Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. முள்ளிவாய்க்கால் முழங்கிய போது மெளனித்துக் கிடந்தாரே... முத்துக்குமார்கள் தீப் பிடித்து எரிந்த போதும் சும்மா கிடந்தாரே.. பூமிப்பந்தில் புனிதராம் மனித உரிமை காப்பவராம்.. வெள்ளாடு வேடம் போட்டு சமாதானம் பேசியே கழுத்தறுக்க அலையும் அந்தக் குள்ள நரிகள் அவர் தம் கொட்டம் அடக்க வெடித்தேன். வன்னி மக்களை சொந்த உறவுகளை விடுதலை.. எரிமலை என்று உசுப்பேத்தி.. போர்க்களம் ஏவிவிட்டு அவர் தம் கதை முடித்து தாம் அசைலம் அடித்து.. இன்று... எதிரி வானில் அவன் விமானத்தில் உல்லாசம் போக நினைத்த ஈனத்தமிழர்களின் ஈவிரக்கமற்ற செயல் கண்டு நெஞ்சு குமுறி வெடித்தேன்.. போட்ட ரிக்கட்டுகளுக்கு பொக்கட் காசு கூட கிடைக்கக் கூடாதென்றே. பூமி …

  2. எனது மரணம்: முதலாவது அறிக்கை இப்போதெல்லாம் மரணம் பற்றிய எண்ணங்கள் அடிக்கடி வருகின்றன பல தடவை மரணத்தின் கற்பூர வாசனை (இடையில் சாணி வாசனையும் வரும்) என்னருகே வந்தும் உள்ளது மரணம் நேற்று காபி கடையில் (Starbucks) நான் ஒடு cup காபிக்காக காத்திருக்கையில் என் பக்கம் வந்து அமர்ந்திருந்தது எதுவும் பேசாமல் அதன் கண்ணின் ஓரம் நீர் துளி இருந்தது திடீரென ஒரு Right turn இல் என் car திருப்புகையில் மரணம் என் பக்கத்து seat இல் அமர்ந்திருந்தது என்னை கேள்வி கேட்குமாய் அதன் முகம் இருந்தது பின் அந்த இரவில் சரியாக நடுச் சாமத்தில் மனைவியை தேடி கைகள் போகையில் அருகே மரணம் படுத்திருந்தது இம்முறையும் ஒற்றை வார்த்தையும்…

  3. கோப்பையில் குடியிருக்கும் என் வாழ்வு பற்றிய புரிதல் நிரப்பி முடிக்க இனி ஒன்றும் இல்லை எல்லா glass களிலும் நிரம்பித் தளும்புகின்றது மது முதலில் சின்ன எரிச்சலுடன் இறங்குகின்றாள் தேவதை ஆடை கழற்றி அணங்கு ஆடுவது போன்ற பிரமை உடலின் நரம்பெங்கும் உலவுகின்றது ஒவ்வொரு முடிச்சுகளிலும் சொர்க்கம் ஒவ்வொரு உறிஞ்சல்களிலும் அற்புதம் வெற்று glass களிலும் மிச்சமிருக்கின்றது ஒருவனின் வாழ்வு பற்றிய புரிதல் ************ கடந்த வருடம் என் glass களில் இன்னேரம் மரணம் நிரம்பியிருந்தது மரணச் செய்தியால் என் வாழ்வுக் கிண்ணம் நிறைந்திருந்த காலம் அது என் நண்பர்கள் என் மருமக்கள் என் உறவுகள் என்று கொத்தாய் அழிந்த காலம்…

  4. அன்னையர் தினம் அண்மித்துவரும் இந்நாட்களில் நான் அண்மையில் படித்துச் சுவைத்த அன்னையர் தினக்கவிதை ஒன்றை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். எழுதியவர்: வி.ஜீவகுமாரன் அன்னையர்தினம் கொஞ்சம் ஓவரடா! உங்கள் அம்மா பாசங்கள் கொஞ்சம் ஓவரடா! உங்கள் அம்மா பாட்டுக்கள் அதனால்தான் சொல்லுகின்றேன் கொஞ்சம் அடக்கி வாசியுங்கள் எதுவரை இந்தப் பாட்டுக்கள்...உனக்கொருத்தி வரும்வரைதானே... "அம்மா கொஞ்சம் பேசாமல் இருக்கிறியளே! அவள் சொல்லுறதையும் கேளுங்கோவன்" இங்குதான் அம்மா உறவு ஆட்டம் காணும்! அம்மணியின் அரசாட்சி கோலோச்சும்! ஜயா நீ அவுட்...! நீ எழுதிய கவிதைகளும் அவுட்!! மீறினால் தலையணை நனையும்! சாப்பாட்டில் உப…

