கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5130 topics in this forum
-
காதல் கிங்கை மீண்டும் ஒருவர் கவிதை ஒன்றை எழுத உசுப்பேத்தி உள்ளார். நானும் எனது சரக்கை இங்கு அவிழ்த்து விட்டுள்ளேன். சொன்னாலும் சொல்லாட்டிலும் இவள் தாண்டா இப்ப மொடேர்ன் காதலி!!! எல்லாமே நீ தானடி!! கவனக் குறைவாக நான் எனது வாழ்க்கை காரை ஓட்டி அக் சிடண்ட் பட்ட போது உயிர்ப் பிச்சைதந்த Air Bag.. கயவர்கள் எனைப்பிடித்து அதளபாதாளத்தில் தள்ளிவிடும் அகால நேரங்களில் என் சுவாசத்திற்கு உதவும் ஒட்சிசன் சிலிண்டர்.. எனக்குள் இருக்கும் வியாதிகளைக் கண்டுபிடித்து சிகிச்சை தருகின்ற லேசர் கதிர்.. நான் சோர்வடையும் நிலையில் instant ஆக அன்பைப் பொழிகின்ற ATM மிசீன்.. என் உடலை செழிப்புடன் வைத்திருக்க ஊக்குவிக்கும் Fi…
-
- 24 replies
- 3.6k views
-
-
சீமைக் கிளுவைக்குள் சீவியம் செய்தவள் சீமைக்குப் புறப்பட்டாள் சீறி எழுந்த சிறீலங்கன் எயார் லைன்ஸில்..! கூலி கொடுத்து தாலி வாங்கி வேலி போட்டனள் நாணி நின்றவள் கூனி நிற்பாள் என்று..! மாதம் பத்து சும்மா இருந்தவள் சுமந்தனள் சுமைகளோடு சுதந்திரக் கனவு..! தாலி பிரித்து வேலி தாண்டி நடப்பது பகற் கனவு கண்டனள் ஏங்கினள்.. படிதாண்டிப் பத்தினியும் பரத்தையானதில்..! சீமையில் சீதனம் சீர் தனம் சீ சீ.. என்பதில் சிந்திக்க இருக்கு சில சுயநலம்.. அதில் அடங்கி இருக்கு பலவீனம்.. பண வீக்கம்..! சீமைச் சிறப்புக்குள் சீரழியும் இயற்கைக்குள் சீமைக்கிளுவைகள் சீர் பெறுமா..??! விடை தேட ஆணும் பெண்ணும் எங்கே..??! கலந்தடி…
-
- 22 replies
- 8.6k views
-
-
மலையொத்த மனிதரெல்லாம் ஏதிலியாய்வாழ்விழந்து ஒருவர் பின் ஒருவராக சிறைப்பட நடந்தனர். சிறுமலைகள் கூடிநின்ற பூமியைப் புறங்கண்ட பின்னொரு நாளில் மலைக்காடுகள் ஒன்றுகூடி மலைகளை மெல்ல மெல்லத் தின்றுகொண்டிருந்தன. மக்களையும் மண்ணையும் நீண்ட மலைத் தொடர்கள் பிரித்துக் கூறு போட்டபோது சூரியன் மலை இடுக்கில் விழுந்து இறந்து போனான். நட்சத்திரங்கள் ஒன்றன்பின் ஒன்றாக உதிர்ந்துகொண்டிருந்தன. நிலவு தேய்ந்து தேய்ந்து மறைந்து போனது. இன்னும்.... மனிதர் மட்டும் ஏதிலியாய் இழந்தவற்றை நினைத்தபடி வான் பார்த்து............
