சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
என் யாழ் உறவுகளே உங்கள் கருத்தையும் எனக்கு அறிய தருங்கள்... என் நண்பர் ஒருவர் எனக்கு சொன்னார்..கல்யாணம் என்பது இரு குடும்பம்கள் இணைவது என்று...இரு மனம் இணைந்து என்ன பண்ணுறது இரு குடும்பம்கள் இணைய வேணும் என்றார்.. எனக்கும் ஒன்றும் புரிய வில்லை.. இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?..
-
- 3 replies
- 2.5k views
-
-
இன்று சர்வதேச்ச முத்தமிடல் தினமாகும் ( http://en.wikipedia.org/wiki/International_Kissing_Day) இந்த முக முக்கிய தினத்தினை சிறப்பிக்க முத்தம் பற்றிய ஒரு சிறு இணைப்பு --------------- அன்பு, பாசம், நேசம், காதல் என பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்த உதவும் எளிமையான ‘மீடியம்’ முத்தம். தாய் தந்தை பிள்ளைகளுக்குத் தரும் முத்தம், காதலன் காதலிக்குத் தரும் முத்தம், கணவன் மனைவிக்குத் தரும் முத்தம் என கிடைக்கும், கொடுக்கப்படும் இடத்திற்கேற்ப முத்தத்தின் அர்த்தம் மாறும். முத்தம் தோன்றியது எப்போது என்பதில் தெளிவான வரலாறு நம்மிடம் இல்லை. ஆனாலும், கி.மு. 1500வது ஆண்டிலேயே நமது வேதங்களில் முத்தம் குறித்த குறிப்புகள் உள்ளன. இந்தியர்கள் கண்டுபிடித்த முத்தத்தின் வகை 3…
-
- 18 replies
- 2.5k views
-
-
இன்றைய நாள் எனது வாழ்நாளில் மறக்கமுடியாத நாட்களில் ஒன்றாகும் . அதை உங்களிடம் பகிரலாம் என்று நினைக்கின்றேன். நான் வேலை செய்கின்ற தங்கு விடுதியில் (Hotel Mercure ) பலதரப்பட்ட உணவு ரசனைகளையும் , குணாம்சங்களையும் , உள்ள வாடிக்கையாளர்களை சந்தித்திருக்கின்றேன் . ஒருசிலர் எனது கையாலேயே சாப்பிடவேண்டும் என்று அடம் பிடிப்பவர்களும் இருக்கின்றார்கள் . ஜோன் பிரான்சுவா (Johon François ) என்பவரும் அந்த ரகத்தைச் சேர்ந்தவரே . பிரான்ஸ்சின் வட மேற்குப்பகுதியான கப்பல் கட்டும் துறையில் பெயர்போன நகரான செயின் நாசர் (Saint nazer ) பகுதியைச் சேர்ந்தவர் சேர்ந்த ஜோன் பிரான்சுவா . பிரான்ஸ் மின்சாரசபையில் (EDF ) பாரிஸ்சின் தென்மண்டல நிறைவேற்று இயக்குனராக இருக்கின்றார் . வேலை நிமித்தம் பாரிஸ்சுக்கு …
-
- 30 replies
- 2.5k views
-
-
