Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. அம்மா அம்மா எந்தன் ஆருயிரே நீயும் நானும் என்றும் ஓர் உயிராக பத்து மாத பந்தத்தில் இனத்தோடு ஆறாவதாய் ,பெற்ற இந்த உயிர் அரக்கரின் நுழைவால் சிதறியோடி அடைக்கலம் புகுந்த கோவில் உனக்கு எயமனின் பாச கயிறுஎனும் செல் விழும் இடம் என்று அறிந்திலேன் . உன் கடை குட்டியுடன் நீயும் என் குஞ்சுகளுடன் நானும் சிதறியோடிய அந்த நாள் பசி, பட்டினி ,யுடன் நான் இருந்தாலும் ,என் குஞ்சுக்கு மாப்பால் பருக்க கெஞ்சி நான் சுடு நீர் வைத்து பால் கொடுக்க , பிஞ்சு என் முகம் பார்த்து முறைத்து ,அடம் பிடிக்க , அம்மம்மாவின் கோமதியின் பசுப்பாலுக்கு ஏங்க ....நான் பட்ட துய்ர்கொஞ்சமா ? ஓடியும் நடந்தும் . பதுங்கியும் நானும் என் குஞ்சுகளும் ,என் மாமா மாமியும் தள்ளாத அவர் வயதில் தடுமாறி…

  2. Started by kulir,

    நான் வாழ்ந்த மண்னை நினைதத்துப் பார்த்தேன் . சுடும் வெயிலில். நடைசெய்தாலும் மரநிலலின் காற்றின் குளிர்மை. நெடும் துரம் நடை செய்தாலும் அந் கால் பட்டமண்ணின் ஒருசுகம். வியர்வை சிந்த சிந்த . தாகத்தை தேடி போனேன் தரைகளில் இருந்த மரத்தின் கனிகளை உண்டேன். தண்ணீரே தேவை இல்லை . திரும்ப வீடு வந்தேன். சுவையுடன் சமைத்துக்கிடந்த உணவை சுவையாகவே உண்டேன்: மாமரகிளையில் ஊஞ்சல் கட்டி கால் மேல் கால் போட்டு விசுகின்ற காற்றின் ஒளியில் நித்திரை செய்த நாள் அந்தநாள். இன்று என்மண்ணையும் உறவுகளையும் நினைத்து நினைத்து உள்ளம் வருகி உருகிபோகிற மொளுகு திரி போல் என் மனம் உருகிறதம்மா . நான் வாழ்ந்த மண்ணின் வாழ்க்கை . திரும்ப வருமா திரும்ப வருமா

  3. உள்ளிருந்து ஒரு குரல் 'உள்ளிருந்து ஒரு குரல்'நிகழ்ச்சியை கேட்ட இங்கே அழுத்துங்கள் 'உள்ளிருந்து ஒரு குரல்'நிகழ்ச்சியைத் தரவிறக்கிக் கேட்க இங்கே அழுத்துங்கள் (உள்ளிருந்து ஒரு குரல் என்ற கவிதையை நண்பர் ஒருவர் மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார். காலத்தை பிரதிபலிக்கும் இக் கவிதையை ஒலிவடிவில் தருகிறோம். எழுதியவரின் பெயர் குறிப்பிடப்படாமையால் கவிதைக்கு உரியவரின் பெயர் சேர்க்கப்படவில்லை. எழுதியவரின் பெயர் அறிந்தால் அஞ்சலிடுங்கள் சேர்த்துக் கொள்வோம்)

  4. 03.04.2002 அன்று யாழ் இணையத்தின் முன்னைய களத்தில் எழுதிய கவிதை காலத்தின் தேவை கருதி இங்கு இன்று அடக்கியாண்ட சிங்களமே அடங்கிப் போய்விடு பதுங்கியிருந்த புலி இப்ப பாயத் தொடங்கி விட்டது... இருண்டுகிடந்த எம்மண்ணில் வெளிச்சம் வந்துவிட்டது.. மறைத்துவைத்த சூரியனை வெளிக் கொணர்ந்து விட்டோம்.. கருவறைக்குள் வஞ்சம் கொண்டு எம்மை கல்லறைவரை சென்று அழித்தாய்... எம்மினம் கல்லறையென்ன உன்தன் கருவறை புகுந்தே அழித்துவிடும்.. படித்துவிட்டான் தமிழன் உன்தன் நாசகார பாச வேலைகளை... கூலிப்படை கொண்டே எம்மை கொடூரமாக கொண்றாய்.. தன் மூளையை கொண்டே உன்னை இன்று புலி அடிபணிய வைத்துவிட்டது.. தலைவன் பிறந்த மண் இது... இங்கு ஒரு தளிர் வாட விட…

