கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
நான் அழுதபடியும் நசிபட்டுக்கொண்டும் தான் இப் பூமிக்கு வந்தேன் சவ்வுகளை கிழித்தும் குருதி பெருக்கியும் தாயை துடிதுடிக்கவைத்தும் தான் வந்தேன். வன்முறைதான் எனது பிறப்பின் இயல்பு. நான் வரும்போது பேப்பரும் பேனாவும் கொண்டுவரவில்லை அல்லது எந்தக் கடவுளிடமும் காப்பாற்று என்று மன்றாடிக்கொண்டு வரவில்லை. என்னிடம் வெளித்தெரியாத பற்களும் வளரத்துடிக்கும் நகங்களும் மட்டுமே இருந்தது, அதுதான் எனது நிரந்தரச் சொத்து. பசியாற்றவும் இரைதேடவும் என்னைப் பாதுகாக்கவும் அவைதான் எனக்குத் துணை. நான் வாழ்வதற்கான தந்திரங்களை தாய் தந்தையிடம் இருந்தும் சுற்றத்திடம் இருந்தும் கற்றுக்கொண்டிருக்கவேண்டியது விதி. இரைதேடத் தந்திரங்களை கற்றுத்தர மறுத்துவிட்டார்கள் இரைக்குப் பலியாகாமல் தப்ப…
-
- 3 replies
- 1k views
-
-
என்னை கருவறையில் சுமந்த போது தினம் தினம் என்னை தடவி உன் வாழ்க்கை எப்போதும் இருட்டறையில் தான் என சொல்லி வந்ததின் அர்த்தம் புரிந்தது............ கருவறையின் வெளியில் இருந்து ; வந்த என்னை அரை உயிராக புதைகுழிக்குள் புதைத்த போது.........
-
- 3 replies
- 1.5k views
-
-
யாழ்ப்பாணம் வந்தாராம் ரணிலார் சோக்கான கதை எல்லாம் சொன்னாராம் சேர்ந்து பல பேருடன் நின்று செல்பியும் எடுத்தாராம் நல்லவன் போல நடிப்பார் நாம் நினைப்பது போல அவர் இருக்கார் அது தருவன் இது தருவன் என்றாராம் அவர் அருகோட நின்று தலை ஆட்டிப் பொம்மைகள் தாளங்கள் போட்டாராம் அவர் சொன்னதை செய்வார் என்றும் சொன்னாராம் போன சுதந்திரத்துக்கு முன் ஏதோ தருவன் என்றாராம் இந்த சுதந்திரத்தோட என்னதான் தருவாராம் எல்லாமே மறந்தாராம் எதுகுமே பேசாராம் நம்புங்கள் ரணிலை நல்லது நடக்கும் என்றாராம் சேர்ந்து தாளம் போடும் சில சில்லறை மனிதர் தந்திரக்கார ரணிலார் தான் ஒரு சமாதான காரன் போல் காட்டியும் நடிப்பார் …
-
-
- 3 replies
- 1.1k views
-
-
அது ஒரு மாலைப் பொழுது மழைத் துறல்கள் காற்றின் மோதுகையால் சிதறி முகத்தை உரசிச் செல்லும்போது ஒரு வகையான உணர்வு மனதைக் கிள்ளத்தான் செய்கிறது. இரு பீர் போட்டில்கள் காலியாகியிருந்தன. அந்த நண்பன் சடுதியாகத்தான் கேட்டான், அப்படியொரு கேள்வியை நான் எதிர்பார்த்திருக்கவில்லை, இப்போதெல்லாம் நான் எதிர்பார்ப்பவைகள் எதுவும் நடப்பதுமில்லை. அந்த நண்பன்! யதி, நீ விடயஞானம் உள்ளவன் உன்பற்றி பலரும் அறிவாளி என்கின்றனர், இது விடயத்தில் எனக்கு உன்னால் உதவ முடியும். நான் ஒரு மார்க்ஸிஸ்ட் ஆவது எப்படி? நான்! என் குறித்த அவன் வர்ணனைகள் என்னை சங்கடப்படுத்தின. இதிலெல்லாம் நான் நாட்டம் கொள்வதில்லை, ஏனெனில் நான் என்னை அறிவேன். நான் சிரித்துக் கொண்டேன…
-
- 3 replies
- 881 views
-
-
காலம் இன்னும் கொஞ்சக்காலம் ........ . கதை முடியும் ...ஒரு நாள் மதி கெட்ட கயவர் கூட்டம் ஒன்று புத்தி பேதலித்து கதை பல கூறும் விதி என்று ஓர் இனம் ,கேட்டு, கலங்கி கை கொட்டி சிரிக்கும் போது..... இடி ஒன்று முழங்கும் ,கதி கலங்கி விழி பிதுங்கி , சில பெரிய தலை நோக்கி ஓடும் தலை சொல்லும் வழி ,இனி பலிக்காது புலிபசித்தாலும் ,புல்லை நாடாது ,ஒரு வேளை..........
