கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5130 topics in this forum
-
ஒரு கதை கேள் தோழி. ஒரு வசந்தம் மட்டுமே வாழ்கிற ரோமியோக்களின் கதை கேள். காகிதப் பூக்களின் நகரத்தில் காதலில் கசிந்து தேனுக்கு அலைந்தது பட்டாம் பூச்சி. என் இனிய பட்டாம் பூச்சியே சுவர்க் காடுகளுள் தேடாதே. நான் வனத்தின் சிரிப்பு வழுக்குப் பாறைகளில் கண்சிமிட்டும் வானவில் குஞ்செனப் பாடியது பிஞ்சுக்கு ஏங்கிய காட்டுப் பூ. ராணித் தேனீக்களே எட்டாத கோபுரப் பாறைகளில் இருந்து கம கமவென இறங்கியது அதன் நூலேணி. வாசனையில் தொற்றிவந்த வண்ணத்துப் பூச்சியிடம் இனிவரும் வசந்தங்களிலும் தேனுக்கு வா என்றது பூ. காதல் பூவே வசந்தங்கள்தோறும் ஊட்டுவேன் உனக்கு மகரந்தம் என்கிற பட்டாம் பூச்சியின் எதிர்ப்பாட்டில் உலகம் தழைத்தது. நிலைப்ப தொன்றில்லா வாழ்…
-
- 3 replies
- 1.2k views
-
-
கண்களுக்கு மட்டும் ஏன் தெரியவில்லை? கண்களுக்கு மட்டும் ஏன் தெரியவில்லை? காதல் வந்தும் சொல்லாமல்........ அந்தப்பெண் தனியாக அமர்ந்து இந்த கேள்விகளுக்கெல்லாம் காரணமான விழிகளை அணைத்து, பாதங்கள் மட்டும் ஒருவராக .. நடந்துகொண்டு இருக்கிறாள்......... ஈர நினைவில்....... வானை நோக்கி........!! விழிகளில் கரைந்து மடலில் வரைந்தது _சுவிற்மிச்சி(MCgaL)
-
- 1 reply
- 1.2k views
-
-
தமிழா உனக்கு ஏனிந்த நிலை...??? என்ன செய்தாய் என்ன செய்தாய் என் தமிழா என்ன செய்தாய்..?? ஏன் உனக்கு இந்த நிலை....??? கண்ணீராலே முகம் கழுவி உன் காலை ஏன் விடிகிறது....??? கொட்டும் மழை செல்களிலே உன் குடில் ஏன் நனைகிறது...??? விடிகாலை ஒவ்வொன்றும் ஏன் உனக்கு ஓலத்தை அழிக்கிறது...??? நின்மதி தொலைத்து உன்னை ஏன் நிர்கதியாய் அலைக்கிறது...??? சுடு காடு மட்டும் உன்னை ஏன் சுதந்திரமாய் அழைக்கிறது...??? நிகழ் காலம் ஒவ்வொன்றும் உனக்கு இறந்த காலமாய் ஏன்...?? யுத்த தேசத்தில் சிறை கைதியாய் நீ மட்டும் ஏன்...?? விட்டில் புச்சியாய் உன் ஆயுள் முடிகிறதே ஏன் …
-
- 6 replies
- 1.2k views
-
-
என்னைக் கவர்ந்த சங்ககாலம் இதுவரை நான் படித்துச்சுவைத்த சுவைத்துக்கொண்டிருக்கின்ற சங்ககாலப்பாடல்களை அவற்றிற்கான சிறு சிறு விளக்க்கங்களுடன். . .
