கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
தமிழீழம் ஓர் தனியரசு இதைத் தடுப்பவன் தலைதெறிக்கும் இதைத்தாண்ட முனைந்தவை புலிகளின் குண்டுக்கு மண்ணாய் மாறிவிடும்,,,,,,,,,,,,,,,, போராளி ந. சுதன் 1994 பின்குறிப்பு:நன்றி இக்கவிதையை எனக்கு அனுப்பியவருக்கு :P
-
- 2 replies
- 1.4k views
-
-
கனடாவில் தாயகமக்களின் இன்னல் துடைக்க ரொரன்ரோ பெருநிலத்தில் ரொரன்ரோ மத்தி கலைபண்பாட்டுக்கழகம், ஸ்காபுரோ கலைபண்பாட்டுக் கழகம், பீல் கலை பண்பாட்டுக் கழகம், மார்க்கம் கலைபண்பாட்டுக் கழகம் ஆகிய நான்கு கலை பண்பாட்டுக் கழகங்களும் இணைந்து வழங்கிய “சிறங்கை” எனும் 27 மணித்தியாலத் தொடர் நிகழ்வில் களத்துமேடு எனும் கவியரங்கில் ஆற்றப்பட்ட கவியுரை இங்கு யாழ்க்கள நண்பர்களுக்காக பதிவிடுகிறேன். நாமுள்ளோம் அஞ்சற்க. என்னரும் மொழியே! எழில் நிறை கிளியே! புன்னகை அழகே! பொதிகையின் அரசே! விண்ணவர் தேவன் விரும்பும் தமிழே! நின்னடி பணிந்தேன். தாயே!... என்னுளம் நுழைக. முத்தாய்த் தாங்கி முன்னூறு நாட்சுமந்து இத்தரையில் எனை ஈன்ற பெத்தவளை, மெத்தை மடிவிரித்தென் தத்துநடை பார்த…
-
- 2 replies
- 1k views
-
-
1.1. செய்யுளும் கவிதையும் யாப்பு என்பது கட்டும் நியதி. யாத்தல் என்பது பிணித்தல், புனைதல். யாவெனும் வினையடிப் பிறந்தது யாப்பு. எழுத்தும் அசையும் சீரும் தளையும் தொடுத்து அடிகளில் ஒருசேரக் கட்டிப் பொருளினை விளக்கிச் செய்யுள் அமைக்க உரிய இலக்கணம் யாப்பிலக் கணமாம். செய்யுள் என்பது செய்யப் படுவது. பத்தியும் பாட்டும் காவியம் உரையும் செய்யுள் என்பதன் பிரதி பதங்களே. கவிதை என்பது கவினுற விதைத்தல். பாட்டு என்பது பாடப் படுவது. செய்யுளும் பாட்டும் கவிதை வடிவமே. மலரும் கொழுந்தும் சேர்த்துத் தொடுத்த மாலை போலச் சொற்கள் விரவி சீர்படத் தொடுத்தது செய்யுள் எனலாம். மாலையின் நுகர்ச்சி மணமே போலச் செய்யுளின் நுகர்ச்சி பொருளே எனலாம். மாலையின் ஊடகம் அதன்நார் என்றால் செய்ய…
-
- 2 replies
- 2.2k views
-
-
