கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
கரும்புலிகள்… ! பெற்ற தாய் நாட்டையும் பேசும் தமிழ் மொழியையும் பற்றுடன் மதித்து மனதில் உறுதியும் கொள்கையும் கொண்டு கடற்புலியாகவும் களப்புலியாகவும் சாதனை படைக்கும் கரும்புலி வீரரே! உமை நாம் வணங்குகிறோம்… நேரம் குறித்து வைத்து சாவைத் தோள்மீது தாங்கி பட்ட பகலிலும் கார் இருளிலும் எதிரியை சிதறடித்து வெந்து உடல்கருகி வெற்றிகளை ஈட்டிதரும் வேங்கையல்லவா நீங்கள்… மண்மீது படையெடுத்த மாற்றானின் முகம் கண்டு பல்லைக் கடித்துக்கொண்டு நெஞ்சமதில் வீரத்துடன் மெய்தனிலே வெடிக்குண்டைச் சுமந்து வெடித்து சிதறிய வேங்கைகள் நீங்கள் வேதனைகடலில் மூழ்கிய போதும் சோதனைபுயலில் சிக்கிய போதும் …
-
- 2 replies
- 617 views
-
-
[size=4]உன் நினைவுகள் வரும் போது அழத்தான் நினைக்கிறேன் முடியவில்லை அதை கவிதைகளாக எழுதுகிறேன்...[/size]
-
- 2 replies
- 572 views
-
-
முத்துக்குமாரா! முத்துக்குமாரா! தொப்புள் கொடி தந்த உறவே! நீ செத்துவிட்டதாகத்தான் சொல்கின்றார்கள் எல்லோரும்! இல்லைத்தம்பி நீ சாகவில்லை! உயிர்கொண்டும் பிணமாகத் திரிகின்ற பலரில் உணர்வோடு தமிழானாய் உயிரும் மானமும் எனத் தமிழ் விடுதலைக்கோர் கருவானாய்! தியாகத்தின் தீபமே உன்னைத் தீ எரிக்குமா? நீ மூட்டிய தீயிலே குருடர் கண் திறக்குமா? இருட்டிய கிழக்கது இனியாயினும் வெளிக்குமா?! உயிருன்னைச் சுடும் என உணர்ந்திட்ட பொழுதிலும் உண்மையை உரத்துச்சொன்னாய் உயிராயுதம் ஆகியே உன்னதம் ஆகிவிட்டாய்! தமிழ் அது உடையல்ல உணர்வென்று நீ உலகுக்கு காட்டிவிட்டாய்! தன்மான நெருப்பிற்கு எங்கள் தம்பியே நீ நெய் ஊறிவிட்டாய்! ஆட்சியே பெரிதென்று எண்ணுவோர் மத்தியில் தமிழன் மானத்தை நாட்டிவிட்ட…
-
- 2 replies
- 1.2k views
-
-
என் தேசத்தில் இது கிளையுதிர்காலம்... -------------------------------------------------------------------------------- இலையுதிர் காலம் முடிந்து இப்போது இங்கே கிளையுதிர்காலம்... தினமும் இயற்கை மரணத்தை விட செயற்கை மரணம் மலிந்து போன மண் இது... சுவாசப்பைகளும் இருதயத்துடிப்பும் பலவந்தமாய் பிதுங்கியெறியும் கைகளை குலுக்கிக்கொண்டிருக்கின்றன சில ராட்சசக்கைகள்.. எம்மண்ணுமே இங்கே செம்மண்தான் குருதித்துகள்கள் கலந்து போனதால்... குழந்தைகள் தாலாட்டு தொட்டில் மூன்றும் தலைகீழாகி இப்போது சடலங்கள் ஒப்பாரி பாடை எங்கள் ரணங்களை உங்களுக்கெல்லாம் புரிய வைக்க எந்த உவமைகளை தேடிப்பிடிப்பது...? ஆயுதங்களும் ஆயுதங்களும் ம…
-
- 2 replies
- 1.1k views
-
-
அன்று எங்களை 1983 கலவரமும் தமிழர் போராட்டங்களும் உலுப்பியதுபோல கோபம் கொள்ள வைத்ததுபோல இன்று கலைஞர்களை, குறிப்பாகச் சமகாலக் கவிஞர்களை முளிவாய்க்கால் உறங்கவிடாமல் கோபத்தில் கொதிக்கவும் சபிக்கவும் வைக்கிறது. எமது வன்னி மண்ணின் இரட்டையர்களான கருணாகரனும் தீபச்செல்வனும் எழுதிய இரண்டு கவிதைகளை அதன் பொருத்தப்பாடு கருதிப் பதிவு செய்கிறேன். முள்ளிவாய்க்கால் 2017 - கருணாகரன் ( Sivarasa Karunagaran ) -------------------------------------------- இரத்தமும் உயிரும் உறைந்து அனலடிக்கும் இந்த மணல் வெளியில் நேற்றும் பட்டி பூத்திருந்தது இன்றும் பூத்திருக்கிறது நாளையும் பூக்கும் நேற்றைய பட்டிப் பூக்கள் தனித்திருந்தன. இன்று வெள்ளை உடைகளில் விருந்தாளிக…
