சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
தெரிந்து கொள்வோம் 1.சமாதானம் என்பதற்குரிய நிறம். வெள்ளை 2. முதன் முதல் உலகில் முப்படையுடன் ஆட்சிபுரிந்தவன் சிவதாசன் ஜஇராவணன்ஸ 3. ஐக்கிய நாடுகள் சபை ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு. 1945ம் வருடம் 4. முதன்முதல் கணிணியைப் பாவனைக்கு அறிமுகப்படுத்திய நாடு. அமெரிக்கா , 1977ம் வருடம் 5. உலகில் அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட அறநூல். திருக்குறள், 600 மொழிகளுக்குமேல். 6. உலகில் பெரிய தேசியகீதம் உள்ள நாடு கிரேக்கம் 7. உலகில் சிறிய தேசியகீதம் உள்ள நாடு ஐப்பான் 8. உலகின் மிகப்பெரிய ஐனநாயகநாடு இந்தியா 9. உலகின் மிகச்சிறிய நாடு வத்திக்கான் 10. உலகின் மிகப் பெரிய இராணுவம் கொண்ட நாடு சீனா மிளகின் பெருமை பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம். இது தமிழர் முதுமொழி.முதன்முதல் மிளகின் சிறப…
-
- 1 reply
- 827 views
-
-
திருமணத்தைத் தாண்டிய உறவுகளுக்கு பெண்கள் தங்களை தயார்படுத்திக் கொண்டது எப்படி? படத்தின் காப்புரிமைGETTY IMAGES விருப்பம் இல்லாவிட்டாலும் திருமண பந்தத்தில் வாழ்வது தியாகம் அல்ல. பெண்களை தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொள்ளும் பைத்தியகாரத்தனம். நான்கு ஆண்டுகளுக்கு முன் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்த பிரதீபாவின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வார்த்தைகள்தான் இவை. கடந்த வாரம் இந்திய நாடாளுமன்ற மக்களவை விவாதத்தில், கடந்த மூன்று ஆண்டுகளில் காதல், குடும்பத் தொல்லைகள், திருமணத்தை தாண்டிய உறவுகளின் காரணமாக பெண்கள் தற்கொலை செய்துகொள்ளவது குறைந்துள்ளது என மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் கிருஷ்ண ராஜ் தெரிவித்தார். தேசிய குற்றப்பதிவு காப்பகத்தின் புள்ளிவிவரங…
-
- 1 reply
- 1.1k views
-
-
விக்ஸ் நிறுவனம் வெளியிட்ட அந்த விளம்பரப் படம் பலரையும் கண்ணீர்க் குளத்தில் மூழ்கடித்துள்ளது. படம் ஓடத்துவங்குகிறது.... பேருந்தின் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்தபடி அந்தக் குட்டிப் பெண் தன் கடந்த காலத்துக்குப் பயணிக்கிறாள். வேதனையும், குறுநகையும் மாறி மாறி இடம்பிடிக்கிறது அவள் முகத்தில். தாய்ச்சிறகில் அடைகாக்கப்பட வேண்டிய குட்டிப்பறவையின் தவிப்பு அவள் விழிகளில். விவரம் புரியாத சிறு வயதில் தன்னை பெற்றெடுத்த தாய்நோய் வாய்ப்பட்டு இறந்துவிட, நிர்கதியாகிறது அந்தக் குழந்தை. அன்பின் சிறகை தொலைத்து வாடும் அந்த பிஞ்சு மனம் தனிமைப்படுத்தப்படுகிறது. அவ்வளவு கொடுமையான சூழலில் இருந்து இன்னொரு தாயின் அன்பு அவளை மீட்டெடுக்கிறது. அவர் அவளின் வளர்ப்புத் தாய். …
-
- 1 reply
- 5.4k views
-
-
