Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. அன்றைய காலத்தில் அனைவரிற்கும் தம்பி அடுத்து வந்தவர்களிற்கெல்லாம் அண்ணன். அன்பான கணவன் அற்புதமான தந்தை அலையாய் எழுந்த தமிழினத்திற்கு தலைவன். தன்மானத்தை விற்றவர்களின் தலை வலி எதிரிக்கு எட்டாத சூரியன் சுற்றியிருந்த சுயநலக்கூட்டத்திற்கு புகழ்பாடும் கடவுள். தமிழினத்தின் குறியீடு தலைவணங்குகிறேன் அண்ணை

    • 29 replies
    • 3k views
  2. இன்று மாவீரர் நாள் எமக்காக மரணத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நாள் வருகிறாயா என நண்பரிடம் கேட்டேன் இல்லை என்று பதிலுடன் இன்று எனக்கு வேலை என்ற பொய்யும் வந்தது பின்புதான் அறிந்தேன் அன்றைய தினம் அவன் சாய் பாபா பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினான் என்று நண்பா, அந்த மாவீரன் மில்லர் எனக்கு மட்டுமா நண்பன் உனக்கும் தானே இறந்தவருக்காக happy birthday பாடும் நீ ஏன் எமக்காக மரணித்தவர்களுக்காக திவசம் செய்ய பின் நிக்கின்றாய்.

  3. நீ பயனற்றுப் போகையில் எல்லா பொறுப்புகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டு விடுகிறாய் உன்மீதான மனக்குறைகள் நிரந்தரமாக நீங்கிவிடுகின்றன உன்னைப் பற்றிய புகார்கள் என்றென்றைக்குமாக ரத்து செய்யப்பட்டுவிடுகின்றன நீ பயனற்றுப்போகும்போது வேலியில் பூத்துக்கிடக்கும் ஒரு கொடிபோல ஆகிவிடுகிறாய் உனக்கு யாரும் நீரூற்றுவதில்லை உனது மலர்களுக்காக யாரும் காத்திருப்பதில்லை ஆனாலும் நீ ஒரு செடியாகவோ மலராகவோ இருக்கத்தான் செய்கிறாய் உன் மேல் திணிக்கப்பட்ட குற்ற உணர்வுகளை இறக்கி வைப்பதற்கு உனக்கு இதைவிட வேறு சந்தர்ப்பம் வரப்போவதில்லை நீ செய்யத் தவறிய ஒவ்வொன்றிற்கும் பதிலளிக்கும் கடமையிலிருந்து நீ விடுவிக்கப்பட இதைவிட்டால் உனக்கும் வேறொரு தருணம் வர…

  4. காணாமல் போனதாகவே முடிவு கட்டிவிட்டார்கள் காணவில்லையென்று விளம்பரமும் கொடுத்து விட்டார்கள் (காணாமல் போக அவனென்ன ஆடா மாடா பாலுசார்) சூழல் சரியில்லையெனக் கொஞ்ச காலம் சும்மா இருந்தான் நிலவரம் மோசமென நிரம்பக் காலம் ஒதுங்கிப் போயிருந்தான் சந்தை இரைச்சல் ஓயட்டுமென்று சம்மதமின்றித்தான் அஞ்ஞாதவாசம் மேற்கொண்டிருந்தான் அதற்காக ஓய்ந்து விட்டானென்று அர்த்தமில்லை சரிந்து விட்டானென்று கருதி விட முடியாது அருகிப் போனாலும் காணமற்போவதில்லை புலிகள். விக்ரமாதித்யன் நம்பி (via fb) ‘குமுதம் - தீராநதி’ 2012 மார்ச்

