கதைக் களம்
கள உறுப்பினர்களின் சிறுகதை | மொழியாக்க கதை| தொடர்கதை | பயண அனுபவங்கள் | நாடகம்
கதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, பயண அனுபவங்கள், நாடகம் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுயமான சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், பயண அனுபங்கள், நாடகங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.
657 topics in this forum
-
எங்கே அவன் தேடுதே சனம் அவரை எல்லோரும் நாட்டாமை என்றுதான் அழைப்பார்கள். மற்றவர்கள் அவரை நாட்டாமை என்று அழைப்பதில் அவருக்கு நிறைந்த மகிழ்ச்சி. கலியாண வீடா? சாமத்தியச் சடங்கா? பிறந்தநாள் விழாவா? இல்லை செத்த வீடா? எங்கள் நகரத்தில் தமிழர்களுடைய எந்த நிகழ்வானாலும் நாட்டாமையே பிரதம விருந்தினர். புலம் பெயர்ந்து யேர்மனிக்கு வந்த காலத்தில் வேலை செய்வதற்கான அனுமதி எங்களுக்குக் கிடையாது. அப்படியான நிலையிலேயே நாட்டாமை, பூ விற்றுக் காசு சேர்த்தவர். பூ விற்பவர் என்பதால் அவரது பெயரோடு ‘பூ’ என்பது அடைமொழியாயிற்று. அதாவது ‘பூ சபா’ என்றாயிற்று. சேர்த்த பணம், அதனால் வந்த அங்கீகாரம் அதோடு இணைந்த ஆணவம் எல்லாம் சேர்ந்ததால் காலம் செல்ல அவர் நாட்டாமை ஆகிப்போனார். அதெப்படி பூ வி…
-
- 24 replies
- 3.8k views
-
-
யார் சொல்லுவார்? சமீபத்தில்(25.03.2018) யாழின் கருத்துக்களத்தில் நவீனன் தரவிட்டிருந்த இணைப்பின் தலையங்கம் ஒன்று, பழைய நினைவொன்றை என்னுள் மீட்டிப்பார்க்க வைத்தது. “பாரிசில் ஈழத்து மாணவி ஒருவர் கடத்தல்” என்பதே அந்தத் தலையங்கம். 83, 84 ஆண்டு காலங்களே அதிகமான தமிழர்கள் யேர்மனிக்கு புலம் பெயர்ந்த காலங்களாக இருந்ததன. ஈழத் தமிழர்களுக்கு வடக்குத்தான் அதிகம் பிடிக்குமோ என்னவோ, பல ஈழத்தமிழர்கள் யேர்மனியின் வட திசை சார்ந்த மாநிலமான Nordrhein-Westfalen இலேயே அப்பொழுது தங்கிக் கொண்டார்கள். புலம் பெயர்ந்து வந்த போதும் தாங்கள் சார்ந்த போராட்டக்குழுக்களை யேர்மனியில் காலூன்ற வைப்பதற்கு அவற்றின் அபிமானிகள் அன்று பெரும் முயற்சி எடுத்துக்கொண்டார்கள். இதில் தெற்கு யேர்மனியில்…
-
- 9 replies
- 3k views
-
-
தங்கக் கூண்டு என் பெயர் எழில். பருவப் பெண்களுக்கே உரிய வாழ்க்கை பற்றிய கனவுகள் எனக்கும் உண்டு - பிரத்தியேகமாக எனக்கென்றே பிரம்மனால் படைத்து அனுப்பப்பட்ட தலைவன் வெண்புரவியில் வந்து சேருவான் போன்ற அதீதமான கற்பனைகள் தவிர. இந்த மாதிரியான கற்பனைகள் தோன்றாததற்குக் காரணம் பாழாய்ப் போன(!) வாசிப்புப் பழக்கமும், என் தந்தையாரால் நேர்முகமாகவும் நூல் முகமாகவும் எனக்கு அறிமுகப்படுத்தப்பட்ட பகுத்தறிவாளர்களின் சிந்தனைகளும் என்றே நினைக்கிறேன். என் விருப்பம் போல் அறிவியலில் ஆய்வு மாணவியானேன். என் விருப்பம் போல் ஏனைய பிறவும் வாசித்துத் தள்ளினேன். எழுத்து பற்றி என்னுள் எழுந்த வேட்கை என்னை சிறு பத்திரிக்கைகளில் எழுத வைத்தது. சான்றாண்மை மிக்க ஒரு சிலரின் கேண்ம…
