வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5794 topics in this forum
-
அவுஸ்திரேலியாவில் இனி அகதிகளுக்கு இடம் இல்லை எனவும் எல்லைக் கதவுகள் மூடப்பட்டே இருக்கும் எனவும் அவுஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்புத் துறை அமைச்சர் பீற்றர் டற்றன் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா ஆட்சியின் போது அமெரிக்காவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையே கையெழுத்தான அகதிகள் ஒப்பந்தத்தின்படி ஒருமுறை மட்டுமே அமெரிக்காவில் அகதிகளை குடியமர்த்த முடிவு செய்யப்பட்டது. இந்தநிலையில் அவுஸ்திரேலியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே, அகதிகளை மீள்குடியமர்த்துவது தொடர்பாக செய்யப்பட்ட ஒப்பந்தம் தற்போது தோல்வி அடைந்துள்ள நிலையில், அவுஸ்திரேலியாவின் குடிவரவு மற்றும் எல்லைப் பாதுகாப்பு அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்…
-
- 1 reply
- 591 views
-
-
உரிமை பேரெழுச்சி – 11 ஏப்ரல் 2009 - இலங்கை சிங்கள வெறி அரசினால் திட்டமிட்டு நடாத்தப்படுகின்ற தமிழின சுத்திகரிப்பை உடனடியாக தடுத்து நிறுத்த, - பட்டினியால் தினம் தினம் செத்து கொண்டிருக்கும் எம் உறவுகளை காக்க, - போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக உணவு மற்றும் மருந்து பொருட்கள் சென்றடைய, வேண்டும் என வழியுறுத்தி எதிர் வருகின்ற சனிக்கிழமை 11/04/2009 மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இலண்டனில் நடைபெற உள்ளது. மீண்டும் எம் ஒற்றுமையை, உலகிற்க்கும், பிரித்தானியாவிற்க்கும் பறை சாற்றுவோம்! எம் பக்கம் திரும்பும் உலகின் கண்களை மேலும் விழிக்க வைக்க!! எம்மை பற்றி சிறுக சிறுக சொல்லும் உலக ஊடகங்களை வன்னி மண் நோக்க வைக்க!!! இந்த உரிமை பேரெழுச்ச…
-
- 1 reply
- 953 views
-
-
ஐரோப்பிய நாடாளுமன்றத் தேர்தல் - போட்டியில் குதித்தார் ஈழத்தமிழர்! [Friday, 2014-05-16 09:10:33] ஐரோப்பிய நாடாளுமன்றத்துக்கு எதிர்வரும் 22 ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில் லண்டனில் இருந்து தேசிய விடுதலைக் கட்சியின் சார்பில் யோகி என்ற தமிழர் போட்டியிடுகிறார். 'எல்லோருக்கும் சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்துவோம்!' - என்ற கோஷத்தை முன்வைத்தே அவரது கட்சி இந்தத் தேர்தல் களத்தில் இயங்கியிருக்கின்றது. யோகி சார்பில் விடுக்கப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் "ஈழத்தின் பூர்வீக குடிகளாகிய நாங்கள் எங்கள் பூர்வீகத்தை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம். அதற்குக் காரணம் எங்களுக்கு எதிராக இழைக்கப்படும் இன அழிப்பும், நில அபகரிப்பும் அவற்றிலிருந்து பாதுகாப்பற்ற நிலையுமே. இறுதிப் போரின்…
-
- 1 reply
- 878 views
-
-