-
- 2 replies
- 1.9k views
-
-
புரட்சி -----------இனி ஆயிரம் கவிஞர்கள் தோன்றினாலும் ...ஆயிரம் ஆயிரம் கவிதைகள் பிறந்தாலும் ....ஓராயிரம் பாராட்டுகள் கிடைத்தாலும் .....பல்லாயிரம் ரசிகர்கள் வந்தாலும் ........................................................................அத்தனை அத்தனை புகழ் வந்தாலும்..... ................................................................அஃது ஒன்றும் பயனே இல்லை...... ................................................................உலக விடுதலைக்காய் போராடிய......................................................................எழுச்சிமிகு புரட்சி கவிஞர்களின் ......................................................................தீப்பொறி பறக்கும் வரிகளுக்கு முன் ...................…
-
- 2 replies
- 980 views
-
-
ஒரு கரும்புலியின் நினைவாக தினம் தீயில் நீ குளித்தாய் தியாகத்தின் பொருள் விளக்க புலியே நீ புகழ் வெறுத்தாய்..... இதயத்தில் நீ சுமந்த இலட்சிய நெருப்பதிலே உன்னுயிரை முடிந்து வைத்தாய் என்னொடியும் உன்னுயிரை உதறிவிட நீ துணிந்தாய்.... விழியுறக்கம் நீ மறந்து விளக்காகி ஒளிதந்து எங்கள் விடியலின் கிழக்காகி சூரியனை வலம் வந்தாய் பகை வாசலிலே போய்த்திரிந்தாய்....! உன் இலக்கு உன்னை எட்ட முன்னம் உயிர்ப்பூ வாடியுதிர உடற்கணுக்கள் துடிப்பிழந்து ஓ...எங்கள் உடன்பிறப்பே உறங்கி போனாயோ ? உன் முகமறியேன் உன் குரலும் கேட்டறியேன் அவன் வரமாட்டான் உன் கூட நின்றவன் உறுதிப்படுத்திய செய்தியது.....! விழி கண்ணீர் மாலையிட வீரனே....! விக்கித்து …
-
- 2 replies
- 529 views
-
-
[size=5]"பாவம் அந்தக் காதல்"[/size] http://static-p2.photoxpress.com/jpg/00/15/42/73/400_F_15427365_yloHeMKoTK9B0Nl9jb4Qw2nhYZpwfzaU_PXP.jpg எதேச்சையான சந்திப்புக்கள்! தன்னிச்சையான எண்ணங்கள்! தவிர்க்க இயலாமற்போன பார்வைகள்! சொல்லத் தயங்கிய வார்த்தைகள்! தூக்கம் மறந்த இரவுகள்! தலையணை துணையான பொழுதுகள்! நூலிழை இடைவெளிக்குள்... சிக்கித்தவித்த இருமனங்கள்! பிரியப்போகும் தருணத்தில்... வெடித்துவந்த அழுகையோடு, சொல்லிக்கொண்ட காதல்! பின் சுற்றிச் சுழன்ற நினைவுகள்! ஆழமாய் அழகாய் உணர்ந்த காதல், இப்பொழுது..........பிரிகிறது! காரணங்கள் தெரியாமல், காரியமும் புரியாமல், சொல்லாமல் கொள்ளாமல் மறைகிறது! காதல் ஒருநாளும் தோற்றுப்போவதில்லை…
-
- 2 replies
- 932 views
-
-
போதும் என்ற மனம்.. பொன்னான மனம்.. இனிப் பொறுத்தது போதும்.. என பொங்கிய மனமே.. தமிழுக்காய் போர்க்களமாடும்.. மனம்.. போருக்கும் மனமில்லை.. தாய் ஊருக்கும் ஒட்டில்லை உயிருக்குப் பயந்தோடி வந்தேன்.. புகழுக்கும் பொன்னுக்கும் தான் ஆசை கொண்டேன்.. தாய் மண்ணுக்காய் போராடும் அண்ணா.. உன்தம்பி ஒரு கோழை எனை மன்னிப்பாயா அண்ணா எனை மன்னிப்பாயா...
