சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
பொதுவாக கலியாணவீடு சாமத்தியவீடு என்று செல்லும்போது நேரவிரயம் சார்ந்து ஒரு உள்ளுளார்ந்த ஒவ்வாமை எழுவதை மறைப்பதற்கில்லை. எனினும் இத்தகைய விழாக்களில் சுவாரசியங்கள் இல்லாமல் இல்லை. ஒரு குழந்தையினைப் பார்த்துக்கொள்வதைப் போல முற்றுமுழுதாகக் கவனத்தை விழாவிற்குள் போட்டு இயல்பாக இருந்தால் ஏகப்பட்ட சுவாரசியங்கள் இலகுவில் விரியும்;. அண்மையில் ஒரு சாமத்திய வீட்டிற்குச் சென்றபோது அவதானித்தவற்றை நான் பார்த்தபடியே பகிர்ந்துகொள்கிறேன். எனக்கு அவர்களோடு அறிமுகமில்லை. இருந்தும் அழைப்பை மறுக்கமுடியாத நிலை. அழைப்பை மறுக்க முடியாமைக்குக் காரணமானவளோடு சேர்ந்து சென்றேன். ஏனோ உட்சென்றதும் நிகழ்விற்;குள் இலகுவில் நுழைய முடிந்தது. குழந்தையினை அலங்கரித்து மணவறையில் நிறுத்தியிருந்தார்கள்.…
-
- 13 replies
- 996 views
-
-
1) ஒரு நாளைக்கு ஒரு முறையாவது வாய் விட்டு சிரியுங்கள் 2) குறைந்த பட்சம் எட்டு தம்ளர் தண்ணீர் குடியுங்கள் 3) நீங்கள் விரும்பும் புத்தகத்தை படிக்க பழகிக்கொள்ளுங்கள் 4) செய்யகூடாது என நினைக்கும் செயலை முடிந்த வரை கொஞ்சமாவது செய்ய மனதை பழக்கிக்கொள்ளுங்கள் 5) நீண்ட நாள் பழகிய நண்பர்களை அடிக்கடி சந்தித்து பேசி உங்கள் பசுமையான பழைய நினைவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள் 6) இதுவரை நீங்கள் அறிந்திராத ஒரு நாட்டைப்பற்றிய புது விடயங்கள் பற்றி அறிய முயற்சி செய்யுங்கள் 7) ஒவ்வொரு நாளும் நடைப்பயிற்சி செய்யுங்கள் 8) ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் ஜந்து பழங்களையோ காய் கறிகளையோ உண்ணுங்கள் 9) நீங்கள் பகிர்ந்து கொள்ள விரும்பும் விடயங்களை நீங்கள் விரும்புகின்றவர்களிடமோ அல்லது நெருங்கியவ…
-
- 0 replies
- 995 views
-
-
[media=]http://youtu.be/XvWGcy72ko0
-
- 9 replies
- 994 views
- 1 follower
-
-
பெண்களின் வலி பேசும் 28 வயது பெண்ணின் பீரியட்ஸ் ஓவியம்! என்னதான் நாகரிகம் வளர்ந்து விட்ட இந்தக் காலக்கட்டத்திலும், பெண்களின் மாதவிடாய்....அல்லது ஆங்கிலத்தில் பீரியட்ஸ் என்று சொல்லப்படும் வழக்கமான இயற்கை உபாதை பற்றி இன்னமும் வெளிப்படையாகப் பேச எல்லோருமே தயங்கிக் கொண்டிருக்கிறோம். ஆண்களும், பெண்களும் அறிவுப்பூர்வமான பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து கொண்டாலும், மாதவிடாய் பற்றி பொது இடங்களில் பேசுவதைத் தவிர்க்கவே நாம் அனைவரும் முயற்சி செய்கிறோம். பெண்களின் மாதவிடாய் பற்றி ஆண்களுக்கு அனைத்து விவரங்களும் தெரிந்தாலும், பேசக் கூடாத ஒரு தலைப்பாகவே இன்னமும் அது இருக்கிறது. வளர்இளம் பெண்கள் தொடங்கி சுமார் 50 வயது வரையிலான பெண்களின் உடலில் ஒவ்வொரு மாதமும் நிகழும் ரசாய…
