கள்ளம் அடித்து எனது அறையில் அமைதியாக முகப்புத்தகத்தில் மூழ்கியிருந்தேன்,மெசெஞர் அலரியது பார்த்து கொண்டிருந்த நயன்ந்தாராவின் படத்திற்கு மேலே குகன் கொலிங் ஆன்சர் என்று வந்தது... இவனுக்கு ஆன்சர் ப‌ண்ண வெளிக்கிட்டால் இன்றைய பொழுது அதோ கதி என்று எண்ணியபடி மவுஸை வேறு இடத்திற்கு மாற்றினேன் ஆனால் எனது காலக‌ஸ்டம் மவுஸ் ஆன்சர் என்ற இடத்தில் போய் கிளிக் ப‌ண்ணிவிட்டது. "‍ஹலோ மச்சான் எப்படிடா இருக்கிறாய் ,என்ன சிட்னி எரியுதாம் புஷ் வயராம்"…

  17. புத்தா-(மகனே )சிறுகதை-சாத்திரி..நடு இணைய சஞ்சிகைக்காக .. பச்சை கம்பளி போன்று தேயிலை செடிகளால் தன்னை போர்த்தியிருந்த சிரிமல்வத்தை கிராமத்தில் அந்த கம்பளிக்கும் மேலால் அழகுக்காக போர்த்தியிருந்த பனி மேகங்கள் விலகிக் கொண்டிருந்தது காலைப்பொழுது. பெரும்பாலும் சிங்களவர்கள், இஸ்லாமியர்கள், ஒரு சில தமிழ் குடும்பங்களையும் கொண்டிருந்த அந்தக்கிரமத்தின் மலைச்சரிவில் பாதி கட்டி முடிக்கப்பட்டு முன்பக்கம் மட்டுமே பூசி பெயின்ட் அடிக்கப்பட்டு மேல் மாடி கட்டாமல் கம்பிகள் நீட்டிக்கொண்டிருக்கம் சிறிய வீடுதான் சிங்களவரான குணதாச வீடு. பியசீலி தேனீர் தயாரித்துக்கொண்டிருக்கப் பல் தேய்க்கும் பிரஸ்ஸை வாயில் வைத்தபடியே தொட…

    • 14 replies
    • 5.7k views
  18. மப்பும் மந்தாரமான வானம் , மழை மேகங்கள் கருக்கட்டி கதிரவனை மறைக்க, பேறு கால தாய் போல் வீங்கிப்பெருத்திருக்கும் முகில்கள் எப்போதும் மீண்டும் மழை உடைத்துக் கொண்டு கொட்டலாம் என்கின்ற நிலைமை..... இடைக்கிடை மேகங்கள் மோதி காதைக்கிழிக்கும் இடியும் மின்னலுமான காலநிலை .... கடந்த கிழமை தொடக்கம் பெய்த மழையில் நிரம்பிய குளத்துக்குள் இருந்து தவளைகள் போடும் சத்தம் எரிச்சலை தந்து கொண்டிருந்தது....... வீதியால் செல்லும் மாட்டு வண்டியில் கொழுவியிருக்கும் அரிக்கன் விளக்கு வெளிச்சம் தவிர வேறோன்றும் கண்ணுக்குத் தெரியவில்லை.... A9 கண்டி வீதி ஆள் அரவாரமற்று அமைதியாய் கிடந்தது..... தனித்திருக்கும் யாரையும் பயம் கொள்ளச்செய்யும் கும்மிருட்டு மணி பின்னேரம் ஆறைத் தாண்டி இருக்காத…

    • 2 replies
    • 2.3k views
  19. Started by pri,

    வெளியில் பனி கொட்டுகிறது. பதினைந்து cm வரை வந்து சேரலாமென்று செய்தி சொல்கிறது. நாங்கள் பனி பார்காத தேசத்தில் இளமையை கடந்தவர்கள். கண்டியில் படிக்கிற காலத்தில் நூவரெலியாவை எட்டி பார்த்திருக்கிறேன். மிஞ்சி மிஞ்சி போனால் 10 பாகை குளிரை கண்டிருப்பேன். இங்கெல்லாம் அதை குளிரென்றால் ஒரு மாதிரி பார்ப்பார்கள். பனி பொழிய ரம்பாவும் ராதாவும் ஆடுவதை படத்தில் பார்த்திருக்கிறேன். சொர்க்கத்திலும் பனி கொட்டுமென்பது என் சின்ன வயது பிரமை. கனடாவில் கால் பதிக்கிறவரை அந்த பிம்பம் கலையாமல் இருந்தது. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னம். கொழும்பில் குண்டுகள் வெடித்துக்கொண்டிருந்த காலம். படிப்பு முடிந்து வேலை தேடும் படலம் ஆரம்பித…

    • 12 replies
    • 3.9k views
  20. Started by pri,

    ஒரு காலத்தில் ஊரெல்லாம் சண்டியர்கள் இருந்தார்கள். அவர்கள் அநியாயமாகவும் சிலசமயம் தப்பித்தவறி நியாயமாகவும் நடந்தார்கள். பருத்தித்துறையில் சம்மந்தன் பெயர்போன சண்டியன். சம்மந்தனை கண்டதோ பேசியதோ கிடையாது. அவரின் அடிதடிகள் பற்றிய கதைகளை எனக்கு முன்னம் பிறந்தவர் சொல்ல கேட்டிருக்கிறேன். சண்டியன் சம்மந்தனுக்கு வம்புக்கு ஆள் கிடைக்காத நேரத்தில் பொலிஸ்காரரை கண்டால் அவர்கள் தொப்பி பறிபோகும். இந்த கரைச்சலால் சம்மந்தன் உலாவுகிற தெருக்களில் பொலிஸ்காரர் தனியே நடமாடுவது கிடையாது. வயதான சம்மந்தன் இப்போது மொன்றியலில் இருப்பதாக கேள்வி. ஊருக்குள் இயக்கங்கள் தலை தூக்க சண்டியர்கள் காணாமல் போனார்கள். இரண்டு தாக்குதல்களுக்கு இடையில் வருகிற இடைவெளியில் சண்டியர…

