சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
இது ஒரு பரீட்சார்த்தமான முயற்சி, வரவேற்பைப் பொறுத்து இதைப்போன்ற பல ஆக்கங்களை வழங்குகின்றேன்... ... கேள்விகளும் கேட்கலாம்.. தெரிந்தவர்கள் பதில் அளிக்கலாம்.... நம் புலத்தமிழர்களிடம் தேவையான அளவு படிப்பறிவு, திறமை இருந்தும் நாம் ஏன் இன்னும் வெற்றியின் உச்சத்தை அடையவில்லை? சிலர் உச்சத்துக்கு சென்றிருந்தாலும் அவர்கள் சமுதாயத்தில் மதிக்க கூடிய நிலையில் இருப்பதில்லை! நல்ல பட்டப்படிப்புகளை படிக்கின்றார்கள்... பின்னர் பார்த்தால் ஒரு கடையை வைத்திருக்கின்றார்கள். திறமை இல்லாததால் தான் என்று நினைத்தால் அது தப்பு. முயற்சி இல்லை என்றும் சொல்ல முடியாது. ஏன் நாம் ஏற்கனவே இருக்கும் தொழிலை, மற்றவர்களால் கண்டு பிடிக்கப்பட்டவையை பாவித்து பணம் சம்பாதிக்க முயற்சி செய்ய வேண்டும்? நாமாக …
-
- 16 replies
- 3k views
-
-
பெண் குழந்தைகள் எப்போதுமே கடவுளுக்கு ஒப்பானவர்கள். தந்தைமார்களுக்கு பெண் குழந்தை என்றாலே எப்போதும் ஒரு தனி பாசம் இருக்கும். தன்னுடைய மகளுக்கென நாள் முழுவதும் அயராது உழைப்பார்கள். கேட்கின்ற பொருளை இல்லை என்று கூறாமல் மகளுக்காக பார்த்து பார்த்து செய்யக்கூடியவர்கள் தந்தை. தந்தையர் தினம், அன்னையர் தினம் போன்றவை அன்னை மற்றும் தந்தையின் அன்பை போற்றும் நாளாக இருப்பது போல், மகள் என்ற புனித உறவின் அன்பை வெளிப்படுத்தும் ஒரு நாளாக குடும்பத்தினருடன் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. பல நாடுகளில் பெண் குழந்தைகளை சுமையாக தான் பார்க்கிறார்கள். ஆண் குழந்தைக்கு கொடுக்கப்படும் சம உரிமை பெண் குழந்தைக்கு கிடைப்பதில்லை. ஆண் – பெண் சம உரிமையை நிலை நாட்டும் வகையில், சில நாடுகளின் அரசுகள் மகள்கள…
-
- 0 replies
- 587 views
- 1 follower
-
-
ஆண்கள் தங்களது உணர்ச்சிகளை வெளியே கொட்டாமல் அடக்கிக் கொள்கிறார்கள்.அதனால் பல பிரச்சினைகள் என்றும் ஒரு தகவலை படித்தேன்.உண்மையில் கோபமோ,ஆத்திரமோ எந்த உணர்வும் உள்ளேயே அடக்கப்படுவது நல்லதல்ல.இருந்தும் ஏன் வெளியே கொட்டுவதில்லை? காரணம் சாதாரணமானது.அள்ளிக்கொள்ள ஆளிருந்தால் கொட்டுவார்கள். ஆண் தனக்குள்ளேயே முடங்கிப்போவது அதிகம்.பெண்களுக்கு இந்த பிரச்சினைகள் குறைவு.பெரும்பாலும் எல்லாவற்றையும் வெளியே சொல்லி விடுகிறார்கள்.அம்மா,சகோதரிகள்,தோழிகள் என்று அவர்களுக்கு நெருக்கமான உறவுகள் அதிகம்.ஆனால் ஆணுக்கு அப்படியெல்லாம் இல்லை. சகோதர உறவு என்பது முக்கியமானது.பெண்களைப்போல ஆண்களுக்கு இது அமைவதில்லை.சண்டை …
-
- 10 replies
- 1.8k views
-
-