-
- 0 replies
- 993 views
-
-
மனதைத் தொட்ட ஒரு காணொளி ------------------------------------------------ #பொதுக் குழாய்கள் அடைக்கப் பெறாமல் நீர் வீணாவதை அனுதினமும் பார்த்து வருகிறோம். அதற்கு விழிப்புணர்வு தரும் 47 வினாடிகள் கொண்ட இந்த படம் நமக்கு ஒரு பாடம். ஒரு 5 அறிவுள்ள விலங்கிற்கு உள்ள பொறுப்பு கூட நமக்கில்லை.. மிக வேதனையான விஷயம். https://www.facebook.com/photo.php?v=798025203560593
-
- 6 replies
- 991 views
-
-
புலம்பெயர் தமிழர்கள் சிலர் தங்கள் வீட்டில் நடக்கும் நிகழ்வினை எவ்வாறு நடத்துகின்றனர்? https://www.facebook.com/video/video.php?v=828573870539240
-
- 0 replies
- 991 views
-
-
வித்தியாசங்களுடன் வாழுதல் - Living with differences ஒருவருக்கு முன்னே உள்ளது 4 கட்டைகளாக இருக்கின்றது. மற்றவருக்கோ 3 கட்டைகளாக இருக்கின்றது. நேரே காட்சியைப் பார்க்கும் பொழுது ஒருவன் துரத்தப்படுகின்றான். கமெரா கண்களால் பார்க்கும் பொழுது துரத்தப்படுவன் கையில் கத்தியை எடுக்கின்றான். பாலச்சந்தரின் நூற்றுக்கு நூறு படமே ஒரே சம்பவத்தை வேறு வேறு திசைகளில் இருந்து பார்ப்பதை கருப் பொருளாய் கொண்டது. இதுதான் இன்றைய சமுதாயமும் - எங்கள் வாழ்வும். குறிப்பிட்ட ஒரு சிறிய கிராமத்தில் அல்லது நகரின் ஒரு பகுதியில் எங்கள் இனம் எங்கள் சொந்த பந்தம் என்று வாழ்ந்து விட்டு தேனிக்கூடு கலைந்தது போல உலகம் முழுக்க பரந்து வாழும் பொழுது புதிய வாழ்க்கைச் சூழலுக்குள் தள்ளப்பட்டிருக்கின்றோம். செங்கல…
-
- 0 replies
- 989 views
-
-
ஓடிப்போவதெல்லாம் உடன்போக்கு அல்ல - சுப. சோமசுந்தரம் இத்தலைப்பைப் பார்த்தவுடன் நான் என்னவோ காதலுக்கு எதிரானவன் என்று முடிவெடுத்து விட வேண்டாம். இலக்கியங்களில் அகப்பாடல்களைத் தேடித் தேடி ரசிப்பவன் நான். பக்தி இலக்கியங்களில் கூட அகம் காணுகிறவன் நான். நாச்சியார் திருமொழியில் ஆண்டாள் நாச்சியார் கண்ணனுடன் கொண்ட நாயகன் – நாயகி பாவனை, திருக்கோவையாரில் மணிவாசகர் தம்மையே தலைவியாகவும் சிவபெருமானைத் தலைவனாகவும் மேற்கொள்ளும் களவொழுக்கம் இவற்றையெல்லாம் தம்மை மறந்து ரசிக்காதார் அவனியில் யாரேனும் உளரோ ? தேடிச் சோறு நிதம் தின்று,…
-
- 0 replies
- 988 views
- 1 follower
-
-
பொதுவாகவே! மனித வாழ்க்கையில் சந்தோசமும் துக்கமும் நிறைந்திருக்கும், சந்தோஷம் வரும்போது சிரித்தும், துக்கங்கள் வரும்போது அழுதும் நமது உணர்வுகளை வெளிப்படுத்துவோம். சிலருடைய வாழ்க்கை எப்போதும் சந்தோஷமாகவே இருக்கும், சிலருடைய வாழ்க்கை எப்பொழுதும் சங்கடமாகவே இருக்கும். " சந்தோஷம் வந்தால் நீயே சிரித்து மகிழ்! துக்கம் வந்தால் என்னிடமும் பகிர்ந்துக்கொள்!" " எங்கேயோ படித்தது இப்போது ஞாபகம் வருகிறது. மனிதன்தான் மனிதனின் உணர்வுகளைப் புரிந்துக்கொள்ளமுடியும். மனிதன்தான் மனிதனுக்கு உதவமுடியும். என்ற எண்ணம் எப்போதும் வேண்டும். காதல், கவர்ச்சி, காமம், சபலம் இவைகள் எல்லாம் மனிதர்களின் மனதில் புதைந்து கிடக்கும் ஏக்கங்கள். இவற்றை எல்லோரும் …