-
- 2 replies
- 1k views
-
-
-
அழியா என் இருப்பு அன்னையும் தந்தையும் அருந்திய உணவின் ஒரு துளி திரண்டென் உயிரைச் சூழ்ந்தது. அது வரை நானெனை அறியாச் சூனியம் அதன்பின் மெய்யுணுர்வென்று பல் பகுதியாய் சிந்தனை செயலென்றின்னும் மேலாய் தன்னுணர்வோடு தரணியில் விழுந்து நானெனவானேன் நானோர் வெற்றிடம். சூழ்ந்ததனைத்துமிச் சூத்திரப் பாவை வாழ்ந்து முடிக்கும் வரையிலிருக்கும் வீழ்ந்த பிறகு விண்ணிலும் மண்ணிலும் ஆழ்ந்து கரைந்து அனைத்தும் மறைய பாழ் வெளியதனில் பழைய நானாய் ஒன்றையுமுணராச் சூனியமதனில் என்றும் அழியா இருப்பில் கலந்து அன்றை இன்றை நாளையையுணரா அதிலும் இதிலும் எதிலும் சேரா அமைதி வெளியில் ஐக்கியமாகி நிரந்தரமாவேன் நிர்க்குணனாவேன் …
-
- 2 replies
- 615 views
-
-
ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி மாதம் இலங்கை மக்களுக்கு முக்கியமான ஆண்டு. ஒன்று பெப்ரவரி 4 இல் வரக்கூடிய சுதந்திர தினம்! (அப்படியென்றால்...? என்னைக் கேட்டால் எனக்கு என்ன தெரியும்?) மற்றையது பெப்ரவரி 14 இல் வரக்கூடிய காதலர் தினம் (அதாவது... அட போடா எங்களுக்கு தெரியாதாக்கும்...) சரி அதை விடுங்கோ... மிகவும் அக்கறையோடு யோசித்து எழுதிய கவிதையை(?) படிக்கலாம் வாங்கோ... --------------------------------------------------------------------------------- வாலைச் சுருட்டிக் கொண்டு அவரவர் வீட்டுக்குள்ளே பதுங்கி இருங்கள் இன்று சுதந்திர தினம்! சுருட்டு வாங்கப் போகும் தாத்தாவும் கவனம்! உன்னையும் சுருட்டிக் கொண்டு சென்றிடுவர்! சட்டப்புத்தகம்…
-
- 2 replies
- 1.2k views
-
-
வீரத்தின் வனப்பிற்கு உவமை தந்த வரலாறே! காரிருள் போர்த்தி நிலம் கண்விழித்துப் பார்த்திருக்க, கறுப்புமுகில் தான் கவிந்து காணவென்று பூத்திருக்க, ஆழிமகள் அணைக்கவென்ற ஆர்ப்பரிப்பில் அலை எறிய. வந்துதித்த ஆதவனே! வாழிய நீ பல்லாண்டு. புற்றீசல் மெட்டெடுத்து புதுப்பாடல் இசைத்திருக்க, புவி நனைத்து வர்ணமகன் பன்னீரை வார்த்திருக்க, நறுமலர்கள் வாடாத நனிதிங்கள் கார்த்திகையில் பிறப்பெடுத்த பெருமகனே! வாழிய நீ பல்லாண்டு. கிழக்குமுகம் சிரிக்க எழும் ஒளியின் அடர்வே!. செம் பொன்னள்ளி வீசிவரும் சூரியச் சுடரே! இலக்கெடுத்துச் சுயம் ஒடுக்கும் மானிடத் திருவே! இலங்குபுகழ் தலைமகனாய் வாழிய நீ பல்லாண்டு. தாயகத்தை நெஞ்சிலேற்ற தலைமை வேளே! தனித்துவப் …
-
- 2 replies
- 907 views
-
-