    • 1 reply
    • 749 views
  5. காலச்சிதைவின் துர்க்கனவிலிருந்து உயிர் பெற்றெழுமெனை மறுப்பின்றி இறந்தவன் எனக்கொள்க. ஒளிப்பொட்டில் கரைந்தழியும் இருளின் மறைப்பில் நீளுமெனது நிர்வாணம் காலத்தால் வாழ்ந்தவன் எனக்கொள்க, சாத்தியமேயில்லாத இரண்டாம் உயிர்த்தெழுகை நடுங்குமிந்த இரவுகளில் நிகழ்ந்துவிடக் கூடுமென்ற அச்சத்தில் விழிகளை திறந்து போட்டிருக்கிறேன். கபாலத்தைப் பிளப்பது போலொன்றும் இலகுவாயில்லை காலத்தைப் பிளப்பது. பெயரை அழித்துவிடுதலும் எனைக் கொன்றுவிடுதலும் வேறுவேறாயினும் ஒன்றென்பதுபோல எதுவுமே இலகுவாயில்லை. நேற்று நேற்றாயிருந்தது இன்று ந…

  6. தமிழா தமிழா திருந்திக் கொள்ளடா... உன்னைத் திருத்திக் கொள்ளடா.. அடுத்தவனை அழித்து வாழ்ந்த உன்தன் இரக்கமற்ற பேய்க்குணத்தினை நீயும் மாற்றிக் கொள்ளடா... விடிந்திடும் பொழுதினில் மலர்ந்திடும் ஈழத்தில் நீயம் மனிதனாகடா... உன் இனத்தையே அழிக்கும் உன் குதர்க்க குணத்தினை நீயும் விலக்கிக் கொள்ளடா... உன் முதுகினில் தேக்கிடும் அழுக்கினை நீயும் கழுவிக்; கொள்ளடா.. உலகம் விழித்துக் கொள்ளுமடா... இல்லையேல் இப்பூமி கருகிப் போகுமடா... தமிழா திருந்தப் பார்.....

    • 1 reply
    • 919 views
  7. Started by yaal_ahaththiyan,

    நான் - உறக்கம் நீ - கனவு உன் வரவுக்காகவே விடிய விடியத் தூங்குவேன் * என்னைத் தொலைக்காமல் உன்னைத் தேடினேன் என்பதில் பெருமை எனக்கு என்னை நான் தேடவே நீ கிடைத்தாய் என்பதில் பெருமை உனக்கு * என் சொந்தங்களில் நான்தான் முதல் கவிவாசகன் என்பதில் சிறியகவலை எனக்கு இதுவரை யாருமே உன்னை பார்த்து யார் எழுதியது என்று விசாரித்ததில்லையே * உன் தாயைப்போல் என் நேரமும் உன்னைக் கவனிக்க என்னால் முடியாமல் போனாலும் உன்னைக் காணத நேரங்களில் தாயாக நான் ஏங்கித் தவிப்பதுண்டு * உனக்காக காத்திருந்தால் என் கால்கள் வலிப்பதில்லை என் மனசு ஏறி நிற்பதால் என் தலைதான் வலிக்கும் -யாழ்_அகத்தியன்

  8. கபாலிக்காக மண் சோறுண்ணும் மடையர்களை நினைந்து தமிழன்னை புலம்புகிறாள். புளிய மிலாறு வெட்டி புறமுதுகில் சாத்தியிந்தக் கழிசடைகள் ஓடுதற்கு மக்காள் - நல்ல காரியங்கள் செய்யீரோ மக்காள். குண்டாந்தடியெடுத்துக் குண்டியிலே போட்டு நன்றாய் பென்ட நிமிர்த்த வேணும் மக்காள் - இந்த பேயர் திருந்துதற்கு மக்காள் ஆத்திர மெல்லாம் சேர்த்து அழகான கேட்டி வெட்டி சூ—தில் கொடுத்தாற்தான் மக்காள் – இந்த சோமாறிகள் விழிப்பார் மக்காள் கொட்டன் எடுத்ததிலே குத்தும் சிராய் செதுக்கி விட்டால் முதுகினிலே மக்காள் – இந்த வீணர் திருந்திடுவார் மக்காள் தக்கார் இலாதென்றன் தாழ்வுகளைப் போக்குதற்கு மிக்க மனங்கவன்றேன் மக்காள் – நான் மீள்வதினியெக்காலம் மக்காள்.

