சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
என் நண்பன் ஒருவன் ஒரு பெண்ணை காதலித்துக் கொண்டிருக்கிறான். அவனிடம் பெரியார் காதலை பற்றி சொன்னதை மின்னஞ்சலில் அனுப்பினேன். யாரோ சொன்ன "human is a political animal" என்ற இந்த வார்த்தை தான் ஞாபகத்திற்கு வந்தது. பையன் ஏகத்துக்கு கோபப்பட்டு எனக்கு அனுப்பிய பதில் என்னால் இதை சரியான மாற்றுக் கருத்தாக கொள்ள இயலவில்லை. பெரியார் சொன்ன கருத்துக்கு சரியான மாற்று கருத்து சொல்பவர்களுக்கு ஒரு பச்சை புள்ளி வழங்கப்படும். Expecting provoking thought..
-
- 10 replies
- 1.7k views
-
-
காதலுக்கு கொடி பிடிக்கும் விஷயத்தில் இந்திய சினிமாவை வெல்ல வேறு எதுவுமே கிடையாது. ஏன், காதல் இல்லாத இந்திய சினிமாவே இல்லை என்று கூறும் அளவிற்கு காதலுக்கு அப்படியொரு முக்கியமான இடம். இதன் விளைவாக, கண்ட உடன் காதல், காணாமலே காதல், தொலைப்பேசியில் காதல், இன்டர்நெட்டில் காதல், பள்ளிக் காதல், கல்லூரிக் காதல் என எங்கு பார்த்தாலும் காதல் மயம். இப்போது தான் பிடித்த ஒருவரை பார்த்திருக்கிறேன்!!. இது காதலா என்பது தெரியவில்லை. காதலிக்கலாமா, வேண்டாமா ? என்ன செய்வது ? என்று குழம்பிக் கொண்டிருக்கிறீர்களா? உங்களுக்காகத் தான் இந்த கட்டுரை. கொஞ்சம் பொறுமையாக, திறந்த மனதோடு வாசித்துப் பார்த்து பிறகு முடிவெடுங்கள். காதல் ஒரு உன்னதமான உணர்வு. காதலுக்கு விளக்கம் கூற முடியாது, அதை உணர்வுப் பூர்வம…
-
- 15 replies
- 2.2k views
-
-
சமுதாய திட்டங்கள் மாற்றத்திற்கு உட்பட்டது. பல வருடங்களுக்கு முன் ஒரு பெண் காதல் திருமணம் செய்வது என்பது கனவிலும் நடக்காத ஓர் விஷயம். காதல் திருமணம் செய்தவர்களை மட்டுமல்ல அவர்களின் இரு குடும்பத்தையும் சமுதாயத்திலிருந்து ஒதுக்கி வைத்த காலங்கள் உண்டு. ஆனால் தற்சமயம் காதல் திருமணங்கள் என்பது சர்வசாதாரணமாகி விட்டது. அன்று மறைவான இடங்களில் சென்று காதலை வளர்த்தவர்கள் இன்று தனது காதலர்களை பெற்றோருகு அறிமுகப்படுத்திய பின்பு வளர்க்கிறார்கள். தற்கால சமுதாய நிலையில் காதல் திருமணங்கள் பற்றி முதிர்ந்த வயதுள்ளவர்களை கேட்டால் “எல்லாம் கலிகாலம்” என நொந்து கொள்வார்கள். உண்மையில் அனைத்து யுகத்திலும் காதல் திருமணம் இருந்தது என்பதற்கான ஆதாரம் உள்ளது. நவீன நாகரீகம் படைத்தவர்கள் எனும் பெயரில்…
-
- 3 replies
- 2.1k views
-
-
காதலைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?...காதல் என்பது ஓர் உணர்வாகும் அந்த உணர்வு நேரத்திற்கு நேரம் மாறும்...காதல் நிறைவேறாமல் காதலுக்காய் இறந்தவர்கள் இருந்தது அந்தக் காலம்... நீ இல்லா விட்டால் வேறொருவனுடன்/வேறொருத்தியுடன் வாழ்ந்து காட்டுவேன் என்பது இந்தக் காலம். ஒருவனை/ஒருத்தியைப் பார்த்தவுடன் வரும் காதல் நல்லதா அல்லதா அவர்களுடன் நன்றாகப் பழகிய பின் வரும் காதல் நல்லதா?...நன்றாகப் பழகிய பின் காதலித்தால் அவர்களுக்குள் புரிந்துணர்வு ஏற்படும்.அவனது பலம்,பலவீனம் அவளுக்கும்,அவளது பலம்,பலவீனம் அவனுக்கும் தெரிய வரும் போது இருவரும் இல் வாழ்க்கையில் இணையும் போது பிரச்சனைகள் ஏற்படாது என நினைக்கிறேன்...பொதுவாக பெற்றோர்கள் ஒரு பெண்ணை முகம் தெரியாத ஆணுக்கு கட்டிக் கொடுப்பதை விட பெண…
-
- 21 replies
- 3.4k views
-
-
காதல் தோல்வியின் காயங்கள்: மீண்டெழுவது எப்படி? Spencer Platt உலகம் முழுவதும் கொண்டாடப்படும் ஒரே மதம் 'காதல்'. காதல் பல போர்களை தோற்றுவித்துள்ளது. பல போர்களை முடித்தும் வைத்துள்ளது. வரலாறும், புராணங்களும், நம் சினிமாக்களும் காதலை கொண்டாடாத விதமில்லை. சொல்லப்போனால் திகட்ட திகட்ட இந்த உலகம் காதலை கொண்டாடியிருக்கிறது. இன்னும் கொண்டாடிக் கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் காதலை புனிதப்படுத்தி, மிகைப்படுத்திவிடவும் நாம் தவறவில்லை. யார் பிறந்த தினமும், இறந்த தினமும் மறந்தாலும், உலகில் யாருக்கும் காதலர் தினம் மறந்து போவதில்லை. அப்படி கொண்டாடப்படும் காதல், தோல்வி அடைந்தால், அந்த நபரின் நிலை என்னவாகும். நிச்சயம் உங்கள் நண்பரோ, தோழியோ காதல் தோல்வியால் புலம்பி அழு…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஆசையாக காதலித்தவர்களுக்கு அவர்களது காதல் முறிந்துவிட்டால் வாழ்க்கையே இழந்துவிட்டது போல் தோன்றும். காதல் தோல்வியில் இருக்கும் போது வேறு காதல் ஜோடிகளை பார்த்தாலே பழைய நினைவுகள் வந்து தொற்றிக் கொள்ளும். ஆனால் அவ்வாறு இல்லாமல், காதல் தோல்வியிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். சரியானதை சிந்தியுங்கள் ஆசையாக காதலித்த நபர் நம்மை விட்டு சென்றுவிட்டாரே என்று கவலைகொள்ளாமல், அவர் நம்மை விட்டு எதற்காக சென்றார் என்று சிந்தியுங்கள். தேவையில்லாத பிரச்சனைகள் என்றால், ஈகோ பார்க்காமல் சமாதானம் செய்யவேண்டும் அல்லது மீண்டும் இணைவது என்பது நடக்காத காரியம் என்றால் மறந்துவிட்டு அமைதியாக இருப்பது நல்லது. அதோடு இல்லாமல் உங்களது பழக்கவழக்கத்தால் காதல் பிரி…
-
- 5 replies
- 1.3k views
-
-
காதலில் வீழ்வது என்பது ஒருவித ரசாயன விவகாரம். அது நம் மனித ஜீவராசியின் இனவிருத்தியை உத்தரவாதப்படுத்தும் வகையில் உடலில் தொடர்ச்சியான பலவித ரசாயன மாற்றங்களை உண்டுபண்ணுகிறது என்கின்றனர் அறிவியலாளர்கள். வியாதியை ஒத்ததுதான் காதல் ( காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலை மலரும் இந்நோய் , ஞாபகம் வருகிறதா? ) . எனவே, ஒரு நோய் ஏற்பட்டால் என்ன விதமான அறிகுறிகள் உடலில் தோன்றுமோ அதே போல, தெளிவாகத் தெரியும் உடல் ரீதியான அறிகுறிகள் காதல் நோயாலும் ஏற்படும் என்கின்றனர் விஞ்ஞானிகள். இந்த அறிகுறிகள் என்ன ? -- வியர்க்கும் கைகள், பசியின்மை ( " பாலுங்கசந்ததடி சகியோ படுக்கை நொந்ததடி" ) , முகம் உணர்ச்சிப்பெருக்கில் உப்புவது , இதயத்துடிப்பு அதிகமாதல் போன்றவை இவை . காதலுக்கு பல கட்டங்கள் உ…
