கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5130 topics in this forum
-
அன்று பயந்து விட்டேன் உன் அழகில் மயங்கி உன்னைக் காதலித்து விடுவேனோ என்று. நான் சொன்ன படி கேட்கின்ற என் மனது ஒரு நிமிடம் நிலைமாறி அடம் பிடித்தது உன்னைக் காதலிக்க வேண்டாமென்று, இலச்சியம் தடுத்தது. ஒரு நிலையானது மனம். இனிக்கும் பழமெனத் தெரிந்தும் புளிக்குமென தள்ளிவைத்தேன். புளியைச் சுவைக்க பிடிக்காமலல்ல பற்கள் கூசி வாய் திறக்க முடியாது என்பதனால். இலக்கு வைத்த இலட்சியம் சிகரம் தொட சிரமங்களைத் தாண்டி துள்ளிச் செல்ல வாழ்க்கையில் மிதக்கின்றேன், உயரத்தில் நின்று கஸ்ரங்களை - ஒரு தீப் பெட்டியாய் பார்க்க வேண்டுமென்று. புரிந்து கொண்டேன் என்னை நீ காதலிப்பதனை, காதலியாய் நீ வேண்டாம் என்றும் தோழியாக நீயிரு அப்போதுதான் நான் …
-
- 5 replies
- 4k views
-
-
அழகே என்றேன்.. அருகே வந்தாள் கண்களால் பேசினாள் கருத்தைக் கவர்ந்தாள் கதைகள் பேச முதலே.. கன்னத்தில் தந்தாள்..! டேய் நாயே.. வெளவாலா தேடுறாய் போர்த்திக் கொண்டே ஓடினாள்..! என் கண்களின் வாக்கு அவள் அறியாள்..!
-
- 19 replies
- 2.6k views
-
-
ஜூன் மாத "கணையாழி" இதழில் வெளியாகியுள்ள எனது "அஸ்மிதா எனும் குட்டி தேவதை" கவிதையை, யாழ் களத் தோழர்களுடன்பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி.. யாழ் களத்தோழர்கள் எனக்குத் தரும் உற்சாகத்துக்கு நன்றி! அஸ்மிதா எனும் குட்டி தேவதை ----------------------------------------------------- எங்கள் எதிர் வீட்டிலிருக்கும் தன் பாட்டி வீட்டுக்கு அஸ்மிதா எனும் குட்டி தேவதை கோடை விடுமுறைக்கு வந்திருக்கிறாள். கையோடு கொண்டுவந்த குட்டி மழைக்காலத்தை எங்கள் வீட்டில் விரித்து வைத்து, நிறமற்ற கோடையை நிறப்பிரிகை செய்து வானவில் காட்டுகிறாள். அஸ்மிதா பாட்டி, அஸ்மிதா தாத்தா, அஸ்மிதா நாய்க்குட்டி வரிசையில் அஸ்மிதா மாமா, அஸ்மிதா அத்தை என்று நாங்களும் பெயராகு பெயர்களாகிறோம். க…
-
- 4 replies
- 1.6k views
-
-
நினைவழியா பயணம் நீண்ட நெடிய பயணங்களின் பின்பு அங்கே தரித்து நின்றோம் செம்மண்ணின் வாசனையும் வேலி கதியால்களில் பூத்திருந்த முள் முருக்குகளின் பூக்களும் தொலைந்து போயிருந்த நினைவுகளில் உயிர் தடவிற்று கரிய நிற மாடு பூட்டி வண்டில் ஒன்று கடந்து போனது இருளும் நினைவும் நிலவின் ஒளியுடன் கலந்த இருந்த பொழுதில் தான் நாம் அந்த வீதியில் அமர்ந்து கொண்டோம் நேற்றும், முந்த நாளும் அதற்கும் முன்பாகவும் என் தோழர்கள் உயிர் சரிந்து வீழ்ந்த வீதி அது ஒவ்வொரு அங்குல நிலத்திற்காகவும் ஓர்மம் கொண்டு போராடி களம் வென்ற என் தோழர்களை தாங்கி நின்ற வீதி அது என் பாட்டனின், அவனதும் பாட்டனின் காலடிகளின் தடம் காக்க, அவ…
