Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. இவர்களை எப்போ புரியப்போகின்றாய்? கழுவும் துடைக்கும் அந்த கண்ணியவான்களை... கலோ என்றால் கிலோ அனுப்பும் அந்த கருணையாளர்களை.... எலும்பு தெரிய உமக்காய் எரியும் தீபங்களை.... எதையுமே தமக்கென தேடாத பாரிகளை.... தலைமுடி துறந்தும் பருவ வயது கடந்தும் தலைவிதியென்று ஓடும் உன்னதமானவர்களை..... புலம் பெயர் தேசத்தை நுகராத இந்த புடுங்கி எறியப்பட்ட அந்த கனவான்களை..... புலம் பெயர் எமது புருசர்களை... இவர்களை எப்போ புரியப்போகின்றாய்?

    • 6 replies
    • 1.4k views
  2. Started by யாழிவன்,

    விடியலின் பாதை அனு தினமானது. கொடியரின் பாதை அது மாதிரியே நாளும்,பொழுதும் கொலை,கடத்தல் இந்த சம்பவம் இல்லையெனில்-அது சிறீலங்காவே இல்லையென ஆச்சு. இணையத்தை பார்த்தால் ஆளாளிற்கு தனது கற்பனையால் இன்னமும் எரிகின்ற நெருப்பில் பிடுங்கிய வரை லாபமென ஏதேதோ எழுதுகின்றார். வீரம் மெளனித்தால் ஈரமுள்ள நெஞ்சகம் என் செய்யும்? நிலைமை ஒன்றும் சீராக இல்லை. இதற்குள் எத்தனை சீரழிவை இன்னமும் செருகுவர்? தூற்றுவதே சிலரது பொழுதாக தேற்றும் உள்ளகச் செழிப்பகற்ற ஊற்றுக் கண் இருந்தும் இல்லாததாய் இழவுகள் சேதி எழுதும். மாற்றம் தேடும் மனிதங்களை கறைப்படுத்தும் காகிதங்கள் வரையின்றி ---- குழப்பம் ஏற்படுத்துவதில் குறியாக சில துன் மார்க…

    • 5 replies
    • 1.7k views
  3. நரபலி காட்சி வந்து நீ பார்.... இங்கே வந்து பாரு உலகே இங்கே வந்து பாரு அந்த கயவர் செய்யும் கோரமதை இங்கே வந்து பாரு.... துண்டு துண்டாய் உடலறுந்து கிடைக்கும் நிலை பாரு அந்த குண்டுகளை ஏவியவன் செய்யும் கோரம் காணு..... முண்டமதாய் மூச்சிழந்து கிடக்கும் நிலை காணு எங்கள் முந்தையர்கள் விட்ட தவறால் வந்த நிலை காணு..... என்ன செய்தார் என்றிவரை ஏனழித்தான் கேளு.... உயிர் குடிக்கும் இன வெறியன் மகிந்தன் செயலை காணு.... உணவாக தமிழர் உடலை உண்ணும் நிலை காணு.... மனிதம் உள்ளாய் நீ என்றால் வந்து நீயு பாரு உனக்கு - உள்ளம் இருந்தால் வந்து பார்த்து உலகே தீர்ப்பு கூறு.... நம்ம மக்கள் …

  4. பிறப்பால் இவன் செய்த குற்றம் ஏதும் இல்லை. இருந்தும் பெற்ற தாய் நிராகரிக்க.. மனிதக் கருவி துணை இருக்க.. வளர்ந்தவன் Knut எனும் பெயர் தாங்கி.. தன் அழகால் குறும்பு செய்யும் நடத்தையால் உலகையே கவர்ந்தான். பாவம்.... 30 ஆண்டுகள் நீண்ட ஆயுள் வழக்கிருந்தும்.. மானுட உலகில்.. அவன் இருப்பு வெறும் நான்கு ஆண்டுகள் தான். விடைபெற்று விட்டான்.. போதும் பூமிப் பந்தில் இந்த வாழ்க்கை... வேண்டாம் எனியும் மனிதரோடு கொண்ட சகவாசம் என்று. இன்று கண்ணீரோடு அவன் நினைவில் இவன்..! http://www.bbc.co.uk/news/magazine-12805534

