நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3014 topics in this forum
-
நீரிழிவு நோய் வராமல் தடுக்க வேண்டுமா? அப்படியானால், இளைய வயதில் இருந்தே யோகா செய்யுங்கள், எதுவும் உங்களை அண்டாது என்பதை ஏற்காதவர்கள் இல்லை. நமக்கு எல்லாமே, உள்ளூரில் சொன்னால், கடவுள், பூதம் என்று ஒதுக்கி விடுகிறோம்; ஆனால், மேற்கத்திய நாடுகளில் செய்வதை பார்த்து செய்யும் போது தான், அடடா! இது நம் பெரியவர்கள் கற்றுத்தந்த முறை தானே...' என்று புத்தி வருகிறது. அப்படித் தான் யோகா என்ற அற்புத உடற்பயிற்சி முறை, நம்மால் தோற்றுவிக்கப்பட்டது என்பது இப்போது தான் பலருக்கும் புரிகிறது. பதஞ்சலி என்ற மாமுனிவர், சிவனுக்கு கற்றுத்தந்தது தான் யோகக்கலை என்று தான் புராணங்கள் சொல்கின்றன. அந்த யோகா தான், இப்போது பலரை கோடீஸ்வரராக்கி உள்ளது. அந்த அளவுக்கு அது வியாபாரப் பொருளாகி விட்டது. பதஞ…
-
- 2 replies
- 2.3k views
-
-
பீற்றா - குளுக்கான்கள் (Beta - glucans): உடல் நலன் சார் பங்களிப்புகள். Beta-glucans எனப்படுபவை பல குளுகொஸ் (Glucose) மூலக்கூறுகளினால் ஆக்கப்பட்ட ஒரு பல் சக்கரைட் பசை (Polysaccharide gum ) ஆகும். இயற்கையாக பல தாவரங்களிலும், நுண்ணங்கிகளிலும் காணப்படுகிறது. இது உடல் நலனுக்கு உகந்த ஒரு சமிபாட்டு நார் சத்தாகும் (Dietary fibre). தற்போதைய நவீன உலகில் நுகர்வோர் பலரும் (அதாவது நாங்களே தான்) உடல் நலனுக்கு உகந்த உணவை தேடுவதில் ஆச்சரியம் ஏதுமில்லை தானே. அவ்வாறான தேடலுக்கு தீனி போடுபவை செயற்படு உணவுகள் (Functional Foods) எனும் உணவு வகைகளாகும். பீற்றா குளுக்கான்ஸ் உம் செயற்படு உணவு வகையை சேர்ந்தவையாகும். பீற்றா குளுக்கான்களை கொண்ட உணவுகள் …
-
- 2 replies
- 1.7k views
-
-
மனித குலத்தினை அச்சுறுத்தும் நோய்கள் பல உள்ளன. அவற்றில் ஒன்றே புற்றுநோய். உயிர் கொல்லி நோயான இதனை குணப்படுத்த விஞ்ஞானிகள் கடுமையாக போராடி வருகின்றனர். இந்நிலையில், தவளையின் தோலில் இருந்து பெறப்படும் இருவகை புரதங்களின் மூலம் புற்றுநோய், நீரிழிவு நோய் மற்றும் பக்கவாதம் உட்பட 70 நோய்களை குணமாக்க முடியும் என பெல்பாஸ்டில் உள்ள குயின்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். தென் அமெரிக்காவில் காணப்படும் 'வெக்ஸி மங்கி புரொக்' எனப்படும் தவளை இனத்தின் தோலில் சுரக்கும் ஒரு வகை புரதத்தின் மூலமே இது சாத்தயப்படுமென விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர். மேலும் சீனா மற்றும் வியட்னாமைச் சேர்ந்த தேரை இனமான 'பயர் பெலிட் டொட்' இன் தோலிலும் இதே மருத்துவ குணவியல்புகள் காணப்படுவத…
-
- 2 replies
- 809 views
-
-
