நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3030 topics in this forum
-
புற்றுநோய் மற்றும் இதயநோய் தடுக்கும் உணவுகள்? புற்றுநோயைத்தடுக்க என்னென்ன சாப்பிடவேண்டும் என்று ஒருவர் கேட்டார்.புற்றுநோய்க்கு புகை,பரம்பரை,வேதிப்பொருட்கள் உள்ளிட்ட பல காரணிகள் இருக்கின்றன.உணவின் மூலமாக முற்றிலுமாக புற்றுநோயின் ஆபத்திலிருந்து தப்புவது சாத்தியமல்ல! ஆனால் சில உணவுகள் மூலமாக ஆபத்தை குறைத்துக்கொள்ள முடியும் என்று சொல்லப்படுகிறது.க்ரீன் டீ பற்றிபேசும்போதெல்லாம் புற்று நோய்,இதய நோய் வராமல் தடுக்கும் என்று சொல்வதை கேள்விப்பட்டிருப்பீர்கள்.க்ரீன் டீ பிரதேசமான ஜப்பானில் புற்றுநோய் மிகவும் குறைவாக இருக்கிறது.க்ரீன் டீயில் உள்ள ஆண்டி ஆக்சிடெண்டுகள்தான் காரணம். நமது உடலின் வளர்சிதை மாற்றத்துக்…
-
- 1 reply
- 2.3k views
-
-
புற்றுநோய்: தவறான பழக்கங்களால் வருகிறதா? தானாகவே வருகிறதா? "செல்களின் விபரீத மரபணு மாற்றமே புற்றுநோய்க்கு காரணம்"மனிதர்களுக்கு வரும் புற்றுநோய்களில் மூன்றில் இரண்டு பங்கு புற்றுநோய்கள் அவர்களின் உடலில் இயற்கையாக நடக்கும் மரபணு மாற்றம் காரணமாக நடப்பதாகவும், இந்த வகை புற்றுநோய்களுக்கும், ஒருவரின் புகைபிடிக்கும் பழக்கம் உள்ளிட்ட மோசமான பழக்க வழக்கங்களுக்கும் தொடர்பு இல்லை என்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கிறார்கள். அதேசமயம், மூன்றில் ஒரு பங்கு புற்றுநோய்கள் ஒருவரின் பழக்க வழக்கங்களால் தூண்டப்படுகின்றன என்பதையும் இவர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். எனவே புற்றுநோயை தோற்றுவிக்கும் அல்லது ஊக்குவிக்கும் மனிதர்களின் தவறான பழக்கவழக்கங்களுக்கு எதிராக தொடர்ந்து பிரச…
-
- 2 replies
- 2.4k views
-
-
புற்றுநோய்களுக்குக் காரணமாகும் உடற்பருமன்! பிரித்தானியாவில் புகைபிடிப்பதைவிட நான்கு பொதுவான புற்றுநோய்களுக்கு உடற்பருமனே காரணமாகிறது என தொண்டு நிறுவனமொன்றின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. புகையிலை புகைப்பதை விட அதிக எடை கொண்டிருப்பதால் குடல், சிறுநீரகம், கருப்பை மற்றும் கல்லீரல் புற்றுநோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என கான்ஸர் ரிசேர்ச் தொண்டு நிறுவனம் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மில்லியன் கணக்கானவர்கள் தங்கள் எடை காரணமாக புற்றுநோயால் பாதிக்கப்படுவதாகவும் புகைப்பதை விட உடற்பருமன் காரணமாக ஒருவர் அதிகமாக பாதிக்கப்படுவதாகவும் இந்த ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக புற்றுநோயைத் தடுக்கக்கூடிய முக்கிய காரணியாக புகைபிடித்தல் உள்ளது. உட…
-
- 1 reply
- 639 views
-
-