முன்னோடி வழக்கறிஞர் லஜபதிராய் அவர்கள், மார்பகத்திற்கு வரியும் அதனை மூடி மறைப்பதற்கு வரியும், விதித்த வரலாற்றை தன்னுடைய கட்டுரையில் விரித்துரைத்துள்ளார்கள். அண்மையில் ஓர் அரிய வரலாறு கண்டறியப்பட்டுள்ளது. அது ஆட்சியாளர்கள் மார்பக வரியை வசூலிப்பதில் காட்டிய வேகத்தையும், ஆதிக்க ஜாதியினரின் இந்த வரியை எதிர்த்த வீராங்கனையின் வரலாறும் ஒன்று போலவே உலகறியச் செய்தது. இந்த வரலாற்று நிகழ்வு நடந்தது வழக்கறிஞர் லஜபதிராய் அவர்கள் குறிப்பிடும் அதே திருவிதாங்கூர் இராஜ்யம்தான். நடந்த காலம் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன். இடம் திருவிதாங்கூர் இராஜ்யம், நாங்கிலி கிராமம், சேர்த்தலா வட்டம். இப்போது கேரள மாநிலத்தில் இருக்கின்றது. ‘நாங்கிலி’ என்ற சொல்லுக்கு ‘அழகு’ எனப் பொருள். ‘நாங்கிலி’ …
-
- 1 reply
- 2.8k views
-
-
சித்திரவதை: ஓர் உளவியல் பார்வை. போரில் தோற்றுபோன எதிரி நாட்டு வீரனை சிங்கத்தின் எதிரில் தள்ளி, அவன் அதனோடு போராடி, அடிபட்டு, மிதிபட்டு, கடிபட்டு, காயம் பட்டு, சித்திரவதைக்கு ஆளாகி செத்து மடிவதை ஏதோ ஒரு விதமான கேளிக்கையாக பார்த்து மகிழ்ந்த ரோமானியர்கள். கொல்லை, கொலை, பாலியல் வல்லுறவு, ராஜ துரோகம் மாதிரியான தவறுகளை செய்த ஆண்களை நடுதெருவில் நிறுத்தி மாறுகால், மாறுகை வாங்கும் அரேபியர்கள். வேதம் ஓதுவதை தற்செயலாக கேட்டு விட்டாலும், பெண்கள், அடிமைகள், சூத்திரர்கள் மாதிரியான ~கீழ்நிலைகாரர்களின்~ காதில் ஈயத்தை காய்த்து ஊற்ற வேண்டும் என்று போதித்த ஆரியர்கள். அரசுக்கு எதிராக பேசினால் அவனை பைத்தியம் என்று பட்டம் கட்டி, சிறையில் அடைத்து, தனிமையில் அவனை போட்டு வாட்டி வதைக…
-
- 1 reply
- 944 views
-
-
பெண்களுக்கு உதவிபுரியக் கூடிய வழிகள் 01)பெண்கள், பிள்ளைகள் சமுதாயத்தில் அனேகமாக துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்படுவதினால் அவர்களுக்கு துன்புறுத்தலோ,பயமுறுத்தலோ ஏற்படாத வகையில் செயல்படுவது சமுதாயத்தில் ஒவ்வொருவரினதும் கடமையும் பொறுப்பும் ஆகும். 02)பெண்கள் பிரயாணம் செய்யும் போது அவர்களுக்கு சந்தேகம் ஏற்படும் வகையில் பிரயாணம் செய்வதை தவிர்க்கவும் உங்களால் எதுவிதமாக அசௌகரியங்கள் ஏற்படாத வகையில் பிரயாணத்தை மேற்கொள்வதற்கு வழிவகுத்துக் கொள்ளவும். 03)பெண்கள்,பிள்ளைகள் புகையிரதத்தில் அல்லது பஸ்ஸில் பிரயாணம் செய்யும் போது அவர்களுக்கு அசௌகரியமோ, துன்புறுத்தலோ ஏற்படாதவாறு செயல்படுத்தவும். பெண்களுக்கோ,பிள்ளைகளுக்கோ ஏதேனும் அசௌகரியம் ஏற்படுமாயின் அத…
-
- 1 reply
- 679 views
-
-
வாகனம் ஓடும்போது குறுஞ்செய்தி (Texting) பாவனை காரணமாக ஒரு வருடத்தில் 5000 பேருக்கு மேல் அமெரிக்காவில் பலியாகின்றனர். ஒவ்வொரு தடவையும் குறுஞ்செய்தி பாவனையில் சராசரியாக 4.6 செக்கன்கள் சாரதிகள் கவனத்தை செலுத்துவதாகவும், இவ்வாறான நிலையில் மணிக்கு 55 மைல் வேகத்தில் ஓடும்போது வாகனத்தை ஓடுபவர் சராசரியாக 4.6 வினாடிகளில் ஒரு விளையாட்டு மைதானத்தின் அளவு தூரத்தை வீதி நிலமையை கவனிக்காமலேயே ஓடுவதாகவும், இதனால் மோசமான விபத்துக்கள் ஏற்படுகின்றன என்றும் கூறப்பட்டுள்ளது. வாகனம் ஓடும்போது குறுஞ்செய்தி பாவிப்பது நீங்கள் விபத்தில் சிக்கும் நிகழ்தகவை இருபத்து மூன்று மடங்குகள் அதிகரிக்கும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. http://youtu.be/DebhWD6ljZs 'Texting, distract…
