Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. தன்னைப் படைத்த இறைவன் விண்ணைப் படைத்திருக்கக் கூடாது! விண்ணைப் படைத்திருந்தாலும் - பின்னே மண்ணைப் படைத்திருக்கக் கூடாது! மண்ணைப் படைத்திருந்தாலும் - அங்கே உன்னைப் படைத்திருக்கக் கூடாது! உன்னைப் படைத்திருந்தாலும் - முன்னே என்னைப் படைத்திருக்கக் கூடாது! என்னைப் படைத்திருந்தாலும் - என் கண்ணைப் படைத்திருக்கக் கூடாது!

    • 5 replies
    • 998 views
  2. ஆவி சுருங்க..உடல் களைக்கப் பயிர்செய்துழவன் மேதினிதழைக்க வேர்வை சிந்தி- ஆதவன் வருகைக்காய் காலைப்பனியில் எழுந்து காத்திருக்கிறான் - நீ பாடி மகிழ்ந்திடு குயிலே பொங்கலோ பொங்கல்! மாவிலைகள் பருவமங்கையின் காதெணியென்றாகி காற்றில் ஆட - வாயிலில் போட்ட கோலம் வண்ணப்பூக்களென நெஞ்சையள்ள- பொங்கிவரும் பானையின் விளிம்பு பார்- அழகு! சின்னக்குழந்தையின் மனசென்று நீயாகி- சிரித்து மகிழ்ந்திடு குயிலே பொங்கலோ பொங்கல்! நேற்றைய பொழுதது நிச்சயமென்று இருந்ததில்லை! இன்றைய வாழ்வும் ஒன்றும் இனிப்பதாய் தெரியவில்லை! நாளைய நாள் என்னாகுமோ நாமறியோம்! நானிலத்தில் தமிழர்திருநாளாம் இன்று இனி நல்லதே நடக்கும் என்று நீ நம்பு குயிலே பொங்கலோ பொங்கல்! ஊர்மனையாவிலும் பால் …

  3. வணக்கம் ரமா, கள உறவுகளே. இது நல்லதொரு முயற்சி, பாராட்டுக்கள். ஆனால் ஒன்று இல்லை இரண்டு: (1). எழுதிய கவிதையை களத்திற்கு அனுப்புவதற்கு முன்னர் இரு தடவைகளாவது படித்துவிட்டு எழுத்துப்பிழைகள் இருந்தால் திருத்திவிட்டு அனுப்புங்கள். (2). தயவுசெய்து ஆங்கிலச் சொற்களைக் கலக்காது எழுதுங்கள். கவிதைகள் (10 வரிக்குள்) குறுங்கவிதைகளாக இருந்தால் நல்லது என்று எண்ணுகிறேன். தாய்மொழியிலே தவறு செய்யக்கூடாது . அதுவும் கவிதையிலே!... "கண்ணுக்கு எண்ணெய் விட்டுக்கொண்டு இருக்கவேண்டும்" இல்லையேல் சொல்லவந்த கருத்துக்கள் காற்றோடு போய்விடும். நன்றி

    • 29 replies
    • 4k views
  4. தை - திருமகளே வருக வருக .... தைரியம் சிறக்க வருக வருக .... தை பிறந்தால் வழி பிறக்க வருக வருக .... தைத்தியரை அழிக்க வருக வருக ....!!! முற்றத்தில் கோலமிட்டு ..... முக் - கல் அடுப்பு வைத்து .... முத்திரி விளக்கேற்றி ..... முக்குணத்தை அழிக்க ... முக்காலமும் சிறப்பாக அமைய .... கரம் கூப்பி அழைக்கிறேன் தை- திருமகளே வருக வருக ....!!! உன்னையே உயிராய் ..... உன்னையே தொழிலாய் .... உன்னையே மூச்சாய் வாழும் .... உன்னையே தெய்வமாய் ..... உழைத்து வாழும் உழவு விவசாயம்... செழித்து வாழ என் உயிர் தாயே .... தை- திருமகளே வருக வருக ....!!! ^ பொங்கல் கவிதை கவிப்புயல் இனியவன் 2018 . 01 .14

