Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதைக் களம்

கள உறுப்பினர்களின் சிறுகதை | மொழியாக்க கதை| தொடர்கதை | பயண அனுபவங்கள் | நாடகம்

பதிவாளர் கவனத்திற்கு!

கதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, பயண அனுபவங்கள், நாடகம் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுயமான சிறுகதைகள்,  மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், பயண அனுபங்கள், நாடகங்கள்  மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.

  1. நான் கண்ட கனவொன்றை (உண்மையிலை கனவு தானோ எண்டு கேக்கப்படாது) உங்களோடை பகிர்ந்து கொள்ளுறன். (கீறிட்ட இடங்களை நிரப்பி வாசியுங்கோ.) …. யில் நேற்று நள்ளிரவு இடம்பெற்ற இராணுவப் புரட்சியின் பின் நாட்டின் ஆட்சியை இராணுவம் கைப்பற்றியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையை நாட்டின் தலைவர் …. தற்போதும் … மாளிகையிலேயெ தங்கியிருப்பதாகவும் அவரைக் கைது செய்வதற்கு இராணுவம் தாக்குதல்களை நடத்தி வருவதாகவும் எனினும் ஜனாதிபதிக்கு விசுவாசமான ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவினருக்குத் இராணுவத்திற்கும் இடையில் சண்டை இடம்பெற்று வருவதாகவும் சொல்லப்படுகிறது. பிந்திக் கிடைத்த செய்தியொன்றின் படி ஜனாதிபதி … காயங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனின…

    • 0 replies
    • 801 views
  2. பிரான்சுக்கு முதல் முதலில் வந்தவர் என்பதால் அவரை எல்லோருக்கும் தெரியும் வருபவர்கள் எவரும் அவரது விலாசத்தை மட்டும பிடித்தபடியே தான் பிரான்சுக்குள் புகுவர். அது போதும் என்ற நம்பிக்கை. வந்தவுடன் தங்க இடம் சாப்பாடு உடுப்பு விசா வேலை.......... எல்லாமே அவர் செய்வார். நானும் பார்த்திருக்கின்றேன். அவரது வீட்டில் உலை எப்பொழுதும் கொதித்தபடியே தான் இருக்கும். சோறு போட்டபடியே இருப்பார்கள். கறி என்றால் இறைச்சி அல்லது மீன் சிலவேளை கருவாடு. இது முடிந்தால் சமாளிக்க கத்தரிக்காய் கறியும் இருக்கும். பின்காலங்களில் பருப்பு. ஒரு ரூம்தான். சாய இடமிருந்தால் எவரும் படுத்து நித்திரையாகலாம். நின்று கொண்டே நித்திரை செய்தவரை பார்த்திருக்கின்றேன். இவ்வளவையும் பார்த்த…

  3. கரிய முகில்களுக்கிடையில் தீச்சுவாலை பரப்பியபடி, எரியுண்ட கோளமாய் சூரியன் கிடந்த காட்சி, அவனை எரித்துவிட்டுத் திரும்பும் போது எழுந்த கரும்புகையையும், புகையின் அடியில் ஒரு புள்ளியாய் குமுறி எழுந்த தீயையும் நினைவுகளின் அடுக்குகளிலிருந்து இழுத்து எடுத்துவிட்டிருந்தது. இன்றைக்கு மூன்று நாள்களுக்கு முன் நிகழ்ந்துகொண்டிருந்த அந்த சூரிய அஸ்தமனம், நினைவினில் மீண்டும் மீண்டும் உருவாகி அலைக்கழிக்கலாயிற்று. கடந்துபோன அன்றையை, அந்த நாள் மீண்டும் மனதில் கிளர்ந்திற்று. ஒவ்வொருவரும் தயங்கித் தயங்கி அவ்விடத்திலிருந்து விலகிப்போன அந்த வேளையை கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் பூதாகரமாக உருவாக்கிற்று. பின்னர் வந்த இந்த நாட்களில் சூனியவெளியில் அலைவுறும் எழுதப்பட்ட பழுப்பு…

