Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதைக் களம்

கள உறுப்பினர்களின் சிறுகதை | மொழியாக்க கதை| தொடர்கதை | பயண அனுபவங்கள் | நாடகம்

பதிவாளர் கவனத்திற்கு!

கதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, பயண அனுபவங்கள், நாடகம் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுயமான சிறுகதைகள்,  மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், பயண அனுபங்கள், நாடகங்கள்  மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.

  1. ஆடி மாத பின்னிரவு ,அந்த நாள் ஏறித்த கோரவெய்யிலை சற்று தணித்து அதிகாலையை வரவேற்க பச்சை வயல்களை தழுவிய படி மெல்லிய இளங்காற்று தஞ்சாவூரை வருடுகின்றது . உரத்தநாட்டு கிராமம் - தஞ்சாவூர் புதுக்கோட்டை நெடுஞ்சாலையின் ஓரம் ஒரு கீற்றுக்கொட்டகையில் பெற்றோமக்ஸ் விளக்கு ஒளியின் உதவியுடன் சிற்பிகள் சிலர் உளியால் கருங்கற்களை செதுக்கிக்கொண்டு இருக்கின்றார்கள். பல்லவர் காலத்தில் இருந்து இன்று வரை இந்த உளிஓசை இங்கு கேட்டுக்குகொண்டுதான் இருக்கு . கொட்டகையை சுற்றி எங்கும் பெரிய பெரிய கருங்கற்கள் தீட்டபடாமல் நீண்டுகிடக்கின்றன. அங்கிருக்கும் ஒரு பெரிய கருகங்கல்லில் தலைக்கு கையை கொடுத்தபடி சாய்ந்திருகின்றான் சாரங்கன், அவனருகில் இருந்து இடது கைவிரலை ஆட்டிய படி எதையோ அழுத்திசொல்லும்…

    • 0 replies
    • 1k views
  2. தகிக்கும் தீயடி நீ (கொஞ்சம் பெரிய சிறுகதை) ----------------- அவளை நீங்கள் ஒரு புத்தகக் கண்காட்சிலோ அல்லது ஒரு ரயில் பயணத்திலோ கண்டிருந்தால் அந்த நிமிடமே "என்னைக் கல்யாணம் செய்வாயா" என்று கேட்டு இருந்து இருப்பீர்கள். அல்லது கோவில் ஒன்றின் கர்ப்பக் கிரகத்தில் கண்டிருந்தால் அன்றே மொட்டை அடித்து இடுப்பில் ஒரு துண்டு மட்டும் கட்டி அனுதினமும் ஆராதிக்கும் ஒரு பக்தனாகவே மாறியிருப்பீர்கள் அல்லது ஒரு சிறு சந்தியில் கடந்து போகும் இன்னொரு வாகனத்தில் அவளைக் கண்டு இருந்திருந்தாள் அவள் வீடு எங்கு என்று தேடியே பித்துப் பிடித்து அலைந்து இருப்பீர்கள். ஆனால் நான் அவளைக் கண்டது இப்படியான ஒரு சந்தர்ப்பத்தில் அல்ல. மிகவும் குறுகிய சந்தொன்றின் இடது பக்கம் இருந்த ஒரு சிறு அடு…

    • 27 replies
    • 2.6k views
  3. இப்பதிவை தொடரவேண்டி இருப்பதால் வரும் பதிவு வாலிபவயதுக் குறும்புக்கு சற்றும் பொருத்தமற்றுத் தோன்றுகிறது ஆகவே தொடரப்போகும் பதிவை "மஞ்சு என் உயிர் நீதானடி" என்ற தலைப்பில் பதியவுள்ளேன். சிரமத்திற்கு மன்னிக்கவும். "உன்னுடைய அப்பாவின் ஆட்கள்தானே நீதவான்! அவரிடமும் ஒரு நற்சான்றுப் பத்திரம் வாங்கினால் உன்னைத் தொழில்நுட்பக் கல்லூரியில் சேர்த்துவிடுவதற்கு உதவியாக இருக்கும்." மாமாவின் ஆலோசனை அவனை நீதவான் வீட்டுக்கு அனுப்பி வைத்தது. சொந்தம்தான் , ஆனாலும்! அவன் முன்விறாந்தை தாண்டி உள்ளேபோய்ப் பழகமுடியாத ஒரு தராதரப் பந்தம். அங்கிருந்த வாங்கில் போய் இருந்தான். சிறு மங்கை ஒருத்தி வந்து விசாரித்தாள். அவள் போனதும், அவர் வந்தார். வந்த விபரம் சொன்னான். ஓ அப்படியா! நீர் இன்னாருடைய மகனா! ச…