-
- 11 replies
- 1.8k views
-
-
மீளும் எம் நிலங்கள். வீரம் உடுத்த மண் விடுதலையைப் பெற்ற மண் தீரம் மிகக்கொண்டு திக்கெட்டும் முரசறைந்து - சந்ததிக்காய் போரை ஏற்று போர்க்களத்தில் வாழ்வமைத்து பாரம் சுமக்கும் மண் பரம பிதா வாழும் மண் - நாம் மானமிழக்க மாட்டோம் ஒருபோதும் மண்டியிடோம் ஒதுங்க இடமின்றி ஒரு கோடி இடப்பெயர்வு நெருங்கி நின்று - எம் நெஞ்சை உதைத்தாலும் மருந்து மாத்திரைகள் மண்ணெண்ணெய்த்தடை இருந்து வருத்தும் இயற்கையின் சீற்றங்கள் வாட்டி வதைத்தெம்மை வாழ்விழக்கச்செய்தாலும் எண்ணத்தில் விடுதலையை எப்போதும் இழக்கமாட்டோம் வண்ணத்தில் மண்ணெடுத்து வரலாற்றைக் குழைத்து எண்ணற்ற வியர்வை சிந்தி எழுப்பிய விடுதலையை எம்மின மண்பற்றை சன்னத்தால் சரிக்கேலா சர…
-
- 3 replies
- 2.8k views
-
-
நன்றி வணக்கம் நாங்கள் செத்துப்போகிறோம் காற்றழுத்தம் கந்தகப்புகையழுத்திச் சாவின் வாயிலில்.... மூச்சிழுக்கவோ முழுமையாய் சுவாசிக்கவோ முடியாத நச்சு நெடில்.... மூலங்கள் எங்கும் கோலங்கள் மாறி கிட்லரின் நச்சுக் கிடங்குகளாய் மகிந்தவின் மந்திரமும் இந்திய மத்திய அரசின் தந்திரமும்.... குருதி சொட்டச் சொட்டச் செத்தவர்கள் எரிகுண்டுப் புகையோடு கருகுண்டு கண்களில் ஈரமின்றி எங்கள் காவியங்கள் முகம் மட்டும் கனவிலும் நினைவாக... பழைய புன்னகையும் பசுமையாய் நெஞ்சக்கூட்டில் தோழரும் தோழியரும் தொலைந்திடா நினைவோடு கண்ணயர முடியாமல் கனவிலும் அவர்களே கலையா நினைவுகளாய்..... பறிபோன தெருக்களெங்கும் அடுக்கடுக்காய் சடலங்கள் சாவுகளின…
-
- 6 replies
- 2.1k views
-
-
தமிழ் ஈழம்தான் சரியான தீர்வு என்றாலும் தற்காலிகமாக அதற்கு முன் ஒரு தீர்வு வேண்டும் தமிழக முதலமைச்சர் கருணாநிதி அவர்கள் ஈழத்தில் தமிழர் பகுதிகளில் சிங்களவர்கள் குடியமர்த்தப்படுவதை தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என அண்மையில் வலியுறுத்தியுள்ளார். அண்ணா திமுக வின் செயலாளர் செல்வி ஜெயலலிதாவும் தேர்தல் காலத்திற்கு சற்று முன் தமிழ் ஈழம்தான் ஈழத்தமிழர் பிரச்சனைக்கு சரியான தீர்வு எனக்கூறியதுடன் அதை அடைந்து கொடுக்க தன்னாலான எல்லா முயற்சிகளையும் எடுப்பதாக கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து கருணாநிதி அவர்களும் தமிழீழம் அமைய, தானும் முயற்சிக்கப் போவதாக தேர்தல் காலத்தில் கூறினார். காங்கிரஸ் கட்சியைத்தவிர ஏனையவர்களெல்லாம் ஈழத் தமிழ்மக்களின் விடிவுக்காக் குரல் கொடுத்துக் கொண்டே வந்துள்ள…
