நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3014 topics in this forum
-
இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பலநேரங்களில் சொல்வது மறந்திட்டேன் என்பதாகத்தான் இருக்கும். சில பேருக்கு நம்ம மூளையில் மெமரி கார்டு பொருத்தினால் கூட நல்லா இருக்கும் என்று நினைக்கும் அளவிற்கு ஞாபக சக்தி குறைவாக இருக்கிறது. தேவையான சத்துக்கள் நாம் சாப்பிடும் உணவிலிருந்து கிடைக்காததே இதற்கு காரணம். காரட், தக்காளி, திராட்சை, ஆரஞ்சு, செர்ரி போன்ற பளபளப்பான வண்ண உணவுகளில் மூளைக்கு மிகத் தேவையான வைட்டமின்கள், மினரல்கள், பைட்டோ கெமிக்கல்கள் நிறைந்துள்ளன. ஒரு வாரம் காரட் சாப்பிட்டவர்களையும், காரட் சாப்பிடாதவர்களையும் பரிசோதித்த போது, காரட் சாப்பிட்டவர்களின் மூளைத் திறன் மிகச்சிறப்பாக இருந்தது என்கிறது மனோதத்துவ பேராசிரியர் பால்கோல்ட் என்பவரின் ஆய்வு முடிவுகள். இ…
-
- 2 replies
- 11.6k views
-
-
தினமும் காலையில் தூக்கத்தில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவது ஜப்பானில் இப்போது பிரபலமாகி வருகிறது. இங்கு தரப்பட்டிருக்கும் கீழ்வரும் விபரங்கள் ஜப்பானிய மருத்துவர்களால் தண்ணீரைக் கொண்டு பல வியாதிகளைக் குணப்படுத்த முடியும் என்ற விஞ்ஞான முறைப்படி நிரூபிக்கப்பட்ட தகவல்கள் ஆகும். இம் முறையை நம் முன்னோர்கள் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாக பின்பற்றி வந்துள்ளார்கள். அவர்கள் தண்ணீருக்குப் பதிலாக பழந்தண்ணீரை (சோற்றுப் பானைக்குள் எஞ்சிய சோற்றிக்குள் விட்டு வைத்த நீர்) குடித்துவிட்டு தோட்டத்திற்கோ, வேறு தொழில்களுக்ககோ செல்வார்கள். அதனால் அவர்கள் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். ஆனால் தற்பொழுது நாகரீக உலகில் அவையெல்லாம் அநாகரிகமாக கணிக்கப்பெற்று கட்டிலில் தேனீர் (Bed …
-
- 21 replies
- 11.5k views
-
-
சமையலுக்கு ஒலிவ் எண்ணெய்யைப் பாவிப்பதால் சுமார் 9% புற்றுநோய் ஏற்படுவதற்கான ஆபத்தைக் குறைக்கலாம் என்று கிறீஸ் மற்றும் ஸ்பெயின் வாழ் மக்களிடம் நடத்திய ஆய்வில் இருந்து தெரியவந்துள்ளது. ஸ்பெயின் மற்றும் கிறீஸ் மக்களிடம் புற்றுநோய் மற்றும் இதய நோய் தாக்கம் ஒப்பீட்டளவில் குறைந்திருப்பதற்கு அவர்களின் உணவுப்பழக்கமே முக்கிய காரணம் என்று அறியப்பட்டுள்ளது. அதிகம் பழங்கள் மற்றும் மரக்கறி வகைகளையும், ஒலிவ் எண்ணொய், மீன் உணவுகளையும், சிவப்பற்ற இறைச்சிகளையும், சீரியல் வகைகளையும் மற்றைய உணவுகளை விட உண்பது புற்றுநோய் மற்றும் இதய நோய்களைக் குறைக்க உதவும் என்றும் குறித்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஒலிவ் எண்ணொய் அதிக அளவு நிரம்பாத கொழுப்பு அமிலங்களைக் கொண்டது என்பதும் குறிப…
