Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மெய்யெனப் படுவது

மெய்யியல் | நற்சிந்தனைகள் | ஆன்மீகம் | இசங்கள் | பகுத்தறிவு

பதிவாளர் கவனத்திற்கு!

மெய்யெனப் படுவது பகுதியில்  மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.

  1. சம்பந்தரும் சமணரும் வேதநெறி தழைக்க, சைவத்துறை விளங்க அவதரித்த திருஞானசம்பந்தர் தன் ஒவ்வொரு பதிகத்திலும் பத்தாவது பாடலில் வேதநெறிக்குப் புறம்பான சமண சாக்கியர்களைச் சாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். பதிகத்தின் பதினோராவது பாடல் திருக்கடைக்காப்பு எனப்படுகிறது. அதில் தன் பெயரைப் பதிவு செய்வதோடு இப் பதிகத்தைப் பாடுவதால் என்ன பலன் கிடைக்கும் என்றும் கூறுகிறார். எனவே பத்தாவது பாடலே இறைவனைப் பற்றிய பாடல் தொகுதியின் நிறைவுப் பாடலாக அமைகிறது. இறைவியிடம் ஞானப்பால் உண்டவுடன் அவர் பாடிய ‘தோடுடைய செவியன்’ என்ற முதல் பதிகத்தில் பத்தாவது பாடல் சமண சாக்கியர்களுக்கு எதிராக அமைந்தது திட்டமிடாதது அல்லது இறைவன் செயல் எனக் கூறலாம். ஆனால் மற்றப் பதிகங…

    • 1 reply
    • 1.4k views
  2. குண்டலினி,உங்களுக்குள் பொதிந்து கிடக்கும் ஒரு சக்தி. தன்னை முழுமையாக வெளிப்படுத்திக்கொள்ளாத நிலையிலேயே நமக்குள் இது புதைந்து கிடக்கிறது. குண்டலினியைப் பற்றி உங்கள் வாழ்க்கை அனுபவத்திலிருந்தே நான் விவரிக்கிறேன். ஏனென்றால், இதைப் பற்றி நிறைய கதைகள் இருக்கின்றன. உங்கள் வீட்டின் சுவற்றில் பிளக் பாயிண்ட் இருக்கிறது. அது தானாக மின்சாரத்தை உருவாக்குவதில்லை. எங்கோ ஓரிடத்தில் ஒரு பெரிய மின்சாரத் தயாரிப்பு நிலையம் இருக்கிறது. அதுதான் மின்சாரத்தை உருவாக்குகிறது, ஆனால் அது உங்களுக்கு நேரடியாக மின்சாரத்தை வழங்க முடியாது. இந்த பிளக் பாயிண்ட்தான் உங்களுக்கு மின்சாரத்தைக் கொடுக்க முடியும். பெரும்பலானவர்கள் அந்த மின் நிலையத்தை நினைத்துக்கூடப் பார்ப்பதில்லை, இல்லையா? அவர்களுக்கு அப்படி என…

  3. பட மூலாதாரம்,THIRUNALLARUTEMPLE.ORG கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் மார்ச் 29ஆம் தேதி சனிப்பெயர்ச்சி என திருக்கணிதப் பஞ்சாங்கம் கூறும் நிலையில், அன்றைய தினம் சனிப்பெயர்ச்சி இல்லை என திருநள்ளாறு கோவில் அறிவித்திருக்கிறது. சனிப்பெயர்ச்சி எப்போது என்பதிலேயே முரண்பாடுகள் தோன்றுவது ஏன்? சனிப் பெயர்ச்சி தொடர்பான அறிவியல் உண்மை என்ன? சனிப் பெயர்ச்சி எப்போது? திருக்கணிதப் பஞ்சாங்கப்படி மார்ச் 29 அன்று சனிப் பெயர்ச்சி நடப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. திருக்கணிதப் பஞ்சாங்கத்தை நம்புபவர்கள், இந்த சனிப் பெயர்ச்சிக்கான பரிகாரங்கள், பூஜைகளைச் செய்யலாம் என்ற விளம்பரங்களும் தென்படுகின்றன. ஊடகங்களில் ஜோதிடர்களும் இதற்கான பல…

