மெய்யெனப் படுவது
மெய்யியல் | நற்சிந்தனைகள் | ஆன்மீகம் | இசங்கள் | பகுத்தறிவு
மெய்யெனப் படுவது பகுதியில் மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.
1238 topics in this forum
-
செல்வச்சந்நிதி செல்வச்சந்நிதி யாழ்ப்பாண மாவட்டத்தின் வடமராட்சி மேற்கு முனையிலே தொண்டைமானாற்றங்கரையில் அமைந்துள்ள முருகன் கோயில் ஆகும். இக்கோயில் ஆற்றங்கரையான, சின்னக்கதிர்காமம், செல்லக்கதிர்காமம், கல்லோடை என்று பல பெயர்களால் அழைக்கக்கப்பட்டு வருகிறது. சந்நிதியின் தோற்றம், அமைப்பு, வழிபாட்ட முறை எல்லாம் சற்று வித்தியாசமானவை. இங்கு வானளவு எழுந்த கோபுரங்களோ, தூபிகளோ, கட்டிடங்களோ, விமானங்களோ இங்கு இல்லை. ஆலய முற்றில் நந்தியும் சுற்றிவரவுள்ள அன்னதான மடங்களும் மருத மரக்காடும் தொண்டமான் ஆறும் சந்நிதிக்கு மெருகூட்டுவதாக உள்ளன. ஆலயத்தின் எத்திசையிலிருந்து பார்த்தாலும் முருகனையும் அங்கு காட்டப்படும் தீபாராதனையையும் தான் பார்க்க முடியும். முருகனின் கையிலுள்ள வேலையே வைத்…
-
- 5 replies
- 1.4k views
-
-
வேலூரின் ஒளிரும் பொற்கோவில் 1500 கிலோ தங்கம் பயன்படுத்தப்பட்டு உருவாக்கப்பட்ட திருக்கோவில் இது! நேரடி ரிப்போர்ட்- மணி ஸ்ரீகாந்தன் தமிழ் நாட்டில் உள்ள சில முக்கிய நகரங்கள் ஒவ்வொன்றுக்கும் ஏதாவது ஒரு தனிச்சிறப்பு இருக்கும்.குறிப்பாக மதுரை,சிதம்பரம்,தஞ்சாவூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட நகரங்கள் கோயில்களுக்கு புகழ் பெற்ற இடங்களாக விளங்கி வருகின்றன. இந்த கோயில் நகரங்கள் பட்டியலில் புதிதாக சேர்ந்துள்ள நகரம் வேலூர்.இங்குதான் உலகப்புகழ்பெற்ற பொற்கோவில் அமையப்பெற்றிருக்கிறது. இந்திய நகரங்களில் வேலூர் வரலாற்று சிறப்புமிக்க நகரங்களில் ஒன்றாக விளங்குகிறது.முதல் சிப்பாய் கலகம் வேலூர் கோட்டையில்தான் நடைப்பெற்றதாக வரலாறு குறிப்பிடுகிறது.பொம்மி நாயக்கர்,ஆர்க்காட்டு நவாப…
-
- 5 replies
- 3k views
-
-
சிதம்பரம் நடராஜர் கோவில்தான் பூமியின் மையமா? இந்த மாதிரியான கோவில்களை இப்போது உள்ள அறிவியலால் கட்டமுடியுமா என்று அவ்வப்போது சமூக வலைதளங்களான பேஸ்புக் மற்றும் வாட்ஸ் ஆப்பில் மத அடிப்படைவாதிகள், இந்தியாவின் புராதனச் சின்னங்களான கோபுரங்களின் மேல் உள்ள கலசங்கள் மந்திரங்களின் மூலம் 'மகா சக்தி' பெற்று சுற்றி உள்ள ஊர்களில் 'இடி விழாமல்' தடுக்கும் வல்லமை பெற்ற ஓர் 'இடி தாங்கியாகச் செயல்படும் வல்லமை கொண்டவை என்றும் இந்த 'அறிவியல்பூர்வமான' அமைப்பை அந்தக் காலத்திலேயே நம் முன்னோர்கள் கண்டுபிடித்துவிட்டார்கள் என்றும் சொல்லி இருக்கக்கூடும். இதேபோலவே செல்பேசி கோபுரங்களில் வரும் கதிர் வீச்சுக் காரணமாகத்தான் 'சிட்டுக் குருவி' இனம் அழிந்து போவதாகவும், சிதம்பரம் கோவில் நடராஜரின் கால் உ…
