Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதைக் களம்

கள உறுப்பினர்களின் சிறுகதை | மொழியாக்க கதை| தொடர்கதை | பயண அனுபவங்கள் | நாடகம்

பதிவாளர் கவனத்திற்கு!

கதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, பயண அனுபவங்கள், நாடகம் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுயமான சிறுகதைகள்,  மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், பயண அனுபங்கள், நாடகங்கள்  மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.

  1. எனக்கு இப்பவும் ஞாபகம் இருக்கு நான் முதன் முதலாக அதை பார்த்தது. நந்தாவில் அம்மன் கோயிலுக்கு பின்பக்கமாக அமைச்சிருந்த சொர்ணம் அண்ணை ஆட்களிண்ட தொடர் முகாம்களுக்கு குண்டு வீச எண்டு வந்த சியாமளா செட்டி சீ ..... சியாமா செட்டி எண்டு சொல்லுற, இரண்டாம் உலகமாக யுத்தத்திலே கழிச்சுவிட்ட பொம்மர் பதிஞ்சு குண்டை போட்டுவிட்டு எழும்பும் போது தான் அதை கொண்டு வந்து அடிச்சாங்கள். ஒரு பிக்கப் வாகனத்திலே பின்னுக்கு பூட்டிவைச்சிருந்தாங்கள். அதை அடிச்சு பொம்மருக்கு படுகுதோ இல்லையோ அந்த காலத்திலேயே எப்படியும் படும் என்று நம்பிக்கை என்னை போன்ற "சின்ன பெடியங்களுக்கு" இருந்தது. டட் ..டட் டட் ...டும் டும் டும் .... சத்தம் அப்போ எங்களுக்கு நாடு கிடைச்சிடும்போல இருக்கும். எங்களுக்கு மட்ட…

  2. Started by arjun,

    'Hello " "Is Kulan there pls" "Speaking" "குலன் நான் இங்க பிரேம்" ... "பிரேம்" ? "பெல்ஜியம் பிரேம் ". "சொல்லும் பிரேம் எப்படி இருக்கின்றீர் ? இப்பவும் பிரசல்ஸ் தானே " ? "பிரேசெல்சில் இருந்து கொஞ்சம் தள்ளி ஒரு கிராமத்திற்கு இடம் மாறிவிட்டேன் ,இப்ப கனடாவில் தான் நிற்கின்றேன் .சின்ன உதவி ஒன்று தேவை .யாரிடம் கேட்கலாம் என்ற போது உம்மிட நினைவுதான் வந்தது அது தான் போன் அடித்தேன்". 'எப்படி தொலைபேசி இலக்கம் கிடைத்தது ,என்ன விஷயம் சொல்லும் ?" "சும்மா கூகிளில் உமது பெயரை போடவே தொலை பேசி இலக்கம் வந்துவிட்டது .நான் டொராண்டோ ஹில்டனில் நிற்கின்றேன் .நேரில் வந்து சந்தித்து கதைத்தால் நன்றாக இருக்கும் ". "ஏதும் பெரிய பிரச்சனையோ ?" "அப்படி பெரிதாய் ஒன்றுமில்லை , எனத…

    • 35 replies
    • 3.5k views
  3. பெறுபேறு /பெரும்பேறு. ஈன்றபொழுதிலும்....பின்னர் அவர்களே இன்பமென்று இருந்த பொழுதுகளிலும்... என்னை தாங்கும் வேரென நிறைந்த பொழுதிலும்..பெரிதாய் இருக்கிறது இன்று. அமுதாய் இனிக்கிறது. என் பிள்ளைகளின் எதிர்காலம் எனக்கு ஒரு கனவு..அக்கறை..கடமை என்பதும் என்னை பழியுரைத்தோர்..எனது வீழ்ச்சி விரும்புவோர் முன்னே ஒரு சவால். வைராக்கியம். என்னை இந்த உலகிற்கு கொண்டுவந்த அம்மாவும்..என் பிள்ளைகள் உலகிற்கு வர காரணமானவனும் கூட ' எங்க உன்ர பிள்ளைகள் படிக்கிற கெட்டிதனத்தை பார்ப்பம்...என்றதுவும். தனியே நீ என்ன சாதிப்பாய். ...அடங்கி போ..என்று மிரட்டியவர்களிற்கும் முன்னே செயல் மூலமான பதிலாக ...எனது இத்தனை நாள் தவத்திற்கு வரம் கிடைத்தது. இன்றைய எனது நாட்குறி…