-
- 30 replies
- 11.5k views
-
-
28/03/2010 Dr.M.K.Muruganandan ஆல் >பெண் குழந்தைகள் வளரும் போது உடல் வாளிப்படைகிறது, மெருகேறுகிறது. தட்டையான மார்பில் குரும்பை அரும்புகிறது. எங்கிருந்து வந்ததெனத் தெரியாது கவர்ச்சி ஓடி வந்து அப்பிக் கொள்கிறது. பருவமடைதல் செய்யும் அற்புதம் இது. முதல் பீரியட் வந்ததும் அவள் பெரிய பெண்ணாகிறாள். ஆனால் பருவமடைதல் பெண்களுக்கு மட்டுமானது அல்ல. ஆண் குழந்தைகளும் பிள்ளைகளாக வளர்ந்து பருவமடையவே செய்கிறார்கள். ஆண் குழந்தை ‘பெரிய பிள்ளை’ ஆவது எப்போது? இரவு படுக்கையில் தானாகவே விந்து வெளியேறிவிட, அவசர அந்தரமாக காலையிலேயே பாத்ரூம் சென்று குளித்து அல்லது உடலைச் சுத்தம் செய்து சாரத்தையும் கழுவிப் போட்டுவிட்டு, ஒன்றும் தெரியாத அம்மஞ்சி போல வந்து அமர்ந்து கொள்கிறானே அ…
-
- 2 replies
- 11.3k views
-
-
பெண் பருவமடைய ஆரம்பித்ததிலிருந்து தொடங்கும் மாதாந்திர பிரச்னையான மாதவிலக்கு முழுமையாக நின்று விடுவதற்கு "மெனோபாஸ்" என்று பெயர். "மெனோபாஸ்" என்ற வார்த்தை பெண்களின் மகப்பேறு வாழ்க்கை வரலாற்றில் காணப்படும் இறுதியான அத்தியாயம். சுருங்க கூற வேண்டுமாயின் "கருப்பை" முற்றிலுமாக எடுத்துக் கொள்ளும் ஓய்வு நேரம் ஆகும். இந்நிகழ்ச்சி உள்ளுறுப்புகளில் நடந்தாலும், வெளிப்படையாக அறிந்து கொள்வது எப்படி? என்றால், வழக்கமாக வரும் மாதவிலக்கு, முற்றிலுமாக நின்று விடும் கட்டம் தான் "மெனோபாஸ்" என்று கூறப்படுவதாகும். பேருந்தில் பிரயாணம் பண்ணும்போது நிறைய நிறுத்தங்கள் வந்தாலும் சில இடங்களில் மட்டும்தான் `ஸ்டேஜ்' வருகிறது. அங்கு தான் சோதனை செய்யப்படும். அது போலவே பெண்களின் வாழ்க்கையிலும் ஒன…
-
- 20 replies
- 11.3k views
-
-
ஆரோக்கியமான வாழ்வு . எளிதாக மூன்று நாட்களில் உங்கள் நுரையீரலை சுத்தம் செய்வது எப்படி ? சிலர் தங்கள் வாழ்க்கையில் புகை பிடிக்காது இருந்திருந்தாலும் நுரையீரல் பிரச்சனை இருக்கலாம். அதே சமயம்இ 45 வருடங்களாக புகைபிடிக்கும் ஒருவருக்கு நுரையீரல் பிரச்சனை இல்லாது ஆரோக்கியமாக இருக்கலாம். இது மனிதருக்கு மனிதர் வித்தியாசப்படும . எவ்வாறு இருப்பினும்இ மூன்று நாட்களில் நுரையீரலை சுத்தம் செய்வது எப்படி என்று பாரப்போம். • இதை செய்வதற்க்கு இரண்டு நாட்களுக்கு முன்பு எந்த விதமான பால் பொருட்களையும் சாப்பிடாமல் அறவே ஒதுக்க வேண்டும். ஏனென்றால் பாலினால் உண்டாகும் நச்சுக்களை உடலில் இருந்து வெளியேற்ற வேண்டும். • இதற்கு முதல்நாள் சுக்குமல்லி தேநீர் போன்ற எதாவது மூலிகை டீயைக் குடிக்கலா…
-
- 3 replies
- 11.1k views
-
-
