கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
அகராதி நீ என் அகராதி ..... அகரம் முதல் அந்தம் வரை..... அங்குலமாய் வர்ணிக்கும் அகராதிநீ..... அழகு தமிழ் வார்த்தைகளை...... அடுக்கடுக்காய் உனக்காக தொகுப்பேன்....!!! அகோராத்திரமும் உன்னை நினைத்து..... அல்லோலகல்லோலப்படுகிறேன்...... அணைக்கவும் முடியவில்லை....... அகலவும் முடியவில்லை ........ அகம் படும் பாட்டை எப்போ அறிவாய்......? அழகு தேவதையே அகத்தரசியே & அகராதி சொற்களில் கவிதை கவிப்புயல் இனியவன் மேலும் தொடரும்
-
- 2 replies
- 730 views
-
-
இளைஞனே எழுந்திடு!!!! நாளை வருமென்று நாளைக் கடத்தாதே வேளை வருமென்று வெருண்டு திரியாதே நாளை உனதாக வேண்டும்-அதில் வீரத்தமிழனின் புலிக்கொடி பறக்க வேண்டும் கோழைத்தனம் துறந்து வீர உணர்வோடு எழுந்துவா நீ உனக்கென்று ஒரு நாடுகாண நாளையல்ல இன்றே அதன் ஆரம்பம்காணப் புறப்படு போலி சுகங்களில் பொய்வாழ்வு வாழாதே மதங்களென்று மயங்கித் திரியாதே பிறந்ததிற்காக நல்லதைச் செய் இன்றே நாளை அது உன்வாழ்வைச் சிறப்பிக்கும் உன் கனவு தமிழீழம் நிறைவேற உன் மக்கள் உன் புகழ்பாட உணர்வுகொண்டு எழுந்துவா குழந்தைத் தனம் துறந்து உன் கொள்கை வெறிகொண்டு உலகம் புலி என்று கூற-நீ நம்பி எழுந்துவா உன் கனவு நிறைவேறும் குட்டக் குட்டக் குனிந்தது போதும்-இனி தமிழன் என்ற உணர்வ…
-
- 2 replies
- 1.1k views
-
-
'' போரை தொடங்கும் புலிகள்..'' உள்நுழைந்து உளவெடுத்து ஊந்துகணை தாக்குது பகையரனின் காவலரன் பலிகளமாயாகுது..... முன்னேற வந்த பகை முதுகுடைந்து சாயுது கண்ணு முன்னே தளபதிகள் களப்பலிகள் ஆகுது... எங்கள் புலி வீரமின்று ஏறியங்கு ஆடுது உலகத் தமிலெல் லாமின்று கை கொட்டி பாடுது.... வானமேறி வந்த பகை வானமது காவுது பாதி வழி போகுமுன்னே படை உயிர்கள் போகுது... நான்கு முனை திறந்தடிக்க நம்ம படை கூடுது வேண்டி கட்டி வந்தபடை வெளியேற போகுது... பரிட்சாத்த தாக்குதல்கள் பரவலாக நடக்குது பறையடித்து புலிகளணி போரை தொடுக்க போகுது....! ' -வன்னி மைந்தன் -
-
- 2 replies
- 1.3k views
-
-