  5. எனக்கு உன்னைப் பிடிக்கவில்லை உன் மீது எனக்குப் பொறாமை உன் பதவி மீதும் எனக்கு ஆசை நீ வாழும் மாளிகை எனக்கு வேண்டும் என உரைத்தான் ஒரு மானிடன் காது கொடுத்துக் கேட்டேன் கதைத்தது தமிழன்தான்.... எனக்குச் சுதந்திரம் வேண்டும் நீ அழிந்தால்தான் எனக்குக் கிடைக்கும் என்னுடைய உரிமை வெல்லுவேன் உன்னுடைய உரிமையைப் பறித்து இங்கும் ஒரு குரல், இவன் உரைப்பதெல்லாம் தன்னைக் கொன்றுவிட்டு, ஏனெனில் எமக்கென்று நினைக்க மாட்டா அவனும் தமிழனே.... தமிழனுடன் சேர்ந்திடின் சோர்வு எனக்கு ஒன்று சேர நினைப்பதெல்லாம் சிங்கம் ஈன்ற பரம்பரையுடனே செத்திடினும் சோறு போடுவர் அவர்கள் இந்தக் குரலுக்குரித்தவன் வ…

  6. தமிழ் நிலவன் கைக்கூ கவிதைகள்: காதல், தமிழ் தேசியம், தமிழின உரிமை.... சூரியனா உன் விழிகள் அது சுட்ட வலி என் இதயத்தில் தெரிகிதே..... -------அவள் பார்வை... --------------- நீ என்ன பாண்டியனின் வாரிசா நீ இதயத்தில் அடித்த வலி என்முழுதும் ரணத்தின் தடங்களாய்.... -------காதலினால் மனவலி.... -------------- நீ பார்த்தாய் பரவசமானேன் நீ பேச வானில் பறந்தேன் இன்றோ பள்ளத்தில் நீ எனை நீங்கியதால்... ------காதல் தோலவி.... ---------------- ஓட்டியை தொலைத்துவிட்டு பல தலை(வர்)களின் உரிமைப்போரில் சிக்கித் தவிக்கும் ஓடம் -------தமிழ்த் தேசியம்... --------------- ஒரு வரி தமிழிலக்கியம் உரிமைப் ப…

  7. நிமிர்வாய் தமிழா. http://kuma.lunarservers.com/~pulik3/2010/03.2010/27.03/Kavithai.mp3 http://www.pulikalinkural.com/

  8. மேலும் ஒரு முயற்சி தமிழ் நிலவன் - கைக்கூ கவிதைகள் புத்தர் சிலைக்கு நடுக்கல் நடாதீர்கள் நாம் கீழே புதைந்து கிடக்கிறோம்.. -----முள்ளிவாய்க்கால் புதையுண்ட குழந்தைகள் ------------------------ மாவீரர் கல்லறைக்கென்று பெருமைப்பட்டோமே நாம் இன்று அங்கே ஆடுகள் உறங்க்குகிறதே...! ------கார்த்திகைப்பூ ----------------------- புதைந்த உடல்களுக்கருகில் எங்களால் உறங்கமுடியவில்லை எமை சிறைமீட்க வாருங்கள்....! ------துப்பாக்கிகள் தமிழ் நிலவன்....