-
- 1 reply
- 606 views
-
-
காதல் வந்தால் உடலில் நடக்கும் மாற்றங்கள் என்ன? இச்சை வந்தால் நடப்பவை என்ன? 10 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES லவ் ஃபீவர், காதல் பித்து, வயிற்றில் பட்டாம்பூச்சி பறப்பது போன்ற உணர்வு - இப்படி காதல் உணர்வு எப்படி இருக்கும் என்பதை விவரிக்க நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வழி இருக்கும். ஆனால், நாம் காதலில் விழும்போது உண்மையில் நம் மூளையில் என்ன மாதிரியான மாற்றங்கள் நிகழும்? காதல் மற்றும் இச்சை இரண்டையும் எப்படி வித்தியாசப்படுத்துவது? நரம்பியல் அறிவியல் பார்வையில் காதல் என்பது என்ன? ரட்கெர்ஸ் பல்கலைக்கழகத்தின் ஹெலென் இ ஃபிஷர் கூற்றுப்படி, காதல் உணர்வில் மூன்று அம்சங்கள் உள்ளன. அந்த ம…
-
- 0 replies
- 307 views
- 1 follower
-
-
காதல் வழிச் சாலை 01: இருக்கு... ஆனா இல்ல! இந்த உலகமே உறவுகளால் பின்னப்பட்டிருக்கிறது. அறிவியலும் விஞ்ஞானமும் ஆயிரம் புரட்சிகளையும் மாற்றங்களையும் சாதித்துக் காட்டினாலும், உயிர்ச் சங்கிலியின் ஆதாரம் ஆண்-பெண் உறவுதான். ஆணைத் தவிர்த்துவிட்டுப் பெண்ணும் பெண்ணைத் தவிர்த்துவிட்டு ஆணும் வாழ முடியாது. ஆண், பெண்ணுக்கிடையே மலரும் காதல் என்னும் உணர்வு அதிஅற்புதமானது, தவிர்க்க முடியாதது. ஆனால் காதலைவிட காதல் சார்ந்து எழும் குழப்பங்களும் பிரச்சினைகளும் நாளுக்கு நாள் அதிகரித்தபடி இருக்கின்றன. எது காதல், எதுவரை காதல் என்பது இன்றைய இளைஞர்கள் எதிர்கொள்ளும் மிகப் பெரிய கேள்வி. அந்தக் கேள்விகளின் வழியே பயணப்பட்டு விடைகளைத் தேடுவதுதான் இந்தத் தொடரி…
-
- 30 replies
- 14.6k views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 28 ஏப்ரல் 2023 காதல் உறவுகள் எப்போதும் ஒருவருடைய உடல் நலத்தை பேணிக் காப்பதோடு, நீண்ட காலம் வாழவும் உதவுகிறது என்பது எல்லோரும் அறிந்தது. ஆனால் நண்பர்களுடன் பழகுவதிலும் இதே போன்ற நன்மைகள் ஏற்படுகிறதா? பென்னி ஷேக்ஸ் என்பவர் நாட்டிங்காமில் மேடை நகைச்சுவை கலைஞராக பணியாற்றி வருகிறார். அவருக்கு மனநல பிரச்னைகளும், பெருமூளை வாதமும் இருப்பதால் எல்லோரையும் போல் அவரால் செயல்பட முடியாது. இதனால் நண்பர்களுடன் பழகுவதற்கு அவர் குறைந்த நேரத்தையே செலவிடுகிறார். இதன் காரணமாகவே பெரும்பாலும் அவர் தனிமையில் இருப்பதை அவருடைய நண்பர்கள் புரிந்துகொள்கின்றனர். இருப்பினும் சரியான நேரத்துக்கு மருந்துகளை எடுத்துக் கொள்ளவும், …
