Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. Started by nunavilan,

    மரம்போல்வர் -நோயல் ஜோசப் இருதயராஜ் பகல் வெளிச்சத்தில் பச்சையச் செழிப்பால் துர்காற்றை உணவுப் பண்டங்கள் ஆக்கித் தர்மப் பிரபுத்துவம் செய்தும் உயிர் மூச்சாய்ச் சுழற்றியும் பெயர் நாட்டுவர். இரவில் துர்காற்றைப் பரப்புவர்; துதிமாரியில் சிலிர்ப்படைவர்; விமர்சனத் தகிப்பில் நரம்பு சுருங்கிச் சாயம் திரிந்த இலை சிந்துவர்; அணில்கள், பறவைகள், வழிஞரை மட்டும் இல்லாமல் பச்சோந்திகள், பாம்புகள், பல்லிகள், அட்டைகள் குரங்குகள், மரநாய்கள், சிறுத்தைகளையும் ஒளித்துக் காப்பர். மாடுகள் உரசி முட்டித் தேய்த்துச் சொறிந்து கொள்ளக் காட்டி நிற்பர்; இடி மழைக்குத் தம்மிடம் நம்பி ஒதுக்கியவர் வெந்து கருகி உயிரிழக்க உறுப்பிழக்க விடுவர். விவரமின…

  2. மருதப் பாட்டு வ.ஐ.ச.ஜெயபாலன் கருகும் நீரில் தலைகீழாக மருத மரங்களும் என் நினைவுகளும் நெளிய சிற்றாறு நடக்கிறது. பறக்கிற குறு மணலோடு பார்வையில் தென்படும் இராணுவத் தடங்கள் கண்ணை உறுத்தியபோதும் போர் ஓசைகள் மவுனித்த துணிச்சலில் பாலியாற்றம் கரையில் இருந்தேன். இருந்தும் என்ன நம் வீர விந்துகள் இன்னும் சிறையில் என்பது நெருடும். தென்றலிலோ வரால் மீன்களின் இராப்போசனத்திலோ நாணல்கள் அசைகின்றன. வண்டின் பாடலில் மயங்கி மொட்டுகள் துகில் அவிழ்க்கிற மாலை. அழிக்கப்பட்ட காடுகளும் காடு மண்டிய வயல்களுமானதே நீர்ப் பறவைகளை இழந்த என் மருத வழி. எனினும் நீர் ஓடி நெல்தழைத்து நீர்ப்பறவை வான் நிறைய ஆம்பலின்கீழ் வரால் மறையும் நாளுக்காய் முட்டையாய் காத்திருக்கும…

  3. மருத்துவரின் மனச்சாட்சி...... இளங்கவி - கவிதை குண்டு மழையில் நின்று..... குருதி ஆறு பாயக்கண்டு..... தம் தூக்கம் தனை கலைத்து பல உயிர் காத்தவர்கள்...... இன்று அவர் பின்னால்...... தலையை குறிபார்க்கும் துப்பாக்கி..... நீயும் புலியா?.... எனும் கேள்விக்கணை..... இப்படிச் சொல்லெனும் பயமுறுத்தல்...... இல்லையேல் கொலையின் அச்சுறுத்தல்...... இப்படி அனைத்தும் நிற்க,..... அதிகாரமோ மிரட்டி நிற்க..... அவர் எப்படி உண்மை சொல்வார்...! தம் உறவுகளின் உயிரைகொல்வார்...! இறுதிவரை தமிழுக்காய் சேவைசெய்த அற்புதர்கள்...... இன்று எதிரியின் கைகளிலே சிக்குண்ட நம் காப்பரண்கள்..... இன்னும் பல உயிர்காக்கும் சேவைகொண்ட மருத்துவர்கள்..... …