  4. அம்மாவின் அன்பான அழைப்பும் துயில் எழுப்பலும் எதுவும் இல்லை. தங்கையின் அலட்டல் ஆர்ப்பாட்டம் இல்லை. அப்பாவின் கம்பீரக் குரல் இல்லை. எனக்குப் பிடித்த இன்னும் பலதும் இங்கில்லைத்தான். ஆனாலும் அவர்கள் எல்லோருடனும் இருக்கும்போது இல்லாத ஒருவித நிம்மதியும் அதனூடே தெரியும் வெறுமையுமே இப்ப எனக்கு இருந்தாலும் சுவாசக் காற்றில் எதோ ஒரு சுகத்தை கவலையினூடும் என்னால் உணர முடியிது. நான் இரண்டு நாட்களாக என் அறையில் ஒருவித இலயிப்போடு சுருண்டு படுத்திருக்கிறேன். ஏழாம் மாடியின் அறை ஒன்றில் திரைச்சீலையற்ற யன்னலினூடே தெரியும் வானத்தையும் அப்பப்போ கடந்து போகும் மேகங்களையும் சில பறவைகளையும் கூட பல காலத்துக்குப் பின்னர் இப்பிடிப் படுத்தபடியே பார்த்து இரசிக்க முடியும் என்று ஒரு இரு மாதங்களுக்…

  5. மூன்றாவது காலை விடிந்திருக்கின்றது. காய்ச்சல் கொஞசம் குறைந்திருக்கிறது. இன்னமும் எழுந்து நிற்க முடியவில்லை. எனது அணியோடு தொடர்பில்லை. திசையும் சரியாகத் தெரியவில்லை. சாதுவாகப் பசிக்கிறது. மனிதநடமாட்டம் மருந்திற்கும் இல்லை. நகர்ப்புற மக்கள், வேடர்களைக் கதைகளிற் தான் கேட்டிருப்பர். ஆனால் கதிர்காமத்திலிருந்து தென்தமிழீழம் வழியாக வன்னியை இணைக்கும் பிரதேக்காடுகளிற்குள் வேடர்கள் இன்னமும் வாழ்கி;றார்கள். அவர்களை முன்னர் நான் கண்டுள்ளேன் என்பது மட்;டுமன்றி, ஒரு வேலைத்திட்டத்தில் வேடர்களோடு வேடர்களாக நான் எதிரி நாட்டிற்குப் பயணித்தும் உள்ளேன். என்னால் வேடர்போன்று பேசமுடியும். வேடர்களோடு பேசமுடியும். ஆனால் நான் பேசுவதற்கு வேடர் எவரையும் தற்போது காணவில்லை. காடு முற்றாக விழித்திரு…

  6. நல்லெண்ணை நிறம். நீண்ட ஆரோக்கியமான விரல்கள். கருமையான கேசம். உருண்டை விழிகள். கிளிச்சொண்டு மூக்கு. கழுத்தில் பெயர் பட்டி. பெயரை வாசிக்கு முன்னர் கைப்பை மறைத்துக்கொள்கிறது. ஜேர்மன் பொறியியல் போன்ற உடல் அசைவுகள். அவள் ஒரு சஞ்சிகையினைப் படித்துக் கொண்டிருக்கிறாள். நல்லெண்ணைக்கும் கருமைக்கும் இடையில் ஒரு நிறம். குழந்தைக் கொழுப்பு வாலிபத்திலும் அவனோடு இருக்கிறது. மொழுமொழு கைகள். கொழுத்த கன்னங்கள். தலை நிறைய முடி. தலையினை இருக்கையில் சரித்து இருந்தபடி தூங்குகிறான். குறட்டை உரிமைக்குரல் போன்று ஒலிக்கிறது. அவள் காதிற்குள் இசையில்லை. கண்கள் சஞ்சிகையில். அரை அடி தள்ளி அவன் இருக்கை. சமரசமற்ற அவன் குறட்டை. அவள் இருப்பை அவனோ அவன் குறட்டையினை அவளோ உணர்ந்ததற்கான அறிகுறிகளே இல்…