-
- 2 replies
- 877 views
- 1 follower
-
-
காதல்: பிரிந்து பிரிந்து சேரும் காதலர்களுக்கு பின்னிருக்கும் உளவியல் என்ன? 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES "நம் இருவருக்கும் இனிமேல் ஒத்துவராது" என்று முகத்தில் கண்ணீர் வழிந்தோடியபடி, ஜார்ஜிடம் சொன்னார் யேன்ஸ். இதைச் சொல்லிவிட்டு இதயம் நொறுங்க, விசும்பலுடன் வீடு திரும்பினார் அவர். ஆனால், இது முதன்முறையல்ல. கடந்த இரண்டு மாத காலத்தில் இது மூன்றாவது முறை. இந்த முறை யேன்ஸ் திரும்பி வரப்போவதில்லை என்றும் சொல்லியிருந்தார். "பழைய நினைவுகளைக் கிண்டிவிட்டு அதில் உழலுவதென்பது மனித வாழ்வில் இயல்பானது. சொல்லப்போனால், மூன்றில் இரண்டு பங்கு கல்லூரி மாணவர்கள் பிரிந்து சேர்ந்த காதலுடன்தான் இருக்க…
-
- 0 replies
- 265 views
- 1 follower
-
-
நிறைமொழியின் அம்மா காலையில் ஒரு அழகான பரிசு கொடுத்தார்கள், கூடவே ஒரு முத்தமும், நிறைமொழி அப்போது தான் எழுந்து தனது நாளைத் துவக்கி இருந்தாள், "அப்பா, அது என்ன?" "இது ஒரு பரிசு" "இன்னைக்கு உங்களுக்குப் பிறந்த நாளா???" "இல்லம்மா" "அப்புறம் எதுக்குப் பரிசு குடுக்குறாங்க???" "இன்னைக்குக் காதலர் தினம், ஒருத்தர் மேலே ஒருத்தர் அன்பு செலுத்துபவர்கள் எல்லோரும் பரிசு கொடுப்பாங்க" "அப்பா, காதல்னா என்ன???" மூன்றரை வயது மகளுக்குக் காதல் என்றால் என்ன என்று எப்படிச் சொல்வது என்று உண்மையிலேயே எனக்குப் புரியவில்லை, ஆனாலும் சொல்லித்தான் ஆக வேண்டும். "உனக்கு பப்பியைத் தெரியும் தானே?" "தெரியும்ப்பா!!!" "பப்பியால இப்போ நடக்க முடியாது, பப்பியால இப்போ எழுந்து நிக்கக் கூட முடிய…
-
- 62 replies
- 6k views
-
-
காபி, உடற்பயிற்சி போன்றவை அதிகமானால் மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு பக்கவாதம் ஏற்படும் அபாயம் உள்ளது என நெதர்லாந்தை சேர்ந்த நியூராலஜி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மூளைக்கு செல்லும் ரத்த குழாய்களின் சுவர்கள் வலுவிழக்கும் போது ரத்தம் கசிந்து பக்கவாதம் ஏற்படுகிறது. இதற்கான காரணம் குறித்து நெதர்லாந்தின் மருத்துவ பல்கலைக்கழகத்தின் நரம்பியல் நிபுணர் மானிக் எச்.எம்.விலாக் என்பவர் தலைமையில் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். மூளையில் ரத்த அழுத்தம் அதிகமாவதற்கு 8 முக்கிய காரணங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இதில் முதல் இடத்தில் இருப்பது நாம் குடிக்கும் காபி தான். இது ஸ்ட்ரோக் ஏற்பட 10.6 சதவீதம் காரணமாக இருக்கிறது. தீவிர உடற்பயிற்சி 7.9 சதவீதமும், செக்ஸ் 4.3 …
-
- 0 replies
- 782 views
-
-