-
- 0 replies
- 491 views
-
-
உண்மையிடம் கேட்டேன் ஒரு கேள்வி ...? நல்லது எது கெட்டது எது ...? உண்மை சொன்னது ..... வீட்டுக்குள்ளே செல்லும் போது செருப்பை .... கழற்றி வைக்கிறோம் .... செருப்பு ஒதுக்கப்படுகிறது .... கொழுத்தும் வெய்யிலில் .... பதைத்து துடிக்கும் போது .... செருப்பு சொர்கமாகிறது ....!!! நறுமணம் வீசும் போது ... மனம் சுவைக்கிறது ... துர்நாற்றம் வீசும்போது ... மனம் சுழிக்கிறது ...... காற்றே இல்லாத அறைக்குள் ..... அடைக்கப்பட்டு அடுத்து மூச்சு .... விட்டால் உயிர்பிழைக்கும் ... நிலையில் துர்நாற்ற காற்று .... சொர்க்கமாக மாறுகிறது ....!!! நாக்கு வறண்டு உடல் சோர்ந்து .... ஒரு துளி தண்ணீருக்கு மனம் ... ஏங்கி கொண்டிருக்கும்போது .... த…
-
- 3 replies
- 733 views
-
-
[size=4]தண்ணொளிநிலவே_ தளராது எனைதொடரும் உறவே, கண்மணிகள் கல்லறைகள் கண்டனையோ யென்மண்மீதினில், [/size] தழுவிக்கடக்கும் தென்றலே_தலை [size=4]தடவிமகிழ்த்தும் தாயே, விழுந்திட்ட மறவர் சிதைகளை வணங்கிச் சுமந்திங்கு வருவாயா?[/size] வான்முகிலே, கருணையின் உருவே_என் [size=4]விழியின் நிழலே,விலைபோகாத பொருளே பொன்னிறமேனியர் விதைத்த நிலத்தில் பூத்தூவியவர்கள் முகம் மலர்த்தி வருவாயா? எழுவான்கதிரே விடியலின் திருவே_எம் உணர்வின் வடிவே, உயிரின் முதலே வழுவாதயெம் வீரர்துயிலிடத்தில் வெம்மையகற்றி மெதுவாய் வருவாயா? நின்றெதிரில் விழியுருகித்தீபமேற்றிட அவருறங்கும் கல்லறைகண்டு தொழுதிட இன்றெமக்கொரு வழியுமில்லையே எம்விழி நீர்துடைக்கவொரு நாதியில்ல…
-
- 8 replies
- 864 views
-
-
-
- 4 replies
- 988 views
-
-
ஒற்றை இரவு எத்தனை பிணங்களைச் சுமக்கிறது எத்தனை பேரை விதவையாக்கிறது எத்தனை பேரை அநாதையாக்கிறது இத்தனையும் சுமக்கிறது தமிழீழம் இது மட்டுமா................? பத்துமாதம் தவமிருந்து பெற்ற பிள்ளையை ஷெல்லுக்கு பறிகொடுத்துவிட்டு தேம்பி அழும் தாயின் மனநிலை கண்டு பாலுக்கு அழுத பிள்ளைக்கு தாய்(ப்) பால் கொடுக்கும் போதே பாவிமகன் வானிலிருந்து போட்ட குண்டால் வாழ்விழந்துபோன தாய்,சேய் நிலை கண்டு சோற்றுக் கோப்பைக்குள் கை வைக்கும் போதே சொல்லாமல்ப் போன உயிர்களைக் கண்டு விடியலே தெரியாது விழி கூட மூடாது வாழும் உறவுகளின் நிலை கண்டு மரம்,செடி,கொடிக்கு கூட வாயிருந்தால் அழுதுவிடும் ஓநாய்கள் கூட ஒப்பாரி இசைக்கிறது இரவு வானில் நிலவு கூட சிவக்கிறது ஈ…
-
- 0 replies
- 1.2k views
-
-
எட்டி உதை தருவீரா ?? தேனினும் இனிய தெள்ளு தமிழில் தெவிட்டிடாது பாட வந்தேன் உங்கள் முன் பாவிசைக்க வந்தாலும் பக்குவமாய் பாடுவேனா ?? தீர்ப்பைச் சொல்வீர் உங்கள் கையால்!! ஏறுமுகமாய் இருந்தவேளை பருத்தி விற்றது என்நகரம் அப்பதட்டிகளும் அடுக்கடுக்காய் நிரைகட்டியது ஒருகாலம் சுவையான வடையும் என்நகரில் சுவைக்கவே ஓடிவருவர் அந்நகரம் பெற்றெடுத்த ஆரணங்கு என்பெயர் மைத்திரேயி !! ஆவலாய் வந்தவளை அள்ளிக் கொள்வீரா ?? இல்லை..... எட்டியே நின்று எட்டி உதை தருவீரா ? மைத்திரேயி 02 / 01 / 2013 பி .கு :இது நான் முதல் எழுதி அரிச்சுவடியிலை போட்டனான் . வாசிக்காத ஆக்களுக்கு திருப்பி போட்டிருக்கிறன் .நிர்வாகம் இது பிழையெண்டால் எடுத்துவிடுங்கோ.