உய்தல் தேவஅபிரா மரணத்தைக் காலமும் கடலும் மட்டுமே எழுது மென்றிருந்தோம். எம் வாழ்க்கையின் மரணத்தை அரசர்களே எழுதினார்கள். மரணம் பெருநிலமானது… வாழ்வோ சிறுதுளியானது…. கரைத்துவிட அஸ்தி இல்லை.. கண்ணிர் விடச் சமாதியில்லை… காணாமல் போகவும் காத்திருக்கவும் கையறவும் நேராத போரொன்று சொல்.. இருப்பவரை ஏறிமிதிப்பவர்க்கு இறந்தவர்களை ஏறிமிதிப்பது கடினமா என்ன? உனதும் எனதும் பெறுமதி இருத்தலில் இருந்ததா? இறப்பில் இருந்ததா? இறக்கப் பழக்கிய உயிர்கள் விட்ட மூச்சுக் காற்றும் இருக்க விரும்பிய உயிர்கள் விட்ட மூச்சுக் காற்றும் கலந்து விசும்பில் அலைகின்றன. போரின் சதிரில் ஆடிவிட்டு பேயலையும் பெருநிலத்தில் …
-
- 2 replies
- 695 views
-
-
அலங்கரித்த தலைமுடியலில் ஆயிரம் கவிதைகள் நெகிழ்கிறது கண்டேன் அந்த கருவிழிகள் இடது பக்கமாக திரும்பி ... என் இதயத்தை குத்திய பொழுது.... கமல மேனியில் கள்ளச் சரிரிப்பு கொண்ட அதன் இதழ்கள் சுவைக்க அழைக்குது உன் இமைகள் என்னை தண்டிக்க காத்திருக்கிறது அம்பு போல் (எதிர்ப்பு) சிவந்த மேனியில் பொண்ணும் மங்கிப்போகிறது... கைவிரல்கள் நளினமாக பற்றிய இடம் யாவும் சிலையாய் போகிறது மெய்சிலிர்த்து கல்லும் சிதறுகிறது குமுதச் சிரிப்பில் கவர்ந்த கள்ளி குங்குமமும் நிறம் குறைவோ உன் இதழ் அழகிற்கு... பஞ்சு மேனி பவளப்பாறை என் இதயத்தை உடைத்து உன் அழகை சேகரிக்கிறது.... விலை மதிப்பில்லாமல் உயர்கிறது உன் அழகு என் இதயத்தில்... …
-
- 2 replies
- 712 views
-
-
காதல் மொழியை புரிய வைத்த அகராதியே காலை எனை எழுப்பும் காணக் கடிகாரமே மாலை எனை மயக்கும் மந்திர மகுடியே உன்னை தனிதனியாக வர்னித்தால் சக அங்கம் என் மீது வழக்கு தொரலாம் என முழுதாய் வர்னிக்க வார்தைகளை தேடினால் பாவிக்கவிஞர்கள் சகலதையும் திருடி விட்டார்கள். காப்புரிமை இல்லையாம்.அதானாலென்ன உன் மீது எனக்கும் என் மீது உனக்கும் இருக்கும் உரிமை பிரிவு இல்லாது நிலைக்கும்
-
- 2 replies
- 760 views
-
-
எழுதப்படாத ஓலைகள்! ------------------------------- எவருமே தழுவிக்கொள்ள மறந்த அந்த இரவுகளில் மரணம் மட்டும் மறக்காமல் எங்களைத் தழுவிக்கொண்டிருந்தது! தூரத்தே இருந்த சாக்குருவிகள் எங்கள் இழப்புகளிலும் பூபாளம் பாடிக்கொண்டிருந்தன! ........... ........... ........... ........... ........... அவை இப்போதும் பாடிக்கொண்டுதான் இருக்கின்றன! :0 முள்ளிவாய்க்காலில் சாவடைந்த அனைத்துப் போராளிகள் பொதுமக்கள் அனைவருக்கும் கண்ணீர் வணக்கங்கள்!