    • 8 replies
    • 1.5k views
  4. இரவு முழுவதும் அவள் தூங்கினாளா என்று அவளுக்கே தெரியவில்லை. ம் ..... கூட்டிக் கழித்துப் பார்த்தால் ஒரு மூன்று மணி நேரம் தூங் கியிருப்பாளா??? நீண்ட நாட்களின் பின் மனவருத்தம், மட்டற்ற மகிழ்ச்சி,எல்லையில்லா நின்மதி என மாறி மாறி அவளை அலைக்களித்தபடிதான் அந்த இரவு நகர்ந்தது. ஆனாலும் அவளின் மனம் இத்தனை சீக்கிரம் இவ்வளவு தெளிவடையும் என்று அவளே நினைத்துப் பார்க்கவில்லை. கடந்த காலங்களை எண்ணிப்பார்த்தபோது வரிசையாய் எல்லாம் வந்து போயின. என்னிடம் என்னதான் இல்லை என்று இவ்வளவு நாட்கள் இத்தனை கேவலப்பட்டேன் என்று எண்ணியபோது பெருமூச்சு ஒன்றும் நீண்டதாய் வந்தது. எல்லாம் விதியின் செயல்தான் அன்றி வேறென்ன என்று மனம் நின்மதி அடைந்தது. அவனுக்கும் அவளுக்குமான நெருக்கம், இல்லை நெருக்கம் என்ற…

  5. நாள் ஒன்று வரும் மாவீரர் தின நினைவாக எழுதப்பட்ட நாடகம். எழுத்து ஆக்கம்: இளங்கோ, பின்னணி இசை கோர்ப்பு : சசி வர்ணம் நடித்த மற்றும் குரல் வடிவம் தந்த அனைத்து கலைஞ்சருக்கும் நன்றிகள். (எல்லோருடைய பெயர்களும் என் கை வசம் இல்லை - அடுத்த பதிவில் இணைக்கின்றேன் மன்னிக்கவும்) கதைக் களம் ஆனது புலம் பெயர் நாடு, தாயகம் இரண்டையும் உள்ளடக்கி இருக்கும். புலம் பெயர் நாட்டில் ஆரம்பித்து தாயகம் நோக்கி நகரும். இறுதியில் புலம் பெயர் மக்களின் ஒற்றுமையை வலியுறுத்தி நிறைவுறும் தமிழரின் போராட்டம் குறித்த நம் இளையவர்களின் புரிந்துணர்வு, விட்டு செல்லப்பட்ட பொறுப்புகள் சம காலத்தில் தாய் மண்ணில் நடக்கின்ற அவலங்கள், முன்னால் போராளிகளின் நிலைமை, தமிழராய் நாம் அனைவரும் ஒற்றுமையாய் அணி திரள வ…

  6. கதையின் ஆரம்பப் பகுதியைப் பார்க்க, பின்வரும் இணைப்பில் அழுத்தவும்...!. http://www.yarl.com/forum3/index.php?showtopic=137109 பகுதி-2 பரந்து கிடந்த அந்தச் சிவப்புக் கல் மலைக்குவியலின், வாய்ப்பக்கத்தை நோக்கித் தனது காரைச் செலுத்திய ‘ மாயா', அங்கு தனியாக நின்றிருந்த ஒரு ‘யூகலிப்டஸ்' மரத்தின் அருகே நிறுத்தினாள்! அந்த மரமும், அவளைப்போலவே பல நினைவுகளைச் சுமந்து கொண்டிருப்பது போலவே அவளுக்குத் தெரிந்தது. ‘உலுறுவின்' மேலே சென்று, அதிலிருந்து சூரிய உதயத்தைப் பார்ப்பதற்காக, உல்லாசப்பயணிகள் சிலர் வரத் தொடங்கியிருந்தனர். ‘உலுறுவை' அவள் பார்க்கும் விதத்துக்கும், மற்றவர்கள் பார்க்கும் விதத்துக்கும் நிறைய வேறுபாடு இருப்பதாகத் தான் அவள் எண்ணினாள். எல்லாரும் ‘கயிலாயம்' போவ…