நமது உடலுடைய ஒவ்வொரு வெளி உறுப்புக்கும் உள் உறுப்புக்கும் தொடர்பு உண்டு. அந்த உடற்க்கூறியல் உண்மை பலருக்கு தெரிவதில்லை,,,,,,, நமது காதுக்கும் சிறுநீரகத்திற்கும் , கல்லீரலுக்கும் கண்ணிற்கும் , நுரையீரலுக்கும் மூக்கிற்கும் , இதயத்திற்கும் நாக்கிற்கும் , மண்ணீரலுக்கும் உதட்டிற்கும் தொடர்பு உண்டு . இந்த வெளி உறுப்புகளில் ஏதாவது பாதிப்பு இருந்தால், அதை நீங்கள் உணர்ந்தால் அது தொடர்புடைய உள்ளுறுப்பு பாதிக்கப் பட்டிருக்கும் , அந்த பாதிப்பை உங்கள் வெளி உறுப்பு முன்கூட்டியே எச்சரிக்கை செய்யும் , உங்கள் உறுப்பு முழுவதும் பழுது ஆவதற்குள் அந்த எச்சரிக்கையை அறிந்து அதற்க்கான சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது . இந்த படத்தில் உள்ள உருவ ஒற்றுமையை பார்த்தாலே உங்களுக்கு புரியும் . …
-
- 2 replies
- 1.3k views
-
-
உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது நம்முடைய ஆரோக்கியத்தை எப்படிப் பாதிக்கும்? உடல் பருமனாய் இருப்பவர்களைவிட, போதுமான உடற்பயிற்சி செய்யாதவர்கள்தான் இரண்டு மடங்கு அதிகமாக மரணத்தைத் தழுவுகின்றனர். தினசரி 20 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்வதன் மூலம் அகால மரணத்தைத் தவிர்க்க முடியும். பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளின் மூலம் எவ்வளவு உப்பை நாம் தினம்தோறும் உட்கொள்கிறோம்? அமெரிக்காவில் உட்கொள்ளப்படும் உப்பில் 75 சதவீதம் பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்கள் வழியாகவே வருகிறது என லினஸ்பாலிங் ஆய்வு நிறுவனத்தின் முடிவுகள் தெரிவிக்கின்றன. டின்களில் அடைத்து விற்கப்படும் பதப்படுத்தப்பட்ட சூப், உருளைக்கிழங்கு சிப்ஸ், ஹாம்பர்கர் மூலமாக அதிகபட்சச் சோடியத்தை அமெரிக்கர்கள் உட்கொள்கின்றனர். நம் நாட்டில…
-
- 2 replies
- 1k views
-
-
40 நாட்களில் வளர்க்கப்பட்டு விற்பனைக்கு வந்து விடும் பிராய்லர் கோழி வளர 12 விதமான கெமிக்கல்ஸ், கோழி சாப்பிடும் உணவோடு கலக்கப்படுகிறது. பிராய்லர் கோழிகளுக்கு அளவுக்கு அதிகமாக ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் கொடுக்கப்படுகிறது. இதனால் கோழிகளுக்கு வரும் குணப்படுத்தக்கூடிய நோயையும் குணப்படுத்த முடியாமல் போவதோடு, இறைச்சியை சாப்பிடும் மனிதர்களுக்கும் நோய்க்கூறுகள் தோன்றுகின்றன என்று சிஎஸ்இ நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆண்களின் உயிரணுக்களை அழிக்கிறது. ஆண்மையை அழிக்கும் பிராய்லர் குழந்தையின்மைக்கு முக்கிய காரணம் பிராய்லர் கோழி. “பத்துப் பதினோரு வயது சிறுமிகள் பெரியமனுஷி ஆவதற்கு பிராய்லர் கோழி தான் காரணம்”. …
-
- 2 replies
- 493 views