காமக் கட்டுப்பாடு 14 காரட் தங்கத்தை விட உயர்ந்த தர தங்கத்தை நகை செய்து அணியாதே என்கிறது தங்கக் கட்டுப்பாட்டு விதி. அதிகமான பிள்ளைகளைப் பெறாதே என்கிறது குடும்பக் கட்டுப்பாட்டு விதி. 30 ஏக்கருக்கு மேல் விளைநிலம் வைத்துக் கொள்ளாதே என்கிறது உச்ச வரம்புக் கட்டுப்பாட்டு விதி. இன்னும்பல கட்டுப்பாட்டு விதிகளிருக்கலாம். அவ்விதிகளை மீறுபவருக்குத் தண்டனையும் உண்டு. அவற்றைச் சில பல அரசியற் கட்சிகளும் ஆதரிக்கின்றன. காமக்கட்டுப்பாடு என்பதொன்று. அதுவே மக்கள் மக்களராய் வாழ உதவுது, ஆகலின் அக்கட்டுப்பாடு ஏனைய கட்டுப்பாடுகளை விட மிகவும் அவசியமானது. காமம் கட்டுப்படுவதா? அன்றா? சாத்தன் ஒரு யெளவன புருஷன். அவனது குடும்பத்தில் அவனுக்குத் தங்கைமார், தமக்கைமார், புத்திர…
-
- 9 replies
- 2.6k views
-
-
அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம், நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் காலகட்டத்தில் காமம் கலக்காத காதல் இன்னும் உயிருடன் இருக்கிறதா? அதாவது நான் காமத்தை தவறு என்று சொல்லவில்லை. உடலழகில் வசியப்பட்டு காதல் என்ற உன்னதமான சொல்லை இழிவுபடுத்தி வருகிறார்கள். முதலில் காமம் என்பது என்ன? காமம் என்பது ஆசை,விருப்பம், புலன் சார்ந்த இன்பம், காதல் மற்றும் வாழ்க்கையின் பிற இன்பஙகளையும் பொதுவாக குறிக்கக்கூடிய சொல். பழங்காலத்தில் காதலே காமம் என்ற சொல்லில் வழங்கி வந்ததென அறிஞர்கள் சொல்கிறார்கள். தமிழ் அகராதிகளில், லிங்கம், யோனி, அல்குள், கொங்கை வார்த்தைகளை நீக்கிப் பார்த்தால், அகராதி சிறுகதைப் போல சிக்கனமாகச் சுருங்கி விட வாய்ப்புண்டு என்றும் சொல்கிறார்…
-
- 1 reply
- 5.3k views
-
-
கார் ஓட்டும் பெண்களுக்கு ஆண்களால் ஏற்படும் பாதிப்புகள் பெண்கள் தங்கள் சக்திக்கு மீறிய சில செயல்களை செய்து கொண்டிருக்கிறார்கள் என்றும், ஆண்கள் துணை இல்லாவிட்டால் அவர்கள் வாழ்க்கையே அஸ்தமித்துவிடும் என்றும் சில ஆண்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள், பெண்கள் கார் ஓட்டுவதைகூட வினோதமாக பார்ப்பார்கள். கார் ஓட்டிச்செல்லும் பெண்கள் சிக்னலில் நின்றால் அவர்களை பார்த்து கிண்டலடிப்பது, அவர்களை தன் பக்கம் திசை திருப்பும் விதமாக தேவையின்றி ‘ஹார்ன்’ ஓசையை எழுப்புவது போன்ற வேலைகளிலும் ஈடுபடுவார்கள். இன்னொரு வகை ஆத்திரக்காரர்களும் இருக்கிறார்கள். அவர்கள், ‘இவங்களெல்லாம் கார் ஓட்ட வந்திட்டாங்க! நாடு உருப்பட்ட மாதிரிதான்’ என்று வயிற்றெரிச்சலை வெளிப்படுத்து…
-
- 0 replies
- 914 views
-
-
காற்றில் விபூதி, காற்றில் தங்கச்சங்கிலி, தங்கலிங்க வாந்தி. இவ்வளவு தங்கம் சாய்பாபவிடமிருந்து வந்தாலும் இந்தியாவில் இன்னும் நிறைய பேர் வறுமைக்கோட்டிட்டின் கீழே. ஏன்? "சாய்பாபாவும் மேஜிக் ஷோவும்" பார்க்க இங்கே அழுத்தவும்.