  4. மழைபோல் வந்த குண்டுகளால் மண்ணோடு மண்ணாக மாண்டுபோன மக்களைத்தான் மறக்க முடியுமா! மானம் தான் வாழ்வில் மகத்தானெதென்று மண்ணுக்காக மாண்டுபோன மாவீரர்களை மறக்க முடியுமா! முள்ளீவாய்க்கலில்,முழுவதும் தொலைத்துவிட்டு வட்டுவாய்க்கால் பாலத்தால் வானரக் கூட்டத்தின் வாய்க்குள் நுழைந்ததை மறக்க முடியுமா! தண்ணீர்த் தாகத்தால் தண்ணீர் கேட்டபோது தண்ணீர் குழாயினால் நீரைப் பீச்சிஅடித்ததை மறக்க முடியுமா! தலையால் வடிந்த தண்ணீரை நாக்கால் நனைத்து தாகம் தீர்த்ததைத்தான் மறக்க முடியுமா! நீர்த் தாகம் தீர்ந்தது அன்று இன்னும் தீரவில்லை நாம்கேட்ட சுதந்திர தாகம்.

  5. மறக்க முடியுமா....??? வடு தந்த வரலாறு மறக்க முடியுமா...?? எங்கள் வாழ்வழித்த பகையதுவை மறக்க முடியுமா....??? கண்ணீரிலே கரைந்த வாழ்வை மறக்க முடியுமா....?? அந்த கனத்த நெஞ்ச சோகமதை இறக்க முடியுமா...?? உடனிருந்த உயிர் உறவு கொடுக்க முடியுமா...?? அந்த ஊன பகை செய்த செயல் மறக்க முடியுமா....??? காலம் கடந்து போனால் என்ன கழிக்க முடியுமா...?? அந்த கயவர் செய்த கோரமதை மறக்க முடியுமா....?? நவற்குழி படு கொலைகள் மறக்க முடியுமா...?? அந்த நாடு புரா செய்த கொலை மறைக்க முடியுமா...?? டாங்கி ஏற்றி செய்த கொலை மறக்க முடியுமா...?? அதில் நசுங்கி செத்த மக்களைதான் மறக்க முடியுமா...?? கற்ப்பழித்து கொலை ச…

    • 3 replies
    • 1.1k views
  6. மறக்க முடியுமா..................? நாற்றிசையும் ஆலயமணி ஒலித்த நாற்புறமும் கடல் சூழ்ந்த ஞானியர் ஐவர் உதித்த நல்லதோர் ஊராம் எம் காவலூர் போத்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் ஆண்ட ஊர் - அதில் அழகிய கடற்கோட்டையையும் கொண்டது எம்மூர் கலை வளர்ந்து தலை சிறந்து தனித்துவமாய் இருந்தது எம்மூர் மாணவிகள் எம்மனதில் இருக்கவில்லை சஞ்சலம் மான் குட்டிகள் போல் துள்ளித்திரிந்தோம் மகிழ்வுடன் எம் மகிழ்வழிக்க வந்த மாற்றான் படை பறித்தது - பல உயிர்களை அழித்தது - உடமைகளை இழந்தோம் - நண்பர்களை பிரிந்தோம் - சொந்தங்களை அகதியானோம் -அந்நிய தேசத்தில் சிறப்பாக விளங்கிய எம்மூர் சீர்கெட்டுப்போனதேனோ சிறகுடைந்த பறவைகளாய் திக்கெட்டும் வாழ்வதேனோ பசுமை…

