Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. உலகம் வியந்த உன்னதத் தலைவன் உதித்தநாள். உலகம் வியந்த உன்னதத் தலைவன் உதித்தநாள்,, ஈழத்தின் மண் உயிர் நிலை பெற்றநாள். மேதகு தலைவனின் பிறந்தநாள் போற்றுவோம் வீரியம் புகழ்பட ஆண்டுகள் நீண்டிடும் ஈன்றவள் பார்வதி பாதம் பணிகிறோம்- திரை மீண்டிடும் நாள்வரும் மாயைகள் விலகிடும். தோன்றிய இடரெலாம் தூசாய் மறைந்திடும் 61 வது ஆண்டுகள் தொடர்ந்திடும். தலைவனின் பிறப்பது உலகத்தின் அதிசயம் சத்தியம் உண்மையில் அவர் ஒரு மெல்லினம் நிறமதில் கறந்தபால் போன்றதோர் மனதிடை நிமிர்ந்தவர் சினங்கொள்ள வைத்தது சிங்களம். தமிழனின் சிறுமையை கண்டவர் பொங்கினார் தம்பியாய் சிரிப்பினில் நெஞ்சினில் தங்கினார். தமிழனின் உதிரத்தில் உணர்வின வி…

  2. முகம் தேடும் முகவரிகள். ஈழத்தின் வாசலே இந்தியத் தாய் மண்ணே! உயிரிங்கு உருகி நிற்கும் என் வணக்கம் உந்தனுக்கு! உறவுகளும் தோழருமாய் மகிழ்ந்திருந்த என் பூமி மயான பூமியான செய்தி நீ அறிந்திருப்பாய்! ஐந்தாட்டுத் திட்டம் என போட்டுவைத்த போர் நிறுத்தம் கடந்து இரண்டு நாட்கள் காற்றோடு போயாச்சு! ஐந்தாண்டும் நாம்பட்ட இன்னல் ரணம் அறியாயோ? தமிழ் உயிர்கள் மலிந்த நிலை தமிழகமே அறியாயோ? வியர்வை சிந்தி உழைத்த மண்ணில் தமிழ் இரத்தம் சிந்திக் கிடக்கிறது!. பயிர்கள் விளைந்த பூமியெங்கும் தமிழ் உயிர் விதைத்துக் கிடக்கிறது! தமிழரின் வாசல் எங்கும் "கண்ணி'வெடிக் கோலங்கள் எங்களின் வீதியெங்கும் கண்ணீரின் ஓலங்கள்! ஒரே…

  3. ஏழையாய்ப் போனேனே.... கோமேதகக் கண்ணிரண்டும் கோடி பெறும் கட்டிவைத்த முத்துக்களாய்.. பற்கள் மின்னும்.. தங்கநிற மேனியோ... கண்கள் கூசும் தாமரை அவள் வார்த்தை.. சங்கீதமாகும் எல்லாமும்.. என் சொத்தே எண்ணி வாழ்ந்தேன்... பொல்லாத செல்க் காலானால் ஏழையானேன்.

  4. ONE OF MY OLD POEM 1985 முதற் காதல் - வ.ஐ.ச.ஜெயபாலன் வாடைக் காற்று பசும்புல் நுனிகளில் பனிமுட்டை இடும் அதிகாலைகளில் என் இதயம் நிறைந்து கனக்கும். அன்னையின் முலைக்காம்பையும் பால்ய சகியின் மென் விரல்களையும் பற்றிக் கொண்ட கணங்களிலேயே மனித நேயம் என்மீதிறங்கியது. நான் இரண்டு தேவதைகளால் ஆசீர்வதிக்கப் பட்டவன். "பால்ய சகியைப் பற்றி உனது கவிதையில் ஒன்றுமே யில்லையே" என்று கேட்பான் எனது நண்பன். குரங்கு பற்றிய பூமாலைகளாய் நட்பை காதலை புணர்ச்சியை குதறிக் குழப்பும் தமிழ் ஆண் பயலிடம் எப்படிப் பாடுவேன் என்முதற் காதலை. கேட்கிறபாவி தன் மனையாளிடத்தும் சந்தேகம் கொள்ளுதல் சாலும் தெரியுமா? அடுத்த வீட்டு வானொலியை அணைக்கச் சொல்லுங்கள் ப…