  4. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஒருவர் பிரார்த்தனை செய்யும் போது அவரது மூளைக்குள் என்ன நடக்கிறது என்பது குறித்து பல ஆய்வுகள் நடத்தப்பட்டன. கட்டுரை தகவல் எழுதியவர், ரேடாக்சியான் பதவி, பிபிசி நியூஸ் முண்டோ 9 மணி நேரங்களுக்கு முன்னர் நார்னியாவின் இலக்கியப் பிரபஞ்சத்தை உருவாக்கிய, புகழ்பெற்ற பிரிட்டிஷ் எழுத்தாளர் சி.எஸ். லூயி, 'பிரார்த்தனை என்றால் என்ன’ என்பதை நன்கு விவரிக்கும் ஒரு சொற்றொடரையும் உருவாக்கியதாக சொல்லப்படுகிறது. “எனக்கு வேறு வழி இல்லாததால் நான் பிரார்த்தனை செய்கிறேன். என் இதயம் நொறுங்கியிருப்பதால், நான் பிரார்த்தனை செய்கிறேன். நான் விழித்திருந்தாலும் அல்லது தூங்கினாலும், அவ்வாறு செ…

  5. மகாசிவராத்திரி ஸ்பெஷல் 'விபூதி லிங்கேஸ்வரர்' தரிசனம்! #PhotoStory திருத்தணிக்கு 10 கி.மீ. தொலைவில், ஆந்திர மாநில எல்லையான நகரி அருகே உள்ள கீளப்பட்டு என்னும் கிராமத்தில், திரிபுரசுந்தரி சமேத சந்திரமௌளீஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரியை விசேஷமாகக் கொண்டாட இருக்கிறார்கள். நூற்றாண்டு பழமையான இந்த ஆலயத்தில், மகா சிவராத்திரி வரை பக்தர்கள் அனைவருக்கும் பஸ்ம நாதர் திவ்ய தரிசனம் அளிக்க இருக்கின்றார். மகா சிவராத்திரியை முன்னிட்டு இங்கு 10 அடி உயரம் கொண்ட பீடத்தில், 500 கிலோ விபூதியினால் (பஸ்மத்தினால்) 20 அடி உயர, ஒய்யாரமான விபூதி லிங்கம் ஏற்படுத்தி உள்ளனர். அவை லிங்கத்தைச் சுற்றி அகோரிகள் தங்களுக்கே உரித்தான கம…

  6. பகுத்தறிவுப் பகலோன் தந்தை பெரியார் ரூபன் சிவராஜா சொல்லப்படுகின்ற கருத்துக்கள் மீது கேள்விகளை எழுப்பாது அப்படியே நம்புவதும் ஏற்பதும் அறிவுடமையாகாது. கருத்துக்கள் மீது ஏன்- எதற்காக- எதனால் என்ற கேள்விகளை எழுப்புவதன் மூலமே தெளிவடைய முடியும் என்ற ஆழமான மெய்யறிவின் பாற்பட்ட சிந்தனையை வலியுறுத்தியவர் தந்தை பெரியார் (ஈ.வெ.ராமசாமி). இருபதாம் நூற்றாண்டின் ஒப்பற்ற சிந்தனையாளர் தந்தை பெரியார். 1879ம் ஆண்டு பிறந்து, 1973ம் ஆண்டு தனது 95வது அகவையில் காலமானார். 2013 டிசம்பர் 24 பெரியாரின் 40வது ஆண்டு நினைவு நாள் ஆகும். அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்படமுடியாத பிற்போக்கான கருத்துக்களை, மக்களை அச்சத்திற்கு ஆளாக்குவதனூடு புகுத்துவதற்கும் - திணிப்பதற்கும் இடமளிக்காதிருப…