  7. ..... அன்று வெள்ளிக் கிழமை இரவு . குளிர் சூழ்ந்த பனிக்கால இரவு ...அனித்தா புரண்டு புரண்டு படுத்தாலும் ..நித்திரை வரவே இல்லை. இரவு மங்கிய வெளிச்சத்தில் ..கடிகாரம் மணி 1.05 காட்டியது ... நடு நிசி....எழுந்து பாத்ரூம் போய் விட்டு வந்து தண்ணீரைக் குடித்து விட்டு மீண்டும் தூங்க முயற்சிக்கிறாள் ..அருகே இரு குழந்தைகளும் ஆழ்ந்த் நித்திரை ..... முன்னைய நாட்கலேன்றால் அவரவர் அறையில் தனியே படுப்பார்கள். இரவில் ஏதும் அவசரமென்றால் கதவைத்தட்டி அனுமதிபெற்று ...உள் வரவேண்டும் எ ன்பது பாஸ்கரனின் கண்டிப் பான கட்டளை. இந்நாட்டு வழக்கப்படி ஆணுக்கு ஒன்றும் பெண்ணுக்கு ஒன்றுமாக மூன்று அறை கொண்ட வீட் டில் தான் ஒரு குடும்பத்தை அனுமதிப்பார்கள். சில வாரங்களா…

  8. இன்று எனக்கு நன்கு அறிமுமான ஒரு நண்பரை சந்திப்பதாய் ஒப்பந்தம் இருந்ததை கைத்தொலைபேசி சிணுங்கியபடியே அறிவித்தது. மனதில் அதைக் குறித்துக்கொண்டேன். அவருக்கு பின் மதியவேளை அவரை சந்திப்பதாகவும், நாம் ஒஸ்லோவின் மேற்குப் பகுதியில் உள்ள புறநகர் ஒன்றில் உள்ள ஒரு கோப்பிக் கடையில் சந்திப்போம் என்றும் குறும்செய்தி அனுப்பினேன். ”சரி” என்று பதில் குறுஞ்செய்தி வந்தது. கோப்பிக்கடைக்கு வெளியே நண்பர் உட்கார்ந்திருந்தார். அவரருகே உட்கார்ந்துகொண்டேன். பரிமாறும் அற்புத அழகியொருத்தி என்ன வேண்டும் என்றாள். ஒரு தேத்தண்ணி என்றேன். என்ன தேத்தண்ணி என்றுவிட்டு மாம்பழம், தோடம்பழம், இன்னும் பல பெயா்களைக் கூறி இதில் எது வேண்டும் என்றபடியே புருவத்தை உயர்த்தினாள், மாம்பழம் எனக்குப் பிடிக்கும் என்பதால் ம…

  9. இன்னும் இரண்டு மாதங்கள் தான். சுசீலாவுக்கு எல்லையில்லா அவஸ்தை, மகிழ்வு, பயம் என ஒன்றுசேர்ந்த கலவையான உணர்வு ஏற்பட்டது. எந்த நேரத்திலும் அவள் தயாராகவே இருக்கிறாள். எத்தனை நாட்களாகிவிட்டன ஓடியாடித் திரிந்து. கிட்டத்தட்டச் சிறை வாழ்க்கை போலத்தான். என்ன விரும்பிய உணவு, கணவனின் ஆதரவான விசாரணை, பெற்றோரின் தொடர் தொலைபேசி விசாரிப்புக்கள் என்று எத்தனை தான் இருந்தாலும் கணவன் அருகே இல்லையே என்னும் குறையும் பெரிதாகத்தான் தெரிந்தது. இன்னும் ஒரு மாதத்தில் வந்துவிடுவேன் என்று சுதாகரன் கூறினாலும் அவன் தன்னிடம் வந்து சேரும் வரை சுசீலாவுக்கு நின்மதி இருக்கப் போவதில்லை. யார் என்ன ஆறுதல் கூறினாலும் கணவன் அருகிருப்பதே பெரிய பலம். நோய் வாய்ப்பட்டிருக்கும் தந்தையை விட்டுவிட்டு வரமுடியாததால் த…