-
- 11 replies
- 941 views
-
-
கசிந்துகொண்டிருக்கிறது தொலைக்கப்பட்ட அன்பின் மீதான கடைசி துளிகளும். முதல் சில நாட்களைப்போலவே இல்லை இந்த பிந்திய நாட்கள், அதீதமான அரவணைப்பை வெறுத்தொதுக்கும் மழலையொன்றின் பக்குவமற்ற நாட்களாய் கடந்துபோனது முந்தைய சில நாட்கள். எல்லை நோக்கி வளர்ந்துகொண்டிருக்கும் மரணமொன்றை, எல்லைகடந்து வளர்ந்துகொண்டிருக்கும் வாழ்தலொன்றை, உணர்த்தியழுதத்துகின்றன இந்த நாட்கள். தொலைக்கப்பட்ட அன்பு அழிந்துபோய்விடுவதில்லை - அது வேர்களில் அடங்கிக்கிடக்கிறது பின் அதுவே இலைநுனிகளில் நீராய் திரண்டும் வருகிறது. யாரவது ஒருவருடைய கண்களை பார்க்கும் போதும், யாராவதொருவர் முகத்தினை தடவும் போதும், யாரவது ஒருவர் கை அசைக்கும் போதும். தொலைக்கப்பட்ட அன்பு மிக கனதிய…
-
- 6 replies
- 682 views
-
-
என் காதலி தமிழீழச்சி...... இளங்கவி -தமிழீழ காதல் காணாத இறைவனிடம் வரம் கேட்கும் பக்தன் போல் நீ காட்டா பார்வைக்காய் காத்திருந்தேன் சிலவருடம் காரணம் நீ தமிழீழச்சி என்பதால்....... பெண்களின் உதடை கொவ்வைப்பழமாக வர்ணிப்பார் உன் உதட்டின் நிறமோ கரு நாவல் பழம் போல இருந்தும் முத்தமிட மனமேங்கிடும் காரணம் நீ தமிழீழச்சி என்பதால்...... பெண்ணின் மார்பழகு மாங்கனிக்கு உவமைகொள்ள உந்தன் மார்பழகோ தென்னம் குரும்பட்டியாய் ஒழிந்துகொள்ள இருந்தாலும் ரசித்துக்கொள்வேன் காரணம் நீ தமிழீழச்சி என்பதால் நீ மறைந்திருக்கும் இதர அழகை வர்ணிக்க மனமேங்கிறது ஆனாலும் முடியவில்லை காரணம் நீ தமிழீழச்சி என்பதால் அதுதான் நம் தமிழீழத்தின் காதலின் சிற…
-
- 2 replies
- 1.4k views
-
-
மின்னஞ்சல் பெட்டியில் மிதக்கின்றன ஓலைகள் அவலங்களாகவும் வாக்குகளிற்காகவும்..! என்னுணர்வுகளிற்கு அழக்கூட ஆசையில்லை அழுதழுது மரத்துப்போனதால்..! யாராவது ஒருவர் மனமிரங்காராவென வாக்குப்போடுகிறேன் இணையத்தளங்களை நாடி.. வருகிறார்களில்லையே!! கண்டிப்பும் எச்சரிக்கையும் வெறும் சேதிகளாகவல்லவா வருகின்றன கைகட்டிக் கொண்டு!! அவரை நம்பி இவரை நம்பி ஆறுதல் தேடலாமென்றால் ஆறுதலுக்கான அன்பளிப்புகள் வேகும் புண்ணில் பாயும் வேல்களாகின்றனவே!! மனிதாபிமான முகமூடிகளுள் முகத்தைத் தேடித்தேடியே என் மின்னஞ்சல்பெட்டியுள் நேரத்தைத் தொலைக்கிறேன்.