பொதுவாகவே தமிழ்நாட்டுகாவல்துறையினர் அனைவரும் என்றில்லாது விட்டாலும் அதிகமானவர்கள் ஈழத்தவன் ஒருவனை ஆத்திரத்தில் பேசும்போதும் அடிக்கும்போது வன்மத்துடன் அழைக்கும் பெயர் 'அநாதை அகதிப்பயலுகளா' என்பதுதான்.போனவாரம்கூட செங்கல்பட்டுதடுப்புமுகாமில் இப்படி சொல்லியே தாக்கியுள்ளனர்.அதனையே தலைப்பாக வைத்து ஒரு கவிதை (நன்றி: Tamil_Araichchi கூகிள் குழுமத்தில் ச.ச.முத்து) அநாதை அகதிப் பயலுகளா….! – ச.ச.முத்து செப் 6, 2013 1 அநாதை அகதிப் பயலுகளா… எப்போதும் இங்கு தெருவிலோ, முச்சந்தியிலோ எதிரே வருபவனோ எவனோ சொல்லிச்செல்லும் வசனம்தான். அகதிக்கறுப்பா…! போ வீட்டுக்கு..! கேட்டுக்கேட்டே வாழப்பழகிவிட்டோம் நாம். குளிர்கூட ஊடுருவ முடியாத…
-
- 2 replies
- 938 views
-
-
துரோகங்களையெப்போ புரியப்போகிறாய்…? புனிதம் என்ற சொல்லுக்கு அர்த்தம் தந்தவன் நீ. அடர்வனப் புதர்களோடும் ஆயுதங்களோடும் ஆறாத்தவம் செய்த அற்புதம் நீ. பெயர்கள் யாருக்கோ பதியப்பட நீ பெயரின்றிப் புகழின்றிக் கடமையை மட்டும் கவனித்த களமாண்ட கடவுள் நீ. ஆயிரங்களாய் புதிய புதிய அவதாரங்களைச் சிருஸ்டித்த சிற்பி நீ. ஆயுதங்கள் மெளனித்து அனைத்தும் ஒரு கனவின் கணங்கள் போல காய்ந்து போனது களவாசம். நீ இன்னும் கனவுகளுக்காகக் கரைந்து கொண்டிருக்கிறாய். உன்னைத் தேடும் முகங்களுக்குள் நீ மூழ்கடிக்கப்படுகிறாய். உனது மனிதம் மிக்க இதயத்தை அவர்கள் மிருகத்தனமாய் மிதிப்பதைக் கூடப் புரிந்து கொள்ளாத ஒரு குழந்தையின் இதயம் உனக்குப் படைக்கப்பட்ட…
-
- 2 replies
- 1.6k views
-
-
சிங்காரி சரக்கு…….. சின்னத் திரை என்னும் வண்ணத்திரை வனிதையவள் கன்னிப் பெண்ணாக கருத்திற்கு விருந்தாக எண்ணத்தில் இனிக்கின்ற கன்னற் சுவையாக கொட்டும் கண்ணீரில் சொட்டும் அமிலத்தால் பந்தமென்றும் சொந்தமென்றும் பாசமென்றும் நேசமென்றும் ஆனந்தம் சொரிகின்ற அழகு வசந்தமென்றும் கெட்டிமேளம் கொட்டிவிடும் மெட்டிஒலி மகளென்றும் செல்லமடி நீ என்றம் செல்வத்தின் மனைவி என்றும் அத்திப் பூ அரசி என்றும் கஸ்தூரி மானென்றும் எத்தனைதான் ஏமாற்று வித்தைகளைச் செய்கின்றாள் செற்றிக்குள் இருந்தபடி இச் செப்படி வித்தைகளை கண்டு மனம்கசிந்து கைக் குட்டை நனைக்கின்ற கண்ணான எம்மவரின் புண்ணான நிலை கண்டு எண்ணத்தின் கோலத்தை எழுத்தில் வடித்திட்டேன் மென்மைக்கும் பெண்மைக்கும் மெய்ப் பொருளை…
-
- 2 replies
- 1.3k views
-
-