[size=4]மனைவியைத் தேர்ந்தெடுப்பதில் இளைஞர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நிதானத்தையும் எச்சரிக்கையையும் இந்து மதம் வலியுறுத்துகிறது. ’அவசரத்தில் கல்யாணம் பண்ணி சாவகாசத்தில் சங்கடப்படாதே’ என்பது இந்துக்களின் எச்சரிக்கைப் பழமொழி. இளம் பருவத்தின் ரத்தத்துடிப்பு வெறும் உணர்ச்சிகளையே அடித்தளமாகக் கொண்டது. அந்தப் பருவத்தில் காதலும் தோன்றும்; காமமும் தோன்றும். ஒரு பெண்ணிடம் புனிதமான காதல் தோன்றி விட்டால், உடல் இச்சை உடனடியாக எழாது. அவளைப் பார்க்க வேண்டும், பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும்; பேச வேண்டும், பேசிக் கொண்டே இருக்கவேண்டும் என்ற ஆசை வளரும். அவளைக் காணாத நேரமேல்லாம் கவலைப்படும். கனவு காணும் கற்பனை செய்யும் மிகவும் சிறு பருவத்தில் மட்டுமே அத்தகைய புனிதக் காதல்…
-
- 11 replies
- 2.5k views
-
-
கன நாளைக்கு பிறகு வந்த நான் ஏதாவது தலைப்பை போட்டுத்து போவம் என்றுதான் இந்த தலைப்பு விளம்பரம் இந்த விளம்பரங்களால் ஈர்க்கப்படாதவர்கள் யாரும் இல்லை என்றே கூறலாம் சின்ன பிள்ளைகளாகலாம்,நடுத்தர வயதினர்,வயது போனவர்கள் கூட ஆனால் இந்த விளம்பரங்களால் அதிகம் பாதிக்கப்படுவது யார்?? என்பதுதான் எனது கேள்வி நான்.......இந்த பேயரன் லவ்லியை போட்டு தேச்சி தேச்சி கன்னத்தில் கறுப்பா போனதுதான் மிச்சம் அடுத்து சோப்[சவர்க்கரம்] ஐஸ்வர்யா ராய் வந்து லக்ஸ் சோப்பு போட்டு காட்டுவா பாருங்கள் அன்றுமுதல் அந்த சோப்புக்கு காசு கொடுத்து ஏமாந்ததுதான் மிச்சம் பெண்களை எடுத்துக்கொண்டால் சொல்லவே தேவையில்லை இன்றைய விளம்பரங்களால் அதிகம் ஏமாற்றபடுவர்கள் பெண்கள்தான் இது பற்றி உங்கள் க…
-
- 24 replies
- 2.5k views
-
-
எல்லோரும் Fast Food கடைக்கு செல்வதை ஒரு பொழுது போக்காகவும் ஒரு நாகரிகமாகவும்(?), அல்லது ரசனைக்காகவும் செல்வோம். எப்போதாவது செல்வதில் தப்பில்லை. ஆனால் அடிக்கடி போனால் சொந்த செலவில் சூனியம் வைக்கும் கதையாக தான் அமையும் Fast Food பற்றியும் அதன் விளைவுகள் பற்றியும் ஒரு குறிப்பு. 1 .வரலாறு 1921 - முதலாவது Fast Food Chain நிறுவனமாக White Castle உருவானது. 1948 -McDonald 's Fast Food மார்க்கெட் இல் தன்னை இணைத்தது. 1951 - "Fast Food " என்ற பதம் Merriam Webster அகராதியில் சேர்க்கப்பட்டது. 1951 - Jack In The Box "Drive Through" ஐ அறிமுகப்படுத்தியது 2 .சந்தை நிலவரம் McDonald 's இன் வருமானம் 31 000 locations களில்இருந்து $23 Billion YUM! B…
-
- 3 replies
- 2.5k views
-
-
பெண்ணுக்கு மட்டுமே உரிய சொத்து. பெண்களால் மட்டுமே உணரக்கூடியது. இரண்டு நாளுக்கு முதல்ல ஒரு பதிவு பார்த்தேன். மாதவிடாய் காலத்தில் பெண்கள் வலி வருவது போல் நடிக்கிறார்களாம் விளம்பரங்களில் பெண்கள் pad வச்சதும் டான்ஸ் ஆடுகிறார்களாம். இது என்ன மாதிரியான முதிர்ச்சியடைந்த மனநிலை. விளம்பரங்களில் மாதவிடாய் நீல மை ஊற்றி காட்டுகிறார்கள் அதற்க்காக பெண்களின் குருதி