-
- 1 reply
- 1.2k views
-
-
பருவம் குழந்தை தொட்டு பருவமும் அடைந்தாள் பலவாறாய் வருடங்கள் கடந்ததே நினைவில் இல்லை அண்ணனின் நண்பனாய் அவளுக்கும் அண்ணனாய் அப்படி ஓர் உறவை தொடராமல் தொலைத்து பதறாமல் அவள் மீது பருவங்கள் காதல் கொள்ள உணர்சிகள் மட்டும் அதை சிதறாமல் காத்துக்கொள்ள சில காலம் இளைக்காமல் பின் நிலைக்காமல் போகவும் விரைந்தோடி போனேன் அவள் விழி தேடி போனேன் கண்டதும் கையில் காதலை விதைத்த காகிதத்தை கொடுத்து மாலை வருவேன் என்று மறு நாள் காலை சென்றும் மனதில் ஆசை அற்றோ வெளியில் வேஷம் கொண்டோ பதில் தர மறுத்தாள் ஓர் சில நாட்களில் என் ஒல்லிக்குச்சிகாரி தொலைவாகியே தொலைந்தாள் தேடியும் கண்ணில் இல்லை ஓரிரு ஆண்டு தள்ளி தூரமாய் என்னில் பட்டாள் மீண்டும் என் காதல் சொல்ல மொத்தமாய் …
-
- 7 replies
- 1.2k views
-
-
அவர்களை விடுவிப்போமா.... முட்கம்பியின் பின்னால் நீர் நிறைந்த விழிகளுடன் பல திசையும் நோக்கி பல ஆயிரம் கண்கள்..... இரவு பகல் பாராது எட்டுத்திசையும் நோக்கி எவராவது வருவாரா எம் ஏக்கம் தீர்க்க.... இது தான் இன்றைய கேள்வி அங்கே... பதில் தெரியாமல் துடித்து பிணமாகும் உயிர்கள் அங்கே.... படுக்கை மலசல கூடத்தில் மலசல கூடமோ படுக்கையில்.... பகைவென்று நிலமாண்ட பிரபாகரன் தேசம் பகைவனின் கூடாரத்தில் பல நூறு சித்திரவதையில்.... ஏங்கும் விழிகளுக்கு தூக்கம் கொடுப்பதற்கும் பட்டினி வயிற்றை பசியாற விடுவதற்கும் நாம் என்ன செய்தோம்...? இனியாவது என்ன செய்வோம்...? முடியாத காரியமும் முடித்துக் காட்டிய தலைவனின் பாசறையில் தவண்ட …
-
- 6 replies
- 1.2k views
-
-
இன்னும் வடுவாக நெஞ்சில்.... முகம் நிமிர்த்திச் சிரித்திட முடியாமல் முட்டி நிறைந்த துயரச் சுமையோடு அன்றாடம் ஆகிவிட்ட அந்தரப் பொழுதுகள் இவை.... ஆமியும் அதிரும் வெடியுமென அடிக்கொரு நொடி வரும் செய்தியில் எவர் எவரோ எண்ணங்களில் வந்தமர்ந்து போக வழிகிறது கண்ணீர்த் துளிகள். ஊருக்குள் உறவாடிய தோழரும் தோழியரும் யாருக்கும் தெரியாமல் பற்றைக்காட்டுக்குள் பார்க்கவும் முடியாச் சிறைக்கதவுக்குள்ளென செவி சேர்ந்த கதைகள் பல சொல்லாத சோகங்கள். ஊர்காக்கும் போரில் ஒன்றாய் படித்தவ(னு)ளும் கடுங்குளிரும் கொடு வெயிலும் சுடுவதில்லையெமக்கு என்றெழுதிய வரிகளில் விழுந்து கிடந்த விழிகளை மீட்டு வெளிநாடு வந்த சுயநலம் வலிக்கி…
-
- 4 replies
- 1.2k views
-
-
