கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5130 topics in this forum
-
கட்டுப்பாடில்லா என்கவி கேட்பின், குளிர்நிலா வானில் ஓவியம் கீறும்.
-
- 14 replies
- 2.5k views
-
-
முதுமை..... இளமையின் நினைவை..... எரிந்த சாம்பலாய்..... சுமர்ந்து கொண்டிருக்கும்.... சுமைதாங்கி..........! மரணத்தின் வாசலை....... ஏக்கத்தோடும் பயத்தோடும்....... வரவேற்றுக்கொண்டிருக்கும்...... மர்ம அறை............! அனுபவங்களை....... முற்களாகவும்...... பூக்களாகவும்...... ரசித்துக்கொண்டிருக்கும்..... ரோஜாச்செடி.....! வார்த்தைகளின்..... வீரியமும்....... இன்பங்களின்....... வீரியமும்...... அடங்கியிருக்கும்....... பெட்டிப்பாம்பு..........! எழும்பு கூட்டை..... தோலால் மறைத்து வைத்து...... கிறுக்கள் சித்திரத்துக்கு...... உயிர் கொடுக்கும்..... உன்னதமான உயிர்.........! நூறு மீற்றர் ஓட்டத்தை...... நொடிக்குள் ஓடியவனும்..…
-
- 5 replies
- 1.4k views
-
-
குறிகளை அடையாளம் காட்டும் சிறுமி - தீபச்செல்வன் பள்ளிக்கூடம் செல்ல ஓர் தெருவைக் காட்டவில்லை காவலரணற்ற ஓர் நகரைக் காட்டவில்லை துள்ளித்திரிய ஒரு புல்வெளியையோ ஊஞ்சலாட ஒரு பூங்காவையோ காட்டவில்லை பூர்வீக நிலத்தையும் மூதாதையரின் வீட்டையும் காட்ட முடியவில்லை சிறு அமைதியையோ அச்சமற்ற ஓர் பொழுதையோ காட்டவுமில்லை காட்டினோம் பாதுகாப்பற்ற நிலத்தை அலைகடலையும் எழும் சூரியனையும் காயங்களற்ற ஒரு பொம்மையையும் கிழியாத பூக்களையும் பறவைகள் நிறைந்த வானத்தையும் காட்ட முடியவில்லை எல்லா உறுப்புக்களையும் புணர்பவர்களை சூழ நிறுத்திவிட்டு காட்ட முடியாதிருந்தோம் ஒளியிருக்கும் திசையை ஈற்றில் வழங்கியிருக்கிறோம் ஆண்குறிகளை அடையாளம் காட்டுமொரு காலத்தை. 0 …
-
- 1 reply
- 955 views
-
-
புவியீர்ப்பு விசையின் சக்திக்குள்ளே உயரப்பறக்கும் பருந்து கண்ணில்பட்டதை தன்னிலும் சிறியதென்றது துாரம் எம் பார்வைக்குள் அடக்கப்படும் காட்சிகள் அல்ல அதையம் தாண்டும் அருகே போகும்போது ஈர்க்கப்படும் விடையம் எம் சிந்தனையில் கட்டுப்பாட்டை விதிக்கின்றது சாட்சி ஒதுக்கப்பட்ட உண்மைகள்போல் அருகில் இல்லாத ஒன்றின் மீதான விருப்பம் இருப்பதை ஒதுக்கி வைக்கின்றது இழக்க நேரிடும் என்ற உண்மை அறியாதவரை சிந்தனை பந்தில் அடைக்கப்பட்ட காற்றல்ல பரந்த விரிந்த பூமிப்பந்தில் பார்வையின் நோக்கத்தில் படைப்பாளி சிக்கிக்கிடப்பதுபோல்