-
- 20 replies
- 4k views
- 1 follower
-
-
செய்தது நீ தானா …-சிறுகதை விடுமுறை நாளென்றாலே கொஞ்சநேரம் அதிகமாக நித்திரை கொள்ளவேண்டும் என்று நினைத்துக்கொண்டு படுத்தாலும் வேலை நேரத்துக்கே வழமை போல எழும்பிவிடுவேன். ஆனால் அவசரப்படாமல் ஆடியசைந்து ஒரு தேநீரை போட்டு எடுத்துக்கொண்டு போனில் யூ ரியுப் அப்பில் இளையராஜாவின் இனிய கானங்களை எடுத்து அப்படியே விரலால் சுண்டிவிட அது தொலைகாட்சி திரைக்கு தாவி அகன்ற திரையில் ஓடத் தொடங்கியதும் சோபாவில் சாய்ந்தபடி கண்ணை மூடி காட்சியை பார்க்காமல் கேட்பதே ஒரு இன்பம். தமிழ் சினிமாவுக்கு இளையராஜா வராமல் போயிருந்தால் எனது தலைமுறையினருக்கு தேனிசைத் தென்றல் தேவா தான் தெய்வமாகியிருப்பர். வித்தியாசாகரும்,மரகத மணியும் மனதில் நின்றிருப்பார்கள். வாத்தியார் பிள்ளை மக்க…
-
- 0 replies
- 2k views
-
-
அதிசய நகரம் பெற்றா முதல் எம்மாவுஸ் வரை....... எமது ஆன்மீகத்தின் வேர்களைத் தேடி புனித பூமிக்கான திருப்பயணம் -2017 (ஜோர்தான்-- இஸ்ரவேல் -- பலஸ்தீனம்) என் தெய்வம் வாழ்ந்த தெய்வீக பூமி இது. இயற்கை அழகும் செயற்கை நிர்மாணிப்பும் கலந்த அற்புதமான உலகம். மலைப்பாங்கான பிரதேசம். ஜோர்தான் நதிப்பள்ளத்தாக்கு வரட்சியில் வாட அதைத்தாண்டி வனாந்தரம் கண்ணுக்கெட்டிய தூரம் புல் பூண்டுகளற்று பசுமைகளற்று பரந்து விரிந்து பாலைவனமாகக் காட்சியளித்தது. என் நீண்டநாள் கனவு நிறைவேறிய மகிழ்வு மனதுக்குள் மத்தாப்பூவாய் மலர்ந்தது. கார்த்திகை மாதம் 23ம் திகதி. இந்த நாளுக்காய் எத்தனை காலம் ஏங்கித் தவித்திருந்தோம். மாலை 9.40க்கு பியசன் விமானநிலையத்தில் இருந்து எயார்…
-
- 13 replies
- 3.9k views
-
-
மீன்கொத்திப் பறவை மீன் கொத்தும் லாவகம் அவள் தேனீர் தயாரிப்பதில் இருக்கும். சிப்பந்தி வேலையென அவள் தன் வேலையினைக் கருதியதாய்த் தோன்றவில்லை. வீடு தேடி வந்தவரை உபசரிக்கும் பாங்கில் அந்தத் தேனீர்ச்சாலையில் அவள் நடந்துகொண்டாள். நான்காம் ஆண்டு படித்துக்கொண்டிருந்த காலத்தில் ஒரு நாள் எங்கள் காணிகளை நானே சென்று பார்த்துக்கொள்ளவேண்டும் என்ற ஒரு நாட்டாமைக் குணம் எனக்குள் விளித்துக் கொள்ள வீட்டில் சொன்னேன். கொடுப்பிற்குள் பெருமை சிரிப்பாக அம்மா ஒரு தொழிலாளியுடன் என்னை அனுப்பி வைத்தாள். தென்னங்காணிக்குள் ஒளிந்திருந்த ஒரு துரவோரம் நின்ற காட்டுமரம் என்னைக் கட்டிப்போட்டது. அது என்ன மரமென்று தொழிலாளியிடம் கேட்க அவர் 'ஓம் தம்பி அது வெட்டோணும், நெடுக நினைக்கிறது நேரம் கிடைக்கிறதில…