-
- 29 replies
- 5.4k views
-
-
. மரத்தையெல்லாம் அழிச்சாச்சு. இனி, நல்ல காத்துக்கு எங்கே போறது? இனிமே மரம் நட்டாலும் அது வளர்ந்து முழு மரமாகிறதுக்கு 20, 30 வருஷங்கள் ஆகுமே’ என்று சங்கடப்படுபவர்களே… உங்களுக்காகவே இந்த நல்ல செய்தி! வீட்டிலேயே வளர்க்கக் கூடிய சில குறுஞ் செடிகளில் காற்றில் உள்ள நச்சுக்களைச் சுத்தப்படுத்தும் குணம் நிரம்பி இருக்கிறது என்று நாசா விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி கூறுகிறது. தமிழ்நாட்டுச் சீதோஷ்ண நிலையில் வாழும் தன்மையையும், அதிக நன்மைகளையும் கொடுக்கும் இந்தச் செடிகளைப் பற்றிய அறிமுகம் இதோ… கற்றாழை (AloeVera):மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ள கற்றாழை, காற்றில் உள்ள ஃபார்மால்டிஹைட் என்னும் வேதிப் பொருளை நீக்கும். சருமத் தீப்புண்களுக்கும் மருந்தாகப் பயன்படும்! சீமை ஆல் (Rubber pla…
-
- 1 reply
- 1.8k views
-
-
மிக அருமையான கலந்துரையாடல்: வாழ்க்கையில் வெற்றிபெறுவது = ? மென் திறன்கள் (soft skills) = ? உந்துகை, ஊக்கம், தன்முனைப்பாற்றல் (motivation) = ? உளப்பகுப்பாய்வினை திறன்கள் (interpersonal skill) = ? விருந்தினர் பக்கம் | எழுத்தாளர் மற்றும் மனிதவளமேம்பாட்டு பயிற்சியாளர், சோம வள்ளியப்பன் | வைகாசி 07, 2015 | SunTv www.youtube.com/watch?v=fneAQFn2YLs&list=PL6J49nu506tgE36tmIdQlWG_lHXDuS0P_&index=14 https://www.youtube.com/playlist?list=PL6J49nu506tgE36tmIdQlWG_lHXDuS0P_ உனை நீ அறி
-
- 5 replies
- 1k views
-
-
காலம் மாற மாற, அதற்கேற்ற வகையில் ஃபேஷன்களும் மாறிக் கொண்டே இருக்கும். உடைகளாகட்டும், நகைகளாகட்டும் ஃபேஷன்களின் அணிவகுப்பு முதன் முதலில் கல்லூரிகளில் தான் களை கட்டும். இளமையில் புதுமை தான் காணச் சலிக்காத அழகு. தங்களில் ரசனைக்கு ஏற்றவகையில் பெண்கள் இன்று தங்களை நன்கு அலங்கரித்துக் கொள்கிறார்கள். அழகுக் கலை பராமரிப்பு தனித்துவம் பெற்றிருக்கும் இந்தக் காலத்தைச் சேர்ந்த இளம் நங்கைகள் என்ன மாதிரியான உடைகளை விரும்பி அணிகிறார்கள் என்பதை அலசி ஆராய்ந்தோம். இதோ சில முடிவுகள் – ஜீன்ஸ் கல்லூரி பெண்களுக்கு மட்டுமல்ல பெண்கள் ஆண்கள் என அனைவருக்கும் பிடித்த தேசிய உடையாகி விட்டது ஜீன்ஸ். ஜீன்ஸ் பலவிதமாக இருந்தாலும் காலேஜ் பெண்கள் விரும்பி அணிவது 3/4த் ஜீன்ஸ். இவை டீஷர்…
-
- 0 replies
- 2.2k views
-
-
சமீபத்தில் "உங்கள் குழாயில்"(Youtube) தேடியபோது மனதை தொட்ட குறும்படம் இது.. ! ஏற்கனவே நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? "கால்நடையா போகிறேன்.. கஞ்சன் கிட்டே கேட்கிறேன்.. உழைச்சு திங்க வயசில்லே.. உசிரை மாய்க்க மனசில்லே.. என்ன மட்டும் மறந்திட்டியே.. பிச்சைக்கார கடவுளே.." http://youtu.be/oPZTjdzS1-s
-
- 0 replies
- 708 views
-
-