என்ன நீல நிறமா? உண்மையில் மாதவிடாய் காலத்தில் எல்லாப் பெண்களுக்கும் வயிறு வலி வருவதில்லை ஆனால் 1/5 பெண்களுக்காவது வலி வருவதுண்டு. அந்த வலி சாதாரணமானதும் இல்லை. "கடும் வயிற்று வலியால் தூக்கிலிட்டு தற்க்கொலை செய்து கொண்டார்" இவ்வாறான செய்திகளை நாம் பார்ப்பதுண்டு அந்த மரணத்தின் பின் என்ன மர்மமும் இருக்கலாம் ஆனால் அந்த…
-
- 4 replies
- 2.5k views
-
-
அலுவலகம் முடிந்து வீடு வந்த போது, அம்மா வாசலில். பார்சல் ஒன்று வந்திருக்கு என்று சிரித்தார்! புத்தகங்கள் தான். அதனால் தான் அந்த நமுட்டுச்சிரிப்பு. உடைத்தோம்! டிஸ்கவரி புக் ஷாப்பில் இருந்து, நம்ம சவால் சிறுகதை போட்டி பரிசு. என்னடா ஒரு மாசம் ஆயிட்டுதே, வந்து சேரலையே என்று கவலை. ஆதி, பரிசிலிடம் tracking number கேட்டு தொல்லைப்படுத்தவும் இஷடமில்லை. பார்த்து, ஏமாந்து, ஏதலித்து இறுதியில் here you go... ஆவலுடன் ஒவ்வொரு புத்தகமாய் வாசம் பார்த்தேன். கி.ராஜநாராயணனின் “கரிசல் காட்டு கடுதாசி” நிலாரசிகனின் “வெயில் தின்ற மழை” பாஸ்கர் சக்தியின் “கனக துர்கா” கலாப்ரியாவின் உருள் பெருந்தேர் பிரபஞ்சனின் “தாழப் பறக்காத பரத்தையர் கொடி” இவற்றோடு வாழ்த்துச்ச…
-
- 0 replies
- 2.5k views
-
-
தமிழர்களது வாழ்க்கையானது உறவு முறைகளால் பின்னி பினைந்தது.அவர்கள் எப்போதுமே உறவுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்...என்ன நல்லது, கெட்டது என்டாலும் உறவுகளோடு கலந்தாலோசித்து தான் செய்வார்கள்...இனி விசயத்திற்கு வருகிறேன்...உங்கள் உறவுகளிலே உங்களுக்கு மிகவும் பிடித்த உறவு யார்..அது அம்மாவா,அப்பாவா,தாத்தாவா,பாட்டியா உங்கள் சகோதர சகோதரியா,மாமா மாமியா, மிக முக்கியமாக கணவன் மனைவியா,காதலன் காதலியா? அல்லது நண்பர்களா இல்லாவிடின் ஒருத்தரையும் பிடிக்காதா... ஏன் எதற்காக அவர்களை உங்களுக்கு மிகவும் பிடிக்கும்? அவர்களில் யார் உங்கள் மீது அதிக பாசம் வைத்திருக்கிறார்கள் என நினைக்கிறீர்கள்...அந்தப் பாசம் உண்மையானதா...இதில் நான் காதலன்,காதலியையும் நண்பர்களையும் சேர்த்து உள்ளேன் அவர்களை இந…
-
- 20 replies
- 2.5k views
-
-
தம்பதியரின் செல்லச் சண்டைகளை சமாதானமாக்கும் முத்தம் அன்பையும், காதலையும் உணர்த்தும் ஒரே மொழி முத்தம்தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது. அந்த முத்தம் பல நல்ல விஷயங்களை செய்கிறது. முத்தம் கொடுப்பதும், பெறுவதும் சந்தோஷமான விசயம். முதல் காதலை எப்படி மறக்க முடியாதோ அதே போல முதன் முதலாக கொடுக்கப்பட்ட முத்தத்தினையும் மறக்க முடியாது என்பார்கள். அன்பையும், காதலையும் உணர்த்தும் ஒரே மொழி முத்தம்தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது. அந்த முத்தம் பல நல்ல விசயங்களை செய்கிறது. உறவின் திறவுகோல் முத்தம் என்பது ஒருபுறம் இருந்தாலும் தம்பதியரிடையேயான செல்லச் சண்டைகளுக்கு சமாதானாத்தூ…
