Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நலமோடு நாம் வாழ

உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.

எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.

  1. பாம்பெண்ணை மருத்துவம்! 18 ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் ஐரோப்பிய, அமெரிக்க தேசங்களில் ஒரு புது வகையான தொழில் துறை கொடி கட்டிப் பறந்தது. குதிரை வண்டியில் ஊரூராகத் திரிந்து சகல வகையான நோய்களையும் தீர்க்கும் "பாம்பு எண்ணை" என்று பெற்றோலியத்தின் ஒரு பகுதியான கனிம எண்ணையை விற்பதே அந்தத் தொழில். இது ஏன் பாம்பு எண்ணை (snake oil) என அழைக்கப் பட்டது என்பதற்கு பல காரணங்கள் சொல்லப் படுகின்றன. ஆனால், இன்று ஆங்கிலத்தில் "பாம்பு எண்ணை" என்பது எந்தப் பலனுமற்ற போலி மருந்துகளைச் சுட்டப் பயன் படும் ஒரு சொல்லாகி விட்டது. போலி மருந்துகளை விற்கும் வியாபாரி "பாம்பெண்ணை விற்பவர் (snake oil salesman)" எனப் படுகிறார். கோவிட் 19 இற்கு தீர்வினைத் தேடி மருத்துவ விஞ்ஞானம் உழைத்துக் கொண…

  2. மரங்கள்தான் மனித வாழ்வின் ஆதாரம். மரங்கள் பிராண வாயுவை மட்டும் தருவதில்லை. மனிதர்கள் ஆரோக்கியமாக வாழ தன்னால் இயன்ற அனைத்தையும் கொடுக்கிறது. பூவுக்கெல்லாம் அரசன் போல் நோய் தீர்க்கும் மாமருந்தாக இருப்பதால்தான் இதனை பூவரசு என்று அழைக்கின்றனர். நூற்றாண்டுகளுக்கு மேல் வாழக்கூடிய மரங்களுள் பூவரசும் ஒன்று.காயகல்ப மரமான பூவரசு பூமிக்கு அரசன் என்று அழைக்கப்படும் பெருமையுடையது. இதய வடிவ இலைகளைக் கொண்ட இந்த மரம் இந்தியா முழுவதும் காணப்படும். குறிப்பாக தென்னிந்தியாவில் அதிகமாகக் காணப்படுகிறது. இது கொட்டைப் பூவரசு சாதாரணப் பூவரசு என இருவகைப் படும். விதைகள் இல்லாமல் சப்பையான காய்கள் இருப்பது சாதாரணப் பூவரசு. கொட்டைப் பூவரசு காய்களை உடைத்தால் உள்ளே நிறைய விதைகள் இருக்கும…

  3. தினமும் வீடுகளில் பல வகைகளில் சமையலுக்குப் பயன்படும் ‘சீரகம்’, வாசனைப் பொருட்களில் தனி இடம் பெற்றுத் திகழ்ந்தாலும், ஒரு சிறந்த இயற்கை மருந்தாக அனேக வழிகளில் நமக்கு உபயோகப்படுகிறது. இத்தாவரத்தின் விதைகள்தான் நாம் பயன்படுத்தும் சீரகம். பண்டைக்காலத்திலிருந்தே இந்தியாவில் சீரகம் எளிய மருந்தாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பன்மொழிப் பெயர்கள்: சீரகத்திற்கு ஆங்கிலத்தில் ‘குமின்’ என்று பெயர். இந்தியில் ஜீரா, தெலுங்கில் ஜீலகாரா, கன்னடத்தில் சீரகே, மராத்தியில் சிரே, குஜராத்தியில் ஜிரு, அசாமியில் கொத்த ஜீரா, ஒரியாவில் ஜிர்கா, காஷ்மீரியில் ஜையுர் என்று பெயர். பெயர் வந்த விதம்: நமது உடம்பின் உள்ளுறுப்புகளில் ஏற்படும் பலவகை சீர்கேடுகளைச் சரிசெய்யும் குணம்கொண்ட வாசனைப் பொருள…