  9. உன் கூந்தலுக்கு அழகு என வாங்கினேன் மல்லிகைப்பூ, தென்றலே நீ கொடுத்தாய் ஒரு மாபெரும் வெறுப்பு நீ நடந்தாய் அழகாக நான் சொன்னேன் என் விருப்பு, நடந்த உன் பாதம்தனில் நீ எடுத்தாய் செருப்பு உன் முத்துப் பல் தெத்துப் பல் அழகினை காட்டியதுன் சிரிப்பு, எடுத்துச் சொன்னேன், உன் அப்பன் கொண்டுவந்தான் பிரம்பு. நீ பிறந்த அந்நாளில் யாவருக்கும் நீ கொடுத்தாய் இனிப்பு, எனக்கு மட்டும் நீ கொடுத்தாய் நா தாங்கா ஒரு உறைப்பு. என் காதல் நீ அறிய நான் மிதித்தேன் நெருப்பு, நீ சொன்னாய் உன்னிடம் இதுவெல்லாம் வேகாத பருப்பு. உன் மீது நான் கொண்ட காதலால் அடைந்தேன் வெறுப்பு நீ உணர்ந்தாய் காதலையே நான் அடைந்தேன் மலைப்பு. எம் காதல் கதை…

  10. ஈழத்து எழுத்தாளர்களில் கைக்கூ ரகக் கவிதைகள் அதிகம் எழுதுபவர்கள் இல்லையென்ற ஓர் கருத்தை ஓர் இணையத்தளத்தில் பார்த்தேன், ஏன் அதை முயற்சித்துப்பார்க்கக்கூடாது என்ற ஓர் முயற்சி இது.... எனது முதன் முதல் கைக்கூ கவிதைகள் சில... துரோகிகள் உரமிட்டு நெல் விதையிட்டு பார்த்திருந்த ஓர் விளை நிலத்தில் விளைச்சலைப் பாழ்படுத்த முளைத்த சில முட் செடிகள்....! --------------- பெண்புலிகள் அவலம் துப்பாக்கி காட்டி துரத்திய மிருகத்தின் வாயில் துர்ப்பாக்கியமாய் இன்று அவளின் முலைக்காம்புகள்... ------------- பெண்ணின் விழிகள் உடல்காயம் தராமல் உள்ளிருக்கும் இதயத்தை குளிர்விக்கும் அல்லது கூறுபோடும் இரு மந்திர வாள்கள்....

  11. நீ இறந்த காலம் நான் நிகழ் காலம் நாம் எதிர் காலம் தமிழே நீ நலமா... அமுதே என்றுன்னை அழைத்தோமே- இன்று அழுதே உன்னைப் பார்க்கின்றோம் உன்னைப் போற்றிட்ட காலம் இறந்தது தாயே மண்ணைப் புகழ்ந்திட்ட ஞாலம் மறைந்தது அம்மா விண்ணைச் சென்றவர் விரைந்திட்ட போதும் பொன்னைப் போன்றவர் கனாவை நிகழ்த்திட அருள் செய்... தமிழே நீ நலமா... தவித்தவருக்கு தானம் செய்திட்ட தாயல்லவா நீ- இன்று அவித்த ஒரு வேளைச் சோற்றிற்கேங்கும் சேயினைக் கண்டாயோ என்னைப் பாருங்கள் ஒரு செயலற்ற பாவி நான் கண்ணைக் கொண்டந்த காட்சி பார்த்தும் திண்ணை விட்டகல திராணியும் இல்லை மண்ணை மீட்டெடுக்க என்னுள் மறவனுமில்லை தமிழே நீ நலமா... சென்றவிடமெல்லாம் வீரவாகை சூட்டிய மறவனன்றோ உன் மகன் - இன்…

  12. http://3.bp.blogspot.com/_JwDEbzlHuBY/SRGYiNwz-JI/AAAAAAAAFAc/ft_g-a6Ut8Y/s1600-h/image001-728569.jpg http://3.bp.blogspot.com/_JwDEbzlHuBY/SRGYiWfivZI/AAAAAAAAFAk/d0PWZLF74GI/s1600-h/image002-729153.jpg

  13. ஸ்ரீலஸ்ரீ (இரானிய) கிருஷ்ண பகவானுக்கும், திரு (தமிழ்) குளவிக்கும் இடையில் ஒரு உரையாடல். (நான் என்பாட்டில் பறந்து திரிந்த போது, எனக்கு முன்னாள் தமிழ் கடை காலண்டராக பார்சி கிருஷ்ணர் தோன்றினான்) "எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது" 'அப்ப உண்ட 6 வயசு மகளை ஒம்பது காடையர் சேர்ந்து கற்பழித்தால் நல்லது எண்டு சொல்லுவியே?' "எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது" 'அப்ப உண்ட பேர்ல(ஸ்ரீ) சிங்களவன் நாற்பது இலட்சம் திராவிடரை அழிப்பது நல்லா நடக்கிறது என்று சொல்லுறியே?' "எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்" 'கெட்டது இருந்தால் தானே நல்லதும் இருக்கும்? எப்படி நல்லது மட்டும் எப்பவும் நடக்கும் எண்டு சொல்லுவாய்?' "உன்னுடையதை எதை இழந்தாய், எதற்காக அழ…