உடல் எனும் இயந்திரம்: இதயம் ஓர் இரட்டை மோட்டார்! லப்.. டப்.. லப்.. டப்.. சத்தம் உங்கள் இடது நெஞ்சில் இருந்து வருகிறதா? இதுதான் இதயத் துடிப்பின் அற்புத ஒலி. உங்கள் உள்ளங்கைக்குள் அடங்கிவிடும் அளவுக்குத்தான் இதயம் இருக்கிறது. ஆனால், அதற்குள்தான் எத்தனை அதிசயங்கள்! இதயம் ஒரு தசை வீடு. அதற்குள் எலும்புகளே இல்லை. இதயத்தின் மேலே இரண்டு அறைகள்; கீழே இரண்டு அறைகள். மேல் அறைகளுக்கு வலது ஏட்ரியம், இடது ஏட்ரியம், கீழ் அறைகளுக்கு வலது வென்ட்ரிக்கிள், இடது வென்ட்ரிக்கிள் என்று பெயர். மேல் அறைகளைவிட கீழ் அறைகளின் சுவர் கொஞ்சம் தடித்து இருக்கிறது. நமக்கு மட்டுமில்லை, பற…
-
- 39 replies
- 11.1k views
-
-
பிராய்லர் கோழியால் ஏற்படும் உடல்நல பாதிப்பு: நாட்டுக் கோழிகளுக்கு பெரும்பாலும் தானியங்கள் போன்ற இயற்கையான உணவுகள் அளிக்கப்படுகிறது. இதனால் அவை குறிப்பிட்ட கால அளவில்தான் வளர்ச்சி பெறும். இதனால் அதில் புரோட்டீன், புரதச் சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இந்த நாட்டு கோழியை சாப்பிடுவோருக்கு தேவையான புரோட்டீன், புரதச் சத்துக்கள் கிடைக்கின்றன. இதன் மூலம் நமக்கு தேவையான நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கிறது. ஆனால் பிராய்லர் கோழி இறைச்சி மனிதனின் உடல் நலத்திற்கு பல்வேறு கேடுகளை விளைவிக்கிறது. தொடர்ச்சியாக பிராய்லர் கோழி சாப்பிடுவோர் குடல் புற்றுநோயின் பிடியில் சிக்கி விடுவார்கள். இதற்கு காரணம் பிராய்லர் கோழியானது இயற்கையான முறையில் வளர்க்கப்படாததுதான். 6 மாதத்தில் மு…
-
- 3 replies
- 11.1k views
-
-
நான் சொல்ல இருந்த செய்தியை , இந்தப் பதிவர் காரணகாரியங்களுடன் சொல்லியிருக்கிறார் . ஆனால் , எனக்கு இப்பிடிப்பட்டவையின்ர வேலையளால நான் முதல் தொடரூந்தில போகேக்கை பெரிய அரியண்டமாயிருக்கு . அவ்வளவு ரொக்ஸிக் :lol: . இனி நான் கையோட மாஸ்க் கொண்டு போகப்போறன் . சிலருக்கு வாய்வுத் தொல்லை அதிகமாக இருக்கிறது. பொது இடங்களில் இருக்கும்போது அதிக சத்தத்துடன் வாய்வு வெளியேறும்போது அதிக சங்கடமாக உணர்கிறார்கள். அதிகமாயும் அடிக்கடியும் வெளியேறுகிறது. பயிறு, பருப்பு சாப்பிட்டால் அதிகமாகிறது. இதைத் தடுக்க என்ன செய்யலாம் என்று மண்டையைப் போட்டு உடைக்கிறார்கள். இவர்களுக்காக இந்த மருத்துவரீதியான ஆலோசனை. முதலில் வாய்வு வெளியேறுவது என்பது ஒரு தொல்லையே ஒழிய அது ஒரு நோய் இல்லை என்பதை உணரவ…
-
- 2 replies
- 11.1k views
-
-