    • 6 replies
    • 2.1k views
  4. செல்லிடத் தொலைபேசி (Mobile phone) பாவனையாளர்கள் மத்தியில் குறித்த ஒரு தோல் வியாதி (skin rash) அதிகரித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. செல்லிடத் தொலைபேசிகளில் நிக்கல் உலோகம் பாவிக்கப்படுவதும் அது செல்லிடத் தொலைபேசிகளை பாவிக்கும் பாவனையாளரின் முகம்,காது உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தோலுடன் நீண்ட காலத்துக்கு தொடுகையில் இருக்க நேர்வதாலும் இவ் ஒவ்வாமை சார்ந்த பாதிப்பு உருவாவதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் செல்லிடத் தொலைபேசிகளின் வெளிப்புற கவசம் மற்றும் பொத்தான்களில் நிக்கல் உலோகம் பாவிக்கப்படாத செல்லிடத் தொலைபேசிகளைப் பாவிப்பதால் இப்பாதிப்பில் இருந்து தப்பிக்க முடியும் என்று கூறப்படுகிறது. பொதுவான பெண்கள் மத்தியில் நிக்கல் உலோக ஒவ்வாமையின் பாதிப்பு அதிகமாக ஏற்ப…

  5. Started by nunavilan,

    பல் வலி _ எஸ். அன்வர் "பல் வலியும் தலைவலியும் தனக்கு வந்தால்தான் தெரியும்" என்பது சுகந்தியின் விஷயத்தில் சரியாக இருக்கிறது. பல்வலி என்றால் அப்படியரு வலி. அவரது கீழ்த் தாடையில் இரண்டு பற்களில் குழி. ஒவ்வொரு முறை அவர் சாப்பிட்டு முடிக்கும் போதும், சில பருக்கைகள் அந்தக் குழிகளில் போய் உட்கார்ந்து கொள்ளும். அந்தப் பருக்கைகளை குண்டூசி, குச்சிகள் போன்ற ஆயுதங்களுடன் போராடித்தான் மீட்க வேண்டியது வரும். இதோடு முடிந்து விடாது. படுக்கப் போகும்போது பல்லில் வலி லேசாக எட்டிப் பார்க்கும். அந்த வலி அப்படியே கூடிக் கொண்டு போய் அன்றைய தூக்கம் காலி. இப்படிப் பல இரவுகள் அவருக்கு நரகவேதனைதான். பல் வலிக்கும்போது கணவரையோ, குழந்தைகளையோ சரியாகக் கவனிக்காமல் போகும்போது எரிச்சல், …

    • 0 replies
    • 2.1k views
  6. உயிருக்கு ஆபத்து விளைவிக்கும்... நச்சு உணவுகள். உலகில் எத்தனையோ ஆரோக்கியமான உணவுகள் உள்ளன. அந்த உணவுகள் அனைத்தும் நமக்கு நன்மையை மட்டும் தான் விளைவிக்கும் என்று நினைத்தால் அது தவறு. ஏனெனில் அந்த உணவுகள் சில நேரங்களில் தீமையை கூட விளைவிக்கும். அதிலும் உயிர் போகும் அளவிலான தீமையை விளைவிக்கும். எப்படியெனில் நாம் உண்ணும் ஒவ்வொரு உணவிலும் உயிருக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் ஒரு குறிப்பிட்ட கெமிக்கல்கள் இருக்கிறது. ஆனால் அதைப் பற்றி யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே தமிழ் போல்ட் ஸ்கை நச்சுத்தன்மை நிறைந்திருக்கும் சில உணவுகளைப் பட்டியலிட்டுள்ளது. இந்த உணவுகளை சாப்பிட்டால் உடனே உயிர் போகாது. மாறாக, வாழ்நாளின் எண்ணிக்கை குறையும். குறிப்பாக இந்த உணவுகளை தவறான…