மக்கள் எழுபத்து ஏழில் தனிநாட்டுக்கு தீர்ப்பளித்தனர் தந்தை செல்வா தமிழ் மக்களை கடவுளே காப்பாற்றவேண்டும் என்றார் வேறுவழியில்லை கைகளில் ஆயுதம் நாங்கள் அடித்தால் அடிவாங்க பயந்தாங்கோழிகளோ மகாத்மாக்களோ இல்லை அடித்தார் திருப்பி அடித்தோம் அடித்தவரில் குற்றம் சொல்லா உலகு திருப்பி அடித்தவரில் எங்ஙனம் குற்றம் காண்பது? எங்கள் கைகளை மட்டும் கட்டி எதிரிக்கு ஆயுதம் கொடுத்தது மூர்க்கமாய் கால் தடங்கள் போட்டது முதுகை குறிவைத்தது இயங்கிய உடல் ஓயலாம் போராட்ட ஆத்மா சாகாது அடிமைத்தனத்தை ஏற்காது நீறு பூத்த நெருப்பாய் விடுதலை தாகம் இருக்கும் ஒரு நாள் தீரும்
-
- 2 replies
- 509 views
-
-
”எங்கிருந்தோ வந்து நம் தெருவோர மரக்கிளையில் குந்தி தேவதையின் கூந்தலெனத் தன் பூவால் அசைத்த அந்தக் குருவியைப் போல் காணாமல் போனதடி காலங்கள்.” . எனது பூவால் குருவி கவிதை 1996ல் சரிநிகரில் வெளிவந்தபோது நான்ஓட்டமவடி ஏறாவூர் முஸ்லிம் மக்களின் காணி மற்றும் மந்தைகள் பிரச்சினை தொடர்பாக பேச படுவான் கரைக்குச் சென்றிருந்தேன். உயிரை பணயம் வைத்து யாருமற்ற பகுதியை கடந்து போனேன். இந்த ஆபத்தான நெடும் பயணம் ஏறாவூரில் இருந்து ஆரம்பமானது. ஏறாவூரில் இருந்து வந்தார மூலை வரை என்னை தோழன் பசீர் சேகுதாவுத் தனது வானில் பாதுகாப்பாக அழைத்துச் சென்றான். நான் பாதுகாப்பாக போய் வரவேண்டுமென்ற கவலையுடன் விடை தந்தான். . வன்னியில் இருந்து யாழ்வேந்தன் வந்திருந்தார். சில நாட்க்களின் முன்னர்…
-
- 2 replies
- 2.2k views
-
-
நினைவஞ்சலி..( சந்தன கடத்தல் வீரப்பனுக்கு) எம் தமிழ் நாட்டின் எல்லையை காத்தவன்.... எண்ணிலே ஆண்டுகள் ஏறியே ஆண்டவன்.... தன் இனம் அழித்தவன் தலைகளை அறுத்தவன்..... தவறுகள் செய்தானை தவறாமால் அழித்தவன்... எம் தமிழ் அழிகையில் எண்ணியே அழுதவன்... நாம் அகதியாய் அலைகையில் அன்றவன் துடித்தவன்.... கருணை கொண்டவன் காட்டுக்குள் வாழ்ந்தவன்.... தன் வாழ்வு இழந்தவன் தமிழ் எல்லையை காத்தவன்... கடத்தலின் வீரனாய் காலமுன் எழுந்தவன்... சரித்திர வீரனாய் சாதனை படைத்தவன்.... பெண்களை தாயாய் எண்ணியே மதித்வன்... மதிப்பினை அவருக்கு மான்பாய் கொடுத்தவன்.... கடத்தல்கள்…
-
- 2 replies
- 1.5k views
-
-