-
-
பல ஆராய்ச்சிகள் மற்றும் பரிசோதனை முடிவுகளின் படி, ஒரு ஆரோக்கியமான மற்றும் வளர்ந்த மனித உடலுக்கு ஒரு நாளைக்கு ஒரு 1500 மி.கி அளவுக்கும் குறைவான உப்பு மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தெரிய வருகிறது. ஆனால், நம்மில் பலர் 3000 மி.கிராம் அளவுக்கும் மேல் உப்பை உட்கொள்வது தான் ஒரு அதிர்ச்சிகரமான தகவலாகும். இந்த பழக்கம் மாரடைப்பு, மூளைத்தாக்குதல் மற்றும் பலவிதமான இதய ரத்தக்குழாய் சம்பந்தமான நோய்களை வரவழைக்கின்றன. ஒரு டீஸ்பூன் உப்பில் ஏறக்குறைய 2000 மி.கி சோடியம் இருப்பதால், இன்றைய ஃபாஸ்ட் ஃபுட் உணவகத்தில் ஏதாவது ஒரு உணவு வகையை சாப்பிட்டாலே போதும், அதில் இதைவிட அதிக அளவு உப்பு சேர்க்கப்பட்டிருக்கும் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும். அதிலும் நீண்ட நாட்கள் உப்பு…
-
- 2 replies
- 734 views
-
-
நாம் ஒவ்வொருவருமே முதுமை என்ற ஒன்றை நோக்கி அன்றாடம் பயணம் செய்துகொண்டு இருக்கிறோம். முதுமை வந்துவிட்டால் அதில் கூன் விழுதல் நிகழ்வு இயல்பான ஒன்று. முதுமையில் கூன் விழுதலுக்கு பல காரணங்கள் உள்ளது. அவற்றில் மிக முக்கியமான ஒன்று முதுகெலும்பு பாதிப்படைதல் (Degeneration of vertebrae) லாகும். மனித உடலின் பின்புறத்தில், கழுத்துப் பகுதியில் ஆரம்பித்து, அடிப்பகுதியிலுள்ள `பிருஷ்டம்’ வரை உள்ள தண்டுவடத்தில், அடுக்கடுக்காக, ஒன்றன் கீழ் ஒன்றாக, வரிசையாக, 33 முதுகெலும்புகள் அமைந்துள்ளன. இதற்கு `வெர்டிப்ரே’ என்று பெயர். மனிதன் முதற்கொண்டு, பாலூட்டி விலங்குகள் அனைத்திற்கும் இந்தமுதுகெலும்புகள் உள்ளன. ஒவ்வொரு முதுகெலும்புக்கும் இடையில், `இன்டர் வெர்டிப்ரல் டிஸ்க்’ என்று சொல்லக்கூடிய …
-
- 2 replies
- 1.8k views
-
-
காய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும் கத்தரிக்காய இதில் பல வண்ணங்கள் உண்டு என்றாலும் அனைத்திலும் உள்ள சத்து ஒன்றேதான். பிஞ்சு கத்தரிக்காய் சமைப்பதற்கு நல்லது. முற்றின கத்தரிக்காய் அதிகம் சாப்பிட்டால் சொறி சிரங்கைக் கொண்டு வரும். இதில் தசைக்கும், இரத்தத்திற்கும் உரம் தருகிற வைட்டமின்கள் சிறிதளவு உள்ளன. இதனால் வாய்வு, பித்தம், கபம் போகும். அதனால் தான் பத்தியத்துக்கும் இக்காயைப் பயன்படுத்தச் சொல்கிறார்கள். அம்மை நோயால் பாதிக்கப்படுபவர்கள் இதை உண்டு நல்ல பயன் பெறலாம். அவரைக்காய இதிலும் பல வகைகள் உண்டு. வெள்ளை அவரைப் பிஞ்சை நோயாளிகள் உண்ணும் காலத்தில் பத்திய உணவாக உண்ணலாம். இதை சமைத்து உண்டால் உடலை உரமாக்கும் காம உணர்ச்சியைப் பெ…
-
- 2 replies
- 2.7k views
-
-
