மெய்யெனப் படுவது
மெய்யியல் | நற்சிந்தனைகள் | ஆன்மீகம் | இசங்கள் | பகுத்தறிவு
மெய்யெனப் படுவது பகுதியில் மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.
1238 topics in this forum
-
வாசிப்பின் பயன் தகவற்தொடர்புச் சாதனங்களால் சூழப்பட்ட யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஒவ்வொரு நொடியும் உங்களை அவை வந்தடைந்து கொண்டே இருக்கும். கணினி, செல்ஃபோன், டிவி, செய்தித்தாள், புத்தகம், விளம்பரப்பலகை, இசை, கலை இப்படிப் பல உருக்களில் ஏதோவொன்றை உங்களுக்குள் புகுத்த அவை படைக்கப்பட்டிருக்கின்றன. அதனை நாம் உள்வாங்குகின்றோம். புரிந்து கொள்ளப்படுகின்றது. புரிதலில் மூன்று வகையான புரிதல்கள் உண்டு. நேரடிப்புரிதல் (literal), இடைவெட்டுப்புரிதல்(inferential), அறுதிப்புரிதல்(propositional) என்பனவாக. நேரடிப்புரிதல்: சொற்கள், காட்சிகளைக் கொண்டு, யார், என்ன, எப்போது என்பதாகப் புரிந்து கொண்டு அப்படியப்படியே உள்வாங்கிக் கொள்வது. மேல்நிலைப் புரிதல் எனக் கொள்ளலாம். …
-
- 0 replies
- 270 views
- 1 follower
-
-
உண்மையான வெற்றி பரமஹம்ச சிறீ நித்யாந்தர் தங்கப் பதக்கம்! மாடமாளிகை! சௌகரியமான வாழ்க்கை! பதவியென்னும் கிரீடம்! இவற்றில் ஏதாவதொன்றில் சாதித்துவிட்டால், வாழ்வில் வென்று விட்டோம் என்று அர்த்தமா? புத்தரிலிருந்து ரமணர் வரை இந்த வெற்றிகளையெல்லாம் உண்மையான வெற்றி என்று சொல்லவில்லையே! அப்படியானால் உண்மையான வெற்றிதான் எது? ‘தன்னை வெல்லும் வெற்றியே, உண்மையான வெற்றி’ என்கிறார்கள் ஞானியர்கள். இதற்கு மிகச் சரியான உதாரணம் புத்தர். அங்குலிமால் மிக விசித்திரமானவன். ஆயிரம் பேரைக் கொல்ல வேண்டும். ஒருவருக்கு ஒரு விரல் என்று ஆயிரம் விரல்களால் கோர்க்கப்பட்ட ‘விரல் மாலையை’ தான் அணிந்து கொள்ள வேண்டுமென்ற ஒரு குரூர ஆசை அவனுக்கு. அதுவரை 999 பேரைக் கொன்றுவிட்டான…
-
- 4 replies
- 1.9k views
-
-
சிட்னி முருகன் தேர்திருவிழா ஒளிப்பதிவு இந்த இணைப்பில் பார்வையிடலாம் நன்றிகள் ரவி glory .....