  7. தமிழர்களில் பலர் தாங்கள் ஆதிகாலம் தொட்டு சைவசமயிகளாக இருந்து வருவதாக நம்புகிறார்கள். அதில் உண்மை இருக்கிறது. ஆனால் முழு உண்மை அதுவல்ல என்பது வரலாற்றைப் படித்தால் தெரியும். ஏழாம் நூற்றாண்டு தொடக்கம் தமிழகத்தில் சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் போன்ற சமயகுருவர்களின் தொண்டு காரணமாக பக்தி இயக்கம் செல்வாக்குப் பெற்றது. அதுவரை காலமும் தமிழகத்தில் வேரூன்றி இருந்த சமணம், பவுத்தம் இரண்டும் காலப்போக்கில் செல்வாக்கிழந்தன. இதனால் இந்த இரண்டு மதங்களும் தமிழ்மொழியின் வளத்துக்கும் வளர்ச்சிக்கு ஆற்றிய அரும்பெரும் பணி மறக்கப்பட்டன. அல்லது மறைக்கப்பட்டன. கிமு 3 ஆம் நூற்றாண்டிலிருந்து கிபி 9 ஆம் நூற்றாண்டுவரை தமிழ் இலக்கியம், இலக்கணம், யாப்பு வளர்ச்சி, இசை, நாட்டிய வளர்ச்…

  8. விடிமுன் எழுமின்! ஒரு நாள் மீனவன் அதிகாலையிலேயே எழுந்துவிட்டான்.. போதிய வெளிச்சம் இல்லாததால் கடலுக்கு செல்ல இயலவில்லை.. இருளில் அருகே ஒரு சிறு பொதியில் கற்களைக் கண்டான்.. அவற்றை எடுத்து ஒவ்வொன்றாக கடலில் வீசத் தொடங்கினான்.. கடைசிக் கல் அவன் கைக்கு வந்தபோது சூரிய வெளிச்சம் வந்தது.. கையில் கிட்டிய அந்தக் கடைசி கல்லை பார்த்து திடுக்கிட்டான்.. அவன் கையில் இருந்ததோ விலை பதிப்பற்ற வைரக் கல்! இதுவரை கவனிக்காமல் அனைத்தையும் கடலில் எறிந்த தன் துர்பாக்கியத்தை எண்ணி நொந்தான்..! வருந்தினான்..!! அழுதான்...!!! .... .... .... .... இக்கதை சொல்லும் சமூக நீதி என்ன....?..... …

  9. பாண்டவர்கள் வனவாசத்தின் போது, ஒரு சமயம் வேட்டையாடச் சென்றான் பீமன். அநேக மிருகங்களை வேட்டையாடினான். அந்த சந்தோஷத்தில், ஆடிப் பாடி குதித்தான். அவனுடைய சப்தத்தையும், ஆரவாரத்தையும் கேட்ட பல சர்ப்பங்கள், ஓடி ஒளிந்து கொண்டன. அவன் வந்து கொண்டிருந்த போது, ஒரு குகையில் பிரமாண்டமான சர்ப்பம் ஒன்று படுத்துக் கொண்டிருப்பதை கண்டான். உடனே அந்த பாம்பு, அவனை கெட்டியாகப் பிடித்துக் கொண்டது. மகா பலசாலியான பீமன், எவ்வளவோ முயற்சி செய்தும், அதனிடமிருந்து விடுபட முடியவில்லை. அந்தப் பாம்பின் வலிமையை கண்ட பீமன், "சிரேஷ்டரே... எதற்காக என்னை பிடித்தாய். நான் பாண்டவர்களில் ஒருவனான பீமசேனன். என்னை இப்படி கட்டக்கூடிய நீ, யார்? வர பலத்தினாலோ, தபோ பலத்தினாலோ இப்படி என்னை கட்டியிருக்கிறாயா? எதனால் என்…