  10. Started by Innumoruvan,

    'ரி-56 ஆல் 'ரச்' அடிச்சுப் பாத்தபோது, ற்றிகரை விரல் அமுக்கியதற்கும், குண்டு வெளிக்கிட்டு இலக்கை அடைந்ததற்குமிடையேயான நேரம் எத்தனை சிறியது என்பது என் மூளை கிரகிக்க முடியாத சிறியதாய் இருந்தது.... படங்களிலும் கதைகளிலும் துப்பாக்கி சுடுதலைப் பார்த்ததற்கும் சுட்டபோது உணரப்பட்டதற்குமிடையேயான வித்தியாசம் வர்ணனைக்கு அப்பாற்பட்டது. சுடுதலின் ஒலி எத்தனை பெரியது! அது செவிப்பறையில் எத்தனை கடினமாய் உதைத்தது என்பதும், துப்பாக்கியின் எனது தோளின் மீதான உதைப்பின் பரிமாணமும் நான் நினைத்திருந்ததைக் காட்டிலும் எத்தனையோ மடங்கு பெரிதாய் இருந்தது. சண்டைகளைத் திரைப்படத்தில் பார்ப்பதற்கும் ஒரு குண்டு சுடுவதில் உள்ள உடல் வருத்தத்திற்குமிடையேயான வேறுபாடு அப்போது தான் என்னால் உணரப்பட்டது. அந்த சுடுக…

  11. கணிதப்பாடத்தில் ஒரு சந்தேகம் தீர்க்கக் கேட்டுவந்தாள் சங்கீதா, யாரையுமே ஏறிட்டுப் பார்க்காத அழகுத் திமிரோடு, அவள் அறிவுத் திமிரும் சுடர்விட்டுப் பிரகாசித்தது. ஆனாலும் கணிதத்தில் வேங்கைப் புலியான சங்கரனிடம் சந்தேகம் கேட்கும்போது மட்டும், கிளிபோலக் கொஞ்சுவாள். சங்கரனுக்கும் தான் அழகன் என்ற திமிர் உண்டு. எந்தப் பெண்ணையும் ஏறெடுத்துப் பார்காத திமிர். ஆனாலும்! சங்கீதாவிடம் மட்டும் அந்தத் திமிர் மோதமுடியாது வழிந்து நிற்கும். அதற்குக் காரணம் என்னவோ..? இருவருக்கும் ஒன்றாக அமைந்த அந்தக் குணாதிசயம்தான் காரணமோ..? ஆமாம்! எதிலும் அவசரமின்றி ஆறுதலாகக் கணக்கிட்டுக், காலையில் நித்திரையால் எழும் நேரம், படிக்கும் நேரம், குளிக்கும் நேரம். உணவு உட்கொள்ளும் நேரம். இன்ன உடைதான் இன்று என்று நேற்…

  12. பத்தாவது தேறியதும். தொடரந்து படிப்பைத் தொடர்வதற்கு என் குடும்பப் பொருளாதாரம் இடம்தர மறுத்தது. விவசாயத் துறையில் பயின்று அதில் முன்னேற முயன்ற எனக்கு ஒரு கூட்டுத்தாபன ஆலையில் இயந்திரங்களை இயக்கும் வேலை. மாமாவின் சிபாரிசு மூலம் கிட்டியது. என் மகனும் உத்தியோகம் பார்க்கிறான்...! என்ற மகிழ்ச்சியும், பெருமையும் அம்மாவின் முகத்தில் பிரகாசித்தது. இவன் சாதகத்துக்கு தண்ணீர் வாய்காலைத் தாண்டும் யோகமும் இல்லை. ஆனையிறவையும் தாண்டமாட்டான்...! என்று அம்மாவுக்கு யோசியன் சொல்லிய அடுத்த மாதமே, ஆனையிறவோடு மகாவலி கங்கையையும் தாண்டி மட்டுநகர் சென்றுவிட்டேன். சமுத்திரமும் தாண்டிப் புலத்திற்கு வந்ததும், குழந்தைப் பாக்கியமே இல்லை என்ற யோசியத்தையும் மீறி மூன்றுக்கு மேல் வேண்டவே வேண்டாம் என்று கட்ட…