    • 19 replies
    • 3.5k views
  4. சியாமளாவுக்கு இப்பொழுதெல்லாம் இதயம் அடிக்கடி வேகாமாக்த் துடிக்கிறது. எத்தனைதான் மனத்தைக் கட்டுப்படுத்த முயன்றாலும் முடியவே இல்லை. கண்களை கண்ணீர் மறைக்க, தன்னிலையை எண்ணித் தானே கழிவிரக்கம் கொண்டாள். என்னால் இந்த வேதனையைத் தாங்க முடியவில்லையே. யாரிடம் போய் இதைச் சொல்வது. யார் என்றாலும் எனக்குக் காறித் துப்புவார்களே. ஏன் நான் இப்படி ஆனேன் என எண்ணியே மனது குமைந்ததில் தலைவலி இன்னும் அதிகமாகியதே அன்றிக் குறையவில்லை. எல்லோரும் போல் என் வாழ்வும் நன்றாகத்தானே போய்க்கொண்டிருந்தது. யார் கண் பட்டதனால் இப்படி ஆனதோ என எண்ணியவளின் மனம், தன் கணவனையும் இரண்டு பிள்ளைகளையும் எண்ணிப் பார்த்தது. கணவன் தனக்கு என்ன குறை வைத்தார்?. என் விருப்பம் எல்லாம் நிறைவேறியதே அன்றி ஒருநாளாகிலும் நிறைவேற…

  5. வேலையால் வந்து தபால் பெட்டியைத் திறந்து பார்த்தவனுக்கு, இன்னும் இரண்டு நாட்களில் அவனது பிறந்த நாள் வருகின்றது என்பது நினைவுக்கு வந்தது.. நீலத்திலும், சிவப்பிலும், கடித உறையில் போடப்பட்டிருந்த வரிக்கோடுகள் அது ஒரு வெளிநாட்டுக் கடிதம் என்பதைத் தெளிவாகக் காட்டின. வீட்டில் உள்ளவர்களுக்கும், சொந்தங்களுக்கும், அவனது பிறந்தநாள், தனது முக்கியத்துவத்தை இழந்துவிட்ட நிலையில், உலகத்தின் எங்கோ ஒரு மூலையிலிருந்து ஒரு ஜீவன் மட்டும் இன்றும் அவனது பிறந்த நாளை நினைவில் வைத்திருப்பது, அவனை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. சற்றே மகிழ்ச்சியுடன் கடிதத்தைக் கவனமாகத் திறந்தவன், அதனுள் இருந்த வாழ்த்து மடலை எடுத்துப் பிரிக்கையில், அதன் மீது தனது விரல்களை, மெதுவாக நகர்த்தினான். அப்போது, அவனது கையில் படி…

  6. எங்க ஊர் முதலாளி ஒரு காலத்தில் நகரத்தையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த ஆளுமை மிகுந்தவர் முதலாளி. எங்கள் துறைமுகப் பகுதியில் கடலின் ஆழம் போதாது, வணிகக் கப்பல்கள் அங்கு வர முடியாது என்ற நிலை இருந்த போது, துறைமுகத்துக்கு ஒரு மைல் தள்ளி வணிகக் கப்பல்களை நிறுத்திவிட்டு, படகுகளில் போய் பொருட்களை ஏற்றி, கரைக்கு கொண்டுவரலாம் என்று செய்து காட்டி பலருக்கு நகரத்தில் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்த பெருமை முதலாளியினுடையது. முதலாளிக்கு வணிகத் திறமை மட்டுமல்ல பெண்களை வசியப் படுத்தும் கலையும் நன்றாக வரும். முதலாளியுடன் நெருக்கமாகப் பழகும் அவரது நண்பர்களுக்கு, குழந்தை பிறக்கும் போது, தங்களது குழந்தை முதலாளியைப் போல இருந்து விடுமோ என்ற அச்சம் ஒட்டிக்…

