Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. பெரியாரின் நினைவுதினம்: பகுத்தறிவு பகலவனுக்கு மரியாதை! KalaiDec 24, 2022 11:27AM பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் நினைவு தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் அரசியல் கட்சித் தலைவர்களும், தொண்டர்களும் மரியாதை செலுத்தி வருகின்றனர். ஈரோட்டில் வெங்கடநாயக்கர் – சின்னத்தாயம்மாள் தம்பதிக்கு 1879 ஆம் ஆண்டு பிறந்த ஈ.வெ.ராமசாமி, சாதிக்கொடுமை, பெண்ணடிமைக்கு எதிராக போராடியவர். 90 வயது வரை சமூக நீதிக் கொள்கைக்காக குரல் கொடுத்த தந்தை பெரியாரின் 49 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ. வேலு, நாடாளுமன்…

  2.  பேரறிவாளன் மீது தாக்குதல் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் மீது சக கைதி தாக்குதல் நடத்தியுள்ளதாக இந்தியச் செய்தி தெரிவிக்கின்றது. தாக்குதலில் காயமடைந்த அவர், காயமடைந்ததால், சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சிறையில் இருக்கின்ற, ஆயுள்தண்டனை கைதியான ராஜேஷ் என்பவர் தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. - See more at: http://www.tamilmirror.lk/181749/ப-ரற-வ-ளன-ம-த-த-க-க-தல-#sthash.gZPu9yvQ.dpuf

  3. நளினி, பேரறிவாளன், ரவிச்சந்திரன் சற்று நேரத்தில் விடுவிப்பு? சென்னை: ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று நீண்ட நாட்களாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த நளினி, பேரறிவாளன் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் விரைவில் விடுவிக்கப்பட இருப்பதாகவும், முருகன் உள்ளிட்ட மீதமுள்ள 4 பேர் அகதிகள் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நளினி, பேரறிவாளன் தரப்பு வழக்கறிஞரான புகழேந்திக்கு இன்று காலை தமிழக அரசிடமிருந்து அழைப்பு வந்ததாகவும், அவரிடம் நளினி, பேரறிவாளன், ரவிச்சந்திரன் ஆகியோரை விடுதலை செய்ய முடிவு செய்திருப்பதாக சொல்லப்பட்டதாகவும், இது தொடர்பான ஃபார்மாலிட்டி ( சம்பிரதாய) நடவடிக்கைகளுக்காக வேலூர் சிறைக்கு வருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார் என…

  4. ‘காலாவை விட காவிரிதான் முக்கியம்’: குமாரசாமி சந்திப்புக்கு பின் கமல் கர்நாடக முதல்வர் எச்.டி.குமாரசாமியைச் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் பெங்களூரில் இன்று சந்தித்த காட்சி காலாவைவிட காவிரிதான் முக்கியம் என்று கர்நாடக முதல்வர் எச்.டி.குமாரசாமியைச் சந்தித்தபின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் தெரிவித்தார். கர்நாடகத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பின் அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை இடம் கிடைக்காததையடுத்து, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைத்துள்ளது. அங்கு முதல்வராக எச்.டி.குமாரசாமி உள்ளார். …

  5. ராஜ்யசபா தி.மு.க., தலைவர் கனிமொழி எம்.பி.,யை, பிரதமர் மோடி சந்திக்க நேரம் ஒதுக்க மறுப்பதால், காஷ்மீர் வெள்ள நிவாரணத்துக்கு, தி.மு.க., அறிவித்த நிதியை அளிக்க முடியாமல் தவிக்கிறது.காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புக்கு, அனைத்துத் தரப்பி னரும் உதவ வேண்டும் என, பிரதமர் மோடி வேண்டு கோள் விடுத்திருந்தார். நேரில் வழங்க...:இதையடுத்து, தி.மு.க., தலைவர் கருணாநிதி, செப்., 13ம் தேதி வெளியிட்ட அறிக்கையில், ''பிரதமர் மோடியின் கோரிக்கையை ஏற்று, காஷ்மீர் வெள்ள பாதிப்புக்கு உதவ, பிரதமர் நிவாரண நிதிக்கு, தி.மு.க., சார்பில், 25 லட்சம் ரூபாய் வழங்கப்படும். ராஜ்யசபா தி.மு.க., - எம்.பி.,க்கள், இத்தொகையை, பிரதமரிடம் நேரில் வழங்குவர்,'' என, கூறியிருந்தார்.இதற்கான காசோலையை, தி.மு.க., த…