-
- 0 replies
- 1k views
-
-
உறவின் வாசனை உன்னால் தானடா உணர்வில் இன்னும் மாலைநேரத்து வெயிலில் காய்ந்து வழியும் இலுப்படி நிழல் உனது அமைதியின் இருப்பிடம் அங்கே தான் நீ அதிக நேரத்தைச் செலவிடுவாய் அங்கே தான் நாங்களிருவரும் அறிமுகமாகினோம். சோளகம் உருவிப்போகும் இலுப்பம் இலைகளின் உதிர்வில் வசந்தத்தின் வரவைப் புதுப்பித்துக் கதைகள் சொல்வாய் உதிர்ந்து காயும் இலுப்பம் இலைகளின் மறைவிலிருந்து துளிர்க்கும் குருத்துகளின் உயிர்ப்பைக் காட்டித் தைரியம் தந்தாய் தலைநிமிரச் செய்தாய். விடியலைக் காணவிடாத சமூகச்சாவியை உடைத்துவரும் வீரத்தையூட்டினாய் விழியுடைந்துருகிக் கன்னம் தொடும் நீர் துடைக்கும் தோழமை விரலாய் வெற்றியைக் காட்டினாய்....! அந்தக் குழந்தைக் காலத்த…
-
- 7 replies
- 1.1k views
-
-
தாய்மானம் காத்த தங்கத் தனயர்களே! தமிழ்த் தாயின் தன்மானம் காக்கவெனத் தம்முயி ரீய்ந்த சான்று தனயர்களே! அமிழ்தினு மினிய அன்புச் செல்வங்களே! ஆற்ற வியலாத் துன்பக் கடலிலெமை அமிழ்த்தி மறைந்த இன்னுயிர் மறவரே! ஆணி வேரென உறுதியிற் றிளைத்துக் கமழும் தமிழினத்தின் மணத்தை நன்றே காசினியிற் காட்டிச் சென்றகன வான்களே! முள்ளி வாய்காற் களமுனை தனிலே முடிவாகிப் போனீரென முழங்கி மகிழ்ந்து அள்ளி இனிப்பினை அளித்துச் சிரித்து ஆன்றவெம் மினத்தின் மானம் பறித்து எள்ளி நகையாடி ஏதிலிக ளாக்கி எக்காள மிட்டு இன்புற் றோர்அழியத் துள்ளி யெழுந்து தூக்கம் கலைந்து துண்டெனத் தலைகள் சிதறிடச் செய்வீர்! சாவென்பது உமக்கில்லை ச…
-
- 0 replies
- 675 views
-
-
சிதையும் தமிழ் கலாசாரம் சீர்மிகு தமிழினம் இன்று சிதைந்ததை எண்ணித் துடிக்கையில் விளைந்த தமிழ் மானமது வீழ்ந்ததடா சாக்கடையிலே மானத்திற்காய் உயிர்தந்த எம் மாந்தையரோ மதிகெட்டு இன்று மயங்கி வீழ்ந்தனரே மேற்கத்திய நாகரிகத்தினிலே கட்டிக்காத்த கலாசார நிலவதுவோ கருமுகிலில் புகுந்து மறைகிறதே சுதந்திரமாய் சுத்திவந்த தென்றலோ சுத்தம் கழைந்து செல்கிறதே பாவப்பட்ட மண்ணினிலே பாவச்செயல்கள் எத்தனையோ கருவைச் சுமந்த கன்னியரின் கருகளைவுகள் எத்தனையோ தொட்டிலிலே தூங்க வேண்டிய திசுகளோ தொட்டியிலே குப்பைத் தொட்டியிலே தலை குனிந்து சென்ற பெண்களோ தரம் கேட்டு சந்தையிலே மந்தைகளாய் மதுவினிலே மயகியதால் மானம்தனை மறந்துவிட்டான் வீரத் த…