புற்றுநோய்க் கலங்களை அழிக்கும் தன்மை பாகற்காய் வித்துக்களுக்கு உண்டென பேராதனை பல்லைக் கழகத்தில் மேற்கொண்ட ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளதாக பேராசிரியர் ஜயந்த ராஜபக் ஷ தெரிவித்தார். புற்றுநோய்க்கலங்ளை முற்றாகச் செயல் இழக்கச் செய்யும் ரசாயன இயல்பு பாகற்காய் வித்துக்களுக்கு இருப்பதாக ஆய்வுகள் மூலம் அறிந்து கொண்டதாகவும் பேராதனைப் பல்லைக்கழக மிருகவைத்திய பிரிவு பேராசிரியர் ஜயந்த ராஜபக் ஷ மேலும் தெரிவித்துள்ளார். அவர் இது தொடர்பாக மேலும் கூறுகையில், ஒரு வருட காலமாக பாகற்காய் வித்துக்களை வைத்து தான் மேற்கொண்ட ஆய்வுகளின் படி பாகற்காய் வித்திலுள்ள அல்பா ஸ்டியரிக்பெடி அமிலம் (Steric fatty acid) என்ற ரசாயனம் மூலம் புற்று …
-
- 0 replies
- 279 views
-
-
இந்த செடியின் அனைத்து பாகங்களும் மருத்துவ தன்மை நிறைந்தது. ஒரு காலத்தில் அனைவர் வீட்டிலும் இச்செடி இருக்கும் இன்று இச்செடி இருக்கும் வீடுகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு.வீட்டில் துளசி மாடம் என்று ஒவ்வொரு வீட்டிலும் துளசியை வளர்த்தனர் இன்று அடுக்குமாடி குடியிருப்பில் துளசி வளர்ப்பவர்களின் எண்ணிக்கையும் அதை பயன் படுத்துபவர்களின் எண்ணிக்கையும் குறைந்து விட்டது.பெருமாள் கோயிலில் கொடுக்கப்படும் தீர்த்தத்தில் தான் இன்று துளசியை நிறைய பேர் பார்க்கின்றனர். சாமிக்கு சூடப்படும் மாலையில் தான் சிலர் துளசியை பார்க்கின்றனர் தினமும் இரண்டு இலை துளசி சாப்பிட்டால் நோயை விரட்டலாம் ஆனால் சாப்பிடுபவர்கள் எண்ணிக்கை குறைவு தான். இந்நிலையில் மரபணுமாற்றம் செய்யப்பட்ட துளசியில் அதன் மருத்துவ குணம…
-
- 1 reply
- 654 views
-
-
ஜேம்ஸ்பாண்ட் படங்களில் கதாநாயகனை லேசர் கதிர்கொண்டு, எதிரிகள் தாக்குவதைப் பார்த்திருப்போம். நாயகன் வளைந்து, நெளிந்து எங்கு, எப்படிச் செல்கிறாரோ... அப்படியே அந்தக் கருவியும் சென்று தாக்கும். அதே தொழில்நுட்பத்தில் அறிமுகமாகி உள்ளது, சைபர்நைஃப் எனும் அதிநவீன அறுவை சிகிச்சைக் கருவி. நோயாளி மூச்சுவிடும் அசைவைக்கூட கணக்கிட்டு, புற்று நோய்க் கட்டியை தாக்கி அழிக்கும் இந்தக் கருவி. ஒரு காலத்தில் புற்று நோய்க்கான அறுவை சிகிச்சை சிக்கலானதாகவும், பக்கவிளைவுகள் நிரம்பியதாகவும், அதிக செலவுவைப்பதாகவும் இருந்தது. ஆனால், இன்றைய நவீனத் தொழில்நுட்பத்தின் காரணமாக, சில மணி நேரங்களில் அறுவை சிகிச்சை முடிந்து நோயாளிகள் வீடு திரும்ப முடிகிறது. அப்போலோ ஸ்பெஷாலிட்டி கேன்சர் மருத்துவமனையின…
-
- 0 replies
- 364 views
-
-
படத்தின் காப்புரிமை NORRIE RUSSELL, THE ROSLIN INSTITUTE மரபணு மாற்றம் மூலம், மூட்டு வலி மற்றும் சில வகை புற்றுநோய்க்கு மருந்து தரும் முட்டைகளை இடும் கோழிகளை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்வதைக் காட்டிலும் இந்த மருந்துகளை முட்டையாக இடும்போது பல மடங்கு விலை மலிவானதாக உள்ளது. பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகளை போன்று இந்தக் கோழிகள் துன்புறுத்தப்படமாட்டாது. மேலும் அவை அன்பாக கவனித்துக் கொள்ளப்படும். பெரிய பண்ணைகளில் வாழும…