  7. கெளுத்தி மீன் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா? ஆரோக்கிய சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ள கெளுத்தி மீனை வாரத்திற்கு ஒரு முறையாவது உணவில் சேர்த்துகொள்ளுங்கள். ஆரோக்கிய சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ள கெளுத்தி மீனை வாரத்திற்கு ஒரு முறையாவது உணவில் சேர்த்துகொள்ளுங்கள். புரதச்சத்து, ஆரோக்கிய கொழுப்புகள் மற்றும் பேட்டி ஆசிட் போன்ற சத்துக்கள் உங்களுக்கு தேவையெனில் கெளுத்தி மீனை சாப்பிடவேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். குறிப்பாக, உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் கெளுத்தி மீனை சாப்பிடலாம். அடங்கியுள்ள சத்துக்கள் 100 கிராம் கெளுத்தி மீனில், Saturated fat 3.3 கிராம், Polyunsaturated fat 3.3 கிராம், Monounsaturated fat 6 கிராம் அடங்கியுள்ளன…

  8. பீன்ஸ் கலந்த உணவை தினமும் சாப்பிடுபவர்களுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் கணிசமாக குறையும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. புகைபிடித்தல், புகையிலைப் பொருட்களை பயன்படுத்துதல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு வந்த நுரையீரல், காற்று மாசுபடுதலாலும் தற்போது அதிகம் பாதிக்கப்படுகிறது. இதனால் நுரையீரல் புற்றுநோய், நெஞ்சுச் சளி, மூச்சுத்திணறல் மற்றும் பல்வேறு சுவாசக் கோளாறுகள் மனிதர்களைத் தாக்குகின்றன. இந்த பிரச்சனைக்கு தீர்வு காண கார்ட்டின் தொழிநுட்ப பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஒரு ஆய்வை ஜப்பானில் உள்ள ஒரு மருத்துவமனை ஆய்வுக்கூடத்தில் மேற்கொண்டனர். உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய காய்கறிகள் குறித்த இந்த ஆய்வின் முடிவில், நுரையீரல் பாதிப்பை பீன்ஸ் கணிசமாகக் குற…

    • 5 replies
    • 2.1k views
  9. [size=4]அசிடிட்டி பிரச்சினை இன்றைக்கு பெரும்பாலனவர்களை பாதிக்கிறது. வயிற்றில் சுரக்கும் அமிலம் உணவுக் குழாயில் திரும்பி வருவதால், வயிறு அல்லது நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது. இதனால் வயிற்றில் வலி, வயிற்றில் உப்புசம் கூட ஏற்படும். சரியான உணவுப்பழக்கத்தை கொள்வதன் மூலம் அசிடிட்டி பிரச்சினையை நீக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.[/size] [size=4]சில நேரங்களில் உணர்ச்சிவசப்படுவதாலும் அசிடிட்டி உருவாகிறது. மனஅழுத்தத்தின் போது, அந்த சூழ்நிலையை எதிர்கொள்ள ரத்தத்தின் மூலமாக தசைகளுக்கு ஆற்றல் அனுப்பப்படுகிறது. இதனால் செரிமான உறுப்புகளுக்கு போதிய ரத்த ஓட்டம் இருக்காது. இதனால், செரிமான நிகழ்வு குறைந்து, வயிற்றில் நீண்ட நேரம் உணவு தங்குவதால், அமிலம் பின்னோக்கி திரும்பும் வாய்ப்பு உள்ளது. எனவே…

  10. தக்காளிச் சாற்றை தினமும் முகத்தில் தடவி 1 மணி நேரம் கழித்து கழுவி விடவும். பருவினால் ஏற்பட்ட தழும்புகள் மறையும். முட்டையின் வெள்ளைக்கரு, தயிர் கலந்து தலையில் தேய்த்தால் உடல்சூடு, பொடுகுக்கு நல்லது. விரும்பியவர்கள் செய்து பாருங்கள் நன்மை கிட்டும்.