ஸ்காபுரோ பகுதியில் தொடரும் கவனயீர்ப்பு பற்றிய அறிவித்தல் தமிழீழப்பகுதியில் சிங்களப் பேரினவாத அரசால் நடாத்தப்படும் இனப்படுகொலையைக் கண்டித்தும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை அகற்றக் கோரியும், தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழீழ மக்களின் ஏக பிரதிநிதிகள் என்பதை வலியுறுத்தியும், தமிழீழத்தை அங்கீகரிக்கக் கோரியும் நடாத்தப் பட்டுக் கொண்டிருக்கும் பரந்த அளவிலான, தொடர்ந்து நடாத்தப்படும் கவனயீர்ப்பு நிகழ்வில் மார்ச் 30 ந்திகதி திங்கட்கிழமை மாலை 4 .30 மணியிலிருந்து 7 .00 மணிவரை Markham & Finch சந்திப்பில் இடம்பெறும். ------------------------------------------------------------------------------------------------------------------------ …
-
- 1 reply
- 653 views
-
-
அவுஸ்திரேலியாவில் நடாத்தப்பட்டுவரும் தேசிய சனத்தொகை கணக்கெடுப்பில், பிறந்த நாடு என்ற என்ற கேள்விக்கு அளிக்கப்படும் விடையாக தமிழீழம் எனத் தெரிவுசெய்யப்பட்ட விடை, சிறீலங்காவின் அழுத்தத்தினால் நீக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அவுஸ்ரேலிய புள்ளிவிபரப் பிரிவினால் தேசிய சனத்தொகைக் கணக்கெடுப்பு இணையத்தளம் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் பிறந்த நாடு என்பதற்கு பல அங்கீகரிக்கப்பட்ட, அங்கீகரிக்கப்படாத நாடுகளின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன. இதனால் அவுஸ்திரேலியாவில் வாழும் தமிழர்கள் தமது நாடு தமிழீழம் எனக் குறிப்பிடத் தொடங்கினர். இதனையடுத்து, கடந்த 6 மற்றும் 7ஆம் திகதிகளில் கன்பராவிலிருக்கும் சிறீலங்காத் தூதரகத்துக்கு பெருமளவான தொலைபேசி அழைப்புக்கள…
-
- 1 reply
- 660 views
-
-
இலங்கை அரசாங்கத்திற்கு உண்மையான அச்சத்தை இப்போதும் ஏற்படுத்துபவர்கள் மாவீரர்கள். தமது வீரத்தாலும் அதி உன்னத தியாகத்தாலும் இனவிடுதலைக்கு உரமானவர்களின் ஆன்மா இன்றும் விடுதலைக் கனவினை சுமந்தவாறே அந்த மண்ணை சுற்றிக் கொண்டிருக்கின்றது. இலங்கை அரசாங்கமும் அதன் தலைமையும் இலங்கையில் உள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கோ தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கோ அல்லது புலத்தில் இருக்கம் மக்கள் அவைகள் தேசிய அவைகள் நாடு கடந்த அரசாங்கம் போன்றவற்றை பற்றியோ அதிகம் அச்சம் கொள்ளவில்லை. மாறாக தமது இனத்தின் விடுதலைக்கா தமது இன்னுயிரை தியாகம் செய்த மகத்தான வீரர்களின் தியாகங்கள் தான் அவர்களுக்கு இன்னும் இன்னும் அச்சத்தை ஏற்படுத்துகின்றது. அதனால் தான் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து போராட…
-
- 1 reply
- 828 views
-
-