    • 10 replies
    • 3.4k views
  7. Started by pri,

    வாழ்க்கை கனவுகள் நிறைந்தது. சிலசமயம் அது மெய்யாகிறது முன்னொரு காலத்தில் நடந்தது. கட்டிட திணைகளத்தில் வேலை கிடைத்த செய்தியோடு கடிதம் ஒன்று வீடு தேடி வந்தது. முதன்மை பொறியியளாரரை(chief engineer - ce) கண்டி அலுவலகத்தில் பார்த்தேன் . படிப்புக்கும் வேலைக்கும் பெரிய இடைவெளி இருப்பதை சொன்னார். வில்கமுவவில் புதிதாக முளைக்கிற கட்டிடத்துக்கு தள பொறியாளர்(site engineer)வேலை. பயணத்துக்கு அரசாங்க வாகனம் தரமுடியாது என்றார். தங்கியிருந்து வேலை செய்தாக வேண்டும். தங்குமிடம் தரமுடியாது என்றார். முதல் வேலையில் எல்லாவற்றுக்கும் தலையாட்ட வேண்டும் என்கிற எழுதப்படாத விதி தெரியும். அப்படியே செய்தேன். நியமன கடிதம் …

    • 11 replies
    • 3.4k views
  8. வேலை முடிந்து வழமையாக வீடு செல்லும் பாதையால் பராக்கு பாாத்த படி சென்று கொன்டிருந்த வாசனை வணக்கம் என்ற ஒரு பெண் குரல் இடை மறித்தது.நிமிர்ந்து பார்த்தவன் தானும் ஒரு வணக்கத்தை உதிர்த்து விட்டு நடையை தொடர்ந்தவனை உங்களோடை கொஞ்சம் கதைக்க வேணும் என்ற வாாத்தை தடுத்தது. நின்றவன் ஒரு கணம் தாறுமாறாய் குழம்பி தெளிந்தான் .அது வேறுயாரும் இல்லை அவனது நன்பன் கரனின் மனைவி தான்.குழப்பத்துக்கு காரணம் வழமையாக வணக்கத்துடன் போறவா இன்று கதைக்க வேணும் என்று சொன்னது தான்.தான் அவாகளிடம் கடணாக வாங்கிய பணம் ஞாபகம் வர தெளிந்தான். ஓம் சொல்லுங்கோ அக்கா என்றவன் தவனைசொல்வதற்க்குஅவசரமாக வசதியான திகதியை தேடிக்கொன்டிருந்தான்.வாசன் நீங்கள் அந்தக்காசை கரனிடம் கொடுக்க வேண்டாம் என்னிடம் தாங்கோ அதைய…

  9. கி பி அரவிந்தனின் நினைவாக நடைபெற்ற சிறுகதைப்போட்டியில் ஆறுதல் பரிசு பெற்ற எனது கதை வாழ்வு வதையாகி காற்றுடன் மழையும் சுழன்றாடுவதை அந்த அறையின் சாளரத்தினூடு பார்த்தபடி அமர்ந்திருந்தாள் சாந்தினி. சாதாரண ஆடை தான் அணிந்திருக்கிறாள். ஊசிக் காற்றில் சாளரக் கண்ணாடிகளையும் ஊடுருவிக் காற்று சிறிதாக உள்ளே வந்தபடி தான் இருக்கிறது. ஆனாலும் சமரில் வெப்பமாக இருப்பதுபோல் அறை கதகதப்பாக இருப்பதனால் குளிரவே இல்லை. கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகள் இந்த நாட்டில் வாழ்ந்து முடித்து விருட்சமாய் பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் என........ கையில் வைத்திருக்கும் காகிதங்களைக் குனிந்து பார்த்தாள். காகிதங்கள் காற்றுப் பட்டு ஆடுகின்றனவா ?அல்லது த…