மூலிகை மருந்துகள்: 1. சோற்றுக் கற்றாழையைச் சித்த மருத்துவத்தில் 'குமரி' என அழைப்பர். காய கல்பத்தில் அதுவும் ஒரு மூலிகையாகச் சேர்க்கப்படுகின்றது. அதன் நடுப்பகுதியைப் பிளந்து அதன் கசப்பான சாற்றை எடுத்துச் சற்றே அலசிப் பின் மோரில் கலந்து தினம்தோறும் உண்டு வந்தால், அல்சர் போன்ற நோய்கள் குணமாகும். மேலும் உடலில் இளமைத் தன்மை அதிகரிக்கும். 2. தினம் தோறும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் நாள் பட்ட தோல் நோய்கள் குணமாகும். நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிப்பதுடன், முகப்பொலிவும் உண்டாகும். 3. சர்க்கரை நோய் கட்டுப்பட வெந்த்தயத்தைப் பொடி செய்து தினம்தோறும் ஒரு டீஸ்பூன் வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வர வேண்டும். மேலும் சிறியாநங்கை, பெரியாநங்கையி…
-
- 18 replies
- 10.9k views
-
-
பொதுவாக நரைமுடியை 30-40 வயதிற்கு மேல் தான் சந்திப்போம். ஆனால் தற்போது இளமையிலேயே முடியானது நரைத்து, முதுமைத் தோற்றத்தை தருகிறது. இத்தகைய நரை முடி இளமையில் வருவதற்கு பரம்பரை ஒரு காரணமாக இருந்தாலும், அதிகப்படியான சுற்றுச்சூழல் மாசுபாடு, அதிகளவு மன அழுத்தம் போன்றவற்றால் இளமையிலேயே முடியானது எளிதில் வெள்ளையாகிறது. அதுமட்டுமின்றி, ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கவழக்கங்களால், முடிக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காமல், நரைமுடி, கூந்தல் உதிர்தல் போன்றவை ஏற்படுவதோடு, வழுக்கை தலைக்கும் ஆளாகின்றனர். ஆகவே இந்த மாதிரியான பிரச்சனைகளை சந்தித்தால், அதற்கு முடியை சரியாக பராமரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று அர்த்தம். பொதுவாக நரைமுடியை போக்குவது சற்று கடினமானதாக இருந்தாலும், முறையாக நம்பி…
-
- 14 replies
- 10.9k views
-
-
எனது நண்பர் ஒருவர், வயது 44, தொண்டையில் (டொன்சில் அருகில் ) சின்ன கட்டி வளருகிறது என்று வைத்தியரை பார்க்க போனார். அவரும் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி அதனை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற பரிந்துரைத்தார். வெட்டி எடுத்த துண்டு வித்தியாசமாக இருக்கு என்று அதனை மேலதிக பரிசோதனைக்காக அனுபின்னர்கள் . இன்று நண்பரை கூப்பிட்டு, இது புற்று நோய் என்றும், ஆறு கிழமைகள் ரேடியோ theraphy சிகிச்சை தேவை எனவும், அது உடனடியாக ஆரம்பிக்க போகிறோம் என்றும் கூறி விட்டார்கள். இதைப்பற்றி யாராவது அறிந்திருந்தால் தயவு செய்து எழுதவும். இவ்வளவு நாளும் நல்ல உற்சாகமாக இருந்தவர் இன்று......... என்னவென்று எழுத முடியவில்லை. நாளை தனது 7 வயது மகளுக்கு சொல்ல போகிறார். அவர் சொல்லா விட்டாலும் சிகிச்சை காட்டி கொடுத்து வ…
-
- 4 replies
- 10.9k views
- 1 follower
-
-