  5. Started by ஆரதி,

    எனக்கு யாழ்ப்பாணத்திலிருந்து நண்பி ஒருவர் இமெயிலில் அனுப்பிய கவிதை ஒன்றை யாழ்களத்தில் பகிர்கின்றேன். ஈழமுரசு "நகைச்சுவை இரவு" நிகழ்வில்(06.08.2011) வாசிக்கப்பட்ட கவிதை ஆயிரம் மைல் கடந்து அன்னைதேசம் தனை பிரிந்து அனாதைகளாய் ஆனபோதும் அண்ணனாய் தம்பியாய் பிள்ளைகளாய் உற்ற உறவுகளாய் அன்போடு அரவணைக்கும் என் புலம் பெயர் சொந்தங்களே வணக்கம்! என் உயிரிலும் மேலான தமிழ்தாயின் உச்சிமுகர்ந்து அவள் தந்த தமிழ்ப்பாலின் பாசம் உணர்ந்து புதுவை அண்ணாவை என் நெஞ்சில் வைத்து காசி அண்ணாவின் கைபிடித்து கவிதை நான் எழுதி வந்தேன் காலம் அறிந்து! வீட்டிலே தமிழ்! தமிழா வீட்டிலே தமிழ் பேசு-இல்லையேல் தமிழ்மானம் போச்சு! தமிழனாய் பிறந்தோம் என்று பெர…

  6. நாடிழத்தல். நான் பயணப்பட முடிவெடுத்த போது காலத்தின் துயரத்திற் பழுத்த மனங்கள் முதுவேனிற்கால மரங்களிற் தொங்கிக் கொண்டிருந்தன. வாழ்வென்னும் சுடர் அவிந்து விழுமியங்களின் சுவடுகள் அழிந்த வெளியினூடு செல்லும் போது வழிகாட்டுவதற்கு ஆட்காட்டி போதுமென்று நினைத்தேன். நானொரு நாடோடியாகக் கூடுமென்றும் தூரங்களைக் கடக்கும் போது எழுத்தாணியிற் கவிதை சுரக்குமென்றும் நினைப்பவர்கள் என்னை மன்னியுங்கள். இருந்த நாட்குறிப்புக்களையும் எரித்துவிட்டே பயணிக்கிறேன். நான் வழிப்பறிக்கு அஞ்சியவன். காலம் நெடுகிலும் தனித்தழும் மரங்களை மூடிக் கிடக்கும் புழுதியை அள்ளிப்பூசிக் கொள்கிறேன். உருவழிய, உதிர்ந்த இலைகளைத் தழுவும் …

    • 1 reply
    • 857 views
  7. தேநீர் கவிதை: எவராவது வந்து... எவராவது வந்து சூட்டிவிட்டுப் போங்கள் மகுடத்தை.. என் தலை காலியாய்த்தான் இருக்கிறது வெளியேயும் உள்ளேயும். எவராவது வந்து மாலையிட்டுப் போங்கள் நாறிக்கிடக்கிறது என் புறமும் அகமும். எவராவது புகழ்ச்சிகளைப் பிசைந்துவைத்த சொற்களைப் போட்டுவிட்டுப் போங்கள் என் பிச்சைப்பாத்திரத்தில். சோறில்லை என்றாலும் பரவாயில்லை. பேரில்லாமல் எப்படித் திரிவது? எவராவது வந்து அப்பாவிகளை …