-
- 5 replies
- 1.5k views
-
-
ஈழத்தமிழர்கள் கடந்த 2006ம் ஆண்டில் இருந்து மகிந்த ராஜபக்சவின் சிங்களப் பேரினவாத பயங்கரவாத அரசு திணித்து வரும் ஆக்கிரமிப்புப் போரால் சொல்லனாத் துயரங்களை அனுபவித்து வருகின்றனர். இலங்கையில் வடக்கிக் கிழக்கு மக்கள் மீது திணிக்கப்பட்ட இந்தப் போரால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பலியாகியும் காயமடைந்தும் அகதிகளாகியும் சிறைப்பட்டுப் போயுள்ளனர். அதுமட்டுமன்றி சிங்களப் படைகளால் தமிழர்களின் பாரம்பரிய வாழ்விடங்கள் வன்முறை ரீதியாகப் பறிக்கப்பட்டு உயர் பாதுகாப்பு வலயங்கள் ஆக்கப்பட்டு இந்திய மற்றும் சீன குத்தகைக்காரர்களுக்கு விலைக்கு விற்கப்பட்டும் வருகின்றன. அதுமட்டுமன்றி இலங்கையில் தமிழர் தாயக் கோட்பாட்டை சிதைக்கும் வகையில் சிங்கள அரசு திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களையும் இராண…
-
- 5 replies
- 1.9k views
-
-
நம் பாவ - புண்ணியக் கணக்கை எழுதும் சித்ரகுப்தன்! சித்ரா பெளர்ணமியில் அன்னதானம் செய்தால் சொர்க்கம்! சித்ரா பெளர்ணமியன்று (7.5.2020 வியாழக்கிழமை) சித்ரகுப்தனை மனதார வழிபடுங்கள். அவரை வேண்டிக்கொண்டு தான தருமங்கள் செய்தால், சித்ரகுப்தனின் அருள் கிடைக்கப்பெறலாம். எம பயம் விலகி நீண்ட ஆயுளுடன் வாழலாம் என்பது ஐதீகம்! திருக்கயிலாயத்தில், பார்வதிதேவி, தோழியருடன் இருந்தாள். அப்போது பொற்பலகையில் சித்திரம் ஒன்றை வரைந்தாள். மிகவும் அழகாக இருந்த சித்திரம் உயிர் பெற்றால் எப்படியிருக்கும் என்று ஆவலுடன் பேசிக்கொண்டார்கள். அதன்படி பார்வதிதேவி தான் வரைந்த ஓவியத்துக்கு உயிர் கொடுத்தாள். அந்தச் சித்திரத்தில் இருந்து வெளிப்பட்டான் ஒருவன். …
-
- 5 replies
- 1.2k views
-
-
வரலாற்றுப் புகழ்மிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய வருடாந்த தேர்த்திருவிழா இன்று வியாழக்கிழமை மிகவும் பகபூர்வமாக இடம்பெற்றது. காலையில் இடம்பெற்ற விசேட பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து நண்பகல் 11 மணியளவில் கந்தன் வள்ளி தெய்வயானையுடன் அலங்கார திருத்தேர் ஏறி வெளி வீதியுலா வரும் நிகழ்வு இடம்பெற்றது. இம்முறை ஆலய திருவிழா தேர்தல் காலத்தில் இடம் பெற்றமையால் அரசியல்வாதிகளான மாவிட்டபுரத்தை சொந்த இடமாகக் கொண்ட மாவை சேனாதிராசா மற்றும் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர். அத்துடன் வட மாகாண ஆளுநர் பளிகக்காரா மற்றும் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் வட மாகாண துணைத்தூதுவர் ஆ.நடராஜாவும் கலந்துகொண்டார்கள். t: http://www.malarum.com/article/tam/2015/08/13/11375/மாவிட்டபுரம்-கலந்துசுவாமி…