-
- 2 replies
- 612 views
-
-
நீங்கள் தமிழர்கள் அல்ல – முஸ்லிம்கள்? காலியில் எங்கள் கழுத்து வெட்டப்பட்ட பொழுது நீங்கள் கைகட்டி வேடிக்கை பார்த்தீர்கள். ஏனென்றால் நீங்கள் தமிழர்கள் அல்ல – முஸ்லிம்கள்! மூதூரில் சிறுமிகளை வன்புணர்வு குற்றவாளிகளுக்கு ஆதரவாக பேரணி நடத்தினேர்கள் நீங்கள் தமிழர் இல்லை -முஸ்லிம்கள். கொழும்பில் குற்றுயிரும் குலையுயிருமாய் நாம் எரிக்கப்பட்ட பொழுது நீங்கள் வாய்புதைத்து பேசா மடந்தைகளாய் இருந்தீர்கள். ஏனென்றால் நீங்கள் தமிழர்கள் அல்ல – முஸ்லிம்கள்! அடங்கிக் கிடந்த நாங்கள் ஆயுதம் ஏந்திக் களம் புகுந்த பொழுது உங்களில் எல்லோரும் எங்களுக்குக் கைகொடுக்க வரவில்லை. ஏனென்றால் நீங்கள் தமிழர்கள் அல்ல – முஸ்லிம்கள்! ஆனால…
-
- 2 replies
- 1.8k views
-
-
கனவிலே வந்தாய் பெண்ணே கனடாவில் நலமா நீதான் கண்மணி என்றே சொன்னேன் கண்களை கொள்ளை கொண்டாய். நெஞ்சத்தை காண வில்லை திருடிநீ என்ன செய்தாய்? வஞ்சத்தை விட்டுச் சொல்லு- என் வஞ்சத்தை விட்டுச் சொல்லு பஞ்சமாம் ஊரி லெல்லாம் - உன் நாணத்துக் கில்லை யாமோ? வெஞ்சமர் ஆடி யுன்னை சிறைமீட்க ராமன் நானோ? பொய்யடி உலக மெல்லாம் - உன் மெய்நெஞ்சை திறந்து காட்டு! அங்கும்நான் இல்லை யென்றால் மெய்யெந்தன், மெய்யைக் கொல்வேன். கவிதைக்கா காத லித்தேன் ?-என் கண்ணுறு நீதான் பெண்ணே! கவிஞனும் உண்மை சொல்வான் காதலீ! நம்பு வாயா? வாழ்வது நீண்ட தில்லை. - வா வாழ்வைச் சுவைத்துப் பார்ப்போம். வருகின்ற தலைமுறைக் கெங்கள் வாழ்வினில் ஏணி வைப்போம்.. கல்நெஞ்ச…
-
- 2 replies
- 875 views
-
-
புத்தாண்டே தருவாயா....??? யுத்தங்கள் இல்லாத தேசங்கள் வேண்டும் யுக்திகள் இல்லாத பாசங்கள் வேண்டும்... வறுமைகள் ஒழிகின்ற வாழ்வது வேண்டும் ஏழை பணக்காறன் சமனாக வேண்டும்... உலகெல்லாம் ஒரு நாடாய் உருவாக வேண்டும்... உண்மைகள் உரைக்கின்ற உலகாக வேண்டும்... பேதங்கள் மறைகின்ற பெரு நாடாய் வேண்டும்.... ஜாதிகள் ஒழிகின்ற ஜாதகம் வேண்டும் யாவரும் ஒரு தாய் பிள்ளையாய் வேண்டும்... இன்னல்கள் தொலைகின்ற இல்லறம் வேண்டும்.... இவையாவும் நீக்கிடும் ஆண்டாக வேண்டும்... இரண்டாயிரத்து ஏழே இது நீயாக வேண்டும்....!!![/color] -வன்னி மைந்தன் -
-
- 2 replies
- 1.9k views
-
-
தென் செய்தியில் தமிழாலயன் அவர்களால் எழுதிய கவிதை வெல்கின்றான் எல்லாளன்! விடிகிறது தமிழீழம்! தூய தமிழ்ச் செம்மொழியைத் தோற்றுவித்த செவ்வியர்தாம் போயழவோர் நாடுமிலை தோழி! - அவர் போக்கிலியாய்த் தானலைவார் தோழி! நேயமிலா மாந்தர்களே நீளலைகள் சூழுலகே ஞாயமிலை நாணமிலை தோழி! - செந் நாய்களுமோ நரிகளுமோ தோழி வாயலற நெஞ்சுருக வாழ்நிலைகள் தேடிவரும் வாயிலிலே குண்டுமழை தோழி! - இவர் வருவதற்குள் சாவுவரும் தோழி தாயுமிலை தந்தையிலை தன்னுறவு யாருமிலை சேயழுகை கேட்கலையோ தோழி! - கொடும் செவிடர்களோ ஊருலகம் தோழி யார்குடியைக் கெடுத்தார்கள் யாருணவைப் பறித்தார்கள் யார்யார்க்கும் உறவலவோ தோழி! - இவர் யாதும் ஊர் என்றதற்கோ தோழி போர்மூட்டும் புத்த…