-
- 1 reply
- 760 views
-
-
லண்டன்: ஜவுளிக் கடைக்கோ, ஷாப்பிங்குக்கோ மனைவிமார்கள் கூப்பிட்டால் கணவர்மார்கள் 'பீதி' அடைவது இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் பொதுவானதுதான். ஆனால் ஏன் பெண்கள் பெரும் செலவாளிகளாகவும், விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் பிரியம் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள் என்பது குறித்து நடத்தப்பட்ட ஒரு ஆய்வு முடிவு சுவாரஸ்யமான தகவலை வெளிக்கொணர்ந்துள்ளது. அதாவது மாதந்தோறும் பெண்களுக்கு வரும் மாதவிடாய் எனப்படும் மென்சஸ்தான் இதற்கு முக்கியக் காரணமாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது. அதாவது மென்சஸ் சமயத்தில் ஹார்மோன் மாற்றத்தால் ஏற்படும் பதட்டமே ஷாப்பிங் ஆர்வத்தை பெண்களிடையே அதிகரிக்கிறதாம். மாதவிடாய் காலத்தில், எந்தக் கட்டத்தில் இருக்கிறார்களோ அதைப் பொருத்தே அவர்களின் செலவு செய்யும் …
-
- 1 reply
- 1.2k views
-
-
3 ஆண்கள் திருமணம் செய்து கொண்ட வினோதம்: குவியும் பாராட்டு Image captionமூன்று பேரும் இணைந்து ஒன்றாக உறவில் இருக்கின்றனர் கொலம்பியாவில் மூன்று ஆண்கள் ஒன்றாக இணைந்து வாழ்வதை சட்டப்பூர்வமாக ஏற்றுக் கொண்டுள்ளதால் வெகுவாக பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இதனால் எதிர்காலத்தில் மூன்று பேர் திருமணம் செய்து கொள்ளும் "முக்கோணத் திருமணங்களை" நம்மால் காண முடியுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. " விக்டர் மோசமான நகைச்சுவைகளைக் கூறுவார்" என்று மானுவேல் தெரிவிக்கிறார். "இதை நானும் ஆமோதிக்கிறேன்" என்கிறார் அவரது இணை அலெஜேண்ட்ரோ. "அப்படி எல்லாம் இல்லை, நான் நல்ல நகைச்சுவைகளையே கூறுவேன்" என்கிறார் மானுவேல். …
-
- 1 reply
- 3k views
-
-
நினைத்ததை நடத்தியே முடிக்க ஆசையா?! சில முயற்சிகள், சிறப்புப் பயிற்சிகள் 'உங்களின் வெற்றி ரகசியம் என்ன?' என்று உலகப் புகழ் பெற்ற செய்தியாளர் டயானே சாயரிடம் ஒரு மாணவர் கேட்டபோது அவர் தந்த பதில், 'எதிலும் முழுமையான கவனம் செலுத்தினால் வெற்றி பெற முடியும். அதுவே நான் கற்ற பாடம்!' நண்பர்களே உலகில் இரண்டே வகையான மனிதர்கள்தான் இருக்கிறார்கள். ஒரு வகையினர்-கழுத்தை நெரிக்கும் டெட்லைனில் முழுக் கவனம் செலுத்திக் காரியத்தை முடிப்பவர்கள். இன்னொரு வகையினர்- இந்தச் செயலுக்கு இந்த அளவு கவனம் போதும் என்று நிதானமாகச் செய்து முடிப்பவர்கள். சினிமா, செல்போன், டி.வி, இன்டர்நெட், கேர்ள்/பாய் ஃப்ரெண்ட் என உங்கள் கவனம் கலைக்க இன்று காரணங்கள் ஆயிரம். இந்த வெளிப்புறக…