    • 37 replies
    • 4.6k views
  7. மறக்க முயல்கிறேன் உன்னை மறக்க முயல்கிறேன் முடியவில்லை உன்னை வெறுக்க முயல்கிறேன் முடியவில்லை என்னை அறியாமலே உன்னை நான் விரும்புகிறேன் என்னை அறியாமலே நான் உன்னை காதலிகின்றேன் என் மந்தில் உன்னை கோவிலாக நினைத்து இருந்தேன் என் மனம் சில பொழுதுகளில் அழுகின்ற வேளையில் உள்ளிருக்கும் நீ நனைவாய் என்ற தயக்கம் வேறு அதனால் உள்ளத்தால் பொய் சிரிப்பு சிரிக்க முடியாத போதும் கற்றுக்கொண்டேன் இதற்க்கு மேல் என்னிடம் உனக்காக பொய்யாக்க என்னிடம் எதுவுமில்லையடா இதற்க்குமேல் நான் நானாக இல்லை இனியும் கொடுக்க இருப்பதெல்லாம் ஒன்றே ஒன்று தான்... என் உயிர் தான் அது கூட உனதாகி பலகாலாமே...

    • 7 replies
    • 1.7k views
  8. மறக்கத்தெரியவில்லை ........ உயிரே உயிரே ஏன் மறந்தாய் எனை ? உறவுகள்தான் சொந்தமில்லை நீயும் இல்லையா எனக்கு? உன்னுடன் பேசாவிட்டால் நான் ஊமையடி உன்னை பார்க்காத கண்களும் குருடே எனக்கு ஆலையில் இட்டவை அழியாமல் வந்திடுமோ ? காதலில் விழுந்த மனம் காயமில்லாமல் போய்விடுமோ ? காவியக் காதலது காதலே கேட்டது கண்டதும் காதலது அனுபவித்துப் பார்த்தது என் உயிரது மூச்சினிலே இருக்குமென்றால் மூச்சது உன் பேச்சினிலே இருக்குதடி மௌனம்தான் உன் பதிலா எனக்கு மரணமே அதற்கு பரிசு எனக்கு உன் பேச்சு கூட்டியது என் ஆயுளை இப்போது உன் மௌனம் கொல்கிறது என் ஆயுளை போகின்றாயே எனை விட்டு நெடுந்தூரம் போய்விட்டது என் மனம் அத்தூரம் பிடிவாதம் மறைக்கின்றதா உன் கண்ணை பிடி…

    • 42 replies
    • 6.5k views
  9. மறக்கலாமா நீ தமிழா உனக்கு இங்கிலீசு நன்றாகக் கதைக்கத் தெரிந்ந்து விட்டால் நீ என்ன வெள்ளைக் காரன் ஆகிவிட முடியுமா..??? அல்லது திராவிடர் தோற்றம் தான் உன்னை விட்டுப் போய்விடுமா???? வெள்ளையர் கூட நம்மைக் கண்டு விட்டால் தம் மொழியில் ஹாய் சொல்லி சிரித்து விட்டு செல்கின்றனர் உனக்கு என்ன செருக்கா...??? தமிழனைக் கண்டு விட்டால் எதிரியைக் கண்டது போல் முகத்தை திருப்பி வைத்துப் போகின்றாயே..... தமிழனுடன் தமிழில் கதைக்க உனக்கு என்ன கேவலமா..???? நன்றி கெட்டவர்களே உமக்கு நம் மொழி இழக்காரமாகிவிட்டதா???? வெள்ளையரைத் தாண்டிச் செல்லும் போது கதைக்காமல் போகின்றாய் நீயும் தமிழரைத் தாண்டிச் செல்லும் போது ஆங்கில…

  10. மறக்குமோ நெஞ்சம்? ஈழத் தமிழர் ஏட்டில் இன்னுமோர் வரலாற்றுப் பதிவு! நேருக்கு நேர் நின்று போர் செய்ய முடியா கோழைகளின்! வெறியாட்ட அரங்கேற்றம்! செஞ்சோலை!! செங்குருதியில் குளித்த ஓராண்டு நிறைவு! பிஞ்சுகளை எல்லாம் நஞ்சுகள் நசுக்கிய நாள் இது! ஈழத்தமிழர் நெஞ்சங்களில் பதிந்திட்ட ஆறாதவடு! எங்களின் மலர் முகங்களை மறக்க இயலவில்லை!மனங்களில் கண்ணீரோடு கதறிய கதறல் உலுக்குகிறது ஈழத் தமிழனை! பொறுப்பதில்லை எதற்கும் இனி!. "ஏன்" என்று எந்த அரசும் கேட்கவில்லை! போனது "தமிழ்" உயிர் தானே! "அலட்சியத்தில்" உயர்ந்து நிற்கின்றது எங்கள் வேங்கைகளின் இலட்சியம்! இனி!!....வெல்லும் காலம்! "ஓயும் அகதி எனும் ஓலம்! சிங்களத்தினை செங்களமாடும்…