-
- 2 replies
- 1.1k views
-
-
பச்சை புல்வெளி-------பச்சை புல் வெளியில் .....உச்சி வெய்யிலில் நின்றாலும் ....உச்சி குளிரும் மனிதனே ....உச்சி குளிரும் .....!!!கண் ......எரிச்சல் உள்ளவர்கள் ....கண் கூச்சம் உள்ளவர்கள் ....பச்சை புல் வெளியை ....உற்று பார்த்துவந்தால்.....கண்ணின் நோய்கள் தீரும் ....மனிதா கண்ணின் நோய்தீரும் ....!!!அதிகாலை வேளையில்....பனித்துளி பன்னீர் துளிபோல் ...சுமர்ந்துகொண்டு அழகை ...காட்டும் பச்சை புல்வெளியில் ....ஒருமுறை கை நனைத்துப்பார் ....குளிர்வது கை மட்டுமல்ல ....மனமும்தான் மனிதா....!!!பூமிக்கு இயற்கை கொடுத்த .....பச்சை கம்பளம் புல்வெளி ....துணிப்புல் மேயும் முயல் ....அடிப்புல் வரை மேயும் மாடு ....பறந்து திரியும் பட்டாம் பூச்சி ....பச்சைப்புல் வெளியின் கதகளிகள் ....!!! மரம் வளர்…
-
- 2 replies
- 12.5k views
-
-
-
பைந்தமிழ் இனம் காக்க பணி நன்றே செய்திடுக! போர் பெய்த மழையினிலே ஊர் விட்டுப்போனவரே! பாரெங்கும் பரந்திருக்கும் பாசப் பிணைப்புகளே! ஆரெவரோ என்றுங்கள் அகம் மூடி நடிக்காமல் பைந்தமிழ் இனம் காக்க பணி நன்றே செய்திடுக! முண்டமாய் உடலும் - சதைப் பிண்டமாய் உறுப்புகளும் கண்ட கண்ட இடமெல்லாம் அழுகிய பிணங்களாக ஆர் பெற்ற பிள்ளைகளோ? அண்டை அயலொடு அவனியிலே பேர் பெற்ற அமைதிப் பெருநாடுகளும் கண்டாரோ? கருத்தில் கொண்டாரோ? ஈழத் தமிழினத்தின் இன்னல் நிலை. செப்ப ஒரு நாவிருந்தும் செப்பாத செந்தமிழா! உற்றாரும், உறவுகளும் ஊரோடு எரிகையிலே ஒப்பாரிப் பாட்டுக்கூட உனக்கெடுக்கத் தெரியலையோ? முத்துமணி ரத்தினமும் மெத்தையொடு மெல்லிடையும் சுத்திவரும் சுகம் தரவா சொந்தத…
-
- 2 replies
- 1.6k views
-
-
கூந்தல் நீளம் கொண்டமங்கை - என்னை கா(த்)தல் செய்ய வைத்தாள். காத்து காத்து நின்ற எந்தன் காலம் திருடிக் கொண்டாள் . தொலைவில் இல்லை வானம் என்றே தூரம் நடக்க வைத்தாள். தூரம் நடந்து முடித்த பின்னால் - துன்பப் பாரம் சுமக்க வைத்தாள் . வாழும் வாழ்வில் இனிமையேது வாதம் முடியவில்லை . வாதம் முடிவை அடையும்போது வாழ்வு இருப்பதில்லை. கனவில் தோன்றும் முகங்கள் பழைய நினைவை எனக்குள் தேடும். எனக்குள் தோன்றும் நினைவி லென்ன சுவைகள் இருக்கக் கூடும். பாலை நிலத்து நீரிலெங்கே பாசி முளைக்கக் கூடும். - நான் பார்த்த பெண்ணின் மனதிலென்று பாசம் தோன்றக் கூடும். பள்ளி வாழ்வில் நடந்ததெல்லாம் பழைய கதைகள் ஆச்சு. புதிய வாழ்வை தேட நானும் பாதை தேடல் ஆச…
-
- 2 replies
- 1.2k views
-