    • 1 reply
    • 2.6k views
  9. கட்டோடுவந்த கார்குழலாள் தளிர் நடையில் நெஞ்சம் பட்டோடுகின்றதுவே ! இதை எப்பாடு பட்டும் மட்டோடு வைக்க - மனம் விட்டோடுகின்றதுவே . முக்காலம் உணர்ந்த முனிவனவன் மனதுக்கும் மாறாது இந்தக் குறை. சித்தர் பாட்டுக்கும் முன்னாலே வந்தாச்சு அன்றே மாறாத துன்பக் கதை. தடை தட்டாத முகிலும் மண்ணை எட்டாதே மழையாய் துன்பம் பட்டாகவேண்டும் மனம். காதல் கிட்டாத நிலையில், முட்டாத வரையில், வீணாகும் வாழ்வு தினம். பருவச் சிட்டோடு வாழ கிட்டாதோ அந்த எட்டாத வானவெளி ? இனி .. வற்றாது ஊறும் முற்றாகும் வரையில் திகட்டாத காதல்க் கவி. ----------------------------------------------------- 1997 காலப்பகுதி நடுநிசி ஒன்றில்,சந்தத்தை மட்டுமே…

  10. புதிய பாதைகள் படைப்போம் அழகிய பூமி, அதைத் தொடும் எல்லையற்ற வானம் இவை நடுவே விதம் விதமாய் பல்லுயிர்க் கோலங்கள். அவை நடுவே எமை இணைக்கும் பகுத்தறிவுப் பாலங்கள் இப் பிரபஞ்சத்தின் விந்தைகள் பலகோடி வாழ்வின் சிக்கல்களும் அவற்றிட் சிலகோடி அத்தனையும் அவிழ்க்கும் அறிவு சக்தி - நம்மில் அளப்பரிய ஆற்றலாய் இருந்தும் என்ன பயன்? என்ன செய்கிறோம்? எதைக் கண்டு கொண்டோம்? ஆனந்தமாய் உண்டு களிக்க நாமே பயிர் செய்கிறோம் ஆனால்அங்கு எம் பிணங்களையும் அறுவடை செய்கிறோம் எம்மைத் தாங்கும் மண்ணை நம் குருதியால் நிரப்புகிறோம் உள்ளத்தின் ஆழத்தில் உணர்வுகளாய் உதித்து விந்தைகள் புரிந்த கடவுளர் பெயரால் பல வஞ்சனைகள் புரிகிறோம் பகுத்தறிவு இருந்தும் பூமியைப் பல தேசங…

  11. Started by yaal_ahaththiyan,

    இதுவரை நான் எந்தக் கவிதையையும் சுட்டதில்லை உன் பெயரைத் தவிர * என் கற்பனைகள்தான் அதிகமாய் வாசகர்களுக்கு காட்டிக் கொடுக்கிறது உன்னை நான் கவிதையாய் காதலிப்பதை * உன் சேலை நழுவுவதைப் பார்த்தால் பயமாக இருக்கிறது விழுந்து விடுவேனோ என்று * நீ எனை காதலிக்கிறாய் என்பதை கேக்க காத்திருக்கவில்லை நீ என்னை காதலிக்கவில்லை என்பதையாவது கேக்கத்தான் காத்திருக்கிறேன் * நீ எது கேட்டாலும் சொல்வேன் உன் அழகுகளில் எந்த அழகு பிடிக்கும் என்று கேட்டால் மட்டும் சொல்லமாட்டேன் சொன்னால்... உன் எல்லா அழகுகளின் கோவத்துக்கும் ஆளாகிவிடுவேன் காதல்பித்தன் -யாழ்_அகத்தியன்

  12. யாழ் நூலகம் எரிப்பு ஆயிரம் ஆயிரம் புலவர்களை, எழுத்தாளரை, ஆய்வாளரை பலி கொண்ட இனவெறித் தீ புலமைகளையும், வித்தகங்களையும் ஆய்வுகளையும்கூட... நன்றி: ஓவியர் புகழேந்தி யாழ் நூலகம் எரிக்கப்பட்டது: 1981 மே மாதம் 31ம் திகதி

  13. Started by Nellaiyan,

    ... சுட்டது ...