-
- 26 replies
- 2.4k views
- 1 follower
-
-
சிந்திக்கும் ஆற்றல் கொண்டவர்கள் என்னோடு சேர்ந்து சிந்திப்பீர்களா? வாழ்க்கையின் அர்த்தம் புரிந்து தான் வாழ்கிறீர்களா? அங்கே ஒருபகுதியில் கவிதை வடிவில் வடித்து விட்டிருக்கிறேன், ஆனால் உங்கள் சிந்தனை எப்படி இருக்கிறது என்று அறிய விரும்புகிறேன். http://www.yarl.com/forum3/index.php?showtopic=17613 கடினமாக உழைத்தால் வாழ்வில் வெற்றிகண்டு விட முடியுமா? அறிவியலை அதீதமாக வளர்ப்பது தான் வாழ்வின் நோக்கமா? எந்த சமயத்தில் பிறக்கிறேனோ அது தான் என் சமயமா? சதாம் தூக்கிலிருந்து எல்லாப்பக்கமும் வன்முறை வெடித்து மனிதமே அழியபோகிறாதா... மனிதனின் சிந்தனையில் மாற்றம் தேவையா? அந்த மாற்றம் "வன்முறை" அற்றதாக வெறும் வார்த்தையளவில் இருந்தால் நிரந்தர சமாதனத்தை எட்ட முடியு…
-
- 16 replies
- 2.4k views
-
-
`காதலர் நாள்` கொண்டாட்டம் தமிழர் மரபா? ::வி.இ.குகநாதன் 02/14/2021 இனியொரு... பெப்ரவரி 14 இல் உலகெங்கும் காதலர் நாள் கொண்டாடப்படுகின்றது. இந்த நாள் வந்தால் போதும், சிலர் தம்மைக் கலாச்சாரக் காவலர்கள் எனக் கூறிக் கொண்டு, அடாவடிகளில் இறங்கி விடுவார்கள். கேட்டால்: “காதலர் நாள் தமிழ்க் கலாச்சாரமன்று, ஆங்கிலேயக் கலாச்சாரம்” எனப் பொங்குவார்கள்; உண்மையில் அவர்களுக்குக் `கலாச்சாரம்` என்ற சொல்லே தமிழல்ல எனத் தெரியாத போது, தமிழ்ப் பண்பாடு எப்படித் தெரியப் போகுகின்றது. அவர்களை அணுகிப் பார்த்தால், அவர்களில் மிகப் பெருமளவானோர் சாதி வெறியர்களாக /மத வெறியார்களாக இருப்பதனைக் காணலாம். ஆண்டு முழுவதும் தமக்கிடையே சண்டை இட்டுக் கொள்ளும் இந்து-இசுலாமிய அடிப்படைவாதிகள் ஒ…
-
- 16 replies
- 2.4k views
-
-
லண்டனில் எம்.எஸ் படித்துவிட்டு அங்கேயே கணினிப் பொறியாளராக வேலை பார்த்துவந்த விவசாயியின் மகன், சொந்தக் கிராமத்துக்குத் திரும்பி வெள்ளரி சாகுபடியில் சாதித்து வருகிறார். திருப்பூர் மாவட்டம், உடுமலைப் பேட்டையில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது உடுக்கம்பாளையம் கிராமம். நகரத்து வாகனங்களின் இரைச்சல் இல்லாத இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சண்முகவேல். இவருடைய மூத்த மகன் எஸ். செல்வா பழனியில் பொறியியல் படித்துவிட்டு, லண்டனில் எம்.எஸ். படிப்பில் சேர்ந்தார். பிறகு அங்கேயே கணினிப் பொறியாளர் ஆனார். சில ஆண்டுகளுக்குப் பிறகு, சிறு வயது முதல் பார்த்துப் பார்த்து வளர்ந்த மண்ணின் மீது கொண்ட நேசம் காரணமாக வேலையை உதறிவிட்டுத் தாய்நாடு திரும்பினார். தற்போது உடுக்கம்பாளையத்தல் வெள்ளர…