  10. *அற்புத வாழ்க்கை...* அப்பன் உயிர்துளி கொடுத்து... அம்மை உயிரை சுமந்து... தொப்புள் கொடி உயிர் வளர்ந்து... பத்து மாதம் கருவறை இருட்டில் மூச்சுபயிற்சி கண்டு... பூமியின் வெளிச்சத்தில் வந்து விழும் குழந்தை... வித்தியாசமான உருவம் கொண்டு வேற்றுமையான எண்ணம் கொண்டு... மனிதாபிமான குணம் கொண்டு... ஆண்டவன் விருப்பபடி நிறம் கொண்டு... வளர்ந்து வாழ்ந்து... நல்லதும் கண்டு கெட்டதும் கண்டு... சுகமும் கண்டு அவமானமும் கண்டு... ஒவ்வொருவரும் ஒவ்வொரு வித்தியாசமான அனுபவம் கண்டு... இது தான் உலகம் இது தான் வாழ்க்கை... இது தான் பாதை இது தான் பயணம் என்று... தெளிவதற்குள்ளே விதி சதி செய்து இயற்கை மாற்றம் கொண்டு... உடலை…

    • 1 reply
    • 784 views
  11. உண்மையான பக்தன் யார்? நாராயணா.. நாராயணா.. என்று நாரயணன் நாமம் பாடும் நாரதர், வைகுண்டவாசியான விஷ்ணுவைக் காண சென்றிருந்தார். மகாவிஷ்ணு, இருக்காரே மிகவும் வில்லங்கமானவர். கர்வம் மிக்க பக்தர்களாக இருந்தாலும், பதுசாக வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் ஏற்றிவிடுவார். நாரதருக்கு நாராயணனின் சிறந்த பக்தன், தான் ஒருவர் மட்டுமே என்னும் மமதை இருந்தது. அதை அடக்குவதற்கு சரியான சமயம் எதிர்பார்த்திருந்தார் விஷ்ணு. நாரதரின் அழைப்பு கேட்டும் காது கேட்காதது போல் பூலோகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார். ”நாராயணரே நான் அழைத்தது கூட கேளாமல் என்ன வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டார். ”வேறொன்றுமில்லை நாரதரே பூலோகத் தில் எனக்கு பிடித்த பக்தன் ஒருவன் இருக்…

  12. எந்த ஒரு விரதமும் நல்லபடியாக முடிய அனைத்துத் தேவர்களின் அருளாசியும் வேண்டும். 27 நட்சத்திரங்கள், 12 ராசிகள், நவ கிரகங்களின் அருளும் வேண்டுமென்றால் (27+12+9) 48 நாட்கள், அதாவது ஒரு மண்டலம் விரதம் இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. ஆனால், சபரிமலை விரதத்தைப் பொறுத்தவரை ஒரு மண்டலம் என்பது 41 நாட்களையே குறிக்கிறது. மலைக்கு மாலை அணிந்த நாள் முதல், தினமும் இரண்டு வேளை குளிர்ந்த நீரில் குளிப்பது, நெற்றியில் சந்தனமிட்டு, சாமியின் 108 சரணங்களைச் சொல்வது, உணவிலும் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிப்பது, தலையணையின்றி உறங்குவது, ஆசாபாசங்களைக் கட்டுப்படுத்திக்கொள்வது என எல்லாமே நமது சுயகட்டுப்பாடு, ஒழுங்குமுறைக்கான விரதங்கள்தான். அதனால் 41 நாட்கள் முழுமையாக விரதம் இருந்து மலைக்குச் செல்வ…

  13. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், எடிசன் வெய்கா ரோல் பதவி, பிபிசி நியூஸ் பிரேசில் 31 மார்ச் 2024, 11:39 GMT புதுப்பிக்கப்பட்டது 51 நிமிடங்களுக்கு முன்னர் இயேசு சிலுவையில் அறையப்பட்ட சமயத்தில் யூதேயா மாகாணத்தின் ஆளுநராக இருந்த பொந்தியு பிலாத்து குறித்து, சுவிசேஷங்களில் (இயேசுவின் உபதேசங்கள்) உள்ள மத விவரிப்புகள் மற்றும் கிறிஸ்தவர் அல்லாத வரலாற்று ஆசிரியர்களின் நூல்களில் சித்தரிக்கப்பட்ட விதங்களில் வேறுபாடுகள் இருப்பதாக ஆரம்பகால கிறிஸ்தவ அறிஞர்கள் கண்டறிந்தனர். மத விவரிப்புகளின்படி பிலாத்து நியாய, தர்மங்களில் அக்கறை கொண்டுள்ள நடுநிலையான மனிதர் என தெரிகிறது. இயேசுவிடம் எந்த கு…