-
- 5 replies
- 751 views
-
-
-
வேசங்கள்! மனித பிறவியது மண்ணில் சிறப்பு பிறப்பாமே! கவலைகல் கண்ணீர்கள் சந்தோசங்கள் சாகசங்கள் இவை எல்லாம் அனுபவிக்குமாமே! சோதனைகளை விரட்டிவிட்டு சாதனை படிகளை கண்டறிந்து வெற்றிப்பாதையில் செல்லுமாமே! மனிதம் உள்ளோர் மட்டும் தானோ இத்தனைக்கும் உரியவர்கள்! மனிதமின்றி மனிதனாய் நித்திலத்தில் வேசங்கள் போட்டு நடைபோடும் வேடதாரிகளுக்கு என்ன தெரியும்! கவலை மறக்க கண்ணீரும் கண்ணீரை மறக்க புன்னகையும் இறைவன் தந்த வரமென்று அறியா வேடதாரிகளே நில்லுங்கள்! நித்திலம் நின் ஆயுள் தந்தது மனிதனாய் வாழவே -ஆனால் நீயோ வேசங்கள் பல தரித்து வேடதாரி பட்டம் பெற்று நித்திலத்தையே நிலைகுலைக்கின்றாயே உன்னால் முடியாது என்…
-
- 6 replies
- 2k views
-
-
இன்னும் வ.ஐ.ச.ஜெயபாலன் இயற்க்கையின் மயானமாய் விரியும் சென்னை நடுகற் காட்டில் அணில்களின் ஒப்பாரியும் பெருகிக் கொழுத்த காக்கைகளின் பாடலும் நிறைகிற மாலைப் பொழுது. இன்னும் பூந் தென்றல் பெற்றோல் புகை அமுங்க கமழவது மகிழ்ச்சி.. இன்னும் வங்கக் கடலிருந்து ஒரு தாய் ஆமை சென்னையில் கரை எறுவது நம்பிக்கை... . . இன்னும் எஞ்சியிருந்த அணில்கள் காகத்திடம் தங்கள் கடைசிக் குஞ்சையும் இழக்கும் அச்சத்தில் ஓலமிட்டுக் கொண்டிருக்கிற நாட்களில் ஒரு கையாலாகாத கவிஞனாய் தவிக்கிறேன். காதல் இழப்புமட்டுமே சோகமல்ல என்பதை உணர்ந்தபடி.. மொட்டைக் கூரைகளில் சுவர் நசித்த மரங்களில் குப்பை மேடுகள் வளரும் தெருக்களில் கோடா கோடிக் கருஞ் சிலந்திகளாய் நூல் இறங்கி ஊர ஆ…
-
- 6 replies
- 2.1k views
-
-
குறும்பு கலந்து எழுதப்படும் குறுகிய பாவாக இருப்பதால் இரட்டை அர்த்தம் தொனிக்க குறும்பா என்று பெயரிட்டார்கள். மறைந்த எமது ஈழக் கவிஞர் மகாகவியே இதற்கு முன்னோடி. வாழ்க்கையில் நடக்கும் சிறிய சம்பவங்களிலுள்ள நகைச்சுவையை அல்லது சாதாரண சம்பவங்களுக்கே நகைச்சுவையையூட்டி குறும்பாக்களை எழுதமுடியும். நமது தமிழில் அத்தகைய இலக்கியவகையிருக்கும்போது ஏன் நாம் லிமெரிக்கென்று பிறமொழிப் பெயர் கொடுத்து எமது தமிழின் ஆற்றலை இருட்டடிப்புச் செய்கிறோமென்று தெரியவில்லை. இதே வகையில் ஆத்திசூடி போன்ற குறுகிய கவிவரிகளையும் குறட்பாக்களையும் சேர்க்கலாம். தமிழில் போதிய பாவகைகளுண்டு. நாம் எதற்காக கைக்கூவை ஜப்பானிலிருந்து இறக்க வேண்டுமென்றும் தெரியவில்லை. இப்படியே போனால் ஒரு காலத்தில், தமிழ் தனது பாவ…