    • 1 reply
    • 857 views
  8. [size=4]கர்ணனின் கதையில்.[/size] [size=4]புதைந்திருக்கும் அர்த்தங்கள்![/size] [size=4]கால வெள்ளம் கூடக்,[/size] [size=4]கரைக்க முடியாத உண்மைகள்![/size] [size=4]ஆயிரம் திறமைகள்,[/size] [size=4]ஆண்மையின் கம்பீரம்,[/size] [size=4]சத்திரிய வீரம் மட்டுமே,[/size] [size=4]காறித்துப்புகின்ற கர்ச்சனை![/size] [size=4]விசுவாமித்திரனே, [/size] [size=4]வியந்து போன வீரம் தான்![/size] [size=4]பிரமாஸ்திரத்தின் ரகசியம்,[/size] [size=4]மறந்து போகச் சாபமிட்டான்.[/size] [size=4]அன்னைக்குக் கூட,[/size] [size=4]அவனது ரகசியம் தெரியும்![/size] [size=4]அவளின் அரச வாய்கள்,[/size] [size=4]கூடப் பூட்டப் பட்டன![/size] [size=4]தேர்ச் சில்லின் புதைப்பில்,[/size] [size=…

  9. . எப்போது கிடைக்கும் சுதந்திரம்..! "அ"னாதை இல்லங்கள் அழிக்கப்படும்போது..! "ஆ"தரவற்றோர்கள் அரவணைக்கப் படும்போது..! "இ"ல்லாதவனுக்கு இருப்பிடம் கிடைக்கும்போது..! "ஈ"கைப்பண்பு பணம் படைத்தவன் நெஞ்சில் துளிர்விடும்போது..! "உ"ணவில்லா ஏழையின் பசி ஆரும்போது..! "ஊ"ருக்குப்பாடுபட உள்ளம் முன்வரும்போது..! "எ"ழில் பொங்கும் இயற்கை அழிக்கப்படாதபோது..! "ஏ"ழைகளுக்கும் படிப்பு ஏமாற்றமில்லாமல் கிடைக்கும்போது..! "ஐ"ந்தாண்டு ஆட்சியும் மக்களுக்காக மட்டுமே நடத்தப்படும்போது..! "ஒ"துக்கப்பட்ட மக்கள் ஒருபடியாவது முன்னேற்றப்படும்போது..! …

  10. போராளிகளான அப்பாவிகளையும் அடிமைகளான பயங்கரவாதிகளையும் பற்றி பேசுதல் சம்பூர் வதனரூபன் தேசங்கள் பலதும் தேசங்களாயிராத பொழுதுகளில்.. தேசமாக்குவதற்கும் முடியாத போது உருவாக்குவதற்குமென அடிமைகள் எழுவர். அடிமைகள் என்பவர் எப்பொழுதும் அடிப்படையுரிமைகளுமில்லாத அப்பாவிகள் என்பதே உண்மை. ஆட்சியாளர்கள் அடக்குமுறையாளர்களாவதும் அதிகாரமுள்ளவர்கள் ஆக்கிரமிப்பாளர்களாவதும் அப்பாவிகளை அடிமைப்படுத்துவதும் அடிமைகள் விடுதலை கேட்பதும் நாளடைவில் அடிமைகள் போராளிகளாவதும் போராளிகளான அப்பாவிகள் பயங்கரவாதிகள் என்றழைக்கப்படுவதும் பின்பு பயங்கரவாதிகள் என்றழைக்கப்பட்ட அப்பாவி அடிமைகள் அழிக்கப்படுவதுமென.. இதற்கு நீண்ட வரலாறும் உதாரணங்களுமுண்டு உலகமெங்…