புத்த மைந்தர்களின் புனித்தக் கொள்கைகள்........ கவிதை...... புத்தனிடமும் கேட்கவில்லை புத்த மதத்திடமும் கேட்கவில்லை இறையாண்மை கொண்ட இலங்கைத் திரு நாட்டின் புத்த மதத்தை பின்பற்றும் புத்த மைந்தர்களிடம் கேட்கின்றோம்.... போரை முன்னெடுக்க எந்தப் புனித மதமும் சொல்லுமா...? அந்த மதத்தை பின்பற்றும் அதன் மைந்தர்கள் தான் சொல்வாரா...? ஆம்..! இலங்கையில் சொல்வார்கள் இலங்கையில் மட்டும்தான் சொல்வார்கள்.....! தமிழ் இனத்தை கொல்லுங்கள்....! அவர் இரத்தத்தில் குளியுங்கள்.....! தமிழர் கண்களைப் பிடுங்கி கொத்தும் காக்காய்க்கு போடுங்கள்......! இத்தனையும் சொல்வார்கள் இலங்கையில் மட்டும்தான் சொல்வார்கள்....! எங்கள் உரிமைப் போரை …
-
- 6 replies
- 1.2k views
-
-
இது......... இந்தப் பாலகனது இரண்டாவது பா . எனது சகபடைப்பாளிக்குப் பதிவாகப் போட்டாலும் , பாணர்கள் வரிசையில் இடம்பிடிக்க ஓர் உந்தல் . பாலகனைத் தூக்குவீர்களா உறவுகளே??????????? நிறுத்திடுவோம் இன்னுமோர் நினைவை எம்மனதில் ஊடறுத்து ஆழமாகவே பார் எங்கும் பாங்காகக் களிப்புற்றார் பாலகனின் வருகையை வந்தான் பாலகன் எல்லோருக்கும் மகிழ்சியாக!!!!! எமக்கு மட்டும் ஆழிப் பேரலையாக ஏனேனில் நாம் சபிக்கப்பட்ட ஈனப்பிறவிகளாம்!!!!!!!!!!!
-
- 7 replies
- 1.2k views
-
-
கஞ்சி குடிக்கும் கனவில் கதறியழும் பதுங்குகுழிகள் நிலங்களை விழுங்கும் சிங்கத்தின் திறந்த வாய்க்குள் எறும்புகள் போல் நுழைந்து போர்முகங்கள் தற்கொலை செய்கிறது ஒருவேளை கஞ்சிக்காய் உயிர் சுமக்கும் கோப்பையில் உச்ச துன்பங்களை அணைத்தபடி உறங்கும் எலும்புக் கூடுகள் தொண்டு நிறுவனங்களும் எட்டாத தூரத்தில் தொலைந்து போனது எலும்புக் கூடுகளில் பட்டினிப் பதாகைகள் ஏந்தியபடி காலில்லாத கைகள் அசைகிறது அழித்து அழித்து ஆனா எழுதிய மண்ணில் உயிர்எழுத்தும் மெய்யெழுத்தும் உயிர் இழந்து கிடக்கிறது கண்ணீர் வெடித்துச் சிதறியபடி ”ஐயோ அறுவான்கள் பல்குழல் அடிக்கிறாங்கள்” மௌனக் குரல்கள் கொதிக்கிறது வல்லினம் மெல்லினம் இடையினம் எல்லாம் வ…
-
- 4 replies
- 1.2k views
-
-
அம்மா நீ அழுதுவிடும் - உனது கண்ணீர் துளியால் எனது ! கல்லறையும் உருகுது - அம்மா! அன்று நான் மண்ணில் புரண்டு' விளையாடும் காலம் - என்னை ! மடியில் துக்கி அழகு பார்ப்பாய் - அம்மா ! இன்று நான் மண்ணுக்குள்ளேயே மடிந்து கிடப்பதைக்கண்டு-உனது மனம்படும் வேதனை எனக்கு புரிகின்றது அம்மா ! விடுதலை வீரனின் வித்துக்கள் ஒருபோதும் வீண்போகாது - அம்மா ! உனது விழிநீரை துடைத்து வீடு செல்லம்மா - மன்னிக்கவும் - அகதி முகாமில் உள்ள உனது ! கூடாரதுக்கு செல்லம்மா ! எமது வீடுசெல்லும் - காலம் விரைவில் வரும்,அம்மா !!!!!!!!!!