இரோம் சர்மிலா பிறந்தநாள் இன்று. அவர் குறித்து எழுதிய கவிதை ஒன்று கூப்ரூ மலையின் மகள் மரட்சியுடன் திரியும் மான்கள் நிறைந்திருக்க செம் மல்லிகை பூத்திருக்கும் கூப்ரூ மலையின் மகளே நெடிய விரத்தினை முடித்து உணவருந்து! துப்பாக்கிகளின் விற்பனைக்கான பூமியில் இனியும் பசியோடிராதே! உருகிய உன்னுடலருகே நின்றவுன் சனங்கள் ஒவ்வொரு உணவு வேளையிலும் கோப்பைகளைத் தூக்கும்போதடைந்த குற்ற மனம் இனியேனும் தணியட்டும் வற்புறுத்தப்பட்ட உணவுத் தண்டணையும் மூக்கில் சொருகப்பட்ட உணவுக் குழாய்ச் சிறையும் இத்தோடு முடிந்துபோக நெடுநாளாய் மறந்த உணவைக் கையிலெடு நிர்வாணங்களினால் போரிட்ட …
-
- 2 replies
- 969 views
-
-
சிதையும் தமிழ் கலாசாரம் சீர்மிகு தமிழினம் இன்று சிதைந்ததை எண்ணித் துடிக்கையில் விளைந்த தமிழ் மானமது வீழ்ந்ததடா சாக்கடையிலே மானத்திற்காய் உயிர்தந்த எம் மாந்தையரோ மதிகெட்டு இன்று மயங்கி வீழ்ந்தனரே மேற்கத்திய நாகரிகத்தினிலே கட்டிக்காத்த கலாசார நிலவதுவோ கருமுகிலில் புகுந்து மறைகிறதே சுதந்திரமாய் சுத்திவந்த தென்றலோ சுத்தம் கழைந்து செல்கிறதே பாவப்பட்ட மண்ணினிலே பாவச்செயல்கள் எத்தனையோ கருவைச் சுமந்த கன்னியரின் கருகளைவுகள் எத்தனையோ தொட்டிலிலே தூங்க வேண்டிய திசுகளோ தொட்டியிலே குப்பைத் தொட்டியிலே தலை குனிந்து சென்ற பெண்களோ தரம் கேட்டு சந்தையிலே மந்தைகளாய் மதுவினிலே மயகியதால் மானம்தனை மறந்துவிட்டான் வீரத் த…
-
- 2 replies
- 1.1k views
-
-
காற்றும், வானும், நீர், நிலம், நெருப்பும் தழுவி உம் மெய் ஆற்றட்டும். மண்டியிடாத மன்னவனை எமக்களித்த மாமனிதா சரித்திரச் சங்கமிப்பில் நெருப்பெடுக்கும்போதில் மண்ணின் கணிதத்தில் மரணமும் ஜனனமய்யா. பாக்கு நீரிணையின் சிற்றலைகள் மிடுக்கெடுக்க உப்புக் காற்றுறையும் ஊறணியில் இனத்தின் மீளெழுச்சித்துயில் கொள்க. காற்றும், வானும், நீர், நிலம், நெருப்பும் தழுவி உம் மெய் ஆற்றட்டும். வல்வை மண் சாந்தி தரும்.
-
- 2 replies
- 834 views
-
-
விடிவு தோன்றுமா? சண்டைகள் சாய்ந்து சச்சர வோய்ந்து சமத்துவம் என்றுவரும் - வெடிக் குண்டுகள் ஓசை, கொலை வெறிப் பேச்சு கேளா நாள்வருமா? சிரிப்பினை மறந்து இருந்திடும் சனங்கள் சிரித்திட வழிவருமா - உடல் தெருநடு வீதி தனில்விழும் அந்த ஓருநிலை மாறிடுமா? மக்களை மக்கள் மதித்திடும் நிலைதான் மண்ணில் வந்திடுமா? - மொழிச் சிக்கல்கள் ஓய்ந்து செம்மைகள் காணச் செகத்தில் நாள் வருமா? அடக்கு முறையும் அசுரத் தனமும் அடியோடு ஓடிடுமா? - இனி நடக்கும் காலம் தனிலே தானும் நன்மை கூடிடுமா? அடிமை விலங்கு அனைத்தும் தகர்ந்து அகிம்சை நிலை பெறுமா? - புவி விடிவு என்று புலரும் பொழுதை விரைவில் ஏற்றிடுமா?