-
- 3 replies
- 1.5k views
-
-
என்னை மன்னித்து விடு குவேனி மேலுதட்டில் வியர்வைத் துளிகளரும்பிய கருத்து ஒல்லியான இளம்யுவதிகளைக் காண்கையில் இப்பொழுதும்… அதிர்ந்து போகிறதென் உள்மனது தவறொன்று நிகழ்ந்தது உண்மைதான் நினைவிருக்கிறதா அந் நாட்களில் தாங்கிக்கொள்ள முடியாத குளிர் விசாலமாக உதித்த நிலா பொன் நிற மேனியழகுடன் எனதே சாதியைச் சேர்ந்த எனது அரசி எமதிரட்டைப் படுக்கையில் ஆழ்ந்த உறக்கத்தில் தனியாக குழந்தையொன்றை அணைத்தபடி அரண்மனை மாடியில் நின்று கீழுள்ள காட்சிகளைப் பார்க்கின்ற கனவொன்றில் அவள் திளைத்திருக்கக்கூடும் இருந்திருந்து இப்பொழுதும் உதிக்கிறது அம் மோசமான நிலா மண்டபத்திலிருந்து மயானத்தின் பாழ்தனிமையை அறைக்குக் காவி வருகிறது - இஸுரு சாமர சோமவீர தமிழில் – எம்.ரிஷான் ஷெர…
-
- 3 replies
- 2.1k views
-
-
வலை வீசம்மா வலை வீசு வம்பு வளக்கலாம் வலை வீசு.. கை வீசம்மா கை வீசு கடைக்குப் போகலாம் கை வீசு காதல் செய்யலாம் கை வீசு கனடா போகலாம் கை வீசு கம்பியூட்டர் முன்னால் கையடிக்கலாம் வலை வீசு கத்தி வெட்டு குத்திப்போடலாம் கைவீசு கருத்துச் சொன்னால் பாவம் கைவீசு களம் என்ன குயவன் செய்யும் பொம்மையோ கை வீசு வெட்டில் வெட்டலாம் கைவீசு வீணில் வெட்டுவதைத் தள்ளிப்போட்டு கைவீசு காரணம் சொல்லலாம் கைவீசு களத்தில் இருப்பவர் புட்டிப்பால் குடிப்பதில்லை கைவீசு காத்திரமான பங்கு வேண்டுமா கைவீசு கோபம் ருத்திரம் மனிதம் உணர்த்துவது கைவீசு சண்டையும் சச்சரவும் இல்லையென்றால் கைவீசு சாதிப்பது என்பது பூச்சியமே கை வீசு ஆங்கிலம் பேசுவது கோமளித்தனமல்ல கைவீசு …
-
- 3 replies
- 1.5k views
-
-
[size=5] எனது நண்பனைப் பற்றி [/size] [size=5] எமது மண்னிலே அதிகம் பேசுகின்றனர். [/size] [size=5] எப்படி அவன் சென்றான்… [/size] [size=5] துப்பாக்கி வேட்டுக்கள் [/size] [size=5] அவன் மார்பையும் முகத்தையும் நொறுக்கின [/size] [size=5] தயவு செய்து மேலும் விபரணம்வேண் டாம். [/size] [size=5] நான் அவனது காயங்களைப் பார்த்தேன் [/size] [size=5] அதன் பரிமாணங்களைப் பார்த்தேன் [/size] [size=5] நான் நமது ஏனைய குழந்தைகள் பற்றி எண்ணுகிறேன் [/size] [size=5] குழந்தையை இடுப்பில் ஏந்திய [/size] [size=5] ஒவ்வொரு தாயையும் பற்றி எண்ணுகிறேன் [/size] [size=5] அன்புள்ள நண்பனே! [/size] [size=5] அவன் எப்போது வருவான் என்று கேட்காதே [/size] [si…