இந்தியாவுக்கு இல்லாத துணிவு ஆப்பிரிக்க நாடான ஐவரி கோஸ்ட்டுக்கு இருக்கிறது. ஆம், சிவப்பழகு கிரீம், பவுடர் வகைகளுக்குத் தடை விதித்திருக்கிறது. கூடவே, கருப்பழகின் முக்கியத்துவத்தை உணர்த்தி, பிரச்சாரத்திலும் இறங்கியிருக்கிறது. நாடு முழுவதும் கருப்பழகு விளம்பரத் தட்டிகளும் பதாகைகளும் மிளிர்கின்றன. சிவப்பழகூட்டிகளால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் சிவப்பு அல்லது வெள்ளைதான் அழகு, கருப்பு அழகிய நிறமல்ல என்ற பரவலான தப்பபிப்பிராயத்தைக் குறைக்கும் வகையிலும் இந்த நடவடிக்கை அமைந்திருக்கிறது. நம் நாட்டைப் போலவே, ஆப்பிரிக்கச் சந்தையிலும் சிவப்பழகூட்டிகளின் ஆக்கிரமிப்பு அதிகம். உலக சுகாதார நிறுவனம் தரும் புள்ளிவிவரத்தின்படி நைஜீரியர்கள்தான் இதி…
-
- 0 replies
- 572 views
-
-
-
சீதனம் - பெருகும் பிரச்சனை நமது ஊரில் சீதனம் பெரும் பிரச்சனை தான்.... இப்போது வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதால் ஓரளவுக்கு பெரிதாக தெரிவதில்லை. அண்மையில் நண்பர், இலங்கையில் மருத்துவம் முடித்தவர். அவருக்கு ஒரு நகைக்கடை வியாபாரி, மகளை கட்டி வைத்து, கொடுத்த சீதனத்தினை கேட்டால், அவர் வேலையை விட்டு வீட்டில் காலாட்டிக் கொண்டு இருக்கலாம் என்று நினைக்க தோன்றுகிறது. கந்தர்மடத்தினை சேர்ந்த ஒரு மொறட்டுவையில் பொறியியல் படித்தவருக்கு, இருப்புக்கடைக்காரர், கொடுத்த சீதனம், மயக்கம் போடும் ரகம். படித்தால் காசு என்று நினைகிறார்கள். பெண் தகுதியானவளா என்று நினைப்பதில்லை. யாழில் புகழ் மிக்க ஒரு தியேட்டர் முதலாளி, மகளுக்கு டாக்டர் வேண்டும் என்றாராம். வந்தார் ஒரு டாக்டர்…
-
- 3 replies
- 817 views
- 1 follower
-
-
எங்கள் சமுதாயம் முன்னேற வேண்டுமாயின்; பல்கலைக்கழகப் புத்திஜீவிகளின் பார்வைப் புலம் விரியவேண்டும் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-06-04 14:31:11| யாழ்ப்பாணம்] 02.06.2010 அன்று வலம்புரியில் வெளியான ஆசிரியர் தலையங்கம் தொடர்பில் யாழ்ப்பாணப் பல் கலைக்கழக மருத்துவபீடத்தின் சிரேஷ்ட விரிவுரை யாளர் வைத்திய கலாநிதி செல்வம் கண்ணதாசன் அவர்கள் எழுதிய கட்டுரை இங்கு பிரசுரிக்கப்படு கின்றது.-ஆசிரியர் மீண்டுமொருமுறை எனது உணர்வுகளை உங்களுடன் பகிர்ந்துகொள்வதற்கு வழிவகுத்த வலம்புரி ஆசிரியர் தலையங்கத்திற்கு நன்றிகூறக் கடமைப்பட்டுள்ளேன். 02.06.2010 அன்றைய ஆசிரியர் தலையங்கம் எம் சமூகத்தைக் காக்கப் பல்கலைக்கழகப் புத்திஜீவிகளிடம் இறைஞ்சி நிற்கிறது. நானும் ஒரு பல்கலைக்கழக ஆசிரியன் என்ற…
-
- 0 replies
- 1.3k views
-
-
நீங்கள் விரும்பிக் குடிக்கும் பானம் எது?...தேநீரா,கோப்பியா,பாலா,குளிர்பானமா அல்லது மதுவா?...காலையில் எழும்பியவுடன் எனக்கு கோப்பி குடிக்கா விட்டால் அதுவும் ஊர் கோப்பி குடிக்கா விட்டால் எனக்கு பொழுது விடியாது[விரத நாட்களில் காலையில் நான் கோப்பி குடிக்காமல் இருப்பதற்காகவாவது கடவுள் எனக்கு வரம் தர வேண்டும்.] பின்னேரங்களில் பெரிதாக தேநீர் குடிப்பதில்லை கடுமையான குளிர் என்டால் மாத்திரம் வெறும் தேநீர்[பிளேன்]குடிப்பதுண்டு ஆனால் இரவு படுக்கு முன் பச்சை தேநீர் குடிப்பேன்கீரின்]அது குடித்தால் சாப்பாடு கெதியாக சமிபாடு அடைந்த மாதிரி இருக்கும். வெயில் காலம் என்டால் குளிர்பானம் குடிப்பேன்...எனக்கு பிடித்தது லெமனேட்[தேசிக்காயும் உடம்புக்கு நல்லதாமே!] முந்தி எனக்கு கோக் குடிக்க …