-
- 2 replies
- 1.2k views
-
-
MULLIVAIKKAL REMEMBRANCE DAY- POET'S VOW முள்ளிவாய்க்கால் நினைவு - ஒரு கவிஞனின் பிரதிக்ஞை, . Please perform it as songs, rap songs, and dance. No permission needed. பிடித்த வரிகளை பாடல் ஆடலாக நிகழ்த்த வேண்டுகிறேன். அனுமதி வேண்டியதில்லை. . தோற்றுப் போனவர்களின் பாடல். வ.ஐ.ச.ஜெயபாலன் . எல்லா திசைகளில் இருந்தும் எழுந்து அறைகிறது வெற்றி பெற்றவர்களின் பாடல். பாடலின் உச்சம் எச்சிலாய் எங்கள் முகத்தில் உமிழப்படுகிறபோதும் அவர்கள் அஞ்சவே செய்வார்கள். ஏனா? அவர்களிடம் தர்மத்தின் கவசம் இல்லையே.. . எரிந்த மேச்சல் நில…
-
- 2 replies
- 836 views
-
-
''நீ பேசலாமா நீதி....???'' (பொரியல் .கறி) வடக்கு கிழக்கு நமக்கு பிணைப்புயதாய் இருக்கு... அடி பாவி அதில் உனக்கு கேட்க என்ன இருக்கு....??? விடுதலைக்காய் எமக்கு நீ செய்து என்ன இருக்கு....??? காக்கை வன்னியே உனக்கு இன்று கருணை பேச்சு எதுக்கு....??? உந்தன் மக்கள் அங்கு உயிர் துறந்துயன்று கிடக்கு... அந்த நேரம் போயு அதை பார்க்கா நீயும் இருக்கு.... இன்று வந்து என்ன நீ பேசி போயு கிடக்கு....??? ஜயா மகிந்தா வேட்டிக்குள்ளே அடி நீயும் ஒளிந்து கிடக்கு..... இங்கு வந்து உனக்கு வீரப் பேச்சு எதற்கு....??? உன் இனத்தில் உனக்கு வெட்டு கொத்து இருக்கு.... …
-
- 2 replies
- 889 views
-
-
-
- 2 replies
- 3.8k views
-
-
சொந்தநாய்களுக்குச் சொத்தெழுதிவைக்கும் தேசங்களே! ஓர் இனமே நிலமிழந்து நிற்கிறதே நெஞ்சிரங்க மாட்டீரா? பூனையொன்று காய்ச்சல் கண்டால் மெர்சிடீஸ் கார் ஏற்றி மருத்துவமனை ஏகும் முதல் உலக நாடுகளே! ஈழத்து உப்பங்கழியில் மரணத்தின் வட்டத்தில் மனித குலம் நிற்கிறதே! மனம் அருள மாட்டீரா? வற்றியகுளத்தில் செத்துக்கிடக்கும் வாளை மீனைப்போல் உமிழ்நீர் வற்றிய வாயில் ஒட்டிக்கிடக்கும் உள்நாக்கோடு ரொட்டி ரொட்டி ரொட்டியென்று கைநீட்டும் விரல்கள் கண்குத்தவில்லையோ அமெரிக்க அதிபரே! தமிழச்சிகளின் மானக்குழிகளில் துப்பாக்கி ஊன்றித் துளைக்கும் சிங்களவெறிக் கூத்துகளை அறிந்தும் அறியாயோ ஐ.நாவே? வாய்வழி புகட்டிய தாய்ப்பால் காதுவழி ரத்தமாய் வடிவது க…
-
- 2 replies
- 1.3k views
-
-
செஞ்சோலை சொந்தங்களே ! என்சோலை பந்தங்களே !!! யார் கொடுத்தார் சாபம் எமை பிரிந்தீரே ஏன் கொடுத்தார் சோகம் புரியவில்லை நஞ்சாகி நீங்கள் எமை பிரிந்தீரே நெஞ்சோடு நீங்கள் தொடர்ந்தீரே பிஞ்சான நீங்கள் பினமாகிநீரே பிணமாலை கண்டு நீர் அழுதீரோ? மகிந்தாவின் சதியில் மாண்டு மடிந்தீரே மண்ணோடு மண்ணாகி எம்மை மறந்தீரே அந்நாளில் அநியாய சாவை அடைந்தீரே அப்பாவி உயிராக வாழ்வை துறந்தீரே கல்லான நெஞ்சமே கண்ணீர் வடிக்கின்றதே சொல்லாத சோகம் நெஞ்சை கிழிக்கின்றதே. வித்தான நீங்கள் மீண்டும் வளர்வீரே எம்மோடு ஒன்றாகி வாழ்வை பெறுவீரே எந்நாளும் உம்மை எண்ணி விழிநீரே எம் கண்கள் நீர் வந்து துடைப்பீரோ? கல்லான நெஞ்சமே கண்ணீர் வடிக்கின்றதே சொல்லாத சோகம் நெஞ்சை கிழிக்கின்றதே.