  7. நாள் ஒன்று வரும் மாவீரர் தின நினைவாக எழுதப்பட்ட நாடகம். எழுத்து ஆக்கம்: இளங்கோ, பின்னணி இசை கோர்ப்பு : சசி வர்ணம் நடித்த மற்றும் குரல் வடிவம் தந்த அனைத்து கலைஞ்சருக்கும் நன்றிகள். (எல்லோருடைய பெயர்களும் என் கை வசம் இல்லை - அடுத்த பதிவில் இணைக்கின்றேன் மன்னிக்கவும்) கதைக் களம் ஆனது புலம் பெயர் நாடு, தாயகம் இரண்டையும் உள்ளடக்கி இருக்கும். புலம் பெயர் நாட்டில் ஆரம்பித்து தாயகம் நோக்கி நகரும். இறுதியில் புலம் பெயர் மக்களின் ஒற்றுமையை வலியுறுத்தி நிறைவுறும் தமிழரின் போராட்டம் குறித்த நம் இளையவர்களின் புரிந்துணர்வு, விட்டு செல்லப்பட்ட பொறுப்புகள் சம காலத்தில் தாய் மண்ணில் நடக்கின்ற அவலங்கள், முன்னால் போராளிகளின் நிலைமை, தமிழராய் நாம் அனைவரும் ஒற்றுமையாய் அணி திரள வ…

  8. நாவினால் சுட்ட வடு( சிறுகதை) அன்று வெளியூரில் இருக்கும் அவரது நண்பர் ஒருவர் அவரைப்பார்க்க வருவதாகப்போனில் சொன்னார். இவரும் சரி வாருங்கள் பஸ்விட்டு இறங்கியபின் போன் செய்யுங்கள் என்று சொன்னார். அவரும் சரி இன்று மாலை வருவேன் வந்து இறங்கிவிட்டுப் போன் செய்கிறேன் என்று சொன்னார். அவரும் சொன்னதைப்போலவே அன்றுமாலை வந்து பஸ்சில் இறங்கியபின் இவருக்குப்போன் செய்தார். அப்போது இவர் சொன்னார் போனில் லொக்கேசன் அனுப்பியிருப்பதாகவும் அதை அருகில் இருக்கும் ஆட்டோகாராரிடம் சொல்லி ஆட்டோபிடித்து வந்து சேருமாரும் இவர் சொல்ல அவர் சரி என்று சொல்லி விட்டு போனை கட்செய்தார்சிறிதுநேரத்தில் அவர் மீண்டும்தொடர்புகொண்டு “ அவன் 300 ரூ கே…

  9. அறிமுகம் ஓவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் பல்வேறு வகையான சம்பவங்களின் தொகுப்பு அழிக்க முடியாத பதிவுகளாக மனதில் பதிந்து இருக்கும். நல்லது, கெட்டது, இன்பம், துன்பம், கசப்பு, வியப்பு, கடினம், வலி எனப் பல சம்பவங்களும், அந்த சம்பங்களின் உணர்வோட்டங்களும் ஆள்மனப்பதிவில் இருந்து கொண்டேயிருக்கும். அப்படி, எனது நினைவுகளில் அழிக்க முடியாமல் பதியப்பட்டிருக்கும் சில விடயங்களை, சம்பவங்களை இங்கு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகின்றேன். ஒரு பொது வாழ்க்கையின் சம்பவத் தொகுப்புக்களாக என்னுடைய பதிவுகள் இருக்கப்போவதில்லை. சாதாரண மனித வாழ்வில் இருந்து வேறுபட்ட தடத்தில் பயணித்த எனதும் என்னுடைய நண்பர்களினதும் பதிவுகள் சில சம்பவங்களுக்கு வாய்மொழிச்சான்றாக அமையலாம் என்ற ஒரு எடுகோளின் அடிப்படையில்…