பழி மறந்துவிட்டாய் போ…! எமை ஊர்விட்டு-உறவுகளின் உயிர்விட்டு போகச் செய்தவனை உனில் வேர்விட்டு-எம் மண்ணில் படரவிட்டு நிற்கின்றாய்…? காதல்..! சாதி,மதம் பார்க்காத சமத்துவவாதிதான்-அதற்காக உறவையெல்லாம் கொன்று-பெண்கள் கற்பையெல்லாம் தின்று…. பசியாறிக் கொண்டவனை கட்டிக்கொண்டாயே….? உனதூரில்… காந்தனோ,சாந்தனோ,கந்தனோ கிடைக்கவில்லையா? இந்தக் களுபண்டாவா கிடைத்தான் நீ காதல் மணம் புரிந்து கொள்ள..? உனைத் தொடும்போதெல்லாம்-நீ கட்டியவனிற்கு மட்டுமே கடைவிரிப்பதாய் சிலிர்ப்பாய்… அவன் எப்படி நினைப்பானோ…! முள்ளிவாய்க்காலில் குற்றுயிராய்க் கிடந்தவரை தாம் புனர்ந்ததை நினைப்பானோ…! கண்களைக் கட்டி பெண்களைக் கொல்வதற்கு முன்னே கூட்டமாய் சதை பிய்த்துத் தின்றத…
-
- 2 replies
- 510 views
-
-
புதிய பௌத்தம் யு9 பாதை திறந்தாயிற்று ஈழத்தமிழர்களின் வாழ்வுபோல் தலை இல்லாத் தென்னையும் பனையும் தான் தெருவெங்கும் தோற்றுன்றன. துக்கத்திலும் அவமானத்திலும் தலைகுனிந்து நிற்கும் மரங்களுக்கும் எம்மக்களுக்கும் துப்பாக்கி காட்டியே ஆறுதல் சொல்கிறார்கள் படைகளும் அவர்களின் குடைகளும். துப்பாக்கி தூக்கிய கைகள் வெறுமையாக உயர்த்தப்பட்டபோது வெளிநாட்டில் எம்தமிழ் மனங்கள் விதைவையாய் போயின. மாறிநின்றவர்களுக்குக் கூட மாண்டவர்கள் தமிழரின் அடையாளமாய் போயினரே. திவசத்துக்குக் கூட அடையாளம் இன்றி வன்னி வடுவின்றி எலும்புகள் கூட எரியத்தொடங்கிவிட்டன- ஆனால் …
-
- 2 replies
- 941 views
-
-
வார்த்தைகள் தோற்றுப்போன போதில் பெரும் கோபத்தோடு வீழ்ந்து போனது இயல்புகள் ..... வெளியில் , ஆரவரத்துடன் ஆரம்பித்த அடைமழை கழுவிகொண்டிருந்தது. மௌனம் மெல்ல மெல்ல விலக மழைபொழுதின் வெளிச்சம் எங்கும் வியாபிக்க தொடங்கியது .. மழை கழுவிய தெருக்களில் வெறுங்காலுடன் நடக்க ஆரம்பிக்கையில் தோற்றுப்போன தடயத்தின் மீது குளிர் பரவ ஆரம்பித்தது . இலைகளில் மினுங்கிய துளிகளில் முகம்பார்க்க முயன்று தோற்றுப்போனதில் இயல்புகள் இயல்பாயிற்று ....... தோற்றுப்போன வார்த்தைகள் சிரிக்க ஆரம்பித்தன எனை பார்த்து தலைகுனிந்து கொண்டேன் .
-
- 2 replies
- 1.1k views
-
-
படித்ததில் பிடித்த ஒரு கைக்கூ...! இடியொடு மின்னல் உன் நினைவுகளுடன் என் இதயம் பேசும் இரவு நேரக் கவிதைகளாகின.....! நன்றி மீண்டும் சந்திப்போம்...!