-
- 3 replies
- 1.3k views
-
-
பிரிவுகள் தரும் சுமை. 01.10.2017. அவள் என் கைகளிலிருந்து விடுபட்டு தனித்து வாழப்போக வேண்டிய தருணத்தை காலம் எழுதிக் கொண்டு கடந்தது. வாழ்வின் அடுத்த கட்டம் அவளது பல்கலைக்கழகப்படிப்புக்கான பிரிவு. தனது அறையிலிருந்த தனது பொருட்களை அடுக்கிக் கொண்டிருந்தாள். அம்மா...குண்டம்மா..., என்ற அவளது குறும்பும் கதைகளும் இனி என்னைவிட்டுத் தொலைவாகப் போகிறது. படிக்கத்தானே போறாள்....,யோசிக்காதை....சொல்லும் தோழமையின் முன்னால் உடையும் கண்ணீரை மறைக்க எடுக்கும் முயற்சிகள் தோற்றுப் போக மௌனம் கொள்கிறேன். இந்த நாட்களை எப்படிக் கடப்பேன்...? இரவுகள் இப்போது தூக்கம் வருவதில்ல…
-
- 12 replies
- 4.1k views
-
-
கைத்தொலைபேசி காற்சட்டை பொக்கெற்றிலிருந்து சினுங்கியது.நம்பரை பார்த்தேன் மனவியின் தொலைபேசி, நிச்சயம் எடுக்க வேண்டிய அழைப்பு "ஹலோ" "இஞ்சயப்பா வீட்டை போகும் பொழுது முப்பது இடியப்பம் வாங்கி கொண்டு போங்கோ" "சரி"சொல்லி அலைபேசியை பொக்கற்றினுள் வைத்து விட்டு கையை வெளியே எடுக்க மீண்டும் அதே நம்பர் ""எந்த கடையில் இடியப்பம் வாங்கப்போறீயள்" "எந்த கடைக்கு முன்னாலா கார் பார்கிங் கிடைக்குதோ அங்க வாங்கிறேன்" "சு.த.இன்ட கடையில தான் நல்ல இடியப்பம் இருக்கு,கத்தரிக்காய் கறியும் வேணும் ஆனால அதை அங்க வாங்க வேண்டாம் ஒரே எண்ணையாக இருக்கும் அதை ப.தா இன்ட கடையில வாங்குங்கோ,ஆட்டாமா புட்டும் வேணும் அது உந்த இரண்டு கடையிலயும் சரியில்லை புட்டை மூக்கரினட கடையில வாங்குங்க…
-
- 21 replies
- 4.2k views
-
-
அவுஸ்ரேலியாவில் நவம்பர் மாதம் வரும் முதல் செவ்வாய்கிழமை எல்லோருக்கும் ஒரே கொண்டாட்டம் வந்தேறு குடிகளை(ஐம்பது வருடத்திற்கு முன்பு வந்தவர்கள்) தவிர,முக்கியமா விக்டோரியா மாநிலத்தில் அரச விடுமுறையும் விடுவார்கள்.வேலைத்தலங்களில் எந்த குதிரை வெற்றி பெறும் என்று பந்தயம் போடுவார்கள்.ஒவ்வோரு வருடமும் நானும் பந்தயம் கட்டுவேன் இதுவரை வெற்றி பெற்றதில்லை. சாப்பாடு, தண்ணி என்று அமர்க்களப்படும் சில வேலைத்தளங்கள். எல்லோரும் குதிரை பைத்தியமா இருப்பார்கள் .எனக்கு கிருஸ்ன்ரின்ட தேரில் பூட்டிய ஐந்து குதிரையையும் ,கிருஸ்னரைப்பற்றியும் தான் கொஞ்சம் தெரியும் ....ஆனால் சக தொழிலாளிகள் ஒவ்வோரு குதிரையைப்பற்றியும் அதில் சவாரி செய்பவரைப்பற்றியும் பேசிகொண்டிருப்பார்கள்.நான் எனக்கு கிடைத்த பந்…