-
- 0 replies
- 909 views
-
-
இரத்த புற்றுநோயை குணப்படுத்தும் புதிய மருந்து ஒன்றை ஜோன்சன் அண்ட் ஜோன்சன் நிறுவனம் கண்டுபிடித்திருப்பதாகவும், அதற்கு அமெரிக்கா சார்பில் அங்கீகாரமும், அனுமதியும் கிட்டியிருப்பதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. உடலைப் பாதிக்கும் தீரா நோய்களில், மனிதர்களை அச்சுறுத்தி வரும் கொடிய நோயாக புற்றுநோய் இருந்து வருகிறது. அந்த புற்று ரகங்களில் மிகவும் கொடிது இரத்தப்புற்று. உடலின் அவயங்கள் எதிலேனும் புற்றுநோய் அதன் ஆரம்ப நிலையிலேயே அடையாளம் காணப்பட்டால், முழுவதுமாக குணப்படுத்தும் வகையில் நவீன மருத்துவமும் மருந்துகளும் முன்னேற்றம் கண்டுள்ளன. சற்றே முற்றிய நிலையில் புற்று கண்டறியப்பட்டாலும், அறுவை சிகிச்சை வாயிலாக மீளவும் வாய்ப்புகள் மிச்சமிருக்கின்றன. ஆனால், உடலெங்கும் வி…
-
- 1 reply
- 360 views
- 1 follower
-
-
வண்டை உயிரோடு விழுங்கும் சிகிச்சை: பெரு நாட்டிற்கு படையெடு்க்கும் கேரள புற்றுநோயாளிகள். மலப்புரம்: புற்றுநோய்க்கு வண்டு விழுங்கும் சிகிச்சை பெற கேரள மக்கள் பெரு நாட்டை நோக்கி படையெடுக்க உள்ளனர். புற்றுநோய்க்கு பெரு நாட்டின் தலைநகரான லிமாவில் இயற்கை வைத்தியம் அளிக்கப்படுகிறது. அதாவது ஸ்பானிஷ் பூச்சி என்று அழைக்கப்படும் வண்டை புற்று நோயாளிகள் தினமும் விழுங்க வேண்டும். அந்த வண்டு நோயாளிகளின் வயிற்றில் இறந்த உடன் அதன் உடலில் இருந்து வெளிப்படும் ஹார்மோன் புற்றுநோயை குணப்படுத்துகிறது. இந்த வைத்தியம் செய்யும் கிளினிக் ரோஸா எஸ்டினோஸா(60) என்பவரின் மேற்பார்வையில் நடந்து வருகிறது. இந்த வைத்தியம் குறித்து அறிந்து உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் புற்றுநோயால் பாதிக்கப்…
-
- 7 replies
- 925 views
-
-
********
-
- 1 reply
- 1.4k views
-
-
மூளை, முதுகெலும்பு ஆகியவற்றில் உள்ள நரம்புகள் சேதம் அடைந்து இருந்தால் அவற்றை குணப்படுத்தி மீண்டும் வளர உதவும் மருந்து ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்தமருந்து புளியங்கொட்டையில் இருந்து உருவாக்கப்பட்டுள்ளது. பர்க்கின்சன் போன்ற நரம்புசம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்துவதற்கான சிகிச்சையில் இந்த மருந்து ஒரு பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். புளியங்கொட்டையில் இருந்து தயாரிக்கப்பட்ட மருந்துக்கு ஜ்ஹ்றீஷீரீறீuநீணீஸீ என்றுபெயர். இந்த மருந்தை சர்வதேச விஞ்ஞானிகள் குழு பரிசோதித்து பார்த்து இது சேதம் அடைந்த நரம்பு செல்களை குணப்படுத்துவதில் மிகப்பெரிய பங்காற்றும் என்று தெரிவித்துள்ளது. இந்த மருந்தை காயம்பட்ட இடத்தில் திரவமாக ஊ…
-
- 1 reply
- 807 views