  11. நெஞ்சில் வலி ஏற்படுவது ஏன்? நெஞ்சில் வலி வந்தால், அது ‘வாய்வு வலி’யாக இருக்கும் என நினைத்து, தகுந்த சிகிச்சை பெறாமல் அலட்சியமாக இருப்பவர்கள் இருக்கிறார்கள். அதேவேளையில், நெஞ்சு லேசாக வலித்தாலே அது மாரடைப்பாக இருக்குமோ என்று பயந்து மருத்துவமனைக்கு ஓடுபவர்களும் இருக்கிறார்கள். சாதாரண தசை வலியிலிருந்து இதய நோய்வரை பல நோய்களுக்கு நெஞ்சு வலி ஒரு முக்கிய அறிகுறியாக இருப்பதால், இதை அலட்சியப்படுத்த முடியாது. அதேவேளையில் எல்லா நெஞ்சுவலியும் மாரடைப்பாகத்தான் இருக்கும் என்று எண்ணி, தேவையில்லாமல் பயப்பட வேண்டிய அவசியமும் இல்லை. நடைமுறையில் பெரும்பாலான நெஞ்சு வலிக்கு இதய நோய்கள் காரணமாக இருக்காது; வேறு காரணங்கள்தான் இருக்கும். காரணம் என்ன? நெஞ்சு வலிக்குப் பல காரணங்கள் உள…

  12. நச்சுக்கொடி அல்லது நஞ்சுக்கொடி தொடர்பாக அண்மையில் ஒரு காணொளி வைரலாகி வருகின்றது அதில் ஒருவர் இப்படி கூறுகின்றார். நஞ்சுக்கொடியை நம் முன்னோர்கள் ஊரின் ஒதுக்குப்புறத்தில் இருக்கும் ஆலமரம் அல்லது அரசமரத்தின் கிளைகளில் கட்டிவிடுவார்கள் இதற்கான காரணம் மண்ணில் புதைத்ததால் அதன் நஞ்சு மண்ணில் பரவி எந்த செடி கொடிகளும் அங்கே முளைக்காது ஆனால் ஆலமரத்தில் கட்டிவிடடால் ஆலமரம் அதில் இருக்கும் விஷத்தை உறிஞ்சிவிடும். சரி வாருங்கள் இவர் கூறுவது உண்மைதானா? உண்மையில் நஞ்சுக்கொடி என்றால் என்ன என்று பார்த்துவிடுவோம். தாயின் வயிற்றினுள் இருக்கும் கர்ப்பப்பையை குழந்தையுடன் சேர்த்து இணைக்கும் பகுதிகளை நச்சுக்கொடி என்று சாதாரண மக்கள் அழைக்கின்றார்கள் உண்மையில் …

  13. உலக இதய நாள் செப்டம்பர் 29, 2016 உங்கள் வாழ்வுக்குச் சக்தி கொடுங்கள்! நமது உடலை இயக்கச் சக்தி தரும் இதயத்துக்கு சக்தி தருவதன் மூலம் நம் வாழ்வை மேம்படுத்த முடியும் என்பதை உணர்த்தும் வகையில் ‘உங்கள் வாழ்வுக்குச் சக்தி கொடுங்கள்’ (Power your life) என்பதை, இந்த ஆண்டுக்கான உலக இதய நாளின் மைய நோக்கமாக வைத்திருக்கிறார்கள். ஒவ்வோர் ஆண்டும் இதய நோய்களாலும், வாதம் உள்ளிட்ட நரம்புப் பிரச்னைகளாலும் மட்டுமே 17.3 மில்லியன் பேர் மரணத்தைத் தழுவுகிறார்கள். புகையிலை, முறையற்ற உணவுப்பழக்கம், உடல் உழைப்புஇன்மை, மதுப்பழக்கம் ஆகியவை இந்தப் பிரச்னைகளுக்கு மிக முக்கியமான காரணம். எனவே, ஆரோக்கியமான உணவை உண்பது, புகைபிடிப்பதை, மதுவைத் தவிர்ப்பது என்பன போன்ற எளிய நடவடிக்கைகள் மூலம் இ…