    • 4 replies
    • 2.9k views
  5. துளிர் விட தொடங்கியது மரம் இறக்கை முளைக்கும் குருவி குஞ்சு போல தூரமா போன பறவைகள் எல்லாம் மீண்டும் வந்து அமர்வதை பார்க்கிறேன் காற்றுக்கும் ,மழைக்கும் ,ஈடு கொடுக்கும் பலத்துடன் மரம் இருந்தாலும் ஆடை களையப்பட்டு அம்மணம் ஆனால் யார்தான் விரும்புவார் ஒதுங்குவார் அருகில் இப்பொழுது சிறகு விரிக்கிறேன் என்னருகில் பலர் பாயை விரிக்கிறார் வரலாம் அமரலாம் கதைகள் பேசலாம் நீங்கள் உங்கள் தேவைகள் உள்ளவரை சுடும் அனல் வெய்யிலின் தாக்கம் போகும்வரை மீண்டும் மரம் இலை உதிர்க்கும் சருகாக அதனருகில் காற்றுடன் பறக்கும் அப்பொழுதுகளில் கால்களால் தள்ளி விட்டு விலகி போகும் கட்சிகளை மரம் கண்ணுறும் அப்பொழுது பணம் இருக்கும் உறவு தேடி வரும் சொந்தங்கள் போல என் நிலை தெரியும் பூப்பதும் உதிர்வ…

  6. மகிந்தா ஆட்சிக்கு மரணம்... அழிவின் நிலையில் படைகளே அதனால் உதட்டில் பொய்களே எத்தனை காலம் பொளிந்திடுவீர்-உமை எள்ளி நகை தமிழ் ஆடிடுவார்... காலம் இன்னும் கடக்கவில்லை கரிகாலன் படைகள் தோற்கவில்லை பொறியினுள் வீழந்தார் பகையினரே- இனி பொறிதட்டி நீரும் கொளுத்திடுவீர்... இல்லை புலியென்றா முழங்குகின்றீர் இன்னலில் வீழந்தே கசங்கிடுவீர் காட்சிக்கு வந்த கந்தகங்கள் கரிகாலன் படையது தந்ததுவோ...?? கோமாளி கூட்டத்து கோதபாயா- நீ கொளுத்தியெறிந்த பொய்யிதுவோ...? எம்தமிழ் இதையின்று நம்பவன்றோ..? எம்மிடை பந்தாய் எறிந்தாயின்றோ..? ஆணையிறவினில் தந்ததுவை ஜயா நீரும் மறந்தீரோ...?? அலரிமாளிகை அலருமினி அடியதை கண்டுனி பதறுமினி குந்திட பங்கரை தேடுவாரே…

  7. மேஜர் சிட்டுவின் 40வது பிறந்தநாள் நவம்பர் 4ம் திகதி. எங்கள் இனத்துக்காக வாழ்ந்த மாவீரர் சிட்டுவின் 40வது பிறந்தநாள் வலைப்பூவில் சிட்டுவின் பாடல்கள் நினைவுக்குறிப்புகளை பதிவிடும் நோக்கில் ஏற்பாடுகள் ஒழுங்காகிறது. யாழ்கள கவிஞர்கள் கருத்தாளர்களிடமிருந்தும் உங்கள் எண்ணங்கள் கவிதைகள் நினைவுப் பகிர்வுகளை அனுப்பி உதவுமாறு வேண்டுகிறேன். எங்களுக்காக வாழ்ந்து எங்கள் நினைவுகளில் வாழ்கிற மாவீரர்களின் வரலாறுகளைப் பதிவிடுவோம். உங்கள் எண்ணங்கள் கவிதைகள் நினைவுப்பகிர்வுகளை கீழ்வரும் மின்னஞ்சலுக்கு அஞ்சலிடுங்கள். 2ம் திகதி நவம்பருக்கு முன்னர் கிடைக்குமாறு அனுப்புங்கள். மின்னஞ்சல் முகவரி - rameshsanthi@gmail.com சிட்டுவிற்கான வலைப்பூ - http://chiddu1997.wordpress…