-
- 11 replies
- 1.2k views
-
-
இதுவா உங்கள் நியாயம்? ------------------------- உண்மையற்ற பொய்மையுலகே உன்னிடம் நேர்மையிருந்தால் எங்கள் உறவுகள் அழிந்திருப்பார்களா? அழிக்கப்படுமிந்த நிலையிது சரியா? எண்ணெயிருப்பதால் போராளிகள் எதுவுமற்றதால் பயங்கரவாதிகள் என்னதானோ உங்கள் நியாயம்! திரிப்பொலி வீழ்ந்தது போராட்டமாம் ஈழம் மீட்பது பயங்கரவாதமாம் நியாயமற்ற உலகிடமல்லவா துடியாய் துடித்து நீதியைக் கோரி எங்கள் தமிழினம் உலகிலலைந்தது எங்கள் அலைவுகள் என்றோ ஒருநாள் உங்களைக்கூடச் சுட்டெரிக்கலாம் அப்போதுகூடச் சுரண்டலைப் பற்றியே உங்கள் சிந்தனை அளக்க முனையலாம் ஆதிக்க சக்திகள் நிலைப்பதுமில்லை அன்னியராதிக்கம் நிற்பதுமில்லை அதுவரை நாங்கள் ஓய்வதுமில்லை. ஓய்வொன்றுவரலாம் உலகமழிந்திடில் …
-
- 7 replies
- 1.2k views
-
-
என் தொண்டைக்குழியில் இறங்க மறுக்கும் சோறு - எனக்கு தூக்குக் கயிற்றை மட்டுமே ஞாபகப்படுத்துகின்றது! நீதி தேவதையின் கண்களை... இப்பொழுதாவது, திறந்து விடுங்களேன்!!!! இல்லையெனில், மூவரோடு நால்வராய்... அவளையும் சேர்த்துத் தூக்கில் போடுங்கள்! அன்று, கண்ணகியின் கோபம் மதுரையை எரித்ததாம்!? இன்னும் நம்புகின்றோம்...!!! அது உண்மையோ... இல்லையோ....!!!??? நிச்சயமாக மீண்டும் எரிக்கும்!!! நீதியின் கூக்குரலும்... அழுகுரலும்!!!
-
- 4 replies
- 1.2k views
-
-
சின்னவனா இருக்கேக்க சூழ்ந்திடுவார் முதியவர்கள் ஆண்டு சில உருண்டோட பிரிந்து அவரும் சென்றனரே போகுதுபார் வாழ்நாளும் புயல் போன வேகத்திலை ஏறிடிச்சு என் வயதும் நானும் இப்போ கிழவனப்பா மூட்டுப் பிடிப்பிருக்கு மருந்தெடுக்க போகணுமே முட்டுக் கொடுத்தா தான் மூணு அடி நான் மிதிப்பேன் கால் நடக்க முடியாட்டா பாடை கட்ட முந்திடுவார் ஏக்கம் தாளாமை போக்கத்து நிக்கிறனே பங்கைப் பிரிக்காட்டி பால் வார்க்க மாட்டாராம் நான் சேத்த சொத்துக்கு எட்டுக்கால் வாரிசுகள் நாலெழுத்து படிக்காமை நாசமாய் போனதுகள் வீட்டையும் புடுங்கிட்டு நாட்டுக்கு அனுப்புதுகள் இண்டைக்கோ நாளைக்கோ போற உயிர் இது தானே நன்றியுள்ள நாய் இருந்தா-என் கஷ்டத்தை அது கேக்கும் பணத…
-
- 3 replies
- 1.2k views
-
-