  5. நேற்றைய இரவு முழுதும் அழுதபடியிருந்தவர்களை கண்டு தாளாது போரிட சென்றவர்கள் வெற்றியோடு திரும்பினர் மதியம் நமது தோழனென நம்பியிருந்த பகல் பெரும்பூதமென மீண்டுமொரு காரிருளை வாரியிரைத்து போனது வடக்கே அமைதியாக இரவும், பகலென வேடமிட்ட நிசியும் பிணைந்த புணர்வில் பிறந்த குழந்தை பதிமூன்று ஆணா? பெண்ணா? என அறிவதில் கழிந்தது காலம் இடையில் கீரிடத்தை பறிக்க சிந்தனையில்லா கோமகனை கொன்று நம்மை பழிகடாவாக்கின பூதகணங்கள் விதியென நொந்தும் வெயிலென காய்ந்தும் புயலென வீழ்ந்திடாமலும் பூத்தன கார்த்திகை பூக்கள் சூல்கொண்ட மகவு தாயை பிரசவிக்கமுன் விழித்துக்கொண்ட இருளின் பிள்ளைகள் கைகுலுக்கிக் கொண்ட நாட்களில் சிவப்பு கழுத்து…

  6. [size=5]சிரித்தபடியெனை உற்றுப்பார்த்தான் எனை தாண்டிஎனக்குள் நின்றவன் தலைகுனிந்து முனுமுனுக்க தொடங்கினேன், நிறுத்து உன் புலம்பல்களை நிறையறிந்தவன் நிகழ்த்தியவுன் தரமறிந்தவன் நான் என்றான். மௌனமாக்கிக்கொண்டேன் எனை! கழற்றிஏறி மௌனசட்டை உனை குற்றவாளியாக்குகிறது என்றான். விழிகளால் கேள்வி தொடுத்தேன். கேள்வி கேட்காதே, உனக்கான கேள்வியை தேடு_நீ விடையாய் மாறாதே மற்றவர்களுக்கு என்றான். தப்பிக்க திரும்பிப்பார்த்தேன் தப்பு செய்கிறாய் நீ உனக்காக இல்லாமல் எதுக்காக இருக்கிறாய் உன்னில் இருந்து ஆரம்பி என்றான் பதிலுரைக்க வாயெடுத்தேன் காதுகளை போத்திக்கொண்டவன் கற்றுக்கொள் தன்னிடம், எதையும் பெற்றுக்கொள்ளாதே என்றான் …

  7. விடுதலை போராளிகள் எதிரியின் சிம்ம சொப்பனங்கள் நம் தமிழீழ எல்லைகளில் எமை தாக்கவரும் எதிரியினை வீரம் எனும் வேல் கொண்டு வீழ்த்திடும் வேங்கைகள். சிந்தனையில் நம் விடுதலையும் சிரத்தினிலே எதிரியினை வீழ்த்தும் பொறிமுறையும் தம் கடமையென நினைத்து கண்ணியமாய் நடப்பவர்கள். துப்பாக்கி ரவைகள் இவர்களின் சொல் கேட்கும் குழந்தைகள் கிரனேட் குண்டுகள் இவர்கள் கைகோர்த்த நண்பர்கள் ஆர் பி ஜி குண்டுகளோ இவர்களின் அடியாட்கள் எதிரியை அழியென்றால் அழித்துவிடும் இவர் அனுப்பும் வெடியாட்கள் ! தமிழ் போராளிகள் ! இவர்களுக்கு தெரிந்ததெல்லாம் போரிட மட்டும்தான் - ஆம் எதிரி புற முதுகு காட்டி ஓடும் வரை அவர்களுடன் போரிட மட்டும் தான். துப்பாக்கி …

  8. ஒரு ஆங்கில கவிதை. நான் சிறுவனாக இருந்தபோது, இந்த உலகை மாற்ற ஆசைப்பட்டேன், நடக்கவில்லை. இளைஞனான போது ஊரைத் திருத்த முனைந்தேன், முடியவில்லை. குடும்பத் தலைவன் ஆனபோது, குடும்பத்தையாவது திருத்த விழைந்தேன், இயலவில்லை. தந்தையான போது, பிள்ளைகளை மாற்றிவிட துடித்தேன், எவரும் என் பேச்சை கேட்கவில்லை. இவ்வளவு முயற்சிகள் செய்ததற்குப் பதிலாக, "நான் கொஞ்சம் மாறியிருக்கலாம்" என்று மரணப் படுக்கையில் தான் புரிகின்றது எனக்கு, ஆனால் நேரம் கடந்துவிட்டது..... ----------------------------------------------------------------------------------------யாஸிர். இடுகையிட்டது யாஸிர் அசனப்பா. https://civilyasir.blogspot.com/2011/09/blog-post_18.html