-
- 2 replies
- 760 views
-
-
என்னவளுக்கு ! இன்று தொழிலாளர் /உழைப்பாளர் தினம் இன்றுதான் உன் பிறந்த தினமும் "எட்டு மணி நேர வேலை "என்று தொடங்கி ரஷ்ய புரட்சியே வெடித்தது என்னவளே ! எந்த புரட்சியும் இல்லாமல் இன்னும் இரு எட்டு மணி நேர வேலை செய்கிறாய் ஒற்றையாய் ஒரு தசாப்தம் குடும்ப சுமை உன்மீது இரட்டையாய் ஒன்றானோம் புலம் பெயர்ந்து விரும்பா/எதிர்பாரா புலம்பெயர்வு எனக்கு எல்லாமே போனஸ் தான் நீயும் எனக்காய் மாறிப்போனாய் குழந்தைகளுக்காய் புதிய மண்ணில் மீண்டுமொரு போராடியவாழ்வு அத்திவாரத்திலிருந்து அலைகளில் அசைந்தவாழ்வு சுனாமியாய் அடித்து ஓய்ந்தது உயிரால் வரைந்த ஓவியம் உலகால் கலைந்த சீவியம் மனிதர்களுக்கு கடின வாழ்வு பச்சோ…
-
- 2 replies
- 769 views
-
-
உயிரை கொடுத்து உணர்வை வளர்த்தாய் நீ இட்ட தீ எரிந்து சமைக்கும் முத்துக்குமரா!! மாறாத புன்னகையே மாசற்ற முத்துக்குமரா ஆறாத காயங்களை தாங்கிநிற்கும் தமிழ்மண்ணின் சோகத்தைத் தாங்காமல் சோதனை தந்தாயோ பாகத்தின் நிலையுறுத்தி பாரெங்கும் தெளியவைத்து வீறாகி உன்னுயிரை சுடரேற்றி உரமிட்டாய் என்னருமைத் தமிழுக்கு வித்தான வெண்ணிலவே கண்களிலே நீரழைக்க கனலேற்றித் துடித்தாயே பித்தரைப் போலநாம் புலம்பெயர்ந்த நாட்டினிலே புத்தரையடி பேணும் புனிதரல்லாச் சிங்களனின் முத்திரை பதிக்கின்ற போலி முகங்களுடன் கிண்டலுடன் கேலிபண்ணும் தாயைப்பழி துணைகளுடன் ஏதுவழி யறியாமல் சட்டதிட்ட வகையுணர்ந்து பேசவழியறியாது அடக்கமது தான்மருவி இனமழிக்கும் ராஜபக்ஷ மகிந்தனெனும் மகாவசுரன் …
-
- 2 replies
- 797 views
-
-
-
இன்று இணையப்பக்கங்களில் மேய்ந்து கொண்டிருந்த பொழுது http://veyililmazai.blogspot.com என்கிற வலைப்பூவில் ஒரு கவிதையை படித்தேன் பிடித்திருந்தது. நமக்குத்தான் சொந்தமாய் எழுதவராதே அதனாலை நீங்களும் படித்துப்பார்க்க இங்கு இணைக்கிறேன்.நன்றிகள். தீக்குச்சி இரவுகள்... பௌர்ணமி இரவில் நிலவைத் தொலைத்திருந்தது வானம்... உலக வெப்பமயமாதலின் விளைவென்கிறார்கள், எங்கள் உயிர் குடித்தத் துப்பாக்கிகளின் முனையிலிருந்து எழுந்தப் புகைமூட்டத்தில் கருகிவிட்டதென்பதை அறியாமல்... நாளை மாந்தோப்பில் சந்திக்கலாமென்று கையசைத்துச் சிறகுமுத்தம் கொடுத்தனுப்பிச் சென்ற காதலி, சீர்கெட்டச் சீருடைக்காரர்களின் குதம்து…
-
- 2 replies
- 1k views
-
-
என் தேசப்பெருநிலமெங்கும் குவிந்து கிடக்கும் வெண் சாம்பல் மேடுகள் புன்னகைக்கின்றன....... தோழர்களே நன்றி. காலநீட்சியின் கனவுகள் சுமந்த வாழ்தலை ஈழமீட்சிக்காய் உதிர்த்துவிட துணிந்த வீரம் கண்டு, உமிழ முடியாத பெருவெப்பம் சுமந்து உறங்குமவர்கள் விழிகள் பனிக்கின்றன............ உங்களுக்காக............ தொண்டைமான் நீரேரியும் வழுக்கியாறும் -அழகிய சப்ததீவுக்கூட்டங்களும் தசாப்த உறக்கம் கலைத்து நோக்குகின்றன, சோழமண்டல உறவுகளே உங்களின் எழுச்சியை, வல்லைமுள்ளி வெளிகளுக்கும் பகைபணிந்த ஆனையிறவுக்கும், வலசைவரும் ஆயிரமாயிரம் பறவைகளிடம் வாழ்த்துக்களை பகிர்கின்றனர் கண்களால் எம்மவர்கள் -அவை நாளையாவது உங்களிடம் வரும் என்ற நம்பிக்கையில். கருக்கொண்ட மேகங்கள் எழத்தொடங்கிவிட்டன-…