-
- 9 replies
- 1.2k views
-
-
மகிழ்ச்சியின் ரகசியம் வாழ்க்கையின் பிரச்சனைகளை சமாளிக்க முடியாமல் வந்த ஒரு இளைஞரிடம் அந்த ஞானி, "நீ முதலில் எனது மாளிகையைச் சுற்றி பார்த்துவிட்டு வா, பிறகு பதில் சொல்கிறேன்" என்றார். “இதோ கிளம்பிவிட்டேன்” என்று எழுந்தவரிடம் ஞானி சொன்னார், “ஒரு நிமிடம்.. இதோ இந்த ஸ்பூனை உங்கள் வாயால் பிடித்துக் கொள்ளுங்கள். அதில் இருக்கிற எண்ணெய் கீழே சிந்திவிடாமல் சுற்றிப் பாருங்கள்” என்றார். மாளிகையை சுற்றிப்பார்த்துவிட்டு இரண்டு மணி நேரம் கழித்து ஞானியிடம் வந்தார் அந்த மனிதர். இப்போது ஞானி அவரிடம் “என் படுக்கை அறையில் ரவிவர்மாவின் ஒவியம் இருந்ததே, அது எப்படி இருந்தது?” என்று கேட்டார். “மன்னியுங்கள் சுவாமி, நான் அதைக் கவனிக்கவில்லை” என்றார் அந்த மனிதர். …
-
- 4 replies
- 1.7k views
-
-
எந்த ஒரு கலையில் தேர்ச்சி பெறவும், எந்த ஒரு தொழிலில் வளர்ச்சி பெறவும். அன்னை கலைவாணியின் அருள் அவசியம். அந்த கலைவானியையே கண்ணால் கண்ட ஞானிகளின் வாக்கில் இருந்து வரும் ஒவ்வொரு சொல்லுமே நமது கர்ம வினைகளை தீர்க்கும் சக்தி வாய்ந்த மந்திரங்கள் ஆகும். குமர குருபரர். 17 ம் நுற்றாண்டில் வாழ்ந்த மிகப்பெரிய ஞானி. முருகன், தேவி சரஸ்வதி இருவரையும் கண்ணால் கண்டவர். பல அதிசயங்களும், அற்ப்புதங்களும் செய்தவர். இவர் தமிழ்நாட்டுத் திருநெல்வேலி மாவட்டத்தில், சண்முக சிகாமணிக் கவிராயருக்கும், சிவகாம சுந்தரிக்கும் மகனாகப் பிறந்தார். பிறவியில் ஊமையாகப் பிறந்த இவருக்கு ஐந்து வயதுக்குப் பின்னரே பேசும் திறன் அமைந்தது எனப்படுகிறது. கந்தர் கலி வெண்பா, கயிலைக் கலம்பகம் ஆகிய நூல்களை இயற்றிய குமரகுர…
-
- 0 replies
- 9.8k views
-
-
‘‘என்ன செய்து கிழித்தார் பெரியார்?’’ பனை ஏறும் தந்தை தொழிலில் இருந்து தப்பித்து தலைமைச் செயலகத்தில் வேலை செய்பவர் கேட்டார். “பெரியாரின் முரட்டுத்தனமான அணுகுமுறை அதெல்லாம் சரிப்பட்டு வராதுங்க” இது முடிவெட்டும் தோழரின் மகனான எலக்ட்ரிக்கல் என்ஜினியர். “என்னங்க பெரியார் சொல்லிட்டா சரியா? பிராமணனும் மனுசந்தாங்க. திராவிட இயக்கம் இலக்கியத்துல என்ன செஞ்சி கிழிச்சது?” இப்படி ‘இந்தியா டுடே’ பாணியில் கேட்டவர் அப்பன் இன்னும் பிணம் எரித்துக் கொண்டிருக்க இங்கே டெலிபோன் டிபார்ட்மென்டில் சுபமங்களாவை விரித்தபடி சுஜாதா சுந்தர ராமசாமிக்கு இணையாக இலக்கிய சர்ச்சை செய்து கொண்டிருக்கும் அவருடைய மகன். ஆமாம் அப்படி என்னதான் ச…
-
- 7 replies
- 2.5k views
-
-
-
- 1 reply
- 1.1k views
-
-
ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தார். அவர் ஒரு குளம் வெட்டினார்,குளத்திற்கு மடை வழியாகத் தண்ணீரைத் திறந்து விட்டார்கள். கால்வாயில் இருந்து மடை வழியாக போன தண்ணீர் எல்லாம் பூமிக்குள் போனதே தவிர குளம் நிறையவில்லை. யார் யாரெல்லாமோ வந்து என்ன என்னவோ செய்தும் குளத்தில் தண்ணீர் தேங்கவே இல்லை. ராஜாவுக்கு ரொம்ப கவலையாப் போச்சு...ஏதோ தெய்வ குத்தமா இருக்குமுன்னு நினைச்சு பரிகாரமும் பண்ணிப் பார்த்தாச்சு.. அப்பவும் குளத்திலை தண்ணீர் தேங்கவே இல்லை.. இப்படி இருக்கும்போது அந்த ஊருக்கு ஒரு முனிவர் வந்தார். அவர் நடந்த விடயங்களை எல்லாம் கேள்விப்பட்டு ராஜாவிடம் போய், ராஜாவே அந்தக் குளத்தில் தண்ணீர் தேங்க நான் ஒரு வழி சொல்லுறேன் .. செய்றீங்களா என்றார். ராஜாவும் விளைச்சல் பெருகணும், வெள்ளாமை வெளை…
-
- 1 reply
- 1k views
-
-
மறுபேச்சின்றி கீழ்ப்படிதல் - விவேகானந்தர் யாருக்குக் கீழ்ப்படிதல் தெரியுமோ, அவனுக்குத் தலைமை தாங்கவும் தெரியும். முதலில் கீழ்ப்படியக் கற்றுக் கொள்ளுங்கள். இந்த மேலை நாட்டினரிடையே சுதந்திர உணர்ச்சி தீவிரமானதாக இருந்தாலும், கீழ்ப்படிகிற உணர்ச்சியும் அதே அளவுக்குத் தீவிரமாக உள்ளது. நாமெல்லாம் மமதையுள்ளவர்கள். இந்த அகங்காரம் எந்த வேலையையும் நடக்க விடாது. மகத்தான துணிச்சல், வரம்பில்லாத தைரியம், அபாரமான சக்தித் துடி துடிப்பு இவை எல்லாவற்றையும்விட முக்கியமாகப் பரிபூரணக் கீழ்ப்படிதல் இந்தக் குணங்கள் தனி மனிதனையும் தேசத்தையும் மறுமலர்ச்சி நிலைக்கு இட்டுச் செல்கின்றன. இங்கே எல்லோரும் தலைமை தாங்க விரும்புகிறார்கள். கீழ்ப்படிய எவருமில்லை. பெரிய வேலைகளைச் செய்யும்போது…
-
- 15 replies
- 4.4k views
-
-
அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி ...... அகமாகி... அயனென வாகி அரியென வாகி அரனென வாகி ...... அவர்மேலாய் இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி ...... வருவோனே இருநில மீதி லெளியனும் வாழ எனதுமு னோடி ...... வரவேணும் மகபதி யாகி மருவும் வலாரி மகிழ்களி கூரும் ...... வடிவோனே வனமுறை வேட னருளிய பூஜை மகிழ்கதிர் காம ...... முடையோனே செககண சேகு தகுதிமி தோதி திமியென ஆடு ...... மயிலோனே திருமலி வான பழமுதிர் சோலை மலைமிசை மேவு ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... அகரமும் ஆகி ... எழுத்துக்களுள் அகரம் முதலில் நிற்பது போல எப்பொருளுக்கும் முதன்மையாகி அதிபனும் ஆகி ... எல்லாவற்றிற்கும் தலைவனாகி அதிகமும் ஆகி ... எல்லோருக்கும் மேம்பட்டவனாகி அகமாகி ... யாவர்க்கும் …
-
- 0 replies
- 915 views
-
-
விதி என்பதும் சதி என்பதும் ஒன்றே !!! விதி இறைவனால் மனிதனுக்கு கொடுக்கபடுவது சதி மனிதனால் மனிதனுக்கு கொடுக்கப்படுவது நீ .......இரண்டையும் எதிர் கொள்.......! விதி என்று எதையும் விட்டு வைக்காதே...!