நடந்து முடிந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வில் தமிழீழம் சார்ந்த பல புதிய முன்னெடுப்புக்களுக்கான செயற்திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளது. சிறிலங்கா அரசின் இன அழிப்புக் குற்றத்தினை முன்னிறுத்தி பன்னாட்டு நீதிதளத்தில் போராடுதல், போர்க்கைதிகளின் விடுதலையை வற்புறுத்தும் செயற்பாடுகளை முன்னெடுத்தல்,தமிழீழத்துக்கான அரசியல் யாப்பைத் தயாரிப்பதற்கு உலகம் முழுதுமுள்ள தமிழரை ஒன்று திரட்டுதல் , தமிழீழ மக்களுக்கென மெய் நிகர் (விர்ருவால்) அரசாங்க சேவைகளைத் தொடங்குதல் ஆகிய முக்கிய யோசனைகள் அங்கு முன்மொழியப்பட்டுள்ளது. அரசவை உறுப்பினர்களும் மேலவை உறுப்பினர்களும் இடையில் இடம்பெற்றிருந்த இணைந்த கூட்டத்திலேயே தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கெனப் பல புதிய நுண்ண…
-
- 1 reply
- 575 views
-
-
-
- 1 reply
- 493 views
-
-
-
அகதிகளாக அங்கீகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும்! ஆஸி.யின் புதிய சட்டம் அவுஸ்ரேலியாவுக்கு அகதிகளாக. வந்தவர்களில் ஒரு தொகுதியினருக்கு தங்களது விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு அகதிகள் என அரசாங்கத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டு இருந்தது. தற்போது அவுஸ்ரேலியா அரசாங்கத்தின் புதிய அகதி கொள்கையின் பிரகாரம் அகதி அந்தஸ்த்து வழங்கப்படலாம் என இருந்த இவர்களையும் இன்னும் ஒரு முறை அகதி அந்தஸ்துக்கு விண்ணப்பிக்கும்படி நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். அதனடிப்படையில் இவர்களுக்கு 3 வருட தற்காலிக பாதுகாப்பு வீசா அல்லது 5 வருடத்துக்கான செவ் கேவன் என்று அழைக்கப்படும் புதிய விசாவினை வழங்குவதற்கு குடிவரவு திணைக்களம் முடிவெடுத்துள்ளது …
-
- 1 reply
- 1.1k views
-
-
அன்பு உறவுகளே, பிரித்தானியாவின் பல பகுதிகள் இப்போ வெள்ளக்காடாகக் காட்சி தருவதை நாமறிவோம். நிதி நிலைமையும் வசதிகளும் என்னதான் உயர்வாக இருப்பினும் இயற்கையின் சீற்றத்தை எதிர் கொள்ளுவது இயலாததாகி விடுவதுண்டு. எனவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, வீடுகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு லண்டனில் உள்ள ஈழத் தமிழர்கள் நிச்சயம் உதவவேண்டும். அப்படி எனில் நாம் ஆங்கில இனத்தவர்களோடு, மிக நெருங்கிய தொடர்புகளையும் ஒரு பிணைப்பையும் ஏற்படுத்த முடியும். காலத்தின் தேவை கருதி சரியான நேரத்தில் செய்வதே உதவியாகும். எனவே லண்டன் வாழ் அனைத்து தமிழர்களும் உடனடியாக தம்மாலான உதவிகளை வழங்குவது நல்லது. இதனை பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழு(TCC) தற்போது மேற்கொள்ளவுள்ளது. தமிழர்களே தற்போது உள்ள குளிர் சூழ்…
-
- 1 reply
- 463 views
-
-
அவுஸ்திரெலியா ABC தொலைக்காட்சியில் வந்த பிரித்தானியா பாராளுமன்ற உறுப்பினர் விரேந்தர சர்மாவின் பேட்டி http://australianetworknews.com/story.htm?id=15297
-
- 1 reply
- 1.7k views
-
-
-