-
- 62 replies
- 6k views
-
-
Innovation distinguishes between a leader and a follower - Steve Jobs கடந்த இரண்டு வருஷமாக என்னைச் சுற்றி இயங்கும் உலகத்தை மீண்டும் ஒருமுறை நினைத்துப் பார்க்கவைத்தது இன்று வந்த ஆப்பிள் உலகின் பிதாமகர் Steve Jobs இன் மறைவு. அலுவலகம் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் வேளை என் iPhone வழி வந்த செய்திதான் இவரின் மரணச் செய்தியைக் காவிவந்தது. அந்த நேரம் மேலதிகாரிகளும் பக்கத்தில் இருந்ததால் உடனே அந்தச் செய்தியைக் கவலையோடு பகிர்ந்தேன். எல்லோர் முகத்திலும் ஒரே சமயம் சட்டென்று ஒட்டிக்கொண்ட துயர ரேகைகளைக் காண முடிந்தது. வேலை ஒருபக்கம் பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்தாலும் இவரின் இழப்பை ஏற்க ஒப்பாமல் மனம் அலைபாய்ந்தது. மதிய உணவுக்குப் பின்னான நடைப் பயிற்சியின் போது சிட்னியின் நகரப்பகு…
-
- 4 replies
- 1.3k views
-
-
வெளிநாட்டுக்காரன்..!!! இத்தனை வருட வெளிநாட்டு வாழ்க்கையில் ஒரு பிரயோசனமும் இல்லை என்று சொல்பவர்களுக்கு.. ஒரு கப் அரிசிக்கு 2கப் தண்ணீர் ஊற்றவேண்டும் என்று படித்தது இங்கேதான். நாம சாப்பிட்ட,குடிச்ச பாத்திரத்தை நாம்தான் கழுவிவைக்கவேண்டும் என படித்ததும்இங்கேதான். எந்த உணவு சாப்பிட்டாலும் அதில் உப்பு இல்லை,காரமில்லை சுவையில்லை என குறை சொல்லகூடாது என்றும் படித்ததும்இங்குதான். வாழ்க்கையில் சரியான நேரத்திற்கு அலாரம் வைத்துஎழுந்திருக்கவும், உறங்கவும் படிச்சதுஇங்கேதான். சத்தம் இல்லாமல் கதவை மூடவும் திறக்கவும் படித்தது இங்கேதான். த…
-
- 0 replies
- 340 views
- 1 follower
-
-
புத்தகங்களின் எதிர்காலம் 2019 - ஷான் கருப்பசாமி · கட்டுரை ஏப்ரல் 23 உலக புத்தக தினம். புத்தக வாசிப்பை ஊக்குவிக்க யுனெஸ்கோஅமைப்பால் ஏற்படுத்தப்பட்ட தினம். புத்தகங்களின் அருமை குறித்து நினைவுகூர்ந்து பல நண்பர்கள் பதிவிடுவதைக் காண முடிகிறது. அதே நேரத்தில் இன்னும் சில ஆண்டுகளில் புத்தகங்கள் வாசிப்பதையே மக்கள் நிறுத்தி விடுவார்களோ என்ற பொதுவான ஒரு அச்சம் இங்கே நிலவுவதையும் உணர முடிகிறது. உண்மையிலேயே புத்தக வாசிப்பு குறைந்திருக்கிறதா, அப்படிக் குறைந்திருந்தால் அது குறித்து அறிவார்ந்த சமுதாயம் என்ன செய்ய வேண்டும், புத்தகங்களின் எதிர்காலம் என்ன என்பது போன்ற உரையாடல்கள் இந்தக் காலகட்டத்தில் அவசியமானவை. நெட்ஃபிளிக்ஸ், கணினி விளையாட்டுகள், யூடியூப், ஸ்ம்யூல், ட…
-
- 2 replies
- 1.1k views
-
-