-
- 2 replies
- 743 views
-
-
"எரியுண்ட நூலகம் / முருகேசு மயில்வாகனன்" யூத கவிஞரான ஹெயினின் வார்த்தைகள் இவை. “எங்கே புத்தகங்களை எரிக்கிறார்களோ, அங்கே ஈற்றில் மனிதர்களையும் எரிப்பார்கள்” எவ்வளவு உண்மை. Quoting from the Jewish poet Heinrich Heine. “Where they burn books, at the end they also burn people” How true is it.
-
-
- 2 replies
- 475 views
-
-
தவிக்க விட்டாய் யாரையுமே விரும்பக்கூடாது என்றிருந்தேன் யாரையும் இதயத்தினுள் விடக்கூடாது என்றிருட்ந்தேன் எங்கிருந்து வந்தாய் நீ என்னை அருகில்... எப்படியடா என்னை இழக்கவைத்தாய் உன்னிடம் மனம் நெருங்கத்தொடங்கிய வேளை உன்னுடைய மனம் வேறொருத்தியை நாடியது நான் வளர்த்த ஆசைகள் அனைத்தும் ஒரே நொடியில் தேய்பிறை போலல்லவா தேயத்தொடங்கியது உங்கள் மனமே உங்களிடம் இல்லையே பின்னர் நான் எப்படி உங்களை நினைப்பது... நீங்களே வேறொருத்தியை நினைத்தபின் நான் உங்கள் நிழல்மேல் ஆசைபடுவது தவறன்றோ.. என்னையே நான் வெறுக்கத்தொடங்கினேன் எண்ணங்களை மறக்கத்தொடங்கினேன் என் ஆசைகள் அனைத்தும் நிராசைகள் ஆகின என் கனவுகள் என் கண்களை போல் கலங்கின உன்னை நினைத்த இந்த மனதி…
-
- 2 replies
- 1k views
-
-
உலகப் போருக்கு முன்னால் உள்ளம் கதிகலங்க யூதர்கள் அனுபவித்த இனக் கொடுமையும், தென்னாப்பிரிக்க மண்ணிலே தோலை மட்டும் வெண்மையாய்க் கொண்டோர் கொண்டாடிய இனவெறியும், தமிழனின் தலையெழுத்தில் சிலையில் எழுத்தாய்ப் பொறிக்கப் பட்டுவிட்டது. மொத்தமாய் அவனிடமிருந்து எல்லாம் பறிக்கப் பட்டுவிட்டது. சொந்தமாக உறவுகளை மட்டுமல்ல அத்தியாவசியப் பொருளைக் கூட வைத்துக் கொள்ள வாய்ப்பில்லாத நிலை. ஈழத்து சோகம் ஆழத்தில் நெஞ்சை அழுத்தி விடுகிறது. அதில் புதையுண்டு மனம் அழுது விடுகிறது. புலிகளைத் தீவிரவாதப் பட்டியலில் சேர்த்துத் தடை விதித்தால் மட்டும் தீர்ந்து விடாது பிரச்னை. மனித உரிமைகள் மறுக்கப் படுவதும், மாற்றான் தாய்க் கொடுமை…
-
- 2 replies
- 865 views
-
-
உன்னை எழுதுவதைவிட உன்னை வாசிப்பதில்தான் அதிக ஆர்வம் எனக்கு * உனக்காய் கவி எழுத கற்பனைக் குதிரையை தட்டிவிட்டேன் அது உன்னைக் காட்டிக் கொடுத்துவிட்டு தூங்கிவிட்டது * என் கண்கள் காட்டிக் கொடுத்ததில் துரோகமில்லாத ஒன்று என்றால் அது உன்னைக் காட்டிக் கொடுத்தது மட்டும்தான் * நீ குளிக்கையில் தண்ணீரோடு நானும் குளிக்கிறேன் * உன்னைக் கவிதையாய் வெளியிட விரும்பி இன்றுவரை உன் கண்களை பற்றித்தான் எழுதிக் கொண்டிருக்கிறேன் -யாழ்_அகத்தியன்
-
- 2 replies
- 935 views
-
-
போலி முகங்கள் பொய் என்று தெரிந்தும் சந்தர்ப்பத்தில் சத்தியம் செய்து அகமொன்று வைத்துப் புறமொன்று பேசி வேசத்தில் வாழும் மனிதர்கள் பலர் இன்று... உள்ளத்தில் வஞ்சகம் மறைந்திருக்கும் முகத்திலே புன்னகை மலர்ந்திருக்கும் மானிடர்க்கு பல வேடங்கள்... போலி முகங்களே இன்று பல...