    • 6 replies
    • 2.9k views
  21. பதினாறு வயது என்பது எல்லோருக்கும் ஒரு அழகைக் கொடுக்கும் வயதுதான். இளம் காளையர்கள் எல்லாம் நின்று திரும்பிப் பார்க்கும் வயது. நின்று திரும்பிப் பார்க்கத் துணிவற்றவர்கள் கூட பதினாறு வயது மங்கையைக் கண்டால் கடைக்கண்ணால் தன்னும் பார்த்துக்கொண்டு போகும் அழகு. இயற்கையான அழகு இல்லாதவர் கூட அந்த வயதுக்கான ஒரு தளதளப்பில் ஒரு மினுக்கத்தில் அழகாகத் தெரிவர். தூக்கக் கலக்கத்தில் அவர்களைப் பார்த்தாலும் கூட அழகாகத்தான் தோன்றும். நிலாவும் அப்படித்தான். பேரழகி என்று கூற முடியாவிட்டாலும் கடந்து போகும் ஆண்கள் எல்லாம் அவளைத் திரும்பிப் பார்க்காது செல்ல முடியாது. அவளூரில் மிதியுந்தில் செல்பவர்கள் மிகச் சிலரே. அதிலும் அவள் மிதியுந்தில் செல்லும் வேகம் பார்த்து ஆண்களே, டேய் தள்ளி நில்லுங்கடா என…

    • 55 replies
    • 26.6k views
  22. பிழைக்கத் தெரிந்தவள் நீண்ட நாட்களுக்குப்பின் சரஸ்வதி ரீச்சரை சந்தித்தேன். கையில் பூங்கொத்து வைத்திருந்தார். அவரது உடலில், பேச்சில் தளர்வு தெரிந்தது. சரஸ்வதி ரீச்சர் பிரதான புகையிரத நிலையத்தில் பூக்கடை நடாத்தி வருகிறார். கடையில் காலையில் இருந்து இரவு வரை வியாபாரத்தைக் கவனிக்க வேண்டியதால் அவரை வெளி இடங்களில் காண்பது அரிது. “ எப்பிடி இருக்கிறீங்கள்?” “என்னத்தைச் சொல்ல....” சரஸ்வதி ரீச்சரின் வார்த்தை இழுப்பில் அவரிடம் இருந்த அலுப்பு தெரிந்தது. ஆனாலும் நான் கேட்டதுக்கு அவர் உடனேயே பதில் தந்தார். “கை கொஞ்சக் காலமா விறைக்குது. ஒத்தோப்பேடியிட்டைப் போறன்” “carpal tunnel பிரச்சினையாக இருக்கலாம்’ “அப்பிடித்தான் டொக்டரும் சொல்லுறார். …

  23. மதி.சுதா மீள்பதிவு- எல்லா இயக்குனர்களிடமும் தாம் ஆசைப்பட்டும் செய்ய முடியாத கதை ஒன்று இருக்கும். அப்படியான ஒரு குறுங்கதை தான் இது. இங்கு இதை படமாக எடுக்க முடியாவிட்டாலும் இந்தியாவில் யாராவது குறும்படமாக எடுத்தாலும் சந்தோசமே.... ஆர்வமுள்ள யாருக்காவது பகிர்ந்து விடுங்கள்.... எந்தளவு வன்மமுள்ள போராளிக்குள்ளும் ஒரு மென் உணர்வு இருக்கும் அதே காதலாக இருந்து விட்டால்.... படியுங்கள்... சில நினைவுகளை மீட்டிப் பார்த்த போது வந்த குறுங்கதை... மன மறைவில் ..... ”சேரா காலமை புலிகளின் குரல் கேட்டனியே” கேசவன் சற்று இழுத்தபடியே சொன்னான். ”இல்ல OPD க்கு வந்திட்டன் இழுக்காமல் சொல்லு” சற்றே தயங்கியவனாக.. ”திருமகள் வீரச்சாவாமடா” அரைவாசியை விழுங்கிக் க…

  24. மகளின் திருமணம் கூடி வந்ததில் வாணிக்கு மனதில் நின்மதி குடிகொண்டது. மூன்று பிள்ளைகளையும் வளர்த்து ஆளாக்கி பல்கலைக்கழகம் அனுப்பி வைத்து மூத்த மகளும் இரண்டாவது மகளும் வேலையும் செய்யத் தொடங்கியாயிற்று. ஆனாலும் இன்னும் வாணியால் நின்மதியாக இருக்க முடியவில்லை. பிள்ளைகளைக் கலியாணம் கட்டிக்கொடுத்தால்த்தான் ஒரு பெரிய பாரம் குறைஞ்ச மாதிரி. படிச்சு முடிக்கும் வரைக்கும் கூட பிள்ளைகள் இருவரும் யாரையாவது காதலிக்கிறேன் என்று கொண்டு வந்தால் என்ன செய்வது என்ற பயம் கூடவே ஓடிக்கொண்டே இருந்ததுதான். காதலிக்கிறது தப்பில்லை. ஆனால் வெள்ளையையோ அல்லது காப்பிலியையோ அல்லது வேற படிக்காமல் ஊர் சுத்துற எங்கட காவாலியள் யாரின் வலையில் பிள்ளைகள் விழாமல் இருக்கவேணும் எண்டு வேண்டாத தெய்வங்கள் இல்லை. பிள்ளை…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.