  6. பணம் மாற்றும் பக்கா கேங்க்! - எடப்பாடி சர்ச்சை 1 பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலையில் சசிகலா, இளவரசி, சுதாகரன்... இவர்களுடன் இன்னொரு வி.ஐ.பி இருக்கிறார். அவர்தான், சந்திரகாந்த். தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்று இருக்கும் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய உறவினர் இவர்! ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல கான்ட்ராக்டர் ராமலிங்கத்தின் மகன்தான் இந்த சந்திரகாந்த். பெருந்துறை சுப்பிரமணியம் என்பவர் வீட்டில் பெண் எடுத்தவகையில் ராமலிங்கமும் எடப்பாடி பழனிசாமியும் நெருங்கிய உறவினர்கள். கடந்த ஆண்டு டிசம்பரில் திடீரென வருமானவரித் துறையினர் பெங்களூரு, ஈரோடு ஆகிய ஊர்களில் ராமலிங்கத்தை மையமாக வைத்து ரெய்டு நடத்தினர். பணத்தட்டுப்பாடு நிலவிய நேரத்தில், 5.40 கோடி ரூபாய் புதிய …

  7. சிறுநீர் குடிக்கும் போராட்டம் நடத்திய தமிழக விவசாயிகள்! அதிர்ந்த டெல்லி டெல்லி ஜந்தர்மந்தரில் போராடி வரும் தமிழக விவசாயிகள், இன்று சிறுநீர் குடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு அளித்துள்ள வாக்குறுதிகளை எழுத்துப்பூர்வமாக அளிக்கவில்லை என்றால் மலம் திண்ணும் போராட்டம் நடத்த உள்ளதாக எச்சரித்துள்ளனர். டெல்லியில் 40வது நாளாக தமிழக விவசாயிகளின் போராட்டம் தொடர்கிறது. கடந்த மார்ச் மாதம் 14-ம் தேதி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் காலவரையற்ற போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. காவிரி மேலாண்மை அமைப்பு, பயிர்கடன் தள்ளுபடி, நதிகள் இணைப்பு, வறட்சி நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்க…

  8. தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 64வது பிறந்த நாள் விழா தமிழீழம், தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதுமுள்ள தமிழர்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தை பொறுத்தமட்டில் தமிழீழ ஆதரவு நிலைப்பாடு உடைய அரசியல் கட்சிகளின் தலைமைகள் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பிறந்தநாள் விழாவினை ஒருங்கிணைத்து நடத்தி வருகின்றனர். அந்த வகையில், சென்னை ராயப்பேட்டை வி.எம்.தெருவில், தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இதில் திரைப்பட இயக்குநர் கௌதமன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு பேனர் வைக்க மட்டுமே அனுமதியளிக்கப்ப…

  9. மணல் கடத்தல் விவகாரத்தில் செந்தில் பாலாஜிக்கும் தொடர்பு இருப்பதாக அவரை கடுமையாகச் சாடி ஒரு வீடியோவை பதிவு செய்திருந்தார் சாட்டை துரைமுருகன். மிரட்டல் வழக்கில் கைதாகி ஜாமீன் பெற்ற யூ-டியூபர் சாட்டை துரைமுருகன். மீண்டும் அவதூறு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் ஆளும் கட்சியினர் செயல்படுவதாகப் பகிரங்க குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள் நாம் தமிழர் கட்சியினர். சாட்டை துரைமுருகன் மீண்டும் கைது கடந்த சில தினங்களுக்கு முன், சமர் கார் ஸ்பா என்ற நிறுவனத்தின் டிவிட்டர் பக்கத்தில் அதன் உரிமையாளர் வினோத் என்பவர், தமிழ் ஈழத்துக்காகப் போராடிய பிரபாகரனையும், அவருடைய…