  14. புலிகள் எதற்குப் பின்னே இன்றையதினம் படித்ததில் கிடைத்தவை இவை புலிகள் எதற்குப் பின்னே நடந்தார்கள்..? இராவணன் தோல்விக்கு விபீஷணன் காட்டிக் கொடுத்தான்.. கட்டபொம்மன் தோல்விக்குக் எட்டப்பன்..காட்டிக் கொடுத்தான்.. பண்டார வன்னியனுக்கு அவன்சாதி காக்கை வன்னியன் குழிபறித்தான்.. சங்கிலினுக்கு இன்னொரு காக்கை என்கிறது கண்டவர் சரித்திரம்.. ஊமைத்துரை என்பதே கேள்விப்பட்ட பெயர்.. சிவன்பூமி இலங்கையின் செறிந்த வரலாற்றில் இன்னொரு பக்கம்..இது.. தமிழ் மன்னன் தேவநம்பிய தீசனின் தந்தை மூத்தசிவன்.. மூத்தசிவன் மைந்தன் தேவநம்பிய தீசன் மகன் கோத்தபாயா கோத்தபாயா மகன் துட்டகைமுனு.. சோரம்போன தமிழ்ச் சாதியின் சொந்தங்கள்.. …

  15. ஆர்கலிவானம் புணர்ச்சி வேட்கையில் தன்னிறம் உழல கார்மேக இதழ்கள் கனைகடலைத் தழுவ கலவிமேவலில் வான் தனைமறந்து மின்னலிசைக்க நறுந்தென்றல் பரவி கலவி வெம்மையகற்ற விண்வெளி இருள்பரப்பி குடைவிரிக்க மோகமிகுதலில் தன்முனைப்பு அறுந்து ஏகாந்த அமைதி நிலவ கனைகடல் அடங்கி விசும்பின் துளிகள் ஏற்க பிரபஞ்சம் எங்கும் புது உயிர்களின் தோற்றம்....... ஆர்கலிவானம் - சத்தத்துடன் முழக்கமிடும் வானம் கனைகடல் - கத்தும் கடல் கலவிமேவலில் - கலவி விருப்பம் விசும்பின் துளிகள் - மழைத்துளிகள்

  16. மன்னித்துக் கொள்ளுங்கள் முத்துக்குமாரர்களே! எண்களில் தொலைந்தது இன முழக்கம்! ஏழுக்கும் ஐந்துக்கும் மூன்றுக்கும் ரெண்டுக்கும் விலை போயின அக்னி மரணங்கள்... உரத்து முழங்கியவன் சிறையிலிடப்பட்டான்! அடக்கி வாசித்தவன் அணியில் சேர்க்கப்பட்டான்! மேடைப்புலிகளின் வீரவாள் உறையிலிடப்பட்டது! தியாக தீபங்களே... உங்களைச் சற்றே மறந்திருந்து தேர்தல் முடிந்ததும் திரும்பிப் பார்ப்போம்! இன உணர்வுக்குக் குறுக்கே எலெக்ஷன் வந்தால் என்ன தான் செய்வது? மறதித் திலகங்களே.. வாருங்கள் ஜனநாயகக் கடமையாற்றுவோம்... இறையாண்மையைக் காப்போம்! போங்கடாங்...! ஆக்கம்: தாமிரா நன்றி:பெயர் தெரியாத தமிழக சஞ்சிகையொன்றிலிருந்து. எனக்குக் கிடைத்தது மின…