  14. இயற்கையின் படைப்பில் மலர்கள் மகரந்த சேர்க்கைக்காக உருவாக்கப்பட்டவை. இந்த மலர்கள் எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளன. பூக்கள், காயாகி, கனியாகி அதனை மக்கள் உண்பதற்கு இயற்கை கொடுக்கிறது. கனியாக மாறும் வரை காத்திருக்காமல் பூக்களை சாப்பிட்டாலே அதற்குறிய அத்தனை குணங்களும் கிடைக்கும். காதுகளைக் காக்கும் மகிழம் மகிழம் பூவின் நறுமணம் மணம் மயக்கும். இது மற்றப் பூக்களைவிட சற்றே வித்தியாசமானது. காதுகளில் எந்த தொல்லை ஏற்பட்டாலும் மகிழம் பூவை எண்ணெய் போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து சற்று நேரம் குளிர வைத்து அதன் பின் குளிர்ந்த நீரில் குளித்தால் நல்ல பலன் கிடைக்கும். தலைவலி நீங்கும் அகத்திக்கு சிறந்த மருத்துவ குணங்கள் இருப்பது போல அகத்திப் பூவிற்கும் உண்டு. அகத்த…

  15. Dr Turner,(66) என்பவர் supranuclear palsy எனும் மூளைக் கலங்கள் சிதைவடைவதால் தோன்றும் இயலாமை நோயினால் பாதிகப்பட்டிருந்தார். மிகச் சமீபத்தில் அதன் அவஸ்தையில் இருந்து விடுபடுவதற்காக சுவிஸ்லாந்தில் பிறிதொரு மருத்துவக் குழுவினரின் பரித்துரையின் அடிப்படையில் மாத்திரைகள் மூலம் தற்கொலை செய்ய அனுமதிகப்பட்டு தன் வாழ்வை முடித்துக் கொண்டுள்ளார். இவ்வகையில் தற்கொலைகள் தூண்டப்படுவது மனித உரிமைகள் பற்றி கருசணை கொண்டோரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது..! குறித்த supranuclear palsy நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஒருவரில் மூளையில் சில வகைக் கலங்கள் தொடர்ந்து அழிவுறுவதால் கண்ணசைவு..கை கால் அசைவுகள்.. பேச்சு. விழுங்குதல் போன்ற அன்றாட தேவைகளுக்கு அவசியமான இயக்கங்கள் சீர்குலைந்து விடுகின்…

    • 3 replies
    • 2.1k views
  16. புற்றுநோய்களால் பாதிக்கப் பட்டவர்கள் உலகில் அதிகம். இங்கிலாந்தில் மட்டும் நாளொன்றுக்கு 24பேர் புற்று நோயால் இறக்கிறார்கள் என அறிக்கை ஒன்று சொல்கிறது. இதைக் குணப்படுத்துவதற்கான மருந்துகள் இன்னும் வரவில்லை. அப்போ ஸ்ரீதர் இயக்கிய நெஞ்சில் ஓர் ஆலயம் திரைப்படத்தில் கல்யாணகுமார் எப்படி புற்று நோயாளியான முத்துராமனைக் குணப்படுத்துகிறார் என்று கேட்டு விடாதீர்கள். புற்றுநோய் வராமல் தடுப்பதற்கான வழிகள் என்ன என்பதை ஆராய்ந்து அவ்வப் போது ஏதாவது அறிவித்துக் கொண்டிருப்பாhகள். சமீபத்தில் 1300 பேரைப் பரிசோதித்து அமெரிக்க ஆய்வாளர்கள் ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்கள். பழவகைகள், காய்கறி வகைகளை உட்கொண்டால் புற்றுநோயை எதிர்க்கும் சக்தி உடலில் அதிகரிக்கும் என்ற கதை ஏற்கனவே அறிய…