-
- 2 replies
- 1.9k views
-
-
சுள்ளிகள் பொறுக்கும் காக்கையின் கனவுகளில் கூடு. கூட்டில் குலவும் இணையின் இதமான உரசலும் நெருக்கமும், நெருக்கத்தில் விளைச்சலில் கூடுநிறை முட்டைகள், சிறகணைப்பின் சூட்டில் சிலிர்த்துத் தலைநீட்டும் குஞ்சுகள், வழியெல்லாம் தேடி வாகாய்க் கொணர்ந்த இரை, இரை கேட்டு வாய் பிளக்கும் குஞ்சுகளின் பசிக்குரல், பசி தீர்க்கும் தாய்மையின் பரிவான வாய் ஊட்டல். ஓயாத பகற்கனவும் அயராத உழைப்புமாய்க் காலம் கடக்க, நனவானது முதல்கனவு கூட்டின் முழுமையில் குதூகலித்துத் துயில் கொண்ட முதல்நாள் இரவு கருத்தது மேகம் சிறுத்தது மேனி சுழன்றது காற்று உழன்றது மரக்கிளை கூடு சிதைந்தது காடு கவிழ்ந்தது உயிர்த்தெழுந்த காகம் …
-
- 0 replies
- 919 views
-
-
விஜயனின் வழித்தோன்றல்களே ! ------------------------------------------- சிங்கத்தைப் புணர்ந்து உங்களைப் போட்ட அன்னைக்குக் கூட உங்களது செயலை நினைத்தால் அருவருக்கும் ! அருவருப்பின் வழிவந்த அரியண்டப் புத்திரரே(?) நீவிர் அழிவது உறுதியடா ! நரமுண்ணும் பிசாசுகளே நாலுகால் பிறவிகளே சாக்கடையில் மிதந்துவந்த சண்டாளப் பிறவிகளே உயிரற்ற உடலம் மீது உங்கள் இயலாமையை காட்டுகின்ற கோளைகளே கண்ணியம் புரியாத காட்டுமிராண்டிக் கயவர்களே நாய் கூடப் புரியாத ஈனச் செயல் புரிகின்ற ஊன மனம் கொண்ட ஈனப் பிறவிகளே புரிய வைக்கும் காலம் வரும் ! மனிதம் இல்லாத மானிட உருக்கொண்ட சிங்கத்துக்குப் பிறந்த சீரியமும் இல்லாத வீரியமும் இல்லாத பிணம் தின்னும் கூட்ட…
-
- 3 replies
- 2.2k views
-
-
கவிஞர் செல்வி கடத்தப்பட்ட தினம் ஆகஸ்ட் 30, 1991. போராட்டச் சூழல் பலியெடுத்த எழுத்தாளர்களில் இவருமொருவர். இவர் எழுத்தாளர் மட்டுமல்லர். சமூக, அரசியற் செயற்பாட்டாளரும் கூட. இவரது இயற்பெயர் செல்வநிதி தியாகராசா. வவுனியா சேமமடு பகுதியைச் சேர்ந்தவர். யாழ் பல்கலைக்கழக மாணவி. இவர் கடத்தப்பட்ட பின் இவருக்குக் 'பென்' (PEN) அமைப்பின் எழுத்துச் சுதந்திரத்துக்கான பன்னாட்டு விருது கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது. ஆனால் அவ்விருதாலும் இவரைக் காப்பாற்ற முடியவில்லையென்பது துயரமானது.. கவிஞர் செல்வியின் கவிதைகள் சிலவற்றை 'வைகறை' பத்திரிகை மீள்பிரசுரம் செய்துள்ளது. அவற்றிலொரு கவிதை 'விடைபெற்ற நண்பனுக்கு' நன்றி: வைகறை.