-
- 5 replies
- 1.9k views
-
-
கள உறவுகளே, நான் இங்க சில கோவில்களின் வரலாறுகளை இணைகின்றன். நீங்களும் உங்களுக்கு தெரிந்த கோவில்களின் வரலாறுகளை இணைக்கலாம் அது எந்த மத கோவிலாக இருந்தாலும் பரவில்லை. இது எமது கோவில்களை பற்றி அனைவரும் அறிந்துகொள்ள ஒரு வாய்ப்பாக அமையலாம். முதலாவதாக செல்வ சன்னதி கோவிலின் வரலாறை இணைகின்றன். செல்வச் சந்நிதி ஆலய வரலாறு ஈழவள நாட்டின் கண் காணப்படும் திருத்தலங்களில் வரலாற்றுச்சிறப்பு மிக்க ஆலயமாக செல்வச் சந்நிதி ஆலயம் விளங்குகின்றது. இவ்வாலயம் தொண்டைமானாறு என்னும் கிராமத்தில் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது .இதன் தோற்றம், அமைப்பு, நடைமுறை என்பன தனித்துவமானதும், வரலாற்றுச் சிறப்பும் மிக்கவுமாகவுள்ளது. உலகில் எவ்விடத்திலும் காணப்படாத தனித்துவம் இங்கே காணப்படுவதென்றால் இதன் புதுமைக்கும…
-
- 5 replies
- 5.8k views
-
-
சிவன், திருமால், பிரமன் ஆகிய மும்மூர்த்திகளும் ஒரே தலத்தில் எழுந்தருளியிருக்கும் தலம் குமரி மாவட்டம் சுசீந்திரம் “தாணுமாலயசுவாமி ஆலயம்”தான். தலபுராணத்தில் கூறியபடி: “அத்திரி முனிவரும் அவர்தம் மனைவி அனுசூயாவும், இங்குள்ள தலவிருக்கம்(தலவிருட்சம்) கொன்றை மரத்தினடியில் நின்று வேண்ட மும்மூர்த்திகளும் காட்சி கொடுத்தனர்.” அதைக்குறிக்கும் முகத்தான் மும்மூர்த்தியும் ஒருமூர்த்தியாய் “தாணுமாலயன்” என்னும் நாமம் தாங்கி எழுந்தருளியிருக்கிறார். பெண்ணாசையால் பல குற்றம் புரிந்த இந்திரன் கவுதம முனியின் சினத்துக்கும் சாபத்துக்கும் ஆளானான். அப்பாவத்தைக் களைய, இந்திரன் சுசீந்திரம் தாணுமாலயனை வேண்டித் தூய்மை பெற்றான். “சுசி” என்றால் தூய்மை அடைதல் என்று பொருள். இந்திரன் ஈங்கு தூய்மை …
-
- 5 replies
- 1.6k views
-
-
ஒரு அன்பர் கோவில் கோவிலாக ஏறி இறங்குவார். அவரைப் போன்ற பக்தி மானை எங்கும் பார்க்க முடியாது. பிரசாதம் கொடுப்பதற்காக தன் நண்பனின் அலுவலகத்திற்கு வந்திருந்தார். பெற்றுக் கொண்ட அவர் நண்பர் எப்படி இருந்தது கடவுள் தரிசனம் என்றார். யாரும் பக்கத்தில் இல்லையே என்று சுற்றும் முற்றும் பார்த்து விட்டு மனம் விட்டுப் பேசினார். "மனதிற்கு ஒரு ஆறுதல் அவ்வளவுதான். புது சூழ்நிலை, நம்பிக்கை வார்த்தைகள், இனி நல்ல காலம் என்று ஒரு ஆறுதல் அவ்வளவுதான். கடவுளைப் பார்த்தாயா என்றால் கடவுள் சிலைகளைத்தான் பார்த்தேன் என்றார். வேறு ஒன்றும் புது மாற்றம் ஒன்றுமில்லை. இலக்கில்லாத பயணம் போல் தோன்றுகிறது சில சமயம் " என்றார் சரி ஒரு பொருளைத் தொலைத்து விட்டோம் என்றால் எங்கே தேடுவோம்? என்…