    • 6 replies
    • 2k views
  17. டொக்டர்.P.சங்கர், M.D.,D.M., சிறுநீரக சிறப்பு மருத்துவ நிபுணர் நம் உட­லி­லுள்ள கழி­வு­களில் அகற்­று­வதில் முக்­கிய ப்ங்கு வகிப்­பது சிறு­நீ­ரகம் தான். அத்­துடன் நம்­மு­டைய இரத்த அழுத்தம் சீராக வைத்­தி­ருப்­பதும் இதன் கட­மை­களில் ஒன்று எலும்­பு­களை உறு­திப்­ப­டுத்­து­வ­திலும், நோய் எதிர்ப்பு சக்­திக்குத் தேவை­யான இரத்த சிவப்ப ணுக்­களின் உற்­பத்­தியை தூண்­டு­வ­திலும், உட லிலுள்ள நீர் மற்றும் அமிலப் பொருள்­களின் அளவை சம­மாக வைத்­தி­ருப்­ப­திலும் இதன் பணி­களே. அத்­துடன் நாம் சாப்­பிடும் உண வுப் பொருளின் கழி­வுகள் இரத்­தத்­துடன் சீறு­நீர கத்­திற்கு வரும் அதனை வடி­கட்டி, யூரியா, கிரி­யாட்டின் போன்ற கழி­வு­களை துல்­லி­ய­மாக இனம் கண்­ட­றிந்து அதனை சிறு­நீ­ராகப் பிரித்து…

    • 0 replies
    • 2k views
  18. கறுத்த சருமம் கொண்ட எல்லா பெண்களுக்கும் உள்ளூர ஒருவித தாழ்வு மனப்பான்மை கட்டாயம் இருக்கும். கறுப்பாக இருக்கிறோமே என சோர்ந்து போயிருக்கும் பெண்களுக்கு ஒரு விஷயம். ஆரோக்கியமான சருமம் என்றால் அது கறுத்த சருமம்தான். அதில் முதுமையும், சருமப் பிரச்சினைகளும் அத்தனை சீக்கிரம் வருவதில்லை. அழகைப் பொறுத்தவரை அவர்கள் பேரழகியாகவே இருந்தால் கூட அது இரண்டாம் பட்சம்தான். கறுப்பான பெண்கள் நிறமாக மாற, சில அழகு சிகிச்கைகள். பியூட்டி பார்லர் போகாமல் வீட்டிலேயே இவர்கள் செய்து கொள்ளக்கூடிய சிகிச்சைகள் பற்றி விளக்குகிறார் …இந்தியன் இன்ஸ்டிட்யூஷன் ஆஃப் பியூட்டி தெரபியின் இயக்குனர் ஹசீனா சையத். பழ பேஷியல் முகத்தை முதலில் காய்ச்சாத பாலால் துடைக்கவும். சிறிதளவு வெள்ளரிச்சாறு அல்லது ஸ்ட்ராபெர்ரி…

  19. தும்மல், இருமல் எல்லோருக்கும் அவ்வப்போது வரும். ஆனால் டயாபடீஸ் எனும் சர்க்கரை நோயும் இன்றைக்குப் பெரும்பாலானோர் மத்தியில் பல்கிப்பெருகிக் கிடக்கிறது. முன்னொரு காலத்தில் அது வசதி படைத்தவர்களின் நோய் என்று சொல்லப்பட்ட காலம் மலையேறி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எளிதாக யாருக்கு வேண்டுமானாலும் வருகிறது. "மருத்துவத்துறையில் நவீன கண்டுபிடிப்புகள் வந்தபோதிலும் சர்க்கரை நோயைக் குணப்படுத்த முடியுமா? என்ற கேள்விக்கு இந்நாள் வரை பதில் தேட வேண்டியிருக்கிறது. ஆகவே, 'வரும் முன் காப்பது சிறப்பு' என்பதே சர்க்கரை நோயைப் பொருத்தமட்டில் சாலச் சிறந்தது" என்கிறார் பொது நல மருத்துவர் மற்றும் சர்க்கரை நோய் நிபுணரான பாஸ்கர். டயாபடீஸ் நமது வயிற்றுப் பகுதியில் இருக்கும் கணையத்தில…