-
- 2 replies
- 832 views
-
-
சுயத்தை ஒடுக்கிய எங்கள் சூரியத் திருவே, வல்லமை சுரக்கும் வீரப்பெரும் வரலாறே, தாயக உள்ளொளி பெருக்கும் தர்மத்தின் உறுதியே, உலகனைத்துமான தமிழினத்தின் வாழ்வேந்தி வனையும் வல்லமையே பாடுகிறேன் ஒரு பல்லாண்டு. பன்னூற்றாண்டுகளின் படிமக்கறைகளைப் பகுத்தாய்ந்து புறஞ்செய்த காலபிரவாகமே, வல்லரச வியூகங்களை வலுவிழக்க வைத்த வல்வையின் வனப்பே, இன்றுங்கள் பிறந்த நாள் ஏழு கடல்களும், ஐந்து கண்டங்களும் அதிசயித்து நோக்கும் ஆதித்த கரிகாலரே ஈழத்திரு நிலத்தின் ஆணி வேர் அமைதி காக்கும் அதி சாதனைப் பொழுது இது, அர்த்தமற்றுப் போகாது. ஈழம் என்ற சொல்லுக்குள் இணைபிரியாக் காவியமே, இலக்கென்ற வடிவுக்குள் கலக்கமில்லா ஓவியமே, யாலம் உனை அழிக்காது சத்தியத்தின்…
-
- 2 replies
- 908 views
-
-
சட்டென்று ஒரு வெடிச்சத்தம்...! பட்டென்று போனது ஓருயிர்! சிட்டென்று பறந்த சின்னக் குருவி... வேட்டொன்றில் வீழ்ந்தது வீணாய்! பாழ்பட்ட யாழ் மண்ணில் ஒருநாள், தேள்கொட்டிய மாதிரி ஒரு செய்தி... நோபட்ட மனதோடு விடிந்தது... சிவந்த காலை, மார்தட்டி நின்றவன் புழுதியில் கிடந்தான்!!! கார்கொண்ட மேகம் கண்ணீர் அஞ்சலி செலுத்த, பேர் கொண்ட அவர் முகம் தணலாய் மறைக்க, வீறுகொண்ட நாலுபேர் இருக்குமிடம் விலகினார்! போர்கொண்ட உள்ளங்களின் காரியக் குணம் போல..! காரணம் தெரியாது...! காரியம் புரியாது...! ஆழங்கள் தாண்டி... தோண்டும் நேரம் இதுவோ? காரிருள் ஊடே ஒரு விடிவெள்ளி.. வெளிச்சம் காட்டிச் சிரிக்கிறது! விடைதெரியாத வினாக்களுக்கும், விடைகொடுக்கும் நேரமிது! கடை…
-
- 2 replies
- 900 views
-
-
எதையும் தாங்கும் இதயம் எனக்குள் இருக்கிறதென நீண்ட காலமாய் நினைத்துக் கொண்டிருந்தேன் உண்மை அதுவல்ல என்று உண்மையைச் சொன்னது உனது பிரிவு!...