  10. நினைவெல்லாம் நீயே.. 1996ம் ஆண்டு ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை எழுதிக் கொண்டிருந்த நேரம், வழமைக்கு மாறான நாய்களின் ஊளையும், புலன்களுக்குப் புலப்படாத இயந்திரங்களின் இரைச்சலும் கலவரத்தையே எமக்குள் உருவாக்கி விட்டிருந்தது. பரீட்சை எழுதும் மனநிலையில் நாம் யாரும் இருக்கவில்லை. ஆம்,வடமராட்சியில் இலங்கை ராணுவம் நுழைந்த நாள் அன்று. பட்டாம் பூச்சிகளாய் பறந்தவர்களின் வாழ்வெலாம் திறந்தவெளிச் சிறைகளுக்குள் அடைபடப்போகிறது என்பதைக் கட்டியம் கூறிய நாள். தினம் தினம் நடக்கும் சுற்றிவளைப்புகளும், தேடுதல் வேட்டைகளும், இராணுவ ஊர்திகளின் அணிவகுப்பும் இயல்வாழ்க்கையை முற்றிலும் சிதைத்திருந்தது. அப்படியான ஒரு நாளில் அறிமுகமானவர் தான் ராஜு அண்ணா. மாமி வீட்டுக் கிணற்றில் குளித்த…

  11. நிரூபணவாதி --------------------- இங்கே யார் அவர் என்று என்னுடைய பெயரைச் சொல்லி கேட்டான் அவன். அப்பொழுது நேரம் இரவு எட்டு மணி ஆகியிருந்தது. விளையாட்டு ஏழு மணிக்கு ஆரம்பிக்கும் என்று ஒரு வழமையாக சொல்லியிருக்கின்றோம். நான் ஆறு ஐம்பது அளவில் அங்கே மைதானத்தில் நிற்பேன். ஏழு மணிக்கு ஓரிருவரும், ஏழரை மணி அளவில் சிலரும் என்று வந்து சேர்வார்கள், அப்படியே விளையாட்டை ஆரம்பித்துவிடுவோம். எட்டு மணி அளவில் அன்று வர இருந்தவர்கள் எல்லோரும் வந்து சேர்ந்துவிடுவார்கள். 'நான் தான் அது............ நீங்கள்..............' 'என் பெயர் சிட்டா............ உங்களுடன் சேர்ந்து நானும் ஆட வந்திருக்கின்றேன்...............' என்று சொன்னவன் தன்னை யார் இங்கே அனுப்பியது என்றும் சொன்னான். 'நல்லது சிட்டா.....…

      • Like
      • Thanks
      • Haha
    • 7 replies
    • 403 views
  12. உன்னை எனக்கு அதிகம் பிடிப்பதில்லை, நாளும் ஒற்றன் போல் என்னைப் பின் தொடர்கிறாய். என்னை உனக்குப் பிடிக்குமா என்று நான் ஒருபோதும் எண்ணியதில்லை. என்னைப் பற்றி உனக்கு முற்றிலும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை (ம்ம்ம் சரி கொஞ்சமாகத் தெரிந்திருக்கலாம்...). ஆனாலும் நாமிருவரும் பிரிந்ததில்லை, அதில் எனக்கு எந்தவொரு வியப்புமில்லை – இது காலங்காலமாகத் தொடர்வதுதானே! அவளும் உன்னை வெறுக்கிறாள், உன் மீதுள்ள பொறாமையே அதற்குக் காரணம். நாம் நெருங்கியிருப்பதைச் சபிக்கிறாள், அதைப் பலமுறை என்னிடமே சொல்லிருக்கிறாள். அப்போதெல்லாம் சிரித்து மழுப்பிவிடுவேன். ஆனாலும் உன்னைச் சபிக்க என் மனம் முன் வருவதில்லை. நீ ஆடையின்றி நிர்வாணமாயிருப்பதை நான் ரசிக்கவில்லை, அதை என்னால் …