அமைச்சரவை மறுசீரமைப்பில் ஜூலியன் ஸ்மித் – ஆன்ட்ரியா லீட்சம் – எஸ்தர் மக்வே நீக்கம் by : S.K.Guna பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அமைச்சரவை மறுசீரமைப்பைத் தொடங்கியுள்ள நிலையில் வடஅயர்லாந்துக்கான அமைச்சர் ஜூலியன் ஸ்மித் மற்றும் வணிகத்துறை அமைச்சர் ஆன்ட்ரியா லீட்சம் ஆகியோர் பதவிகளை இழந்துள்ளனர். பதவி நீக்கம் செய்யப்பட்ட முதல் சிரேஸ்ர அமைச்சர் ஜூலியன் ஸ்மித் 204 நாட்கள் குறித்த அமைச்சு பொறுப்பில் இருந்தார். இந்நிலையில், வீடமைப்பு அமைச்சராக இருந்த எஸ்தர் மக்வே அமைச்சரவை மறுசீரமைப்பின்போது தனது பதவியை இழந்துள்ளார். பதவி நீக்கம் செய்யப்பட்ட வடஅயர்லாந்துக்கான அமைச்சர் ஜூலியன் ஸ்மித் குறித்து ஜனநாயக யூனியனிஸ்ட் கட்சியின் தலைவி ஆர்லீன…
-
- 1 reply
- 609 views
-
-
வானொலியிலிருந்து விலகியதும் ஏன்? நீங்கள் சொன்னபடி பத்திரிகை, ஊடகத்துறையில் நிறைய வருஷங்கள் இருந்திருக்கிறீர்கள். பிபிசி தமிழோசையில் நிறைய நாட்கள் வேலை செய்துள்ளீர்கள். தமிழோசைக்கும் உங்களுக்குமான உறவென்ன? என்ன நடந்தது? அதிலிருந்து நீங்கள் ஏன் விடுபட்டீர்கள்? இதுபற்றிச் சொல்லுங்கள். பிபிஸியில், தமிழோசையில் இருப்பவர்க்கும் எனக்கும் தனிப்பட்ட முறையில் நல்ல உறவிருக்குது. முதல்ல பிபிஸி உலக சேவை இங்கிலீஷ்ல செய்தி, செய்தி-விமர்சனப்பிரிவு, பிபிஸி தொலைக்காட்சி பற்றி அலாதியான அனுபவம்னு நிறையவே சொல்லலாம். இந்த இடங்களில் இருக்கற பலர், இன்று என் நெருங்கிய நண்பர்கள். பிரமாதமான நிருபர்கள், நிகழ்ச்சித்தயாரிப்பில் வல்லவர்கள். அவர்களிடமிருந்து நான் கற்றுக்கொண்டது எவ்வளவோ. இன்ன…
-
- 1 reply
- 1.3k views
-
-
நேற்று கோலாலம்பூரில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு நாள் 2009 ஆம் ஆண்டு மே மாதம் முள்ளிவாய்க்காலில் சிறீலங்கா இனவெறி அரசின் கொடிய இன அழிப்பில் படுகொலைசெய்யப்பட்ட ஒரு இலட்சத்திற்கும் அதிகமான தமிழர்களையும், தாயக விடுதலைக்காக தம்மையே அர்ப்பணித்து போராடி வீரகாவியமாகிய மாவீரர்களையும் நினைவு கூர்வும் நிகழ்வு நேற்று கோலாலம்பூர் சாரணியர் மண்டபத்தில் நடைபெற்றது. இரவு மணி 8 அளவில் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கத்தோடு ஆரம்பமான முள்ளிவாய்க்கால் நினைவு நாள் நிகழ்வில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தொடர்பான விளக்கப்படமும் திரையிடப்பட்டது. அதன் பிறகு சிறப்பு பிரமுகர்களின் எழுச்சி உரை இடம்பெற்றதுடன், தமிழீழ பாடல்களுக்கு அம்பிகா பரதநாலயம் குழுவினரின் நடனம் மற்றும் வில்லுப்ப…
-
- 1 reply
- 886 views
-
-
சிங்கள அரசாங்கம் எதிர்பார்த்து குறிவைக்கும் மாவீரர் நிகழ்வுகள் (29. 07. 2011, (வெள்ளி),தமிழீழ நேரம் 19:06க்கு பதிவு செய்யப்பட்டது) அண்மையில், மேற்குலக நாடொன்றைச் சேர்ந்த ஊடகவியலாளர் ‘சிறிலங்காவை நெருக்கிவரும் போர்க் குற்றச்சாட்டுக்களிலிருந்து உங்களால் எப்படி விடுபட முடியும்?’ என்ற கேள்வியை சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் தொடுத்திருந்தார். அதற்கு, அவர் சிரித்துக்கொண்டே ‘தமிழர்களைக் கொண்டே தமிழர்களது போராட்டத்தை அடக்கிய எனக்கு, தமிழர்களைக் கொண்டே அதிலிருந்து விடுபடத் தெரியாதா?’ என்று பதிலளித்தார். ஆம், சிங்கள தேசம் நடாத்தி முடித்த தமிழினப் படுகொலைக்கான மிகப் பெரிய போராயுதமாகத் தமிழர்கள் சிலர் பயன்பட்டுள்ளார்கள். அவர்கள் வழங்கிய தகவல்களின் அடிப்ப…