  13. பாகம். 4 பதிவின் தொடர்... எதிர்பாராத கெளசல்யாவின் சந்திப்பு கல்லூரி வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கவைத்தது. அழகிய மாணவிகளில் ஒரு தாமரைப்பூ போன்று அதன் செந்நிற அழகும் கொண்டவள் கெளசல்யா. பளிங்குபோன்று பளபளப்பாக மின்னும் சருமம். வளைந்து நெளிந்த வாளிப்பான கட்டுடல். நாணம் கொண்ட அச்சத்துடன் நிலம் பார்க்கும் கண்கள், புன்னகையால் விருந்து தர முயல்வது போன்ற இதழ்கள். பூரணமான பெண்மைக்குரிய அவளைப் பார்த்துக்கொண்டிருந்தாலே போதும் என்று நண்பர்கள் கூறுவது பொய்யல்ல. அவளை யாராவது மாணவன் சீண்டினால், மற்றப் பெண்களைப்போல் சீறிச் சினந்து ஆசிரியரிடம் போட்டுக் கொடுப்பது, அல்லது சீண்டுபவர் காலத்துக்கும் நினைத்து நினைத்து அவமானப்படும்படி முறைத்து, ஒரு வெறுப்பான பார்வையை வீசுவது என்று இல்லாது, என…

  14. பகுதி - 1 அன்றைய காலைப் பொழுதின் விடியலிலேயே , பாலைவனமொன்றின் சகல குணாதிசயங்களும் கலந்திருந்தன. கண்களைத் திறந்து பார்க்கக் கூட இயலாத அளவுக்கு, அதன் பிரகாசம் இருந்தது. நீண்ட ஒரு கருநிற மலைப்பாம்பொன்றின் வளைவுகளுடன், அந்த நெடுஞ்சாலை நீண்டு கிடந்தது. முதல் நாள் இரவின் ‘கடுங்குளிர்', மெல்லிய நீர்ப்படலமொன்றை, அந்த வீதியின் மீது தடவியிருந்தது. வரப்போகும் ‘வெயிலின்' கடுமையுணர்ந்த கங்காருக்கள், வீதியின் இரு பக்கங்களிலும் பரந்திருந்த, மஞ்சள் நிறமான கோரைப்புற்களின் மறைவுகளிலிருந்து, வீதியில் படிந்திருந்த நீரைத் தங்கள் நாக்குகளினால், மெல்ல மெல்ல நக்கி எடுப்பதற்காக வந்து கொண்டிருந்தன. அந்தச் சந்தர்ப்பத்தை விட்டால், அன்றைய பொழுது தாகத்துடனேயே கழிந்து விடக்கூடும். முந்திய இரவுகளில்…

  15. முக நூலில் கந்தையா முருகதாசன் என்னும் பத்திரிகையாளர் ஒரு விண்ணப்பம் வைத்தார். எழுத்தாளர்களை எல்லாம் இணைத்து ஒவ்வொரு வாரம் ஒருவர் கதை எழுதுவது என்று. அதாவது ஒருவர் ஒரு கதையைத் தொடங்க அடுத்த வாரம் இன்னொருவர் தொடர்வார். நான் யாழில் தொடங்கினால் என்ன என்று யோசித்துக்கொண்டிருக்கும் போதே வேறொரு ஊரின் இணையத் தளத்தில் அதை ஆரம்பிப்பதாக இரு நாட்களில் அறிவித்துவிட்டார். நாம் இங்கே நிறையப்பேர் கதை எழுதுபவர்கள் இருக்கிறோம். நாம் ஒரு தொடரை இங்கே ஆரம்பிக்கலாம் என்ற எண்ணம் எழுந்தது. உறவுகளே! உங்கள் கருத்துக்களும் ஆதரவும் எதிர்பார்க்கப் படுகிறது.