சித்த மருத்துவம் பழங்களின் மருத்துவ குணங்கள் 1.செவ்வாழைப்பழம் கல்லீரல் வீக்கம், மூத்திர வியாதியை குணமாக்கும் 2.பச்சை வாழைப்பழம் குளிர்ச்சியை கொடுக்கும் 3.ரஸ்தாளி வாழைப்பழம் கண்ணீற்கும், உடல் வலுவுக்கும் நல்லது. 4.பேயன் வாழைப்பழம் வெப்பத்தைக் குறைக்கும் 5.கற்பூர வாழைப்பழம் கண்ணிற்குக் குளிர்ச்சி 6.நேந்திர வாழைப்பழம் இரும்பு சத்தினை உடலுக்கு கொடுக்கும் 7.ஆப்பிள் பழம் வயிற்றுப் போக்கு, குன்மம், சீதபேதி, சிறுநீரகக் கோளாறுகள், இதய நோய்கள், இரத்த அழுத்தம் ஆகியவைகளுக்கு நல்லது 8.நாவல் பழம் நீரழிவை நீக்கும், வாய்ப்புண், வயிற்றுப் புண்ணை நீக்கும், விந்துவை கட்டும் 9.திரட்சை 1 வயது குழந்தைகளின் மலக்கட்டு, சளி, கா…
-
- 2 replies
- 2.9k views
-
-
மணம் கமழும் மல்லி, மதுரை மல்லி என்றெல்லாம் தெரியும். ஆனால் மருத்துவ மல்லியைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? தலையில் சூடுவதற்கும், மாலை அலங்காரங்களுக்கும் பயன்படும் மல்லிகையின் மருத்துவ குணங்களை அறிந்து கொள்ளுங்கள். சிலருக்கு வயிற்றில் கொக்கிப் புழு, நாடாப் புழு போன்றவைகள் உருவாகும். இதற்காக பெரிதாக கவலைப்பட வேண்டாம். மல்லிகைப் பூக்கள் சிலவற்றை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, அதனை வடிகட்டி அருந்தி வந்தால் போதும், குடற்புழுக்கள் தானாக வெளியேறிவிடும். புழுக்களைத்தான் வெளியேற்றும் என்று நினைக்காதீர்கள், சிறுநீரகக் கற்களையே கரைய வைக்கும் குணம் இந்த மென்மையான மல்லிகைப் பூக்களுக்கு உண்டு. என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? …
-
- 2 replies
- 914 views
-
-
பட மூலாதாரம்,LUISA TOSCANO படக்குறிப்பு, பிரேசிலைச் சேர்ந்த 38 வயதான லுயிசா டோஸ்கானோ, தனக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டபோது அதிர்ச்சியடைந்ததாகக் கூறுகிறார். கட்டுரை தகவல் எழுதியவர், லூயிஸ் பாருச்சோ பதவி, பிபிசி உலக செய்திகள் 4 பிப்ரவரி 2025, 03:47 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் தனக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பதாக லுயிசா டோஸ்கேனோவுக்கு தெரிந்தபோது அவர் திகைத்துப் போனார். "இது முற்றிலும் எதிர்பாராதது," என்கிறார் பிரேசிலை சேர்ந்த லுயிசா. அவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. "நான் சிறப்பாக, ஆரோக்கியமாக, முழு உடற்தகுதியோடு இருந்தேன், எந்த ஒரு நோய்க்கான அபாயம…
-
-
- 2 replies
- 395 views
- 1 follower
-
-