-
-
புஷ்-அப் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் மிகப்பெரிய பாடி பில்டர்கள் கூட தங்கள் உடற்பயிற்சியை புஷ்-அப் முதல் தான் தொடங்குவார்கள். சொல்லப்போனால் இது தான் மிக அடிப்படையான உடற்பயிற்சியாகும். அதே போல் மிக முக்கியமான உடற்பயிற்சியும் கூட. இதனை கொஞ்ச வாரங்களுக்கு செய்தாலே போதும், உங்கள் நெஞ்சு மற்றும் ட்ரைசெப்ஸ் பகுதிகளில் கண்டிப்பாக சில மாற்றங்களை காண்பீர்கள். புஷ்-அப் செய்வதென்றால் முதலில் உங்கள் உடலை இரு கைகள் மற்றும் கால்களின் மீது சமநிலைப்படுத்தி, தரையின் மீது உடலை மட்ட நிலையில் வைக்க வேண்டும். உங்கள் கைகளை கொண்டு மேலேயும் கீழேயும் செல்லலாம். இதனால் உடலின் பல்வேறு உறுப்புகள் வலுவடையும். நீங்கள் கட்டுக்கோப்புடன் இருக்க வேண்டுமானால், உங்கள் அன்றாட வாழ்க்கையில் புஷ்-அப் செய்ய…
-
- 0 replies
- 767 views
-
-
பூசணிக்காயின் மருத்துவ குணங்கள் பூசணிக்காய்க்கு வெண்பூசணி, கல்யாணப்பூசணி என்ற பெயரும் உள்ளது. காய்கறி வகைகளில் ஒன்றான, இதைச் சமைத்துச் சாப்பிட்டால் நரம்பைப் பற்றிய நோய்கள், நரம்புத் தளர்ச்சி, வயிற்றுப்புண் மேகவெட்டை, பிரமேக நோய் ஆகியவை உள்ளவர்களுக்கு நோயின் தீவிரம் குறையும். உடல் சூட்டைத் தணிக்கும். சிறுநீர் வியாதிகளை நீங்கும். சதா காலமும் உடல் வலி இருப்பவர்கள் பூசணிக்காயை அடிக்கடி சமைத்துச் சாப்பிட்டால் உடல்வலி தீரும். புத்தி சுவாதீனம் இல்லாதவர்களுக்கு சிகிச்சையளிக்கும்போது தினசரி பூசணிக்காய் சேர்த்து சமைத்த உணவைக் கொடுக்க புத்தி சுவாதீனம் படிப்படியாக மாறி நல்ல நிலைமைக்குத் திரும்பும். மருத்துவத்தில் பூசணிக்காயின் கதுப்பு, நீர்விதை ஆகியவை பயன்படுத்தப் படுகின…
-
- 33 replies
- 10.2k views
-
-
சமூக மட்டத்தில் ஒழிக்கும் தேசிய திட்டம் பூச்சித் தொல்லை "அங்கை பொடியளுக்கு பூச்சி மருந்தே குடுக்கிறாங்கள் இல்லையாம். அதுதான் உங்களிட்டை கூட்டிக் கொண்டு வந்தனான்" பெர்பியூம் வாசனை அறை முழுவதையும் நிறைந்;தது. தாய் மகளையும் இரண்டு பேரப் பிள்ளைகளையும் கூட்டிக் கொண்டு வந்திருந்தாள். அவர்கள் அமெரிக்காவில் வாழ்பவர்கள். விடுமுறைக்கு தாய்நாடு வந்திருந்தார்கள். பொதுவாகக் பூச்சி என்று சொல்லப்படும் குடற் புழுக்கள் அங்கு தொற்றுவதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவு. அதனால் பூச்சி மருந்து வழமையாக கொடுக்க வேண்டிய தேவை அங்கு ஏற்படுவதில்லை. "போன மாதம்தான் பூச்சி மருந்து குடுத்தனீங்கள். இப்ப இரவிலை பல்லை நெறுமுறான் திருப்பி ஒருக்கால் குடுப்பம் " என்றார் மகனோடு வந்த இளம் தந்தை. பல் நொறுமுவதற…
-
- 0 replies
- 1.4k views
-
-