-
- 34 replies
- 3.1k views
-
-
சூலமங்கலம் சகோதரிகளின் பாடல்கள் http://youtu.be/MAv2pYz-cbI ஓமென்று நினைத்தாலே போதும் முருகன் வேல் வந்து அருள் தந்து நம் நெஞ்சை ஆளும் ஓம் ஓம் ஓம் ஓமென்று நினைத்தாலே போதும் முருகன் வேல் வந்து அருள் தந்து நம் நெஞ்சை ஆளும் ஓம் ஓம் ஓம் சிவ பெருமான் விழியின் சுடரானவன் சரவணத் திருப்பொய்கை மலரானவன் சிவ பெருமான் விழியின் சுடரானவன் சரவணத் திருப்பொய்கை மலரானவன் தவ மங்கை இருவருக்கும் உயிரானவன் தவ மங்கை இருவருக்கும் உயிரானவன் தினம் துதி பாடும் உலகினுக்கு ஒளியானவன் ஓமென்று நினைத்தாலே போதும் முருகன் வேல் வந்து அருள் தந்து நம் நெஞ்சை ஆளும் ஓம் ஓம் ஓம் திருநீறை அணிவோரின் குறை கேட்பவன் நலம் நாடி வருவோரின் பிணி தீர்ப்பவன் திருநீறை அணிவோரின் குறை கேட்பவன் நலம் ந…
-
- 5 replies
- 1.3k views
-
-
இப்படியான விளையாட்டில் உள்ள, ஆபத்துகளை தெரிந்து கொள்ளுங்கள். இது வரை... இந்த விளையாட்டு விளையாடி... தமிழ் நாட்டில், நான்கு மாணவர்கள் இறந்துள்ளார்கள்.
-
- 8 replies
- 791 views
-
-
-
- 0 replies
- 505 views
-
-
அகத்தியர் தோற்றம் பற்றி பல விதமாகக் கூறப்படுகிறது. தாரகன் முதலிய அரக்கர்கள் உலகை வருத்த, அவர்களை அழிக்க இந்திரன், வாயு, அக்கினி ஆகியோர் பூமிக்கு வந்தனர். இவர்களைக் கண்ட அசுரர்கள் கடலுக்குள் ஒளிந்தார்கள். இந்திரனின் யோசனைப்படி அக்கினி வாயுவுடன் கூடி பூமியில் விழுந்து அகத்தியராய் அவதரித்தார் என்றும், மிர்திரர் குடத்திலிட்ட வீரியத்திலிருந்து அகத்தியரும், வருணன் தண்ணீரிலிட்ட வீரியத்திலிருந்து வசிஷ்டரும் அவதரித்தனர் என்றும்,மிர்திரர் குடத்திலிருந்து தோன்றியமையால் அகத்தியர் குடமுனி, கும்பயோகி என்னும் பெயர்களைப் பெற்றார் என்றும் பலவாரான கருத்துகள் நிலவுகின்றன. முன்பு தேவர்களை வருத்திய அசுரர் இப்போதும் வருத்த ஆரம்பித்தனர். இந்திரன் அவர்களை அழிக்க வரும்போது அசுரர்கள் கடலுக்குள் …
-
- 0 replies
- 1.3k views
-
-
http://kuma.lunarservers.com/~pulik3/Pulik...huppakirvu.smil புலிகளின் குரலில் சீமானின் கருத்துப்பகிர்வு.பகுதி 3 http://kuma.lunarservers.com/~pulik3/Pulik...huppakirvu.smil பகுதி 2 http://kuma.lunarservers.com/~pulik3/Pulik...huppakirvu.smil பகுதி 1
-
- 3 replies
- 1.4k views
-
-