  5. காதல் கடலில மூழ்கினா முத்து காதலில் மூழ்கினா பித்து படிப்பைக் கொஞ்சம் யோசி குடும்பத்தைக் கொஞ்சம் நேசி சொந்தக் காலில் முதலில் நில்லு அப்புறம் உந்தன் காதலைச் சொல்லு இதுக்கு மேலும் வேணாம் மல்லு அப்புறம் எகிறிப் போகும் உன் பல்லு வயசானா உதவிடும் கைத்தடி வெறுப்பேத்தினா அப்புறம் அடிதடி o குடி வெயிலுக்குக் குடிச்சா நல்லது மோரு குடும்பத்தையே நாசமாக்குது இந்த பாரு o இளசுகள்(பெண்கள்) செய்தித்தாளை படிச்சா தெரிஞ்சிக்கலாம் மேட்டரு! வயசுப் பசங்களப் பார்த்தா பொண்ணுங்க விடுவாங்கோ பீட்டரு!! o அரசியல்வாதி குடிகாரன் குடிபோதையில் உளறுவான்! அரசியல்வாதி குடிக்காமலேயே உளறுவான்!! கைகூப்பிக் கேட்பாங்கோ…

    • 778 replies
    • 81.6k views
  6. சொல்வாயா...!!! உனை நான் பார்த்தேன் எனையே உடன் மறந்தேன் காளை உனை நினைத்து காதல் கொண்டு துடித்து நீ செல்லும் வழி மீது நிலா இவள் விழி வைத்து துடிதுடிக்கும் இதயத்தோடும் படபடக்கும் விழிகளோடும் கன்னி நான் காதலோடு உனை எண்ணிக் காத்திருக்கின்றேன் திருமகனே என் மனமகனே ஒருமுறையேனும் உன் உதட்டைக் குவித்து நெத்தியில் அன்பாக முத்தம் ஒன்று இட்டு சத்தமாக சொல் கன்னி இவளே உன் காதலி என்று...! சொல்வாயானால், வெண்ணிலா சிரிக்கும் விண்மீன் ஒளிரும் வானம் பூத்தூவும் வானவில் நிறம்கூடும் மின்னல் மின்னும் முகில்கள் நாணும் இவைக்காக என்றாலும் அவைமுன் காதலை சொல் கன்னி இவளே உன் காதலி என்று...!

    • 15 replies
    • 2.7k views
  7. அறுத்தெறியப்பட்ட இதயத்தின் இரத்தக் குழாய்கள் கொப்பளித்த சிவப்பணுக்களில் - என் உயிர் உச்சரித்த உன் காதற் சிதறல்களைத் தேடிக்கொண்டிருக்கின்றேன் இன்னும்! புரிதல்களும் புரியாமையும்.... புரிந்துகொள்ளப்படுவதற்கு, சில காலங்கள் செல்லும்! - அதுவரை, இந்த ரணவலித் தேடல்கள் தொடர்ந்துகொண்டேதான் இருக்கும்!!!

  8. "விண்ணில் வாழும் வீரன் இவன்!" "மொழியில் ஒரு பற்று கொண்டு விழியில் ஒரு ஏக்கம் கவ்வ வழியில் வந்த தடை உடைத்து சுழியில் மூழ்கிய வீரன் இவன்!" "ஒன்று இரண்டு ஆயிரம் கொலை இன்று நேற்று கண்டு துடித்து வென்று ஒரு முடிவு காண சென்று மாண்ட வீரன் இவன்!" "தாயின் தங்கையின் கற்பு காக்க சேயின் சேர்ந்தோரின் நலம் நாடி நாயின் வாலை நிமித்த எண்ணி பேயில் சிக்கிய வீரன் இவன்!" "உண்மை வெல்ல களத்தில் போராடி கண்ணை இழந்து கையை முறித்து மண்ணை மீட்க மரணம் தழுவி விண்ணில் வாழும் வீரன் இவன்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ…