மருத்துவ ரகசியம்!. அரைஞாண் நாம் சின்ன வயதில் நம் பெற்றோர் வற்புறுத்தி இடுப்பில் கட்டிவிடும் ஒரு கருப்பு கயிறு. எதற்கு இதை நான் அணிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டால்,திருஷ்டி படகூடாதுன்னு கட்டிவிடுறோம்னு சொல்லுவாங்க..உண்மையிலேயே இதுக்கு தான் இந்த கருப்பு கயிற்றை கட்டுகிறோமா? நிச்சயமாக இல்லை அந்த அரைஞாண் கயிற்றின் ரகசியத்தை நம் முன்னோர்கள் கண்டுபிடித்த ஒரு மருத்துவ ரகசியமே அடங்கியுள்ளது அந்த ரகசியம்...... ஆண்கள் இடுப்பில் கட்டுகிற அரைஞாண்கயிறு ஒரு நோய் தடுப்பு முறை என்பது இன்று பலருக்குத் தெரியாது. ஆண்களுக்குப் பொதுவாக குடல் இறக்க நோய் வருவதுண்டு. அந்நோயைத் தடுக்கவே இடுப்பில் அரைஞாண் கயிறு முன்பெல்லாம் கட்டுகிற பழக்கம் தமிழர்களிடையே இருந்தது. பிறகு அக்கயிறு வெள்ளிக…
-
- 13 replies
- 10.9k views
-
-
உடலை கட்டமைப்புடன் வைக்க முயலும் போது கண்டிப்பாக தவறுகளில் ஈடுபடக்கூடாது. நல்ல கட்டமைப்புடன் இருக்கும் ஒரே காரணத்திற்காக தான் உடற்பயிற்சிகள் செய்யப்படுகிறது. ஆனால் உடலை அப்படி கட்டமைப்புடன் வைப்பதில் ஈடுபடும் போது பல ஆண்கள் சில தவறுகளில் ஈடுபடுகின்றனர். இந்த பொதுவான தவறுகளை சுலபமாக தவிர்க்கலாம். ஜிம்களில் ஈடுபடும் சில பயிற்சிகள் பிரத்யோகமாக ஆண்களுக்காகவே உள்ளது. உதாரணத்திற்கு, ஜிம்மில் உள்ள எடை பயிற்சி பிரிவுக்கு சென்றால் அங்கே ஆண்களை மட்டுமே அதிகமாக காணலாம். உடல் கட்டமைப்பில் ஆண்கள் செய்யும் பொதுவான தவறுகள் எடை பயிற்சியுடன் தான் பெரும்பாலும் தொடர்பில் உள்ளது. இதுப்போன்று வேறு: நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் பக்க விளைவுகள்!!! இவ்வகை கட்டமைப்பு தவறுகள் ஏற்பட கா…
-
- 0 replies
- 10.8k views
-
-
'அசிடிட்டி' எனப்படும் வயிற்றில் ஏற்படும் அமில சுரப்பு பிரச்சனையால், அவதியுறுவோர் ஏராளம்! குறிப்பாக உறைப்பு அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகளை உண்ட பின்னர் இத்தகையோருக்கு நெஞ்செரிச்சல் போன்றவை ஏற்படுவது அதிகம். இவற்றை தடுப்பதற்கும், குணப்படுத்துவதற்கான எளிய வழிகள் இதோ! பாட்டில்களில் அடைக்கப்பட்ட பானங்கள் மற்றும் காஃபின் பொருட்களை அறவே தவிர்த்துவிட்டு, அதற்கு பதிலாக மூலிகை தேனீர் அருந்தலாம். மேலும் தினமும் வெதுவெதுப்பான வெந்நீர் ஒரு டம்ளர் அருந்தலாம். தினசரி உணவில் வாழைப்பழம், தர்பூசணி, வெள்ளரி போன்றவற்றை கட்டாயம் சேர்த்துக்கொள்ளவேண்டும். இளநீர் அருந்தினால் இன்னமும் நல்லது.அது அமிலசுரப்பு பிரச்சனையை தீர்க்கும். தினமும் ஒரு டம்ளர் பால் அருந்துவதும் நல்லதுத…
-
- 0 replies
- 10.8k views
-
-