-
- 2 replies
- 1.1k views
-
-
அப்பற்றை சைக்கிள் அருமந்த சைக்கிள் குப்பைக்குள் புரண்டு கோடிக்குள் கிடந்தது நாப்பது வருச காலம் நான்தானே சுமந்தனான் இப்பதான் தெரியுதோ என்று ஏக்கத்துடன் கேட்டது அப்பரோடு இருந்த காலம் அது என்ர வசந்தகாலம் எப்படியெல்லாம் வச்சிருந்தார் எங்கெல்லாமோ சுத்தி திரிஞ்சம் கொப்பரும் கொம்மாவும் கல்யாணம் கட்டின நேரத்தில எப்பவும் எல்லா இடமும் என்னைதான் கூட்டிப் போவினம் செக்கன்ட் சோ சினிமாவுக்கும் சாமத்தில் போய் வருவம் சொக்கன் கடை தேத்தண்ணிக்கும் சட்டென்று போய் வருவம் வாட்டப்பம் இழுப்பதுவும் …
-
- 2 replies
- 714 views
-
-
சிதறி கிடக்கும் நாங்கள் … குப்பைகள் – அல்ல …. உங்கள் மீது … தொற்ற இருக்கும் … பெயர் வைக்கப்படாத .. நோய்கள் ….!!! ++ குப்பை கடுகு கவிதை
-
- 2 replies
- 442 views
-
-
[size=5]கவிதையின் கவிதைகள் .[/size] http://puradsi.com/wp-content/uploads/2012/08/Sivanthan030812-UK_004.jpg சொந்த மண் சிவந்தபோது சிதறிப்போனோம்! மண்விட்டு முதலடி வைத்தபோதே அகதியானோம்! அவதிப்பட்ட அகதிகளாய்... அநியாயமாய் விரட்டப்பட்டோம்! வாழ்மனை முற்றம் சுற்றம் சொந்தமண் எல்லாமே தூரவிட்டு, அல்லாடும் வாழ்வோடு தூரதேசங்களில் அடைக்கலமான... அவதிதேசத்தின் அகதிகள் நாம்! சொந்தமண்ணோடு எம்மூர் நினைவுகளும், ஊர்த்தெருவின் புழுதிமண் வாசனையும் பெய்தமழையில் எம் கண்ணீரில் கரைந்துபோக... பழைய நினைவுகளாய் அடங்கிப் போகிறது! மீண்டும் மீண்டும் துளிர்க்கும் நினைவுகள் ஊர் ஞாபகங்களை மீள மீள உயிர்ப்பித்தாலும், இன்றைய செய்தித்தாளின் சேதிகளும் ஊர்க்கத…
-
- 2 replies
- 666 views
-
-
குரலை கேட்க;நூராயிரம் ஆண்டுகள் தவம் இருக்க! பேச தயங்கினாலும்;கலங்கிப்போனேன் பார்க்காவிடில்! நிழலாக திகழ்ந்தாய்;உன் நினைவுகள் வருகையில்! கவிதையாக தோன்றினாய்;வரலாற்றில் அமர்ந்திட! -வருண் குமார்..