  14. யாழ். மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய கொடியேற்றம் வரலாற்று சிறப்பு மிக்க யாழ் மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயத்தின் மஹோற்சவ கொடியேற்றம் இன்று(22.03.2018) ஆலயத்தில் வெகுவிமர்சையாக இடம்பெற்றது. இங்கு கருவரையில் இருக்கும் ஸ்ரீ விநாயகருக்கு வசந்த மண்டத்தில் வீற்று இருக்கும் கஐமுகனுக்கும் அபிசேங்கள், ஆராதனைகள் என்பன இடம்பெற்று பின் உள் வீதியுடாக எழுந்தருளி விநாயக பெருமான் கொடி மரத்தினை வந்தடைந்தார். பின் சுப நேரம் நண்பகல் 12 மணியளவில் மேள தாள வாத்தியம் முழங்க பிரதம குரு சிவாச்சாரியார்களில் மஹோற்சவ கொடியேற்றத்தினை எற்றிவைத்தனர். இவ் மஹோற்சவ கொடியேற்றத்தினை சிவ ஸ்ரீ பரமானந்த ஐயகுமாரக்குருக்கள் தலைமையிலான சிவாச்…

  15. ஈழத்துச் சிதம்பரத்தின் தேர்த்திருவிழா ! ஈழத்துச் சிதம்பரத்தின் தேர்த்திருவிழா ! காரைநகர் ஈழத்துச் சிதம்பர ஆலயத்தின் தேர்த்திருவிழா பவனி இன்று பல்லாயிரக் கணக்காண பத்தர்களின் பங்கேற்றலுடன் சிறப்புற இடம்பெற்றது. https://newuthayan.com/story/59662.html

    • 1 reply
    • 331 views
  16. நவீன உலகிற்கு ஒரு மீட்பர் தேவை மனித உயிர் மலிவானதாகவும் கிஞ்சித்தும் யோசனையின்றிச் செலவிடத்தக்கதாகவும் மாறியிருந்த படுபயங்கரமான காலகட்டத்தில் இருந்து இலங்கை உள்நாட்டுப் போரின் முடிவையடுத்து மீண்டு வந்துவிட்டது என்பது உண்மைதான். ஆனால், மனித வாழ்வுக்கான மதிப்பும் கௌரவமும் மிகவும் தாழ்ந்த நிலைக்குத் தள்ளப்படக்கூடியதாக ஏனைய பிரச்சினைகள் இலங்கைச் சமுதாயத்தை படுமோசமாகப் பாதிக்க ஆரம்பித்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. குறிப்பாக பொருளாதார நெருக்கடி மக்களை நிலைகுலைய வைக்கிறது. வாழ்க்கைச் செலவின் தொடர்ச்சியான அதிகரிப்பின் விளைவான நெருக்கடிகளில் இருந்து மக்கள் ஓரளவுக்கேனும் விடுபடுவதற்கேதுவாக பண்டிகைக் காலத்திலேனும் அவர்களுக்கு நிவாரணத்தைத் தரக்கூடிய உருப்படியான நடவடிக்க…