ஜெ.கிருஷ்ண மூர்த்தியின் சிந்தனைகள் என்ற நூலைப் படிக்க ஆரம்பித்தேன். அவர் சொல்கிறார்... வெளிப்படையாக, நாம் நாசூக்கானவர்களாக, கண்ணியமானவர்களாகத் தெரியலாம். ஆனால், உள் மனதில் வெறுப்பு, பொறாமை, துவேஷம், வன்முறை ஆகியவற்றைக் கொண்டிருக்கிறோம். மிருகத்தைத் தட்டிக் கொடுத்து நல்லவிதமாக நடத்தும் வரை, அது நம்மிடம் நட்புறவோடு இருக்கும். அதை பகைத்துக் கொள்ளும் போது, அதன் உண்மையான வன்முறை ரூபம் நமக்கு புலப்படும். நாமும் அத்தகைய மிருக சுபாவம்தான் அடிப்படையில் பெற்றிருக்கிறோம். நம் விருப்பும், வெறுப்பும்தான் வன்முறையின் அடிப்படை. "நீ கிறிஸ்தவன் - நீ இந்து - நீ இஸ்லாமியன்' போன்ற பிரச்சாரங்கள், ஆழ்மனதில், எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன என்பதைப் புரிந்து கொள்ள வேண்ட…
-
- 2 replies
- 1.4k views
-
-
இந்து : ஹலோ டொக்டர்! டொக்டர் : ஹலோ இந்து! என்ன இந்த விடிய வெள்ளன என்னத் தேடி வந்திருக்கிறாய்..என்ன விசயம்? இந்து : அது வந்து டொக்டர்... டொக்டர் : கமோன் இந்து என்னட்ட என்ன தயக்கம்? உன் அம்மாட்ட சொல்லாத உன் போய்பிரண்ட் ஐ பற்றியே என்னட்ட சொல்லியிருக்கிறாய் இப்ப என்ன புதுசா தயக்கம்? இந்து : தயக்கம் என்றில்லை..கொஞ்சம் பயம் கொஞ்சம் குழப்பம்..அதான் உங்களிட்ட எப்பிடிக் கேக்கிறதெண்டு.. டொக்டர் : வெளிப்படையாப் பேசினாத்தான் குழப்பம் தீரும். என்ன விசயமம்மா? இந்து : செக்ஸ்ல ஒருக்காலும் ஈடுபடாத ஆக்களுக்கும் ஜெனிற்றல் வார்ட் வருமா டொக்டர்? டொக்டர் : இல்லை! ஜெனிற்றல் வார்ட் வாறதுக்கு தகாத உடலுறவு , கருத்தடை மாத்திரை உட்கொள்ளல் போன்ற பல காரணங்கள் இருக்கு. இ…
-
- 2 replies
- 1.7k views
-
-
கழிப்பறைக்கு செல்ல சோம்பேறிகளான ஆண்கள் - ஆரோக்கியமாக வாழ மாற்றவேண்டிய பழக்கவழக்கங்கள்! [Thursday, 2013-04-11 18:38:56] உடல் மற்றும் மனம் ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு, சரியான டயட்டை மேற்கொள்ள வேண்டும். அத்தகைய டயட் மட்டுமின்றி, ஒரு சில ஆரோக்கியமான மற்றும் சுத்தமான பழக்கவழக்கங்களும் மிகவும் அவசியம். அதிலும் இத்தகையவற்றை ஆண்களிடம் பார்க்கும் போது, பெரும்பாலான ஆண்களிடம் ஒருசில ஆரோக்கியமற்ற மற்றும் சுத்தமில்லாத பழக்கங்களும் உள்ளன. பொதுவாக உலகில் இருக்கும் அனைவருக்கும் ஒருசில நல்ல மற்றும் கெட்ட பழக்கங்கள் இருக்கும். ஆனால் அத்தகைய பழக்கங்களில் கெட்டவை அதிகம் இருந்தால், பின் அவை உடலுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். அதிலும் புகைப்பிடித்தல் ஆண்கள் மற்றும் பெண்களிடம் இருக்கும் கெட…
-
- 2 replies
- 732 views
-
-