-
- 2 replies
- 872 views
-
-
-
குருவிகளுக்கு கிடைத்த ஒரு தென்னிந்திய திரை இசை மெட்டில் அமைந்த றீமிக்ஸ் வடிவில் வெளிவந்த தாயகப்பாடல் ஒன்றை குருவிகளின் ஒலிப் பெட்டகத்தில் இருந்து கேட்டு மகிழுங்கள்..! இணைப்புக் குறித்த உங்கள் அபிப்பிராயங்களையும் எழுதுங்கள்...! பொப் அப் புளக்கர் உள்ளவர்கள் அதை தற்காலிகமாக நீக்கிக் கேளுங்கள்..! http://www.jukeboxalive.com/player/player....967&method=play
-
- 2 replies
- 1.1k views
-
-
மண் மணக்குதுகா....! ---------------------------------- சுத்திவர வேலி வேலி நிறையக் கள்ளி கரு நொச்சி சப்பாத்தி முள்ளு கிடசரியா ஆடாதோடை விண்ணாங்கு வேலிப் பருத்தி விஷ முருங்கை இடையிடையே இப்பிலி இன்னும் சொன்னால் இலவ மரம் மஞ்சோணா பூவரசு சுண்ணக்கொடி கோமரச மோதிரக்கண்ணி பேய்ப்பாவை குரங்கு வெற்றிலை கிளாக் கன்று எருக்கலை பூமுத்தை காசான்செடி பொண்டாட்டி மரம் முள் முருங்கை இப்படி இருந்த வேலிகள் எங்கே....? தோளில் துண்டு இடுப்பில் சிறுவால் பேருக்குச் சாரன் கொழுவிய சட்டை கூன் இல்லா முதுகு நேரான நடை ஊருக்கு உழைத்து யாருக்கும் அஞ்சா பேரோடு வாழ்ந்த பெருமக்கள் எங்கே....? குனிந்த தலை நிமிராத களவெட்டிக்குப் போனாலும் களையெடுக்கப் போனாலும் காட்டுக்கு விறகெடுக்க காவலின்றிப் ப…
-
- 2 replies
- 1.8k views
-
-
ஈழபாரதியின் சருகுகள் என்ற கவிதைத் தொகுப்பில் இருந்து சில கவிதைகள். அன்னை எனது ஜனனத்திற்காக பல முறை மரணவாயிலை எட்டிப்பார்த்தவள் - நீ உன் விரல்களை பற்றிக் கொண்டு - தான் நடை பழகினேன் - இன்று உனக்கு முன்பாகச் செல்வதைக் கண்டும் சந்தோசப்படுகிறாய்! உன் அசைவுகளைக் கண்டு பேசத் துவங்கியவன்!! இன்று உன்னை விடவும் பேசுவதைக் கண்டும் சந்தோசப்படுகிறாய்! உன் விரல்களைக் கொண்டு எழுதப் பழகியவன்-இன்று உன்னை விடவும் எழுதுவதைக் கண்டும் சந்தோசப்படுகிறாய்! எத்தனை இரவுகள் உன் தூக்கம் தொலைத்திருப்பாய்...! வலிகளை மட்டும் கற்றுத் தந்தவன் நான்.... என் வலி கண்டதும்.... - நீ ஏன் துடிதுடித்துப் போகிறாய்? தாய் என்பதாலா...?
-
- 2 replies
- 950 views
-
-
எங்கள் தேசத்தில் கறுப்புக்கொடி! உங்கள் விடுதலைக்கும் உழைத்தோம் எங்களை அடிமையாக்கினீர்கள் எங்களை பல்லக்குகளில் சுமந்தபோது ஒன்றாய் வாழ்தல் இனிது என்று கனவு கண்டோம். எங்கள் மெழியை புறகண்ணித்தீர்கள் எங்கள் அடையாளங்களை அழித்தீர்கள் எங்கள் உரிமையை பறித்தீர்கள் துரத்தினீர்கள் உங்கள் நிலத்திலிருந்து வேட்டையாடீனீர்கள் உங்கள் நகரங்களில் வைத்து ஒடுக்கி உரிமை மறுத்தபோது நாங்களொரு கனவு வளர்த்தோம். எங்களை நீங்கள் அடிமை செய்தபோதும் உங்களை நாங்கள் ஏதும் செய்யவில்லை எங்களை நாங்கள் ஆழ்கிறோம் எங்கள் மண்ணில் கண்ணீர் வேண்டாம் எங்கள் மண்ணில் துயரம் வேண்டாம் எங்கள் மண்ணில் இரத்தம் வேண்டாம் எங்களை நீங்கள் கொல்ல வேண்டாம் சிங்கள தேசத்தில் சிங்கக்கொடி தமிழர் தேசத்தில் கறுப்பு…
-
- 2 replies
- 669 views
-
-
ஈழபாரதியின் சருகுகள் என்ற கவிதைத் தொகுப்பில் இருந்து சில கவிதைகள். இறைவனுக்கு என்னோடு வா! இறைவா! என்னோடு வா! அழைக்கின்றேன் - உன்னை துதிக்கின்றேன் உன்னை அருள் தரும் வாழ்வு - இனி புதுசுகம் தரும் வாழ்வு மனிதத்தை விதைத்து நேசத்தை வளர்ப்போம்!! மாயத்தைக் களைந்து உண்மையை உடுப்போம்!!! போர்களை ஒழிப்போம்! புதுமைகள் செய்வோம்! பாவங்களை மன்னிப்போம்! பகைவர்களை நேசிப்போம்!! பயந்துவிடாதே! மரங்கள் இல்லை இங்கே - உனக்கு சிலுவைகள் செய்ய!