  10. **நாம் வாழ்க்கையில் உயர்வதை கண்டு மகிழ்ச்சியடையும் நண்பர்கள் கிடைப்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும்** அது 2005ம் ஆண்டின் நடுப்பகுதி என நினைவு..வன்னி ரெக்கின் 3து batchல படிப்பதற்கு இடம் கிடைத்திருந்தது நாட்டின் வடகிழக்கு பகுதியின் பல்வேறு இடங்களைச்சேர்ந்தவர்கள் வந்திருந்தார்கள்.ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் இல்லாத 4 பேரை ஒரே ரூமில் போட்டார்கள் வாழ்க்கையின் முதல் முதல் ஹொஸ்டல் வாசம். முதலில் பெரிதாக ஒருவரிற்கொருவர் எந்த ஈர்ப்பும் இல்லை ரூம் மேட் என்ற அளவில் மட்டுமாகவே தொடர்ந்தது .எனக்கு நண்பர் கூட்டம் அவ்வளவாக சேர்வது குறைவு . அவனோ நண்பர் கூட்டத்துடனே திரிவான்.. அத்துடன் அவனின் பாடப்பிரிவு நெட்வோர்கிங் ,நானோ எலக்ட்ரோனிக்ஸ் ஹொஸ்டல் வாழ்க்கையில் சண்டை…

  11. அருணாண்ணை வீரச்சாவு அதை நம்பவா…..? இணையத்தில் மேய்ந்து ஊரிலுள்ள உறவுகளின் இருப்பை உறுதிப்படுத்துகிறேன். காணும் தளமெங்கும் காயங்கள் சாவுகள் என இணைவலையெங்கும் துயர்முட்டி வழிகிறது....காக்கவும் ஆழின்றி கையொடுக்கவும் நாதியின்றித் தினம் வன்னிப்பெரு நிலப்பரப்பெங்கும் நிறைந்த சாவும் கண்ணீருமாக யாருக்கும் யாருடனும் பேசவோ உறவாடவோ முடியாத பொழுதுகளால் பின்னப்பட்டிருந்தது நாட்கள். பயங்கரமான கனவுகளும் பாதைதெரியாத நினைவுகளுமாக அந்த நாட்கள் ஒவ்வொரு தமிழனின் ஆன்மாவும் அவலப்பட்டபடி அழுதபடி…..அப்படியான ஒருநாள் மதியம்….. வணக்கம்.... தொலைபேசியழைப்பில் வந்த குரலொன்று. யாரெண்டு தெரியுதா? இல்லை... என்ற எனக்குத் தன்னை ஞாபகப்படுத்திய குரல். 3வருடங்கள் மேலாக தொடர்பற்றிருந்த தோழன…

  12. மொழியிழந்த முகம் -சுப.சோமசுந்தரம் களையிழந்த முகம் அல்லது ஒளியிழந்த முகம், புரிகிறது. அது என்ன மொழியிழந்த முகம்? முன்னது தானே சரியாகலாம் அல்லது எளிதில் சரி செய்யலாம். பின்னது கிட்டத்தட்ட உயிரிழந்த உடல் போல. இதயத் துடிப்பு நின்றபின் சிறிய கால அவகாசத்தில் உயிர்ப்பிப்பது போல் குறிப்பிட்ட காலத்திற்குள் சரி செய்ய முயலலாம் என்பது நம் எண்ணம். சரி, கதைக்கு வருவோம். நமது பரிதாபத்துக்குரிய கதாநாயகன் சுஷாந்த். அப்படித்தான் இவன் அப்பனும் ஆத்தாளும் பெயர் வைத்தார்கள். ஸ,ஷ,ஹ,ஜ இல்லாத பெயருக்குப் பரலோகத்தில் இடமில்லை என்பதில் ஆழ்ந்த நம்பிக்கையுடையவர்கள். பெயர் முடிவில் sudden brake வேறு (ஆங்கி…

  13. Monday, December 28, 2020 றைன் நதியோடு நானொருநாள் --------------------------------------------------- (4/2019 எழுதப்பட்ட கதை. 2020 நவம்பர் தேசத்தின் குரல் இணையஇதழில் வெளியானது) நேரத்தைப் பார்க்கிறேன். காலை 6.56. இன்னும் 2 மணித்தியாலங்கள் இருக்கிறது என் பயணத்தின் இலக்கையடைவதற்கு. இரண்டு மாதங்களுக்குப் பிறகு இன்று மகளிடம் போகிறேன். ஒரு குழந்தையென்ற எனது கனவுகள் விலக்கி அவள் 4வது செமஸ்ரர் தொடக்கத்தில் நிற்கிறாள். இன்னும் இரண்டு செமஸ்ரர் முடிந்தால் அவளது கற்றலின் இளமானிப் பட்டப்படிப்பை நிறைவு செய்வாள். காலமே என் குழந்தையைக் காத்திடு. அவள் கனவுகள் மெய்ப்பட உன் கைகளால் ஆசீர்வதித்து ஒளியிடு. நீயே நிதர்சனம் நித்தியம். உன…