பொதுவாகவே கர்ப்பிணிப் பெண்களுக்கு சுகப் பிரசவம் ஆவதற்கு சில ஆசனப் பயிற்சிகள் உண்டு. அவற்றை 7ஆம் மாதத்தில் இருந்து செய்யலாம். ஆனால் கர்ப்பிணிகள் ஆசனப் பயிற்சி செய்துதான் சகப்பிரசவம் ஆக வேண்டியதில்லை. வீட்டு வேலைகளை செய்து வந்தாலே எளிதாக அவர்களுக்கு சுகப்பிரசவம் ஆகும். கர்ப்பிணிகள் முதல் 3 மாதத்தில் மல்லாந்து படுப்பதோ, மல்லாந்தபடி படுத்திருந்து அப்படியே எழுவதோ மிகவும் தவறு. முதல் 3 மாதங்களுக்கு ஒருக்களித்து படுத்தபடி இருப்பதுதான், கருவின் வளர்ச்சிக்கு உதவும். அதேபோன்று, ஒருக்களித்த படியே கையை ஊன்றித்தான் எழுந்திருக்க வேண்டும். ஒருக்களித்தபடி படுக்கும் போது வயிறு தளர்வான நிலையில் இருக்கும். ஆனால் மல்லாந்து படுத்தால் வயிறு இழுத்த நிலையில் இருக்கும். அப்படி…
-
- 6 replies
- 10.7k views
-
-
அடர்த்தியான அழகான கூந்தலுக்கு.. «Æ¸¡É, ÀÇÀÇôÀ¡É Üó¾ÖìÌ ¬¨ºôÀ¼¡¾ ¦Àñ¸û ¯ñ¼¡? ¯í¸û ¬¨º ¿¢¨È§ÅÈ º¢Ä ÀÂÛûÇ ÊôЏ¨Çò ¾ó¾¢Õ츢ȡ÷ ¦ºý¨É, ¾¢ÕÁ¨Äô À¢û¨Ç º¡¨Ä¢ø ¯ûÇ, ¬õÀ¢ÂýŠ இý¼÷§¿„Éø «¸¡¾Á¢Â¢ý «ÆÌì ¸¨Ä ¿¢Ò½÷ ±õ. †º£É¡ ¨ºÂò. ¦ºõÀÕò¾¢ இ¨Ä, â, ¦Åó¾Âõ, º¢¨¸ì¸¡ö §º÷òÐ «¨ÃòÐ, „¡õâ×ìÌô À¾¢Ä¡¸ò §¾öòÐì ÌÇ¢òÐ Åà Üó¾ø «¼÷ò¾¢Â¡¸ ÅÇÕõ. «§¾ §À¡Ä, Å¡ÃòÐìÌ ´ÕÓ¨È ¿øÄ Íò¾Á¡É §¾í¸¡ö ±ñ¦½¨Â (¦ºì¸¢ø ¬ð¼ôÀð¼, ¦ºÂü¨¸ ¿ÚÁ½õ ஊ𼡾, «ºø §¾í¸¡ö ±ñ¦½Â¡¸ இÕ󾡸 இýÛõ º¢Èó¾Ð)Á¢¾Á¡¸î ÝΦºöÂ×õ. ¾¨Ä¢ø §¾öòÐ, «¨Ã Á½¢ §¿Ãõ °È¢ Á¢ÕÐÅ¡¸ Áº¡ˆ ¦ºöÂ×õ. Á¢÷측ø¸û ÀÄõ¦ÀÈ ±Ç¢¨ÁÂ¡É ÅÆ¢ இÐ. ±ýÉ ¦ºö¾¡Öõ Óʦ¸¡ðθ¢ÈÐ. ÅÈðº¢Â¡¸ இÕì¸ÈÐ. «¼÷ò¾¢§Â இøÄ¡Áø ±Ä¢ Å¡ø §À¡Ä இÕ츢ÈÐ ±ý¦ÈøÄ¡õ ̨ÈôÀðÎì ¦¸¡ûÀÅ÷¸Ù측¸ ´Õ ЦÀ„ø…
-
- 64 replies
- 10.7k views
-
-
சர்க்கரை நோய் (Diabetes ) நீரிழிவு நோய் எமது உடம்பில் சர்க்கரையை உடலுக்குத் தேவையான சக்தியாக மாற்ற இன்சுலின் அத்தியாவசியம். தேவையான இன்சுலினை உடல் உற்பத்தி செய்யாத அல்லது உற்பத்தி செய்த இன்சுலினைப் பலனளிக்கும் விதத்தில் பயன்படுத்த இயலாத நிலைமையே நீரிழிவு எனப்படுகிறது. குறிப்பாக, இரத்த சர்க்கரை அளவு சரியாகக் கட்டுப்படுத்தப்படவில்லை எனில் உயர் இரத்த அழுத்தம், நாடிகளின் சுவர்களில் கொழுப்பு படிந்து நாளடைவில் அடைபடுதல் (யவாநசழளஉடநசழளளை) இருதயத் தசைகளுக்கு குருதி வழங்கும் நாடிகளில் ஏற்படும் நோய் மற்றும் பாரிசவாதம் ஆகியவை ஏற்படக் கூடிய ஆபத்தை அதிகரிக்கிறது. நீரிழிவில் மூன்று வகைகள் முதலாவதுவகை முதலாவதுவகை (Type I Diabetes) நீரிழிவானது குழந்தைகள் சிறுவர் …
-
- 0 replies
- 10.6k views
-
-
நமது உடலில் எத்தனையோ உறுப்புகள் இருக்கின்றன. ஆனால் நாம் இந்த உலகத்தை மிகத் தெளிவாக உணர்ந்து கொள்ள, பார்க்க, தெரிந்துகொள்ள நமது இருவிழிகள் தான் முக்கிய காரணமாகின்றன. இன்றைய அவசர உலகில் தற்போதுள்ள இளைஞர் சமுதாயம் எப்படி இருக்கின்றது? 10 வயது தாண்டுவதற்கு முன்பே கண்பார்வைக் கோளாறுகள் வருகின்றன. இதற்குக் குழந்தைகளைப் பெற்று எடுக்கும் தாய் _தந்தையரே முதற்காரணம். அடுத்து சத்துக் குறைவான உணவு வகைகளை தொடர்ந்து சாப்பிடுவது, கண் கோளாறு வரத்துவங்கி விட்டால் அதை உடனே தகுந்த மருத்துவரை நாடாமல் அலட்சியமாக விட்டுவிடுவது, அதிக நாட்களுக்குத் தொடர்ந்து கண் சம்பந்தமான நோய்களை கவனிக்காமல் இருந்துவிட்டு நோய் முற்றிய உடன் கடைசியாக மருத்துவரை நாடுவது இப்படி பல்வேறு காரணங்களினால் கண்சம்பந்தமாக ப…