  11. செஞ்சோலைக் குயில்கள்..... கவிதை - இளங்கவி..... புலியின் கோட்டையிலே பூத்த சிறுமலர்கள்..... பொசுங்கி விட்ட பின்பும் மனதில் பூத்து நிற்கும் கொடி மலர்கள்.... அவர் செஞ்சோலையில் வளர்ந்த சிரித்து நின்ற இளந்தளிர்கள் செத்து நம் சரித்திரத்தில் இடம்பிடித்த இளம் குயில்கள்.... வாழ்க்கையின் வசந்தத்தை ஏக்கத்துடன் பார்த்திருந்த.... வெண்பனியில் தவண்டுவரும் நம் ஈழத்துப் பென்குயின்கள்.... வணக்கத்துடன் சூரியன் கிழக்குவாசல் வந்துவிட..... செஞ்சோலைப் பூக்கலெல்லாம் சிறிதாக மலர்ந்துவிட.... வளமையான பொழுதென்று வண்ணச் சிட்டுக்கள் நினைத்திருக்க.... வாழ்க்கைக்கு சில மணிதான்; என்று தெரியாத தேவதைகள்...... மகிந்தவின் கட்டளைக்கு எமன்க…

  12. உனக்கெதற்கு கட்சி....???? ( ரவுகக்கீம் ) கதிரைகளை காத்து விட கழுதையாகி போவதுவோ....??? பண மூட்டைகளை வேண்டி பிட்டு பகை மூட்டைகளை சுமப்பதுவோ....??? பன்னிருவர் பலியெடுத்தான் பார்த்து நீயும்; நிற்பதுவோ....?? ஏறியவன் பகை உதைக்க இயலாமால் போனதுவோ...??? கை நீட்டி பணம் வேண்டி கை கட்டி நிற்பதுவோ....??? மக்களவர் மைந்தர் என்று மார் தட்டி உரைத்தவரே.... உன் இனத்தை அவன் அழிக்க பார்த்து இன்று நிற்பதுவோ....??? ஒன்றினைந்து அவன் உதைக்க உன்னால் இன்று முடியலயே.... ஓட்டு கேட்டு வீதியிலே ஓடி...ஓடி.... வந்தாயே.... ஓலத்தில் உன் மக்கள் அவர் ஓலத்தை துடைக்கலயே.... தனி தரப்பு …

  13. போறன் என்றோ ... போயிட்டு வாறன் என்றோ .. சொல்லிவிட்டுப் போகாத என் அண்ணன் அடிக்கடி வந்து நினைவில் நிக்கிறார்! அவரைப் பாத்தா ரெண்டு கேள்வி கேக்கோணும்; எண்டுதான் நான் நினைச்சிருந்தன்! -ஆனால் நேத்திரவு கூட கனவில வந்தவர்... என்னால ஒண்டுமே கேட்க முடியேல. சத்தியமாச் சொல்லப் போனால்.... அண்ணை செய்தது மெத்தச் சரி! ஏன் தெரியுமோ...!?? எங்கட சனத்தின்ர குணம் உங்களுக்குத் தெரியாதே? போறன் எண்டு சொல்லிட்டுப் போனாலும்... போத்திக்கொண்டு படுத்திருப்பாங்கள்! போயிட்டுவாறன் எண்டு சொல்லிட்டுப் போனாலும்... போத்திக்கொண்டுதான் படுத்திருப்பாங்கள்! என்னைப் பொறுத்தவரையில்........ அண்ணை எல்லாத்தையும் செய்திட்டார்! இதுக்குமேலயும் அந்த மனுஷனே வரோணும் உங்களுக…

    • 3 replies
    • 856 views
  14. தேசத்தின் புயல் மாதவன். பச்சை வயல் நிறைந்த தென்மராட்சி மண்ணில் மாதவமாய் வந்துதித்த மனோரஞ்சன். தொண்ணூறுகளின் தொடக்கம்...., யாரெவனோ என்றிவனை ஊர் போற்றும் வீரனாய் புலி வேங்கையாய் போர்க்காலமொன்றில் யாழ் மண்ணில் பணிசெய்ய வந்தான். 'மாதவன்' மறக்க முடியாத நினைவுகளில் அவன் புன்னகையும் ஆழுமையும் ஆற்றலின் பன்முகமும் அழியாச்சுடர் அவன்.....! நெருப்பைச் சுமந்தான் சிரிப்பில் மட்டும் இனிப்பாய் கரைந்தான். இனிமையான போராளியாய் இதயங்களில் நிறைந்தான்....! இசையூடக வழியே பாடகனாய் திரையூடக வழியே நடிகனாய் கவியூடக வழியே கவிஞனாய் கலையின் மொத்த வடிவம் - மாதவன் கலைபண்பாட்டுக்கழகத்தில் இவனொரு வரலாறு. இவனின்றிய வரலாறொன்று இருந்தறியாத நாட்களில் கலைகடந்து கனரகம் சுமந்து களம் கண்ட ப…