-
- 0 replies
- 479 views
-
-
மிடுக்குடன் முழங்குவோம் மீண்டும் துலங்குவோம் நிர்ப்பயமின்றி போயின நீதி நீர்த்துத்தான் போகுமோ வேள்வியின் சோதி பார்த்து உடல் வருத்தி ஊன் உருக்கி வளர் சோதி வேர்த்து உயிர் ஈந்து காத்த தமிழ் சாதி! நினைவில் உயர் கனவில் இசையும் இழை அசைவில்; நிலை பிறழா உயிர் உறவில் இழைந்தேயான இசைவில் கலையில் இணை கருவில் ஊடேயான உசாவில் நிலைத்தே இழைத்த வீர வைரம் திசையிழந்த தீரமாய் சிதைந்தே போகுமா? சீரிழந்து ஊரிழந்து உறவிழந்து வீழுமா? இல்லையென்போர் இணைந்தே எழக இறுதிப் போரில் வெல்வோம் இழைக அறுதி இதுதான் ஆர்ப்பாரித்து நுளைக ஆக்குவோம் தமிழீழம் ஆக்கிரமிப்பை களைக நூற்போம்.நூற்போம் புலிப்படை வெல்க ஓப்பாரி வைப்பதை இனியும் நிறுவோம் ஓங்கி பகை வீழ ஓங்காரமாய்…
-
- 0 replies
- 595 views
-
-
"வனத்தின் அழைப்பு" அஸ்வகோஸ்:' (சிறு குறிப்பு) '...என்னை ஒறுத்து ஒறுத்து அழித்துக் கொள்கையில் என் மகன் போயிருந்தான் தன்னை அர்த்தப் படுத்தவென்று என் கனவுகள் வீழவும் மண்ணின் குரலிற்கு செவியீந்து போயிருந்தான்...' ஒரு ஓரத்தில் ஒதுங்கிக் கொண்டேன், நான் துயருற வேண்டி. சிலவேளைகளின் பொருட்டு இஃது மிகவும் சாதரணமாக நான் கொள்ளும் தியானம்! படித்து முடித்த'வனத்தின் அழைப்பு' கையிலிருக்க,மனம் மட்டும் கிளர்ச்சிக்குள்ளாகியபடி. 'இறுதியாக என்னிடம் வந்திருந்தான் அவனது தேகம் குளிர்ந்திருந்தது இரத்தமுறிஞ்ச நுளம்புகள் வரவில்லை ஈக்களை அண்ட நான் விடவில்லை' சதா செவிகளில் விழும் கனத்த அதிர்வுகள். என்னயிது? சவப்பெட்டி நட்டநடுவே. ஒன்றல்ல, பல.…
-
- 1 reply
- 896 views
-
-
மக்களின் தீர்ப்பை இனத்தின் விதியை ஒருசிலர் கையில் எடுத்து நாங்கள் சொல்வதை மட்டும் எழுத்து என முனிவர் கணக்கா கதை சொல்ல கொம்பு உடைத்து எழுதிய கணபதிகள் சிங்க கொடிபிடித்து விட நீ இன துரோகி சிங்களத்தின் அருவருடி மாமா வேலை என தலைமை செய்த தெரிவை நாங்களே மாற்றுவோம் என பொங்கினர் இங்கின பல தலைமை விளங்கவில்லை ... பலர் வெளிய போயினர் சிலர் உள்ளே வர இவர்கள் சரிவறார் கொள்கையை விடுகிறார் நாங்கள் தொடங்குவோம் புது கட்சி தேசியம் பேசினோம் தேசியத்தை தூக்கலா பேசினோம் எவரும் மதிக்கவில்லை காரணம் விளங்கவில்லை .. காலம் நெருங்கி வர ஈழம் விடை சொல்லும் நேரம் காத்திருந்த மக்கள் பழைய பாடம் மறவாது. மேல்குடி மகன் வடக்கு தெரியாதவர் இவர் வேணாம் புலம் பெயர்த்த புலிகள் என சொல்லிக்கொள்வோர…
-
- 7 replies
- 1k views
-
-
புலத்துக் கரும்புலியாய் ஓர் பேரொளி.... கவிதை - இளங்கவி போரின் கூக்குரல்கள் புகுந்தது தமிழ் நெஞ்ச்சுக்குள்... போரை நிறுத்தென்று மக்களில் ஒருவனாய்ப் புலம்பினான்.... உலகின் காதில் எம் குரல்கள் கேட்கவில்லை..... ஈழத்து அழுகுரல்கள் அவன் ஆயுளைப் பிழிந்தது.... அவன் கைகள் எழுதியது மரண சாசனம்..... கால்கள் இலக்கு நோக்கி ஓர் நீண்ட பயணம்..... திடீரென தோன்றிய முடிவல்ல அவன் சிந்தனையில் தோன்றிய தெளிவு..... பல்லாயிரம் உயிருக்கு பார்காத ஐ. நாவா பாவம் இவன் உயிரைப் பார்க்கும்.... அவனுக்கும் தெரிந்திருக்கும் ஆனாலும் ஈழத்து அழுகுரலில் அவன் ஆன்மா கரைந்திருக்கும்... அமைதி காக்க தோன்றிய ஐ.நா பொய் முகம் காட்ட..... புலத்துக் கரும்…
-
- 12 replies
- 1.3k views
-
-
-
- 45 replies
- 4.5k views
-
-
தேடல்கள்----------------- என் தேடல்களை உனக்குள்ளும் காதலுக்குமாய் வீணாக்கியதன் பிற்பாடு ஏதோ ஒரு ராத்திரியின் மௌனத்தை கனமான இதயத்தோடு ஏற்றுக்கொண்டது மனசு. என் இரவுகளை- நீ வெறுமையாக்கிய போதும் என் இதயத்தை போலவே கனக்கிறது மௌனம். என் மௌனங்களின் பிரிய காதலியே பிரிவு எனக்கும் உனக்கும் தான் காதலுக்கல்ல.....!!!!