  17. இரத்தம் வெவ்வேறு நிறம் அங்கே பிணங்கள் விழுந்து கொண்டிருக்கின்றன நாம் “எத்தனை விக்கெட்டுகள் விழுந்தன?” என்று விசாரித்துக் கொண்டிருக்கிறோம்! அங்கே குண்டுகள் வெடித்துக் கொண்டிருகின்றன நாம் பட்டாசு வெடித்துப் பரவசப்பட்டுக் கொண்டிருக்கிறோம்! அவர்கள் வேட்டையாடப்பட்டுக் கதறிக் கொண்டிருக்கிறார்கள் நாம் வெள்ளித் திரைகளுக்கு முன் விசிலடித்துக் கொண்டிருக்கிறோம்! அவர்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் நாம் “கற்பில் சிறந்தவள் கண்ணகியா? சீதையா?” என்று பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்கிறோம்! அவர்கள் வெளிச்சத்தின் விளைச்சலுக்கு இரத்தம் சொரிந்துக் கொண்டிருக்கிறார்கள் நாம் இருட்டுக்காடுகளுக்கு வேர்வை வார்த்துக…

  18. Started by வர்ணன்,

    காட்டுவழி பயணம்... கஸ்டப்படுறோம்.... கட்டைவண்டிதான்.... துடுப்பும் படகும்...!! சலங்கைகளை ... கழற்றிவிட்டு தூரம் போகலாம்.... யானை மிதித்து .......... இழுத்தவர் இறக்கலாம்... இன்னொருவன் ........... நானே அடுத்து என்று.... தானாய் செத்துபோக ... எம்மவர் தவம் கிடக்கலாம்! புரிகிறோமா? இழப்புகளின் மேடையில்.. "கதை" கச்சேரி ஏற்பாடு....! பாடகனே கிடைக்கவில்லை... இதில் பல்லவி சரணம் தகராறு!

  19. Started by meelsiragu,

    அ ஃ றினை [size=3] படுக்கை விரிப்பு[/size][size=3] சரி செய்யப்பட்டு விட்டன[/size][size=3] மற்ற வாசனை திரவியங்கள்[/size][size=3] எல்லாம் சரியாக பரந்து உள்ளன[/size] [size=3] குளியல்களை இருவரும்[/size][size=3] சரி செய்து விட்டோம்[/size][size=3] பிறகு என்ன[/size][size=3] என்ற பொழுதில்[/size] [size=3] ஒரு அழைப்பு அவளுக்கு[/size][size=3] பொறுமையுடன் நான் பால்கனியில்[/size][size=3] நேரம் ஆக ஆக[/size][size=3] பற்ற வைத்த சிகரெட்[/size] [size=3] அழைப்பை அணைத்து விட்ட[/size][size=3] அவளுக்கு சிகரெட் நெடி[/size][size=3] மூச்சை முற்ற[/size][size=3] ஆஸ்பத்திரிக்கு அவளும்[/size] [size=3] பாருக்கு நானும்[/size][size=3] என்று கழிந்தது[/size]…

  20. தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே! – இங்கு கூவிடும் எங்களின் குரல்மொழி கேட்குதா? குழியினுள் வாழ்பவரே! உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம் – அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம். எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள். ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள். நள்ளிரா வேளையில் நெய்விளக்கேற்றியே நாமும் வணங்குகின்றோம் – உங்கள் கல்லறை மீதிலெம் கைகளை வைத்தொரு சத்தியம் செய்கின்றோம் சாவரும் போதிலும் தணலிடை வேகிலும் சந்ததி தூங்காது – எங்கள் தாயகம் வரும் வரை தாவிடும் புலிகளின் தாகங்கள் தீராது. எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள். ஒருதரம் உங்களின் …

  21. [size=5]விதையாகிப் போன நம் வீரத்தியாகிகளே,[/size] [size=3][/size] [size=3][size=4]தன்னை உருக்கி –இத் தரணிக்கு ஒளி கொடுக்கும் சுடர்போல் தமிழ் தாயவளின் உறவுகள் வாழ விதையாகி போன நம் விடுதலையின் வீரத்தியாகிகளே கார்த்திகை இருபத்தி ஏழு மட்டுமல்ல காலமெல்லாம் உம்மை கைதொழுவோம் நாம்[/size] [size=4]அடக்குமுறை, ஒடுக்குமுறை அதிகரிக்க அதிகரிக்க அமைதிக்கு பெயர் பெற்ற அழகிய நம் தேசம் வனப்பிழந்து வாடுவது தாங்காமல் –புது வலிமையுடன் புறப்பட்ட வாலிப நெஞ்சங்களே, கரத்தில் கனலுடனும் மனத்தில் அனலுடனும் களமாடி பகை வெல்ல புறப்பட்ட தோழர்களே, வெற்றி மேல் வெற்றியாக பல வெற்றிகள் எமக்கீந்து வெஞ்சமரில் உயிரீந்த மாவீரர்களே, வாசனை வீசிடும் வாலிப வயதினிலே வளர்…