  14. ஊரில அந்தகாலத்தில பெண்கள் வயதுக்கு வந்த பின்போ அல்லது பருவமடையப்போகிறாள் என்ற அறிகுறிகள் தெரிந்தவுடன் தனியாக வெளியே செல்வதற்கு அநேகமான வீடுகளில் தடை போடுவார்கள்.அப்பா, அண்ணா ,தம்பி போன்றோரின் துணையுடன் தான் செல்வார்கள்.பக்கத்துவீட்டு அக்காமாருக்கு சில தம்பிமாரை துணைக்கு அனுப்புவினம், ஆனால் தங்கச்சிமாருக்கு பக்கத்துவீட்டு அண்ணமாரை அனுப்பமாட்டினம் அந்த விசயத்திலமட்டும் சனம் தெளிவாக இருக்கும்.சுரேசும் உப்படி இரண்டு மூன்று அக்காமாருக்கு போடிகார்ட் வேலை பார்த்திருக்கிறான்.பக்கத்துவீட்டில நாலு பொம்பிளை பிள்ளைகள் மூத்தவர் உயர்தரம் படிக்கும் பொழுது சுரேஸ் ஏழாம் வகுப்பு படிக்கிறான் .இரண்டாவது அக்கா பத்தாம் வகுப்பு .அடுத்த இரண்டு பெண்களும் ஐந்தாம் ,மூன்றாம்.வகுப்பு படித்துகொண்டிரு…

  15. தேவகிக்குத் தன்னை நினைக்கவே ஒருபுறம் சிரிப்பாகவும் மறுபுறம் பச்சாதாபத்துடன் கூடிய அழுகையும் வந்தது. வாற மாதம் வந்தால் இவ்வுலகில் எண்பது ஆண்டுகளைக் கழித்துவிட்ட நிறைவு. இன்னும் எத்தனை நாட்களோ மாதங்களோ வருடங்களோ யாரறிவார் என்னும் எண்ணம் தோன்றினாலும் நான் இன்னும் கொஞ்சக் காலம் இருப்பன். அவ்வளவு லேசில போயிடமாட்டன் என்னும் ஒரு நம்பிக்கையும் ஏற்பட்டு ஏனோதெரியவில்லை அதனூடே சிரிப்பும் வந்தது. சிறிய வயதில் எல்லாம் தன் நாட்களை நினைத்துப் பார்த்தால் துன்பங்களும், நிறைவேறாத ஆசைகளும், போராட்டங்களுமாக வாழ்வின் இளமைக்காலம் கழிந்தது. பின்னர் வந்த காலங்களில் தன் முயற்சியில் மனம் சோராது போராடியிராவிடில் இன்று இப்படி ஒரு நிலையினை அடையக்கூடியதாக இருந்திருக்குமா என்று மனம் பெருமையும் கொண்ட…

  16. Started by Innumoruvan,

    வீடு புதிதாகக் கட்டுப்படுகையில், குடிபூரல் நிகழுமுன்னர் அதற்குள் தச்சுப்பேய் இருக்கும் என்பது முடிந்த முடிபாக ஊரிற்குள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. தச்சுப் பேயைப் பார்த்தவர்கள் சாட்சியம் கூற இருந்ததனால் நம்பிக்கைத் தன்மையில் சந்தேகம் ஒட்டவில்லை. விதிகளிற்கு ஏற்ப வாழும் கிராமம் பேயை உரச விரும்பவில்லை — ஒரு சிறுவனையும் அவன் தம்பியையும் தவிர. அவ்விரு சிறுவர்களிற்கும் பேயைப் பார்த்துப் பேட்டி எடுத்துவிடவேண்டும் என்ற ஆர்வம் தாங்க முடியவில்லை. அப்போது அவர்களில் மூத்தவனிற்கு ஒன்பது வயதும் இளையவனிற்கு ஏழு வயதும் ஆகியிருந்தது. ஒரு இரவினைத் தங்கள் நடவடிக்கைக்குக் தேர்ந்தெடுத்தார்கள். மூத்தவன் ஒரு இரும்புக் கம்பியினை எடுத்துக் கொண்டான். இரண்டாமவன் குசினியில் இருந்து காய்கறி நறுக்கும…