-
- 0 replies
- 2.4k views
-
-
வெற்றியின் சிறப்பு - மனமிருந்தால் இடமுண்டு. இலங்கை போலவே பிரேசில் நாட்டில், பல்கலைக்கழக நுழைவு மிகவும் கடுமையானது. போட்டி கடுமையானது. தந்தை இல்லாத இந்த 19 வயது சிறுவனுக்கு, பல்கலைக்கழக நுழைவு தேர்வுக்கு தயாராக ஒரு தயார் செய்யும் நிறுவனத்தில் சேர பணம் இல்லை. நிர்வாகத்தினை சந்தித்தார். உங்கள் நிறுவனத்துக்கு, டாய்லெட் சுத்தம் செய்ய ஒருவரை தேடுகிறீர்கள் அல்லவா. நான் சேர்ந்து கொள்ளலாமா. மேலும் கீழும் பார்த்தார், நிர்வாகி. செய்வானா வேலைகளை. ஆர்வமில்லாமல், கேட்டார், என்ன சம்பளம் எதிர்பார்கிறாய் தம்பி. எனக்கு, எதுவுமே வேண்டாம் அய்யா... அதுக்கு பதிலாக, படிக்க அனுமதி தாருங்கள். பணம் இல்லை. அப்பாவும் இல்லை, சொன்னான் சிறுவன். அசந்து போனார், நிர்வாகி…
-
- 41 replies
- 2.4k views
-
-
கருத்துக்கள உறவுகளே நீங்கள் தாய்மொழியிலா அல்லது வேற்று மொழியிலா உங்கள் கையெழுத்தை போடுவீர்கள். நான் சிறுவயதில் ஆங்கிலத்தில் போடுவேன். இப்போது தாய்மொழியில் போடுகின்றேன். அதற்கு காரணம் எனது நண்பன். அவன் வவுனியா கல்வியியல் கல்லூரியில் கற்கும்போது சிங்கள மாணவர்கள் சிங்களத்தில் கையெழுத்து போடுவதாக சொன்னான். அவர்கள் ஆங்கிலத்தில் கையெழுத்து போடமாட்டார்களாம். அதன் பின்புதான் நான் தாய்மொழியில் கையெழுத்து போடுவேன்.
-
- 16 replies
- 2.4k views
-
-
பொண்ணு,, போட்டோவுல பாக்குறது ஓரளவுக்கு இருந்தாலும் பையனோட எதிர்பார்ப்புகள்,, ஏதோ 'திரிஷா மாதிரி இல்லன்னாலும் அட்லீஸ்ட் நமீதா மாதிரி' என்ற வகையில் இருப்பதால் அவனுக்கு இதில் அவ்வளவாக நாட்டமில்லை, போய் பார்த்து விட்டு வந்து விடலாம் என்ற சொந்தகாரர்களின் குடைச்சல் தாங்க முடியாததால் அவர்களுடனே பெண் பார்க்க கிளம்பி போனவன் அவன்'. மாப்பிள்ளைக்கு இருக்கும் ஒரே கெட்டப்பழக்கம் அவன் ஒரு 'காபி பிரியன்'. இதை ஏற்கனவே சொந்தகாரர்கள் மூலம் அறிந்து கொண்ட பெண் வீட்டார், என் பொண்ணு அவள் கையால் போட்ட காபி என்று சொல்லி அவள் கையாலே காபியை பறிமாற வைத்து விட்டார்கள், சிறிது பதட்டத்தில் இருந்த நம்ம மாப்ள பொண்ண சரியா கூட பார்க்காம காப்பிய எடுத்து குடிக்க ஆரம்பித்து விட்டான், அப்படி ஒரு காபியை அவன…
-
- 20 replies
- 2.4k views
-
-