-
- 7 replies
- 2.7k views
-
-
மண்டபம் முட்டை வடிவில் இருந்தது. வயதான மண்டபமாகவிருந்தது. ஒரு வழிபாட்டு நிலையம் போன்ற அடையாளத்தை அது கொண்டிருந்தது. அதற்கென நிரந்தர இருக்கைகள் பொருத்தப்பட்டிருக்கவில்லை. நிகழ்விற்கேற்றபடி வெளியே இருந்து ஆசனங்களை எடுத்துவந்து போட்டுக்கொள்கிறார்கள் என்பது தெரிந்தது. இருநூறு பேர்வரையான மக்கள் போடப்பட்ட இருக்கைகளில் இருந்தார்கள். ஏறத்தாள அனைவரும் பெண்கள். பதின்மம் தொட்டு பழுத்த வயதுவரை அவர்கள் பரந்திருந்தார்கள். ஆண்கள் மண்டபத்தின் வாயிலை அண்மித்து நெருக்கமாய் நின்றிருந்தார்கள். இருபத்தைந்து பேர்வரை தான் ஆண்கள் இருந்தார்கள். பல்வேறுவகையான ஒலிகள் அங்கு கேட்டுக்கொண்டிருந்தபோதும் மண்டபத்துள் ஒரு மயான அமைதி நிலவியது. அந்த அமைதி, காதுகளைத் தாண்டியதாக, உள்ளுர உணரப்பட்டதாக, நிசப்த்…
-
- 0 replies
- 2k views
-
-
இது ஒன்றும் பயண அனுபவமோ அல்லது பயணக் கட்டுரையோ அல்ல, இப்படி ஒரு இடம் இருக்கிறது இங்கு போய் வந்தேன் என உங்களுக்குச் சொல்வது தான் நோக்கம் . இம்முறை வசந்த கால விடுமுறைக்கு இத்தாலியின் கடற்கரை நகரங்களில் ஒன்றான ஜேசலோவிற்கு ஒர் ஐந்து நாள் பயணம் போய் வந்தோம். பயணத்திற்கான நோக்கம் பெரிதாக ஒன்றுமில்லை வீடு , வேலை, மன அழுத்தங்கள் எல்லாவற்றையும் மறந்து சில நாட் கள் ஒய்வெடுப்பது தான் நோக்கம்.எனது வேலை இடத்து நண்பன் ஒருவர் ஐந்தாறு தடவைகள் ஜேசலோவிற்கு சென்று வந்தது ஜேசலோவினை தெரிவு செய்தமைக்கான காரணமாக இருந்தது அத்துடன் எனது வீட்டிலிருந்து 600 km தூரத்திலிருந்ததும் ஒரு காரணம் எமது வீட்டிலிருந்து காரில் பயணம் 600km தூரம் ஏறத்தாள 7 மணித்தியாலப் பயண நேரம். …
-
- 37 replies
- 7.8k views
- 1 follower
-
-
பள்ளியில் விஞ்ஞான கண்காட்சி நடக்கவிருக்கிறது. தயார்ப்படுத்தல்கள் களேபரப்படுகின்றன. அனைத்து மாணவர்களிற்கும் ஏதேனும் ஒரு விஞ்ஞான விளக்கம் தரும் காட்ச்சிப்பொருளினை எடுத்துவரச் சொல்லப்படுகிறது. ஓவ்வொரு வகுப்பிலிருந்தும் எப்பொருட்கள் காட்சிப்படுத்தப்படுமென்பதை விஞ்ஞான ஆசிரியர் தெரிவுசெய்கிறார். இரண்டு லீற்றர் கொக்கோகோலாப் போத்தலின் விஞ்ஞான அவசியம் தாயாரிற்கு எடுத்தியம்பப்பட்டு அவன் வீட்டில் அது வாங்கப்படுகிறது. தங்கைகளிற்கும் தாயாரிற்கும் பகிர்ந்து பானம் அருந்தப்பட்டு முடிந்ததும், வேலை ஆரம்பிக்கிறது. போத்தலின் கீழ்ப்பகுதி சீராக அரிந்து நீக்கப்படுகிறது. ஒரு குமிழ்முனைப் பேனாவின் உடலும் இரண்டு றீபிள்களும் எடுக்கப்படுகின்றன. குளாயாக்கப்பட்ட முமிழ்முனைப் பேனாவின் உடலில் இரண்ட…