-
- 3 replies
- 986 views
-
-
-
- 1 reply
- 985 views
-
-
ஏனோ ராதா, இந்தப் பொறாமை? பானுமதி.ந டிசம்பர் 29, 2019 தலைப்பு ஒரு பழைய திரைப்பாடலை நினைவூட்டுமென்று நம்புகிறேன். அதில் பழைய தமிழ்ப் பட மரபுப்படி பெண்களே பொறாமை பிடித்தவர்கள் என்பது போலப் பாடல் அமைகிறது. இதே மரபு அன்றைய நாடகங்கள், கதைகள், திரைப்படங்கள் ஆகியவற்றில் எல்லாம் தொடர்ந்தது என்பது 1930களிலிருந்து தமிழ் பொது ஜன ஊடகங்களைக் கவனிப்பவர்களுக்குத் தெரியும். இன்றுமே தமிழ் தொலைக்காட்சிகளின் அவல நாடகத் தொடர்களில் இந்த மரபின் வேறோர் உரு தொடர்வதையும் கவனித்திருப்பீர்கள். இதற்கு மாறாக பொது ஊடகங்களிலேயே தொடர்ந்து வரும் அசல் வாழ்க்கைச் செய்திகளில் பார்த்தால், ஆண்கள் தம் காதல் மறுக்கப்பட்டதால், அல்லது தம்மை மணக்க மறுத்ததால் என்று ஏதோ ஓர் அற்பக் காரணத்தை …
-
- 0 replies
- 982 views
-
-
பாலியல் அத்து மீறல்கள் வா. மணிகண்டன் www.nisaptham.com மிகச் சமீபத்தில் இந்தியாவில் நிகழ்ந்த பெண்களுக்கு எதிரான கொடுமைகள் என்று பட்டியல் எடுத்தால் பயங்கரமாக இருக்கிறது. வன்புணர்ந்து பிறகு தலையில் அடித்துக் கொல்வது, அடையாளம் தெரியாதபடிக்கு பாதி உடலை எரித்துவிட்டு போவது, தூக்கில் தொங்கவிடுவது என்று ஒவ்வொன்றும் குரூரமாக இருக்கின்றன. இவற்றையெல்லாம் வெறும் செய்தியாகப் படித்தால் பெரிதாக பாதிப்பு தெரிவதில்லை. நம் உறவுப் பெண் யாரையாவது அந்த இடத்தில் ஒரு வினாடிக்கு பொருத்திப் பார்த்தால் நெஞ்சுக்குள் மிகப்பெரிய உருண்டை ஒன்று அடைத்துக் கொள்கிறது. இவையெல்லாம் உத்தரப்பிரதேசத்திலும் டெல்லியிலும்தான் நடக்கின்றன என்றில்லை. கொஞ்ச நாட்களுக்கு முன்பாக பெருந்துறையில் பெண் போ…
-
- 1 reply
- 982 views
-
-
சிலாபம் திண்ணனூரான் இவரின் வயது பத்தொன்பது தெமட்டகொடை, ஞானவிமல வீதியில் வசிக்கும் ஜே.எம். ரிகாஸ் ஒரு மாற்றுத் திறனாளி. இவரின் பேச்சு மழலைபேச்சாக இருக்கும் பளிச்சென பிரகாசிக்கும் கொண்ட முகம். எந்தநேரமும் கள்ளம்கபடமற்ற சிரிப்பு அவரின் முகத்தை கௌவிக்கொண்டுள்ளது. குழந்தைப் பருவத்தில் ஏனைய குழந்தைகளைப் போல ஓடி ஆடி விளையாடியவர் இவர். ஆனால், தனது ஐந்து வயதில் அரச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சென்ற தருணத்தில் இவரின் உடலினுள் செலுத்தப்பட்ட ஊசிமருந்த ஒவ்வாமையினால் இவரின் உடலின் சில தாக்கங்களுக்குள்ளானது. அதன் பாதிப்பு இவரின் உடல் வளர்ச்சியை தடை செய்தது இன்று இவரின் முழு உயரம் மூன்று அடிகளும் இரண்டு அங்குலமேயாகும். நடக்க இயலாது. முள்ளந்தண்டு முற்று முழுதாக பழுதாகிவிட்ட நி…