எனது முதல் பதிவாக என்ன போடலாம் என்று தலையைச் பிச்சுக்கொண்டிருந்த வேளை நான் ஏன் காதல் பற்றி எனது முதல் பதிவு இருக்ககூடாது என யோசித்து அதையே கொஞ்சம் ஆராய்ச்சி பண்ணி எழுதுவம் என எண்ணி என் முதல் உளறலாக காதலை உளறுகிறேன் பார்த்தியலா காதல் என்றாலே உளறல்தான். ஆதாம் ஏவாள் காலத்திலிருந்து இந்த காதல் என்ற மூன்று எழுத்து சமாச்சாரம் மனித சமூகத்தை ஆக்கிரமிக்க தொடங்கிவிட்டது. அதிலும் இந்த ஹைடெக் காலத்தில் அது ஒரு பொழுது போக்கு அம்சமாகி மாறியதுதான் ரொம்பக் கொடுமை. கண்டதும் காதல் இன்று நேற்று அல்ல இராமாயண காலத்திலேயே தொடங்கிவிட்டது. அதுதான் அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினான். தற்போது அண்ணனும் நோக்கியா அவளும் நோக்கியா என மாறிவிட்டது. 2000 வருடத்தில் நோக்கியா என்ற ஒரு மொபைல் போ…
-
- 10 replies
- 2.4k views
-
-
பிரகாசமான வாழ்வுக்கு திட்டமிடுவது எப்படி? பிரகாசமான வாழ்வுக்கு திட்டமிடுவது எப்படி? எதிர்காலத்தை பற்றிய கனவு எல்லோருக்குமே இருக்கிறது. அத்தனை கனவுகளையும் நனவாக்கிட அடிப்படையாக ஸ்திரமான வேலை தேவை. இன்றைய நிலையில் வேலைச்சூழல் வேகமாக மாறி வருகிறது. அதற்கேற்ப நாம் திட்டமிட்டால்தான் நிரந்தர வேலையைப் பெற்று நிம்மதியாக வாழ முடியும். வேலை சார்ந்த திட்டமிடுதல் பற்றி இந்த கட்டுரையில் விளக்குகிறார் திருச்சி மண்டல வேலைவாய்ப்புத் துறை துணை இயக்குனர் ப.சுரேஷ்குமார். எப்படியும் நல்ல பணிவாய்ப்பை பெற வேண்டும் என்றே பலரும் எண்ணுகின்றனர். தொடர்ந்து அனுபவத்தையும், கல்வித் தகுதியையும் பெருக்கிக் கொண்டு பணியையும், சமூக அந்தஸ்தையும் உயர்த்திக் கொள்ள வேண்டும் என்று எண்ணி செயல்படுவது…
-
- 0 replies
- 2.4k views
-
-
நவராத்திரி புராணத் தகவல்கள்! நவராத்திரியின் முதல் நாளில் பாவை, இரண்டாம் நாள் குமாரி, மூன்றாம் நாள் தாருணி, நாலாம் நாள் சுமங்கலி, ஐந்தாம் நாள் சதகாடி, ஆறாம் நாள் ஸ்ரீவித்யா, ஏழாம் நாள் மகா துர்கை, எட்டாம் நாள் மகா லட்சுமி, ஒன்பதாம் நாள் சரஸ்வதி என ஒன்பது வடிவில் காட்சியளிக்கும் அம்பிகை, விஜய தசமியன்று சர்வ சக்தி ஐக்கிய ரூபிணியாக தரிசனமளிக்கிறாள் என்கின்றன புராணங்கள். சித்திரையில் 9 நாட்கள், புரட்டாசியில் (சில சமயம் ஐப்பசியில்) 9 நாட்கள், ஆடி மாதத்தில் 9 நாட்கள், மாசியில் 9 நாட்கள் என வருடத்திற்கு நான்கு முறை நவராத்திரியைக் கொண்டாட வேண்டும் என புராணங்கள் கூறுகின்றன. என்றாலும், சரத்ருது (குளிர்காலம்) எனும் புரட்டாசி (ஐப்பசி)யில் வரும் நவராத்திரியே மிக, மிக…
-
- 5 replies
- 2.4k views
-
-