    • 1 reply
    • 3.6k views
  8. மாவீரரே!! உயிரிலும் மானம் பெரிதென இவ் உலகிற்கு உணர்த்தி நின்றார் செந் தமிழனின் வீரத்தை இந்தப் பாரிலே உயர்த்தி நின்றார்! நெஞ்சிலே நஞ்சினைத் தாங்கியே எம்மவர் மண்ணுக்கு வெளிச்சம் தந்தார் அன்னை மண்ணுக்கு தன்னலம் பாராமல் சாவையே அணைத்து வென்றார்! நல்தலைவன் வழியினில் சென்றுமே நன் நீதியைக் காட்டி நின்றார் வான் என்ன! கடல் என்ன! களத்திலும் கூட வீரத்தை காட்டி நின்றார்! வாழ்க்கையின் தத்துவம் காட்டிய வீரரே உம்மை நினைக்கவே நாளெதற்கு? மறைந்தாலும் மனதினில் நிறைந்திட்ட நீங்களே விடியலில் ஒளிர் விளக்கு! மறப்போமோ உங்களை எங்களின்வீரரே இது விடிகின்ற தருணம் அல்லோ? வீசும் காற்றது என்றுமே உரைப்பது வீரச் சோதரர் பேரை அன்றோ? மண்ணே! மானம்…

  9. எச்சரிக்கை மடல் மனதால்த் தன்னும் தாய்மை வலியுணராப் பெண்டிரும், தாவி அன்னை திருமடியில் தவழ்ந்து மகிழா ஆடவரும் தயவு செய்து மேற்கொண்டு, இக்கவியின் இரத்த ஓடையை இரணமாக்கி இரசிக்க உள் நுழையாதீர்! ஓர் பிரசவத்திற்கான இறுதி வலியில் தேசத்து ஆன்மா துடிக்கிறது. நீண்ட நேரம் உயிர்ப்பின் வாசலில் தங்கிவிட முடியாது. உந்தும் வலு உறுதியாக வேண்டும். ஒவ்வொரு மணித்துளியும் வலியின் வேகம் வரப்புடைத்து பெருகி எல்லாப் பாகத்திலும் விரிகிறது. பனிக்குடம் உடைந்தபின், முக்குதற்கு நீண்ட நேரம் எடுத்தால் எல்லாமே உறைந்து போகும்., உலர்ந்தும் போகும். வலியின்றி வளர்ச்சி இல்லை. வலுவின்றி வலியைச் சந்தித்தால் பலவீனம் பாயில் கிடத்தும். வலுவினூடே வலியைச் சந்தித்தால் நலிவு…

  10. ஆதி மனிதன் தொட்டு அண்மைக்காலம்வரை அன்பெனும் பிணைப்பால் பின்னிப்பிணைந்து வாழ்ந்;த நம் உறவுகள் ஏன்தான் இன்று இப்படி? ஓலை வீட்டிலும் ஒட்டிய வயிற்றுடனும் வாழ்தபோது ஒற்றுமையாய் வாழ்ந்த நம் உறவுகள் காசைப்பார்த்ததும் மாறியதோ? கடல் தாண்டி வந்தபின் மாறியதோ? கருணை மனம் எங்கு ஓடியதோ? தன்வயிற்றை ஒட்டவைத்து தன்னுள் கருவாக்கி உன்னை ஊர் போற்ற உருவாக்கிய அன்னைக்கு உதவாமல்? உலகத்தில் நீ எங்கு வாழ்ந்;தாலும் உன்னால் யாருக்கென்ன நன்மை? கண்ணை மறைத்ததோ காசு வந்து உன்னை? பின்னால் ஒருகாலம் உன்னிலை உணரும்போது மண்ணில் இருக்காளே அன்னை? அப்போது நீ எண்ணித் தவித்தென்ன நன்மை? ஆக்கம் இசைக்…