-
- 1 reply
- 2k views
-
-
பாடசாலையில் எனது பிள்ளைகளின் பட்டமளிப்பு விழா பரிசளிப்புவிழா போன்றவற்றுக்கு அடியேன் போவது வழக்கம்.நிகழ்ச்சி தொகுப்பாளராக பாடசாலை மாணவத் தலைவரும் உபதலைவரும் கடமையை செய்வது வழக்கம். சரியான நேரத்திற்கு நிகழ்ச்சிகளை தொடங்குவதில் உந்த வெள்ளைகள் கெட்டிக்காரங்கள் என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேணும்.அவங்களோட சேர்ந்த எங்கன்ட வாரிசுகளும் நேரவிடயத்தில் ஒழுங்காக கடைப்பிடிக்கினம் என்பதில் ஒரு சின்ன சந்தோசம். நானும் போயிருக்க, மாணவத்தலைவன் ''we would like to acknowledge the traditional custodians of this land, of elders past and present.'' நானும் அவுஸ்ரெலியாவுக்கு வந்து கொஞ்ச காலம் ஒடிவிட்டது ,உந்த பூர்வீக குடிகளை கணடதை விட வந்தேறுகுடிகளை கண்டதுதான் அதிகம்.ஒன்றுக்கு பத்தா…
-
- 10 replies
- 3.3k views
-
-
Thursday, August 17, 2017 என் விவாகரத்தும் விளங்காத புனைவுகளும். _____________________________________________________ 2007ம் ஆண்டு சித்திரை மாதம் இனிமேல் சேர்ந்து வாழ்வதில் அர்த்தமில்லையென்ற முடிவை எடுத்த போது விவாகரத்துக்கு விண்ணப்பிக்கலாமென்ற எண்ணம் வந்தது. என் கண்முன்னே வேறு பெண்கள் வந்து போவதை வாழ்வதை ஏற்றுக் கொண்டு சமாளிக்க கடினமாக இருந்தது. என்னையும் எனது ஏற்றத்தையும் உழக்கி வீழ்த்தக் காத்திருந்தவர்கள் முன் தலைகுனியும் தைரியம் இல்லாது போ…
-
- 28 replies
- 7.2k views
-
-
தந்தையுமானவன்.....! அன்று நல்ல முகூர்த்தநாளாக இருக்க வேண்டும். சந்நதி முருகன் ஆலயத்தில் வள்ளி அம்மன் ஆலய முன்றலில் அன்று இருபது திருமணங்கள் வரை நடந்தன.எதிர்பாராமல் அவசரம் அவசரமாக இருபத்தியொராவது திருமணமாக கதிர்வேலுக்கும் வசந்திக்கும் திருமணம் நடக்கின்றது. விதி மிகவும் விசித்திரமானது. அன்று காலை சுன்னாகத்தில் ஒரு பனங்கூடலுக்குள் மென்பந்தில் நண்பர்களுடன் கிரிக்கட் விளையாடும் போதோ அல்லது மத்தியானம் அம்மா திட்டிக் கொண்டு சாப்பாடு போடும்போதோ ( இது அம்மாவின் டெக்னிக்,தான் திட்டாது விட்டால்,அப்பா ஆரம்பித்து அவன் சாப்பிடாமல் வெளியே போய்விடுவான்). அதனால் அம்மா முந்திக் கொண்டு அவனைப் பேசிக்கொண்டு தாராளமாய் சாப்பாடு போடுவாள். அவர்களுக்கு தெரியாது அன்று அங்கு கதிர்வேலுக்கு …
-
- 68 replies
- 12.2k views
- 1 follower
-
-