  15. ஸ்ரீலங்கா தேசிய கீதம் தமிழில் பாடுவது தடை செய்யப்பட்டு விட்டது. இனி அங்கு வாழும் சிங்களம் தெரியாத தமிழர்கள் என்ன செய்வார்கள்? அவர்கள் பாடுவதற்கு ஒரு தேசிய கீதம் வேண்டாமா? அவர்களுக்காக எனது சிறிய முயற்சி: --------------------------------------------- ஸ்ரீலங்கா பேயே நம் ஸ்ரீலங்கா நமோ நமோ நமோ பேயே தமிழரின் தலை கொண்டு புதைகுழிகள் யாவும் நிறைப்பாய் வெறி லங்கா ஞாலம் இகழ இனவெறி மதவெறி கொலை வெறி தமிழ் இரத்தம் கொள் லங்கா தமிழரின் கொலைக்களம் என ஒளிர்வாய் நமதருமை பேயே எக்கடன் பட்டும் கொலை தொடர்வோமே நமோ நமோ நமோ பேயே நம் ஸ்ரீலங்கா நமோ நமோ நமோ பேயே http://gkanthan.wordpress.com/index/anthem/

  16. இன்றைய தேதியில்... மகிமைக்கு உரிய அத்தனை பேரையும், பத்துநாள் பட்டினி போட்டால் திருந்துவார்கள்! அந்தஸ்தோடு ஆட்டிப்படைக்கும் மனித எந்திரங்கள்!! அதிகாரங்களின் அதிகாரங்கள் இவர்கள்!!! அவர்களை நினைத்தாலே போதும் ... ஒலிவாங்கியோடு ஒரு ஒளிநாடாதான் எம் கண்முன் நிற்கும். அதை விட்டால் வேறொன்றும் வராது!? வராதா....????!!!! அடங்குவதும் தாங்குவதும் அவர்களுக்கும் இயல்புதான். அவர்கள் வாழும் முகவரியும் அதே எங்கள் பூமிதான். வலியும் கிலியும் அவர்களுக்கும் இருக்கு. வழியும் சளியும் ... நெளியும் பாம்பும் அவர்களையும் பயமுறுத்தும். என்றாவது ஒருநாளேனும் அவர்களை இயல்பாய் பார்த்திருக்கின்றோமா? பசித்தலும் புசித்தலும்... புசித்தபின் படுத்தலும் , காலையிலெழுதலும் காலைக…

  17. மரணித்த தியாகிகளே நான் சிறு துரும்பென உணர்கின்றேன் உங்கள் ஒவ்வொருவரின் இழப்புகளில் வேகின்றது ஆகுதி ஆன எம் பரம்பரையின் உயிர் என் வயது தான் உங்களுக்கும் சில வருடம் குறையலாம் பெண் சுகம் என்னவென்று தெரியுமா? அல்குளின் இன்பம் தெரியுமா? உங்களுக்கு நான் சொல்வேன் என்னவென்று? சொல்லுங்கள் எனக்கு தியாகியாகி போவதன் சுகம் என்னவென்று இனம் காக்க மண் மேல் வீழ்வதன் சுகம் என்னவென்று பல இலட்சம் அடிமைகளின் விலங்கு உடைக்கும் சுகம் எனக்கு தெரியாது பல் கோடி சதிகளின் கண்ணி உடைக்க தெரியாது ஆயினும் அல்குளின் சுகம் என்னவென்று நான் சொல்வேன் சொல்லுங்கள் ஏன் என்னை போல நீங்கள் இல்லை ஏன் பெண் சுகம் நாடவில்லை காட்டாறுவ…