  11. [size=4]கர்ணனின் கதையில்.[/size] [size=4]புதைந்திருக்கும் அர்த்தங்கள்![/size] [size=4]கால வெள்ளம் கூடக்,[/size] [size=4]கரைக்க முடியாத உண்மைகள்![/size] [size=4]ஆயிரம் திறமைகள்,[/size] [size=4]ஆண்மையின் கம்பீரம்,[/size] [size=4]சத்திரிய வீரம் மட்டுமே,[/size] [size=4]காறித்துப்புகின்ற கர்ச்சனை![/size] [size=4]விசுவாமித்திரனே, [/size] [size=4]வியந்து போன வீரம் தான்![/size] [size=4]பிரமாஸ்திரத்தின் ரகசியம்,[/size] [size=4]மறந்து போகச் சாபமிட்டான்.[/size] [size=4]அன்னைக்குக் கூட,[/size] [size=4]அவனது ரகசியம் தெரியும்![/size] [size=4]அவளின் அரச வாய்கள்,[/size] [size=4]கூடப் பூட்டப் பட்டன![/size] [size=4]தேர்ச் சில்லின் புதைப்பில்,[/size] [size=…

  12. நம் யாழ் நகரத்தில் நம் மாவீரரின் கல்லறைகளை அடித்து உடைத்த சிங்கள காடையர்களை கொன்று ஒழிக்க புறப்படு தமிழா நம் இனத்தவரை கொன்று ஒளித்த சிங்கள பேய்களை கொன்று ஒழித்து நம் நாட்டை காப்பாற்றி புலி கொடியை பறக்க விட்டு புலி வீரன் என்று பெயர் எடுத்து புலி வீரன் எவருக்கும் அடி பணியான் என்று பெயர் எடுப்போம்

  13. பேரன்னை பார்வதி அம்மாவிற்கு வீரவணக்கம்! வீரப்படுக்கையில் துயிலுறங்கும் அன்னையே ! நாம் அடையாமல் விடமாட்டோம் தமிழீழ மண்ணையே ! எம் தலைவரை பெற்றெடுத்தீர் தாயகம் வெல்லவே ! வீரதமிழனாய் வளர்த்தெடுத்தீர் தமிழீழ மண்ணையே ஈழத்தமிழினம் இருட்டிலே உலன்றபொழுது! கேட்க நாதியின்றி வீதியிலே கிடந்தபொழுது! உரிமையின்றி அடிமைகளாய் தாய்மண்ணில் திரிந்தபொழுது ! உன் சிங்கக் குகைதனிலே எம் புலித்தலைவன் பிறந்துவந்தான்! புதியதோர் வரலாற்றை பெற்றெடுத்த எம்தாயே ! புயல் வரினும் மலைவரினும், அவைகளே குண்டுகளாய் மாறிவிழினும் ! மக்களோடு மக்களாய் மனம் தளராது வாழ்ந்தீரே ! மரணம் நெருங்கிடினும் வீரமாய் சாய்ந்தீரே ! எம்மை நிமிரவைத்த புதல்வனை உலகிற்கு தந்தவரே ! எம் சிரம் குனிந்து வணங்குகிறோம் உம் ப…

  14. ஆரியன் வந்தான் சாத்திரத்தையும் சாதியையும் விதைத்தான்..! மொகலாயன் வந்தான் மதத்தையும் மதத்தால் அழிவையும் விதைத்தான்..! ஆங்கிலயன் வந்தான் சுரண்டலையும் அதனால் பசியையும் வறுமையும் விதைத்தான்..! ஏமார்ந்த தமிழன் எல்லாவற்றையும் ஏற்று கொண்டான்..! தன்னை தானே இழித்து கொள்ளும் தரங்கெட்ட நிலைக்கு தாழ்ந்தும் போனான்..! கூத்தாடிகளை தலைவனாகவும் கொள்ளையர்களை தொண்டனாகவும் கொள்கையற்றும் போனான்..! ஈழம் சென்று கங்கை கொண்டு கடாரம் வென்று இமயத்தில் கொடி நாட்டியவன்..! இன்று இனம் பிரிந்து மொழி மறந்து அகதிகளாய் முகம் தொலைத்து முகவரியற்று அலைகிறான்..! இன்று அங்கவையும் சங்கவையும் கேலிபொருள்கள் கோப்பெருந்தேவியும் குழல்வாய்ம…