-
- 2 replies
- 1.1k views
-
-
நீங்கள் இரசித்த பாடலை முழுமையாக எழுதி அந்த பாடலில் உங்களுக்கு பிடித்த வரிகளை அடையாளப்படுத்தி விடுங்கள் உங்களது இரசனைகள் எவ்வாறு இருக்கின்றன பார்க்கலாம் குறிப்பு :உங்கள் அபிப்பிராயங்களைத் தவிர்த்து பாடல் வரிகளை மட்டும் எழுதிவிடுங்கள் முடிந்தால் பாடல் விபரத்தையும் குறிப்பிடவும் இந்த முயற்சிக்கு தயவு செய்து இடையூறாக செயற்பட வேண்டாம் இது எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என நினைக்குறேன் . படம்:பூவே உனக்காக பாடியவர்:உன்னிகிருஷ்ணன் நடிகர்:விஜய் இசை: எஸ் எ ராஜ்குமார் வருடம் :1996 ஆனந்தம் ஆனத்தம் பாடும் -மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும் ஆனந்தம் ஆனத்தம் பாடும் -மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும் ஆயிரம் ஆயிரம் காலம் - இந்த ஜாபகப் பூ…
-
- 63 replies
- 112.6k views
-
-
மூச்சடங்கிப்போன இறுதிப்பொழுதுகள் ஆண்டுகள் ஐந்தாகிப் போனதுவோ- எங்கள் உறவுகள் அணுஅணுவாய் வதைபட்டு அல்லல்கள் பலபட்டு துடிதுடித்து மரணித்து ஆண்டுகள் ஐந்தானதோ இரசாயன நெருப்புக்குள் உறவுகள் வெந்து துடித்து கருகி மடிந்த போது இங்கிருந்து நாம் கதறி அழுதோம் அவர்களைக் காப்பாற்ற முடியாமல் போய் ஆண்டுகள் ஐந்தானதோ இன்று பாழும் குண்டு மழைக்குள் எங்கள் பச்சிளங்குழந்தைகள் பதைபதைத்து துடித்து மரணித்து ஆண்டுகள் ஐந்தானதுவோ சதிவலைகள் பின்னிய நாடுகள் என்று தெரியாமல் அந்த நாடுகள் ஓடிவந்து உதவாதோ என்று இறுதிவரை நம்பிக்கையோடு காத்திருந்து அன்று எங்கள் உறவுகள் உயிர்கள் ஊமையாய் அடங்கிப்போயின. அதனை எண்ணி எண்ணி நாம் அழுது அரற்ற ஆரம்பித்து ஆண்டுகள் ஐந்து ஓடியே போனது பதுங்குகுழிகள் வெட்…
-
- 9 replies
- 1k views
-
-
இரந்து வாழ்பவனுக்கு... நித்தம் இறப்பு........! இனத்துக்காய் வாழ்பவனுக்கு... புத்தம் புதிதாய் தினமும் பிறப்பு!! வானம் இருண்டு போனால்... பூமி அழியாது! சிறு நரிகள் கத்தி... சிறுத்தை புலி சாகாது! நேற்றைய சந்ததி போட்ட- எச்சம்... தாயின் ......... பொட்டு-இடும் இடத்தில் எரிவாய்.... ஓடிவந்து அசிங்கம் துடைத்தீர்..... நீர் ஓராயிரமாண்டு வாழ்க ... நலமாய்!! மண் ஆள நினைப்பவர் எல்லாம்.. மகுடம் தமக்காய் சூடி கொள்வார்... மாமலையே-மண்ணை நேசித்த நீர்... போனால் - என்ன தர போகிறோம் உமக்காய் நாம்?!