பூஞ்சணங்கள் தரும் கிலி: என்ன நடக்கிறது இந்தியாவில்? கோவிட் தொற்றுக்களின் சமகால அல்லது பின்விளைவாக கறுப்புப் பூஞ்சணமும் (தற்போது வெள்ளைப் பூஞ்சணமும்) பரவி வருவதாகச் செய்திகள் வருகின்றன. இவற்றுள் கறுப்புப் பூஞ்சணத்தின் தொற்றுக் காரணமாக இளம் வயதினர் பலர் கண்களை இழக்க வேண்டிய சத்திர சிகிச்சைக்குட்பட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. கறுப்புப் பூஞ்சணம் என்பது என்ன? எங்கள் சூழலில் அழுகல் வளரிகளாக ஏராளமான பூஞ்சண (fungi) இனங்கள் வளர்கின்றன. மண்ணிலும், நீரிலும் வளரும் இந்தப் பூஞ்சண இனங்களில் மிகப் பெரும்பாலானவை மனிதர்களிலோ விலங்குகளிலோ நோய்களை உருவாக்குவதில்லை. தினசரி நாம் சுவாசிக்கும் காற்றின் வழியே இந்தப் பூஞ்சணங்களின் விதைகளுக்கொப்பான மகரந்தங்கள் எங்கள் உடலினுள் சே…
-
- 2 replies
- 666 views
-
-
பூஞ்சைத் தொற்றால் மனிதர்களை ஜாம்பிகளாக மாற்ற முடியுமா? கட்டுரை தகவல் எழுதியவர்,ஜேம்ஸ் கல்லேகர் பதவி,அறிவியல் செய்தியாளர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,HBO/WARNER MEDIA/LIANE HENTSCHER படக்குறிப்பு, ஹெச்.பி.ஓ. தொலைக்காட்சியில் வெளியான தொடரில் பூஞ்சைத் தொற்று மனிதனின் உடலை துளைத்து கொல்லும் காட்சி பயங்கரமான ஒரு உண்மையை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன் - பாதிக்கப்பட்டவர்களை ஜாம்பிகளாக மாற்றும் பூஞ்சைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா? அதன் விதை உடலுக்குள் நுழைந்து, பின்னர் அது பூஞ்சையாக வளர்ந்து அது வளர்ந்தவரின் ம…
-
- 2 replies
- 434 views
- 1 follower
-
-
Proud To Be Tamil பூண்டின் மகத்துவம் பூண்டை ஆயுர்வேதத்தில் மகா ஒளஷதா என்பார்கள். பூஞ்சைக் காளான் மற்றும் கிருமிகளை ஒழித்து நோய்களை ஓட ஓட விரட்டக் கூடியது பூண்டு. வயதானவர்கள் தினம் ஒரு தம்ளர் பாலில் 5 பூண்டுகளை வேக வைத்து மஞ்சள் தூள், ஏலம், சர்க்கரை சேர்த்து சாப்பிட ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பு நீங்கி வாதம் தடுக்கப்படும். வலி வீக்கத்தை நீக்கும். பி.பியை சரி செய்யும். சர்க்கரை வியாதியை குறைக்கும். கெட்ட கொழுப்பை நீக்கும். புற்றுநோய் வராமல் தடுக்கும் நரம்பு வீக்கமுறுவது, கால் கை வீக்கம், முடிச்சு முடிச்சாக நரம்பு சுருள்வது இவற்றை சரி செய்யும். தினசரி உணவில் பூண்டைச் சேர்த்து சாப்பிட்டால் பல நோய்களுக்கு நோ என்ட்ரி! …
-
- 0 replies
- 462 views
-
-
பூப்பெய்வதற்கு முன் அகற்றப்பட்ட சினைப்பை மூலம் மாதவிடாய் நின்றபின் குழந்தை லண்டனில் பெண் ஒருவர், குழந்தை பருவத்தில் நீக்கப்பட்ட சினைப்பையிலிருந்து எடுத்து உறையவைக்கப்பட்ட திசுவால் கருவுற்று குழந்தை பெற்றெடுத்துள்ளார். புதிய தொழில்நுட்பத்தில் பிறந்த குழந்தை 24 வயதாகும் மோசா அல் மட்ருஷி என்னும் அந்த பெண்மணி, பூப்படைதலுக்கு முன்பு உறைய வைக்கப்பட்ட சினைப்பை மூலம் குழந்தை பெற்று கொண்ட முதல் பெண் ஆவார். லண்டனில் உள்ள தனியார் மருத்துவமனையான போர்ட்லாந்து மருத்துவமனையில் அந்த பெண் ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார்; "அது ஒரு அற்புதமான நிகழ்வு" என்று அவர் அதனை விவரித்துள்ளார். "ஆரோக்கியமான குழந்த…