சம்மருக்கு பீச்சுக்கு போகவேணும் என்பது எங்கன்ட சனத்தின்ட அட்டவணையில் ஒன்று அதற்கு அவனும் விதிவிலக்கல்ல. "அப்பா வீக்கென்ட சரியான நெருப்பு வெய்யிலாம்" "ஏசி யை போட்டு வீட்டுக்குள்ள இருக்கவேண்டியதுதான்,ஒரு இடமும் போகதேவையில்லை" "அது எங்களுக்கு தெரியும் அப்பா, வி வோன்ட் டு கொ டு பீச்" " அங்க சரியான சனமாயிருக்கும் அதுக்குள்ள போய் கார் பார்க் பன்ணுறதெல்லாம் கஸ்ரம்" "கொஞ்சம் எர்லியாக போனால் கார்பார்க் கிடைக்கும்" "உந்த கொழுத்திறவெய்யிலுக்குள்ள போய் கறுத்து போவியளடி" "அதற்கு சன்கீறிம் பூசிக்கொண்டுபோகலாம் ,அப்பா உங்களுக்கு சுவிம் பண்ணதெரியாதபடியால் சும்மா லெம் எஸ்கியுஸ்களை சொல்லாதையுங்கோ" "எனக்கு சுவிம் பண்ணதெரியாதோ! நிலாவரையில் டைவ் அடிச்சனெ…
-
- 15 replies
- 3.9k views
-
-
பசியும் பார்வையும் திரும்பத் திரும்ப அவளைப் பார்க்கத் தோன்றியது. உருவம் இன்னும் திடகாத்திரமாக முகத்தில் ஆண்களுக்கே உரித்தான ஒரு வித தடிப்புடன் தாடைகள் அமைந்திருக்க என்னுடைய ஞாபகக்குழிக்குள் அவள் முகம் தெரிந்ததுபோலும் தெரியாதது போலும் தளம்பல்பட்டுக் கொண்டிருக்க நான் அந்த முகத்தை யாரென்று ஊகிக்க மிக ஆழமாக உற்று நோக்கினேன். அவள் அருகில் இன்னும் ஒரு பெண் நளினத்தோடு முறுவலித்தபடி வெட்கச்சாயம் பூசியிருந்தாள் . முறுவலிட்டபடி இருந்தவளை இரசிப்பதா இல்லை மற்றவளை இனம் காண்பதா என்ற இரண்டு நிலையில் நான் அந்த ஸ்காபுரொ மோல் பக்கம் விடுமுறை காலங்களில் பிள்ளைகளை அழைத்துச் செல்வது வழக்கம் இன்றும் அப்படித்தான் அவ்விடத்தில் நான் பிடித்தமான உணவுகளை வாங்க பிள்ளைகள்…
-
- 4 replies
- 2.2k views
-
-
சட்டி (நிமிடக்கதை(யல்ல)) பூனகரியை அண்மித்த யுத்தம் கோரத்தாண்டவமாடியபோது அவளது ஊரும் இடம்பெயரலானது. கணவன் கடந்த ஆண்டு போர்முனையில் வித்தாகிவிட இருபிள்ளைகளோடு இடர்களைத்தாங்கித் தனது பிள்ளைகளுக்காக வாழ்ந்தவள் வினோதா. அமைதியிழந்த சூழலில் உணவோ நித்திரையோ இல்லாது மக்களோடு மக்களாக நகர்வதும் ஒதுங்குவதும் பின் இன்னொரு இடம் நோக்கி நகர்வதுமாய் இன்று புதுக்குடியிருப்பிலே. எங்கும் மரணமும் பட்டினியும். பணமிருந்தாலும் பசியாற வழியில்லை. சற்று ஓய்வாக இருக்க எண்ணினாலும் முடியாது. பிள்ளைகள் பசியால் துடிக்க என்ன …
-
- 4 replies
- 2.5k views
-
-
நீல நிற விழிகளை அசைத்து அந்த மனிதன் உணர்த்திய கணத்தில் ஆரம்பிக்கத் தொடங்கியது அவனது எஞ்சிய நாட்கள். நாக்கு உலர்ந்து வார்த்தைகள் வறண்டுவிட்ட அந்தக் காலத்தை மெல்லியதாகக் கிழித்து வெளியேற முயன்றான். அன்றையின் பின், எப்போதும் அந்த நீலக் கண்கள் பிடரிப் பக்கத்தில் படர்ந்திருப்பதைப் போல ஒரு கனம் அவனது மனதினில் இறுகத்தொடங்கியது. அவனால், எஞ்சியிருப்பது எவ்வகையான வாழ்வென்றே தஅனுமானிக்க முடியாதிருந்தது. பிடரியில் ஒட்டியிருப்பதான நீலநிற விழிகள் இரவுகளில், மரங்களில், சுவர்களில் அசைந்து கொண்டிருப்பது போலவும் பாம்பின் நாக்குப் போல அவ்வப்போது இடைவெட்டிக் கொள்வதாகவும் கண்டுகொண்டான். காற்பெருவிரல் நகத்திற்கும் தசைக்கும் இடையினாலான, இடைவெளியினூடாக ஊடுருவும் மெல்லிய குளிர் போ…