-
- 1 reply
- 536 views
-
-
July 16, 2015 உலகத்தமிழ் மில்லியன் கையெழுத்து இயக்கம் செப்ரெம்பர் வரை நீடிப்பு : அடுத்து என்ன ? பிரதமர் வி.உருத்திரகுமாரன் அறிக்கை ! 0 by tmdas5@hotmail.com • TGTE உலகத் தமிழர் பரப்பெங்கும் முன்னெடுக்ப்பட்டிருந்த சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துமாறு ஐ.நாவைக் கோரும் கையெழுத்து இயக்கம் செம்ரெம்பர் வரை நீடிக்கப்பட்டுள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அறிவித்துள்ளார். குறிக்கப்பட்ட இலக்குடன் யூலை 15வரை ஈட்டப்பட்டுள்ள 12 லட்சம் கையெழுத்துக்கள் ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளரிடம் ஒப்படைக்கப்பட இருப்பதாக தெரிவித்துள்ள பிரதமர் அவர்கள், இக்கையெழுத்து இயக்கம் செயன்முனைப்பு குறித்து விரிவான அறிக்கையொன்றினை உலகத் தமிழர்களுக்…
-
- 1 reply
- 407 views
-
-
பிரான்சு மண்ணில் தமிழீழமே தமிழர்களின் தீர்வு என்ற தீர்மானத்தை பிரெஞ்சு மாநகரமுதல்வருடன் அனைத்துக்கட்சிகள் ஆதரவுடன் இன்று 22.01.2020 புதன்கிழமை நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரான்சு சுவாசிலே றூவா மாநகரத்தில் தமிழீழமே தமிழர்களின் தீர்வு என்ற தீர்மானம் நிறைவேற்றம்! பிரான்சின் பாரிசின் புறநகர் பகுதியில் ஒன்றான சுவாசிலே றூவா என்னும் மாநகரத்தில் இருக்கும் சுவாசிலே றூவா பிராங்கோ தமிழ்சங்கத்தினதும் தமிழ் மக்களின் தொடர் முயற்சியில் மாநகர முதல்வரும் அவரின் சார்பானவர்களும் பல வழிகளில் தமிழ்மக்களுக்கும் அவர்களின் நியாயமான முன்னெடுப்புக்களுக்கும் உதவி வருகின்றனர். கடந்த காலங்களில் தமிழின மக்களுக்கு இழைக்கப்பட்ட தமிழினப்படுகொலைக்கு நீதி வேண்டி ஈருருளி பயணத்தையும், நட…
-
- 1 reply
- 979 views
-
-
புலத்தின் தமிழ் ஊடகங்களுக்கு தாழ்மையான வேண்டுகோள்!!!!! தயவு செய்து இந்த நேரத்தில் ஆவது உங்களின் துப்புக் கெட்ட நிகழ்ச்சிகள் எல்லாவற்றையும் நிறுத்தி விட்டு உலகம் புராவும் உணர்வுகளுடன் கிளர்ந்து தெருவிலே திரண்டு நிற்கும் அந்த மக்களிற்கு துணையாக நேரடி நிகழ்வுகளை ஒலி ஒளி பரப்பில் உடனே சேர்த்துக் கொள்ளுங்கள்........... மக்களின் பங்கெடுப்பிற்கு ஊடகங்களின் பங்களிப்பு மிக மிக முக்கியமான ஒன்று என்பதை புரியாமல் தமிழ் மக்களிற்கு என ஊடகம் நடத்துகிறீர்களே...... இதை நினைக்கும் போது உங்களிற்கே வெட்கமாய் இல்லை.......??????? அதனால் தயவு செய்து உங்கள் ஒலி ஒளி பரப்பில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்துங்கள் இல்லையேல் தமிழ் துரோகிகள் பட்டியலில் உங்களையும் சேர்த்துக் கொள…
-
- 1 reply
- 1.4k views
-
-