  15. கொள்ளை கொண்ட காதலா!!!!!!!!!! என் நிம்மதி எங்கே என்று உன்னிடமே கேட்டேன் பார், கொள்ளை அடித்தவனிடமே போய் புகார் செய்தமாதிரி என்னைசெருப்பால் அடிக்க வேண்டும்........ உன் நினைவுகளோ என்னை மூழ்கடித்து விட்டது ஒரு ஆறு கட்டுமரத்தில் ஏறி இருந்தது போல !!!!!!!! என்னைக் கொள்ளை கொண்டவனே நான் சுதந்திரமாய் சிரித்து கனகாலமாகி விட்டதடா . நான் சிரிக்க முயற்சி செய்கின்றேன் நீயோ , ஏன் அழத் தொடங்குகின்றாய் என்கின்றாய் நான் அழமுயற்சி செய்தாலோ , ஏன் சிரிக்கின்றாய் என்கின்றாய் நீ என்னதான் சொல்லவருகின்றாய் ????????? நான் சுகமாக இருக்கின்றேன் என்று ஒருவரிடமே சொல்வதில்லை....... ஏதோ இருக்கின்றேன் என்றுதான் சொல்கின்றேன் . நான் விரைவாக அமைதியா…

  16. கார்த்திகை நாயகர்கள் உடலைத் திரியாக்கி உதிரத்தை நெய்யாக்கி உயிரை ஒளியாக்கிய உத்தமரே – எம் உணர்வுக்கு வித்தாகி – தமிழ் உலகுக்கு சொத்தாகி தமிழீழ விடிவுக்கு விளக்காகிய வித்தகரே! தீபத்தின் சுடரிலே உங்கள் தியாகம கண்டோம்- அது சுடர் விடும் நிறங்களிலே உங்கள்; முகம் கண்டோம் காத்திகை மலர்களிலே உங்கள் கனவு கண்டோம் - அதைக் கையினில் எடுக்கையிலே உங்கள் அழகு கண்டோம் கார்த்திகை மாதத்தின் நாயகராய் நீங்கள் காட்சியளிக்கும் காலம் இது கைகூப்பி நாங்கள் வணங்குகிறோம். காவல் தெய்வங்களாய் போற்றுகிறோம். செண்பகன் 21.11.2013

  17. பிம்பங்களைத் தொலைப்போம் கண்ணாடிச் சுவர்களுக்கு அப்பாலும், இப்பாலும் இருந்து கண்ணாமூஞ்சி விளையாட்டு! ஆயிரம் கோடி அற்புதப்பிரசவங்களின் வலியையும், வலுவையும் வருடி மோகித்துப் பயணிக்க முடியாமல் பிம்ப பேதம் வேதனை செய்கிறது. அடிமனதில் ஆழ அமர்ந்த சமூகக் கோட்பாடுகள் கண்ணுக்குத் தெரியாமல், மனதிற்கு விலங்கிட்டு மானுட நட்பின் விரிதளத்திற்கான கதவை அடைக்கிறது. நட்பின் பரந்த தளத்தில் பயணிக்க எந்தக் கடவுளிடம் கையேந்த வேண்டும்? பிம்பங்களைத் தொலைத்துவிட வழி இருந்தால் கூறு! தொலைத்து விட்டு, இயற்கையோடு இயைவோம் யாராலும் அறிய முடியாத பூமிப்பந்தின் பிரணவ ஒலியை எங்களின் இருப்பிடமாக்கிக் கொள்வோம். மொழிகளுக்குள் முடங்காத மானுடக…

    • 7 replies
    • 928 views
  18. குர்து மலைகள் – தீபச்செல்வன் பெண் கொரில்லாக்கள் பெண் கொரில்லாக்கள் ஏந்தியிருக்கும் கொடியில் புன்னகைக்கும் சூரியனின் ஒளி அக்ரா நகரெங்கும் பிரகாசிக்க ஜூடி மலையிலிருந்து மிக நெருக்கமாகவே கேட்கிறது சுதந்திரத்தை அறிவிக்கும் குர்துச் சிறுவனின் குரல் போர்க்களத்தில் மாண்டுபோன கணவனுக்காக யூப்ரட் நதியிருகே ஒலீவ மரம்போல் காத்திருக்கும் பெண் ஒருத்தி இனி அவன் கல்லறைக்கு கண்ணீருடன் செல்லாள் …