  9. Started by யாழ்வாணன்,

    இதயத்தின் இனிய வலி உதயமானால் புதிய ஒலி பதியமானால் இருவர் பலி மனுக்குலத்தின் மாறா விதி

    • 7 replies
    • 978 views
  10. ஞாபகத்தில் இருக்கிறது அழகாய் நிழலாய் ஒரு முகம். ம்ம்ம்ம்.... தெளிவாயில்லை. அலையும் நீரில் அலைவதாய் அது. வயது தொலைந்து வாழ்வின் எல்லையின் தனிமையில் இளமையை அசை போட்டபடி. நிறைவாய் ஒரு நீ.........ண்ட ஞாபக உறவு. வாழ்வு இயல்பாய் நகர்ந்தும் அம்முகம் அடிக்கடி வரும்... மறையும். கொல்லைப்புறத்துப் பொட்டு வேலிதான் அவனது போக்கு வரத்து. பனம்பாத்தியடியில் கிளுவங்குச்சி முறித்துக் கொட்டில் கட்டி, குரும்பட்டியில் ஈர்க்கில் குத்தி மரப்பாச்சி பொம்மையும் செய்து, கொட்டாங்குச்சியில் சோறும் காய்ச்சி, தொட்டாச்சிணுங்கி இலையும் தேங்காய்ப்பூக் கீரையும் கறிகளுமாய். அம்மாவின் சோட்டிக்குள் நானும், அப்பாவின் வேட்டிக்குள் அவனுமாய். …

  11. அது ஒரு நிலம்... விடுதலைக் கனிதனைச் சுவைக்க உயிர்தனைக் கருவியாக்கி உடல்தனை வித்தாக்கி வலிதனை தனதாக்கி... தசாப்தங்கள் மூன்று குருதி பாய்ச்சி செய்த விளைச்சல்தனை அறுவடை செய்யக் காத்திருந்த நேரம்...... முதுகு கூனியதுகளும் முள்ளந்தண்டு விலகியதுகளும் சகுனிகளும் சோனியாக்களும் தம் பழி தீர்க்க உயிர்ப் பலி தனை ஒரு இனம் மீதளிக்க.. விடியற் சூரியனின் திசையில் அன்றி நிலமே சிவப்பானது தமிழர் குருதி தோய்ந்து..! கற்புக்கு அரசி கண்ணகியும் சிலையாகி மெளனமாக.. சேலை வழங்கி மங்கை தன் மானம் காத்த கண்ணனும் கண் மூட சிங்கள ஓநாய்களின் துகில் உரிதல் இச்சைப் பசிக்கு அனுதினம் ஆளாகின்றார் தமிழ்ப் பெண்டிர்..! வீரத் தமிழன்…

    • 23 replies
    • 3.3k views
  12. வன்னிக் குழந்தைகளின் கதறல்கள் தாய் நாட்டில் உதவி வேண்டி நிற்கும் உறவுகளுக்காய்...... அனைத்துலகம் எங்கிருக்கும் எம் அனைத்துலக உறவுகளே ! எங்கள் வன்னியின் அவலங்களை இன்று உலகமெங்கும் அறிவீர்கள் வாழ்விழந்து போன எங்கள் நிலைமையையும் அறிவீர்கள் இன்று மரங்கள்தான் நம் வீடு மணல்தரை தான் நம் படுக்கை காட்டு மிருகங்கள் தான் நம் உறவு குண்டுபோடும் கழுகுகள்தான் நம் எதிரி. எமக்கு வீடு இருந்தும் எம் வாழ்வை காட்டில்தான் வாழ்கின்றோம் காரணம் புரியவில்லை கண்டபடி ஓடுகின்றோம். காலையில் எழுந்தபின்னர் தண்ணீர் தான் நம் உணவு அதன் பின்னர் பசிக்காய் அழுவதுதான் நம் கவலை. பசியின் கொடுமையினால் பழைய உணவை உண்டுவிட்டு புசித்த பின்னர் சிலவேளை …