துன்பத்தை தந்தவனுக்கே திருப்பிக்கொடு நீண்ட நாட்களின் பின் நிலவு பூத்தது போல் இவ் இரவு சொல்ல முடியாத மகிழ்ச்சி வெள்ளம் சோகம் எல்லாம் மறைத்து நிற்க மத்தாப்பு பூத்து மனம் முழுக்க சிரித்து நிற்க எத்தனையோ நாட்களாய் ஏக்கத்தோடு உறங்காத கண்கள் சேதி அறிந்த கணம் முதல் சிலிர்த்து சொரிந்த கண்ணீரில் உப்பு உறைக்கவில்லை உதிரத்தில் கலந்த தமிழ்தான் இனித்தது துன்பத்தை தந்தவனுக்கே திருப்பிக்கொடு - என்று சொன்னவன் வழி வந்த பிஞ்சுகள் ஆடுகளத்தை அசர வைத்து போர்க்களமாடி உலகமுன்றலில் - எங்கள் கதை மீண்டும் கதையாகாமல் கவனப்படுத்திய காட்சி கண்டு உள்ளம் உவகை கொண்டு சிரிக்கின்றது உளமார வாழ்த்துகின்றேன் வீரரே!!! http://inuvaijurmayuran.blogspot.ch/20…
-
- 7 replies
- 1.2k views
-
-
என்னடா வாழ்க்கையிது??????? அடிக்கடி வாயில வாற வார்த்தை இது! உண்மையில் அதுதான் உண்மை! ஏனென்று தெரியவில்லை! எதற்கென்றும் புரியவில்லை! என்னதான் நல்லது செய்தாலும் - கடைசியில என் தலையிலதான் வந்து விழுகுது! நல்லவனாய் வாழ்வதும் ... வாழ நினைப்பதும் ... எவ்வளவு கஷ்டம் என்பது ... இப்ப புரியுது!!! தன் கதை வசனத்துக்கு... என் தலையில, தலையெழுத்தாய் எழுதிவிட்டுப் போனவனை... இன்னும் தேடுகின்றேன் நான்! என் கையில் கிடைத்தால் தொலைந்தான் அவன்!!! "கடவுள்" எனும் நபரைப் பார்த்தால் எனக்குச் சொல்லுங்கள்! உங்கள் சார்பாகவும் ஏதாவது இருக்கும்! சேர்த்துச் செய்துவிட்டு... நான் போகின்றேன் நரகத்துக்கு!!! இந்த உலகத்தில் வாழுவதைவிட நரகம் எவ்வளவோ மேல்!
-
- 4 replies
- 1.2k views
-
-
துடைத்து வைத்த கண்ணாடி போல இருந்ததடி என் உள்ளம்! இப்போதெல்லாம் அதில் தெரிகின்றதடி உன் விம்பம்! சலனம் இன்றிப் பயணித்தவன் நான் என்னுள்ளே நீ வந்தபின் உன் பெயரை மனனம் செய்யப் பழகிக் கொண்டவன் மரணம் வரும் எப்போதோ நானறியேன் அதுவரை சரணம் என்றுன்னை அணைப்பேன் ஊரெல்லாம் ஏதேதோ கதைக்க நீயும் நானும் வாய்மூடி மெளனிகளாவோம் உன் மனம் நானறிய என் மனம் நீயறிய உதவாத கதையெல்லாம் எமக்கெதற்கு? சிந்தை சிதறாது காதலி முந்தை வினையெல்லாம் கூடி எம்மை அலைக்கழிக்கும் பந்தை பக்குவமாய் வெட்டி விளையாடும் கால்பந்து வீரனாவோம்! விந்தை எதுவுமின்றி விரண்டோடும் வினையெல்லாம்…
-
- 2 replies
- 1.2k views
-
-
மின்னஞ்சல் பெட்டியில் மிதக்கின்றன ஓலைகள் அவலங்களாகவும் வாக்குகளிற்காகவும்..! என்னுணர்வுகளிற்கு அழக்கூட ஆசையில்லை அழுதழுது மரத்துப்போனதால்..! யாராவது ஒருவர் மனமிரங்காராவென வாக்குப்போடுகிறேன் இணையத்தளங்களை நாடி.. வருகிறார்களில்லையே!! கண்டிப்பும் எச்சரிக்கையும் வெறும் சேதிகளாகவல்லவா வருகின்றன கைகட்டிக் கொண்டு!! அவரை நம்பி இவரை நம்பி ஆறுதல் தேடலாமென்றால் ஆறுதலுக்கான அன்பளிப்புகள் வேகும் புண்ணில் பாயும் வேல்களாகின்றனவே!! மனிதாபிமான முகமூடிகளுள் முகத்தைத் தேடித்தேடியே என் மின்னஞ்சல்பெட்டியுள் நேரத்தைத் தொலைக்கிறேன்.