-
- 1 reply
- 12.2k views
-
-
த சீக்ரெட் ரோண்டா பிரயன் எழுதிய சீக்ரெட் என்ற நூல் 2006ம் ஆண்டில் வெளியான நூல்களில் ஒன்றாகும். 46 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்ட இந்த நூல், ஈர்ப்பு விதியைப் பற்றியும், அதனை கையாளும் முறைகளையும், நேர்மறை சிந்தனைகளைப் பற்றியும் விவரிக்கிறது. நேர்மறை சிந்தனையே ஒருவர் தன் வாழ்வில் வெற்றி பெறுவதற்கும், தன்னிறைவு அடைவதற்கும், அடித்தளமாக அமைகிறது என்பதை வலியுறுத்துகிறது. இந்த நூல், நூலாக வெளிவருவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்னரே காணொளி வடிவில் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. .facebook.com/tamilnewsonly/posts/1248728485156759 ரோந்த பிர்ய்நே எழுதிய த சீக்ரெட் (The Secret, மர்மம்) என்பது பிரைம் டைம் புரொடக்சன்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ஒரு திரைப்படமாகும்.…
-
- 1 reply
- 4.3k views
-
-
தப்பான புரிதல்களுக்கு இது ஒர நல்ல எடுத்துக்காட்டு................ இருவரும் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்தார்கள்.வெகு நாட்கள் பழகிய பிறகு அவன் காதலிப்பதாக சொன்னான்.அது தெரிந்த விஷயம்தான்.பெண் பதில் எதுவும் சொல்லவில்லை.நன்றாகவே பேசிக் கொண்டிருந்தார்.ஒரு நாள் ஊருக்குச் செல்வதாக கூறி சென்றுவிட்டார். அடுத்த நாள் பையனுக்கு ஒரு போன் வந்த்து.அந்த பெண்ணுக்கு உறவினர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்.” அவனே,இவனே! யாரென்று நினைத்தாய்? உன்னை ஒழித்து விடுவோம் என்பதில் ஆரம்பித்து வாங்கு வாங்கென்று வாங்கி விட்டார்.பையனுக்கு குழப்பம்.நன்றாகத்தானே பேசிவிட்டு போனார்.? அப் பெண்ணுக்கு போன் செய்து பார்த்தார்.எடுத்த்து பெண் அல்ல!…
-
- 1 reply
- 1k views
-
-
-
- 1 reply
- 983 views
-
-
அடையாளமாகும் ஆபரணங்கள் நகை மோகம் நங்கையரை மட்டுமின்றி இன்று ஆடவரையும் ஆட்டிப்படைகிறது. பொட்டுத் தங்கம் கூட போடாத நிலையில் பூவையரின் அங்கங்கள் மூலியாக அழுது வடிவது போல் தருவது என்னமோ உண்மைதான். ஆனால் உரிய அணிகலன்கள் ஏறியதும் அந்த அவயவங்கள் புதுப்பொலிவில் ‘நகை’ப்பது போலத் தோன்றுவதாலோ என்னவோ, நம் ஆன்றோர்கள் அந்த அணிகளுக்கு ‘ நகை ‘ என்னும் பொருத்தமான பெயரை சூட்டியுள்ளார்கள்.அணி என்னும் சொல்லும் ‘அணிதல்’ மற்றும் அலங்கரித்தல் என்னும் இரு பொருள் தந்து நகைகளுக்கு மறு பெயராக விளங்குகிறது. இந்தியாவில், தமிழ்நாட்டில் பலப்பெண்களை முதிர்கன்னியாக்கி, வனிதையரை வதைக்கும் இந்த வரதட்சணை கொடுமையில் முக்கிய இடமும் பங்கேற்பதும் இந்த நகை என்றால் அது மிகையான நகையல்ல. சரி… இந…
-
- 1 reply
- 7k views
-
-