-
- 2 replies
- 2.1k views
-
-
பிறப்புக்கும் இறப்புக்குமான மானுட உனது உரிமைகளை கொண்டாடுவதும் நினைவு கூறுவதும் போன்றே எனது பிறப்புக்கும் இறப்புக்குமான நினைவுகளை நான் கொண்டாடுவதை நினைவு கூறுவதை மறுக்கும் உரிமை உனக்கில்லை. All human beings are born free and equal in dignity and rights
-
- 2 replies
- 959 views
-
-
(படித்ததில் பிடித்தது) அன்பின் சுந்தரம், நிலா நட்சத்திரங்கள் அணைந்துபோன ஏழை வானத்தின் கீழ் அந்தகார இரவு முகாமுக்குச் சுருண்டு கொள்ளும்போது ஊமை ஓலமிடும் நிலத்தின் கீழே எந்த இடத்திலாவது நீங்கள் உறங்கியிருப்பீர்களென உங்களைக் கடந்து போகும் வரும் பூட் சப்பாத்துக்களின் ஒலி அசைகின்ற உலகைச் சொல்லித் தரும் எனக்கு அன்றைய நள்ளிரவு இருள் பஞ்சாயுதங்கள் வீழ்ந்த களப்பு அப்பா இல்லாமல் போன காலம் குஞ்சுகளுக்கு யாருடைய காவல் அங்கிருந்தும் இங்கிருந்தும் கொஞ்சம் பேர் வந்து அடிக்கடி விசாரிக்கிறார்கள் ருசி தானே இந்த (சிறை) உணவு வேறெங்கும் கிடைத்ததா இதை விடவும் …
-
- 2 replies
- 942 views
-
-
""]""புலியாகி போறேன் நான் எல்லை....காக்க..."" அழுதழுது தினம் களைத்து அழுவதற்கு கண்ணீரில்லை.... அவலம் என்ற வாழ்வியலும் அழிவதாக தெரியவில்லை... ஓடி ஓடி ஒழிந்து நின்றோம் இனி ஒடுவதற்கு ஊரில்லை... எம் உயிரை நாம் காக்க எமக்கு வழி தெரியவில்லை.... பட்டினியால் தவிக்கின்றோம் பசி போக்க முடியவில்லை... நின்மதியாய் உறங்கியெழ நித்தம் இங்கு முடியவில்லை... நித்தமொரு சாவீட்டை தவிற்க்க எம்மால் முடியவில்லை... என்ன செய்வோம் ஏது செய்வோம்... எமக்கு வழி தெரியவில்லை.... நாள் தோறும் வந்து பகை தருகுதெமக்கு தொல்லை... அதனாலே போறேன் நான் காப்பதற்கு எல்லை...!!! - வன்…
-
- 2 replies
- 1.1k views
-
-
சத்திய சோதனை-பா.உதயன் கொடிய இரவின் பிறப்பில் எலும்பும் சதையுமாக எரிந்து கொண்டு இருந்தது முள்ளிவாய்க்கால் இருளின் நடுவே சிலுவை தாங்கி இறைவன் வருவான் என நிலவை பார்த்தோம் இறந்த தாயின் முலையில் குழந்தை பால் குடிக்க இழுத்து வந்து நெருப்பு மூட்டினர் எங்களின் வீட்டில் யூதர்கள் வந்தனர் ஜேசுவை கேட்டனர் ஆயிரம் ஆயிரம் சிலுவையில் அவர்களை அறைந்தனர் உயிர்த்து இருந்தவர்களை இன்னும் ஒரு முறை புதைத்தனர் கனவுகள் உடைந்து கல் அறைக்குள் ஒழித்து கொண்டன முள்ளிவாய்க்கால் முழுமையாக மூச்சு இழந்தது மிஞ்சி கிடக்கும் சாம்பலில் இருந்து எலும்பை எண்ண அங்கு யாரும் சாட்சிக்கு இல்லை …
-
- 2 replies
- 640 views
-
-