தங்களது தந்தையர்கள் தோற்றத்தில் உள்ள வயதான ஆண்களிடம் பெண்கள் எளிதில் வீழ்ந்துவிடுகின்றனர் அல்லது விரும்பி நட்பு வைத்திருப்பதை பலரும் கூறுவதை கேட்டிருக்கலாம். அவ்வளவு ஏன் நமது நடிகைகள் உள்ளிட்ட பல பெண் பிரபலங்கள் தங்களைவிட மிக அதிக வயதான - அதாவது ஏறக்குறைய தங்களது தந்தை வயதையொத்த - ஆண்களை திருமணம் செய்துகொண்டுள்ளதையே இதற்கு நல்ல உதாரணமாக கூறலாம். நம்ம கோலிவுட்டில் கலக்கி, பின்னர் பாலிவுட் ரசிகர்களின்கனவு கன்னியாக திகழ்ந்த ஸ்ரீதேவி, தன்னைவிட மிக அதிக வயதுடைய போனி கபூரை திருமணம் செய்தது, பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை திருமணம் செய்த பத்மா லட்சுமி என பல உதாரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். மேலும் இந்தியாவில் மட்டுமல்லாது பல வெளிநாட்டு தலைவர்களின் வாழ்க்கையை ப…
-
- 9 replies
- 2.4k views
-
-
சைவத் திருமணச் சடங்கு 'திரு' என்பது தெய்வத்தன்மை எனவும், 'மணம்' என்பது இணைதல் எனவும் பொருள்பட்டு, 'திருமணம்' என்பது மேம்மையான தெய்வீகம் வாய்ந்த இணைதல் எனப்படுகின்றது. அதாவது இரு இதயங்கள் இணைவது எனவும் கூறலாம். தமிழர்களின் இந்துத் திருமணம் ஆகம் மரபுச் சடங்குகளுடன் சில சிறப்பு அம்சங்களையும் தழுவி நடைபெறுகின்றன. இச்சடங்குகளை சமய குருக்கள் சமய முறைப்படி நெருப்பு முன்னினையில் இறைவன் ஆசியுடன் நடத்தி வைக்கிறார். திருமண நிகழ்வில் முக்கியமான நிகழ்ச்சி நல்வேளையில் தாலி கட்டுதலாகும். இதனை “மாங்கல்யதாரணம்” எனக் கூறுவர். தாலி கட்டியதும் அப்பெண் “சுமங்கலி” அதாவது திருமணமானவள் என்ற தகுதி பெறுகின்றாள். இரு வீட்டாரும் முதலில் சாதகப் பொருத்தத்தை ஆராய்வார்கள். தமிழ்நாட்டி…
-
- 4 replies
- 2.4k views
-
-
சமதர்மமும் வகுப்புரிமையும் - வ.கீதா 1940களில் கம்யூனிசத் தோழர்களுடன் பொதுவுடமை குறித்து விவாதிக்கையில் பொதுவுடமை என்பது வேறு, சமதர்மம் என்பது வேறு என்றும், பொதுவுடமை என்பது கணக்கு சம்பந்தமுடையது- எல்லோருக்கும் எல்லாமும் சம அளவில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்ற பொருளில் - ஆனால் சமதர்மம் என்பதோ உரிமை தொடர்பானது என்றும் பெரியார் வாதிட்டார். பிறப்பின் அடிப்படையில் ஒருவரது நடத்தையும், மதிப்பும், உரிமையும் தீர்மானிக்கப்படும் மனுதர்ம சமுதாயத்தை சீர்திருத்த, மாற்றியமைக்க பொது அறமும் பொது உரிமையும் பேசும் சமதர்மம் தேவை என்றும் அவர் விளக்கினார். கடந்த சில வாரங்களாக வட மாநிலங்களில் நடைபெற்று வந்த வகுப்புரிமை வழங்கப்படலுக்கு எதிரான, இடஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டமான…
-
- 3 replies