-
- 9 replies
- 2.1k views
-
-
நான் இரசித்த கவிதை இது. உங்களுக்காக இங்கு இணைக்கிறேன். எழுதியவரின் பெயர் சிந்து. அடிமைச்சிறை தகர்... பிறப்பிலிருந்து மரணம் வரை அறியாமை உனது வாழ்வானதோ? மழைக்குத் தோன்றி மாண்டு போகும் மண்புழுவா நீ? மலர்களும் காயப்படுத்தாத தென்றல் தான் பெண்கள் புயலாய் மாற்றம் கொண்டால் மலைகளையும் சாய்த்திடுவர் இடுப்பொடிந்து நீயும் தலைவணங்கியது போதும் கொஞ்சம் நிமிர்ந்து நீயும் வாழும் உலகைப் பார் எல்லாமே உனக்குள் அடங்குமடி பெண்ணே பெண்கள் மீது திணிக்கப்படும் பாலியல் வன்முறை ஆண்கள் இச்சை தீர்ந்தபின் சுருக்குக் கயிற்றில் இறுகிச் சாகும் விலங்கினமா பெண்கள்? அடிமை சிறை தகர்த்து சிறகுகள் முளைத்து சுதந்திர வானில் நீயும் பறந்திட வேண்டா…
-
- 2 replies
- 1.4k views
-
-
-
- 18 replies
- 2.6k views
-
-
நானும் நோக்கினேன் அவளும் நோக்கினாள் அவள் கண்ணுக்குள் காதலைத்தேடினேன் கானகத்துக்குத்தான் வழி காட்டின
-
- 15 replies
- 4k views
-
-
பார்த்தவுடனே பாசமாய் பண்பாக அக்கா என்றழைத்தாய் பயத்துடனும் அன்போடும் புன்னகையோடு எனை அண்மித்தாய் அணமித்த உன்னை இன்புடன் அரவணைத்தேன் தம்பியென பாசத்தோடும் கண்டிப்போடும் பாதுகாத்தேன் தம்பியுனை இருவீட்டில் பிறந்திருப்பினும் இருவரும் உறவுகள் ஆனோம் அன்றாடம் என் வீட்டுக்கு வந்தாய் அனுதினமும் உந்தன் வீட்டில் நான் பிறந்த நாளின் போது பாயாசம் ஊட்டி விட்டதை மறக்க முடியாது நான் மயானம் செல்லும் வரை எவ்வளவோ கலகலப்பாக எப்பொழுதும் இருந்த நமக்குள் யார் கண்பட்டதோ தெரியலியே யாம் இருவரும் எதிரிகளானோம் என்று தணியும் இந்த கோபம் என்னால் முடியவில்லை உனை நீங்க முயல்கின்றேன் உனை அணைக்க முரட்டு கோபம் எனை தடுக்குதே என் கூடப்பிறவாத தம…
-
- 19 replies
- 27.7k views
-
-
சனி மாற்றம் நல்லதென்று சாதகத்தில் சொல்லக்கேட்டு பாதகமில்லையென்று பறந்தாயன்று பனி நாடு ஒன்றுக்கு கடன் பட்ட பணத்தை திருப்பியுடன் தருவேனென உடன் பட்டுப்போயங்கு உழைப்புத் தேடினாய் தமிழ் மட்டும் தெரிந்த நீ திடங்கொண்டு மட்டும் திக்கிதிக்கியொரு மொழியை தினமொன்றாய் விழுங்கி கைப்பாசையோடு முன் ஒரு காலத்தை தொடங்கி நின்றாய் சறங்கட்டி வெறும் மேலில் தண்ணிவார்க்கும் உனக்கு பனங்கட்டி போல் அளவில் பனிவிழும் தேசத்தில் அடங்கிப்போய் ஆடைக்குள் ஆள் மாறலானாய் வெண்கட்டி வயல்களாய் வீதியெங்கும் குவிந்த பனிக்கட்டி சறுக்கி பழுவில் அடிபட்டால் சுடுதண்ணி வைத்து ஓத்தித் தடவுதற்கும் ஒருவரும் கிடையாது அப்புவின் பனந்தோப்புள் அதிகாலை போய்க…