-
- 3 replies
- 1.2k views
-
-
பிரளயத்தின் சாட்சி கண்கொண்டு பார்க்க முடியாது ஒரு பறவை இரத்தம் சொட்டச் சொட்ட நந்திக்கடற்கரைச் சேற்றுக்குள் பிய்த்து வீசப்பட்டிருப்பதை முதலில் நிர்வாணத்தால் கொலை செய்தனர் பின்னர் ஆண்குறிகளால் பின்னர் துப்பாக்கிகளால் அழுகிய பிணங்களைப் புணரும் வீரமிகு படைகள் வேறெதைச் செய்வர்? யாருமற்ற கடற்கரையில் ஈனக்குரல் எழுப்புகையில் ஒரு ஊர்க்குருவியும் துணைக்கில்லை வற்றப்பளையம்மன் எங்கு சென்றாள்? யாராலும் எழுத முடியாது நேரிட்ட நிர்க்கதியை சிந்திய கண்ணீரை உறிஞ்சபடப்ட்ட இரத்தத்தை பிய்த்தெறியப்பட்ட கதையை இறுதிக்குரலை நிராயுதயபாணிகளை வேட்டையாடும் கொலையாளிகளிடம் ‘அது நானில்லை’ என்று சொன்னாய் …
-
- 1 reply
- 629 views
-
-
ஆழத்தொலைந்த அலைகளோடு இசைப்பிரியா...! காலம் 2013 ஆடி..., இரவு கரையும் ஈரத்தில் நந்திக்கடல் ஆழத்தில் நிலவு கரையும் நாளொன்றில் அர்த்த இரவொன்று....! அமைதியாய் ஓடியலைந்த அலையில் முகம் நனைத்த அன்றைப் பொழுதின் இனிமை இதய அறைகளில்...! காலம் 2009 மேமாதம்...., காலழைந்த அந்தக் கன இருளின் திரையூடே களமாடியகதை சொன்ன தோழியின் காலடிகள் மீளத் தேடியது நினைவு....! ஆழத்தொலைந்த அலைகளோடு என் ஆத்மா நிறைந்த ஆயிரமாயிரம் பேரின் முகங்களின் ஞாபகம் கண்ணீராய்....! மீளத்தொலைந்து போனது கடைசிக் கதைகளும் காலம் மறைத்த துயர்களும் பின்னிரவுக் கனவுகளில் பிரளயமாக....! பிரியம் நிறைந்த தோழி இசைப்பிரியாவின் இறுதிக் குரலின் துயர் படமாய் ஒருநாள் பலந…
-
- 15 replies
- 1.9k views
-
-
ஒற்றை சொற்களாய் உதிர்த்து வானத்தை நிரப்பிய பின், உன் துயரம் தோய்ந்த நாக்கு என் தனிமையை தின்னத்தொடங்குகிறது. இரவின் நீட்சியும் வியர்வை நாற்றமும் பிசுபிசுப்பின் அந்தரிப்பும் மோகனத் தவம் கலைக்காமல் சாய்ந்தெழும் பெருமூச்சும் அவசத்துடன் பகிரப்படுகையில் யாருக்கும் கேளாமல் நீ சிந்திய ஓலமொன்று நட்சத்திரங்களை