-
- 0 replies
- 981 views
-
-
தத்துவமும் அறிவியலும்: - ஈழத்து நிலவன் - [Friday 2016-03-18 22:00] ஆரம்ப உலகில் அறிவியலும் தத்துவமும் ஒன்றாகவே இருந்தன. நாடோடியாக அலைந்த மனிதன் இயற்கையை நேசிக்க, அவதானிக்க தொடங்கியதிலிருந்தே தத்துவம் பிறந்து விட்டது. இயற்கைக்கும் மனிதனுக்குமான உறவு, இயற்கைக்கு அப்பால் உள்ள உறவு, உலகின் தோற்றம், மனிதனின் பரஸ்பர உறவுகள் குறித்த தேடல் இவை அனைத்தும் தத்துவத்தின் பிறப்பிற்கு ஆதாரமாக அமைந்தன. அறிவியல் உலகை நிரூபணமான உண்மைகளால் அறிய முயற்சித்தது. கடந்து போன அனுபவத்தை தற்கால மனிதன் பரிசோதனை செய்யும் போது அறிவியல் பிறக்கிறது என்றார் விஞ்ஞானி பெய்மென் ஆரம்பகாலத்தில் தத்துவாதியும், அறிவியலாளரும் ஒருவரே. அவர்களுக்குள் ப…
-
- 0 replies
- 981 views
-
-
ஈரானில் ஆண்கள் தமது 13 வயது வளர்ப்பு மகள்மாரை திருமணம் செய்து கொள்வதற்கு அனுமதிக்கும் சட்டமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இச்சட்டமானது அந்நாட்டின் புதிய ஜனாதிபதி ஹஸன் ரோவ்ஹானி தனது மிதவாதக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் முன்னேற்றத்தை எட்டவில்லை என்ற கவலையை தோற்றுவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஈரானிய பாராளுமன்ற உறுப்பினர்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்தச் சட்டம் சிறுமிகள் தமது 13 வயதில் தமது வளர்ப்புத் தந்தையையும் 15 வயதுடைய சிறுவர்களையும் திருமணம் செய்வதற்கு அனுமதியளிக்கின்றது. அதேசமயம் 13 வயதுக்கு குறைந்த சிறுமிகள் தமது தந்தையின் அனுமதியை மட்டுமே பெற்று திருமண பந்தத்தில் இணைய முடியும். ஈரானிய ஜனாதிபதி ரோஹ்ஹானி அமெரிக்க ஜனாதி பராக் ஒபாமாவுடன் முக்கியத்துவமிக்…
-
- 3 replies
- 981 views
-
-
எழுத்தாளர் ஆவது எப்படி- செம ஐடியா வா.மணிகண்டன் ‘எழுத்தாளர் ஆவது எப்படி?’- இந்தக் கட்டுரையை இப்படி ஆரம்பிக்கலாம்தான். ஆனால் ‘இவன் எல்லாம் அறிவுரை சொல்லுமளவுக்கு ஆகிவிட்டான்’ என்று ஏகப்பட்ட பேர் எசகுபிசகாக நினைப்பதற்கு நாமாகவே வழி ஏற்படுத்தி விடக் கூடாது அல்லவா? ஏற்கனவே தத்துவம் சொல்கிறேன் பேர்வழி, அறிவுரை சொல்கிறேன் பேர்வழி, கருத்து சொல்கிறேன் பேர்வழி என்று திரும்பிய பக்கமெல்லாம் தமிழகம் நசநசத்துக் கிடக்கிறது. போதாதற்கு ஒன்றரை கவிதை எழுதியவன், மூன்றரை கதை எழுதியவன் எல்லாம் எழுத்தாளன் என்று சொல்லிக் கொள்கிறான் - இந்தக் கடைசி வரி கண்ணாடியைப் பார்த்து எனக்கு நானே சொல்லிக் கொண்டது. இந்த நிலையில் ‘எழுத்தாளன் ஆவது எப்படியா?’ எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது…