  10. புதிய வடிவத்தில் பேனர், கறுப்புச் சட்டையுடன் நிர்வாகிகள்..! தொடங்கியது தி.மு.க செயற்குழுக் கூட்டம் #liveupdates தி.மு.க செயற்குழு கூட்டத்தில் சிறப்புத் தீர்மானமாக முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டார். தீர்மானத்தை டி.கே.எஸ் இளங்கோவன் வாசித்தார். இரங்கல் தீர்மானத்தில், 'பொது வாழ்வில் ஈடுபடக் கூடியவர்கள் பார்த்து படித்து கற்றுக் கொள்ளக் கூடிய பல்கலைகழகமாக இருந்தவர் கருணாநிதி. தமிழகம் மற்றும் இந்திய அளவில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை அறிமுகப்படுத்தினார். ஏற்றத்தாழ்வு போக்கி, சமத்துவம் உருவாக்குவதற்கு மாநிலம் முழுவதும் சமத்துவபுரம் அமைத்தவர் கருணாநிதி. பெரியாரின் விருப்பப்படி, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று சட…

  11. இலங்கை கிரிக்கெட்; வீரர்கள் இந்தியா பிரிமியர் லீக் போட்டிகளில் பங்கு பற்ற கூடாது இந்திய பிரிமியர் லீக் போட்டிகளில் இலங்கை வீரர்கள் பங்குபற்றுவதை தவிர்க்க வேண்டும் என்று தமிழகத்தில் ஆர்ப்பதட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் தந்தை பெரியார் திராவிட கழகம் கட்சி ஆகியன இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்;டத்தை மேற்கொள்கின்றன. இலங்கை கிரிக்கெட்; வீரர்கள் இந்தியா பிரிமியர் லீக் போட்டிகளில் பங்கு பற்ற கூடாது தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இந்த போட்டிகளில் இலங்கை வீரர்கள் பங்குபற்றுவதானது தமிழ்நாட்டில் உள்ளவர்களை உளவியல் ரீதியாக தாக்கத்திற்கு உள்ளாக்கும் என எனவும் ஆர்ப்பாட்ட காரர்கள் குறிப்பிட்டுள்ளனர். …

  12. இலங்கை தமிழர்களுக்கு தனி தமிழ் ஈழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மாவட்ட சூர்யா மற்றும் கார்த்தி ரசிகர் மன்றத்தினர் நாளை பிரமாண்ட உண்ணாவிரதம் நடத்துகின்றனர். சுதந்திர தமிழ் ஈழத்துக்கான போராட்டம் வரலாறு காணாத அளவில் தமிழகத்தில் நடந்து வருகிறது. மாணவர்கள் முன்னெடுத்த இந்தப் போராட்டம் மக்கள் போராட்டமாக வடிவம் பெற்றுள்ளது. குறிப்பாக, இதுவரை ஈழப் பிரச்சினை குறித்து பாராமுகமாக இருந்த ஐடி பணியாளர்கள், அரசு ஊழியர்கள் எல்லாம் வீதிக்கு வந்து போராடுகின்றனர். தனித் தமிழ் ஈழம் மலர வேண்டும், உலகெங்கும் பரவிக் கிடக்கும் உறவுகள் சுதந்திர ஈழத்தில் ஒன்று சேர வேண்டும் என்ற கோரிக்கை தீவிரமடைந்துள்ளது. நடிகர்களின் ரசிகர…