  13. பனி படர்ந்த ஊதல் காற்று ஒரு காது வழியே ஊசியாய்த் துளைத்து மற்றைய காது வழியே வெளியேறி அவனை ஒரு வழிப் பண்ணிக்கொண்டிருந்தது. பனித்துகள்கள் மெல்லிய மலர் இதழ்களாய் காற்றோடு இழைந்து பூமியெங்கும் வெண்மையான நிலவிரிப்பை படர விட்டிருந்தது. கிராமப்புறமாதலால் பனிக்காலத்தில் கூட பசுமை மாறாத பச்சை மரங்களும் இலை உதிர்ந்திருந்த சாலையோரத்து மரங்களும் பனி படர்ந்து வெள்ளை வெளேரென நத்தார்ப் பண்டிகை மடலில் காட்சியளிப்பது போன்ற தோற்றத்தை அவனுக்கு நினைவூட்டியது. இன்று போலத்தான் அன்றொரு நாள் கொட்டிய பனியும் நடந்த சம்பவமும் அவனுக்கு ஒரே சம்பவம் மீண்டும் அதே போல நடப்பது போன்றதொரு மாயையைத் தோற்றுவிக்கிறது. நினைவுகள் அசை போட்டன. கெலி அவனோடு வேலை பார்க்கும் வயோதிபத்தை நெருங்கும…

    • 38 replies
    • 5.2k views
  14. சாந்தினிக்கு இப்போதெல்லாம் அடிக்கடி தூக்கம் வருகிறது. இரவில் பலநாட்கள் படுத்ததும் தூங்கிவிடுகிறாள். காலையில் அடித்துப் போட்டது போல் இருக்கும். ஆனாலும் காலையில் மணிக்கூடு அலறும் சத்தம் காதைத் துளைக்க எழும்பியே தீரவேண்டும் என்னும் கட்டாயத்தால் எழுகிறாள். அதன்பின் பல் துலக்கி, பால் காய்ச்சி, கணவனுக்குக் கோப்பி போட்டு, பிள்ளைகளுக்கு பால்த்தேநீர் போட்டு தானும் குடித்துவிட்டு, ஒவ்வொருவராக மூன்று பிள்ளைகளையும் எழுப்பி வெளிக்கிடுத்தி, அவர்களை காலை உணவு உண்ணச் செய்து, தேநீரைக் குடிக்கச் செய்து, பாடசாலையில் விட்டுவிட்டு வருவதற்கிடையில் வாழ்க்கை வெறுத்துவிடும். கணவன் செந்தில் ஒருநாளும் கட்டிலை விட்டு அசைய மாட்டான். எத்தனையோ தரம் கேட்டும் பயனில்லை. காதலித்து மணந்திருந்தாலாவது ஒர…

  15. நிலவு குளிர்சியாக இல்லை வானத்து முகில்களைக் கிழித்துக்கொண்டு ஜானவியை தாங்கிய அந்த விமானம் பறந்து கொண்டிருந்தது.இன்னும் சிறு மணிகளில் தனது மகள் மைதிலியையும் பேரப்பிள்ளைகளையும் பார்க்கும் சந்தோசம் அவள் முகமெங்கும் பொங்கி வழிந்தது. ஆனாலும் காலையில் எழுந்த களைப்பும் முதுமை தந்த அசதியும், நித்திரை அவளை தன் பிடியில் சுலபமாகவே கொண்டுவந்தது. ஜானவி ஊரின் பிரபல மகளிர் கல்லூரி ஒன்றின் இளைப்பாறிய அதிபர். அவளது கணவரோ பிரபல கண்வைத்திய நிபுணராக இருந்து பத்து வருடங்களுக்கு முதல் காலமாகிவிட்டார். கணவரின் இழப்பை ஜானவியால் ஜீரணிக்க முடியவில்லை. கணவர் உயிருடன் இருந்தபொழுதே தனது ஒரே மகளான மைதிலியை பிரான்சில் இருந்த அவர்களது நண்பர் ஒருவரின் மகனுக்குக் கலியாணம் செய்து வைத்து விட்டா…