-
- 3 replies
- 980 views
-
-
இணையவழி: கற்றலும் கற்பித்தலும் லோகமாதேவி டிசம்பர் 27, 2020 லோகமாதேவி ஆன்லைன் வகுப்புக்கள் துவங்கி பல மாதங்கள் ஆகிவிட்டதென்றாலும் இன்னும் அதில் எனக்கு நல்ல பரிச்சயமும் பிரியமும் ஏற்பட்டுவிடவில்லை. கரும்பலகையில் எழுதி வருஷக்கணக்காகப் பழகிய கையும் மனமும் இதற்குப் பழகாமல், ஒத்துழைக்காமல் சண்டி பண்ணுகின்றது. மாணவர்களை நேரில் சந்தித்து அவர்களின் கண்களைப் பார்த்தபடி கற்பித்தலில் இருக்கும் மகிழ்வையும் நிறைவையும் 1998’லிருந்து அனுபவித்துக் கொண்டிருப்பவளாதலால், இப்படி கணினி முன்பாக அமர்ந்துகொண்டு தட்டச்சிய கட்டுரைகளையும் குறும்படங்களையும் காண்பித்துக் கற்பிப்பதில் இருக்கும் பொருளின்மையையும் நிறைவின்மையையும் ஒவ்வொரு நாளும் உணர்கிறேன். என்னைப் போன்ற ஆசிர…
-
- 0 replies
- 978 views
-
-
அடிமைகளின் உடல்மொழியும் அதிகாரத்தின் உடல்மொழியும் - ஆர்.அபிலாஷ் · கட்டுரை சமீபமாக பாரதியார் பல்கலைக்கழக (யுவபுரஷ்கார் விருதாளர்களுக்கான) கருத்தரங்கின் போது பேசிய பாரதி கிருஷ்ணகுமார் தான் ஒரு நிகழ்ச்சியில் கால்மேல் கால் இட்டு அமர்ந்ததற்காகக் கண்டிக்கப்பட்ட சம்பவத்தை குறிப்பிட்டார். அப்போது அவர் பொதுவாக அடிமை மனநிலை கொண்டவர்கள் கால்மேல் கால்இடாமல், கால்களை ஏதோ கட்டைகளைப் போல வைத்திருப்பார்கள் எனச் சொன்னார். பிற்பாடு யோசித்தபோது இது ஒரு முக்கிய பார்வை எனப் பட்டது. கால்மேல் காலிடாமல் இருப்பதைப் பற்றி மட்டுமே அவர் சொல்லவில்லை (துணிச்சலான ஒருவர் கால்மேல் காலிடும் விருப்பமில்லாமலும் இருக்கலாம்). எளிய மனிதர்கள் தம் உடல்மொழியினூடாக எப்படி சமூக அதிகாரத்தை எதிர்கொள்…
-
- 1 reply
- 977 views
-
-
இன்றைய அவசர உலகின் சூழ்நிலைக்கேற்றவாறு குடும்பங்களின் வாழ்க்கை முறைகளும் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருக்கின்றது என்பது உண்மை தான்.என்றாலும் ஒரு சில குடும்பங்கள் இதுப் போன்ற எந்த சூழ்நிலையிலும் சிக்காமல் தனித்துவமாக வாழ்ந்து வருகின்றார்கள் என்பதும் ஆச்சரியம் தான்! அவ்வாறு அவர்களால் மட்டும் எப்படி முடிகின்றது என்று பார்த்தால் அவர்கள் தங்கள் குடும்பங்களில் எத்தனைப் பிரச்சனைகள் வந்தாலும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் எந்த சூழ்நிலையிலும் அனைவரையும் மதித்து யாரையும் மாற்ற நினைக்காமல் அப்படியே ஏற்றுகே கொண்டு வாழ்கின்றார்கள் என்று கூறுவது தான் பொருத்தமாக இருக்கும். நமது சொந்த உடலுறுப்புகளே ஒன்ருக்கொன்று வேறு படுகின்ற பொது, குடும்ப உறவுகள் அனைத்தும் ஒரே மாதிரியான மனநிலை…
-
- 1 reply
- 975 views
-
-
தயவுசெய்து பொறுமையாக முழுமையாகப் பாருங்கள். விளங்கும்.