விழுத்தியது. நிராகரிக்கமுடியாத முத்தத்தை அவமானத்துடனும், கண்ணீருடனும் அருவருப்புடனும் எதிர்கொள்ளும் அபத்தப் பொழுதொன்று நினைவுகளில் விரிகையில், சொற்கள் வறண்டு ஆவியாகிப் போகிறது, கதவுகள் மூடிய கண்ணீர்வளையத்தின் மறைவில் என்னைத் துகிலுரியத் தொடங்குகிறேன் உனக்குப் பரிசளிக்க. வானத்தை நிரப்பிய உன் சொற்கள் என் தனிமையை தின்று நட்சத்திரங்களாய் பூக்கின்றன
-
- 5 replies
- 995 views
-
-
தத்தித் தவழும் குழந்தை தத்தித் தவழும் கண்ணே நீ...... பூமியில் கால் தடம் பதித்து நடந்து செல்லும் அழகு வெகு தூரத்தில் இல்லை.... இன்னும் நீ தவழ்ந்து சென்று நிற்க முயற்சிக்கும் திறனைப் பார்த்து உன் எதிர் காலத்தைக் கணித்துவிட்டேன்.. நான் உன் அழகிய எதிர்காலத்தைக் கணித்துவிட்டேன்....... உன்னவள் தாய்க்கரங்களிற்கு இனியும் பாரத்தைக் கொடுக்காமல் இந்த வயதிலே பொறுப்பை உணர்ந்தபடி நீ... முயற்சி செய்கின்றாயே... தவழ்ந்து தவழ்ந்து நடக்க முயற்சி செய்கின்றாயே... நீ.. வாழ்வாய் இவ்வுலகில் நலமுடன் சந்தோஷமாக வாழ்வாய் என்றென்றும் வாழ்வாய்.......
-
- 6 replies
- 3.8k views
-
-
நீ தமிழரின் தலைவனா.....??? தன் மாணம் வித்து நீயும் தான் நடக்கிறாய்... நீ தமிழர்களின் தலைவன் என்று ஏன் உரைக்கிறாய்....?? கொள்கைகளை மறந்து நீயும் கொள்ளை அடிக்கிறாய்.... உந்தன் கொள்கைகள் இதுவென்றா எடுத்துரைக்கிறாய்...?? நடு நாசி நீ புகுந்து நகையறுக்கிறாய்... நம்ம தமிழை மிரட்டி பணம் வேறு நீ பறிக்கிறாய்... விடுதலைக்காய் வந்தாய் என்று ஏன் குலைக்கிறாய்...??? இந்த விடுகாளி வேலைகளை ஏன் நடத்திறாய்....?? சிறுவர்களை பிடித்து நீயும் படையில் இணைக்கிறாய்.... அந்தோ சீறி வரும் புலிகளுக்கு படையல் அளிக்கிறாய்... ஈவ் இரக்கம் இன்றி இன்று நீ நடக்கிறா…
-
- 3 replies
- 1.3k views
-
-
இருட்டின் அறையில், விளக்கின் ஒளியில், எனது ஒளிமயமான வாழ்வைத் தேடுகின்றேன்...