  16. எண்ணைவளம் மிக்க சவூதி அரேபியா, அரசராலும் அவரது சொந்த பந்தங்களாலும் ஆளப்படும் ஒரு முடியரசு நாடு. அரச அமைச்சர்களும், முக்கிய அதிகாரிகளும் அரச குடும்பத்தினை சேர்ந்தவர்கள். பல பெண்களை மணக்கும் அரச குடும்ப ஆண்மக்களால் உருவாகப் பட்ட கணக்கு இல்லா வாரிசுகளினால், பெரும்பாலும் அமைச்சர்கள் எல்லோரும் இளவரசர்கள் தான். சவூதியின் மொத்த செல்வமும் இந்த அரச குடும்ப, மற்றும் இளவரசர்கள் வசம் தான் சிக்கி உள்ளது. இலங்கை, இந்தியா, பங்களாதேஷ் போல தாய்லாந்திலிருந்தும் மக்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைக்கு செல்வது வழக்கம். இவ்வாறாக இளவரசர் ஒருவரின் வீட்டுக்கு 23 -24 வருடங்களின் முன்னர் சுத்தம் செய்யும் பணியாளர் ஆக வந்து சேர்ந்தார் ஒரு தாய்லாந்து கிராமவாசி. அவரைப் போல் கிட்…

    • 64 replies
    • 14.4k views
  17. ஒரு முக்கிய அலுவல் காரணமாக இரண்டு நாட்கள் பிரான்சுக்குப் போக வேண்டி இருந்தது. மற்றும்நேரம் வேறு ஆட்களுடன் சேர்ந்தோ அல்லது எமது வாகனத்திலோ ரணல் வழியாக பலதடவை போயிருக்கிறேன். ஆனால் அதிவேகத் தொடருந்தில் செல்வது இதுதான் முதற்தடவை. இம்முறை கோமகனையும் சுசீலாவையும் சந்தித்துவிட்டு வருவோமா என்று ஒரு எண்ணம் எழுந்தாலும், இரண்டு நாட்கள் நின்மதியாக இருப்பதை விட்டு கோவிடம் போய் நெருப்புப் பிடிச்ச கதையையும் எப்பிடி எத்தனை மணித்தியாலம் பல்கனியில் நின்றோம் என்பதையும், எத்தனை வாகனங்கள் எத்தனை மணிநேரம் அங்கு நின்றன, யார் யார் போன் செய்தார்கள் என்னும் விபரங்களைக் கேட்க மனம் வராததால் அங்கு போவதில்லை என்று முடிவெடுத்தேன். பயண நேரம் இரு மணித்தியாலங்களும் பதினைந்து நிமிடங்களும். டிக்கெட…

  18. தேவகிக்குத் தன்னை நினைக்கவே ஒருபுறம் சிரிப்பாகவும் மறுபுறம் பச்சாதாபத்துடன் கூடிய அழுகையும் வந்தது. வாற மாதம் வந்தால் இவ்வுலகில் எண்பது ஆண்டுகளைக் கழித்துவிட்ட நிறைவு. இன்னும் எத்தனை நாட்களோ மாதங்களோ வருடங்களோ யாரறிவார் என்னும் எண்ணம் தோன்றினாலும் நான் இன்னும் கொஞ்சக் காலம் இருப்பன். அவ்வளவு லேசில போயிடமாட்டன் என்னும் ஒரு நம்பிக்கையும் ஏற்பட்டு ஏனோதெரியவில்லை அதனூடே சிரிப்பும் வந்தது. சிறிய வயதில் எல்லாம் தன் நாட்களை நினைத்துப் பார்த்தால் துன்பங்களும், நிறைவேறாத ஆசைகளும், போராட்டங்களுமாக வாழ்வின் இளமைக்காலம் கழிந்தது. பின்னர் வந்த காலங்களில் தன் முயற்சியில் மனம் சோராது போராடியிராவிடில் இன்று இப்படி ஒரு நிலையினை அடையக்கூடியதாக இருந்திருக்குமா என்று மனம் பெருமையும் கொண்ட…

  19. எங்கள் ஊரை ஊடறுத்து காங்கேசன் துறை வீதி செல்கிறது. அப்பாதையில் தெல்லிப்பளையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி 769 ம் இலக்கப் பேருந்தும் , காங்கேசன்துறையிலிருந்து யாழ் செல்லும் 768 ம் இலக்கப் பேருந்தும் செல்கிறது. அந்த பேருந்துக்கள் யாழ்ப்பாணம் தாண்டியும் செல்கிறதா அல்லது யாழ்ப்பாணத்துடன் நின்றுவிடுகிறதா என்பது பற்றி எனக்கு இதுவரை தெரியவில்லை. இக்காலத்தில எப்படியோ தெரியவில்லை. நான் படித்த காலத்தில் பள்ளிக்குச் செல்வதற்கு ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித் தனிப் பேருந்துகள் உண்டு. எங்களுக்கு அது பெருங் கவலைதான் என்றாலும், பெண்களுக்கும் ஆண்களுக்கும் ஒரே பேருந்தை விடும்படி யாரையும் கேட்கும் நிலையிலா நாம் இருந்தோம். அத்தோடு அதில் ஆபத்தும் இருக்கும் என்பதையும் மறுக்க முடியாது தான…