  11. Started by ilankathir,

    மறதி ஒரு தூக்கமாத்திரை அது எங்கெங்கும் இலவசமாக வழங்கப்படுகிறது அது நமக்கு நடந்தவை எதுவும் நமக்கு நடந்தவை அல்ல என்று நம்ப வைக்கிறது துரோகத்திற்கும் அவமானத்திற்கும் நம்மைப் பழக்கப்படுத்துகிறது நினைவுகள் இனி படிக்கப்பதற்கான கதைகளே என அது நம்பத் தொடங்குகிறது … பிறகு அவை இன்னும் ஒரு முறை எதிர்காலம் என்ற நம்பிக்கையைத் தருகின்றன -மனிஷபுத்திரன் http://www.ilankathir.com/?p=4695

    • 2 replies
    • 1.6k views
  12. மரணம்! ஆண்டுத்திவசத்தோடு மறந்துவிடுகிறோம் விபத்து! காயத்துக்கு கட்டுப்போட்ட கையோடு மறந்துவிடுகிறோம் இழப்பு! நிவாரணம் கிடைத்ததும் மறந்துவிடுகிறோம் தேர்தல்! விரல் மை காயமுன் மறந்துவிடுகிறோம் விடுதலை! அற்ப சொற்ப சலுகைகள் கிடைத்ததும் மறந்துவிடுகிறோம் தியாகம்! நவம்பர் 27 இல் தீபங்கள் அணைத்ததும் மறந்துவிடுகிறோம் ஒற்றுமை! கூட்டம் முடித்து காரில் ஏறியதும் மறந்துவிடுகிறோம் துரோகம்! செய்தவனையே மறந்துவிடுகிறோம் மறதி!!! ஈழத்தமிழனுக்கு கிடைத்த வரமும்... சாபமும்...!!! -தமிழ்ப்பொடியன்-

    • 2 replies
    • 844 views
  13. [size=4] [size=4]ஆஸ்திரேலியா, கேசி தமிழ் மன்றம் நடத்திய ஆடிப்பிறப்பு நிகழ்வு அன்று “மறந்து போகுமோ?” என்ற கவியரங்கத்தில் “பள்ளிப்பருவம்” பற்றிய எனது படைப்பு. இதில் கவித்துவமோ, நான் பகிர்ந்த விதத்தில் ஒரு அரங்க பாணியோ கிடையாது. ஆனால் அனுபவங்களின் நினைவூட்டல் என்ற வகையில் ஓரளவுக்கு திருப்தியை தந்த படைப்பு. வாசித்து விட்டு சொல்லுங்கள்![/size][/size] [size=4] தமிழுக்குள் என்னை ஆட்கொண்ட எழுத்துக்கு வேந்தர் சுஜாதா எங்கள் கம்பவாரிதி ஜெயராஜ் இருவரையும் மனதார பணிந்து வணங்கி! [/size][size=4] கூழுக்குள் நீந்தியது காணும்! கரையேருங்கள்! எனக்கு புரையேறுகிறது! கவிதைக்கு அவ்வப்போது கரவோசையும் வேணும்!. அவைக்கு அடங்கி ஆரம்பிக்கிறேன் வணக்கம். [/size] …