பட மூலாதாரம்,FAKHRUL ALAM கட்டுரை தகவல் எழுதியவர், தாரிக் ஸமன் ஷமல் பதவி, பிபிசி பங்களா சேவை ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வங்கதேசத் தலைநகர் டாக்காவில் உள்ள தனியார் மருத்துவமனையில், பத்து வயது சிறுவன் ஒருவன், ஆணுறுப்பின் முன்தோல் நீக்கும் அறுவை சிகிச்சையின் போது (சுன்னத்) உயிரிழந்தார். அஹ்னாஃப் தஹ்மீத் என்ற அச்சிறுவன் செவ்வாய்க்கிழமை இரவு அறுவை சிகிச்சை செய்வதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தங்களின் அனுமதியைப் பெறாமலேயே 'முழு மயக்க மருந்து' கொடுத்த காரணத்திலேயே அச்சிறுவன் உயிரிழந்ததாக சிறுவனின் குடும்பத்தார் குற்றம்சாட்டுகின்றனர். ஒன்றரை மாதங்களுக்கு முன்பு, வங்கதேசத்தில், அயன் அகமது என்…
-
- 2 replies
- 1.1k views
- 1 follower
-
-
குடல் பகுதி. | பிரதிநிதித்துவ நோக்கத்திற்காக... நாம் உடல் பருமன் குறித்து அதிகம் கவலைப்படுகிறோம். இதனால் சதைபோடும் உணவுகளை எடுக்கக் கூடாது என்று நாம் உறுதியாக இருந்தாலும் தவிர்க்க முடியாமல் அவற்றை சாப்பிடுகிறோம் இது ஏன் என்று பலருக்கு வியப்பாகவே இருக்கும். இதற்கான காரணம் என்னவென்று அமெரிக்க ஆய்வு ஒன்று ஆராய்ந்துள்ளது. குடல் பாக்டீரியாக்களைக் கொண்டு உடல் பருமன் நோயைக் குணப்படுத்தலாம் என்’று சில ஆய்வுகள் தெரிவிக்கையில், இந்த ஆய்வு அதற்கு மாறான ஒரு முடிவைக் கண்டடைந்துள்ளது. அதாவது நம் குடலில் வாழும் பாக்டீரியா மூளையின் செயல்பாட்டை தனக்குச் சாதகமாகத் தூண்டி விடுகிறது என்று இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கலிபோர்னியா பல்கலைக் கழக ஆய்வாளர்கள் இது குறித்து …
-
- 2 replies
- 596 views
-
-
வாழைப்பழத்தின் அதிசயிக்க வைக்கும் நற்குணங்கள்! வாழைப்பழம் ஒரு சாதாரணப் பழவகையைச் சேர்ந்ததாக இருந்தாலும், அதன் மருத்துவ குணங்கள் அதிசயிக்க வைக்கின்றன. இதில் குளூக்கோஸ், ஃபிரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் போன்ற சர்க்கரைகளுடன் நார்ச்சத்தும் அடங்கி உள்ளதால் அற்புதமான உணவாகும். 1. மனஉளைச்சலைக் குறைக்கும் அருமருந்தாக வாழைப்பழம் பயன்படுகிறது. வாழைப்பழத்திலிருக்கும் ட்ரிப்டோஃபேன் (Tryptophan) எனும் புரதம் மனஉளைச்சலைக் குறைத்து ஆறுதல் அளிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. 2. இரும்புச்சத்து அதிகம் இருப்பதால் சிவப்பணுக்கள் குறைபடும் இரத்த சோகைக்கும் அருமருந்தாய் அமைகிறது வாழைப்பழம். 3. பொட்டாசியம் இருந்தாலும் உப்புச் சத்து குறைவாக இருப்பதால் இது இரத்த அழுத்தத்தைச் …
-
- 2 replies
- 1.7k views
-
-