-
- 4 replies
- 1.5k views
- 1 follower
-
-
கீதையில் இருந்து சில முத்துக்கள் கீதை 4:32 இப்படி பலவகைப்பட்ட செயல்பாடுகளில் கைக்கொள்ளப்படும் மனநிலை யோகங்களால் உண்டாகிற யாகங்கள் மட்டுமே வேதங்களால் அங்கீகரிக்கபட்டவை ! இதன் நுட்பத்தை சரியாக புரிந்துகொள்வதால் மட்டுமே மாயைகளிளிருந்து விடுதலை பெற்ற ஆத்துமாவாய் மாற முடியும் !! கீதை 4:33 எதிரிகளை நிர்மூலமாக்குகிற பார்த்தா ! யோகங்களின் வழியான யாகங்களே ; உலகத்தினர் பொருட்களால் செய்யும் யாகங்களை விட சரியானது ! செயல்பாடுகளின் வழியான யோகங்களே ஞானத்தையும் விளைவிக்க கூடியது !! ... கீதை 4:34 ஆன்மாவை உணர்ந்த குரு ஒருவரை அணுகி அவருக்கு பணிவிடைகள் செய்தும் தாழ்மையுடன் விசாரித்தும் அவரிடமிருந்து உண்மையை உள்வாங்குவாயாக !தன்னை உணர்ந்த ஆத்துமாக்கள் மட்டுமே தாங்கள் அறிந்த …
-
- 4 replies
- 1.5k views
-
-
செல்போன்களை தவிர்த்துவிட்டு குடும்பத்தினருடன் உரையாடுங்கள் என்று போப் ஆண்டவர் பிரான்சிஸ் அறிவுரை வழங்கியுள்ளார். உலகையே கைக்குள் அடக்கிவிட்ட உணர்வை தரும் செல்போனை பயன்படுத்துவதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், செல்போனை தூர வைத்துவிட்டு குடும்பத்திடருடன் உரையாடுங்கள் என்று போப் ஆண்டவர் பிரான்சிஸ் அறிவுரை வழங்கியதுடன் ஏசு கிறிஸ்து, மேரி, ஜோசப் ஆகியோரை மேற்கோள் காட்டினார். இயேசு கிறிஸ்து, மேரி, ஜோசப் ஆகியோர் உரையாடினார்கள், உழைத்தார்கள், வழிபட்டார்கள் அதையே நீங்களும் செய்யுங்கள். மேலும், குடும்பத்தினருடன் ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணும் நேரத்திலாவது செல்போனை தவிர்த்து விட்டு அவர்களுடன் மனம் விட்டு பேசுங்கள் என்ற…
-
- 4 replies
- 546 views
-
-
தேவராய சுவாமிகள் அருளிய கந்தர் சஷ்டி கவசம் துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சிற் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்தோங்கும் நிஷ்டையுங் கைகூடும் நிமலரருள் கந்த சஷ்டி கவசந்தனை குறள் வெண்பா அமரரிடர் தீர வமரம் புரிந்த குமரனடி நெஞ்சே குறி சஷ்டியை நோக்கச் சரவண பவனார் சிஷ்டருக் குதவுஞ் செங்கதிர் வேலோன் பாத மிரண்டில் பன்மணிச் சதங்கை கீதம்பாடக் கிண்கிணியாட மையல் நடனஞ் செய்யும் மயில்வா கனனார் கையில் வேலாலெனைக் காக்கவென் றுவந்து வரவர வேலா யுதனார் வருக வருக வருக மயிலோன் வருக இந்திரன் முதலா வெண்டிசை போற்ற மந்திர வடிவேல் வருக வருக வாசவன் மருக வருக வருக நேசக் குறமகள் நினைவோன் வருக ஆறுமுகம்…