  17. தாராசுரம் - கும்பகோணம் அருகில் ஒரு மிகச் சிறந்த கோவில் நகரம்! கும்பகோணம் அருகே அமைந்திருக்கும் சிறப்புமிக்க மற்றும் முக்கியமான ஆன்மீக ஸ்தலம் தாராசுரம் நகரம். தாராசுரமின் சிறப்பே அங்கே வீற்றிருக்கும் ஐராவதம் கோவில் தான். சென்னையிலிருந்து சுமார் 380 கிமீ தொலைவில் இருக்கும் தாராசுரமின், தொன்மையான பெயர் ராஜராஜபுரம். இவ்வூரில் கிட்ட தட்ட 15000 பேர் வசிக்கின்றனர். தாராசுரம் அருகே அமைந்துள்ள சுற்றுலாத் தலங்கள் தாராசுரமில் அனைவரையும் கவர்ந்து இழுக்கும் ஐராவதம் கோயிலை சுற்றுலாப் பயணிகள் கண்டிப்பாக தவறவிட்டுவிடக் கூடாது. பன்னிரெண்டாம் நூற்றாண்டில், சோழ சாம்ராஜ்ய மன்னர் இரண்டாம் ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்ட இக்கோவில், தமிழனின் கோவில் கட்டமைப்பு சிறப்பை எடுத்துரைக்கும் ஒன்ற…

  18. பன்னிரு திருமுறைகளும், அவற்றின் பொருளும் கீழேயுள்ள இணைப்பில் உள்ளன. விரும்புவோர் இணைப்பை அழுத்திப் பயன் பெறுக. இணைப்பு ;- http://www.thevaaram.org/thirumurai_1/song...1&padhi=001

  19. கதிர்காம பள்ளிவாசலில் ஓங்கி ஒலித்த முருகனுக்கு அரோகரா.... தெரியாத பல காரணங்கள்...." கதிர்காமத்தில் இருக்கும் பக்கீர் மடம் என்னும் பள்ளிவாசலில் அரபு எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பச்சை நிறம் கொண்ட கொடி ஏற்றப்படுகிறது. அது ஏற்றப்படும் போது கதிர்காம முருகனுக்கு அரோகரா என்ற கோசம் எழுப்புகிறார்கள். ஏராளமான மக்கள் கூடி நின்று பலத்த சத்தத்தோடு மீண்டும் கதிர்காம முருகனுக்கு அரோகரா. கதிர்காமத்தில் இருக்கும் பக்கீர் மடம் என்னும் பள்ளிவாசலில் அரபு எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பச்சை நிறம் கொண்ட கொடி ஏற்றப்படுகிறது. அது ஏற்றப்படும் போது கதிர்காம முருகனுக்கு அரோகரா என்ற கோசம் எழுப்புகிறார்கள். ஏராளமான மக்கள் கூடி நின்று பலத்த சத்தத்தோடு மீண்டும் கதிர்காம முருகனுக்கு அரோகரா என்கிறார்…

    • 1 reply
    • 1k views
  20. இந்த இணைப்பு சமய நம்பிக்கை உள்ளவர்களுக்கு மட்டுமானது! நன்றி பிள்ளையார் பெருங்கதை - விரதம் - தோத்திரம், விநாயகர் அகவல் இணைப்பு உ ஓம் கஜானனம் பூதகணாதி ஸேவிதம் கபித்த ஜம்பூ பலஸார பக்ஷிதம் உமா ஸுதம் சோக வினாச காரணம் நமாமி விக்னேச்வர பாத பங்கஜம் சாரம்: யானையினுடய முகம் படைத்தவரும், பூதகணங்களால் ஸேவிக்கப்படுபவரும், பழுத்த ஜம்பூ பழத்தின் ரசத்தை சாப்பிடுபவரும், உமாவின் (பார்வதீ தேவியின்) குமாரரும், நம்முடைய துக்கத்தைப் போக்குவதற்குக் காரணபூதராக விளங்குபவரும், விக்னங்களுக்கே (தடங்கல்களுக்கு) ஈஸ்வரரும் (அதிபதி) ஆகிய கணபதி பகவானின் பாதகமலங்களில் தண்டனிடுகிறேன். …

  21. தமிழில் வழிபாடு செய்ய விரும்புவர்கள் இந்த இணையத்திற்கு சென்று தமிழ் மந்திரங்களை பெற்றுக் கொள்ளலாம். http://tamilkurinji.com/Manthiram_index.php