சென்னை சோழிங்கநல்லூரில் அகரம் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற சூர்யா, உணர்ச்சிவசப்பட்டு மீண்டும் கண்கலங்கினார். சென்னை சோழிங்கநல்லூர் சத்யபாமா கல்லூரி வளாகத்தில் “அகரம் அறக்கட்டளை 10 ஆண்டுகளாக கடந்து வந்த பாதை” என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நடிகர் சூர்யா, அவரது தந்தையும் நடிகருமான சிவக்குமார், அவரது சகோதரரும் நடிகருமான கார்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அகரம் நிர்வாகிகள் மற்றும் அறக்கட்டளையின் மூலம் பயின்று வரும் மாணவர்கள் 3 ஆயிரம் பேரும் நிகழ்வில் பங்கேற்றனர். முதலாவதாக பேசிய நடிகர் சிவக்குமார், எத்தனை படங்கள் நடித்து கோடி கோடியாய் சம்பாதித்தாலும் அகரம் தான் சூர்யாவின் அடையாளம் என்றும், உழவன் பவுண்டேசன் தான் கார்த்தியின் அடையாளம் என்…
-
- 1 reply
- 1.1k views
-
-
கணவரிடம் இதை மட்டும் சொல்லாதிங்க…! August 19, 2008 கணவன்-மனைவி இடையே எந்த ரகசியமும் இருக்கக் கூடாது. இருவரும் ஒருவரை ஒருவர் அகமும் புறமும் அறிந்திருக்க வேண்டுமென்று பொதுவாகச் சொல்வார்கள். ஆனால் அப்படி திறந்த புத்தகமாக இருக்காதீர்கள், அது நன்மையை விட தீமையைத் தான் அதிகம் ஏற்படுத்தும் என்கிறார்கள் உளவியல் நிபுணணர்கள். தம்பதிகள் காக்கும் தலையாய ரகசியங்களாக அவர்கள் கூறும் விஷயங்கள். பழைய நட்பு, காதல்… திருமண வாழ்க்கை மீதும், புதிதாக வாழ்வில் இணைந்திருக்கும் கணவர் மீதும் அளவற்ற மரியாதை வைத்திருக்கும் பெண்கள், தங்களின் முந்தைய காதல், நட்பு பற்றி வெளிப்படையாகச் சொல்ல வேண்டும், இல்லற வாழ்க்கையை ரகசியங்களுடன் ஆரம்பிக்கக் கூடாது என்று நினைக்கிறார்கள். ஆனால் அது வேலை…
-
- 29 replies
- 10.3k views
-
-
டெல்லி மாணவி அமானத்'தின் மரணத்துக்காக உலகம் முழுவதும் கண்ணீர் விடுகிறது.மாணவிக்கு நடந்த கொடுமையின் கொடூரம் என்னவென்று அனைவருக்கும் தெரிந்தமை தான் இந்த கண்ணீர்கள்,அஞ்சலிகளுக்கு காரணம்.பாலியல் வன்புணர்வாளர்கள் சமூகத்தில் எத்தகைய கொடூரமானவர்கள் என்கின்ற உண்மை இப்போது தான் பலருக்கு உறைத்திருக்கிறது. அவரவர் குடும்பங்களில் நடந்தால் தான் இதனை விட அந்த வலியின் தாக்கம் எத்தகையது என்பது புரியும். இது போன்ற எத்தனையோ சம்பவங்கள் தினசரி இலங்கையிலோ இந்தியாவிலோ,உங்கள் பிரதேசமோ எங்கள் பிரதேசமோ,அனைத்து இடங்களிலும் வெளியே தெரியவராமல் கூட நடந்தேறிக்கொண்டிருக்கின்றன. இன்றைய பத்திரிகையை விரித்தால் மண்டைதீவில் நான்கு வயது சிறுமி,வட்டுக்கோட்டையில் பதினைந்து வயது சிறுமி,அனுராதபுரத்தில் பௌத்த த…
-
- 4 replies
- 1.1k views
-
-