-
- 4 replies
- 2.1k views
-
-
வரிசைப் படுத்தி எண்களைக் கணக்கிட்டால் 5 சிறியது 6 பெரியது. ஆனால் இங்கே ஐந்து பெரிதென்றும் ஆறு சிறிதென்றும் குறிப்பிடுவதற்குக் காரணம் ஆறறிவு உயிரான மனிதர்களை விட ஐயறிவுயிர்களான விலங்குகளும் பறவைகளும் பண்பில், பழகும் தன்மையில், பாசம் காட்டுவதில், தொலைநோக்குச் சிந்தனையில் மனிதனைக் காட்டிலும் உன்னதமானதாக விளங்குகின்றன. நுகர்வுக் கலாசாரத்தின் நுகர்தன்மையில் பூட்டப்பட்ட மனிதன் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் தன் இயல்பை இழந்து இருப்பைத் தொலைத்து மீண்டும் அவன் பழைய கற்காலத்தை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கிறான். காலம் எத்தனை கோலம் போட்டாலும் ஐயறிவுயிர்கள் தத்தம் இயல்பை இழந்துவிடாமல் தங்களைத் தற்காத்துக் கொள்கின்றன. இதை சம கால மனிதனுக்கு உணர்த்தத்தான் விருதுகள் பல பெற்று தமிழுக்…
-
- 4 replies
- 981 views
-
-
[size=3]21- ம் நூற்றாண்டு விஞ்ஞானத்திற்க்கு நம்பிக்கையளிக்கும் தமிழ் மெய்ஞ்ஞானம்[/size] [size=3]விஞ்ஞான நோக்கம்:[/size] [size=3]ஜெனிவா ஃப்ரான்ஸ் எல்லைப்பகுதியில் 27 கி.மீ சுற்றளவில் லார்ஜ் ஹாட்ரான் கொலைடர் என்ற துகள் முடக்கி சோதனைச்சாலை அமைந்துள்ளது. இதில் அணுவின் அடிப்படை துகள்களை (ப்ரோட்டான் => குவார்க் => க்ளுவான்) கட்டமைக்கும் “பரமாணு அதாவது கடவுள் துகள் (Higgs boson)” எது? என்ற சோதனை நடந்து வருகின்றது.[/size] [size=3]செயல்படும் முறை:[/size] [size=3]லார்ஜ்[/size][size=3] ஹாட்ரான் கொலைடரில் அணுவின் அடிப்படைத்துகளான ப்ரோட்டான்களை (நேர்மங்களை) கிட்டதட்ட ஒளியின் வேகத்தில் (வினாடிக்கு 300000கி.மீ) ஒன்றோடொன்று மோதவிட்டு, பிறகு வெளிப்படும் துகள்க…
-
- 4 replies
- 2.7k views
-
-
தேசிய தலைவரின் படத்தை அவரோடு கூட அவரின் தோற்றத்தில் இருந்த ஒருவருடன் ஒப்பிட்டு ஆராயும் சிங்கள இராணுவம். இது தேசிய தலைவரின் இல்லம் பிடிக்கப்பட்டதாகச் சொல்லப்பட்ட பெப் 2009 நடந்துள்ளது. தேசிய தலைவரின் முகத்தை ஒப்பீடு செய்வதன் நோக்கம்..???! இதில் தற்போது ஐநா அதிகாரியாக பதவி உயர்வு பெற்றிருக்கும் பெரும் போர் குற்றவாளி சமிந்திர சில்வா இடம்பெற்றிருக்கிறார். இது தலைவர் இருக்கிறாரோ இல்லையோ என்ற ஆராய்ச்சிக்காக அல்ல. சிங்களத்தின் நோக்கங்கள் எந்த வகையில் இருந்திருக்கிறது என்பதை ஊகிக்க உதவும் என்பதால் இணைக்கப்படுகிறது.