  22. நாய்கள் தங்களது வயிற்றுக்கு ஒவ்வாத உணவை உண்டு விட்டால், அருகம்புல்லையோ அல்லது ஏதோ ஒரு புல்லையோ தின்று, செரிமானத்தைச் சரி செய்து கொள்ளும். இதற்காக நாய் எந்த நீட் தேர்வும் எழுதவும் இல்லை. மெடிக்கல் கல்லூரியிலும் படிக்கவில்லை. அதற்கு அந்த அறிவு எப்படி வந்தது? ஐந்தறிவு பிராணியான நாய்க்கு, உடல் நோய் கண்டால், நோய்க்கு உகந்த மருந்தினைக் கண்டுபிடித்து உண்ணும் அறிவு எங்கிருந்து வந்தது? என்றாவது யோசித்தீர்களா? இதற்கு விடை என்ன தெரியுமா? நாய்கள் இயற்கையுடன் இருக்கின்றன. அவை இயற்கையுடன் வாழ்கின்றன. வெள்ளிங்கிரி சுவாமி ஆஸ்ரமத்தில் பப்பி என்றொரு பெண் நாய் இருந்தது. அதற்கு ஏதாவது கொடுத்தால், அதை எடுத்துக் கொண்டு போய், பள்ளம் தோண்டி மண்ணைப் போட்டு மூடி வைத்து விட்டு வரும…

  23. இராமாயணம்: பல்கலை பாடத்திட்டத்தில் சர்ச்சை டெல்லி பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறையில் இளங்கலை பட்டம் படிப்பு பாடத்திட்டத்தின் பகுதியாக இருந்த ராமாயணம் குறித்த ஆய்வுக் கட்டுரை வலதுசாரி சார்புடையவர்களின் எதிர்ப்பு காரணமாக நீக்கப்பட்டுள்ளதை நாட்டின் முன்னணி வரலாற்று அறிஞர்கள் கண்டித்துள்ளனர். மறைந்த ஏ கே ராமானுஜன் அவர்களால் எழுதப்பட்ட "300 இராமாயணங்கள் - ஐந்து உதாரணங்கள் - மொழிபெயர்ப்பு குறித்த மூன்று சிந்தனைகள்" என்ற புத்தகத்தில் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் இருக்கும் இராமாயண கதைகளில் உள்ள மாறுபாடுகள் குறித்து ஆராயப்பட்டுள்ளது. இதில் வரும் கருத்துக்கள் இந்துக்களை புண்படுத்துவதாக இருப்பதாகக் கூறி ஒருவர் வழக்கு தொடுத்ததை அடுத்து இந்த விடயம் குறித்து ப…

  24. நீலாஞ்ஜன ஸமா பாஸம் ரவிபுத்ரம் யமாக் ரஜம் சாயா மார்த்தாண்ட ஸம்பூதம் தம் நமாமி ஸனைச்சரம் மை போன்று கருமை நிறம் கொண்டவனே! சூரியனின் மைந்தனே! எமதர்மனின் சகோதரனே! சாயாதேவியின் வயிற்றில் பிறந்தவனே! மெதுவாகச் சஞ்சாரம் செய்பவனே! சனிபகவானே! உன்னைப் போற்றுகிறேன். நவகிரங்கள் எனப்படும் ஒன்பது கிரகங்களில் மூன்று கிரகங்கள் தீய பலன்கள் அளிப்பதில் வலிமை வாய்ந்தவை. அவை ராகு, கேது, சனி என்பனவாம். இவைகளில் முதன்மையானது சனி என்ற சனீஸ்வர பகவான்தான். சனீஸ்வர பகவானின் பிடியிலிருந்து யாரும் தப்ப முடியாது என்பர். இறைவனாகிய சிவ பெருமானையே ஒரு கணம் பிடித்ததால்தான் சனி ஈஸ்வரபட்டம் கிடைத்து சனீஸ்வரன் ஆனார். பன்னிரென்டு ராசிகளில் உள்ள ராசிக்காரர்களுக்கு சுமார் ஏழு ராசிகளின் அமைப்பு உள்ளவர்க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.