  13. என் காதல் தேவதை மனதுகளின் சங்கமத்தில் மலர்ந்திடும் ஓர் உறவு குருவிகளின் கொஞ்சல்களில் கொஞ்சமாய் கண்விழித்து ஜன்னலோரம் பார்க்கிறேன். பூ மரங்கள் மேல் பனித்துளியில் தங்க நிற வளையங்களாய் மினுங்கிடும் நீர்துளிகள். அரைத்தூக்கம் கண்களிலே ஆசையாய் இருந்துவிட அவசரமாய் ஜன்னல் கதவுகளை திறக்கின்றேன் பளீரென்று ஓர் வெளிச்சம் என் பார்வையதை பறித்துவிட்டு சில வினாடிகளில் மறைகிறது மறுபடியும் பார்த்தால் புரிந்தது என் புத்திக்கு ஆம்! சூரியனின் விம்பம் சோடி வளையல்களில் எதிரொலித்து ஜன்னல்களின் இடைவெளியால் என் கண்களை தாக்கியது முகம் பார்ப்போம் என்றால் முடியவில்லை பூமரத்தால் அன்று முடிவெடுத்தேன் ஓர் கொள்கை மரம் வளக்கும் கொள்கைவிட்டு மர…

  14. தொலைபேசியும் தொலைத்(த)தொடர்பும்....... கவிதை.... வண்ண வண்ணச் சிட்டுக்கள் என்னை தொலைவில் நின்றும் பார்க்கவில்லை..... காரணம் தெரிந்து கொண்டேன் கையட்டக்கத் தொலைபேசி கூட என் கையில் அன்று இருக்கவில்லை...... கடன் அட்டை ஒன்றெடுத்து கைத் தொலைபேசி வாங்கி வந்தேன் அதன் பெயரோ '' நோக்கியா'' அதைக்கண்டு ஓர் சிட்டு என்னை நோக்கினாள்..... அதன் பின்னர் ''சொனி எரிக்சொன்''கு மாறினேன் அவளை சில படங்களும் எடுத்துக் கொண்டேன் அவளும் சிரிப்புக்கு மாறி தன் கண்களையும் சிமிட்டிக் கொண்டாள்..... பின்னர் ''சாம்சங்''கு மாறி அவளோடு தனிமையில் பேசி வந்தேன் என் காதலுக்கும் சரி சொல்லி என் மார்பிலும் சாய்ந்து கொண்டாள…

  15. [size=5] காந்தள்கள் முகம் (ஹைக்கூக்கள் 3)[/size] [size=5] [/size] [size=5] மணி ஒலித்தோய்ந்த்து பனித்தன கண்கள் காத்திகை 27. [/size] [size=5]கலைந்தது மௌனம்[/size] [size=5]மலர்ந்தன தீபங்கள்[/size] [size=5]மாவீரர் நாள்.[/size] [size=5] காந்தள்கள் முகம் சிரித்தது கைகளில் கார்த்திகைத் தீபம்.[/size] [size=5] [/size] [size=5]கோபுரங்கள் இல்லையெனினும் கோயில்கள்[/size] [size=5]கல்லறைத் தெய்வங்கள்[/size] [size=5]துயிலுமில்லங்கள்.[/size] [size=5] [/size] [size=5]எதிரி கிளரியெறிந்ததால் மனதில் கிளர்ந்தெழுந்தது மாவீரர் தியாகங்கள்.…

  16. Started by சுஜி,

    ஆருயிரே நான் வாழ்த போதுதான் எனக்கு மாலை சூட்ட நீ வர வில்லை நான் இறந்த பிறகு ஆவது என் கல்லறைக்கு ஆவது மாலை சுட்ட நீ வருவயா?