-
- 3 replies
- 1k views
-
-
-
- 8 replies
- 4.1k views
-
-
அதிகாலையில் உன்னை எழுப்ப அலாரம் வைத்துவிட்டு, அலாரத்தை நீ எழுப்புவாய் நடைபாதை சாக்கடைநாற்றம் உன் நாசியைத் துளைக்காது கோவில்மணி ஓசையில் சிறகைக்கும் பறவைகளை ரசிப்பாய் மொட்டை வெயிலில், மொட்டைமாடியில் கவிதைகள் பிறக்கும் மழையையும் ரசிப்பாய் உச்சி வெயிலையும் ரசிப்பாய் தங்கையிடம் அத்தனையும் விட்டுக்கொடுப்பாய் அம்மாவை அவ்வப்போது அன்போடு கட்டியணைப்பாய் சிலமுறை முத்தம் கொடுப்பாய் என்றுமே கேட்காத அப்பா சொல்லை தட்டாமல் கேட்பாய் அவள் சிணுங்களை செல்போனில் ரசிக்க, சில்லறையைச் சேகரிப்பாய் ஆடைகளைக் களைகையில் அவனை நினைத்துக்கொள்வாய் (பெண்களுக்கு மட்டும்) நீ நாத்திகனானாலும் ஆத்திகத்தை அவ்வப்போது ஆதரிப்பாய் கல்லூரி, அலுவலகம் செல்லும்முன் - நீ கடைசியாகப் பார்ப…
-
- 3 replies
- 833 views
-
-
குட்டி அண்ணாவின் கவிதை தந்த தாக்கத்தில் இன்று எழுதியது...(http://www.yarl.com/...pic=101771&st=0) . பிரிந்து பறக்கும் வலி... அன்பே உனக்கும் எனக்குமான உறவுகள் எந்தக் கவிஞ்ஞனும் இதுவரை புனைந்துவிடாத வார்த்தைகளின் வனப்புகளைத் தாண்டி வரையப்பட்ட கவிதைகளடி... நாம் பழகிய அழகிய நாட்களின் நினைவுகள் எந்த ஓவியனது தூரிகையிலும் இதுவரை சிக்கிவிடாத அற்புதமான ஓவியங்களடி... உன் வார்த்தைகள் என் செவிகளில் விழுந்த அந்த மிகமெல்லிய முதலாவது குளிர்நாளில் நீ பேசிய ஒவ்வொரு வரிகளையும் என் நினைவுப் பெட்டகத்தில் எடுத்துச் செல்கிறேன்.. பழைய சில முத்திரைகளையும் பட்டாம்பூச்சிகளின் இறகுகளையும் பொன் வண்டு முட…
-
- 20 replies
- 4.8k views
-
-
காலமோ கண்ணீரோ வலிகளை போக்கவில்லை _மாறாக தாங்கவியலா வெறுமைகளை விதைத்துவிட்டது .... உருவான தேசத்தை உருக்குலைத்த உலகஒழுக்கு, உருவாக்கிய வரலாற்றை இரத்தக்கறைசுமந்தவதன் பக்கங்களை ஏதுமறியா அப்பாவிகளின் உயிர்எழுத்துக்களால் நிரப்பிக்கொண்டது ! குளங்களும் வாய்க்கால்களும் நெல்லாடும் வயல்களும் நெடுவென எழுந்த மரங்களும் புள்ளிக்குயில்களும் மயில்களும் புல்லினங்களும் இன்றில்லாமல்போக_ வன்னிமண் சுமந்துநிற்கிறது செத்தழிந்த செந்தமிழன் மேனியை ! வடுக்களை தடவிகொள்கிறோம்.......! அடுக்கடுக்காய் விழுந்த எறிகணைகளை, அடுத்தடுத்து விழுந்த உறவுகளை, அங்கங்கள் அறுந்துதொங்க அவலக்குரல்எழுப்பி மடியில் உயிர்நீத்த மகவுகளை, மீட்பென்று சொல்லிவந்…
-
- 1 reply
- 864 views
-
-
-
- 0 replies
