யாழ் உறவோசை
குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்
யாழ் உறவோசை பகுதியில் கள உறுப்பினர்களின் குறைகள், நிறைகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் போன்றன பதியலாம்.
707 topics in this forum
-
இவ்வளவு காலமும் யாழ் களத்தினை உருவாக்கி சிறப்பாக நடாத்தி வந்த மோகன் அவர்களுக்கும், அவருக்கு உறுதுணையாக இருந்தவர்களுக்கும், குறிப்பாக இளைஞன், மற்றும் மட்டறுத்துனர்களுக்கும், யாழ் கள உறவுகளுக்கும், வாசகர்களுக்கும் அன்பு கலந்த நன்றிகள். யாழ் களம் தொடர்ந்து இருக்குமா இருக்காதா என்பதற்கு அப்பால்.. இதுவரை காலமும் யாழ் களம் செய்த சேவைகளுக்கு நன்றிகூற கடமைப்பட்டுள்ளோம். வழமைபோல் யாழ் களம் தொடர்ந்து இயங்குமானால் மிக்க மகிழ்ச்சி. இதற்காக ஏதாவது உதவிகள் தேவைப்பட்டால் செய்வதற்கு தயாராக இருக்கின்றோம். மாறாக பல்வேறு சிக்கல்கள், தனிப்பட்ட காரணங்களினால் தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக யாழ் களம் தொடர்ந்து இயங்கமுடியாமல் போனால் அதற்காக வருத்தங்களை தெரிவித்து கொள்கின்றோம். அ…
-
- 25 replies
- 2.5k views
-
-
யாழ்கள் உறவுகளே எனக்கு இலங்கையில் இந்தியப்படை காலத்து அல்லது இந்தியப்படைகள் சம்பந்தப்பட்ட இந்திய அரசுடன் போராளி இயக்:கங்கள் மற்றும் புலிகள் சம்பத்தப் பட்ட ஒளிப்பதிவுகள்(வீடியொ கிளிப்புகள்) தேவைப்படுகின்றது. யாரிடமாவது இருந்தால் அல்லது எங்காவது இணையங்களில் வலைப்பூக்களில் இரந்தாலும் இங்கு இணைப்பை தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன் நன்றி. பிற்குறிப்பு இணையத்திலேயே பாய் போட்டு படுத்திருக்கும் நுணாவிலான் கலைஞன் வசி நெடுக்கு கவனத்தில் எடுத்து உதவினால் புண்ணியமாய் போகும்.
-
- 8 replies
- 2k views
-
-
வணக்கம், எனது அப்பாவின் மூன்றாம் ஆண்டு அஞ்சலி பிரசுரத்தை கேட்டவுடன் யாழ் முகப்பில் இணைத்துவிட்டமைக்கு மோகன் அவர்கட்கு நன்றி! தவிர, தொலைந்த எனது கரும்பு/கலைஞன் யாழ் கணக்குகளையும் புதுப்பித்து தந்தமைக்கும் நன்றி! பல்வேறு காரணங்களின் நிமித்தம் யாழ் கருத்துக்களத்தில் எனது கருத்துக்களை முன்புபோல் எழுதுவதற்கு தயக்கமாய் உள்ளது. இதற்காய் வருந்துகின்றேன். யாழ் கருத்துக்களத்தில் எழுதாவிட்டாலும் ஓர் நோக்கராக பார்வையாளராக இருந்தே வருகின்றேன். நன்றி!