  16. சாத்திரி ஒரு பேப்பரிற்காக மேஜர்..டொச்சன்.(கந்தசாமி.ஜெயக்குமார்)பிறப்பு.21.06.1966...வீரச்சாவு.24.11.1992 .............................................................. டொச்சன் காலை எழுந்து துலாவில் தண்ணீர் இழுத்து இறைக்க அவனது அம்மம்மா வழிந்தோடி வந்த தண்ணீரை தோட்டத்தின் வாழைப்பாத்திகளிற்கு மாற்றி விட்டுக்கொண்டிருந்தார்.ராஜராஜேஸ்வரி அம்மன் கோயில் மணி சத்தம் கேட்டதும் அவசர அவசரமாக உணவை வாயில் அடைந்து விட்டு நேரமாச்சு அம்மம்மா நான் போறன் என்றபடி பாடசாலைக்கு புத்தகப் பையை தூக்கிக் கொண்டு வெகு வேகமாக வசாவிளான் மத்திய மகா வித்தியலத்தை நோக்கி ஓட்டமும் நடையுமாகப் போய்க்கொண்டிருந்தவனிற்கு வடக்கு புன்னாலைக்கட்டுவன் சந்தி இலுப்பைபை மரத்தை தாண்டும் போது…

  17. நீலக் கடலின் ஓரத்தில்... கூட்டைவிட்டு விடுதலையாகிய ஒரு சிட்டுக்குருவியைப் போல மேலே மேலே இயந்திரப்பறவை இறக்கை விரிக்க கனடாவில் எல்லைகள் புள்ளிகளாக கட்டிடக்காடு, வாகன நெரிசல், வேலைப்பளு, நாளைய ஏக்கம், அனைத்தையும் மூட்டைகட்டி ஓர் மூலையில் போட்டு விட்ட உணர்வுடன் வெட்ட வெளியில்; கொட்டிக் கிடக்கும் கொள்ள அழகை ரசித்தபடி மனம் பரவசத்தில் பரபரக்க வேகமெடுக்கும் வெஸ்ற் ஜெட் விமானத்தினுள் நாம். விமானத்தினுள் அமர்ந்திருந்த அனைவருமே தம் விடுமுறையை கழிக்கச் செல்பவர்கள் என்றபடியால் அனைவர் முகத்திலும் உல்லாசமான மனநிலை. எமது குடும்பத்தினர் அறுபது வயது தொடக்கம் ஆறுமாதக் குழந்தைவரை ஏறக்குறைய இருபத்திஜந்து பேர்வரை விமானத்தில் பறந்து கொண்டிருந்தோம். விமானம் புறப்பட ஆயத்தமாகும் முன…

  18. Sunday, June 17, 2018 நூறாய் பெருகும் நினைவு நீங்க இலங்கையா? கேட்போருக்கு..., ஓமோம்... சொல்லியும் ! நீங்க இந்தியாவா? கேட்போருக்கு...., ஆமாங்க... சொல்லியும் கடந்து போகிறேன் மனிதர்களை. அப்ப ஊரில எந்த இடம்? சிலருக்கு பூராயம் ஆராயாமல் பொச்சம் அடங்காது நீளும் கேள்விக்கு வாயில் வரும் ஊரைச் சொல்லிக் கடக்க முயல்வேன். அதையும் மீறி வரும் கேள்வி இது :...., …

    • 11 replies
    • 4k views
  19. நெஞ்சத்தைக் கிள்ளாதே... பகுதி-1 அபி,.. பெயரைப் போலவே சற்றுக் குள்ளமாய் ஆனால் அழகானவள். காவியக் கண்கள் எப்போதும் புன்னகை சிந்தும் இதழகள் சொல்லிச் செய்வித்தது போன்ற தேகம், மண்ணுக்கே உரிய பொது நிறம் என்று கொஞ்சம் குட்டையாகப் பாவாடை,சட்டை போட்டுக்கொண்டு லுமாலா சைக்கிளில் நல்லூர் வீதிகளில் அவள் வரும் போது அது தான் திருவிழா கமலுக்கு. தந்தை தபாலதிபர். தாய் வீட்டு வேலை தான் நான்கு பெண்கள் என்பதனால் பொறுப்பும் அதிகம் அவளுக்கு, அக்கா படித்து முடித்து யாழில் பிரபலமான இன்சூரன்ஸ் கம்பனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தாள், அபி 2006ம் ஆண்டு உயர்தரம் விஞ்ஞானப் பிரிவில் யாழ் வேம்படி மகளிர் கல்லூரியில் கல்வி கற்றுக் கொண்டிருந்தாள், தங்கைகள் இரட்டைப் பிள்ளை…