  22. Started by theeya,

    கனவுகள் வாழ்க்கையின் எண்ணங்களைத் தொலைத்து தினந்தினம் கனவுகள் காண்கிறோம். சொந்த ஊர் திரும்பும் நினைவுகள் இதயத்தை அழுத்த கனவுகளில் கூட அவைதானே வந்து தொலைக்கின்றன

  23. வாழ்வே உன் அர்த்தம் தேடி அலைகின்றோம் வழிநெடுகிலும் பொழுது போக அழுகின்றோம் எங்கள் காயங்களின் வினோதங்களை வேடிக்கை பார்க்கின்றோம் சாரலும் தூறலும் கூடவே பெருவெள்ளமும் மண்ணில் காய்ந்த குருதியை கழுவிச்செல்கின்றது புதுவெள்ளமாக திசைகளற்றுச் செல்கின்றது பள்ளம் எங்கேயோ அங்கு நகர்கின்றது எங்கள் வாழ்வும் அதன் நியாங்களும் கூடவே கரைந்து செல்கின்றது. வீழ்ந்தவர்களின் தடங்கள் ஊரெங்கும் பரவிக்கிடக்கின்றது உயிர்வலிகளுடன் நிறையக் காட்சிகள் நேற்று கனமாயிருந்தது அந்தப்பிள்ளை இங்குதான் சிதறிக்கிடந்தன் இந்தப் பிள்ளை இங்குதான் குடல் வெளித்தள்ளிக் கிடந்தான் இந்த தெருவில் அந்த முடக்கில் ஊரெங்கும் காடெங்கும் நேற்றுவரை எங்கள் செல்வங்களாக சித…

  24. அன்புக்கு இலக்கணமாய்- என் அகராதியில் இருப்பவனே பதறிப்போன பொழுதெல்லாம் பக்கமிருந்து பகிர்ந்தவனே... நம்பிக்கையிழந்த போதெல்லாம்- எனை நிமிர்ந்து எழ வைத்தவனே- என் நண்பர்களையும் அன்பர்களையும் தன்னவராய் ஏற்பவனே நம்பிக்கையின் முழு வடிவாய் நாள்தோறும் திகழ்பவனே காலத்தின் கடூரத்திலெல்லாம் கண்ணிமையாய் காத்தவனே.. காதலித்த போது மட்டுமன்றி கரம்பிடித்த பின்னாலும் காதலின் சுவையுணர வைப்பவனே.. பெண்ணடிமைத்தனம் எதிர்த்து பேசுகின்ற பெண்ணாயினும் களங்கமற்ற உன் பாதம் கண்ணிலொற்றல் தகுமென்று கண்ணாளா உன்சார்பாய் களமாட முன்வருவேன் எப்போதும் என் இனியவனே எனைப் புரிந்து நடப்பவனே... நீயே என் துணைவன்.. நீ போதும் என் வாழ்வை நித்தமும் பசுமையாக்க...

  25. அன்பும் அறமும் சவப் பெட்டிக்குள் வைத்து அடைக்கப் பட்ட தினம்..! ******************************* மு.வே.யோகேஸ்வரன் ********************************* காடுகள் கண்ணீர்விட்டு அழுத தினம்.. அதுவே தமிழன் செந்நீர் விட்டு மடிந்த தினம்! கூடுகள் பிய்த்தெறியப்பட்டு எமது குஞ்சுகள் ஆதரவின்றிக் கூக்குரல் இட்ட தினம்..! நாடுகள் பல ஒன்றுசேர்ந்து ஒ..நாய்கள்போல் நிம்மினத்தை வஞ்சகத்தால் அழித்த தினம்.. நம்.. பேடுகளின் சிறகுகள் நடுத்தெருவில் பெருச் சாளிகளால் சிதைக்கப் பட்ட தினம்..! முள்ளி வாய்க்கால் என்னும் களப்போரில் மூர்க்கப் புலிகள் வீர காவியம் ஆன தினம்..! கொள்ளிதனைக் கையில் ஏந்தி..வீதி வீதியாய் கொத்திவாய்ப் பிசாசுகள் கொடூரம் புரிந்த தினம்! அன்பும் அறமும…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.