- 721 views
-
-
எல்லா துன்பமும் கடந்து போய் இனிதே மலர்க இனி வரம் ஆண்டு.அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.Happy New Year .🙏 மார்கழி மாதமடி மழை சிந்தும் நேரமடி கண்ணம்மா பா.உதயன் ——————————————————————————— மார்கழி மாதமடி கண்ணம்மா மழை சிந்தும் நேரமடி பொழுது புலர்ந்ததடி பூத்திருக்கு காலையடி கண்ணம்மா பாவை இன்னும் துயிலுவியோ பரம்தாமன் புகழ் பாடல்லையோ மார்கழி மாதமடி மலரவன் மேனியிலே மழை சிந்தும் நேரமடி மங்கை உன் கூந்தலை போல் கங்கை அணிந்தவனை காதல் செய்யல்லையோ கண்ணம்மா கன்னி நீயும் துயிலுவியோ கடும் குளிர் காலையடி காலைக் கதிரவனும் கண் விழிக்கும் நேரமடி காலைப் பூ சூடலையோ கண்ணம்மா கண் இமைகள் பாடல்லையோ காலை …
-
- 4 replies
- 804 views
-
-
அகதிக்காதல் நான் இடம் பெயர்த்தேன் என் இதயத்தில் இருத்து நீ புலம் பெயர்த்தாய்.! #கேள்வி .! மழை இடியுடன் கூடியது காதல் வலியுடன் கூடியது வாழ்க்கை வேதனையுடன் கூடியது மனிதம் சுயநலத்துடன் கூடியது மரணம் மட்டும் தனியே போகுது ஏன் ? அனுபவிப்பு நீயூட்டனின் மூன்றாம் விதி பொய்த்து போவது மனைவியிடம் அடிவாங்கும் போது ..! (மொக்கை )
-
- 6 replies
- 1.3k views
-
-
காற்றும், வானும், நீர், நிலம், நெருப்பும் தழுவி உம் மெய் ஆற்றட்டும். மண்டியிடாத மன்னவனை எமக்களித்த மாமனிதா சரித்திரச் சங்கமிப்பில் நெருப்பெடுக்கும்போதில் மண்ணின் கணிதத்தில் மரணமும் ஜனனமய்யா. பாக்கு நீரிணையின் சிற்றலைகள் மிடுக்கெடுக்க உப்புக் காற்றுறையும் ஊறணியில் இனத்தின் மீளெழுச்சித்துயில் கொள்க. காற்றும், வானும், நீர், நிலம், நெருப்பும் தழுவி உம் மெய் ஆற்றட்டும். வல்வை மண் சாந்தி தரும்.
-
- 2 replies
- 838 views
-
-
இன்றைய நட்சத்திரமாக இளைஞனை தமிழ்சிறி பதிந்ததும், முன்பொருநாள் யாழ்கள உறவுகளிடம் இளைஞன் பெரிதும் சிறிதுமான இரு மேசை விளக்குகள் பேசுவதாக ஒரு சம்பாசனை கேட்டிருந்தார். அப்ப எழுதிய கவிதை போன்ற சம்பாசனை. 01/08/2007 எழுதியது. இன்று இணைப்பது மகிழ்ச்சியாய் இருக்கிறது. தொப்புள்கொடியுறவு. பெரிய மேசை விளக்கு தாய்! சிறிய மேசை விளக்கு சேய்! குழந்தை: ம்.ம்.ம்ம்மா, ம்.ம்.மா, தாய் : என்ன கண்ணே பசிக்கிறதா; குழந்தை; தெரியவில்லையம்மா, தாய் : ஓம் எனக்குத் தெரியும் உனக்குப் பசி என்று, குழந்தை: அதற்கு என்ன செய்ய வேண்டும் அம்மா, தாய் : இதோ! எனது மார்பில் சுரக்கும் பாலைக் குடி , குழந்தை : எப்படி எனது தொப்பிளாலா, தாய் : இல்லை ! உனது வாயால், குழந்தை : அம்மா! முன்…