-
- 2 replies
- 1.4k views
-
-
[size=5]மான் விழி காட்டி [/size] [size=5]மை விழி பேசி [/size] [size=5]மாறாத என்னை [/size] [size=5]மாற்றத்துக்குள் வைத்தவளே ![/size] [size=5]வசந்தம் இன்று [/size] [size=5]ரணக்களாய் வலிக்கிறது ,[/size] [size=5]துண்டிலிலே சிக்கிய மீனாக [/size] [size=5]எந்த நம்பிக்கையும் [/size] [size=5]இல்லாமல் இருக்கிறது [/size] [size=5]எதிர்காலம் ,[/size] [size=5]சிறகில் இருந்து கழண்ட[/size] [size=5]இறகு போல் [/size] [size=5]இப்போது விதியின் [/size] [size=5]கைகளில் நான் ,[/size] [size=5]ஒரு தனி பறவையின் [/size] [size=5]அலறல்போல் [/size] [size=5]ஊமையாய் விம்முகிறது [/size] [size=5]மனசு,[/size] [size=5]சில தருணங்கள் [/size] [size=5]இதயமும்…
-
- 14 replies
- 1.1k views
-
-
[size=3]தேடல்கள் நீண்டாலும்[/size] [size=3]தீர்க்கமாய் முடிவெடுத்து[/size] [size=3]தேடு பொருளை சரியாய் தெரிந்து [/size] [size=3]திசைதனையும் ஆய்ந்து[/size] [size=3]தேடலை மேற்கொண்டால்[/size] [size=3]திருப்திதான் திருப்பதி தேடுபொருள் கிடைக்கும் திடமாகத் தான் நம்பு தொலைத்தவை நிறையத்தான் தமிழன் தேடத்தான் வேண்டும் தேடு தொலைத்தது ஒன்றும் தொலைவிலில்லை தேடத்தான் வேண்டும் தேடு ஒற்றை காலில் நிற்கும் கொக்கு கூட தேடித்தான் நிற்கிறது ஒற்றுமையாய் தேடிப்பார் [/size] [size=3]தேடுபொருள் நிச்சயம் கிடைக்கும்[/size] வல்வையூரான்
-
- 4 replies
- 740 views
-
-
வீச மனமின்றி வைத்திருந்த உருப்படாத பழைய கவிதை ஒன்றை எடுத்து மீழப் புனைந்துள்ளேன். எப்படி இருக்கு? * கிறிஸ்மஸ் விடுமுறை நாள் வ.ஐ.ச.ஜெயபாலன் * விடுமுறைத் தூக்கத்தைமதியப் பசி கலைக்கசோம்பேறி நான் எழுந்தேன்.வீடு சா அமைதியில். * மூலையில் மினுக் மினுக்கென தனித்த கிறிஸ்மஸ் மரம் ஒளிரும். இன்று இரட்டிப்புக் கூலியென வேலைக்கு ஓடிவிட்டாள் மனைவி. குளிர்ப்பெட்டி நிறையப் பழசிருக்கு சூடாக்கித் தின்னலாம். வெளியே வெண்பனிப் பெயலின் இரைச்சல் அமுக்கி ஓங்குதே என் பசிமறந்த பிள்ளைகளின் கும்மாளம். * சன்னலுக்கு வந்த…
-
- 3 replies
- 802 views
-