-
- 3 replies
- 1.2k views
-
-
மலர் ஒன்று மலர்களுக்கு விளக்குப் பிடிக்கிறது.. காதலுக்கு காவலுக்கு அல்ல.. காவாலிகள் அவற்றை சிதைத்திடக் கூடாதின்னு. !!! (அப்பப்ப இங்கால சில கிறுக்கல்களோடு வந்து போவம்... நீங்களும் வந்து பார்த்து ரசிச்சுப் போங்க. ) வெண்ணிற மேகங்களுக்கு சிவப்பு வர்ணம் தீட்டும் மலர்கள்.. தமக்குள் பேசிக் கொள்வது தீட்டுன்னு இதை உலகம் வெறுக்கக் கூடாதுன்னு..! பெண்ணுக்குள் நிலவை புதைக்கும் உலகம் தன்னை முழுக்காட்ட நினைத்தது மறந்து நிலவு மூழ்கி எழுகிறது என்ன கொடுமை இதுன்னு...!
-
- 11 replies
- 1.2k views
-
-
மாசி வந்தால் மனசில் ஒரு படபடப்பு .. மயங்காத மங்கை மனதை உடைக்க முன் .. மறுபடியும் போட்டுருவம் ஒரு விண்ணப்பம் ... கண்ணே என்று தொடங்கவா ;இல்லை பெண்ணே ... என்று பழைய பல்லவி பாடவா ,என் செல்லமே .. எல்லோரும் தாமரைக்கு ..ரோஜாக்கு ஆசைப்பட ... நான் மட்டும் செந்தாமரைக்கு ஆசைப்பட்டது தப்பா .. சேறு உன்னை சுற்றித்தானே இருக்கு உன்னில் இல்லையே .. உன்னை பறிக்குவரை என்னிலும் ஒட்டி பிடிக்கும் .. உன்னை கைப்பற்றி விட்டால் நான் கழுவி விடுவேன் .. உள்ளம் அது என்னது மெய்யடி நீ எந்தன் கவியடி .. காதலர் தினம் வேஷம் உன் அப்பன் மனது விஷம் .. என் அப்பத்தா பார்ப்பா தோஷம் நானோ உன் பாசம் .. என்னை கைகழுவி போகாதே மழை மேகமே ...நான் நெருப்பை உண்ணும் கோழியே உனக்கு கட்டுவேன் தாலியே .. ஜா…
-
- 11 replies
- 1.2k views
-
-
சவுக்கு மரக் காடுகளின் கூவலையும் தாண்டி நரிகளின் ஊளைச் சத்தம் காதைப்பிளக்கிறது...! கருமுகில்களுக்குள் ஓடியொளிந்து விளையாடும் பால்நிலவைப் பார்த்து தெருநாய்களெல்லாம் குரைக்கின்றன...! பசித்து பாலுக்கழும் குழந்தை அழுவது காற்றடிக்கும் போக்கில் இங்குவரை கேட்கிறது...! நேற்று இங்கு நடந்ததை எத்தனை தடவைதான் நினைத்து நோவது...?! அப்படியே தூங்கிவிட்டேன்...! எனக்குத் தெரியும்... நான் தூங்குகின்றேன்... அதை உணர முடிகிறது என்னால்! கனவுகள் என் தூக்கத்தை ஆக்கிரமிக்கின்றன... குதிரைகளின் குளம்பொலிச் சத்தம்... இந்த நேரத்தில் யாராயிருக்கும்...!? நிலவொளியின் வெளிச்சத்தில் நன்கு தெரிகிறது... ஆம் அவர்களேதான்! சவுக்கு மரக்காடுகளின் நடுவே... சிதைந்துபோன கல்லறைக்குள்ளிருந்த…