  9. கனவு உப்பிய நெஞ்சறை – தீபச்செல்வன் ஒரு சோடி பட்டாம் பூச்சிகள் திரும்பாத திசையிற் சன்னம் தைத்துக் கிடந்தது கனவு உப்பிய நெஞ்சறை. உயிருக்கு மதிப்பற்ற நகரில் சக்கரங்களிலும் சப்பாத்துக்களின் கீழும் நசிந்தொட்டிய வெற்றுடல்கள். அவர்கள் நினைத்திருக்கக்கூடும் இத் தெருக்களுக்கு இரத்தம் புதிதல்ல சுடுகலன்களை நீட்டுவதும் அதிசயமல்ல கொல்வது இங்கு பிரச்சினையே இல்லை. குருதியில் தோய்ந்த பின்னிரவில் பிசுபிசுத்தன உருளும் பந்துகளும் …

    • 2 replies
    • 785 views
  10. வாழைத்தோட்டத்திற்குள் வந்து முளைத்த... காட்டுமரம் நான்.. எல்லா மரங்களும் எதாவது... ஒரு கனி கொடுக்க எதுக்கும் உதவாத... முள்மரம் நான்... தாயும் நல்லவள்... தகப்பனும் நல்லவன்... தறிகெட்டு போனதென்னவோ நான்... படிப்பு வரவில்லை... படித்தாலும் ஏறவில்லை... இங்கிலீஷ் டீச்சரின் இடுப்பை பார்க்க... இரண்டு மைல் நடந்து பள்ளிக்கு போவேன்... பிஞ்சிலே பழுத்ததென்று... பெற்றவரிடம் துப்பிப்போக ... எல்லாம் தலையெழுத்தென்று எட்டி மிதிப்பான்... பத்துவயதில் திருட்டு... பனிரெண்டில் பீடி... பதிமூன்றில் சாராயம்... பதினாலில் பலான படம்... பதினைந்தில் ஒண்டிவீட்டுக்காரி ... பதினெட்டில் அடிதடி... இருபதுக்குள் எத்தனையோ... பெண்களிடம் விளையாட…

  11. இறைவா எனக்கு ஒரு வரம் தா ..? காதல் உணர்வை என்னில் இருந்து தயவு செய்து எடுத்துவிடு ....! அவனை உயிர் நண்பனாகவோ உயிர் காலம் வரை நினைக்க .......... விரும்புகிறேன் இடைக்கிடையே பாழாய்ப்போன மனம் காதலையும் எட்டிப்பார்க்கிறது ....! நட்பு ஒன்றில் விட்டுக்கொடுப்பு அதிகம்...... அவன் விட்டுக்கொடுத்துவிட்டான் -காதலை இறைவா ....... என் காதல் நரம்பை துண்டித்து விடு ...! & கவிப்புயல் இனியவன் நட்பும் காதலும் கவிதை

  12. அம்மா தாயே உன்னை - உன் அன்பு மகன் மறந்தேனோ? இல்லையே ! மறந்திருந்தால் மரணித்து போயிருப்பேனே, பேஸ்புக்கில் அவள் பற்றி அடிக்கடி கவிதைகள் ! ஊரெல்லாம் அவள் பற்றி ஏதேதோ பேசுவேனம்மா, ஒரு வேளை உன்னை - உன் ஒத்தைமகன் மறந்தேனோ? இல்லையே ! மறந்திருந்தால் மரணித்து போயிருப்பேனே, காதலின் வலி கொண்டு கண்ணீர் வடிப்பேனம்மா உன்னை நினைத்து நான் அடிக்கடி சிரிப்பேனம்மா, ஒரு வேளை உன்னை - உன் மூத்த மகன் மறந்தேனோ? இல்லையே ! மறந்திருந்தால் மரணித்து போயிருப்பேனே, நீயும் நானும் ஒன்றம்மா நீயின்றி நானேது பெத்தம்மா உன் மகன் காதல் செய்தால் உனக்கேதும் கஷ்டமா? மரணம் ஒன்றில் தானம்மா - உன் செல்லமகன் உன்னை மறப்பேன் அன்று என்னையும் தான் மறப்பேன், மன்னித்து விடுவாய் அல்லவா???