    • 7 replies
    • 1.1k views
  14. வல்ல தமிழீழமென்னும் வலிமைகொண்ட யாழ்மண்ணில் வெல்லவொரு வேங்கை தந்த வேலுப்பிள்ளை யண்ணல் கருச்சுமந்த யன்னையாம் பார்வதி வயிற்றினிலே அருகேகிப் பழமென்று சூரியனை பிடித்தவெங்கள் மாருதியின் பலபொருந்த அவதாரமெடுத்த வொரு சுயபல மிகுத்தவொரு சுந்தரக் கரிகாலன் மருவுபெயர் தாங்கியவன் மாயா வுலகினிலே மண்ணுமொத்துச் சீராட்ட மறத்தமிழன் தமிழ்மணக்க எங்களுயிர் கலந்திருந்து எடுத்தநல் சேனையுடன் வீரத்தின் வித்தகனாய் உலகத்தமிழ் நெஞ்சமதில் மனமுருகி இன்றுனக்கு வாழத்துகின்ற வேளையிலே வாடாத பாமாலை அணிவதற்கு விளைகின்றேன் தமிழீழப் பெருஞ்சுவையாய் வற்றாத கனவோடு எண்ணமதில் பிறந்த மண்ணின் விடிவுக்காய் ஈரெட்டு வயதினிலே எடுத்தவுன் சுதந்திரத்தின் மூச்சாகி உன்னை யுருக்கி வீரர்களை யுருவ…

    • 2 replies
    • 2.3k views
  15. தேசத்து அன்னையவள் துயர் துடைத்திட பெற்றவர் மறந்து நீர் புலிப்படை கண்டீர் பாரினில் பலரும் பயந்து நடுங்கிடும் படை கண்டு பகை வென்று போர் கண்டு நின்றீர் ஊனாகி உயிராகி உதிரத்துள் உணர்வாகி உயிரை நீர் எமக்காகத் தந்தீர் ஊரெங்கும் உறங்காது உணர்வுகள் பொசுக்கி உங்கள் மண் காத்திட ஒன்று திரண்டீர் போர் கண்ட பூமியில் புது நெற்களாய் நீர் பூத்துக் காய்த்துப் பொலிந்து தான் நின்றீர் பாதகர் கண்கள் பட்டதனால் இன்று பகடைக் காய்களாய்ப் போனீரோ வீரரே வேர் கண்டு விழுதாகி விருட்சமாய் ஆனீர் வினை கெட்டு விதி கெட்டு வில்லங்கம் சூழ வீழ்ந்திட முடியா மானிடர் நீங்கள் வீதிகள் எல்லாம் வீழ்ந்துதான் போனீர் …

  16. எம்தமிழ் தேசத்திலே ஏற்றமுடன் நாம் இருந்தோம் செந்தமிழ் தேசத்திலே சேர்ந்து நாம் வாழ்ந்திருந்தோம் அத்தனை உறவுகளும் ஆவலாய்க் காத்திருந்தோம் அண்ணன் பிரபாகரனின் ஆணையில் வாழ்ந்திருந்தோம் விடுதலை விலங்ககலும் வேளைதான் பார்த்திருந்தோம் விதி செய்த வலையினதில் வெந்தே நாம் வீந்துவிட்டோம் அஞ்சி அஞ்சி நாம் அடிமையாய் வாளோமென அன்னை மண்ணின் அடிமை விலங்கொடிக்க வெஞ்சினம் கொண்டே வேங்கைகள் எழுந்தனர் போராட்ட வீரராய் போர்க்கோலம் பூண்டனர் சொத்து சுகங்கள் சொந்தங்கள் இழந்தனர் பருவ வயதின் பற்றெல்லாம் துறந்தனர் அன்னை மண் காத்திட அத்தனை பேரும் ஆயுதங்கள் தாங்கி ஆணைகள் காத்தனர் புன்னகையுடன் அன்று பொருதிடச் சென்றனர் புறநானூறு படைத்தே புனிதராய் நின்றனர் சுதந்திரம் வேண்டி சுவாசத்தைச் …