ஆலகாலச் செடி – குறியீட்டு எண்: 420 பிரான்ஸ் குகை ஓவியம் 1971ல் கலிபோர்னியாவின் சான் ராஃபெல் பள்ளியின் ஐந்து பேர் கொண்ட அந்தக் குழு தங்களை ’வால்டோஸ்’ என்று அழைத்துக் கொண்டது. அவர்கள் கையில் தற்செயலாக கிடைத்திருந்த ஒரு வரைபடம் பள்ளியின் அருகிலிருக்கும் அடர் காட்டுக்குள் சட்டவிரோதமாக வளர்க்கப்படும் போதைச்செடிகளின் இருப்பிடத்தைக் காட்டியது. ஸ்டீவ், டேவ், ஜெஃப்ரி, லேரி மற்றும் மார்க் ஆகிய ஐவரும் மாலை பள்ளி முடிந்த பின்னர் ரகசியமாக ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒன்று கூடி அந்த செடிகளை தேடிக்கண்டுபிடிக்க முடிவெடுத்தனர். மறுநாள் பள்ளி வளாகத்தின் பின்புறமிருந்த லூயி பாஸ்டரின் வெண்கலச்சிலையின் அருகிலிருந்த பீச் மரப்பொந்திற்குள் 4;20 என்று மட்டும் எழுதியிருந்த நீல…
-
- 1 reply
- 581 views
-
-
இன்று ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழும் நிகழ்வுகள் பல நாடுகளில் நடைபெறுகின்றது. அது நாளை எங்கே எப்படி வெடித்தெழும் என்பது யாருக்குமே தெரியாது. இந்த மக்கள் எழுச்சியினை ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பாளர்கள் தங்கள் நலனுக்கு சார்பாக பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பது ஒருபுறம்.., ஆனால் அதிகார வர்க்கம் என்றுமில்லாத அளவிற்கு மக்களை பார்த்து சற்று பயப்பட ஆரம்பித்துள்ளது. உலக முதலாளித்துவம் கோடிக் கணக்கில் பணத்தை தமக்குள் பதுக்கிக் கொள்ள, மக்கள் தங்கள் உரிமைகளையும், தாங்கள் அனுபவிக்க வேண்டிய பொருளாதாரத்தினை இந்த சுரண்டல்வாதிகளிடம் பறி கொடுத்து விட்டு நாளாந்த வாழ்க்கையினை ஓட்ட முடியாது, செக்கில் கட்டப்பட்ட மாடாட்டம் தினந்தினம் உழைத்துழைத்து தன்னை வருத்தி தேய்ந்து கொண்டிருக்…
-
- 1 reply
- 736 views
-
-
வீடே முதற் பள்ளிக்கூடம் by vithaiAugust 9, 2021057 கொரோனா நிலமைகள் காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேல் மிகக் குறைவான நாட்களே பள்ளிக் கூடங்கள் இயங்கின. நீண்ட லொக்டவுனுக்குப் பின் பாடசாலை வந்த மாணவர்களும் ஆசிரியர்களும் எதிர்கொண்ட சிக்கல்கள் கவனப்படுத்தப்பட வேண்டியவை. ஆரம்ப வகுப்பு மாணவர்களை எடுத்துக் கொண்டால் முதலாம் வகுப்புப் படிக்க வேண்டிய ஒரு மாணவர் நேரடியான பள்ளி அனுபவம் குறைந்து இரண்டாம் வகுப்பிற்குச் செல்கிறார். புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் ஐந்தாம் வகுப்பிற்கான முழுமையான கற்பித்தல் இன்றியே பரீட்சை எழுதியிருக்கிறார்கள். சாதாரணதர மற்றும் உயர்தரப் பரீட்சைகளில் கிராம மட்ட மற்றும் சிறுநகர பாடசாலைகளின் சித்திவீதம் மற்றும் தரவரிசை முன…
-
- 1 reply
- 493 views
-
-