  13. Started by அஞ்சரன்,

    ஆணா பிறந்தால் ஒரு வயதுக்கு பிறகு ஆரம்பிக்கும் அதீத ஆசை மீசை எப்பொழுதும் கண்ணாடியில் முகம் பார்க்க உள்மன கேள்வியில் எழும் ஒரு ஆதங்கம் எப்ப வளரும் எப்படி வளரும் நாம வளர்க்க வேணுமா அதுவா வளருமா தாடையை வழித்தா வருமா அல்லது வந்தபின் வழிக்க வேணுமா யாரிடம் கேட்கலாம் எப்படி கேட்கலாம் அப்பா சேவ்செய்யும் பிளேட்டை ஆட்டை போட்டு அடிவளவில் போய்நிண்டு கண்ணாடி இல்லாமல் கண்டபடி இழுத்து வெட்டுக்காயம் இப்பொழுதும் போகவில்லை அடையாளம் மீசையை முறிக்கிட்டு போறவனை பார்த்து பொறாமை பெரிய இவரு எண்டு நினைப்பு எங்களுக்கும் வளரும் எல்லோ உள்மன களிப்பு வளர்த்த பின் தெரித்தது பராமரிக்க பத்து ரூபா கிழமைக்கு வேணும் எண்டு அதுவரை மீசை மேல் இருத்த ஆசையெல்லாம் குறைந்து தடுக்கும் யோசனை தான…

  14. தரவிறக்கம் செய்யக்கூடிய வகையில் தமிழுக்கும் அமுதென்று பெயர் அந்த தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்ற பாடலை யாராவது நல்ல உள்ளங்கள் தரமுடியுமா? உதவி செய்தால் நன்றாக இருக்கும் அன்புடன் பாட்டை தேடிக்களைத்து போன உள்ளம்.

  15. கௌசல்யனின் சாவறிந்த தினம் எழுதப்பட்ட கவிதை. இன்று கௌசல்யனின் ஓராண்டு நினைவு நாளை முன்னிட்டு மீளவும் பதிவாகிறது. சதி கொன்ற சாவு. 'கௌசல்யன்" சத்தமின்றி இருந்த வீரன் சத்தமின்றி எங்கள் மனங்களை வென்று போன சத்தியன். மோப்பர்களை மீட்பர்களாய் நம்பிய பாவம் எங்கள் மீட்பர்களே உங்களை நாம் இழந்து போக அரச மோப்பரே சாட்சியாக..... கண்காணிப்போர் கண்களில் உங்கள் சாவு குழு மோதல் என்பதாக..... சார்ந்து நின்று நீதி சொல்லும் பணிசெய்ய வந்த பிணியரே இவர்களெல்லாம். கருணாவின் சதியென்று கதைபூசி கௌசல்யன், புகழன், செந்தோழன், நிதிமாறன் சாவிதனை விதியென்றா எழுதிவிட....? இல்லையில்லை, சதிகொன்று போனதெங்கள் சந்ததியின் விதிம…

    • 7 replies
    • 2.1k views
  16. இயற்கை எம்மை இயன்றவரை விட்டு வைத்திருக்கின்றது எதோ தன்னாலான இரக்கத்தோடு எல்லோரையும் இட்டு நிரப்பியபடி தூயனவாய்க் காற்று துகள்களற்று தலைவிரித்தாடாததால் நாம் தப்பிப் பிழைக்கிறோம் தரையில் நடக்கிறோம் கோபத்தின் உச்சியில் ஆழ்கடல் கொந்தளிக்காததால் கூரைகளின் கீழ் நாம் குதூகலங்கள் சுமந்தபடி குளிர் காய்கிறோம் தீயின் நாக்குகள் தீவிரமற்று திசைமாறி இருப்பதனால் தீங்குகள் அற்று நாம் தில்லுமுல்லுகள் செய்தபடி தினாவெட்டாய்த் திரிகிறோம் பயிரிடா நிலங்கள் பரிதவிப்பின்றி பக்குவமாய் இருப்பதனால் பசுமை குன்றினும் பாறைகளாகி பயன்பெறா மாந்தனின் போலி முகம் கண்டும் தாம் பொறுமை கொண்டு நிற்கின்றன வானப்பெருவெளி வீழ்ந்துவிடாது வெடிப் பிளம்புகள் சூழ்ந்துவிடாது வெட்ட…