வேலைக்காய் ஓடாதே விடியலுக்கு நேரமாச்சு... கவிதை.... என் உறவுகளே நிறுத்துங்கள் நீங்கள் ஓடுவதை நிறுத்துங்கள்...... உலகெங்கும் மக்கள் வெள்ளம் இருந்தும் நீங்கள் கொஞ்சம் வேலைக்காய் ஓடுகிறீர்...! வேண்டுமென்றா ஓடுகிறீர்...? உன் பெற்றோர் வன்னியிலே இருந்துவிட்டால் ஓடுவீரா...? உன் உறவு உயிர்பிரிந்து உருக்குலைந்தால் ஓடுவீரா...! எழுபது விழுக்காடு எழுச்சிகொண்டு எழுந்திருக்க முப்பது விழுக்காடு முயற்சியற்று தூங்குகிறீர்...! உன் உறவின் பாதுகாப்பை உறுதிசெய்ததாய் நினைத்துவிட்டு பணம்சேர்க்கும் முயற்சியிலே தமிழில் பாசமற்று ஓடுகிறீர்..... ஆனால் ஒன்றுமட்டும் மறக்காதே நீர் எல்லோரும் தமிழென்று என்றைக்கு இருந்த…
-
- 2 replies
- 880 views
-
-
விடைபெறும் ஆண்டே விதைத்து விட்டு போகிறாய் பலவற்றை எம் வயல்களில்... அறுவடைக் காலத்திற்காய் காத்திருக்கும் வலிமையையும் விளைவுகளை சாதகமாக்கும் திண்மையையும் தந்துவிட்டு போ.... கண்ணீரின் கனதி சுமந்த காற்றும் கலைந்த கனவுகளின் ஓலங்களும் பேரிருள் ஏறிய உறைவிடங்களில் நிறைந்துபோக, ஏக்கங்களும் ஏமாற்றங்களும் யுகாந்திர காத்திருப்புக்களும் மௌனமாக வாழ்விடங்களில் நிலைத்துப்போக, இயலாமை சுமந்து விடை கொடுக்கிறோம். கருவழிந்த காலத்தின் குறியீடே... உயிர்ப்பினை ஒளித்துவிட்டு சாம்பல் பூசி அடங்கிக்கிடக்கும் கிளைகள் மீதினில் மோதட்டுமுன் ஊழியின் பெருங்காற்று. மக்கிப்போகாத எலும்புகள் மீதும் மண்தின்ற தசைத் துண்டங்கள் மீதும் இறங்கட்டுமுன் பிரளயம். இனி பகை கொண…
-
- 2 replies
- 599 views
-
-
பொல்லாப் பிறப்பும் புளுதியில் எறிபட்ட மீன் குஞ்சுகளும் வல்ல அசுரர்களின் கால்களில் புளுவாய் துடிக்கும் போதிலும் எல்லா வலியும் பொறுத்தருள் என்ற கடவுளுக்கு அரோகரா சொல்லித்திரியும் தெருப்பண்டார பரதேசிகளின் கூச்சல்கள் உலக மூலை முடுக்குகளில் ஓங்கி ஒலிக்கின்றது. கோவணத்துடன் சிலுவையில் அறையப்பட்ட கத்தருக்கு உடல்முழுக்க ஆடையணித்து தோத்திரம் சொல்லும் தேவதூதர்களை அம்மணமாக சிலுவையில் அறையப்பட்டிருப்பவர்கள் குறை உயிருடன் அரைக்கண்ணால் புரியாமல் பார்க்கின்றார்கள் கடவுளால் கைவிடப்பட்டவர்களின் திருவோடுகளில் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் விழையாடும் பந்துகள் தான் தவறி விழுகின்றது அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு அனைத்தும் கலந்து பீத…
-
- 2 replies
- 825 views
-
-