நான் யார்?? நான் யார்?? என்ற மைய கேள்வியுடன் நான் எங்கிருந்து வந்தேன்?நான் எதற்காக இங்கு வந்தேன்?என்ற புதிய புதிரான வினாக்களும் எழுப்பபட்டன. இந்த வினாக்களும் அவற்றிற்கு அளிக்கபட்ட விளக்கங்களும்,அதனால் எழுந்த கருத்துவ பொய்மைகளும்,உண்மையான மனிதனை இந்த உண்மையான உலகத்தில் இருந்து அந்நியமாக்கியது.மனித உலகதிற்கும் மனித வாழ்விற்கும் விசித்திரமான வியாக்கியானங்கள் கொடுக்கபட்டன. இந்த விசித்திரமான பார்வையில் இவ் பூவுலகம் ஒரு மாயலோகம். ஒரு மானசீக தோற்றபாடு எமகுள்ளே இருந்து கொண்டு எல்லாம் தெரிந்ததாக எண்ணி கொள்ளும் எமது மனம் பொய்களை கொண்டு உருவகிக்கும் ஒரு போலியான உலகம்.சத்தியத்தின் இருப்பிடமாக இன்னொரு உலகம் இருக்கிறதாம்.அந்த ஆத்ம உலகில் இருந்து நாம் இங்கு வந்து வாழ்ந்து…
-
- 15 replies
- 3k views
-
-
காலத்தை கி.மு.& கி.பி. என வரலாறு பிரிக்கிறது. அதுபோல வாழ்க்கையை ஏ.மு.& ஏ.பி. என ஜோதிடம் பிரித்துக் காட்டுகிறது. அதாவது ஏழரைச் சனிக்கு முன், ஏழரைச் சனிக்குப் பின் என்று வாழ்வு கனிகிறது. ஏழரைக்குப் பிறகு வரும் தெளிவும் நிதானமும் ஆச்சரியமானது. இந்த ஏழரைச் சனி என்னதான் செய்யும்? உங்கள் ராசிக்குப் பின் ராசியிலும் உங்கள் ராசிக்குள்ளும் உங்கள் ராசிக்கு அடுத்த ராசியிலும் சனி சஞ்சரிக்கும் காலத்தையே ஏழரைச் சனி என்கிறோம். சிறு வயதில் வரும் முதல் சுற்றை மங்கு சனி என்றும் வாலிப மற்றும் மத்திம வயதின்போது வரும் இரண்டாம் சுற்றை பொங்கு சனி என்றும் கொஞ்சம் வயதான காலத்தில் வரும் மூன்றாம் சுற்றை கங்கு சனி என்றும் அழைப்பர். முதல் சுற்று: பிறந்ததிலிருந்து இருபது வயதுக்குள் ஏற்படு…
-
- 26 replies
- 3.7k views
-
-
நேர்மை தமிழில் வாய்மை, நேர்மை, உண்மை, மெய் போன்று பல சொற்கள் உள்ளன. எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்கின்றது தொல்காப்பியம். அதே வேளையில் ஒரு சொல் ஒரு பொருள் என்பதுதாம் மொழியின் அடிப்படை. ஆகவே நாம் சொல்லுக்கும் சொல்லுக்குமான நுண்ணிய வேறுபாட்டை அறிந்து செயற்பட வேண்டும். அல்லாவிடில் பொருள்மயக்கம், பொருட்சிதைவு என்பன தோன்றி, பொய், பித்தலாட்டம், புரட்டு, திரிபுகளுக்கு ஆட்பட்டு வாழ்வியலே அப்படியானதாக ஆகிவிடும். வாய்மை, வாய்ப்புக்கு இடமளிப்பதை மட்டுமே சொல்லுதல். நேர்மை, சொல்லவந்ததை ஒளிவு மறைவின்றி நேரிடையாகச் சொல்லுதல். மெய், நடந்ததை, இடம் பெற்றதை மட்டுமே சொல்லுதல். பொய், நடந்திராததை, இடம் பெறாததைச் சொல்லுதல். உண்மை, நடப்பில் உள்ளதை மட்டுமே குறிப்ப…
-
- 0 replies
- 796 views
- 1 follower
-
-