    • 134 replies
    • 14.8k views
  20. நெரிசலில் ஓர் மோகம் மத்திய இலண்டனில் உள்ள தலைமை அலுவலகத்தின் பாரிய சுழல் கதவுகளினூடாக வெளியே வந்தபோது டிசம்பர் மாதக் குளிர் வேகமான காற்றினால் சுழன்றடித்து ஊசிகளாக காது மடல்களினூடு உள்ளிறங்கிக் குத்தத் தொடங்கியது. அவசர அவசரமாக ஜக்கற்றின் zipபைக் கழுத்து வரை உயர்த்தி பொத்தான்களை பூட்டிக்கொண்டு லண்டன் பிரிட்ஜ் ரியூப் (சுரங்க ரயில்) ஸ்ரேசனை நோக்கி விரைந்து நடக்கும்போது அருகிலிருந்த அதியுயர் கட்டடத்தில் இருந்த கடிகாரம் ஐந்துமுறை அடித்து ஓய்ந்தது. நெரிசல் மிகுந்த பயணங்களைத் தவிர்க்க வேண்டுமென்று காலையில் புறப்படும்போது நினைத்திருந்தாலும் அலுவலகத்தில் முக்கியமான மேலாளர்களுடன் நடந்த கூட்டம் விரும்பியமாதிரி குறித்த நேரத்திற்கே முடிந்திருக்கவில்லை. அலுவலக வேலைகள் முடியும் ஐந்து ம…

  21. நாங்கள் இந்த வீட்டுக்கு வந்து இருபது ஆண்டுகள் முடியப்போகிறன. காலம் தான் எத்தனை வேகமாக எல்லாவற்றையும் கடந்துபோக வைக்கிறது. ஆசைகள் தான் மனிதனை ஆட்டிப் படைக்கின்றது. எனினும் பல ஆசைகள் நிராசையாகியும் போயிருக்கின்றனதான். நல்ல ஆசைகள் முயற்சியின் காரணமாக நிறைவேறி மனதுக்கு நிம்மதியையும் மகிழ்ச்சியையும் கொடுப்பதோடு மட்டுமல்லாது திருப்தியுடன் வாழ்வை நகர்த்திச் செல்கின்றன. திருப்தி எப்போது இல்லாது பேராசை மேலோங்குகிறதோ அதன்பின் மனிதன் வாழ்வின் இன்பமான நாட்களைத் தொலைத்து இன்னும் இன்னும் என்று வசந்தங்களை எல்லாம் தொலைத்து ஒன்றுமில்லாதவனாகி விடுகிறான். நான் மகிழ்வாகவும் நிம்மதியாகவும் தானே இப்பொழுது இருக்கிறேன் என என்னை நானே கேட்டுக்கொள்கிறேன். சுற்றிவர கண்ணாடி அறையினுள் தொங்கும் …

  22. பக்கத்து வீட்டு அழகிய அரக்கி. புதிதாக குடிவந்த எனக்கு பக்கத்து வீட்டுக்காரர்களின் அறிமுகம் இல்லாத காலமது. பக்கத்து வீட்டை ஒரு காரில் சிலர் வந்திறங்கியது எனது கவனத்தை ஈர்க்கவில்லை. ஆனால் சில நிமிடங்களில் பக்கத்து வீட்டில் இருந்து வந்த "மியாவ்" என்னை நிலை குலைத்தது. அந்தக்குரல் அவ்வளவு இனிமை. அது பூனையில்லை, பூனையைக் கூப்பிடும் ஒரு பெண்ணின் குரல். குரலே இப்படியென்றால் அவள் எப்படி இருப்பாள்? மனமும் அலையத் தொடங்கியது. அவள் வீட்டில் இருக்கும் போது எப்போதும் கதைத்துக் கொண்டிருப்பாள். குரல் என்னைக் கொல்லும். எனக்கோ எப்படியாவது அவளைப் பார்த்து விட ஆசை. நடுவே மதில் எட்டிப் பார்த்தால் ஏதாவது ஏடாகூடமாகி விடுமோ என்ற பயம். அப்படியும் வீட்டுக்குள்ளிருந்து யன்னலில…