  17. Started by putthan,

    பாடசாலையில் எனது பிள்ளைகளின் பட்டமளிப்பு விழா பரிசளிப்புவிழா போன்றவற்றுக்கு அடியேன் போவது வழக்கம்.நிகழ்ச்சி தொகுப்பாளராக பாடசாலை மாணவத் தலைவரும் உபதலைவரும் கடமையை செய்வது வழக்கம். சரியான நேரத்திற்கு நிகழ்ச்சிகளை தொடங்குவதில் உந்த வெள்ளைகள் கெட்டிக்காரங்கள் என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேணும்.அவங்களோட சேர்ந்த எங்கன்ட வாரிசுகளும் நேரவிடயத்தில் ஒழுங்காக கடைப்பிடிக்கினம் என்பதில் ஒரு சின்ன சந்தோசம். நானும் போயிருக்க, மாணவத்தலைவன் ''we would like to acknowledge the traditional custodians of this land, of elders past and present.'' நானும் அவுஸ்ரெலியாவுக்கு வந்து கொஞ்ச காலம் ஒடிவிட்டது ,உந்த பூர்வீக குடிகளை கணடதை விட வந்தேறுகுடிகளை கண்டதுதான் அதிகம்.ஒன்றுக்கு பத்தா…

    • 10 replies
    • 3.3k views
  18. லுங்கி டான்ஸ் ---------------------- புதுச் சாரம் தான் புது உடுப்பு என்ற எண்ணம் எனக்கு ஒரு காலத்தில் இருந்தது என்றால் சிலருக்கு அது ஆச்சரியமாகக் கூட இருக்கலாம். உண்மையில் ஆச்சரியம் என்னவென்றால், இன்றும் 'புது உடுப்பு ஒன்றைப் போடுங்கோ...........' என்று வருட நாளிலோ அல்லது தீபாவளி அன்றோ சொல்லப்படும் போது, என்னையறியாமலேயே ஒரு புதுச் சாரத்தை கட்டிக் கொண்டு வந்து நிற்பது தான் ஆச்சரியமாக இருக்கின்றது. புதுச் சாரம் மடங்காமல், இடுப்பில் அப்படியே ஒட்டாமல், கோதுமை மா களி பூசின மாட்டுத்தாள் பேப்பர் போல நிற்கும் அந்த உணர்வை வேறு எந்த புது உடுப்பும் கொடுப்பதில்லை. ஒரு வருடம் முழுவதும் பாடசாலைக்கு வெள்ளை சேட் இரண்டு, நீலக் காற்சட்டை ஒன்று போதும். அடுத்த வருடம்…

      • Thanks
      • Like
      • Haha
    • 45 replies
    • 3.2k views
  19. அண்ணனின் முகத்தினை மீண்டும் மீண்டும் பார்க்கின்றேன் நெற்றி அப்படியே இருக்கின்றது. வழக்கமாக அவன் வைக்கும் சந்தனப் பொட்டின் இடம் மட்டும் வெறுமையாக தெரிகின்றது நெற்றியின் கீழ் ஆழமாக காயம் தொடங்குகின்றது மூக்கும் வாயும் சிதைந்து போகத் தொடங்கி பின் வாயின் கீழ் உருக்குலைந்து கிடக்கின்றது காதுகள் இருந்த இடம் தெரியவில்லை. நிண நீரால் நிறைந்து கிடக்கின்றது அவன் முகம். கவனமின்றி தண்டவாளங்களினூடாக அவன் நடக்கையில் ஒரு ரயில் அவனை மிதித்து இருக்கலாம், அல்லது எவனோ அவனை தள்ளியும் விட்டு இருக்கலாம். இல்லை அம்மா இன்னொருவருடன் இருப்பதைக் கண்டு வெறுத்து அவன் அதற்கும் முன் பாய்ந்து செத்து இருக்கலாம். அவன் உடலை தலையின் கீழ் பகுதியில் பக்கவாட்டாக ரயில் பிளந்து விட்டிருந்தத…