  20. "திங்கட்கிழமை லீவு எடுத்திட்டியே" என்று அருகிலிருந்து ஒரு குரல். வேறு யார். எல்லாம் திருமாறனின் நண்பன் தான். அண்ணன் கவுண்டமணி சொன்னது போல் "இனி நீ வயசுக்கு வந்தா என்ன வராட்டி என்ன" என்ற வசனம் தான் அவனுக்கு நினைவிற்கு வந்தது. இவ்வளவு நடந்த பிறகு இனி எங்களால் என்ன செய்ய முடியும். பேசாமல் வேலைக்கு போகலாம் என்றான். "டேய் லூசுத்தனமா கதைக்காம லீவு எடுத்துக்கொண்டு வா" அவனும் விடுவதாய் இல்லை. சரி எதையும் செய்யாமல் இருப்பதைவிட இதையாவது செய்வோம் என்று சம்மதம் தெரிவித்தான். 10மணிக்கு பேரூந்து புறப்படும் என்று அறிவிப்பார்கள். இருவரும் சரியாக அங்கு சென்று காத்திருப்பார்கள். அதன் பின்னரே ஏற்பாட்டாளர்கள் வந்து சேர்வார்கள். நானும் வருகின்றேன் என்று சொன்னவர்களில் பலரை அங்கு காணக்கிடைக…

  21. கண்ணை இருட்டிக்கொண்டு வந்தது. வானத்திலே வெடித்து ஒளியை பாச்சிய பரா வெளிச்ச குண்டுகள் மங்கலாக தெரிய தொடங்கியது. சிங்கள குரல்கள் கிட்டவாக கேட்கிறது. இன்னும் ஒரு நிமிடத்துக்காவது எனது உடலில் பலத்தை கொடு என்று நான் என்றைக்குமே கும்பிடாத இறைவனிடம் கேட்கிறேன். அதிகாலை இரண்டுமணிக்கு அண்ணளவாக தொடங்கிய சண்டை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. தமிழரின் விடிவுக்கான வாழ்வா சாவா நந்திக்கடலின் சேற்றுப் பகுதியில் ஈச்சமுட்களுக்கு நடுவிலே தீர்மானிக்கபட போகிறது என்று யாருமே கணித்திருக்க முடியாது. தலைவனை பாதுகாப்பாக வெளியேற்றினால் மட்டுமே இனி தமிழரின் எதிர்காலம் என்ற தலையாய இலக்கு. ஒரு படகில் கட்டப்பட்ட மிதவைகளுடன் அந்த நந்திகடலை தாண்டும்போதே எதிரிக்கு திகைப்பு ஏற்பட எந்த சந்…

  22. தமிழ்க்கிழவன் புறுபுறுப்பு-4 ----------------------------------- சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி கொழும்பில நடக்காமல் போன பிரச்சினை பெரிய பிரச்சினையா கிடக்கு.யானைப்போருக்குள்ள பூனைப்போராக்கிடக்கு உந்தப்பிரச்சினை. இந்த மாதம் ஜெனிவா மாநாட்டில இலங்கைக்கு எதிரான "போர்க்குற்ற பிரேரணை" வாற நேரம் உது தேவையோ எண்டது நியாயமான கேள்விதான். ஏனெண்டா தமிழனுக்கு ஏதோ கொஞ்ச நஞ்ச நீதி கிடைக்கும் நேரத்தில ... அங்க சனமெல்லாம் வலு சந்தோசமா சோக்கா இருக்குது எண்டு காட்ட உப்பிடியான களியாட்ட நிகழ்வுகள் உதவும் எண்டுகினம் கனபேர். இன்னோரு பக்கத்தால "வெளிநாட்டில உள்ளவை மட்டும் கூத்தடிச்சு கும்மாளம் அடிக்கலாம்,இங்க நாங்கள் கொஞ்ச சந்தோசமா இருக்குறது உங்களுக்கு பிடிக்க இல்லையோ" எண்டுகினம் ஒரு சிலர். இத…