  17. சொந்தம் என்று சொல்ல பலர் உண்டு இருந்தும் அவர்கள் எல்லாம் உன் சொந்தம் போல் வருமா????? அன்பாய் பழகிட நண்பர்கள் பலர் உண்டு ஆனால் உன் நட்பு போல் வருமா????? என்னை நேசிக்க பல சொந்தங்கள் உண்டு ஆனால் உன் நேசிப்புக்கு அவை ஈடாகுமா????? என்னைக் காதலித்தவர்கள் பல பேருடா ஆனால் உன்னைப் போல் எவரும் என்னைக் காதலித்ததில்லையாடா.......

  18. ஈழமண்ணே! என்தாயே!! வேற்றுவர் வந்துன்னில் வெந்தணலைக் கொட்டி வேதனை செய்வதெல்லாம்........ விளங்காத பொருளாக வேடிக்கை பார்ப்பதிலும்.... விடமுண்டு மாள்வதே என் விதிக்கு நன்று.

  19. ஒரு நிமிடம் தனித் தனி.... என்னன்பே.. நீயெங்கே.. ஒரு நிமிடம் தனித் தனி.... என்னன்பே.. நீயெங்கே.. அலைகளிலே வலி வலி என்னுயிரே ... நீயெங்கே.. சின்ன அலைகள் கண்டே ஓடிடும் உன் கொலுசுப் பாதமே.. பேரலைகள் வந்தே மூடிய என்னழகே நீயெங்கே.... இந்தக் கடலன்னை -என் தாயென தினம் மணல்மடி து}ங்குவாய்..... அந்த அலைகளில் வரும் நுரை கண்டு - பால் பொங்குதே ஏங்குவாய்...... அள்ளித் தந்த கைகளே.. இன்று அன்பைக் கொல்வதா.... சீற்றம் கொண்டு சீறியே.. - எம் செல்வம் பறிப்பதா.... ஐயோ... நம் விடியலின்னும் து}ரமில்லை -என்ற காதலியை இன்று காணவில்லை ஒரு நிமிடம் தனித் தனி.... என்னன்பே.. நீயெங்கே..

  20. ஊனத்தின் வலியறியா மானிடா ஓரே ஒரு பொழுது உன் காலையோ கையையோ கட்டிப் போட்டு கிடந்து பார் . ஊனத்தின் வலியறிவாய்....

  21. 2011 புதுவருட வாழ்த்தும் கனவும் மோகன் அண்ணாவுக்கு அமைதி கிடைக்கணும் அதைப்புரிந்து எம்மவர் களத்தில் எழுதணும் இணையவனுக்கு சொந்த வீடு கிடைக்கணும் நிழலிக்கு இயலினி புதுவீட்டோடு அவருக்கான தொழில் கிடைக்கணும் ஜீவாத்தம்பி கோப்பை கரண்டியுடனான போர் நிறுத்தி நெஞ்சில் பேனை மாட்டணும் சேரன் தம்பிக்கு திருமணம் நடக்கணும் மகளாகவோ மருமகளாகவோ அவரின் அம்மா வரணும் யாயினி பிள்ளை எம்முன்னே ஓடித்திரியணும் நிலாமதியக்கா வகுப்பில் மீண்டும் வலம் வரணும் குமாரசாமியார் கள்ளுக்குடி மறக்கணும் எம்மை அகதியென்றால் அனாதையென்றால் சாட்டை தூக்கணும் இசைக்கு முதல் ஓட்டையுடன் தொடர்ந்து போட வசதி கிடைக்கணும் சிறித்தம்பி கைத்தொலைபேசி வாங்கணும் அதிலிருந்தும் படங்களை எமக்கு …