-
- 3 replies
- 832 views
-
-
,,கனடா பாராளுமன்றத்தில் தமிழ்மொழியில் பாராளுமன்றம் என்பது பொறிக்கபட்டிருகும். "-- ,,,* உயரமான நயாகரா நீர் வீழ்ச்சியில் தமிழ்மொழியில் நீர் வீழ்ச்யின் பெயர் இடம் பெற்று இருக்கும்.,,, இந்த செய்திகள் உண்மையா ..உண்மையாயின் கனடா வாழ் நண்பர்கள் இதனை உறுதி செய்யும் வண்ணம் இதன் படம்களை தரமுடியுமா... வேறு ஒரு நண்பரின் வேண்டுகோளை இங்கே வைத்துள்ளேன்.. நன்றிகள்
-
- 19 replies
- 3.2k views
-
-
யாழ் கள நிர்வாகம் ஆன்மீகத்துக்கு ஒரு பகுதியை தொடங்கினால் என்ன?
-
- 23 replies
- 3.3k views
-
-
ஆங்கில உச்சரிப்பு முறையில் எழுதி மாற்றிக் கொள்பவர்கள் இந்தச் சுட்டியில் உள்ளவாறு செய்வதன் மூலம் இலகுவாக தமிழில் எழுதிக் கொள்ள முடியும்.இடது கரையில் ஆங்கிலத்தில் எழுதி விட்டு romanised ஐ சொடுக்குங்கள். மிக்க நன்றி. http://kandupidi.com/converter/
-
- 1 reply
- 1.3k views
-
-
தகவல் அறிய தரவும். யாழ் களத்தில் இடப்படும் விருப்பு அடையாளங்களுக்கு ( சிமைலிகளுக்கு ) புள்ளிப் பரிசு இருப்பதாக அறிகிறேன். அதனை மீண்டும் அறியத்தந்தால் என் போன்றவர்களுக்கு உதவியாக இருக்கும். × Al Like Thanks Haha Confuse Sad
-
- 2 replies
- 565 views
- 1 follower
-
-
வெறுமையானதொரு உணர்வினுள்.....! யாழ் இணையம் நல்லதொரு உறவாக இருந்தது. தொடர்ந்தும் இருக்க வேண்டுமென்பதே பலரது வேணவா. சிரமங்களைச் சுமந்து களத்தை நிர்வகித்த அனைவரும் பாராட்டிற்குரியவர்கள். நேரம் கிடைத்தால் எப்போதும் முதலில் யாழ்களத்தை ஒருமுறை பார்த்துவிட்டே அடுத்த இணையங்களை நோக்குவதுண்டு. யாழில்லாத இணையத்தில் என்றதும் ஒருவித வெறுமையாய் உணர்கிறேன். எல்லாவற்றையும் இழந்தபோதும், ஒரு உரையாடல் வெளியொன்றை தமிழரிடையே பேணுவதில் காத்திரமான பங்காற்றிய யாழ் நிறுத்தப்படுவது வருத்தத்திற்குரியதாக உள்ளது. மோகனண்ணா உங்கள் பணி தொடர வேண்டுமென்பதே எமது எதிர்பார்ப்பாகும். உறவுகளிடையே நிரந்தர இடைவெளியை உருவாக்கப்போகிறது என்பதே வருத்தத்திற்குரியது. கருத்தியல் ரீதியாக ஒரு வலுவுள்ள தளமாக த…
-
- 0 replies
- 600 views
-
-
எணக்கு களத்தில் எழுத தடைய? எழுத முடியலை? நான் துரோகிகலின் கூட்டத்தில் ஒருவணல்ல. எண்னை அணுமதிக்கவும். னண்றி.