-
- 4 replies
- 992 views
-
-
சுதந்திரம் என்றால் என்ன? நிஜத்தைப் புரிந்த கவிதைக் குரல் சுதந்திரம் என்றால் என்னவென்பது பற்றி எங்களுக்கு பல பிம்பங்கள் உண்டு. சிதறிய கண்ணாடித் துண்டுகள் என அவை சிதைந்து கிடக்கின்றன. உள்ளத்தில் ஓல ஒலி எழுப்புகின்றன எமது உள்ளத்தின் உணர்வுகளின் வெளிப்பாடாக ஒலிக்கிறது ஒரு குரல் ஆனால் அது தமிழ்க் குரல் அல்ல. சிங்களக் கவிஞனின் குரல். பிரச்சனையின் அடிநாதத்தைப் புரிந்த குரல் பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் வெளியிடும் பிரவாகினி செய்தி மடலில் வெளியான கவிதை இது எழுதியது :- அலோகா ரணசிங்க மொழிபெயர்ப்பு :- மாக்ஸ் பிரபாஹர் சுதந்திரம் கிடைத்தது சோதரா, சுதந்திரம் கிடைத்தது அத்தனை நிலத்தையும் அபகரித்தணைத்திட சுதந்திரம் கிடைத்தது சோதரா சுதந்திரம் கி…
-
- 0 replies
- 576 views
-
-
விடிவு தோன்றுமா? சண்டைகள் சாய்ந்து சச்சர வோய்ந்து சமத்துவம் என்றுவரும் - வெடிக் குண்டுகள் ஓசை, கொலை வெறிப் பேச்சு கேளா நாள்வருமா? சிரிப்பினை மறந்து இருந்திடும் சனங்கள் சிரித்திட வழிவருமா - உடல் தெருநடு வீதி தனில்விழும் அந்த ஓருநிலை மாறிடுமா? மக்களை மக்கள் மதித்திடும் நிலைதான் மண்ணில் வந்திடுமா? - மொழிச் சிக்கல்கள் ஓய்ந்து செம்மைகள் காணச் செகத்தில் நாள் வருமா? அடக்கு முறையும் அசுரத் தனமும் அடியோடு ஓடிடுமா? - இனி நடக்கும் காலம் தனிலே தானும் நன்மை கூடிடுமா? அடிமை விலங்கு அனைத்தும் தகர்ந்து அகிம்சை நிலை பெறுமா? - புவி விடிவு என்று புலரும் பொழுதை விரைவில் ஏற்றிடுமா?
-
- 2 replies
- 1.2k views
-
-
கறுப்பு ஆடியின் வலிகள் கருவிலே உரிமைக் குரல் கொடுத்து சாவிலும் வாழ்கிறோம் உலகத்தின் இதயத்தில் ஈழத் தீபம் ஏற்றுவோம்! திரும்பத் திரும்ப வந்து புன்னகைக்கும் துயரத்தில் உயிர் கொதிக்கவும் உதிரம் கொதிக்கவும் குளிர்க் கூட்டிலே வலிகள் சுடச் சுட வாழ்க்கை தொடர்கிறது! கண்ணீர்த் துளிகள் விழிகளில் வழிகிற காலம் போய்... கண்ணீர்க் கட்டிகளாய் உதிரம் கொட்டுகிற கலி காலமிது! கருவறையில் இருந்து கனத்த குரல் ஒலிக்கிறது. "அம்மா நான் தலையோடு பிறக்கவா? இல்லை... தலையில்லாமல் பிறக்கவா?" எப்படிப் பிறந்தாலும் என் இறப்பு என்னவோ தலையில்லா முண்டாமாகுமே! நான் வரவா கருவிலே கரைந்து போய்விடவா? இன்னும் இன்னும் மனிதக் குருதி நிரம்ப…
-
- 1 reply
- 820 views
-