  22. '' நான் யாவும் அறிந்தவன்'' நீச்சல் அறியாமல் நீந்த முணைகிறீர் பாவம் தம்பி கரையேற மாட்டீர்.... அலையின் வேகத்திற்கு அசைந்தாட வேண்டும் இல்லையேல் அமிழ்ந்திடுவாய்.... கற்று தர வந்தேன் கடிந்து கொண்டீர் பார்த்தீரோ இப்போ....?? ஆழ கடல் மீது அநாதையாய் காலூன்ற முடியாது கரையேற முடியாது திக்கு திசை தெரியா திசையொன்றில் நீர்.... அண்ட சமுத்திரத்தில் ஆடி வந்தவன் ''பாக்கு நீரினையில் பாய் போட்டு படுத்தவன்.....'' என்னையா எதிர்த்தீர்....?? ஏளனம் செய்தீர்... பார்த்தீரா இப்போ கரையேற முடியாமல் கங்கையில் தவிகின்றீர்... என்னை பகைத்தால் இதுவே நிலமை ''யான் யாவும் அறிந்தவன்..."" ( நானல்ல) -வன்னி மைந்தன் -

  23. ஈழம் என்றொரு நாடு -தந்த தலைவனை இன்று நீ பாடு துள்ளியே வந்து தென்றலே ஆடு அள்ளியே வந்து புமாலை போடு.... புயலே வந்தொரு முரசதை கொட்டு புரட்சி நாயகன் புகழது பாடு அண்ணணிண் அகவை ஜம்பத்திரண்டு ஜயனே வாழணும் நீயே பல்லாண்டு..... செய்யணும் தமிழுக்கு நீயே தொண்டு நீயே எங்களின் நம்பிக்கை மன்று உரிமை போரதில் நீயே வென்று தரணும் ஈழத்தை நீயே ஈன்று.... அடிமை ஒழிந்தது தமிழன் நிமிந்தது உந்தன் ஜெனனத்திலே என்றும் நீ.. வாழிய..வாழியவே... -வன்னி மைந்தன் -

  24. அழுவதற்காகவா தமிழினம் பிறந்தோம்....??? இமயங்கள் இமயங்கள் இடிந்தே வீழ்குது இன்றேன் தமிழுக்கு இத்தனை துயரம்...??? கண்ணீர் ஆறுகள் கடலென ஓடுது நெஞ்சத்தில் ரணங்கள் ஏனின்று கூடுது....??? விடுதலை ஊற்றுக்கள் விரைவாய் அடையுது காலனுக்கேன் இத்தனை கடுகதி அவசரம்...??? ஒளியென உதித்த உதயங்கள் எல்லாம் இருளதை அளித்து இறப்பதால் சோகம்.... புயலென எழுந்த விடுதலை வீரர்கள் பகையதை சருகாக்கி அழித்ததால் மகிழ்ந்தோம்... அருகில் இருந்ததால் அடைந்தோம் ஆனந்தம் அவரை இழந்ததால் அடைகிறோம் சோகம்... தீயென எழுந்த தீர வீரர்கள் தீயினில் எரிந்ததால் தேம்பியே அழுதோம்... மார்கழி வந்தாலே மரணத்தின் ஓலம் அழு…

    • 4 replies
    • 1.2k views
  25. நல்வரவு லண்டன் ஹீத்ரோவுக்கு நல்வரவு குடிவரவு, பொதிமண்டபம் இவ்வழி மஞ்சட் ஓட்டுக்கு இப்பால் வரிசையில் நில் கடவுச்சீட்டு? நுழைவுப்படிவம்? (கண்களால் மேலுங் கீழுந் துளாவல்) இது உன்னுடைய கடவுச்சீட்டா? விஸா எங்கு பெற்றாய்? கொஞ்சம் பொறு யாருடன் நிற்கிறாய்? முகவரி? தொலைபேசி? எத்தனை நாள் நிற்கிறாய்? ஏன்? எதற்கு? விமானப் பயணச்சீட்டை எடு கொஞ்சம் பொறு மஞ்சட் கோட்டுக்குப் பின்னால் நில், ஓரமாக அடுத்த ஆள் அடுத்த ஆள் அடுத்த... நீ வரலாம் அந்தப் பக்கமாக வைத்தியபரிசோதனைக்குப் போ சட்டையைக் கழற்று எக்ஸ் கதிர் இயந்திரத்தின் முன் நில் மூச்செடு, முதுகை நிமிர்த்தி நெருங்கி நில் கொஞ்சம் பொறு இந்தா உன் கடவுச்சீட்டு நீ போகலாம் பொதி மண்டபம் இவ்வழி…

    • 17 replies
    • 3.9k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.