-
- 20 replies
- 4.4k views
-
-
யாழ்கள வாசகர்களாகிய நாம் யாழ் களத்தை மெருகூட்ட ஏகமனதாக பின்வரும் பரிந்துரைகளைகளை நிர்வாகத்திற்கு முன்வைக்கின்றோம். 1) "செய்திக்களம்" என்று புதிய ஒரு களம் ஆரம்பிக்கப்படல் வேண்டும். தற்போதுள்ள தகவற்களத்திலிருந்து "செய்திகள் தமிழீழம்", "செய்திகள் உலகம்" என்பவற்றிற்குப் பதிலாக இது செயற்படும். 2) பரிந்துரைகள் செய்திக்களத்திற்கு மட்டுமே: மற்றவை தற்போதுள்ளது போலவே இயங்கலாம். 3) செய்திக்களத்தில் ஒரு குறிப்பிட்ட அங்கத்துவ நிலை உள்ளவர் மட்டுமே செய்திகளைப்போட முடியும். உதாரணமாக இவர்களின் அங்கத்துவநிலையை S1 என்போம். அப்படி போடுபவர் அதில் எதை முக்கியம் என்றோ சர்ச்சைக்குரியது, விமர்சனத்திற்குரியது, சிந்திக்கப்பட வேண்டியது விவாதத்திற்குரியவை என்ற பகுதிகளை அடையாளப்ப…
-
- 40 replies
- 6.7k views
-
-
வணக்கம் யாழ் உறவுகளே ....இன்று எனது கணணித்திரையில் சிறு குழப்பம். மிகவும் விரிவடைந்து (enlarge ) , சுட்டியிலும் (cursor ) எதோ தவறு . ஒரே குழப்பமாய் இருக்கு. இதனால் ஏதும் தடங்கல் ஏற்படின் மன்னிக்கவும்.
-
- 4 replies
- 548 views
- 1 follower
-
-
யாழ் கள தமிழ் அறிஞர்களிற்கு வணக்கம்! தங்களிடம் ஒழுங்கான தமிழில் எழுதுவதற்கு சில உதவிக்குறிப்புக்களை நான் எதிர் பார்த்து நிற்கின்றேன். எனது சந்தேகங்களை கேள்விகளாக, கேள்வி இலக்கத்துடன் போடுகின்றேன். உங்களுக்கு நல்ல பதில் தெரிந்தால் அதை அறியத்தந்தால் போகிற வழிக்கு உங்களுக்குப் புண்ணியமாகப் போகும். கேள்வி 01: நான் எழுதும் போது தான், கொண்டு, என்று ஆகிய சொற்பதங்களை அடிக்கடி பாவிக்கவேண்டியுள்ளது. இச்சொற்களை தவிர்த்து எழுதும் போது நான் சொல்ல வரும் கருத்தை, சொல்ல விரும்பும் வகையில் என்னால் சொல்ல முடியாமல் போகிறது. தான், கொண்டு, என்று ஆகிய சொற்பதங்களிற்கு மாற்றீடாக வேறு என்ன சொற்களை நீங்கள் பாவிக்கிறீர்கள்?
-
- 24 replies
- 4.2k views
-
-
அண்மைய நாட்களாக நேசக்கரம் நிறைய நல்ல விடயங்களை போரால் பாதிப்பட்ட மக்கள்.. மாணவர்களை நோக்கி நடத்த தலைப்பட்டுள்ளது. அவை இங்கு யாழிலும் தனித் தனி தலைப்புகளாக.. பகிரப்படுகின்றன. அவையும்.. தலைப்புகளோடு தலைப்புகளாக... ஊர்ப்புதினம் பகுதியில் வைத்துச் சிலாகிக்கப்பட்டு விட்டு மறக்கடிக்கப்பட்டுப் போகின்றன. அந்தத் திட்டங்களுக்கான பங்களிப்பையும்.. பயன்பாட்டையும் அதிகரிக்கக் கூடிய வகையில் யாழ் ஒரு வழி செய்தால் என்ன..??! அப்படிச் செய்வதன் மூலம்.. யாழ் வாசகர்கள் மூலமும்..இணைய வழி தேடல் செய்வோர் மத்தியிலும்.. நேசக்கரத்தின் பங்களிப்பு.. பயன்பாட்டு வீச்சை.. அதிகரிக்க முடியும் என்று நினைக்கிறேன். இது அந்த அமைப்பினதோ.. யாழினதோ செயற்பாடுகளில் தலையீடு செய்யும் தலைப்பு அல்ல. பொதுமக்களாக…
-
- 1 reply
- 660 views
-
-
அநேகமான இடங்களில் நிர்வாகபகுதிக்கு மாற்றிவிட்டோம் or நகர்த்திவிட்டோம் என்று சொல்கிறீர்கள்.... அந்த நிர்வாக பகுதிக்கு நாம் எப்படி உள்நுழைய முடியும்.... அதனை தெளிவு படுத்தவும்...