-
- 1 reply
- 1.6k views
-
-
கண்ணாடிக் கட்டிடத்தின் படிகளில் ஏறிக்கொண்டிருக்கையில் எதேச்சையாய்க் கண்ணாடி வழி வெளியே பார்க்கிறேன். காக்கி நிறத்தில் பாவாடை, நீல நிறத்தில் மேலங்கி. கரிய கேசம் சிற்றருவியாய் வழிய, லூயி விற்ரான் பை கையில் தொங்க அந்தத் தமிழ் அழகி வெளியே நடந்துகொண்டிருக்கிறாள். நான் தற்போது காதலில் கட்டுண்டு கிடக்கவில்லையேல் அவசியம் வெளியே சென்று அவளுடன் பேசி இருப்பேன். தவிர்க்க முடியாத அழகி. முறுவலோடு என் நடை கண்ணாடிக் கட்டிடத்திற்குள் தொடர்கிறது. நகரத்தின் கட்டிடங்களைத் தொடுக்கும் நடைபாதையாதலால் என்னை ஒத்தவர்கள் அதிகம்பேர் நடந்துகொண்டிருந்தார்கள். அனைவரது கைகளிலும் அலுவலக அலைபேசி. மின்காந்த அலைகள் எங்கும் நிறைந்திருந்தும் கண்ணில் படவில்லை. மனிதர்கள் தாம் தொழில்நுட்பத்தால் மட்டுமே இணைக…
-
- 6 replies
- 2.2k views
-
-
கோயிலில் தோரணம் கட்டுதல் ,அன்னதானம் வழங்குதல்,சாமி காவுதல் போன்றவற்றிக்கு நானும் என்னுடைய நண்பர்களும் முன்னுக்கு நிற்போம்.இவற்றை செய்யும் பொழுது சில சுயநலங்களை எதிர்பார்த்துதான் செய்வோம் ஆனால் வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு பொது நலம் போல இருக்கும்,இது தான் அன்றைய காலகட்டத்தில் பொதுசேவை என்று கூட சொல்லலாம்..அம்மாவின் அல்லது சகோதரிமாரின் தங்க செயினை வாங்கி போட்டு கொண்டு மேலாடையின்றி சாமி காவுவோம் அதிலும் முன்னுக்கு நின்று காவ வேணும் என்ற போட்டியும் எங்களுக்கிடையே நடக்கும்.சாமியை இருப்பிடத்தில் வைத்த பின்பு பிரசாதத்தை பெற்று கோவில் வெளிமண்டபத்திலிருந்து அன்றைய தரிசனங்களை இரைமீட்பது எங்களது வழமை. சின்ன பெடியள் அடிபட்டால் அவங்களை விளத்தி சமாதானப்படுத்தி அனுப்புதல்,பக…
-
- 7 replies
- 2.8k views
-
-
" உயர்தர பரீட்சை எடுத்தவுடன் நண்பர்களுடன் ஊர் சுற்றி திறியும் பொழுது , இப்ப இருப்பது போல் கையடக்க தொலைபேசி ஒன்றுமில்லைதானே ஆனபடியால் நாலுக்கும் நாலரை மணிக்குமிடையில் எல்லோரும் பாடசாலை முன்றலில் ஒன்றுகூடுவோம் ,குறைந்தது ஐந்து சைக்கிளில் நண்பர்களுடன் ஊர் உலாத்தலுக்கு வெளிக்கிடுவோம் முதலில் போவது மருதடிக்கு .சைக்கிளை எம் மீது சாய்த்துக்கொண்டு மருதடியானை வணங்குவோம் உள் சென்று தரிசிப்பதை தவிர்த்து கொள்வோம் ,வேறு தரிசனங்கள் செய்வதற்காக.,.சந்தனம்,விபூதி மறக்காமல் பூசிகொள்வோம் காரணம் வீட்டை போகும் பொழுது அம்மா கேட்டால் பள்ளிகூடத்தில விளையாடிவிட்டு, கோவிலுக்கு போயிற்று வாறோம் என்று சொல்லி நல்ல பிள்ளைகள் என்று பெயர் எடுப்பதற்காக அந்த திருவிளையாடலை செய்வோம்.. நாலு திசையு…