  17. தோல்வியில் மீளுவோம் நீண்ட பயணம்…., முடிவு வரும் ஆனால் பாதை கடினமானது. தெரிந்து பயணம் செய்தான் எங்கள் தலைவன். வெற்றிகள் வந்தது தோல்விளும் கூடவே….! பயணத்தின் பாதை அது மிகக் கொடுமையானதாய் கொத்துக் கொத்தாய் விலை கொடுத்தோம் …..! சென்னீரும் கண்ணீரும் சேர்வையாய் குருதியாற்றில் குளிர்தோடிய பயணம் அது முடியும் தருவாயில்…..! இதோ கனவின் கடைசித்துளி நிசமாகியதாய் நினைவு. நாங்கள் வென்றோம்…..! பாதியில் பயங்கரக்கனவு போல் பறிபோன கனவின் மீதமாய் தோற்றுப் போனோம்….! பயணம் முடியாமல் தோல்வியாய் பயணவழி வந்தவர்கள் பயணம் முடியாமல் பாழ் சிறைகளிலும் பயங்கர அறைகளிலும்…..! எனினும் எல்லைகளை எட்டும்வரை பயணத்தில் தங்கள் பாதையை தெரிந்த சிலர்…

  18. Started by Paranee,

    பார்வை புணர்ச்சியில் பட்டாம்பூச்சியின் இறகசைப்பாகியது காதல் கைகோர்க்கும் கனவினில் கால் தேய நடந்தோம் வள்ளுவக்குறளாய் ஈரடி பேசி ஈராயிரம் நொடி கடந்தோம் முதுமையின் அயணத்தில் முழுதாய் பருகிட கனவின் இறக்கைகளை இறக்கிவைத்தோம் காலச்சுழற்சியில் நீ மனைவியாயும் நான் கணவனாயும் வெவ்வேறாய் பிரியாது தவிக்கிறது காதல்

    • 0 replies
    • 712 views
  19. சுற்றமும் உற்றமும் ஊர் முற்றமும் முழு நிலவும் கவளச் சோறும் கருவாடும் பனங்கட்டியும் பணியாரமும் மண்சட்டியும் கல்லடுப்பும் தட்டை வடையும் எள்ளுப்பாகும் ஒடியல்கூழும் நண்டுக்கறியும் ஊறுகாயும் மோர்மிளகாயும் ஆலமரமும் பிள்ளையார் கோயிலும் வறுத்த கச்சானும் வில்லுப்பாட்டும் கிட்டிப்புள்ளும் கொக்குப்பட்டமும் மாட்டுவண்டியும் பொச்சுமட்டையும் பஞ்சுமுட்டாயும் இஞ்சித் தேநீரும் பூவரசும் நாதஸ்வரமும் வாழைமரமும் பாலைப்பழமும் வல்லைவெளியும் முல்லை நிலமும் பள்ளிக்கூடமும் பழைய நண்பரும் சித்திரைவெயிலும் செவ்விளநீரும் மாரி மழையும் மண்வாசமும் மதவடியும் உதயன் பேப்பரும் லுமாலா சைக்கிளும் குச்சொழுங்கையும் பேரூந்தும் ப…

  20. வற்றாப்பளை கண்ணகி வழக்குரை காதை வண்டில் பூட்டி வந்து வயல் வெளியிலிருந்து கோவில் முற்றத்தில் பானை வைத்து பாற்பொங்கலிட்டு விடியும் பொழுதுவரை கடல் நீரில் எரியுமுன் விளக்கின் ஒளியில் முகம் பரப்பியிருக்க ஏழு கன்னியரிலொருத்திபோலான என் தோழி இம்முறையும் திரும்பவில்லை குருதியூறி ஓலங்களால் நிரம்பிய இதேபோலொரு வைகாசியில் அவள் காணாமற் போனதும் இவ்வெளியிற்தான் சுடுமணல்போல் இருதயம் தகித்துக் கிடக்க இருண்ட தாழைமரங்களுக்குள் கேட்கும் ஒற்றைக்குரல்…