-
- 2 replies
- 1.5k views
-
-
யாழில் பலவேலைகளில் இணைக்கும் செய்திகள்/தகவல்கள் மர்மமாக மறைகின்றது!!! ... யாழில் தற்போதும் ஓர் செய்தியை இணைத்தேன், இணையவன் காக்கா நின்றது போல் இருக்கிறது ... போகும்போது தூக்கிக்கொண்டு ஓடி விட்டது???? ...
-
- 11 replies
- 1k views
-
-
யாழ்களம் மீண்டும் வலம் வருமா? யாழ்களம் நிற்கப்போகிறது என்கின்றபோது ஏதோ ஒன்றை இழக்கப்போகின்றேனா............ என்ற உணர்வு ஏற்படுகின்றது. அனைவரின் மனதிலும் இடம்பெற்ற யாழ்களம் மீண்டும் புதுப்பொலிவு பெற்று வலம் வர வேண்டும் என்ற அடங்கா ஆவலுடனும், காத்திருப்புக்களுடனும்
-
- 11 replies
- 1.2k views
-
-
காணவில்லையென்ற தலைப்பை காணவில்லை. கையாடல் செய்தவர் கள நிபந்தனையின்படி அதை கருத்தெழுதிய உறுப்பினர்களுக்கு தெரிவித்திருக்க வேண்டும் பண்பாடு தெரியாத மட்டுறுத்துனர் அதை அகற்றிவிட்டுகமுக்கமாக இருக்கின்றார். இதுதான் கள பண்பாடா?
-
- 5 replies
- 1.6k views
-
-
யாழ் களத்தின் நிர்வாகிகள் யார் யார்? ஏதாவது பிரச்சனை என்றால் யாரோடு பேச வேண்டும்? எப்படி தொடர்பு கொள்வது? திரை மறைவில் விளையாட நான் விரும்பவில்லை? பதில் தேவை?
-
- 19 replies
- 3.1k views
-
-
வணக்கம் உறவுகளே, அண்மைக்காலத்தில் அவதானித்த வரை யாழ் களத்தில் இந்திய செய்திகளுக்கு பாரிய வரவேற்ப்பு இருப்பதை அதனை பார்வையிடும் எண்ணிக்கைகளை வைத்து அறியக்கூடியதாக இருக்கின்றது குறிப்பாக பல்லாயிரக்கணக்கான இந்திய தமிழ் உறவுகளும் யாழ் களத்தை பார்க்க தொடங்கி இருப்பதையே இது காட்டுகின்றது...... அந்த வகையில் இந்த களத்தை இன்னும் மாபெரும் களமாக மாற்ற எமது செய்திப்பிரிவினர் இன்னும் அதிகமான இந்திய மற்றும் தமிழக செய்திகளை இணைக்கும் பட்சத்தில் இன்னும் பல வாசகர்களை நாம் சென்றைடைய முடியும்...... யாழின் வளர்ச்சிப்பாதையில் அனைவரும் இணைந்து பயணிப்போம் வாழ்க யாழ் என்றும் உங்களில் ஒருவன் சுண்டல்
-
- 58 replies
- 4.6k views
-
-
Network Error (dns_server_failure) Your request could not be processed because an error occurred contacting the DNS server. The DNS server may be temporarily unavailable, or there could be a network problem. For assistance, contact Customer Support. சாமி...! எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்!! இன்று காலையில் பலமுறை "யாழை" அணுகியபோது இம்மாதிரி செய்தி வந்து கடுப்பேத்துகிறது...! இது எனக்கு மட்டுமா? இல்லை, இங்கே இருக்குற அனைவருக்குமா? எனக்கு மட்டுமேயெனில், ஏஞ்சாமி இந்த வஞ்சகம்? ம்ம்ம்...எனக்கிந்த உண்மை தெரிஞ்சாகனும்!!!