கடந்த காலங்களில் உலகப்பந்தின் ஒவ்வொரு திசையிலும் பல்வெறுபட்ட, பல்வகையான, சிறிய பெரிய அளவிலான போராட்டங்களைச் செய்தும் இந்த உலகத்தின் கண்களைத் திறக்கமடியாமல் போனதையிட்டு எந்தத் தமிழனும் கவலைகொள்ளாமல் இருக்க முடியாது. சர்வதேச ஊடகங்களில் எமது போராட்டங்கள் ஏன் நடத்தப்பட்டது என்பதைவிட எப்படி நடத்தப்பட்டது என்பதற்கே முக்கியத்துவம் கூடுதலாக கொடுத்து வெளியிடப்பட்ட செய்திகளால் நாம் பெற்ற நன்மைகள் என்பதைவிட எம்மீதான எதிர்ப்புக்கள் அதிகரித்ததேயன்றி எம் மக்களுக்கு ஆறுதல் கிடைக்கவில்லை என்பது பொதுவான கருத்து. பிரித்தானியா குறோளிப் பகுதியில் கடந்த 02.05.2009 அன்று அங்குள்ள தமிழர்களால் குறோளிப் பகுதி பாராளுமன்ற உறுப்பினர், நகர மன்ற உறுப்பினர்கள், உயரதிகாரிகள், காவல்துறை பொறுப்பாளர்…
-
- 1 reply
- 1.1k views
-
-
documentary No Fire Zone by Callum Macrae on Channel 4 Sunday 3rd Nov @ 10.50pm Trailer: https://t.co/YaGGXGUec9 (facebook)
-
- 1 reply
- 746 views
-
-
Get Flash to see this player. நன்றி http://www.vakthaa.tv/v/3516/zurich-human-chain-demo
-
- 1 reply
- 555 views
-
-
http://www.infotamil.ch/ta/view.php?2b24OSE4a4dnd4m24b0EEQM3e22Q0AAbcd34coC4e0dW0Mqgce0ccYJ72cdeYgm420 எங்களுக்குள் நாங்களே முட்டி மோதிக்கொள்வது இனியும் தொடருமானால்...... [ வியாழக்கிழமை, 13 மே 2010, 08:43.53 மு.ப | இன்போ தமிழ் ] உருத்திரகுமாருக்கு எதிராகச் சதி ? யார் அந்தச் சதிகாரர்கள்? நாடு கடந்த தமிழீழ அரசின் வெற்றிப் பயணத்துக்கு சிறிலங்கா அரசுதான் தடைக்கல்லாக அமையும் என்று எங்களில் பலர் எண்ணிக்கொண்டிருக்கின்றார்கள். ஆனால் நினைத்தவற்றுக்கு மாறாக உள்ளிருந்தே ஒற்றுமையை உடைப்பதற்கு அங்கே குழுக்கள் உருவாக்கம் பெற்றுவிட்டன. அன்று விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்களைக் காட்டிக் கொடுத்தவர்கள் - கடந்த வருடம் கே.பியை காட்டிக் கொடுத்தவர்கள்- கடந்த மா…
-
- 1 reply
- 599 views
-
-
ஜேர்மனி உள்ளூராட்சித் தேர்தலில் பசுமைக் கட்சி சார்பில் மீண்டும் போட்டியில் குதிக்கிறார் ஜெயரட்ணம் கனீசியஸ்! Top News [Friday, 2014-05-23 09:11:35] News Service ஜேர்மனியில் நடக்கவுள்ள உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில் ஜேர்மனி பசுமைக் கட்சியின் முன்னணி வேட்பாளராகத் திரு.ஜெயரட்னம் கனீசியஸ் போட்டியிடவுள்ளார். இவர் ஜேர்மனி NRW மாநிலத்தில் இம்மாதம் மே.25ம் திகதி ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தலுடன் நடைபெறவுள்ள உள்ளுராட்சிச் சபைகளுக்கான தேர்தலில் பசுமைக்கட்சி சார்பில் (Bundis 90/ Die Grunen) கெம்பன் (Kempen) நகரசபைக்கு ஆறாவது இடத்திலும் கிறைஸ் வியர்சன் (Kries Viersen) வட்டார சபைக்கு நான்காவது இடத்திலும் போட்டியிடுகிறார். 2004ம் ஆண்டு நடைபெற்ற உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில் மு…
-
- 1 reply
- 516 views
-