    • 4 replies
    • 1.1k views
  13. மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை மந்திரி சுதர்சன நாச்சியப்பன். இவர் இன்று கோவையில் நடைபெறும் தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மதுரையில் இருந்து காரில் புறப்பட்டார். சுதர்சன நாச்சியப்பன் பொள்ளாச்சி வழியாக வருவதை அறிந்ததும் தந்தைபெரியார் திராவிடர் கழகத்தினர் பொள்ளாச்சி காந்தி சிலைமுன்பு நகரசெயலாளர் நாகராஜ் தலைமையில் கையில் கருப்புக்கொடியுடன் திரண்டனர். இலங்கை தமிழர்களை கொன்று குவித்த ராணுவ அதிகாரிகளுக்கு குன்னூர் வெலிங்டன் ராணுவமுகாமில் பயிற்சி அளிக்க அனுமதியளித்த மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர். இதை அறிந்ததும் காங்கிரசாரும் அங்கு திரண்டனர். எதிர்புறத்தில் நின்ற அவர்கள் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினரை கண்டித்து கோஷம் எழுப்பின…

  14. புகழ் பெற்ற எழுத்தாளரும், தமிழ் இலக்கியவாதியுமான ஜெயகாந்தன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சமீப காலமாக உடல் நலம் குறைவால் அடிக்கடி சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அவரது உடல் நிலை மோசமடைந்ததை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும், அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/101098-2014-02-24-01-45-56.html

  15. சென்னை: ஒன்று முதல் 10ஆம் வகுப்பு வரையில் தமிழை கட்டாயப் பாடமாக அனைத்து மாநில வாரிய பள்ளிகளும் கடைபிடிப்பது குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் ஜெயலலிதா ஆய்வு கூட்டம் நடத்தி்னார். 2006ஆம் ஆண்டைய தமிழ்நாடு தமிழ் கற்பதற்கான சட்டத்தின்படி, ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பகுதி ஒன்றில் தமிழை கட்டாயப் பாடமாக தமிழகத்தில் உள்ள அனைத்து மாநில வாரிய பள்ளிகளும் கடைபிடிப்பது குறித்த ஆய்வு கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ், பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் சபிதா, சட்டத்துறை செயலாளர் கோ.ஜெயச்சந்திரன் மற்றும் அரசு உயரதிகாரிகள் கலந்து கொண்டனர். http://news.vikatan.com/ar…

  16. கருணாநிதி மீதான ஈழ துரோகக் குற்றச்சாட்டு! - பழி துடைக்க உடன்பிறப்புகள் செய்ய வேண்டியது என்ன? தவறு செய்பவர் தலைவராகவே இருந்தாலும் எதிர்க்க வேண்டும் எனும் கொள்கை காரணமாகப் பிறந்த கட்சி தி.மு.க. ஆனால் இன்று, செய்தவர் உங்கள் தலைவர் என்பதற்காக, ஒரு மாபெரும் குற்றத்தை நியாயப்படுத்துவதையே முழு நேரப் பணியாக வைத்துக் கொண்டிருக்கிறீர்கள் அவர்தம் உயிரினும் மேலான உடன்பிறப்புக்கள்! அண்மையில் தி.மு.க., தலைவர் கருணாநிதி மறைந்ததையொட்டி, ஈழத் தமிழினப்படுகொலையின் பொழுது அவர் நடந்து கொண்ட விதம் சரியே என நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள் திராவிடவாத அன்பர்கள். கருணாநிதி கவலைக்கிடமாக இருந்தபொழுதே இது குறித்து உங்களுக்கும் தமிழ்த் தேசியவாதிகளுக்கும் இணையத்தில…

  17. தமிழகம் முழுவதும் கல்லூரிகளுக்கு காலவரம்பற்ற விடுமுறை. இலங்கைக்கு எதிராக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மாணவர்கள் காலவரம்பற்ற உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு கால வரம்பற்ற விடுமுறை தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு எதிராக மாணவர்களின் போராட்டம் வலுப்பெற்று வருவதால் அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. மேலும் மாணவர்களின் கொந்தளிப்பு தணியும் வரை கல்லூரிகளை திறக்க வேண்டாம் எனவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக திங்கட்கிழமை வகுப்புகளை புறக்கணிக்கப்போவதாக மாணவர்கள் அறிவித்திருந்தனர் http://www.dinaithal.com/index.php?option=com_content&view=artic…