  23. பசியும் பார்வையும் திரும்பத் திரும்ப அவளைப் பார்க்கத் தோன்றியது. உருவம் இன்னும் திடகாத்திரமாக முகத்தில் ஆண்களுக்கே உரித்தான ஒரு வித தடிப்புடன் தாடைகள் அமைந்திருக்க என்னுடைய ஞாபகக்குழிக்குள் அவள் முகம் தெரிந்ததுபோலும் தெரியாதது போலும் தளம்பல்பட்டுக் கொண்டிருக்க நான் அந்த முகத்தை யாரென்று ஊகிக்க மிக ஆழமாக உற்று நோக்கினேன். அவள் அருகில் இன்னும் ஒரு பெண் நளினத்தோடு முறுவலித்தபடி வெட்கச்சாயம் பூசியிருந்தாள் . முறுவலிட்டபடி இருந்தவளை இரசிப்பதா இல்லை மற்றவளை இனம் காண்பதா என்ற இரண்டு நிலையில் நான் அந்த ஸ்காபுரொ மோல் பக்கம் விடுமுறை காலங்களில் பிள்ளைகளை அழைத்துச் செல்வது வழக்கம் இன்றும் அப்படித்தான் அவ்விடத்தில் நான் பிடித்தமான உணவுகளை வாங்க பிள்ளைகள்…

    • 4 replies
    • 2.2k views
  24. பச்சைப்பாவாடை கவி அருணாசலம் அப்போ எனக்கு பதினைந்து வயது. வல்லிபுரக்கோவில் கடல் தீர்த்தத்திற்குப் போயிருந்தேன். வழமைபோல் என்னுடன் தொற்றிக் கொள்ளும் கலையரசனும் மகேந்திரனும் வந்திருந்தார்கள்.நாங்கள் மூவரும் சேர்ந்து கொண்டால் சேட்டைகளுக்கு அளவேயில்லை. வல்லிபுர ஆழ்வார் ஊர்வலமாய்ப் போய் கடலில் தீர்த்தம் ஆடி கோயிலுக்குத் திரும்பி வந்துவிட்டார். கோயில் கிழக்கு வாசலில் அவருக்குப் பெரிய பூசை நடந்து கொண்டிருந்தது. எங்கள் கண்கள் கலர்கள் தேடி சுழன்று கொண்டிருந்தன. முட்டி மோதும் சனங்களுக்குள் பட்டுப் பாவாடைகள் சரசரக்க பெற்றோர்களுடன் ஒட்டி நின்ற பாவையர்களில் பச்சையில் ஒருத்தி பளபளத்தாள். எங்களுக்குள் சுரண்டிக் கொண்டோம். மூவரது பார்வையும் ஒருங்கிணைந்து தாக்கியதால…

  25. படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று -------------------------------------------------------------------- ஏப்ரல் 12ம் திகதி, வெள்ளிக்கிழமை மத்தியானம் இலங்கைக்கான விமான பயணம் ஆரம்பித்தது. வீட்டிலிருந்து லாஸ் ஏஞ்சலீஸ் விமான நிலையம் ஒரு இருபத்தைந்து மைல் தூரத்தில் இருக்கின்றது. வாகன நெரிசல் இல்லாவிட்டால், விமான நிலையம் போவதற்கு 20 நிமிடங்களே அதிகம். நெரிசல் இருந்தால், இதே தூரம் போக இரண்டு மணித்தியாலங்களும் எடுக்கும். உலகில் எல்லாப் பெருநகரங்களிலும் இன்று நிலைமை இதுதான். லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் பொதுப் போக்குவரத்து வசதிகள் மிகக் குறைவாக இருப்பது இந்த நிலையை இன்னும் கொஞ்சம் மோசமாக்குகிறது. லாஸ் ஏஞ்சலீஸ் விமான நிலையத்தில் இருந்து ஹாங்காங், பின்னர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.