    • 2 replies
    • 1.4k views
  19. சொர்க்கம் மனதிலே...... எத்தனை தடவை பிறப்பேன் எத்தனை தடவை இறப்பேன் எத்தனை முறை நான் புதைவேன் அத்தனையிலும் நான் உயிர்ப்பேன் கருவினில் தோன்றி கல்லறை வரையும் உறவுகள் தான் எம் வேலி கனவுகள் போல கலைந்திடும் வாழ்வில் கவலைகள் யாவும் போலி புலர்ந்திடும் பொழுதில் மலர்ந்திடும் பூவும் பொழுதினிலே தலை சாயும் அலர்ந்திடும் பொழுதில் விடிந்திடும் வேளை அழகிய மலர்கள் பூக்கும் இலையுதிர் காலம் உதிர்ந்திடும் இலைகள் இறப்பினும் மரங்கள் இருகு;கும் இயற்கையின் கையில் இயல்புகள் மாற இலைதுளிர் காலம் பிறக்கும் வசந்தங்கள் வந்தால் பாரினில் எங்கும் பசுமையின் புரட்சிகள் தோன்றும் சுகந்தமாய் சேவை தொடர்ந்திடும் வேளை சொர்க்கத்தின் வாசல் திறக்கும் பிறர் நலம் காக்கும் மனமது ப…

  20. வெளி நாட்டு காற்றிலே கவிதைகள் அணல் பறக்கும் ஏராளாமாய்! ஆனாலும் ஏளனமாய் இன்றும் விடுதலை வெற்றி நமதென்று கூவியழைத்தார்! தோல்வி கண்டு துவண்டு அழுதார்! வெல்லும் போது; மட்டும் வாழ்த்து பாடினார் தோற்க்கும் போது மட்டும் சிலர் சோக கீதமிசைத்தார்!. அனுப்பிய பணங்கள் ஆயுதம் அணிந்ததாய் மட்டுமே இதுவரை இல்லை செய்தி! இதுவும் வரலாம் காலகிரமத்தில்! ஏனெனில் கவிதைகள் மட்டுமல்ல செய்திகளும் இங்கே கற்பனையில்! துன்பத்தின் மீதிலேறி பாடுவார்! துன்பத்தை வெல்ல துயர்துடைப்பு என்பர்! வெட்கத்தை விட்டு சொன்னால் வேற்று வேட்டுக்கள் தான் நாம்! வேற்றுவன் கேட்கிறான் எம்மை! வேதாந்தம் பேசவா முடியும் அவருடன்? கேட்கிறார் அறிவார்ந்த கேள்வியாய் சிலர்! வேதாந்தம் சித்தாந்த…

    • 13 replies
    • 1.7k views
  21. கூலிப்படையே ஓடி வா..... வாகரையை வசமாக்க வரிந்து கட்டுகிறாய் வா... வம்புக்கிழுக்கிறாய் வந்தடி வேண்டி போ... வெட்ட வெளியில வெட்டிய புதைகுழிகள் வெறுமையாய் கிடக்கிறது வா..வந்ததை நிரப்பு.... என்ன செய்வோம் நீ அடம்பிடிக்கிறாய் வந்தடி வேண்டி போ வா.... ஊடகங்கள் பாவம் உறங்கி கிடக்கிறது தட்டியெழுப்பி ஊளையிட விடு வா.... தென்னிலங்கை தெருக்கள் அமைதியாய் கிடக்கிறது காவு வண்டிகளை கத்த விடு வா.... பொதி செய்து உன் உடல்களை பொதியாக அனுப்ப வேண்டும் பொங்கியெழுந்து வா.... எம் ஆயுத கிடங்குகள் அரைவாசி வற்றிற்று அள்ளியெடுக்க வேணும் அய்யா விரைந்து வா.... ஓராண்டு ஆட்சியது ஓவென்று ஓடிருச்சு ஓலமது கொடுக்க …