  20. 2009 யுத்தம் முடிவுக்கு வருகிறது. அப்போது தமிழ் பிரதேசங்களில் கடமையாற்ற பொலிசில் சேருமாறு தமிழ் இளைஞர்,, யுவதிகளுக்கு இலங்கை முழுவதும் அழைப்பு விடுகிறது அரசாங்கம். தரம் 11 சாதாரண தரம் படித்தால் மட்டும் போதுமென அறிவித்தல் கொடுக்கிறது அரசு. யுத்தகாலத்தில் சுடுவதற்கு மட்டும் வெறும் 3 மாத காலம் பயிற்ச்சி கொடுத்தார்கள் அதில் அநேகமானவர்கள் ஊர்காவல்படையில் இருந்த முஸ்லீம்களும் , சிங்களவர்களுமே அதிகமாக இணைந்தார்கள் காரணம் சிலருக்கு சம்பளம் சிலருக்கு கட்டாயம் என பொலிசாராக இணைந்தார்கள். பொலிஸ் சேவையில் மிகுந்த ஆர்வமுள்ள எனக்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது ஆனால் வீட்டில் யாரும் சம்மதிக்கவில்லை நான் பொலிசில் இணைய யாரும் விரும்பவில்லை. காரணம் இந்த அரசாங்கம் படைவீரர்களைக் கொண்டு தமிழ்…

  21. தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி பிரிந்திருக்கும் காதலர்களுக்கு பேருதவியாக இருக்கின்ற இந்தக் காலத்தில், அஞ்சலியையும் இவனையும் பற்றி சொல்லியா தெரியவேண்டும். நேரம் கிடைக்கும் பொழுதுகளிலெல்லாம் பேசிக்கொள்வார்கள். 'ஸ்கைப்' என்கின்ற ஒன்று அவர்கள் இருவரும் முகம்பார்த்துப் பேசுவதற்கு பெரும் வசதியேற்படுத்திக் கொடுத்திருந்தது. அவனுக்கு வேலைப்பழு அதிகமாக இருந்தாலும் அஞ்சலியுடன் கதைப்பதற்காக நேரம் ஒதுக்கத் தவறுவதில்லை. இருந்தாலும் சில சமயங்களில் வேலைப்பழு காரணமாக சரியான நேரத்தில் ஃபோன் எடுப்பதற்கு அவ்வப்போது மறந்துவிடுவான். அப்பொழுதெல்லாம் அஞ்சலி கொஞ்சம் கோபப்பட்டாலும் இவனது கெஞ்சும் வார்த்தைகளினால் பின்னர் சமாதானமாகிவிடுவாள். அவனுக்கும் அவளுக்குமிடையில் சண்டை வருவதென்றால், …

  22. Started by pri,

    அப்பா வீட்டில் சட்ட திட்டம் போடுவது குறைவு. அதை செய் இதை செய்யாதே என்று நச்சரிப்பது அரிதிலும் அரிது. இருப்பினும் சின்ன வயதிலிருந்து சில பழக்கங்களை வீட்டில் நடைமுறைக்கு கொண்டு வந்திருந்தார். அதிலொன்று இருட்டியதுவும் புத்தகமும் கையுமாய் மேசையில் போய் குந்த வேண்டும். இலங்கை வானொலியில் பின்னேர செய்தி முடிகிறபோது பெரும்பாலும் பகலை இரவு முழுவதுமாக விழுங்யிருக்கும். அதற்கு பிறகு விளையாட முடியாது. முகம் கழுவி சாமி கும்பிட்ட பிறகு புத்தகத்தோடு மேசைக்கு போக வேண்டும். இரவு சாப்பாடுவரை புத்தகத்தோடு இருக்கவேண்டும். என் பள்ளி காலங்கள் முழுவதும் இது வழக்கத்தில் இருந்தது. படிக்கிற காலத்தில் இது நிறைய உதவியதாக என்னளவிலான எண்ணம். இங்கு கனடாவில் சமர் காலத்தில் இர…