    • 4 replies
    • 1.5k views
  14. கொதிக்கும் கல்லறைகள்...... கவிதை - இளங்கவி.... வன்னி முற்றத்தின் வெண்ணிலவைப் பார்த்து வான் குருவி சொன்னது.... உன்னைப் பார்த்து சோறு உண்ண இங்கே குழந்தைகள் இல்லை... இரத்தத்தில் தோய்ந்தும் கந்தகத்தில் எரிந்தும்... மண்ணிலே புதைந்தும்; அவர்கள் இறந்து பல மாதங்களாகிவிட்டது..... உன்னைப் பார்த்து சோறூட்ட இங்கே தாயுமில்லை அவர் மடியில் சேயுமில்லை.... ஆனாலும் உனக்கு வேலையொன்று இருக்கிறது... இலட்சியத்துக்காக உயிர் நீர்த்த மாவீரர் புதைகுளிகளுக்கு மேல் உன் குளிர்வையும் ஒளிர்வையும் காட்டு தலைவர்கள் எனும் பெயரில் தமிழ் தேசியத்துக்கு சேறு பூசுபவர்கள் செயல்கண்டு கொதித்துப் போயிருக்கும் கல்லறைப் பூக்களின் ஆன்மாவாவது சாந்த…

  15. பா.விஜயின் கவிதை நிழல் தேடாதே உன் நிழலில் ஒரு ஊரையே நிற்கவை ! முட்களில் மோதிக் கிழியாதவனுக்குப் பூக்களைத் தடவும் தகுதி கிடையாது ! மகிழ்ச்சியாய்ச் சிரி கவலைகளைப் பிய்த்துக் காற்று மண்டலத்திற்கு அப்பால் வீசு ! எதைக் கண்டும் பிரமிக்காதே பிரமிப்பைப்போல் ஒரு பின்னடைவே கிடையாது ! தோல்வி என்பது சிந்திக்கத் தெரியாதவனின் சித்தாந்தம் ! நிலாவைத் தொட்டது மூன்று தோல்விகளுக்குப் பிறகுதான் ! நீ எழுந்தால் ஒரு எட்டு வந்து பார்க்காதவன் நீ விழுந்தால் விழுந்து விழுந்து விசாரிப்பான் கவனி ! இளைஞனே இரைப்பையையும் நம்பிக்கையையும் காலியாக விடாதே ! நடக்குமா என்ற கேள்வி- உன் நம்பிக்…

  16. Started by Nellaiyan,

    • 14 replies
    • 1.7k views
  17. தமிழீழம் செல்லும் வழியில் ஒரு பாறாங்கல்........ அந்த வழியால் வந்தனர் தமிழ் அரசியல்வாதிகள்... சம்பந்தம் இல்லாமல் ஒரு அரசியல்வாதி சொன்னார்.... "இதற்கு வழி, தெரியவில்லை. ஒரே வழி திரும்பி செல்வதே!" தவளை வாயை திறந்து ஒரு அரசியல்வாதி சொன்னார்....."இதற்கு வழி, எனக்கு பாதுகாப்பை திருப்பி தருவதே!" தொண்டைய கனைத்து ஒரு அரசியல்வாதி சொன்னார்..... "இதற்கு வழி, போட்ட நாராயணனை வைத்து கல்லை தூக்குவதே!" வெள்ளை வானில் வந்த ஒரு அரசியல்வாதி சொன்னார்....."இதற்கு வழி, எதிரியின் தலைவனின் காலில் உருண்டு புரள்வதே!" கருணை இல்லாத ஒரு அரசியல்வாதி சொன்னார்....."இதற்கு வழி, எனக்கு எதிரியிடம் உபதலைவர் பதவி பெறுவதே!" வாகன விளக்கை பார்த்த (தொங்கு) மான்கள் போல்... கல்லை பார்த்து பேச…