-
- 2 replies
- 570 views
-
-
பூவுக்கெல்லாம் அரசன் போல் நோய் தீர்க்கும் மாமருந்தாக இருப்பதால்தான் இதனை பூவரசு என்று அழைக்கின்றனர். நூற்றாண்டுகளுக்கு மேல் வாழக்கூடிய மரங்...களுள் பூவரசும் ஒன்று. காயகல்ப மரமான பூவரசு பூமிக்கு அரசன் என்று அழைக்கப்படும் பெருமையுடையது. இதய வடிவ இலைகளைக் கொண்ட இந்த மரம் இந்தியா முழுவதும் காணப்படும். குறிப்பாக தென்னிந்தியாவில் அதிகமாகக் காணப்படுகிறது. இதில் கொட்டைப் பூவரசு சாதாரணப் பூவரசு என இருவகைப் படும். விதைகள் இல்லாமல் சப்பையான காய்கள் இருப்பது சாதாரணப் பூவரசு. கொட்டைப் பூவரசு காய்களை உடைத்தால் உள்ளே நிறைய விதைகள் இருக்கும். இதன் இலை, பூ, பழுப்பு, காய், வேர் மற்றும் பட்டை முதலியன மருத்துவப் பயன் கொண்டவை. பூவரசம் மரத்தில் இதய வடிவ இலைகளின் நடுவே மஞ்சள் வ…
-
- 2 replies
- 2.8k views
-
-
பெண் குழந்தையை பெற்ற ஒவ்வொரு அம்மாக்களும் படிக்க வேண்டியது !! பெண் குழந்தையைப் பெற்ற ஒவ்வொரு அம்மாக்களுக்கும், தன் பெண் குழந்தையின் பூப்பெய்தும் பருவம் குறித்த கவலை நிச்சயம் இருக்கும்.வரக்கூடாத வயதில் வந்துவிடுகிற மாதவிலக்கும் சரி, வர வேண்டிய வயதில் வராத மாதவிலக்கும் சரி… இரண்டுமே அம்மாக்களுக்குக் கவலையையும், மகள்களுக்கு உடல் ரீதியான தொந்தரவையும் தரக்கூடியவை. குறிப்பாக மழலை மாறாத இளம் வயதில், அதாவது 9, 10 வயதுகளில் பூப்பெய்தும் பெண் குழந்தைகள் ரொம்பவே பாவம்! தம் உடலில் நிகழ்கிற மாற்றத்தைப் புரிந்து கொள்ளக்கூடத் தெரியாமல் பெண் குழந்தைகள் ஒரு பக்கமும், அவற்றைப் புரிய வைக்க அவர்களது அம்மாக்கள் இன்னொரு பக்கமுமாகப்படும் அவஸ்தைகளை வீட்டுக்கு வீடு பார்க்கலாம். நீ இனிமே…
-
- 1 reply
- 575 views
-
-
பெண் பிறப்புறுப்பை அழகுப்படுத்தும் அறுவை சிகிச்சை: அவசியமா? பாதுகாப்பானதா? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க பெண்கள் தங்களுடைய பிறப்புறுப்பு சாதாரணமாக தோன்றுகிறதா என்பதை சோதித்து பார்ப்பதற்கு உதவும் வகையில், புதியதொரு ஆன்லைன் வழிகாட்டி பதின்ம வயது பெண்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் காப்புரிமைIMAGE COPYRIGHTSCIENCE PHOTO LIBRARY பாலியல் சுகாதார சேரிட்டி ப…
-
- 0 replies
- 1.1k views
-
-
நாம் உண்ணும் உணவுக்கும் நமக்கு ஏற்படும் உணர்ச்சிகளுக்கும் அதிக தொடர்பு உள்ளது. அதனால்தான் சித்தர்களும், முனிவர்களும் சாத்வீக உணர்வுகளை தரும் உணவுகளை உட்கொண்டு வாழ்ந்தனர். ஆணோ, பெண்ணோ சில நேரங்களில் சில உணர்வுகள் நமக்கு ஏற்பட வேண்டும். அப்பொழுதுதான் மனிதர்கள் என்ற இயல்பான நிலையில் வாழமுடியும். ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பின்னர் பெண்களுக்கு லிபிடோ எனப்படும் பாலுணர்வு சக்தி குறையத் தொடங்கும். இதனால் தாம்பத்ய வாழ்க்கையில் தடுமாற்றங்கள் ஏற்படும். எனவே லிபிடோ சக்தியை உற்சாகம் குறையாமல் வைத்துக்கொள்ள சில உணவுகள் உதவி புரியும் என்கின்றனர் நிபுணர்கள். ஆவகேடோ வெண்ணெய் பழம் என்று அழைக்கப்படும் ஆவகேடோ பழத்தில் உயர்தர பி6 வைட்டமின்கள் உள்ளன. இது டெஸ்டோஸ்ட்டிரான் உற்பத்திய…