-
- 7 replies
- 1.5k views
- 1 follower
-
-
ஆடி 5 ம் திகதி கரும்புலிகள் தினம்... ஒரு வாரம் மாவீரர் நாள் கடைப்பிடிப்பது போல குறைந்தது இந்த முறை எங்களுக்காகவே மடிந்து போன மாவீரர்களை அதிகமாகவே கௌரவிக்க , நினைவு கூர வேண்டிய தேவையில் இருக்கின்றோம்... எங்களுக்கு போராடியவர்களை நாங்கள் எண்றும் நண்றியுடன் நினைவு கூருவோம் என்பதுக்கு இது ஒரு தேவையான காலமும் கூட... தயவு செய்து கரும்புலிகள் யாரையாவது தெரிந்தவர்கள் பழகியவர்கள் அவர்கள் பற்றியும் ஒளிப்படங்கள் காணொளிகள் என்பனவற்றை எல்லாம் இணைப்பதோடு உங்களின் உள்ளத்து உணர்வுகளள வடித்து கவிகளும் கட்டுரைகளும் எழுதுமாறு தாள்மையுடன் கேட்டு கொள்கின்றேன்.... மோகன் அண்ணா விடம் ஒரு வேண்டுகோள்... மாவீரர்கள் பற்றி எழுதுவதுக்கு எண்றே தனி ஒரு பகுதியை ஆரம்பி…
-
- 16 replies
- 1.9k views
-
-
களப் பொருப்பாளர் மோகன் அவர்கட்கு, எனது கன்னிப் பதிவு பிடிக்கவில்லையா? நான் விமர்சனத்தை ஏற்கின்றேன், குறை இருப்பின் தெரிவிக்கவும்.
-
- 27 replies
- 4.8k views
-
-
யாழ் ஏன் மாற்றம் கொண்டது? உண்மை யாரறிவார்? நான் அறிவேன்.... நீல வர்ணத்தில் யாழ் புது முகம் கொண்டுள்ளது..... ஆண்கள் மீது கொண்ட அதீத அக்கறையில் தான் யாழ் தன்னை தானே மாற்றிக்கொண்டுள்ளது.... பெண்களுக்கு பிங் நிறமும் ஆண்களுக்கு நீல நிறமும் சுட்டிக்காட்டும் நிறங்களாக இருக்கின்றன...பெண்கள் பிங் கலரில் ஒரு களத்தை ஆரம்பித்து... ஓவரா பெண்ணியம் பேசுகின்றார்கள்... இதைப்பார்த்த யாழ் ஆண்களுக்காக தன்னைத்தானே நீலவர்ணத்தில் மாற்றிக்கொண்டுள்ளது... நாராயணா..........................
-
- 26 replies
- 3.8k views
-
-
டைகர் வானொலியின் வெள்ளி மாலை பேட்டிப் பக்கம் இங்கே பேட்டி மட்டும் இடம் பெறும் இது சம்பந்தமான கருத்துக்களை பழைய பேட்டிப் பக்கத்தில் பதியவும் http://www.yarl.com/forum3/index.php?showtopic=21921 பழைய பேட்டி பக்க பகுதி தயவு செய்து ஒத்துழைக்கவும்
-
- 160 replies
- 16.6k views
-
-
வணக்கம் நிர்வாகம். " சங்கவியின் சாதனை " எனும் பதிவை " சிரிப்போம் சிறப்போம் "பகுதியில் மாறிப் பதிந்து விடடேன். அதை " சிந்தனைக்கு சில பதிவுகள்" எனும் பகுதிக்கு மாற்றி விடும்படி கேட்டுக் கொள்கிறேன். நன்றி
-
- 2 replies
- 929 views
- 1 follower
-