  22. Started by Ravi Indran,

    தேசக் காதல் யூலியட் இறக்கவில்லை நடித்திருந்தாள். ரோமியோ அறியவில்லை இறந்துவிட்டான். யூலியட் அறிந்துபின் இறந்துவிட்டாள். “இருவரும் இறக்கவில்லை விதைக்கப்பட்டார்கள்” எழுதிவைத்தார்கள் காதலுக்காய் உயிரைவிடுதல் காவியம் என்று. ரோமியோ! யூலியட்! உருகி வழிகிறது உலகம் முழுதும் ஒன்றுக்கு பதிலாய் பல நூறாயிரமாய் நாமும் காதலித்தோம். இதயச்சுவர்களில் ஈரமாய் எழுதினோம். ஊர்காற்று முழுதும் ஓலை அனுப்பினோம். காது மடல்களில் கானம் இசைத்தோம். மூக்கு முட்டிச் சுவாசித்தோம். இதழ்களால் இறுகப் பற்றினோம். கண்கள் முழுதும் நிறைத்தோம். ஒரு கோப்பையில் உண்டோம். காலடிச் சுவடுகளில் கால்வைத்து நடந்தோம். அவள் ஒளியில் …

  23. அடைந்து சுதந்திரம் இன்றுடன் இலங்காவுக்கு வயது ஐம்பத்து ஒன்பது ஆகிறது! ஐயா பெரியோரே பாரினிற் சிறந்த படு பாதகர் தேசம் இலங்காவென்பதை நீர் யாவரும் அறிவீர்! முந்தைநாள் ஜே.ஆர் நேற்று சந்திரிகா இன்று மகிந்தன் கோவணத் துண்டை கொடியில் காயப் போடுகின்றார்! கண்டுகளிப்பதற்கு சிங்களக் குண்டர்கூட்டம் தறுதலை நகர் கொழும்பில் கூடுகிறது! கடனில் வாங்கிய விமானங்களின் வேடிக்கை பழுதடைந்த கவசவாகனங்களின் அணிவகுப்பு வீதித்தடைகள் அங்கவடையாளச் சோதனைகள் விமரிசையாக நடக்கிறது இலங்காவின் பிறந்ததினம்! நீளத்தாடியுடன் வீணைமீட்கும் சுவாமியார் ஒருபுறம் ஓலைவிசிறிலால் உடம்புசொறியும் பிக்கு மறுபுறம் குடுவடிக்கும் குண்டர்படை கொலைவெறியுடன் அணிவகுக்க கொடுங்கோல் மன்னன் மகிந்தன்…

  24. உனக்கு யாரோ ஒருவனின் கவிதை பிடித்ததில் இருந்து கிறுக்கிக் கொண்டுதானிருக்கிறேன் என்னில் ஏதாவது ஒன்று உனக்கு பிடித்ததில் கவிதையாவது இருக்கட்டுமே என்று -யாழ்_அகத்தியன்

    • 4 replies
    • 1.2k views
  25. காய்ந்து போய் விட்ட, காலப் பூக்களின் இதழ்களாய். சருகாகிப் பறக்கும்,, சரித்திரங்களின் சாட்சிகள்! கடாரம் வரைக்கும், கப்பற்படை நடத்திக், கோவில் குடமுழுக்கு நடத்தியவனின், குலக் கொழுந்துகள்! அலை புரளும் கடல்களையும், ஆகாய வீதிகளையும் நிதமும், அளந்த படி அலையும், ஆதரவில்லாத அகதிகள்! இரவுப் புறாக்கள் மட்டும், குறு குறுக்கும் பேரிருளில் பனி படிந்த கண்ணாடி ஜன்னல்களில் பார்வை நிலை குத்தப், பேய்கள் உறங்கையிலும் காவல் வேலைக்காய் விழித்திருக்கும் விழிகள்! மரக்கறிக் கடைகளின், மூட்டை தூக்கிகள் ஓய்வெடுக்க, முதுகெலும்பை மலிவாக்கி, மூட்டையடிக்கும் தோள்கள்! மீசை மயிர் கருக்கும்,. மின்னடுப்புக்களின் வெக்கையில் பாண்களைப் பதம் பார்க்கும், பழகிப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.