தை மாதம் பிறந்து விட்டது, தெட்சனாயனம் முடிந்து உத்தராயனம் காலம் தொடங்கி விட்டது. தமிழ் எனும் மொழி தந்த தலைவன் அழகன் முருகனுக்கு உகந்த நாளாம் தைப்பூசத்திருநாளும் வந்துவிட்டது. குமரன் அந்த ஆறுபடை வீட்டில் பழனியாண்டவர், திருப்பரங்குன்றன், பழமுதிர்ச்சோலை பாலகுமாரன், செந்திலாண்டவன், திருத்தணிகை வேலவன், சுவாமிநாதன் இப்படி பலபெயர் கொண்டு விளங்குகின்றான். சொல்ல சொல்லத் தித்திக்கும் திருக்குமரன் பெயரும் அழகு, தமிழும் அழகு. எங்கெல்லாம் தமிழ் வாழ்கிறதோ அங்கெல்லாம் முருகன் வாழ்ந்து வாழ வழிவைத்துக் கொண்டிருப்பான். அண்ணனிடம் ஞானப்பழத்திற்கு சண்டையிட்டு, அப்பனிடம் பிரணவப்பழம் கொடுத்து, கிழவியிடம் சுட்டபழம் தந்து, தாயிடம் சக்திவேல்பழம் பெற்று தமிழின் கருவாய் உலகிற்கு அரும்பழம் அளித்…
-
- 1 reply
- 727 views
-
-
ஒரே சமயத்தில் நம் உடலில் நடக்கும் 96 வகையான செயல்கள்.! சித்தர்கள் என்ற சொல்லிற்கு சித்தத்தை அறிந்தவர்கள் என்று பொருள். சித்-அறிவு. உடம்பிற்குள் 96 வகையான வேதியியல் தொழில்கள் நடைபெறுகின்றன என்ற உண்மையை (அறிவியலை) அறிந்தவர்கள் சித்தர்கள். அதை சித்தர் தத்துவங்கள் என்ற பெயரில் அழைத்தனர். மனித உடல் அவரவர் கையால் (உயரத்தில்) எண் சாண் ஆகும். இதை ஔவையார் ‘எறும்பும் தன்கை யால் எண் சாண்’ என்கிறார். உயிர்கள் தன் அகலத்தில் நான்கு சாண் அளவு பருமனும் 96 விரற்க டைப் பிரமாணமும் உள்ளதாகும். இந்த மனித உடலில் 96 வகையான செயல்கள் ஒரே சமயத் தில் நடை பெறுகின்றன. தத்துவங்கள் 96 :- ஆன்ம தத்துவங்கள் -24 உடலின் வாசல்கள் -9 தாதுக்கள் -7 மண்டல…
-
- 0 replies
- 599 views
-
-
இந்து மத வழக்கங்களின் பின்னணியில் உள்ள அருமையான அறிவியல் காரணங்கள்!!! 0 Comment பல ஆயிரம் ஆண்டு காலமாக சில இந்து மத வழக்கங்கள், இன்றளவும் கூட மிகவும் தீவிரமாக பின்பற்றப்பட்டு வருகிறது – அதனை மூட நம்பிக்கை என்றும் கூறலாம், வழக்கங்கள் என்றும் கூறலாம், மற்றவர்கள் மனதில் பயத்தை உண்டாக்குவதற்கு மற்றொரு வழி என்றும் கூறலாம், இந்த வழக்கங்களின் அவசியத்தைப் பற்றி நம்மில் பலரும் கேள்வி எழுப்புவோம். இன்றைய நவீன உலகத்தில் இவைகள் எப்படி தொடர்புடையாதாக இருக்கும் என நாம் வியக்கவும் செய்வோம். இதற்கு முன்னால் பின்பற்றப்பட்டு வந்த இந்த பழக்க வழக்கங்களை நம்மில் பலரும் இன்றைய காலத்தில் மூட நம்பிக்கைகளாக கருதி புறக்கணித்து விடுவோம். ஆனால் அனைத்து இந்து மத மரபுகளும் மூட…
-
- 0 replies
- 400 views
-
-