-
- 8 replies
- 1.2k views
-
-
இந்த ஜென்மத்தில் ..... அழிவே அழியாது .... முதல் காதல் பேசிய ..... வார்த்தைகளும் .... நினைவுகளும் .......!!! துவையல் இடித்த ..... உரலை துடைத்தாலும் .... உரலில் ஓரத்தில் ..... துவல்கள் ஒட்டி இருப்பது .... போலவே ...... முதல் காதல் நினைவும் .... இதயத்தின் ஒரு ஓரத்தில் ..... ஒட்டியே இருக்கும் .....!!! ^ முதல் காதல் அழிவதில்லை கவிப்புயல் இனியவன்
-
- 4 replies
- 1.2k views
-
-
-
இனமாக எழுந்து இனமாக வீழ்ந்தார்கள் இனவிடுதலைப் போராட்டத்தில் வீழ்ந்த வித்துடல்களை ஒரு வயலில் விதைத்தார்கள் சமூக விடுதலைப்போராட்டத்தில் முளைக்கும் என்று விதைக்கப்பட்ட விதைகளை சாமியாக்கி சட்டைப்பையில் கொண்டுதிரிகின்றார்கள் இரண்டு விடுதலையினதும் எல்லைக்கு வெளியே சென்றவர்கள் இரட்டை ஒடுக்குமுறையில் இருந்தும் விடுபட முடியாத இறுக்கத்தில் வீழ்ந்தவர்களின் நினைவுநாள் திசைகாட்டி அறிவை இழந்து ஊனப்பட்ட இனத்துக்கு ஊன்றுகோல் ஊன்றி நடக்கவேண்டிய ஊன்றுகோலை தலையில் தூக்கி காவடி ஆடிவிட்டு அடுத்தது எப்போதென பழய பஞ்சாங்கத்தை புரட்டும் பூசாரிகள் ஒருபக்கம் உணர்ச்சிப்பெருக்கெடுத்து தேசம் நினைத்து தேகம் சிலிர்த்து காக்கிலோ அரிசிவாங்கக் கூட பெறுமதியி…
-
- 3 replies
- 1.2k views
-
-
____________________ இப்படித்தான் கொடுமையான இரவுகளையே எப்பொழுதும் உனக்கு தரவேண்டியாயிற்று. காலை என்றாலும் உன்னை நெருங்கிவிட முடியவில்லை. எல்லாவற்றையும் நிர்பந்தங்களுக்காக செய்துகொண்டிருக்கிறோம். உன்னை தனியே விட்டுச் செல்லுகிற என் தாய்மையைப் பற்றி என்ன சொல்லி அழுகிறாய்! அந்த வெளியில் கலந்து கிடக்கிற தாலாட்டுகள் உன்னை தூங்க வைக்கும் என்றே நினைத்திருந்தேன். அவர்கள் உன்னை என்னிடமே சேர்ப்பதாக சொல்லுகிறார்கள். வீடுகளை பார்த்து ஆசைப்பட்டுக்கொண்டு வந்த பயணத்தின் இடையில் ஒரு தோழிக்கு குழந்தை பிறந்திருக்கிறது. அதற்கான பாதுகாப்பு விசாரணைகளுக்காகத்தான் இடையில் தடுத்து வைக்ப்பட்டிருக்கிறோம். தூங்க மறுத்து அழுது களைத்துப்போய் காலையில் …
-
- 4 replies
- 1.2k views
-