-
- 38 replies
- 24.1k views
-
-
பொதுவாக பெண்களின் கைகளில் குறிப்பாக உள்ளங்கைகளில் ஆண்களை விட 50% அதிகமான நோய் விளைவிக்கும் பக்ரீரியாக்கள் வாழ்வதாக அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது. சாதாரணமாக ஒரு மனிதனின் கையில் 150 இனங்களைச் சேர்ந்த பக்ரீரியாக்கள் வாழ்வது இனங்காணப்பட்டுள்ளது. இருப்பினும் மனிதர்களின் கைகளில் மொத்தமாக 4700 க்கும் மேலான வேறுபட்ட இனங்களைச் சேர்ந்த பக்ரீரியாக்கள் உயிர்வாழ்கின்றன என்றும் கண்டறியப்பட்டுள்ளது. இவற்றுள் பல நோயாக்கிகள் ஆகவும் விளங்குகின்றன. ஆண்களின் கைகள் அதிகம் அமிலத்தன்மை உடையவையாக இருப்பதால் பெண்களோடு ஒப்பிடும் போதும் ஒப்பீட்டளவில் அங்கு பக்ரீரியாக்களின் எண்ணிக்கை குறைவாக காணப்படுகின்றன. இருந்தாலும் ஆண்களும் பெண்களைப் போலவே பல வகை பக்…
-
- 21 replies
- 3.8k views
-
-
அழகு குறிப்புகள்:பெண்களின் வயிற்று சதை குறைய.....! அழகை விரும்பாத மனிதர்களே இருக்க முடியாது. அழகான முகத்தை பெற இன்று பலவிதமான ரசாயனக் கலவைகளை முகத்தில் பூசுகின்றனர். சிலர் அழகு நிலையங்களை நோக்கி படையெடுக்கின்றனர். இதையே சாதகமாக வைத்து பணம் பறிக்க பலர் பல அழகுசாதனப் பொருட்களை உற்பத்தி செய்து சந்தையில் வைத்துள்ளார். இதை வாங்கி உபயோகப்படுத்தியவர்கள் யாரும் முழுப் பயன்களை அடைந்ததில்லை. இதற்கு மாறாக முகத்தை கெடுத்துக்கொண்டவர்கள் தான் ஏராளம். முகத்தையும் சருமத்தையும் பேணி பாதுகாக்க இயற்கை மூலிகைகள் நம்மிடையே நிறைந்து கிடக்கின்றன. இந்த மூலிகைகளை பயன்படுத்தி நீங்களே முக அழகைப் பெறலாம். உலர்ந்த மகிழம் பூ பொடி - 200 கிராம் கிச்சிலி கிழங்கு பொடி…
-
- 0 replies
- 1.1k views
-
-
பெண்களில் எண்டோமெற்றியோசிஸ் நோய் ஏற்படுத்தும் தாக்கம் பருவமடைந்த பெண் ஒருவருக்கு மாதவிடாய் வருவது வழக்கம். இதன்போது பெரும்பாலானோரில் ஒருவித சாதாரண வயிற்றுவலி, வயிற்றுத்தசைகளில் இறுக்கம், அசெளகரியம் (Discomfort) என்பன தோன்றுவது வழக்கம். ஆனால் இதற்கு மாறாக சிலரில் அதிகூடிய, பல நாட்கள் நீடிக்கும் வலி ஏற்படுகின்றது. இவ்வாறு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்றுவலியின் போது தோன்றும் நோய் அறிகுறிகளாவன, · வலி வழக்கமாக மாதவிடாய் வருவதற்கு முன் தொடங்கி மாதவிடாய் காலத்தில் ஒன்று / இரண்டு நாட்கள் நீடித்து மறையும். · அடிவயிற்றில் தசைகளில் இறுக்கம் ஏற்படலாம்…
-
- 1 reply
- 447 views
-