  17. யாழ் நூலகம் எரிப்பு ஆயிரம் ஆயிரம் புலவர்களை, எழுத்தாளரை, ஆய்வாளரை பலி கொண்ட இனவெறித் தீ புலமைகளையும், வித்தகங்களையும் ஆய்வுகளையும்கூட... நன்றி: ஓவியர் புகழேந்தி யாழ் நூலகம் எரிக்கப்பட்டது: 1981 மே மாதம் 31ம் திகதி

  18. உங்கள் வீட்டுப் பெண்களுக்கு மார்புகள் வெட்டப்படவில்லை உங்கள் பிள்ளைகள் எவரும் தொலைந்து போகவில்லை உங்கள் பிள்ளைகளை எவரும் வல்லுறவு செய்யவில்லை உங்கள் சொத்து சுகங்கள் எதையும் நீங்கள் இழக்கவில்லை பசி பட்டினியால் நீங்கள் எவரும் இறக்கவில்லை இழந்தது எல்லாம் நாங்கள் மட்டுமே ஒரு பொல் பொட்டையோ ஒரு ஹிட்லரையே ஒரு ஸ்டாலினையோ ஒரு முசோலினியையோ அந்த மக்களை மறக்கச் சொல்லுங்கள் நாமும் மறந்து விடுகிறோம். பா.உதயன் ✍️

  19. Started by priyasaki,

    மறந்து விடவா? தலைப்பை தமிழில் மாற்றியுள்ளேன் - மதன்

  20. மறந்து விட்டாயா.........? கண்களால் கைது செய்து காதல் விதை விதைத்தவளே... ஏழேழு ஜென்மமும் உன்னோடுதான் என்றாயே.... இன்பத்திலும் துன்பத்திலும் என்னோடு உறவாடியவளே.... காலம் மாறினாலும் - என்றும் மாறாதது நம் - காதல் என்றாயே......! மொத்தத்தில் நீ இன்றி நான் இல்லை என்றாயே இது அத்தனையும் பொய்யாக்கிவிட்டு - நீ மட்டும் ஏன் என்னை மறந்து பிரிந்து சென்றாய் - இதுதான் உன் முதல் ஜென்ம பந்தமா.........! முகவரி தெரியாத காதலனாய் உன் முகம் காணாத ஏக்கத்தில் - ஊன் இன்றி உறக்கம் இன்றி - உயிரற்ற நிலையில் உருகிப் போய் கிடக்கின்றேன்......! கடைசியாக என்றாவது -என் மரணச் செய்தியை கேட்டால் ஒரு துளி கண்ணீராவது விடு - அதுவே நம் காதலுக்கு -…

    • 8 replies
    • 1.7k views
  21. மறப்போமா மன்னிப்போமா நாம்....? பின் வாங்கினால் இன்று போய் நாளைவா என்ற பெருமையுடைய தேசத்திடம் பின் வாங்கினோம் கலைத்து கலைத்து தொலைத்ததென்ன நியாயம்... மறப்போமா மன்னிப்போமா நாம்....? உண்ணாவிரதமிருந்தால் உயிர் போகும் என்று கருணை காட்டும் தேசம் உயிரோடு கொழுத்தி முடி என உண்ணா நோன்பு இருந்ததை... மறப்போமா மன்னிப்போமா நாம்....? ஒரு ஊர் திரண்டாலே ஊசலாடும் உலகத்திடம் ஊர் ஊராய் ஊர்வலம் நடாத்தி உலகையே உலுக்கியும் எம் உறவுகளை உயிரோடு கொழுத்த சம்மதித்த உலகை... மறப்போமா மன்னிப்போமா நாம்....? மிருகவதை என்றாலே மினக்கட்டு சபை கூட்டி தடுத்திடும் உலகிடம் சதையும் பிணமுமாய் தமிழர் என்ற மனிதர் என்று சடுதியுடன் விபரித்தும் தடுக்காத உல…