    • 4 replies
    • 813 views
  18. தமிழகத்தில் தமிழ் இல்லை என்றால் வேறு எந்த நாட்டில் தமிழ் இருக்கும்? – உயர்நீதிமன்றம் கேள்வி http://athavannews.com/wp-content/uploads/2020/10/உயர்நீதிமன்றம்-மதுரை.jpg தமிழகத்தில் தமிழ் இல்லை என்றால் வேறு எந்த நாட்டில் தமிழ் இருக்கும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மதுரை – திருமங்கலத்தைச் சேர்ந்த சக்தி ராவ் என்பவர் தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. TNPSC தேர்வுகளில் தமிழ் வழியில் பட்டம் பெற்றவர்களுக்கு வழங்கப்படும் 20 சதவீத இட ஒதுக்கீட்டை அஞ்சல் வழி மூலம் பட்டம் வாங்கியவர்களுக்கு வழங்கக்கூடாது என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. வழக்கை விசாரித்த நீத…

  19. 'மயக்க நிலையில் இருந்தார் ஜெயலலிதா' - எய்ம்ஸ் அறிக்கை பற்றி தமிழக அரசு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து எய்ம்ஸ் அறிக்கை பற்றி தமிழக அரசு தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 'செப்டம்பர் 22-ம் தேதி மூச்சுத்திணறல் காரணமாக அப்போலோவில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டபோது மயக்க நிலையில் இருந்தார். இரவு 10 மணிக்கு அவர் ஆம்புலன்ஸில் கொண்டுவரப்பட்டார். நீர்சத்து , நீரிழிவு உபாதைகளால் பாதிக்கப்பட்டிருந்தார் ஜெயலலிதா. அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருந்தது. அப்போலோவில் காவிரி பிரச்னை பற்றி விவாதித்தார். அவரைக் காப்பாற்ற அனைத்து மருத்துவ முயற்சிகளும் எடுக்கப்பட்டது. உலகத்தரம் வாய்ந்த சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. அவரது இதயம் செயலிழந்தது குறித்த…

  20. ஒன்னு சொல்றேன்.. நாசமாதான் போவீங்க".. ஓசூரில் நின்று சாபம் விட்ட சீமான்.. மிரண்டு போன கட்சிகள்! By Hemavandhana | Published: Saturday, March 13, 2021, 12:05 [IST] ஓசூர்: 'ஒன்னு சொல்றேன்.. மறுபடியும் இரட்டை இலை, உதயசூரியனுக்கு ஓட்டு போட்டால், நாசமாகத்தான் போவீங்க" என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரத்தில் காட்டமாக முழங்கினார். பேசினார். சீமான் தன்னுடைய பிரச்சாரத்தை தொடங்கி உள்ளார்.. தன் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்து வருகிறார்.. செல்லும் இடமெல்லாம் சீமானின் பேச்சுக்கு மக்கள் கைகளை தட்டி வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். அதேபோல சீமானும், தன்னுடைய பேச்சில் அதிமுக, திமுகவை சரமாரியாக விமர்சித்து வருகிறார். கிருஷணகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதி…

  21. தமிழகத்தில் 2020-க்குள் மதுபானக் கடைகளை மூடக்கோரி வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு Published : 06 Mar 2019 17:03 IST Updated : 06 Mar 2019 17:03 IST கி.மகாராஜன் பிரதிநிதித்துவப் படம் தமிழகத்தில் அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி 2020-க்குள் அனைத்து மதுபான கடைகளையும் மூடக்கோரிய வழக்கில், மதுபான தொழிற்சாலைகள், அங்கிருந்து வாங்கப்படும் மதுபானங்களின் அளவு தொடர்பாக தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. விருதுநகரை சேர்ந்த காந்திராஜன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: தவறவிடாதீர் வெளிநாடுகளி…