    • 0 replies
    • 2k views
  20. கல்லீரல் சுருக்கம்...தடுப்பது எப்படி? "என்.முருகன்" கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர், அப்போலோ மருத்துவமனை அன்றாடம் காய்கறிகளை விற்றுப் பிழைப்பு நடத்திவந்த செல்வத்துக்கு, திடீரென வயிற்றில் கடுமையான வலி. அதனைத் தொடர்ந்து மஞ்சள் காமாலை, அடுத்த சில நாட்களிலேயே கல்லீரல் முற்றிலும் செயல் இழப்பு ஏற்பட்டு, இறந்துபோனார். இன்று, அவர் மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் ஆதரவு இன்றித் தவிக்கின்றனர். செல்வத்தின் மரணத்துக்குக் காரணம், கல்லீரல் சுருக்கம் எனப்படும் ‘லிவர் சிரோசிஸ்’ (Liver Cirrhosis) நோய். 10 ஆண்டுகளுக்கும் மேலாக, மது அருந்தியதன் விளைவுதான், கல்லீரல் செயல் இழப்புக்குக் காரணம். மது அருந்தியதன் காரணமாக், கல்லீரல் பிரச்னையால் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கை ஆயிரமா…

  21. எல்லோரும் அறிந்திருக்க வேண்டிய முதலுதவிக் குறிப்புகள் எதிர்பாராத ஒரு ஆபத்தில் சிக்கி காயப்பட்ட அல்லது உயிர் ஊஞ்சலாடிக் கொண்டிருக்கும் ஒருவரைக் காப்பாற்றுவதற்கு அனுபவப்பட்ட இன்னொருவரால் உடன் செய்யப்படும் உதவியே முதலுதவி எனப்படும். வைத்தியர் வரும்வரை அல்லது வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லும்வரை உயிரை தாக்குப் பிடிக்கச் செய்யப்படும் சிகிச்சை, அல்லது நிலைமை மேலும் மோசமாகாது இருக்க செய்யப்படும் சிகிச்சை என்றும் கூறலாம். ஆபத்து எபோதும், எங்கேயும் எதிர்பாக்காமல் நிகழலாம். அதில் பாதிக்கப்பட்ட ஒரு உயிரை, உறவை அல்லது எம்மையே காப்பற்றிக் கொள்ள சில வழிமுறைகளை அனுபவம் மிக்க நிபுணர்கள் முன்வைத்துள்ளனர். உரிய நேரத்தில் சில உதவிகளைச் செய்வதன் மூலம் பேரிழப்பு…

  22. சுண்டக்காயின் மருத்துவ குணம்..! சுண்டைக்காய், கசப்புச்சுண்டை, கறிச்சுண்டை என்று கசப்புடனும் கசப்பின்றியும் கிடைக்கின்றது. சுண்டக்காயை வாங்கி மோரில் ஊறவைத்து, வற்றலாகப் போட்டு வறுத்தும், குழம்பில் சேர்த்தும் சாப்பிடலாம். கசப்பு சுண்டைக்காய், கறிச்சுண்டைக்காய் இரண்டுமே வாயுத் தொந்தரவு மற்றும் வயிற்றில் உள்ள கிருமிகளுக்கு நல்ல மருந்து ஒரு குடும்பத்தினருக்கு (5 பேர் அடங்கியது) வருடத்திற்கு 2 லிட்டர் ...கசப்பு சுண்டைக்காய் உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டு வர, கிருமித் தொந்தரவு இருக்காது அமிபீயாஸிஸ் போன்ற கிருமிகளையும் சுண்டைக்காய் விரட்டி விடும். நீரிழிவு நோய்க்கு மருந்தாகும் சுண்டைக்காய் கிருமிகளை ஒழிக்கும் சுண்டைக்காய் நாம் அன்றாடம் உணவில் சேர்க்கும் சுண்டைக்காய் ஏராளமான…