-
- 21 replies
- 10.5k views
-
-
Chennai புதன்கிழமை, மார்ச் 24, 11:33 AM IST 0 கருத்துக்கள்1 பிரதி நண்பன் குடித்த பாட்டிலை வாங்கி, வாய் வைத்து தண்ணீர் குடிப்பது, ஒரே டம்ளரில் டீ குடிப்பது, ஒருவர் கர்சீப்பை இன்னொருவர் துடைத்துக் கொள்வது, தோழி சுவைத்த சாக்லெட்டை வாங்கி கடிப்பது... இது போன்ற விஷயங்களை நட்பின் நெருக்கத்தை வெளிக்காட்டுவதற்காக சிலர் செய்யலாம். ஆனால், அதனால் எந்த அளவுக்கு தொற்றுநோய் பிரச்னை ஏற்படுகிறது என்பது பலருக்கும் தெரியாது. சிறிய விஷயமானாலும், கவனமாக இருந்தால், ஆரோக்கியத்துக்கு குறைவிருக்காது. உங்களை பரிசோதிக்கும் டாக்டரை பாருங்கள்; அவர் பரிசோதித்த பின், டெட்டால் திரவத்தை கையில் தடவிக்கொள்வார்; சோப்பினால் கையை கழுவுவார். அப்படியிருக்கும் போது, நாம் கை, கால்களை ச…
-
- 7 replies
- 10.4k views
-
-
உணர்வுகளைக் தூண்டும் நம்ம நாட்டு "காதல் ஆப்பிள்" ஆண்மையை சீராக்கவல்ல உணவுகள். ஜறுநனநௌனயலஇ 2011-07-27 23:18:42ஸ கஜுராஹோவையும்இ காம சூத்திரத்தையும் உலகுக்கு அளித்த நம் தேசத்தில் 30 கோடி மக்கள் பாலியல் குறைபாடுகளுடன் வாழ்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனால்தான் நமது புராதன இந்திய சமையல் குறிப்புகளில்இ காதலை தூண்டும் உணவுப் பொருள்கள் பற்றி எழுதிவைத்துள்ளனர். உணவுகள் காதல் செயல்பாடுகளை தூண்டுமா என்ற கேள்விக்கு விஞ்ஞானத்தில் பதில் ஆமாம்! என்றுதான் சொல்லப்பட்டுள்ளது. அந்தந்த ஊருக்கு ஏற்றபடி காதல் உணவுகள் மாறுகின்றன. அரேபியருக்கு ஒட்டக திமிழும்இஸ்பெயின் நாட்டவருக்கு குங்குமப்பூவும்இசீனர்களுக்கு பறவைக்கூடு சூப்பும் பாலுணர்வு தூண்டும் உணவாக குறிப்பிடப்பட்டுள்ளன. வை…
-
- 8 replies
- 10.4k views
-
-
உப்பை விட்டால் தொப்பை குறையும்’ : வெள்ளைச்சர்க்கரை வைட்டமின் திருடன்’ | தொகுப்பாளர்: முதுவை ஹிதாயத் | ஆடுதுறை இயற்கை மருத்துவ சங்கத்தின் 294வது கூட்டம் ஆடுதுறை மாவட்ட ஆசிரியர் பயிற்சி கல்வி நிறுவன வளாகத்தில் நடந்தது.துணைத்தலைவர் தர்மதுரை தலைமை வகித்தார். செயலாளர் ராமலிங்கம் 293ம் கூட்ட அறிக்கையும், 2007 நவம்பர் மாத வரவு, செலவு கணக்கையும் சமர்ப்பித்தார். இணை செயலாளர் உலகநாதன் வரவேற்றார். கூட்டத்தின் தலைவர் தர்மதுரை மூச்சுப்பயிற்சியுடன் கூடிய எளிய உடற்பயிற்சிகளைச் சொல்லித்தர கூட்டத்தினரும் செய்து மகிழ்ந்தனர். பின்னர் சிவகாசி இயற்கை வாழ்வியல் இயக்கத்தின் நிறுவனர் சித்தையன் “”ஒல்லி அழகு மேனியைப் பெற உகந்த வழிகள்” என்னும் தலைப்பில் பேசியதாவது.குண்டானால் உண்ட…