  23. மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் 100 இக்கும் அதிகமான மனித எலும்புக்கூடுகள் கொண்ட பாரிய மனிதப்புதைகுழி!!!!! தோண்ட தோண்ட எலும்புக்கூடுகள்....(செய்தி) 1.கொலைசெய்து புதைத்தவனே அதை மீண்டும் தோண்டி எடுத்துக்காட்டும் வினோதம்... 2.மண்டை ஓடுகளில் "தமிழன்" என்று எழுதப்படவில்லை... 3.ஐ.நா என்ற ஒரு மனித உ(எ)ரிமை அமைப்புக்கு கண் தெரியாமல் போய் 5 வருடம்!!!! 4.இதில் யாரும் படுகொலை செய்யப்படவில்லை எனவும் அவர்களே தாங்களாக கிடங்கு கிண்டி தங்களை தாங்களாகவே புதைத்திருக்கலாம் என ஐ.நா நிபுணர் குழு(?) கண்டுபிடிப்பு. புதைகுழிக்குள் புதைக்கப்பட்டார்களா? இல்லை அவர்களாகவே புதைந்துபோனார்களா என்பது புரியாத புதிராக ஐ.நா மனித உ(எ)ருமை அமைப்புக்கு இருப்பதாக அதன் முக்கிய பேச்சாளர் தெரிவிப்பு. 5.இலங்க…

  24. அருணாண்ணை வீரச்சாவு அதை நம்பவா…..? இணையத்தில் மேய்ந்து ஊரிலுள்ள உறவுகளின் இருப்பை உறுதிப்படுத்துகிறேன். காணும் தளமெங்கும் காயங்கள் சாவுகள் என இணைவலையெங்கும் துயர்முட்டி வழிகிறது....காக்கவும் ஆழின்றி கையொடுக்கவும் நாதியின்றித் தினம் வன்னிப்பெரு நிலப்பரப்பெங்கும் நிறைந்த சாவும் கண்ணீருமாக யாருக்கும் யாருடனும் பேசவோ உறவாடவோ முடியாத பொழுதுகளால் பின்னப்பட்டிருந்தது நாட்கள். பயங்கரமான கனவுகளும் பாதைதெரியாத நினைவுகளுமாக அந்த நாட்கள் ஒவ்வொரு தமிழனின் ஆன்மாவும் அவலப்பட்டபடி அழுதபடி…..அப்படியான ஒருநாள் மதியம்….. வணக்கம்.... தொலைபேசியழைப்பில் வந்த குரலொன்று. யாரெண்டு தெரியுதா? இல்லை... என்ற எனக்குத் தன்னை ஞாபகப்படுத்திய குரல். 3வருடங்கள் மேலாக தொடர்பற்றிருந்த தோழன…

  25. இந்து வாலிபர் சங்கத்தின் வாசிகசாலை மண்டபம், பல சமூகநலன்தரும் நிகழ்ச்சிகளை நடாத்தி சமூகவிழிப்பை ஏற்படுத்துவதுண்டு. நாடகத்துறையில் புகழ்பெற்ற எங்கள் விதானையாரும், எங்களையும் அத்துறையில் ஈடுபடுத்தி நடிகர்களாக்கி மேடை ஏற்றுவதும் உண்டு. நடிகர்களான எங்களைக் கண்டதும் தலைகுனிந்து செல்லும் எங்கள் ஊர் மங்கையரும், தலை நிமிர்ந்து, முகமலரைக் காட்டுவார்கள். அது நக்கலோ.! நளினமோ.! அறியாமலே நாங்கள் சிவாஜி, எம். ஜீ. ஆர், றேஞ்சுக்குப் போய்விடுவோம். நல்லூர்க்கந்தன் திருவிழாவையொட்டி, நாங்கள் பங்குபற்றி நடித்த, விதானையாரின் நாடகமொன்று ஊர்மக்களிடம் பெரும் பாராட்டைப் பெற்றது. அந்த வெற்றிப் பூரிப்பில் திகழ்ந்த விதானையாரும் நாடகம் நடந்த மறுநாள் மாலை எங்களைக் கண்டதும், "வாங்கோடா தம்பியள்.! எல்லோரு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.