    • 5 replies
    • 3.2k views
  23. இந்தக் கதைக்கும், கதைசொல்லியான எனக்கும் ஏதாவது ஒரு தொடர்பு இருக்கும் என்று, இந்தப் பிரதியை வாசிக்கும் போது நீங்கள் நினைக்கக் கூடும் என்ற நினைப்போடுதான் இப்பிரதியினை உருவாக்கத் தொடங்குகிறேன். எவ்வகையானதொரு நோக்கு நிலையில் நின்று நீங்கள் இதனை வாசிப்பீர்கள் என்ற ஒரு சந்தேகமும் என்னுள் எழாமல் இல்லை. ஏனென்றால் நான் கூட புதிய கதைசொல்லிகளின் கதைகளை, வாசிப்பின் ஆரம்ப காலங்களில் அதிகளவு ஈடுபாட்டுடன் வாசித்ததில்லை. பின்நவீனத்துவம் ,பெருங்கதையாடல்களின் முடிவு, பிரதியினை கட்டுடைத்தல், மையசிதைவு அல்லது மையமின்மை போன்ற பல்வேறு உத்திகளுடன் ஒரு கதையை ஆரம்பித்து நகர்த்துதல் என்ற பல்கோட்பாட்டு நிலையில், ஒரு சிறுகதைக்கான கட்டமைப்பு மீதான கரிசனம் அதிகரித்தபின் கண்ணில் படும் எந்த ஒரு பிர…

  24. முக நூலில் கந்தையா முருகதாசன் என்னும் பத்திரிகையாளர் ஒரு விண்ணப்பம் வைத்தார். எழுத்தாளர்களை எல்லாம் இணைத்து ஒவ்வொரு வாரம் ஒருவர் கதை எழுதுவது என்று. அதாவது ஒருவர் ஒரு கதையைத் தொடங்க அடுத்த வாரம் இன்னொருவர் தொடர்வார். நான் யாழில் தொடங்கினால் என்ன என்று யோசித்துக்கொண்டிருக்கும் போதே வேறொரு ஊரின் இணையத் தளத்தில் அதை ஆரம்பிப்பதாக இரு நாட்களில் அறிவித்துவிட்டார். நாம் இங்கே நிறையப்பேர் கதை எழுதுபவர்கள் இருக்கிறோம். நாம் ஒரு தொடரை இங்கே ஆரம்பிக்கலாம் என்ற எண்ணம் எழுந்தது. உறவுகளே! உங்கள் கருத்துக்களும் ஆதரவும் எதிர்பார்க்கப் படுகிறது.

  25. அழைப்பு மணி ஒலித்த பத்தாவது நிமிடம் கதவு திறக்கிறது. புலநாய்வில் கைதேர்ந்த சீலனிற்கு ஒரு தடவைக்கு மேல் மணி ஒலி எழுப்பும் அவசியம் இருக்கவில்லை. உள்ளே அவர்கள் இருக்கிறார்கள் என்பதும் என்ன நிலையில் இருக்கிறார்கள் என்பதும் மணியினை அமிழ்த்து முன்னரே அவனிற்குத் துல்லியமாய்த் தெரிந்திருந்தது. அதனால் கதவு திறக்கும் வரை பொறுமையாய்க் காத்திருந்தான். நிலா கதவினைத் திறந்தாள். பம்பாய் வெங்காயத்தின் மூன்றாவது அடுக்கின் நிறத்தில் அழகிய மென்மையான மேற்சட்டை அணிந்திருந்தாள். வெள்ளி நிறத்தில் பாதணிகள் அணிந்திருந்தாள். அவள் தொப்புளிற்கும் பாதணிகளிற்கும் இடைப்பட்ட பகுதியில் எந்த ஆடையும் இருக்கவில்லை. விமான ஓடுதளத்தில் பாதைதெரிவதற்காகப் பொருத்தப்பட்டிருக்கும் விளக்குகள் போன்று, அவளது ப…

    • 14 replies
    • 3.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.