-
- 2 replies
- 1.2k views
-
-
மேய்ந்து கொண்டு இருந்த மாடுகள் திடீர் என தலையை நிமிர்த்தி மேல பார்த்து தங்களுக்குள் பேசிவிட்டு கிழக்கே நடக்க தொடங்கின வேகமாக மிக மிக வேகமாக கருமேகம் வடக்கு திசையில் சுழன்று மேலுருளும் காட்சி அமாவாசை இருளை நினைவு படுத்த மாடுகள் வரிசையாய் நடந்தவண்ணம் இருந்தது பட்டியை திறந்து விட்டு பரமர் வானத்தை பார்த்தபடி மிக் 27 தாழபறக்க அவரவர் பக்கத்தில் இருக்கும் மரங்களுக்குள் பாதுகாப்பை தேட அண்ணாந்து பார்த்து சைக்கிள் ஓடி வேலியுடன் மோதியவனும் கிடங்கில் விழுந்தவனும் தங்களுக்குள் சிரித்து விட்டு தம்பாட்டில் அலுவல்களை தொடர ஒலியின் ஓசைகேட்டு என்ன என இனம் கண்டு மக்கள் வீடு போவதும் மாடு மழைவருவது முதலே தெரிந்து பட்டி திரும்புவதும் வன்னியின் அன்றாட வாழ்க்கை ஆகிப்போனது மக்களுக…
-
- 2 replies
- 606 views
-
-
-
இனியவளே .... உன்னை நினைக்காவிட்டால் ... இதயம் இருந்து பயனில்லை ... உன்னை பார்க்கா விட்டால் ... கண் இருந்தும் பயனில்லை .... நீ என்னவள் என்று தான் ... அனைத்தையும் இழந்து ... வருகிறேன் .....!!! + என்னவளே என் காதல் பூக்கள் கவிதை பூ - 01
-
- 2 replies
- 735 views
-
-
நண்பியின் டயரியில் இருந்து ...... நான் காதலித்த போது ..அம்மா படிப்பில் மட்டும் கவனம் செலுத்து என்றார்.(அப்போதும் காதல் தொடர்ந்தது ) படித்து முடித்து பணிக்கு சேர்ந்த போது சிக்கனமாய் செலவு செய் என்றார்.சில காலம் செல்ல திருமணத்துக்கு தயாராகு பையனை பார்க்கிறோம் என்றனர். அப்போதும் காதல் தொடர்ந்தது . முடியாது நான் காதலித்தவனையே செய்து கொள்வேன் என்றேன். எமது தகுதிக்கு அவன் சரியில்லை என்றனர். பதிவு திருமணம் செய்யப்போகிறேன் என்றேன்.எங்கள்வீட்டுக்கு வராதே என்றனர். அப்போதும் அவன் என்னைக் காதலித்தான். திருமணம் முடிந்தது யாரும் வரவில்லை ...காலம் ஓடியது ...முதல்குழந்தைக்கு தாயானேன். அம்மா ரகசியமாய் வந்து பார்த்தாள். வங்கிக்கு போய் வரும் வழியில் கண்ட அப்பா நல்லா இ…
-
- 2 replies
- 518 views
- 1 follower
-