ஐரோப்பிய நாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்கள் அனைவரும் ,எதோ ஒரு வகையில் ஒடுக்கு முறைக்குட்பட்டதன் விளைவாகவே இடம் பெயர்ந்தனர். புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழர்களில் மிகப் பெரும்பாலானோர் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான ,அல்லது போராடும் ஒரு இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற அடையாளத்தை வெளிக் காட்டாது, இன -மொழி ரீதியாக மாத்திரமே அடையாளப் படுத்துபவர்களாகவுள்ளனர். இக் குறுகலான வெளிக்காட்டலுக்கு முழுமையான காரணி, தமிழ்த் தேசிய இன விடுதலைக்காக தோற்றம் பெற்ற விடுதலை இயக்கங்கள் , தமிழ் மக்கள் ஒடுக்கு முறையில் இருந்து விடுதலை பெற வேண்டிய மார்க்கத்தை , வெறும் சிங்களப் பேரினவாதத்துக்கெதிரான போராட்டமாகவே மாத்திரம் குறுக்கிக் கொண்டது தான் என்றால் அது மிகையாகாது. மேலே குறிப்பிட்ட விடயத்தை முழ…
-
- 1 reply
- 804 views
-
-
இந்தியாவின் ஆந்திர மாநில கவர்னருக்கு தாய் ஒருவர் ‘மனநலம் குன்றிய தனது மகளை கருணை கொலை செய்ய அனுமதி வழங்க வேண்டும்’ என, கடிதம் எழுதியுள்ள சம்பவம் ஒட்டுமொத்த மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து குறித்து மேலும் தெரியவருகையில், இந்தியாவின் ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்த ஸ்வர்னலதா. என்பருக்கு, ஜான்வி எனும் ஒரு மகள் உள்ளார். ஜான்விக்கு 4 வயது முதல் உளவியல் பிரச்சினையும், 8 வயது முதல் ஜினிக் கோளாறும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ஜான்வியின் தந்தை உதவியாளராக பணிபுரிந்து வரும் வைத்தியசாலையில் ஜான்விக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், கடந்த 2010 ஆம் ஆண்டு குறித்த வைத்தியசாலையின் உளவியல் துறை புதிய தலைமை வைத்தியராக ராஜ்ய லட்…
-
- 1 reply
- 476 views
-
-
-
- 1 reply
- 1.2k views
-
-
“பெண்ணின் பலவீனமான எதிர்ப்பு சம்மதத்துக்கு அறிகுறி” “பெண்ணின் பலவீனமான எதிர்ப்பு என்பது சம்மதத்துக்கான அறிகுறி” என்று, பாலியல் வழக்கொன்றில் இந்திய நீதிபதியொருவர் குறிப்பிட்டிருப்பது இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொலிவுட் திரைப்படத் தயாரிப்பாளர் மஹ்மூத் ஃபரூக்கி. இவர், ‘பீப்ளி லைவ்’ என்ற பிரபல திரைப்படத்தின் இணை இயக்குனரும் ஆவார். கொலம்பியா பல்கலைக்கழக மாணவி ஒருவரை 2016ஆம் ஆண்டு பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய வழக்கில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட ஃபரூக்கிக்கு ஏழு ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. இதை எதிர்த்துத் தொடுக்கப்பட்ட மேன்முறையீட்டில், ஃபரூக்கி நிரபராதி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்…
-
- 1 reply
- 1.1k views
-
-
திருகோணமலையில் ஒரு வயது குழந்தையை தாக்கிய தந்தையை நேற்று இரவு (02) கைது செய்துள்ளதாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர். திருகோணமலை திருக்கடலூர் பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேக நபர் முது ஆருந்திவிட்டு ஒரு வயது குழந்தைக்கும், மனைவிக்கும் தாக்கியதாக பொலிஸாருக்கு கிடைத்த அவசர தொலைபேசி அழைப்பை அடுத்து, சந்தேக நபரின் வீட்டுக்குச் சென்ற பொலிஸார் சந்தேக நபர் மது போதையுடன் ஒரு வயது குழந்தையை தாக்கியதாகவும் இவ்வாறு தினமும் மது போதையுடன் மனைவி பிள்ளைகளை சந்தேக நபர் தாக்குவதாகவும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதையடுத்து குறித்த சந்தேக நபரை தடுத்து வைத்துள…