-
- 34 replies
- 7.5k views
-
-
23.04.2017 தமிழினி அவர்களின் 45வது பிறந்தநாள்.தமிழினி அவர்கள் பற்றி பல்லாயிரம் கேள்விகள். தமிழினி அவர்களுக்கும் எனக்குமான உறவு பற்றியும் அவளது திருமணம் , ஒரு கூர்வாழின் நிழல் நூல் பற்றிய சர்ச்சைகள் என பெரிய பட்டியல் நீளம். எனது மௌனம் கலைத்து தமிழினி பற்றிய உலகம் அறியாத பலவியடங்களை பகிர்ந்திருக்கிறேன். இது பெரிய பகிர்வு. நேரமெடுத்து வாசியுங்கள். ------------------------------------ Saturday, April 22, 2017 தமிழினி.ஒருமுனை உரையாடல். முன்னரெல்லாம் தூக்கம் தொலையும் இரவுகளில் நீயும் நானும் விடியும்வரை பேசிக்கொண்டிருப்போம். இப்போதும் உன் பற்றிய கனவுகளாலும் உன் தொடர்பாகக் கிழம்பும் புரளிகளாலும் என் தூக்கம் தொலைகிறது.…
-
- 3 replies
- 3.7k views
-
-
Thursday, April 20, 2017 மனவெளி அலைவு (சாந்தி நேசக்கரம்) அவனுக்கும் அவளுக்குமான உறவு உரையாடல்கள் மூலம் உருவாகி வளர்ந்து விருட்சமாகி நிற்கிறது. எந்த விடயங்களைப் பற்றி அவர்கள் பேசிக்கொள்ளவில்லை ? அவர்களுக்கிடையே பேசாப்பொருள் என்று எதுவுமே இருந்ததில்லை. உரையாடலில் ஒருநாள்....., நாங்கள் முற்பிறப்பில ஒண்டாப் பிறந்திருக்கிறம் போல....அதுதான் இந்தப் பிறப்பிலயும் தொடருது. என்றான் அவன். முற்பிறப்பெல்லாம் நம்பிறியேடா ? இது அவள். தெரியேல்ல..., ஆனால் உங்களுக்கும் எனக்குமான உறவு நுற்றாண்டுகளுக்கு மேல இருந்திருக்கு. நீங்கள் அப்…
-
- 4 replies
- 1.9k views
-
-
பெறுபேறு /பெரும்பேறு. ஈன்றபொழுதிலும்....பின்னர் அவர்களே இன்பமென்று இருந்த பொழுதுகளிலும்... என்னை தாங்கும் வேரென நிறைந்த பொழுதிலும்..பெரிதாய் இருக்கிறது இன்று. அமுதாய் இனிக்கிறது. என் பிள்ளைகளின் எதிர்காலம் எனக்கு ஒரு கனவு..அக்கறை..கடமை என்பதும் என்னை பழியுரைத்தோர்..எனது வீழ்ச்சி விரும்புவோர் முன்னே ஒரு சவால். வைராக்கியம். என்னை இந்த உலகிற்கு கொண்டுவந்த அம்மாவும்..என் பிள்ளைகள் உலகிற்கு வர காரணமானவனும் கூட ' எங்க உன்ர பிள்ளைகள் படிக்கிற கெட்டிதனத்தை பார்ப்பம்...என்றதுவும். தனியே நீ என்ன சாதிப்பாய். ...அடங்கி போ..என்று மிரட்டியவர்களிற்கும் முன்னே செயல் மூலமான பதிலாக ...எனது இத்தனை நாள் தவத்திற்கு வரம் கிடைத்தது. இன்றைய எனது நாட்குறி…
-
- 19 replies
- 3.6k views
-