அகமண முறையும் சாதியை அழித்தொழித்தலும் by vithaiApril 14, 2021 “திருமணத்தில் மட்டும்தான் சாதி பார்க்கிறோம்” என்று சாதிய மனநிலையை மறைக்கும் சப்பைக்கட்டுகளையும் புரட்டையும் அவதானிக்கிறோம். இக்கருத்து அகமண முறையினைத் தொடர்ச்சியாகப் பேணுவதற்குரிய தற்கால மொழித்தந்திரங்களில் ஒன்று. அகமணம் (Endogamy) என்பது, ஒரு குறிப்பிட்ட சமூகக் குழு, வகுப்பு, வர்க்கம் அல்லது இனப்பிரிவுகளுக்கு உள்ளேயே மணம் செய்து கொள்ளும் முறையைக் குறிக்கிறது. சாதிப்பிரிவுகள் காணப்படும் இந்தியா , இலங்கை போன்ற நாடுகளில் சாதி ஒரு அகமணக் குழுவாகத் தொழிற்படுகிறது. தமிழர்களைப் பொறுத்த வரையிலும் கூடப் பெரும்பாலும் சாதி அகமணக் குழுக்களாகவே தம் சமூகத்தை உருவாக்கியுள்ளனர். மேலைநாடுகளில் சாதிப்பிர…
-
- 0 replies
- 1.1k views
-
-
நாக்கு சுட்டு சேர்க்கும் முட்டாள்தனம் நாவுக்கு ருசியாக சாப்பிடுவதற்கு ஒன்றுமே கிடைப்பதில்லை, அசைவத்தை கண்டு பல நாள்களாகின்றன என புலம்பிக்கொண்டிருப்போர் இருக்கையில், இருப்பதை வைத்து சமாளித்து வாழ்க்கையை நகர்த்துவோரும் இருக்கத்தான் செய்கின்றனர். இன்னும் சிலர், நாக்கு செத்துவிட்டது என்பர். வீடுகளில் பெரியவர்கள் ஒன்றுக்கூடிய ஏதாவது, நல்லவிடயங்கள் தொடர்பில் கதைத்துக்கொண்டிருக்கும் போது. பல்லிகள் சீச்சிட்டால், “பார்த்தாய்தான் பல்லியே சொல்லிவிட்டது” என்பர்; யாராவது தும்மிவிட்டாலும், அதனையே அனுமதிக்கான குறியீடாக எடுத்துக்கொள்வர். ஆனால், அதிர்ஷ்டலாபச் சீட்டில், ஒரு கோடி ரூபாய் பரிசு கொட்டப்போகிறது என, வீட்டுக்குள் ஒருவர் கூறும்போதுக்கூடக், தவறுதலாக யாராவது தும்மி…
-
- 0 replies
- 622 views
-
-
உங்களிடம் தன்னம்பிக்கை இருக்கிறதா? கண்டுபிடிக்க ஒரு சுய பரிசோதனை வெற்றியின் ஆணிவேர் தன்னம்பிக்கை. உங்களிடம் தன்னம்பிக்கை மிகுந்திருந்தால் நீங்களும் வெற்றியாளராக வலம் வரலாம். உங்கள் தன்னம்பிக்கையை சோதிக்க ஒரு சுய பரிசோதனை இங்கே… உங்கள் உடல்வாகு எப்படிப்பட்டது? அ. எனது உடல் அழகான `ஸீரோ சைஸ்’ கொண்டது. அதில் எனக்கு திருப்திதான்! ஆ. மேனியழகு பொலிவாகத்தான் இருக்கிறது. இன்னும் வசீகரிக்கும் தோற்றமுடன் எனது உடலை வைத்துக்கொள்ள விரும்புகிறேன். இ. மக்கள் நான் வசீகரிக்கும் வனப்புடன் தோன்றுவதாகக் கூறுகின்றனர். ஆனால் நான் அப்படி நினைப்பதில்லை! நீங்கள் வெகுநாள் விரும்பிய முக்கிய மனிதரை எதிர்பாராத விதமாக சந்திக்கிறீர்கள்? அப்போது… அ. நானே முதலில் பேச்சைத் தொடங்கி அவருக்கும், எனக்க…
-
- 5 replies
- 1.2k views
-
-
-
எச்சில் துப்புவது ஏன் மோசமானது? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கால்பந்து விளையாட்டு வீராங்கனையாக இருந்து, தொலைக்காட்சி நிகழ்ச்சியாளராக மாறிய ஜேமி காராகர், தன்னை கோபமூட்டிய காரில் இருந்த ஒரு குடும்பத்தை நோக்கி எச்சில் துப்பிய காணொளிக்கு எதிராக மக்கள் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர். படத்தின் காப்புரிமைGETTY IMAGES 'ஸ்கைய் ஸ்போட்ஸ்' ஆய்வாளர் வேலையில் இருந்து காராக…
-
- 0 replies
- 1k views
-
-