-
- 3 replies
- 975 views
-
-
வணக்கம் அம்மா. நான் 25 வயது ஆண். கல்லூரி முடித்துவிட்டு தற்போது மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். ஓரளவு நல்ல சம்பளம் கிடைக்கிறது. இன்னும் திருமணமாகவில்லை. என்னுடைய பணியில் எந்த ஒரு சவால்களும் இல்லை. மேலும் மன அழுத்தம் தரக் கூடிய அளவுக்கு வேலைப் பளுவும் இல்லை. இந்த மென்பொருள் பணி எனக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. அதனால் சம்பளத்துக்காக மட்டுமே வேலை செய்வதாக எனக்குத் தோன்றுகிறது. இப்போதே வேலையை விட்டுவிடலாமா என்றும் கூடத் தோன்றுகிறது. ஆனால் வீட்டில் அதற்குப் பதில் சொல்லியாக வேண்டும் என்பதால், இப்போதைக்கு இதே வேலையிலேயே தொடரலாம் என்று நினைக்கிறேன். என்னுடைய கவலையெல்லாம் வருங்காலத்தில் நான் என்ன நிலையில் இருப்பேன் என்பதுதான். வருங்காலத…
-
- 2 replies
- 975 views
-
-
கலரைச் சொல்லுங்கள்! காதலைச் சொல்கிறோம்! கலர்புல் சைக்காலஜி நீங்கள் காதலில் கில்லாடியாக இருக்கலாம். எல்லோரையும் வசியப்படுத்தும் கலையும் தெரிந்திருக்கலாம். ஆனால் அந்தரங்க விஷயத்தில் நீங்கள் எப்படிப்பட்ட பர்ஸனாலிட்டி என உங்களுக்கு தெரியுமா? உங்கள் செக்ஸூவல் பர்ஸனாலிட்டியைத் தெரிந்துகொள்ள இதோ லேட்டஸ்ட்டான கலர் சைக்காலஜி. உங்களுக்கு பிடித்த நிறத்தைக் குறிப்பிடுங்கள். உங்கள் அந்தரங்க பர்ஸனாலிட்டியைத் தெரிந்து கொள்ளுங்கள். சிவப்பு: அந்தரங்க விஷயத்தில் நீங்கள் புலி. கற்பனையில் தோன்றுவதை மிகச் சுலபமாக சாதித்து விடுவீர்கள். உங்களுக்கு ஆர்வம் மட்டும் வந்துவிட்டால் அவ்வளவு தான். சுலபமாக அந்த ஆர்வத்தை உங்களால் கட்டுப்படுத்த முடியாது. உங்கள் ஜோடியும் சிவப்பு நிற…
-
- 0 replies
- 974 views
-
-
கந்தர்வக்கோட்டை அருகே காட்டுநாவல் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபு. இவர் சிங்கப்பூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் கண்ணகி என்ற பெண்ணுக்கும் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டன. சிங்கப்பூரிலிருந்து சொந்த ஊருக்கு வந்த பிரபுக்கும், கண்ணகிக்கும் பெற்றோர்கள் உறவினர்கள் முன்னிலையில் காட்டுநாவலில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. கண்ணகியை கரம்பிடித்த பிரபு, திருமண வரவேற்பு நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு, முதலில் வீட்டுக்குச் செல்லாமல், தான் படித்த காட்டுநாவல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு மனைவியை கையோடு அழைத்துச் சென்றார். திருமணக் கோலத்தில், புதுமணத் தம்பதி பள்ளிக்கூடத்துக்கு வருவதை ஆசிரியர்கள் ஆச்சர்யத்துடன் பார்த்தனர். ஆசிரியர்களிடம் தன்னை அறிமுகப்படுத…
-
- 1 reply
- 974 views
-
-
-
அம்மாவிற்காக ஒரு 5 நிமிடம் „heart“-Emoticon #ஒரு வயதான போது, உன்னைக் குளிப்பாட்டி, உணவூட்டி அழகுபடுத்தி மகிழ்ந்தாள். நீ பதிலுக்கு இரவு முழுதும் அழுதாய். #இரண்டு வயதாகையில் உன் விரல் பிடித்து உன்னை நடக்கப் பழக்கினாள். நீயோ அவள் அழைக்கையில் வராமல் முரண்டு பிடித்தாய். #மூன்று வயதாகையில் பாசத்தைக் குழைத்து உனக்காய் உணவு தயாரித்தாள். நீயோ அதை விசிறியடித்து உன் நன்றியைக் காட்டினாய். #நான்கு வயதானபோது வண்ணப் பென்சில்கள் வாங்கி உன்னை மகிழ்வித்தாள். நீ பதிலுக்கு அதைக்கொண்டு சுவரில் கிறுக்கினாய். #ஐந்து வயதானபோது அழகழகாய் ஆடைகள் அணிவித்து மகிழ்ந்தாள். நீயோ பதிலுக்கு சகதியில் புரண்டு அதை அழுக்காக்கி சிரித்தாய். #ஆறு வயதில் அலைந்து அலைந்து நல்ல இடமாய் பார்த்து…
-
- 0 replies
- 972 views
-