  23. ஆரோக்கியமான குழந்தை பிறக்க குங்குமப்பூ உதவும் என்பது அழுத்தமான உண்மை . ஒரு பெண் கருவுற்றிருக்கும்போது, தனக்குப் பிறக்கப் போகும் குழந்தை சிவப்பாகவும், கொழுகொழுவென்றும் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவது இயல்பே.. இதற்காக குங்குமப் பூவை பசும்பாலில் கலந்து அருந்துவார்கள். இது ஒரு சம்பிரதாயம்போல் அனைத்து இடங்களிலும் பின்பற்றப்பட்டு வருகிறது. இருப்பினும் இந்த குங்குமப்பூ உண்மையிலேயே குழந்தைக்கு நல்ல நிறத்தையும் போஷாக்கையும் தருகிறதா என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுவதுண்டு. குங்குமப்பூவானது குழந்தைக்கு நிறத்தைக் கொடுக்கும் என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க முடியவில்லை. ஆனால் கருவுற்ற 5 மாதத்திலிருந்து 9வது மாதம் வரை குங்குமப் பூவை பாலில் கலந்து…

  24. சமீபத்தில் ஒரு தோழியின் வீட்டுக்குச் சென்றிருந்தபோது, சாப்பிட்டவுடன், அவர் கலர்கலரான மாத்திரைகளை விழுங்கிக் கொண்டிருந்தார். 'இத்தனை மாத்திரைகள் எதற்கு?’ என்றதும், அவர் தந்த பதில் நம்மைத் திடுக்கிட வைத்தது. 'லேசா முடி நரைச்சிருக்கேனு, 'டை’ யூஸ் பண்ணினேன். நல்ல பிராண்ட் தான். ஆனா, தொடர்ந்து யூஸ் பண்ணப் பண்ண, தலைக்குள்ள லேசா ஊறல் எடுத்துச்சு... அப்புறம் தலை முழுக்க பயங்கரமான அரிப்பு. பயந்துபோய், தோல் டாக்டர்கிட்ட போனப்ப, அவர், உடனே 'ஹேர் டை’ போடறதை நிறுத்தச் சொன்னார். 'டை’யில் இருக்கிற ரசாயனம் ஏற்படுத்திய பக்க விளைவுதான் காரணமாம்!' என்றார் பரிதாபமாக. 'நடுத்தர வயதை நெருங்கும் பெரும்பாலானவர்கள் கண்ணாடி முன் நிற்கும்போதெல்லாம் அனிச்சையாக முடி நரைத்திருக்கிறதா, சருமத்தில் சுரு…

  25. * புதிய ஆய்வு தகவல் :"காபி குடித்தால் டைப் 2 நீரிழிவு நோய் நம்மை அண்டாது; சில வகை புற்றுநோய்களும் வராமல் தடுக்க முடியும்' என்று அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். வாஷிங்டனில், "எக்ஸ்பெரிமென்டல் பயாலஜி 2007' கூட்டம் நடந்தது. அக்கூட்டத்தில், "ஹார்வார்ட் ஸ்கூல் ஆப் பப்ளிக் ஹெல்த்'தைச் சேர்ந்த டாக்டர்கள் உட்பட பல விஞ்ஞானிகள் கலந்து கொண்டனர். அப்போது, காபி குடிப்பதால் ஏற்படும் சாதக, பாதக விளைவுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.காபி சாப்பிடுவது மற்றும் நீரிழிவு நோய் குறித்து நுõற்றுக்கணக்கான ஆய்வுகள் மேற்கொண்ட வேன் டாம் கூறுகையில், "காபியை புதிய ஆரோக்கிய பானமாக நாங்கள் ஊக்குவிக்கவில்லை. எனினும், காபியை விரும்பாதவர்கள், அவர்கள் ஆரோக்கியத்திற்காக காபியை குடிக்குமாறு வலிய…

    • 5 replies
    • 2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.