மஞ்சள் காமாலையால் துன்புற்றபோது, சுய ஆய்வை தொடங்கி, ஆபாசப்படங்களுக்கு அடிமையாகி இருந்ததில் இருந்து மீண்ட கதை. https://www.bbc.com/tamil/india-46573760
-
- 0 replies
- 1.6k views
-
-
-
- 2 replies
- 1.4k views
-
-
-
திருமணம் - ஒரு மோசமான ஒப்பந்தம் .. அன்புள்ள ஆண்களே.., இது எல்லா ஆண்களுக்கும் அல்ல... பெரும்பாலான ஆண்களுக்கானது... நவீன திருமணம் உங்களுக்கு பயனளிக்காது. திருமணம் என்பது பெரும்பாலும் ஆண்களுக்கு ஒரு மோசமான ஒப்பந்தம், பல திருமண கதைகள் பலருக்கு கொடூரமான யதார்த்தத்தை மட்டுமே எடுத்துக்காட்டுகின்றன. ஒரு மனிதன் தனது முழு வாழ்க்கையையும் தியாகம் செய்வதில் செலவிடுகிறான் - நீண்ட நேரம் வேலை செய்தல், பள்ளிக் கட்டணத்தைச் செலுத்துதல் மற்றும் தனது குடும்பத்திற்கு வசதியான வாழ்க்கையை வழங்குதல். அவர் தனிப்பட்ட இன்பங்களைத் துறந்து, தனது கனவுகளைத் தள்ளி வைத்து, தனது குழந்தைகள் வெற்றி பெறுவதை உறுதி செய்வதற்காக தன்னிடம் உள்ள அனைத்தையும் கொட்டுகிறார். தன்னைச் சுற்றி அன்பு மற்றும் விசுவாசத்தின் …
-
- 1 reply
- 462 views
-
-
இலங்கையில் கட்டாய திருமணத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் சிறுமிகள் Image captionதிருமணத்தை தடுப்பதற்காக தனது கைகளை இவர் வெட்டிக்கொண்டுள்ளார் இலங்கையில் சட்டபூர்வ திருமண வயது 18. ஆனால், பல தசாப்த காலமாகத் தொடரும் இந்தச் சட்டத்தின் கீழ் முஸ்லிம் சிறுமிகள் முன்னதாகவே திருமணம் செய்யலாம். இந்தச் சட்டத்தை நீக்குமாறு கோரிக்கைகள் வலுத்துவரும் நிலையில், தனது விருப்பத்துக்கு மாறாக கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்ட ஒரு சிறுமியை பிபிசி சிங்கள சேவையின் சரோஜ் பத்திரன சந்தித்தார். 15 வயதாக இருக்கும் போது சாஃபாவுக்கு கட்டாய திருமணம் நடந்தது. ''பரீட்சைக்கு படிக்கும் போது ஒரு பையனுடன் எனக்கு காதல் வந்தது.'' என்று கண்ணீர் வழிய சாஃபா கூறினார். '' என…
-
- 0 replies
- 626 views
-
-
வா மணிகண்டன் நாய்க்குட்டி ஒன்று வீட்டுப்பக்கமாக சுற்றிக் கொண்டிருந்தது. இந்த ஊரில் தெரு நாய்களுக்கு பஞ்சமே இல்லை. வருடத்தில் முக்கால்வாசி மாதங்கள் குளிராகவே இருக்கிறது. குளிரடிக்கும் மாதங்கள் எல்லாம் மார்கழி என்று நினைத்துக் கொள்கின்றன போலிருக்கிறது. வதவதவென பெருகிக் கிடக்கின்றன. இப்படி பெருகிக் கிடந்தாலும் பெங்களூர் கார்பொரேஷன்காரர்கள் கருணை மிகுந்தவர்கள். அலேக்காகத் தூக்கிக் கொண்டு போய் திரும்பக் கொண்டு வரும் போது காது நுனியை கத்தரித்துவிட்டிருப்பார்கள். அப்படியென்றால் ‘சோலி’யை முடித்துவிட்டார்கள் என்று அர்த்தம். ஆனால் சோலி முடிக்கும் விகிதத்தை ஒப்பிடும் போது நாய்களின் பர்த் ரேட் பல மடங்கு அதிகம் போலிருக்கிறது. அதனால்தான் இத்தனை குட்டிகள். இரவு பத்து மணிக்கு ஆரம்பி…
-
- 3 replies
- 1.4k views
-