-
- 4 replies
- 2k views
-
-
உ சிவமயம் திருச்சிற்றம்பலம் உமாசகிதர் சிவபெருமானது அருட்சக்தியே உமை என அழைக்கப்படுகிறது. சக்தி தன் வடிவே தன்னில் தடையிலா ஞானமாகும் என்பர் ஆன்றோர் ஞானமே உமை வடிவாகத் திகழ்கிறது. சிவபெருமானது கருணையே அம்பிகை என்பது இதனால் புலப்படும். உமை என்பது சிவபெருமானது கருணையே என்று காட்ட அமைந்த திருக்கோலமே உமாசகித மூர்த்தி அல்லது உமா மகேச்வர மூர்த்தி ஆகும். சுகாசனமூர்த்தி அருகே, தேவி அவரைப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தால் இக்கோலம் உமாசகிதமூர்த்தி என அழைக்கப்படும். இறைவனின் இடப்பக்கம் இறைவி அமர்ந்திருப்பாள். இவர் ஒரு முகமும் முக்கண்ணும் நாற்கரங்களும் கொண்டிருப்பர். சுகாசனத்தில் அமர்ந்த இவர் புலித்தோலையும் பட்டாடைகளையும் அணிந்திருப்பார். இவ…
-
- 4 replies
- 1.8k views
-
-
பால தண்டாயுதபாணி ... தண்டாயுதபாணி விக்ரகத்திற்கு நான்கு விதமான அபிஷேக பொருட்கள் மட்டும் தான் உபயோகிக்கபடுகிறது. அவை, நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி என்பவை. பன்னீர் மார்கழி மாதத்தில் மட்டும் உபயோகபடுத்தபடுகிறது. இவையில் சந்தனம், பன்னீர் தவிர மற்றவை எல்லாம் தண்டாயுதபாணியின் சிரசில் வைத்து, உடனே அகற்றபடுகிறது. முடி முதல், அடி வரை அபிஷேகம் என்கிற முழு அபிஷேகம் சந்தனத்துக்கும், பன்னீரும் மட்டும் தான். இதில் சிரசுவிபூதி என்பது சித்தர் உத்தரவால் பக்தர்களுக்கு வழங்க படுகிற ஒரு பிரசாதம். கிடைப்பது மிக புண்ணியம். தெரிந்துகொள்ளுங்கள். ஒரு நாளைக்கு ஆறு முறை தண்டாயுதபாணிக்கு அபிஷேகம் அலங்காரம் செய்யபடுகிறது. இது ஐந்து முதல் ஏழு நிமிடத்துக்குள் முடிந்துவிடும். அபிஷேக…
-
- 4 replies
- 1.1k views
-
-
இந்து தமிழ்’ ஆன்லைனில் ஒளிபரப்பாகிறது மதுரை மீனாட்சி திருக்கல்யாணம்: வீட்டிலிருந்தபடியே தரிசிக்க ஏற்பாடு மதுரையில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெற்றாலும் சித்திரைத் திருவிழாவுக்கு என்று தனிச் சிறப்பு உண்டு. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 12 நாட்கள் நடைபெறும் இந்தத் திருவிழா, பிரம்மாண்டமும் கொண்டாட்டமும் நிறைந்தது. இவ்விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். தற்போது நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்துஏப்ரல் 25-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குவதாக இருந்தசித்திரைத் திருவிழா நடைபெறாதுஎன இந்து சமய அறநிலையத் துறை அறிவித்துள்ளது. அதேநேரம், லட்சக்கணக்கான பக்தர்களின் கோரிக்கையை நிறைவேற்றும…
-
- 4 replies
- 1.6k views
-
-
நாம் ஏன் கடவுளை நம்மவேண்டும்..? 1.கடவுளுக்காக மனிதனை மனிதன் கொன்று குவிக்கும் காட்சிகள் கடவுளுக்கு தெரியாதா..? இல்லை அவர் ஆதரிக்கிறாரா..? 2.அப்பாவி மக்கள் லெபனான்,இலங்கை,ஈராக் என்று கொல்லபடும்போது கடவுள் சுற்றுலா சென்றுவிட்டாரா..? 3.கடவுளை காட்டுகிறேன் என்று சொல்லி பெண்களை அனுபவித்திலும், சொத்துகள் சேர்ப்பதையும் முழுநேர தொழிலாக ஆக்கிவிட்டவர்கள் கடவுள் ஏன் தண்டிப்பதில்லை..? 4. பச்சிளம் குழந்தைகள் கொடுரமாக கொலை செய்யப்டுகிறாரகள்..! ஒரு பெண்ணை 6 பேர் பாலியல் கொடுமை செய்கிறார்கள்..! இதை எல்லாம் கடவுளின் திருக்கண்ணுக்கு தெரியாதா..?-இல்லை.. இதெல்லாம் ஏற்றுக்கொள்ளும் ஒன்றை எப்படி கடவுளாக ஏற்றுக்கொள்ள முடியும்..? தயவு செய்து யாரும் அடுத்த…