பெண்களை கால்மேல் கால் போட்டு உட்காராதே என நம் முன்னோர்கள் சொல்லியிருக்கின்றனர்.. இதை பெண் அடிமைத்தனம் புல்ஷிட் என இன்றைய நவநாகரீக பெண்கள் சொல்கின்றனர்... சொல்லிவிட்டு போகட்டும் ஆனால் நம் முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை.. கால்மேல் கால் போட்டு அமர்வதை அகங்காரம், திமிர், ஒழுங்கீனம் என மேலோட்டமாக சொல்லிவைத்தாலும், அதன் உள் பொருள் பெண்கள் கால்மேல் கால் போட்டு அமர்வதால்,அவர்களது கர்ப்பப்பை நாளடைவில் பாதிக்கும் என்பதால்தான்... இது அவர்களது நன்மைக்காகத்தான்... என் நன்மை எனக்கு தெரியும் என்றளவில் இன்று போய்க் கொண்டிருக்கும் நிலையில் இதைப்பற்றி என்ன சொல்வது!! FB
-
- 23 replies
- 5.8k views
-
-
இரண்டாம் உலகப்போரின் இறுதி கட்டத்தில் 1945 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஆறாம் தேதி அது நிகழ்ந்தது. உலகம் அதுவரை கண்டிராத அரக்கன் ஒருவன் உலகத்தாருக்கு அறிமுகமானான். அவனுக்குப் ‘சிறிய பையன்’(Little Boy) என்று பெயர் சூட்டப்பட்டிருந்தாலும், உண்மையில் அவன் ஒரு பெரும் அரக்கன். கணநேரத்தில் பல்லாயிரக்கணக்கானவர்களைக் கொன்று குவித்த அரக்கன் . உலகம் இன்றுவரை அவனை நினைவில் வைத்திருக்கிறது. அவன் வேறு யாருமல்ல, அணுகுண்டு என்னும் பேரரக்கன் தான் அவன். வட அமெரிக்கா தன் கொடுரத்தன்மையின் மற்றொரு முகத்தை அன்று வெளிக்காட்டியது. ஜப்பானிய நகரமான ஹிரோஷிமாவின் மீது முதல் அணுகுண்டை வீசியது. குண்டு விழுந்த அடுத்த நொடியில் எழுவதாயிரத்திலிருந்து என்பதாயிரம் மக்கள் தீயில் கருகி மாண்டுப் போனார்கள். அ…
-
- 3 replies
- 1.3k views
-
-
Published By: DIGITAL DESK 3 15 SEP, 2023 | 04:38 PM ஆண்கள் உடலால் வலிமையானவர்கள் என்றும் ஆண்கள் சிங்கம் போன்றவர்கள் என்றும் உவமைகளால் அலங்கரித்து அலங்கரித்து அவர்களின் உணர்வுகள் இலை மறை காயாகவே காணாமல் போகச் செய்கிறது. அதேபோல் தான் ஆண்கள் தினமும் இலைமறை காயாகவேதான் ஒவ்வொரு வருடமும் தெரியப்படாமல் கலந்து செல்கின்றது. ஆண்களுக்கு நிகர் பெண்கள் பெண்களுக்கு நிகர் ஆண்கள் என்று கூவல்கள் இருந்தாலும் அவை அறைக்கூவல்களாகவே ஒழித்து மறைகின்றன மகளிர் தினம் கொண்டாடப்படும் அளவிற்கு ஆண்கள் தினம் பேசப்படுவது கூட இல்லை. சமூக வலைத்தளங்களாக இருக்கலாம் தொழில்துறை நிறுவனங்களாக இருக்கலாம் இவ்வளவு ஏன் ஒரு சாதாரண அடிப்படை அழகான குடும்பத்தில் கூட இரு…
-
- 1 reply
- 694 views
- 1 follower
-
-
வணக்கம், ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் காலையில் கனடா தமிழ்விசன் தொலைக்காட்சியில் ஓர் நேர்காணல் நேரஞ்சலாக போவது வழமை. நானும் இடையிடையே சிறிதளவு பார்ப்பது உண்டு. கடந்த கிழமை ஓர் மனோதத்துவ வைத்தியருடன் உரையாடல் செய்யப்பட்டு இருந்தது. அதில் அவர் சொன்ன சில விசயங்கள் சற்று சிந்தனையை தூண்டிவிட்டது. +++ குழந்தைகளாக இருந்து பெரியவர்களாக நாங்கள் வளர்ந்துவரும்போது... குழந்தைப்பருவத்தில் இருந்த சந்தோசத்தை எதிர்காலத்தில் வளர்ந்து செல்லும்போது நாங்கள் பெறமுடியாது. காரணம் பெரியவர்களாக வளர்ந்து செல்லும்போது பொறுப்புக்கள், கடமைகள் இப்படி பல விசயங்கள் எம்முடன் சேர்ந்துகொள்ளும். ஆனால்.. இதை உணராது முன்பு இருந்ததுபோல் இப்போது நாங்கள் சந்தோசமாக இருக்க முடியவில்லையே என்று நினைத்து வருந்த…
-
- 6 replies
- 1.6k views
-