  22. தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை சார்பில் இன எழுச்சிக் கருத்தரங்கம் சென்னை - அம்பத்தூரில் நடந்தது. அதில் சீமான் பேசும்போது, " 'தமிழன் என்றோர் இனமுண்டு; தனியே அவற்கொரு குணமுண்டு' என்பதை உலகுக்கு உணர்த்திய தலைவன் பிரபாகரன். தான் பெற்றெடுத்த பிள்ளைகளை களத்தில் பலிகொடுத்த தலைவர்தான் தலைவர் பிரபாகரன். இன்றைக்கு நாங்கள் பெரியாருக்கு எதிரி என்கிறார்கள். 'எதனையும் சுயஅறிவோடு சிந்தித்து செயல்பாடு' என்றார் பெரியார். ஆனால், இன்றைய பெரியாரியவதிகளோ, 'சொந்தப்புத்தி வேண்டாம்; பெரியார் தந்த புத்தி ஒன்றே போதும்' என்கிறார்கள். எ…

  23. பெரம்பலூர்: விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய எண்ணெய் லாரி டிரைவர், கிளீனரை காப்பாற்றாமல், லாரியில் இருந்து கொட்டிய எண்ணெய்யை பொதுமக்கள் பிடித்து சென்ற சம்பவம் பெரம்பலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு சென்னையிலிருந்து தனியார் டேங்கர் லாரி ஒன்று பாமாயில் எண்ணெய்யை ஏற்றிக் கொண்டு, திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த லாரி பெரம்பலூர் மாவட்டம், துறைமங்களம் அருகே வந்துக்கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்து. நெடுஞ்சாலைத்துறை டிவைடரில் ஏறி, தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், டிரைவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் கைகளிலும் காயம் ஏற்பட்டது. அதேபோல், கிளீனருக்கும் பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டது. இருவரும் …

  24. இரவோடு இரவாக இரு தரப்பு கடும் மோதல்.. பைக், கார், ஆட்டோ உடைப்பு.. திருநெல்வேலி: நெல்லை அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலால், பைக்குகள், கார் ஆட்டோ உடைக்கப்பட்டன. இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நெல்லை மாநகரத்தை அடுத்த முன்னீர்பள்ளம் பகுதியில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் மருதநகர் பகுதியை சார்ந்த பாலமுருகன் என்ற பால முகேஷுக்கு (17)அரிவாள் வெட்டுவிழுந்தது . இதனையடுத்து அவர் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் இதனால் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் கார் ,ஆட்டோ ,பைக், சில வீடுகள் கல்லெறிந்து சேதம் அடைந்துள்ளது. வைக்கோல் படப்புக்கும் தீ வைக்கப்பட்டதினால் தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைத்தனர…

    • 4 replies
    • 879 views
  25. சென்னை: இலங்கையில் தமிழர் வாழும் பகுதியை பிரித்து தமிழீழம் அமைப்பதுதான் தீர்வாக அமையும் என்று மத்திய இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பனும், ஆனால் இலங்கையை பிரிக்கக் கூடாது என்று மற்றொரு இணை அமைச்சர் நாராயணசாமியும் கருத்து தெரிவித்துள்ளனர். சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன், இலங்கையில் தமிழர்கள் வாழும் வடக்கு கிழக்கு பகுதி தமிழர்களின் தாயகம். சுதந்திர தமிழீழம் என்பது அனைவரது கனவு. அந்த கனவு நிறைவேற வேண்டுமெனில் வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் சொந்த மண்ணில் குடியேற வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணையமைச்சர் நாராயணசாமியோ, இலங்கைக்கு போர்க்கப்பல்கள் வழங்குவது குறித்த ஒப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.