-
- 4 replies
- 1.8k views
-
-
வணக்கம், நான் சில மாதங்களுக்கு முன்னர் யூரியூப்பில் இஸ்லாம் சம்மந்தமான மிகவும் கடுமையான தாக்குதல் செய்கின்ற காணொளிகளை பார்த்து இருந்தேன். அதில் பிரித்தனியாவைச் சேர்ந்த ஒரு நகைச்சுவையாளர் தான் இஸ்லாம் பற்றி நினைக்கின்ற எண்ணங்களை பரிமாறி இருந்தார். அடிப்படையில இஸ்லாம் மதத்தினரை இவரது பேச்சு, காணொளிகள் கோபம் செய்யக்கூடும் என்றாலும், இவரது பல கருத்துக்கள் சீர்தூக்கிப் பார்க்கப்படவேண்டியவை. நீங்களும் இவரது காணொளிகளை தற்செயலாக பார்த்து இருக்கலாம். அல்லது இவர்பற்றி அறிந்து இருக்கலாம். இவரது காணொளிகள் சிலவற்றை இங்கு இணைக்கின்றேன். யூரியூப் தளத்தில் இப்போது திருத்தவேலைகள் நடப்பதால் Dailymotion தளத்தில் உள்ள இவரது மூன்று காணொளிகளை இஞ்ச இணைக்கிறன். 49 காணொளிகளை யூரியூப்பில் இவர…
-
- 4 replies
- 1.8k views
-
-
சென்னை: பெண்ணிய உரையாடல்கள் - ஈழம், தமிழகம், புலம்பெயர் சூழல் (கருத்தரங்கு அறிக்கை) அனுப்பியவர்கள்: புதிய மாதவி, ரவி (சுவிஸ்) நிகழ்வுகள் பெண்ணிய உரையாடல்கள் - ஈழம், தமிழகம், புலம்பெயர் சூழல் (கருத்தரங்கு அறிக்கை)இலங்கையின் மறக்கப்பட்ட பகுதி. மலையகம். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தேயிலை பச்சை. நடுநடுவே சாக்கு அணிந்து, வெடவெடக்கும் குளிரில், அட்டைக் கடியையும் குளவிக் கொட்டுதலையும் சகித்துக் கொண்டு கொழுந்து பறிக்கும் பெண்கள். அவர்களில் சிலர் நிறைமாத கர்ப்பிணிகள். பிள்ளை பெறுதல் என்ற மறு உற்பத்தி செயல்பாட்டுக்கும் உற்பத்திக்கு அடிப்படையான உழைப்புக்கும் இருக்கும் நெருக்கமான, தவிர்க்கமுடியாத உறவை, பெண்ணுடலில் தொழிற்படும் அனுபவத்தைப் பற்றி ஜமுனா அவர்கள் பேசுகிறார். அவர் மலைய…
-
- 4 replies
- 1.2k views
-
-
-
நியூமராலஜி நிஜமா........!!! நேற்று காலையில் வண்டியில் போய் கொண்டிருக்கும் போது ரேடியோ மிர்ச்சியில் கேட்ட ஒரு செய்திதான் இந்த பதிவெழுதுவதற்கான காரணம். அதாவது ஒவ்வொரு வாரமும் சென்னையில் குறைந்தது 500 பேர் வரையில் தங்கள் பெயர்களை மாற்றிக் கொண்டிருக்கிறார்களாம். இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் பெருவாரியான காரணம் நியூமராலஜியாம்.... இப்போது நியூமராலஜியுடன்...நேமியாலஜி என்கிறா ஜியும் சேர்ந்துள்ளதால் இத்தனை கூத்தும் நடக்கிறது.வேறு மாதிரியில் சொன்னால் ஒவ்வொரு வாரமும் சென்னையில் குறைந்தது 500 பேர் தங்களின் பெயரை மாற்றிக் கொள்வதால் வாழ்க்கையில் சுபிட்சம் அடைகிறார்கள் என கொள்ளலாம். என்ன அபத்தம் இது...... இதை மூடநம்பிக்கை என சொல்வதை விட பேராசை மற்றும் அறியாமையின் உச்சம் எ…
-
- 4 replies
- 3.3k views
-
-
மனிதரில் தனித்துவம் இருக்கிறதா? இல்லை என்கிறார் கிருஸ்ணமூர்த்தி அவர்கள். மனிதரின் consciousness எல்லோருக்கும் பொதுவானதே என்கிறார். இதை நீங்கள் எப்படி புரிந்து கொள்கிறீர்கள் என்பதை அறிய விரும்புகிறேன். more..
-
- 4 replies
- 1.4k views
-
-
மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய தேர்த்திருவிழா
-
- 4 replies
- 711 views
-