-
- 2 replies
- 1.1k views
-
-
தமிழா ! தமிழா ! இன்னும் என்னடா எதிர்பார்ப்பு..?!! உன் உறவுகள் அழிந்தது போதாதா..??! அதனால் நீ இரவுகள் தொலைத்ததும் போதாதா..?!! உடமைகள் இழந்தாய்..! இருப்பிடம் தொலைத்தாய்..! உறவுகள் கதற காதுகேளாதவனாய் தமிழ்..! தமிழ்..! தமிழன் என்றாய்..! இன்று உன் கண்முன் உன் உறவுகளின் ஒப்பாரி..! எல்லாம் இயலும் என்ற உன் நம்பிக்கைகள், ஊனமாய் எதுவும் இயலாது முள்வெளிகளுக்குள் கண்ணீருடன் இன்று ..! நாங்கள் இன்னுமொரு பிணம் ரசிக்கவா..?? நீ இன்னும் அங்கு நின்றுகொண்டு தமிழன்..! தமிழன்..! என்கிறாய்..! உன் சுவாசம் தவணை முறையில் தரப்படுகிறது. தீர்ந்துபோகும் கொடுத்த கேடு என்று ஆவேசமாய் நீ உள்ளிழுக்கும் காற்றில் எல்லாம் இன்னும் தீர்ந்து போகாத பிண வாடை ..! ஆடைய…
-
- 2 replies
- 901 views
-
-
Posted by சோபிதா on 19/08/2011 in புதினங்கள் | 0 Comment நேசித்த இதயத்திற்கு பாசம் அதிகம் என்றார்கள் ஆனால் உன்னால் அறிந்து கொண்டேன். காதலித்த இதயத்திற்கு வலிகளும் அதிகம் என்று நான் உறவுகள் அற்று தனிமையில் துடித்த போது சொல்லாமல் வந்த உறவு நீ. முகவரி இல்லாத என் வாழ்க்கைக்கு முழு நிலவாய் வந்தவளே. இன்று நான் காதல் பைத்தியத்தில் கண்ணீரோடு அலைகின்றேன். உன்னை நேசித்த பாவத்திற்கு விடை கூறாமல் சென்றவளே விடை பெறும் நேரத்திலும் நினைவுகளை மட்டும் தந்தவளே இன்று உன் கழுத்தில் தாலி என்னும் பாசக்கயிரை கட்டி கணவன் என்னும் நாடகம் போடுபவனை பார்த்து எரிகின்றது என் இதயம்…… உன் வாழ்வின் எல்லை வரை சந்தோசங்கள் மட்டுமே நடை போட வாழ்த்துகின்றது என் உள்ளம் http://ww…
-
- 2 replies
- 1.8k views
-
-
[size=4]கண்ணுக்குள்ளே சிக்க வைத்தேன் நெஞ்சுக்குள்ளே பொத்தி வைச்சேன் வலையில் மாட்டும் மீனாய் எனை காதல் வலையில் சிக்க வைத்தாய் உடம்பில் பட்ட ரணங்கள் வலிக்குதுடி...[/size]
-
- 2 replies
- 915 views
-