    • 5 replies
    • 1.6k views
  18. எண்ணம் எண்ணம் உயர்வாய் எண்ணம் கொண்டால் வெற்றி பெறுவது திண்ணம்! உன்னை நீயே அறிந்து கொண்டால் பெறலாம் விரைந்து வெற்றிக் கிண்ணம்! உள்ளில் இருக்கும் கள்ளம் அகற்றி கொள்வாய் உந்தன் பக்கம் வெற்றி! விழிகள் திறந்து உன்னைச் சுற்றி நடப்பது தெளிந்தால் நாளும் வெற்றி! எதுவிங்கு வெற்றி தெரிந்தவர் இல்லை? தன்னை உணர்தலே வெற்றியின் எல்லை! பொய்மை என்னும் போர்வை அகற்றி உண்மை நெறியினில் செல்வது வெற்றி! அடுத்தவர் முதுகில் ஏறிச் சவாரி செய்வது அல்ல உண்மை வெற்றி! அடுத்தவர் கண்ணீர் துடைக்க நீளும் விரல்கள் கொள்வதே உண்மை வெற்றி! சொல்லிலும் செயலிலும் நன்றே உரைத்து அடையும் வெற்றி உனக்கே உரித்து! நல்லோர் என்று உலகம் போற்றும் அதுவே என்றும் மாறா வெற்றி! …

  19. o ------------------------------------------------------------------ நாட்கள் சலித்துப்போன நாட்காட்டியில் குறித்து வைத்த திகதிகள் ஊட்டிய நிறத்தை இழந்துகொண்டிருக்கின்றன. வீடு திரும்புவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அம்மா மீளவும் ஒரு திகதியை அறிவித்திருக்கிறாள். யரோ ஒருவருடைய வீட்டில் அவிந்துகொண்டிருக்கிறது எங்களுக்கான உணவு. வெளியேறி வருவதற்கான அம்மாவின் விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டதாக அறிவிக்கப்பட்ட முதல் நாள் மாலை அரிசியும் காய்கறிகளும் வாங்கி வைத்திருந்தேன். புழுதி படிந்து காலம் முடிந்த பேருந்துகள் வந்துகொண்டிருக்கும் வழியால் நகர மறுக்கிற பேரூந்தில் அம்மா வருகிறாள். இன்னும் வளராமல் இருக்கிற தலைமுடியை இழுத்துக்கட்டியபடி தங்கை…

    • 1 reply
    • 1.2k views
  20. ஓராண்டை இழுத்து வந்துவிட்டது காலம் உன் நினைவுகள் தா(தே)ங்கிய மனங்களில் நீ எத்தனையோ அடையாளங்களாய்..... தேசம் தேசியம் என்றெல்லாம் கனவுகள் நிரம்பியல்லவா உனது கடிதங்களை எழுதினாய்...! ஒவ்வொரு தோழமைப் பிரிதலின் முடிவிலும் உரமூட்டி உரமூட்டியல்லவா உன்னைத் தீட்டிக்கொண்டாய்....! உனதும் உன்போன்ற தூயவர்கள் கனவுகளிலும் காலம் இப்படியொரு கோலம் வரையுமென்று கனவில்கூட எண்ணாத ஒரு பொழுதொன்றில் எங்கள் கோட்டைகள் சிதைவுறத் தொடங்கியது.... எங்கள் கொள்கைகள் நலிவுற்றுச் சாகத் தொடங்கிய நாளில் நீ ஞானிபோய் சொன்னாயாம்.... மேமாத முடிவுகளைத் தைமாதமே உரைத்த நீ மாசி27 கிபீரடியில் உன் கொள்கையும் இலட்சியமும் தமிழீழ தேசத்தின் கனவுடனே கரைந்த…