கொழும்பு எனது காயங்களை ஆற்றக்கூடிய எனது வார்த்தைகளை புரிந்துகொள்ளக்கூடிய எனது நியாயங்களை ஏற்றுக்கொள்ளக்கூடிய நண்பர் ஒருவரை இந்த நகரத்தில் சந்திக்கக்கூடுமென எதிர்பார்க்கிறேன் தலையற்ற பனைகளுக்குள் வடலிகள் முளைக்குமென பறிக்கப்பட்ட வீடுகளுக்கு நாம் திரும்பவேண்டுமென அழிக்கப்பட்ட நகரங்கள் உயிர்க்குமென சிதைக்கப்பட்ட கிராமங்கள் செழிக்குமென சொல்லக்கூடிய ஒருவரை கடற்கரை இருக்கைகளில் தேடுகிறேன் காணாமல் போனவர்கள் திரும்ப வேண்டுமெனவும் பிள்ளைகளை இழந்த தாய்மாரின் கண்ணீர் துடைக்கவேண்டுமெனவும் கொல்லப்பட்டவர்களின் கனவு மெய்யாகவேண்டுமெனவும் சொல்லக்கூடிய ஒருவரை இந்தத் தெருக்களில் சந்திக்க காத்திருக்கிறேன் யாவற்றின் பிறகும் எனது தாய்மொழியை மதிக்கும் ஒருவரை எனத…
-
- 2 replies
- 694 views
-
-
மரணம்! ஆண்டுத்திவசத்தோடு மறந்துவிடுகிறோம் விபத்து! காயத்துக்கு கட்டுப்போட்ட கையோடு மறந்துவிடுகிறோம் இழப்பு! நிவாரணம் கிடைத்ததும் மறந்துவிடுகிறோம் தேர்தல்! விரல் மை காயமுன் மறந்துவிடுகிறோம் விடுதலை! அற்ப சொற்ப சலுகைகள் கிடைத்ததும் மறந்துவிடுகிறோம் தியாகம்! நவம்பர் 27 இல் தீபங்கள் அணைத்ததும் மறந்துவிடுகிறோம் ஒற்றுமை! கூட்டம் முடித்து காரில் ஏறியதும் மறந்துவிடுகிறோம் துரோகம்! செய்தவனையே மறந்துவிடுகிறோம் மறதி!!! ஈழத்தமிழனுக்கு கிடைத்த வரமும்... சாபமும்...!!! -தமிழ்ப்பொடியன்-
-
- 2 replies
- 843 views
-
-
ஆசைகள் அங்கும் இங்கும் ஒன்று தான்... உடலின் சேர்க்கையில் திரவங்களின் கலப்பில்.. வந்தன விளை பொருட்கள்..! தாயென்றும் தந்தையென்றும் உறவுகள்.. சமூகமென்றும் மக்களென்றும் கூட்டங்கள் கூச்சல்கள்...! எல்லாமே இயற்கையின் விதிப்படி..! ஆனால்... போட்ட குட்டிகளுக்கு இரை தேட வழியின்றி மனிதன்..!! போட்ட குட்டிகளுக்காய் உடல் ஒட்டிய போதும்.. இரைக்காக இரங்கும்.. இதுவும் ஓர் உயிர்ப்புள்ள.. பிராணி தான்..! "சாட்" செய்து சோடி பிடித்து கை கோர்த்து.. காதலித்து மேடை போட்டு வேதம் ஓதி.. தாலி கட்டி தேன்நிலவு கண்டு வந்தால் என்ன.. உடல் ஒட்டி குட்டையோடு.. வீதியோரம் இழுபட்டு நொந்து நூலாகி வந்தால் என்ன விளை பொருள் எங்கும் ஒ…
-
- 2 replies
- 673 views
-
-
நேற்றிரவு நிறையப்பேர் நித்திரை கொள்ளவில்லையென சொல்லினர்... அவன் விழிகள் வேட்டை நாயைப்போல வேட்டையாட துரத்துவதாயும் கொடும் கனவொன்றில் பெரும்பாம்பொன்றின் வாயில் சிக்கியதாயும் துப்பாக்கி முனையில் நானே நிற்பதைபோலாயும் அத்துணை பயத்திலும் ஏதுமற்ற ஞானியைப்போல எப்படி இயன்றதென்றும் இன்னோரன்ன புகழ்தலும் பிதற்றலும்,இரங்கலும் எள்ளலுமாய் நேற்றிரவு நிறையப்பேர் நித்திரை கொள்ளவில்லையென சொல்லினர்... எனக்கு, ஒவ்வொரு இரவும் பல்லாயிரம் வன்னி இரவுகளை நினைந்தும்,கதைத்தும்,அழுதும்,அரற்றியும் புலர்கிற பொழுதெலாம் புத்திரர் நினைப்பில் இதுவும் இன்னோர் இரவே....
-
- 2 replies
- 791 views
-
-