-
- 7 replies
- 1.4k views
-
-
என் குடும்பம்..! மீசை அரும்ப ஆசை முளை விட அலை பாயும் ஆண் மனம் பெண் மனம் பொழுதொரு காதல் காமம் கண்டு கரங்கோர்க்க அற்ப சுகம் தேடிய உடலிணைவின் கதறலில் அழுகையில் உறவுகள் பிறக்கும் அதுவே குடும்பமாக.. மானிட வாழ்வு அடங்குகிறது குறுகிய விட்டமுடன் வட்டமாக..! ஓமோன்களின் ஆசைக்கு அடங்கும் சுயநலப் பொதிகளாய் எங்கும் மானிடர் மனங்கள். எல்லைகள் கடந்து.. தீட்டிய சம்பிரதாயங்கள் தாண்டி.. சிந்தனை விரித்துப் பறந்து வா... மனதை அகட்டி வா.. காண்பாய்.. அன்பின் பரிசாய் அளந்து கட்டி அன்பளிக்கப்பட்டவை.. அன்புக்கு ஏங்கும் குழவிகளாய்.. தந்தை தாயிருந்தும் அநாதைகளாய்... போர்களின் உச்சரிப்பில் உறவுகள் சிதைய …
-
- 16 replies
- 3.8k views
-
-
"என் மனக் கோயிலின் ஊஞ்சலிலே" / "In my heart" [என் அம்மாவிற்கு / For my mother [05/10/1917-14/08/2009]] "என் மனக் கோயிலின் ஊஞ்சலிலே .... நான் வணங்கும் தெய்வமும் தாயம்மா - என் கண்கண்ட தெய்வமும் நீயம்மா" "என் வாய்மையும் நேர்மையும் நீயம்மா .... நான் வாழ்ந்திடும் வாழ்க்கையும் உனதம்மா - என் தாய்மையிற் பூத்திட்ட பூங்கொடி நீயம்மா" "என் உழைப்பும் உயர்வும் உன் கனவேயம்மா ... உன் வாசனைப் பூக்களும் என் உயிர்ப்பேயம்மா .... நான் மீண்டும் வேண்டுவது உன் கருவறையம்மா" "வேரோடி முளைத்தலும் விளாத்தி விளாத்தியினமே பாரோடி பறந்தாலும் நான் உன் சிறகே அம்மா - என் …
-
- 0 replies
- 106 views
-
-
பிழை நடக்குது என உணா்ந்தவன் துவக்கை எடுத்தான் களை பிடுங்க – அவன் எதிரிகள் தலையை எடுத்தான் சிலை போல் சிலா் நின்றது கண்டு விழி சிவந்து நின்றான் மலை மேல் விழினும் தலையால் மோதி உடைப்பாய் என்றான்! நிலை உயா்ந்து நின்ற சிலா் மண்ணை விலை பேசுதல் கண்டு கையிலைச் சிவன் போல் உக்கிரம் கொண்டான்! மண்ணை மீற்க மறவா் படை அமைத்தான் கழுத்தில் நஞ்சு கட்டி யமனின் வேலை குறைத்தான்! களம் பல ஆடி பகையோடு மோதி நகை பல செய்து நின்றான்! திகைத்து நின்றான் பகைவன் திசை பல ஆள் அனுப்பி சூழ்ந்து நின்று சூழ்ச்சி செய்தான்! எதிர்த்து நின்றான் தம்பிகளோடு அண்ணன் இறுதியில் வென்றது துரோகம்! வீரம் சுமந்து நெஞ்சில் ஈழம் சுமந்து நி…
-
- 1 reply
- 907 views
-
-
நிமலரூபன் சிறைச்சாலையில் கொலை... இது பலருக்கு செய்தி.... சிலருக்கு ஆறாத்துயர்... நிமலா.... நாம் சொல்கிறோம்... உனக்கு இது விடுதலை! உண்மையிலேயே நீ விடுதலை அடைந்துவிட்டாய்..... நாம் இன்னும் விடுதலைக்காக காத்திருக்கிறோம்.... உடலிலும் உள்ளத்திலும் வலிகளை சுமந்தபடி..... விடுதலைக்காய் காத்திருக்கிறோம்...... உள்ளேயும்........... வெளியேயும்...... காலச்சக்கரத்தின் ஓட்டத்தில் நாம் கதைகளும், கவிதைகளும் ஆகிவிட்டோம். நிஜம்களாய் இருந்த நாம்... இப்போது நிழல்களாய் மாறிவிட்டோம். விடுதலைக்காய் காத்திருக்கிறோம்.... விடுதலை கிடைக்கும்போது நிழல்களும் அழிந்துவிடும்.