  21. _______________________________________ தூக்கம் கண்களை நிறைத்த பொழுது குழந்தைகள் இலவசமாக அனுமதிக்கப்படும் பூங்காவுக்கு வருகின்றனர். கைகளை இழந்த சிறுவன் செயற்கை கைகளுக்காய் மீதித் துண்டங்களால் ஏந்திக்கொண்டிருக்கிறான். கைகள் பற்றிய கனவுடன் அலைந்துகொண்டிருந்தான். சிதைக்கப்பட்ட முகத்தையும் பிரித்தெடுக்கப்பட்ட கைகளின் மிகுதிப் பகுதியையும் புகைப்படங்களாக்கி உதவி கோரிக்கொண்டிருக்கிறான். எல்லாமே எட்டாத தூரத்திலிருந்து தூங்கிக்கொண்டிருக்கிறது. அந்தச் சிறுவன் கைளோடு தன் புன்னகையையும் இழந்துபோயிருந்தான். பள்ளிக்கூடம் சென்ற ஒன்பது வயதுச் சிறுமி மிருகங்களாகிய படைகளால் வன்புணரப்படுகையில் இந்தக் குழந்தைகள் வழியிலிருக்கும் பூங்காவில் உறங…

    • 3 replies
    • 1.1k views
  22. நன்றி! என்னை வார்த்தையால் சுட்டு வீசி எறிந்ததற்கு! நன்றி! எனது இங்கிலாந்து இளவரசியை* தலையில் தூக்கி கொண்டாடினேன்..... அவளது வீட்டுக்கு பெயிண்ட் அடித்தேன்... அவளது வீட்டுக்கு பூமரம் நட்டேன்..... அவளது காருக்கு டயர் மாற்றினேன்.... அவளது காருக்கு பெட்ரோல் நிரப்பினேன்..... அவளது படிப்பிற்கு நான் படித்தேன்.... அவளது படிப்பிற்கு காசு கொடுத்தேன்... அவளது வாய்க்கு உணவு சமைத்தேன்.... அவளது வாய்க்கு சங்கீதம் தேடினேன்..... எனது இங்கிலாந்து இளவரசியை தலையில் தூக்கி கொண்டாடினேன்..... காலம் மாறியது...... உன்னை என்னால் மணக்க முடியாது......வார்த்தைகள் சுட்டன! உன்னிடம் வீடு இல்லை..... உன்னிடம் ஜாகுவார் கார் இல்லை.... உன்னிடம் படிப்பு பட்டம் இல்லை.…

    • 32 replies
    • 4.3k views
  23. தேடுகிறோம் இப்போது?????? மனிதத்தன்மையை மக்களிடம் என்கவிதை இத்தலைப்பில்.. எங்கே மனிதன்????????என்றே...... அரசியலில் பெரும்புள்ளி ஆளுயர மாலையோடு அவர்வீட்டு வாசலிலே அயராது தொண்டர்படை ... பாமரனும் வந்தானாம் பெருந்தலைவர் புகழ்காண தலைவரவர் குணமறிய தாளாத ஆவலுடன்........ வழியிலே வழிமறித்தார் வலதுகையாம் உதவியாளர் அடுக்கடுக்காய் அளந்தாரே அண்ணலவர் அரும்பெருமையை... சிங்கமென முழங்குவார் சீற்றமுடன் மேடையிலே... புலியென பாய்ந்திடுவார் சட்டசபை கூட்டத்திலே... தொகுதி பத்தி கேட்டாலோ முழிப்பாரே ஆந்தையாய்....... குரைப்பாரே நாய்போல கும்பிட மறந்தாலோ... செவியுந்தான் பாம்பாச்சே வம்புமது கேட்பத…

  24. Started by Nellaiyan,

    • 45 replies
    • 4.5k views
  25. Started by Nellaiyan,

    இலைகளைக் கழுவிச் சொட்டுகிற பெரு மழையில் கடைசியாய் நனைகிறது அமைதியின் ஓசை, மேகத்தில் மறைந்த கவலையின் வடுக்களை தன் கோடொன்றில் கீறி விரைகிறது மின்னலொன்றின் வெளிச்சம், தொலைந்த வானத்தைத் தேடி அலையும் நிலவின் சிதறலை ஆட்டி அசைக்கிறது தரைநீர்த் தேங்கலொன்றில் விழுந்த தூறல், கனத்துப் பெருத்த மழையின் சுவட்டில் கூடிழந்து உரத்துக் கூவுகிற பறவையின் இரைச்சலில் பாதித் தூக்கம் கலைந்துவிட, மீதி இரவில் மழையை நனைக்கிறது ஈழ வீட்டின் ஈர நினைவுகள்............ "மீதி இரவில் மழையை நனைக்கிறது ஈழ வீட்டின் ஈர நினைவுகள்............" ....... கனத்த வரிகள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.