இரவு 10 மணி முதல் 11 மணிக்குள் உறங்கச் செல்வதால் இதய நோய் வருவதற்கான அபாயம் குறையும் இரவு 10 மணி முதல் 11 மணிக்குள் உறங்கச் செல்வதால், இதய நோய் வருவதற்கான அபாயம் குறையும் என புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இரவு 10 மணி முதல் 10.59 மணி வரை தூங்குவதுடன் ஒப்பிடும்போது இரவு 11 மணி முதல் 11.59 மணி வரை 12 விகிதத்திற்கும் அதிகளவிலான ஆபத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இரவு 10 மணிக்கு முன்னர் தூங்கினால் இதய நோய் வருவதற்கான 24 விகிதத்திற்கும் அதிகளவிலான ஆபத்து இருப்பதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கிடையில், நள்ளிரவில் அல்லது அதற்குப் பின்னர் தூங்குவதால் இருதய நோய்க்கான ஆபத்து 25% அதிகமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2006 ம…
-
- 2 replies
- 431 views
-
-
இன்றைய காலகட்டத்தில் ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது உடல் பருமன் அல்லது ஊளைச் சதை உடம்பு. இதற்கு ஆண்களுக்கு முக்கியக் காரணமாக அமைவது பணியிடத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது, வீட்டுச் சாப்பாடு இல்லாமல் கண்ட இடங்களில் கண்டவற்றை வாங்கிச் சாப்பிடுவதால் கொழுப்பு அதிகரிப்பது போன்றவையாகும். பெண்களைப் பொறுத்தவரை உடல் உழைப்பு குறைந்து போனது மட்டுமின்றி, போதுமான சத்தான உணவு இல்லாததும் ஒரு காரணமாக இருக்கிறது. இதுதவிர, அதிக நேரம் தொலைக்காட்சி முன்பு அமர்வது, பகலில் அதிக நேரம் தூங்குவது போன்றவையும் காரணமாக உள்ளது. இதுபோன்றவர்களுக்கு எளிய வழியில் உடல் பருமனைக் குறைப்பது எப்படி என்பதை இப்போது பார்ப்போம். சாதாரணமாகத் தண்…
-
- 2 replies
- 3.3k views
-
-
வெளியூருக்கு செல்லும் போது ஏன் ஃப்ரீசரில் ஒரு நாணயத்தை வைத்து செல்ல வேண்டும் என தெரியுமா.? விடுமுறை காலத்தில் பலரும் வெளியூருக்கு செல்ல திட்டம் போட்டிருப்போம். அப்படி செல்லும் போது, நம் வீட்டில் எத்தனை நாள்/எவ்வளவு நேரம் மின்சாரம் போனது என்று தெரியாது. குறிப்பாக நீங்கள் 1-2 நாட்கள் ஊருக்கு செல்ல திட்டம் தீட்டியிருந்தால், கண்டிப்பாக நம் வீட்டு ஃப்ரிட்ஜில் ஒரு சில சமைத்த உணவுகளை வைத்துவிட்டு செல்வோம். கோடை காலம் ஆனால் இனிமேல் தான் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுமே. நீங்கள் ஃப்ரிட்ஜில் வைத்து சென்ற உணவுப் பொருள் நன்றாக இருக்குமா இல்லை என்று ஒவ்வொரு முறையும் அதை சூடேற்றி பார்த்து தெரிந்து கொள்ள முடியாது. எனவே தமிழ் போல்ட் ஸ்கை ஓர் அற்புதமான வழியை கீ…
-
- 2 replies
- 989 views
-
-
உங்களுக்கு ஏன் உடல் எடை அதிகரிக்கிறது? 5 ஆச்சரிய காரணங்கள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க மன உறுதியுடன் இருந்தால் உடல்பருமனை குறைக்க முடியும் என மக்கள் நம்பலாம் ஆனால் ஆராய்ச்சிகள் வேறு சில உண்மைகளை சொல்கின்றன. உடல்பருமன் உண்மைகள் எனும் ஆராய்ச்சியில் வெளிப்பட்டுள்ள உடல் எடையை பாதிக்கும் ஐந்து ஆச்சர்ய உண்மைகளை இங்கே படிக்கலாம். படத்தின் காப்புரிமைJUSTIN SULLIVAN …