-
- 2 replies
- 10.4k views
-
-
இரவு நீங்கள் தூங்கிக் கொண்டிருக்கும்போது, யாரோ உங்கள் மேல் ஏறி அழுத்துவது போல் இருக்கும். உங்களால் கண்ணைத் திறக்க முடியாது. கத்தலாம் என்றாலும் குரல் வெளியே வராது. சரி, திரும்பிப் படுக்கலாம் என்று நினைத்தாலும் திரும்பி படுக்க முடியாது. ஒரு நிமிடம் கழித்துத்தான் உங்களால் எதுவும் செய்யமுடியும். எழுந்து பார்த்தால் யாரும் அருகில் இருக்கமாட்டார்கள். என்னடா இது என்று திகைத்திருப்பீர்கள். இதுதான் அமுக்குவான் பேய். உயிரைக் கொல்லும் அளவுக்கு கொடூரமான பேய் இல்லை என்றாலும், இதுவும் ஒரு முக்கியமான பேயாக கிரேக்கப் புராணங்களில் கூறப்படுகிறது. பொதுவாய் அமுக்குவான் பேய்கள் மற்ற பேய்கள் போல் புளியமரத்திலோ வேப்பமரத்தின் உச்சியிலோ இருக்காது. பூச்சிகளின் இராஜாவான இது உங்கள் வீட்டின் சிலந…
-
- 14 replies
- 10.3k views
-
-
நான் ஒரு உணவுப் பிரியை. நன்றாக வேறு சமைப்பேன். சமைத்துவிட்டு சாப்பிடாமல் இருப்பது எப்படி??? ஆனால் எனக்கு எதை உண்டாலும் ஒருமணி நேரத்தில் சமிபாடடைந்துவிடும். அதனால் ஒரு நாளில் நான்கு தடவையாவது உண்ண வேண்டும். ஆனால் நான் மிக ஆரோக்கியமானவள். பசிப்பது நல்லது தானே என என் குடும்ப வைத்தியரும் கைவிரித்துவிட்டார். பதினெட்டு வயதில்லையாயினும், கொடியிடை இல்லாவிட்டாலும், மெலிந்து இருக்க ஆசை. அதற்காக என்னை சரியான குண்டு என்று கற்பனை செய்ய வேண்டாம். பசிக்காமல் இருந்தால் நான் ஏன் அதிகமாக உண்ணப் போகிறேன். அதனால் உங்கள் ஆலோசனை தேவை. கூற முடியுமா உறவுகளே????
-
- 37 replies
- 10.2k views
-
-
வியக்க வைக்கும் பச்சைத் தேநீர் !! ஒரு டீ குடுங்க என கடைக்காரரிடம் கேட்டு அவர் இரண்டரை இஞ்ச் குவளையில் நீட்டும் தேனீரை சுவைத்துக் குடிக்கும் நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும் கிரீன் டீ என அழைக்கப்படும் பச்சைத் தேநீர் பற்றி ? நிமிடத்துக்கு பத்து என விளம்பரங்களில் தலைகாட்டும் தேநீர்களின் பெயர்களைக் கேட்டுக் கேட்டுக் குழம்பிப் போயிருக்கும் நம்மில் பலருக்கும் தெரியாமலே போய்விட்ட ஒன்று தான் இந்த பச்சைத் தேநீர். இந்தத் தேனீரில் மகத்துவமே இருக்கிறது என ஆராய்ச்சிகள் வியந்து பேசுகின்றன என்பது தான் இந்தத் தேனீரைப் பற்றி நாம் அறிந்து கொள்வது நல்லது என நானும் நினைப்பதற்குக் காரணம். இந்தத் தேனீரை அருந்தி வந்தால் உடல் பருமனாவதிலிருந்து தப்பலாம் எனவும், இந…
-
- 20 replies
- 10.2k views
-