மார்கழி குளிரில் அதிகாலை எழும்பி குளித்துவிட்டு ஊர் பெரிசுகள் இளசுகளுடன் திரும்பாவை பாடாத யாரும் இந்த களத்தில் இருக்கமாட்டார்கள், அந்த நேரம் காதலிகளை காண்பதற்கு எத்தனை விதமா செயற்பாட்டிருப்போம், அது ஒரு பெற்காலம், ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ ஸ்ரீ மாணிக்கவாசக சுவாமிகள் திருவண்ணாமலையில் அருளிய திருவெம்பாவை பாடல்கள்: ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண் மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான் மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய் வீதிவாய்க் கேட்டலுமே, விம்மிவிம்மி மெய்ம்மறந்து போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டுஇங்ஙன் ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என் னேஎன்னே ஈதேஎம் தோழி பரிசுஏலோர் எம்பாவாய் !!…
-
- 9 replies
- 3.5k views
-
-
1 - அதிபத்த நாயனார் பெயர் : அதிபத்த நாயனார்குலம் : பரதவர்பூசை நாள் :ஆவணி ஆயில்யம் அவதாரத் தலம் :திருநாகை முக்தித் தலம் :திருநாகை வரலாறு: சோழமண்டலத்திலே, நாகப்பட்டணத்திலே, சமுத்திர தீரத்திலே உள்ள நுளைப்பாடியிலே, பரதவர் குலத்திலே, அதிபத்தநாயனாரென்பவர் ஒருவர் இருந்தார். அவர் பரதவர்களுக்குத் தலைவராகி, அவர்கள் வலைப்படுத்துக் குவிக்கும் மீன்குவைகளைப் பெற்றுவாழ்வார். சிவபத்தியின் மிகச் சிறந்தவராதலால், அகப்படும் மீன்களிலே ஒருதலைமீனை "இது பரமசிவனுக்கு" என்று மிகுந்த அன்பினோடு எப்பொழுதும் விட்டு வந்தார். ஒருநாளிலே ஒருமீனே வரினும் அதனைப் பரமசிவனுக்கு என்றே விடுவார். இப்படி ஒழுகுநாட்களிலே அடுத்தடுத்து அநேக நாட்களிலே ஒவ்வொருமீனே அகப்பட; அதனைக் கடலிலே விட்டுவந்தார…
-
- 48 replies
- 90.5k views
-
-
சமயதின் அடிப்படை நோக்கம்( பகுத்து அறியும் எல்லைக்குட்ட்பட்டதில் இருந்து) மனித உணர்வு, மனிதாபமே பார்க்காத ஒரு காலத்தில், ஆதிமனிதன் விலங்குகள் போல மனிதரையே அடித்துச்சாப்பிட்டு பிழைக்கும் நிலை ஒன்று இருந்தது. அவர்களினை விலங்குகளினை போல அல்லாது அவற்றின் அடிபற்றி வாழ எத்தனிக்கவிடாது, வாழும்போது ஏற்பட்ட அனுபவங்களினை ஒரு சில மனிதர்கள். தமது எல்லைக்குட்பட்ட பகுத்து அறிவினூடு கிரகித்து அதே நேரம் தன்னில் உள்ளே உள்ள ஒரு விசித்திரமான உந்து சக்தியினுடைய ஆளுமைகளின் தொழிற்பாடுகளினால் சில விசையங்களை அறியாமையினால், பகுத்து அறிந்தும், கோட்டை விட்டு உணர்வு பூர்வமாக அறிந்த போது, தமக்கு மேலே என்னுமொரு சக்தி ஒன்று உண்டு என்ற ஒரு கடவுள் கோட்பாட்டுக்கமைவாகவே ஒரு நடைமுறை காலம் காலமாக …
-
- 21 replies
- 4.3k views
-