  18. நான் அவர்களைத் தேடிக்கொண்டிருந்தேன்! கோயிலுக்குப் போனேன்! அங்கே அவர்கள் இல்லை! தேவன் திருச்சபையிலும் அவர்கள் இல்லை! மசூதிக்குள் சென்றும் எட்டிப்பார்த்தேன்! அங்கும் அவர்கள் இல்லை! இல்லவே இல்லை! கனத்த மனத்துடன் திரும்பிக்கொண்டிருந்தேன்! அந்தோ! அவர்கள்!! ஆம்! அது அவர்களேதான்!! அது அவர்களின் சத்தமேதான்!!! அவர்கள் வெளியிலேதான் நின்றார்கள் - இல்லை அன்போடு விளையாடிக்கொண்டிருந்தார்கள்!! குழந்தைகள்!!! வாலி 14 ஏப்பிரல் 2014 11:30 AM

  19. இல்லாது இருப்பவன் இருந்தும் இல்லாதவன் வரிகொண்டவன் வரிப்புலிகண்டவன் முழுத்தமிழர்க்கும் முகவரிதந் தவர்மனங்களில் முடிசூடினன் இயற்கையின் நண்பன் இமாலய சாதனையின் தொண்டன் தமிழன்னையின் தவப்புதல்வா... தாயகத்துத் தங்கமகனே புறநானூற்றின் புதுத் தொடரே... உனக்கின்று இன்னோரகவையாம்... காலத்தின் கட்டளையே கரிகாலா... உனக்கும் அகவையேதுமுண்டோ? நீ வாழி.. நீ வாழிய பல்னூற்றாண்டு...!!!

    • 7 replies
    • 853 views
  20. எனக்கு உள்ளே ஒரு நெருப்பு கனன்று கொண்டிருக்கின்றது. மன அழுத்தம், சிதளூரும் காயங்கள், மற்றும் நெஞ்சு நிறைந்த வலிகள், எல்லாம் ஒன்றுகூடி ஒவ்வொரு நொடியும் என்னை விரட்டுகின்றன. இருள் ஆழமாக, அதிகமாக என்னைப் பின்தொடர்ந்து வருகிறது. மிகவும் சிக்கலான கோடுகள் என்னைச் சுற்றி வரையப்பட்டன. என் சுதந்திரம் சிறைபிடிக்கப்பட்டபோது யதார்த்தம் செத்துப்போனது. நட்சத்திரங்கள் ஒன்றன்பின் ஒன்றாக உதிர்ந்த பின்னிரவில், நிலவு மறைந்து போனது, மீளா இருள் எங்கும் வியாபித்தது. மின்மினிகள் ஒன்றன்பின் ஒன்றாக வரிசை கட்டிப் பறந்தன. நீரோடி வியாபித்த நீர்நிலைகள் வற்றி வறண்டன. பள்ளத்தாக்குகள் சுக்குநூறாகப் பிளவுபட்டன. கண்ணுக்கெட்டிய திசையெங்கும் கந்தகப் பு…

    • 10 replies
    • 853 views
  21. Started by Cheliyan,

    ஏதாவது செய் ஏதாவது செய் உன் சகோதரன் பைத்தியமாக்கப்படுகின்றான் உன் சகோதரி நடுத்தெருவில் கற்பிழக்கிறாள் சக்தியற்று வேடிக்கை பார்க்கிறாய் நீ ஏதாவது செய் ஏதாவது செய் கண்டிக்க வேண்டாமா. அடி உதை விரட்டிச் செல் ஊர்வலம் போ பேரணி நடத்து ஏதாவது செய் ஏதாவது செய் கூட்டம் கூட்டலாம் மக்களிடம் விளக்கலாம் அவர்கள்…. கலையுமுன் வேசியின் மக்களே எனக் கூவலாம் ஏதாவது செய் ஏதாவது செய் சக்தியற்று செய்யத்தவறினால் உன் மனம் உன்னைச் சும்மா விடாது. சரித்திரம், இக்கணம் இரண்டும் உன்னை பேடி என்றும் வீர்யமிழந்தவன் என்றும் குத்திக் காட்டும். ஆத்திரப்படு கோபப்படு கையில் கிடைத்த புல்லை எடுத்து குண்டர்கள் வயிற்றைக் கிழி உன் சகவாசிகளின் க…