    • 0 replies
    • 774 views
  21. எனக்குள்ளே புதைந்து போன ஈழம் நீ உன்னை விட உன் நினைவுகளையே அதிகம் நேசிக்கிறேன் ஏன் தெரியுமா உன் நினைவுகள் மட்டும் என்னோடு இருப்பதால்

  22. பக்கத்து வீட்டு பரமசிவன் மாஸ்ரர் மகனை விட மார்க்கு கூட நீ எடுத்தா அடுத்த முறை படம் பார்க்க விடுவேன் பத்தாம் வகுப்பு பாஸ் பண்ணினா பரிசா உனக்கு சைக்கிள் வேண்டி தருவன் பன்னிரண்டாம் வகுப்பு பாஸ் பண்ணி டாக்டருக்கு எடு பட்டா கட்டாயம் காரோடு சீதனம் கேட்டு கலியாணம் பண்ணி வைப்பேன் இது ஒன்றும் நடக்காட்டி ஒரு மாடு வேண்டி மேய்க்க விடுவேன் தானாக சிந்திக்கும் பிள்ளையின் மூளையை வீணாக்கிய கதை போல் அப்பனுக்கும் பிள்ளைக்கும் அப்ப தொடக்கம் நடக்கும் சண்டை இது இப்பவும் இப்படித் தான் யாழ்ப்பாணத்தான் ஆனாலும் ஆயிரம் தான் குறை சொன்னாலும் அடித்து வீழ்த்தி எரித்து புதைத்தாலும் ஏதோ விதை …

  23. Started by Sayani,

    அன்பு பெருக்கும் கனிவு வேண்டும், துன்பம் உதிர்க்கும் உறவு வேண்டும், ஊக்கம் கொடுக்கும் உளம் வேண்டும், ஏக்கம் தணிக்கும் பரிவு வேண்டும், வீழ்வு தடுக்கும் உறுதி வேண்டும், தாழ்வு போக்கும் விரிவு வேண்டும், சஞ்சலம் நீக்கும் தெளிவு வேண்டும், அஞ்சாமன மாக்கும் பக்தி வேண்டும், வேற்றுமை விலக்கும் வலிவு வேண்டும், ஒற்றுமை படைக்கும் புத்தி வேண்டும், வாழ்வு பெருக்கும் சக்தி வேண்டும், ஈழம் அமைக்கும் பலம் வேண்டும்! தமிழ் ஈழம் அமைக்கும் தவம் வேண்டும்!! - சயனி

  24. எனக்கொரு அம்மா இருக்கிறாள். பத்து மாதம் சுமந்து பெற்று பால் ஊட்டி சீராட்டி தாலாட்டி பள்ளிவரை அனுப்பி வைத்தாள் கல்வியோடு ,கண்டிப்பும் பரிவும் பாசமும் ஊட்டியவள் . எது கேடாலும் பெற்று தருவாள் பள்ளிக்கு பணமா? சுற்றுலாவுக்கு அனுமதியா தோழிகளோடு ஊர் சுற்றலா? கடல் கடந்து நான் வெளி நாடு வந்த போதும் என்னுடன் ...வாழும் அம்மா பள்ளிக்கு செல்ல நேரமானால் காலைச்சாபாடு ..ஊட்டி விடும் அம்மா சகோதரிகள் இருவர் ..மணமுடித்து வெளிநாட்டில் கடைக்குட்டி நானும் பல்கலைக்கல்லூரியில் மணமுடித்து நான் மறுவீடு சென்றாலும் மறக்காமல் என்னுடனே வந்து விடு...... வெள்ளைக்காரர் நாட்டில் அன்னையர் தின விழாவாம் எனக்கு தினமும் என் அன்னை தின விழா தான்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.