-
- 1 reply
- 759 views
-
-
காலம் தன் சுழலும் ஒவ்வொரு பற்களிடையேயும் பிணங்களையிழுத்துச் செல்லும் யுத்தகாலப்பொழுதில் இனி வடிகட்டிய செய்திகளை மட்டுமே அறிவதற்கென ஒரு சிறுவனை கனவினில் நெய்யத் தொடங்கினேன் அவன் நான் விடியலில் எழும்புவதற்குமுன் சமாதானத்து நிற திரைச்சீலைகளைத் தொங்கவிட்டான் குருதியை நினைவுபடுத்திவிடுமோ என்ற எச்சரிக்கையில் சிவப்பாய்ப் பூக்கும் செடிகளையெல்லாம் களைகளைப்போல அகற்றிவிட்டதில் அவனது அன்பு விளங்கியது செவ்வந்திகள் செம்மஞ்சளாய்ப் பூத்து 'மண்ணின்' நினைவுகளை வேரில் தேக்கிவைத்திருப்பதால் அகற்றுவதா இல்லை விடுவதாவென என் சுபீட்சத்தின் பொருட்டுச் சிறுவனுக்கு மிகப்பெரும் குழப்பம் உள்ளதும் நான…
-
- 0 replies
- 819 views
-
-
mummy i want தண்ணி....!!!! ஆயிரம் மைல் கடந்து அன்னைதேசம் தனை பிரிந்து அனாதைகளாய் ஆனபோதும் அண்ணனாய் தம்பியாய் பிள்ளைகளாய் உற்ற உறவுகளாய் அன்போடு அரவணைக்கும் என் புலம் பெயர் சொந்தங்களே வணக்கம்! என் உயிரிலும் மேலான தமிழ்தாயின் உச்சிமுகர்ந்து அவள் தந்த தமிழ்ப்பாலின் பாசம் உணர்ந்து புதுவை அண்ணாவை என் நெஞ்சில் வைத்து காசி அண்ணாவின் கைபிடித்து கவிதை நான் எழுதி வந்தேன் காலம் அறிந்து! வீட்டிலே தமிழ்! தமிழா வீட்டிலே தமிழ் பேசு-இல்லையேல் தமிழ்மானம் போச்சு! தமிழனாய் பிறந்தோம் என்று பெருமை பேசு-இல்லையேல் தமிழினத்தின் அருமை போச்சு! தமிழினத்தின் உயிர் மூச்சுதானே எங்கள் செம்மொழி மூச்சையே நிறுத்திவிட்டால் இனம் வாழ ஏது வழி? படலை திறந்து வந்தோம் உடலை மட்டும் தானே கொண்டுவந்தோ…
-
- 4 replies
- 889 views
-
-
பாடுக மனமே வ.ஐ.ச.ஜெயபாலன் எரிந்த புல்வெளிகளில் இனி வரவுள்ள மழையையும் பூத்திடும் கனவுகளையும் பாடுகிற கவிஞனடி நான் கலங்காதே தாய்மண்ணே. என் அன்னையின் திருவுடல் புதைத்த பூமியைக் காத்து வீழ்ந்த பெண்களின்மீது சிங்கள பைலா பாடியும் ஆடியும் பேய்கள் புணரும் கொடும் பொழுதினிலும் நாளைய வசந்தப் பரணியே பாடுக மனமே. வணக்கத்துக்குரிய நம் மூதாதையர்களின் எலும்புகள்மீது எந்தத் தீயும் நிலைக்காது ஆதலினால் கருமேகமாய் விரியும் சாம்பல் வெளியில் நின்று இனி வானவில்லாகவுள்ள பூக்களையே பாடுக மனமே. உறவுகளின் ஓலங்களை அமுக்கும் தோழ தோழியரின் போர்முரசுகளே என் வசந்தப் பரனிக்கு இசையுங்கள். அம்மா தமிழ் மண்ணெடுத்து இன்பப் பொழுதொன்றில் நீயும் எந்தை…
-
- 23 replies
- 5.2k views
-
-
யாழ் இணையம் - 8ஆவது அகவை - வாழ்த்துக்கவிதை யாழ் இணையத்தின் எட்டாவது அகவையை முன்னிட்டு யாழ் இணையம் பற்றிய உங்கள் கவிதைகளை, வாழ்த்துக்கவிதைகளை இப்பகுதியில் இணையுங்கள்.
-
- 24 replies
- 4.2k views
-