- 2.4k views
-
-
மேற்கு நாடுகளில் நேர முகாமைத்துவம் (Time Manage Ment) வாழ்வாதாரமாகக் கருதப்படுகிறது. நேரத்தை முறையாகக் கையாளும் போது சோர்வுக்கும் பதற்றத்திற்கும் இடம் இல்லாமல் போய் விடுகிறது. உரிய நேரத்தில் பணிகளை வேகமாகச் செய்து முடிக்கும் போது ஓய்வும் நிம்மதியும் கிடைக்கின்றன. வீட்டுப் பெண்ணாக இருந்தாலென்ன, வேலைக்குப் போகும் பெண்ணாக இருந்தாலென்ன இருவருக்கும் நேர முகாமைத்;துவம் அவசியம் தேவைப்படுகிறது. ஆரம்பிக்கும் போது கடினமாக இருக்கலாம் சிறிது நாட்களில் அதன் அனுகூலங்களை அனுபவிக்க முடியும். குடும்பத்தினரைக் குறிப்பாக இளையோர்களை நேர முகாமைத்;துவக் கட்டுப்பாட்டில் பழக்கி விட்டால் அவர்கள் வாழ்வு சிறப்பாக அமையும். எமது தாயக வாழ்வைத் துறந்து புலம் பெயர்ந்த வாழ்வை மேற்கொள்ளும் எமக்கு மேற்…
-
- 2 replies
- 2.4k views
-
-
எப்பையோ இதைப் பற்றி கதைக்க வேண்டும் என்று நினைத்து இருந்தன். இப்பவாவது கதைப்பம் என்று நினைக்கின்றன். இது ஒரு மிக மிக சாதாரண விடயம். ஆனால் இந்த விடயம் கூட விவாதிக்க வேண்டி இருக்கும் ஒரு சமூகத்தில் தான் நாம் இருக்கின்றோம். என் அப்பா எனக்கு சொல்லித் தந்த முக்கியமான சில பழக்கவழக்கங்களில் ஒன்று 'நீ சாப்பிட்ட கோப்பையை நீயே கழுவு" என்பதும் ஒன்று. என் அப்பா ஒருக்காலும் தான் சாப்பிட்ட கோப்பையை அம்மாவை கழுவ விடமாட்டார். "ஏன் நான் இவ்வளவு நேரமும் சாப்பிட்ட கோப்பையை என்னால் கழுவ ஏலாதா" என்று கேட்டு கழுவுவார். "ஒருவரின் எச்சிலை இன்னொருவர் கழுவுவது பாவம்" என்பார். ஒரு நாள் நான் சின்ன வயதில் என் கோப்பையை கழுவாமல் அம்மாவிடம் கொடுத்த போது அப்பா விட்ட பொய்ட்டார் (அடி என்பதை இப்படியும் …
-
- 36 replies
- 2.4k views
-
-
'என்னை திட்டுன நல்ல உள்ளங்களுக்கு நன்றி!' - 'நீயா நானா' நமீதா! ''சொல்லுங்க நீங்க யாரு... இதுக்கு முன்னாடி பாம்பேல என்ன பண்ணிட்டு இருந்தீங்க?’’ என்று ’பாட்ஷா’ ரஜினியிடம் கேட்பது போல கேட்டதும்.... கலகலவென சிரிக்கிறார் நமீதா. சமீபத்தில் ‘இந்த பொண்ணுங்களே இப்படித்தான்...’ என பாய்ஸ் கேர்ள்ஸுக்கு இடையே நடந்த காரசார ’நீயா நானா’ விவாதத்தில் உருவான ஸ்டார்..! ’’பில்ட்-அப்லாம் வேண்டாம். நான் எப்பவும் சாதாரண பொண்ணுதான். மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் சோஷியல் வொர்க்கில், சமூக மேம்பாடு படிச்சுட்டு இருக்கேன். ஒரு பொண்ணா எப்பவும் என் பார்வையை, உரிமையை விட்டுக் கொடுக்கக் கூடாதுனு இயங்குவேன். அப்படித்தான் அந்த ஷோவிலும் நடந்துக்கிட்டேன். அது பலருக்கு அதிர…
-
- 1 reply
- 2.4k views
-