-
- 2 replies
- 907 views
-
-
மழை காலங்களில் சிறந்த உணவு எது என்று பலருக்கு தெரியாமல் இருக்கும். எதை சாப்பிடலாம், எதை சாப்பிடக் கூடாது என்று குழப்பமாக இருக்கும். சிலருக்கு ஒத்துக்கொள்ளும், சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். இதை தீர்க்க சில உணவு குறிப்புகள் இதோ 1. மழை நேர வைரஸ் காய்ச்சலுக்கு நிலவேஷ்பு கஷாயம் தான் மிகச்சிறந்த மருந்து. நம் வீட்டிலேயே நிலவேம்பு பொடியை வாங்கி வைத்துக் கொண்டால் நல்லது. இந்த நிலவேம்பு பொடியுடன் தண்ணீர் சேர்த்து காய்ச்சி, பனங்கற்கண்டு சேர்த்து, கொதிக்க வைத்து, வடிகட்டி, வைரஸ் காய்ச்சல் உள்ளவர்களுக்கு கொடுக்கலாம். உடனடியாக காய்ச்சல் பறந்தோடி விடும். 2. மழைக் காலத்தில் நாம் சாப்பிடும் உணவில், இனிப்பு அதிகம் சேர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. 3. பால் மற்றும் பால்…
-
- 2 replies
- 3.3k views
-
-
இன்றைய அம்மாக்களுக்கு பொறுமை குறைவு. எல்லாம் அவசரம். ஏதோ கடமைக்கு பிள்ளை வளர்க்கிற மனப்பான்மை. ஆனால் அவை பிள்ளைகளுக்கு பல வழிகளில் ஆபத்தாக முடிகின்றன. முதலில் அம்மாக்களோ அப்பாக்களோ.. தாங்கள் சின்னனா இருக்கேக்க என்னென்னத்தை அசெளகரியமா அனுபவிச்சாங்களோ.. அதை உணர்ந்து கொள்ளனும். பிள்ளைகள் அதனை அனுபவிக்க அனுமதிக்கக் கூடாது. குறிப்பாக.. பிள்ளைகளை தூக்கும் முறைமையில் இருந்து அரவணைக்கும் பாங்கு.. கதை பேசும் இனிமை.. பொறுமை.. அவர்களின் நிலைக்கு இறங்கி வந்து குழந்தையாகவே ஆகிடும் மனநிலை.. என்று பல வழிகளில் தம்மை அவர்கள் முன்னேற்றிக் கொள்ளனும். அப்பாக்கள் அம்மாக்கள் குழந்தைகளின் முன்னால் குடிப்பது.. புகைப்பிடிப்பது.. சண்டை போடுவது.. கணணியில் அதிகம் மிணக்கடுவது.. குழந்தைகள…
-
- 2 replies
- 805 views
-
-
குறட்டை வராமல் தடுக்க குறட்டை விடுவதால் பக்கத்தில் உறங்குபவர்களுக்கு தொந்தரவை ஏற்படுத்துவதுடன், அவர்கள் மீது கடும் வெறுப்பையும் ஏற்படுத்துகிறது. குறட்டையை குறைக்கு பல்வேறு விதமான வழிமுறைகள் உள்ளன, இதனை தடுப்பதற்கு சில கருவிகளும் விளம்பரப்படுத்தப்படுகின்றன. விசேஷ தலையணை, கழுத்துப் பட்டைகள், நாக்கை அழுத்திப் பிடிக்கும் கருவிகள் என பல வகைகள் உள்ளன. மேலும் ஸ்பைரோ மீட்டர் கருவியால் மூச்சுப் பயிற்சி செய்தல், பலூன் ஊதுதல், புல்லாங்குழல் ஊதுதல் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தினமும் 30 நிமிடம் மேற்கொண்டால் குறட்டை குறைகிறது என்பது ஆய்வில் கண்டறிந்த உண்மை. ஆக்சிஜனை உடலில் தேவையான இடத்திற்கு எடுத்து செல்லும் வகையில் புதிய கருவிகள் தற்போது கிடைக்கின்றன. அறையில் உள்ள ஆக்சிஜ…
-
- 2 replies
- 7.6k views
-