    • 0 replies
    • 852 views
  22. மே 18!!! குற்றுயிராய் ஒரு உயிர் குடல் கிழிந்து ஒரு உயிர் பாதி எரிந்தபடி ஒரு உயிர் உருக்குலைந்து ஒரு உயிர் அழுகுரலோடு ஒரு உயிர் அனாதையாய் ஒரு உயிர் நஞ்சுண்டபடி ஒரு உயிர் கடந்து ஓடினோம் உணர்வும் செத்து உயிரும் செத்து முள்ளிவாய்க்கால் வரை!!! எல்லாம் தின்று ஏப்பம் விட்டு நந்திக்கடலில் கறை படிந்த கை கழுவி ஒன்றுமில்லை என்றான் புத்தன்!! மே மாதம் நினைவழியா மாதம் இன்றும் பிண்வாடையும் கந்தகவாசமும் நாசில் அரிக்கும் மாதம்... சூட்சிகள் செய்து மனட்சாட்சிகள் இல்லா கொலைக்களம் சாட்சிகள் ஆனவர் நாக்குகள் அறுத்து ஊமைகள் ஆன சோகம் செங்குரிதி ஓடி வெந்தணல் ஆன எம்மவர் நினைவுகள் அழியா மாதம் இது ஊழிக்கூத்து நிகழ்ந்த மாதம்! அடி மனதோடு…

    • 3 replies
    • 852 views
  23. இன்று மாவீரர் நாள் எமக்காக மரணத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நாள் வருகிறாயா என நண்பரிடம் கேட்டேன் இல்லை என்று பதிலுடன் இன்று எனக்கு வேலை என்ற பொய்யும் வந்தது பின்புதான் அறிந்தேன் அன்றைய தினம் அவன் சாய் பாபா பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினான் என்று நண்பா, அந்த மாவீரன் மில்லர் எனக்கு மட்டுமா நண்பன் உனக்கும் தானே இறந்தவருக்காக happy birthday பாடும் நீ ஏன் எமக்காக மரணித்தவர்களுக்காக திவசம் செய்ய பின் நிக்கின்றாய்.

  24. இசைப்பிரியாவுக்கு இதயத்திலிருந்து…. ஒரு மானுட வதை:- ஆதிலட்சுமி Tuesday, November 5, 2013 @ 11:50 PM இசைப்பிரியாவுக்கு இதயத்திலிருந்து…. ஒரு மானுட வதை மகளே……. பிறக்கும் போது யாருக்கும் பிறப்பின் அருமை தெரிவதில்லை நீ பிறந்த போதும் அப்படித்தான். நீ மட்டுமல்ல… லும்பினியில் மாயாவின் மடியில் சித்தார்த்தன் பிறந்தபோதும் அவன் பிறப்பை யாரும் உணரவில்லை…. மாட்டுத் தொழுவத்தில் மரியாளின் மடியில் உதித்தபோது… ஏசுவையும் எவரும் கண்டுகொள்ளவில்லை…. மக்காவில் நபிகள் பிறந்து 40 வயதாகும் வரை அவர் பெருமை யாருக்கும் புரியவில்லை… சரவணப் பொய்கையில் தாமரைப் பூக்களாய் தோன்றிய போது சூரனை வதம் செய்ய வந்தவன் என முருகனை யாரும் நினைக்கவில்லை அப்படித்தான்….. நீ பிறந்தபோதும் உலக…

  25. னான்=விகடன் ஆனந்த விகடன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.