-
- 1 reply
- 642 views
-
-
பெண்கள் பருவமடையும் வயது குறைந்து வருவதை பெற்றோர்கள் அவதானித்து இருக்கக் கூடும். உதாரணத்திற்கு தாய் 14 வயதில் முதல் மாதவிடாயை (Menarche) அடைந்தால் மகள் இப்பொழுது 10-12 வயதிலேயே அடைந்து விடுகிறாள். கடந்த சில தசாப்தங்களாகவே இம் மாற்றம் படிப்படியாக ஏற்பட்டுக் கொண்டு வருகிறது. 1800ன் நடுப் பகுதிகளில் அமெரிக்கப் பெண் குழந்தைகளில் முதல் மாதவிடாய் 17 வயதளவில் ஏற்பட்டதாகத் தெரிகிறது. ஆனால் 1960 களில் 12 வயதாகக் குறைந்துவிட்டது. காரணங்கள்: இதற்குக் காரணம் என்ன? - பலரும் பலவாறு ஊகிக்கிறார்கள். அடிப்படைக் காரணம் முற்றும் புதியதான வாழ்க்கை முறைதான் என நம்பப்படுகிறது. போஸாக்கான உணவு தாராளமாகக் அளவு கிடைக்கிறது. இதனால் அவர்களது உடல் வேகமாகவும் அதிகமாகவும் வளர்ச்சியு…
-
- 1 reply
- 3.1k views
-
-
.அரைக்கிழவனின் வியாக்கியானம் இந்த மே முப்பதுடன் வயது முப்பத்தைந்து. ஏழுகடாமாடு வயசாகிறது.(அப்ப ஒரு கடாமாடு என்பது 5 வயசா?). படிவங்களில் வயதை டிக்கடிக்க வேண்டிய டப்பா மாறுகிறது. குறுந்தொப்பை நிரந்தரம். Midlife crisisக்கான அறிகுறிகள் லேசுபாசாய் தென்படுகிறது. இது ஒரு taking stock of life பதிவு. இந்த 35 வயதில் நான் கற்றதும்,பெற்றதும் என்ன? 35 வயதில் என்ன சாதித்தாய் என்றால் ஒன்றுமில்லை. கொஞ்சம் செட்டில் ஆகியிருக்கிறேன் (touch wood). அமெரிக்காவில் ஊர் ஊராய் ஓடி, திரவியம் தேடி, தங்கைகள் திருமணத்துக்கு தோள் நின்று, களைத்து, வடக்கே கனடாவில் ஒதுங்கி, வீடு வாங்கி, நல்லது/கெட்டதுக்கு 4 நட்புக்கள் சேர்த்து, செந்திலை புரிந்திருக்கும் கரகாட்டக்கார கவுண்டமணியாய் ஒரு …
-
- 1 reply
- 1.4k views
-
-
காலை ஆறு மணிக்கு என்னுடைய அலைபேசி ஒலிக்க, பாதி தூக்கத்தில் எடுத்தேன். ''நான் செல்வம் பேசுறேன். என்னைப் பார்க்கணும்னு சொன்னீங்களே. இப்போ சென்னைக்கு வந்திருக்கேன்' என்றது அந்தக் குரல். நான் பல நாள்களாக எதிர்பார்த்திருந்த குரல். தூக்கம் முற்றிலும் விலக, அவர் சொன்ன இடத்துக்கு 10 நிமிடங்களில் வருவதாகச் சொல்லிக் கிளம்பினேன். யார் இந்த செல்வம் அண்ணன்? அவ்வளவு சீக்கிரமாக சந்திக்க என்ன ஸ்பெஷல்னு கேட்கறீங்கதானே? செல்வம் அண்ணன், ஒரு திருநம்பி. தான் ஒரு திருநம்பி எனத் தைரியமாகப் பொது சமூகத்தில் அடையாளப்படுத்திக்கொண்டவர். இது தவிர அவரைப் பற்றி வேறு எதுவும் தெரியாது. ஆனால், அவரிடம் கேட்க நிறையக் கேள்விகள் என்னிடம் இருந்தன. பிறக்கும்போது ஆணாக இருந்து, பிறகு பெண் தன்மை அடைந்து, தன்…
-
- 1 reply
- 823 views
-