  22. இன்னுயிர்தன்னை நெய்யெனச்சொரிந்து இலட்சியத்தீச்சுடர் காத்தவரே-உங்கள் புகழுடல் உறங்கும் பூமியில்-வெற்றி மலர்களைத்தூவிநாம் வணங்கிடுவோம். விதையெனமண்ணில் வீழ்ந்தவரே-உங்கள் விதைகுழிகளில் வேர்பாய்ச்சி வான்வெளி எங்கும் கிளைபரப்பி விழுதெறிந்து வளர்வோம் இனியென்றும் வீழ மாட்டோம் காலக்கிண்ணமதில்-இனியும் கனவுகளையா குடிப்போம் இல்லை...இல்லை... தலைவனின் தடங்களில்-விடுதலை தேரிற்கு வடம் பிடிப்போம். நாமாண்ட மண்ணும் எமையாண்ட தமிழும் இனியொன்றும் மாழாது-எம் உறவுகளைக்கொன்றபகை இனியென்றும் வாழாது. இது....., தமிழ்த்தென்றலின் வீடு புலிப்புயல்கள் உலவும்காடு பகையே....நீ..., …

    • 9 replies
    • 2.9k views
  23. Started by gowrybalan,

    • 17 replies
    • 2.4k views
  24. மறுக்கப்படுதல் நான் அழுவேன் உங்களுக்காக உங்களது துயரங்களை காயங்களை வலிகளை எனது மொழியால் சுமப்பேன் உங்கள் குருதி கண்டு எனக்கு உயிரலையும் எல்லாமே சிவந்த குருதி துயரப்பட்டவர்களின் குருதி கையாலாகதவர்களின் குருதி என்பார்கள் அவர்கள் நீங்கள் என்னை ஒதுக்குவீர்கள் உங்களுக்காய் ஒரு கண்ணீர் விழுவதை விரும்பமாட்டீர்கள் எங்களது பிரார்த்தனைகளை ஏற்றுக்கொள்ள தயங்குவீர்கள் ஏன் எப்படி எதற்கென்ற கேள்வியெழும் உங்களிடம் எப்படியும் இருந்து விட்டுப்போகலாம் உயிரில்லா பிணங்கள் முன் கூச்சலிடுவதை விரும்புகிறவள் நானில்லை உங்களை போல தான் எங்களுக்கும் அழுவதற்கு கூட சுதந்திரம் மறுக்கப்பட்டிருந்தது அந்நாட்களில் இருந்தும் நான் ஒரு உணர்வுள்ள மனுஷி என்பதாலே நான் அழுவேன் உங்களு…

    • 0 replies
    • 655 views
  25. மறுத்ததேன்....? பலமுறை தொலைவில் பார்த்தேன் பார்வைகளால் ரசித்தேன் ஆர்வத்தில் தொடர்ந்தேன் தினம் உன்னையே சிந்தித்தேன் காதலை வளர்த்தேன் ஆதலால் சிலிர்த்தேன் ஆசையோடு இருந்தேன் திசை எங்கும் நடந்தேன் கற்பனையில் மிதந்தேன் பற்பல கவிதைகள் வடித்தேன் வானளவு உயரந்தேன் கானம் பாடி திரிந்தேன் கனவுகளில் உன்னோடு பறந்தேன் நினைவுகளை எனக்குள் சுமந்தேன் ஊன் சுவைதனை மறந்தேன் உறக்கத்தையும் துறந்தேன் உன் உருவை வரைந்தேன் கண்களுக்குள் காத்தேன் வெட்கத்தில் சிவந்தேன் துக்கத்திலும் சிரித்தேன் இன்றுனை சந்தித்தேன் தெத்திப்பல் தெரிய சிரித்தேன் காதல்மனசை திறந்தேன் அன்பே நீ மறுத்ததேன் என்னையும் வெறுத்ததேன்..?

    • 25 replies
    • 3.5k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.