கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
வாழ்வு சூறையாடப்பட்ட தேசத்தில் இருந்து வந்த சுடலைக் குருவி எனக்கு கதை சொல்லிற்று தம் நிலங்களில் ஊழித்தாண்டவம் முடிந்து மூன்று ஆண்டுகள் ஆயினவாம் மேய்ப்பனும் அவனது ஆடுகளும் அறுக்கப்பட்ட நிலத்தில் அறுக்கப்படா உயிர்களின் கேவல்கள் இன்னும் அடங்கவில்லையாம் பின்னிரவில் கதவுகள் தோறும் கடக்கும் இராணுவ சிப்பாயின் சப்பாத்துகளில் ஒவ்வொரு முறையும் மரணம் வந்து குந்தி இருந்து கணக்கெடுத்து போகுமாம் ஊரெல்லாம் அடங்கிய பின் உடைக்கப்பட்ட கல்லறைகளிலிருந்து உழுதப்பட்ட உடலங்களின் பெருமூச்சு பெரும் காற்றாய் வீசுமாம் தம் ஆத்துமா இளைப்பாற ஒரு சிறு விளக்குத்தானும் இல்லையென அழுது அரற்றுமாம் மம்மல் அப்பிய பொழுதொன்றில் மாட்டு வண…
-
- 23 replies
- 4.6k views
-
-
மூன்று கற்கள் கனவில் கிடைத்த மூன்று கற்களில் முதல் கல்லை வீசினேன் சூரியனை நினைத்தபடி பார்வையால் பொசுக்கும் வேகத்துடன் பட்டென்று ரதமிறங்கி வந்து நின்றான் இழுத்து வந்த குதிரைகள் இரைத்த படி மூச்சுவாங்கின வெளிச்சச் சில்லுகள் பதித்த தேகத்தில் வேர்வை வழிந்தது தாகத்துக்கு அருந்த இளநீரை நீட்டினேன் ஆசுவாசமுற்ற ஆனந்தத்தில் வெற்ற்லை பாக்கு போட்டபடி வேடிக்கைக்க கதைகள் பேசிவிட்டுச் சென்றான் காற்றை நினைத்தபடி இரண்டாம் கல்லை வீசினேன் விண்ணுக்கும் மண்ணுக்குமிடையே விஸ்வரூபத்துடன் வந்தான் வாயுதேவன் முகம்பார்க்க முடியவில்லையே என்றதும் உடல்சுருக்கி எதிரில் சிரித்தான் இளநீரை விரும்பிப் பருகிய பின்னர் ஏராளமான கதைகள் சொன்னான் ஒவ்வொரு மூச்சும்…
-
- 2 replies
- 1.1k views
-
-
மூன்று கவிதைகள் இங்கு மூன்று கவிதைகள் பற்றிய தொகுப்பினை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். உங்களின் கருத்துக்களினை முன்வையுங்கள். சங்ககாலத்தில் கடையேழு வள்ளல்களில் ஒருவனாகிய பாரி வஞ்சனையால் இறந்தபின்னர் பாரிமகளிரின் நிலைகண்டு எழுதப்பட்ட ஐந்து வரிகளில் அமைந்த கண்ணீர்க் காவியத்தின் தொடர்ச்சி இன்றுவரை நீண்டுகொண்டிக்கின்றது. "அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில் எந்தையுமுடையேம் எம் குன்றும் பிறர்கொளார் இற்றைத் திங்கள் இவ்வெண்ணிலவில் வென்றெறி முரசின் வேந்தர் எம் குன்றுங் கொண்டார் யாம் என்தையுமிலரே" (கலித்தொகை - முல்லை - 13) நீண்ட நெடிய தமிழ்க் கவிதைப் பாரம்பரியத்தின் தொடர்ச்சியாக வரும் இன்றைய கவிதைகளிலும் சங்க காலத்தின் சாயலைக் க…
-
- 0 replies
- 886 views
-
-
உன் விழியில் இருக்க அனுமதி கொடு ... இல்லையேல் விழிமடலில் அனுமதி கொடு .. நீ கண் சிமிட்டும்போதாவது இணைவோம் ...!!! நீ நடந்து வரும் போது தான் ... காற்று பெருமை அடைகிறது ... உன் கருங்கூந்தல் அசைவதால் ...!!!
-
- 7 replies
- 2.4k views
-
-
நாள்.. நட்சத்திரம் சொல்லி ஒரு கல்யாணம் அடுத்து வந்த ஆண் பெண் உடல் கலவி கூட அடுத்தவன் சொல்லி வைத்த சுப முகூர்த்தத்தில்.. தென்னிந்திய சினிமா பார்த்து வளைகாப்பு அது கூட சுப நேரத்தில்..! "இது அதிஸ்டக் குழந்தை" ஊராரின் வாழ்த்தொலிகளோ கரு முதல் தொட்டில் வரை..! முதல் பிறந்த தினம் வெகு கொண்டாட்டம்.. குடும்பக் "குண்டுமணிக்கு" குதூகலத் திருவிழா..! பட்டென்ன பள பளக்கும் நகையென்ன..! அழகு கொஞ்சும் என் மேனி முத்தமிடா இதழ்களில்லை பதியாத கரங்களில்லை ஜொலிக்கும் நட்சத்திரமாய் அன்று நான்..! அடுத்து வந்த ஆண்டுகளும் அளவில்லா மகிழ்ச்சி தான். பள்ளிப் பருவத்தில் சுட்டிக் குழந்தை புளுகாத ஆசிரியர் இல்லை புகழாத ஊரார் இல்லை.…
-
- 24 replies
- 1.9k views
-
-
ஓய்வு நாள் ஒன்றின் மாலை நேரம் சோகச் சுமைகளால் மனதில் பாரம் இரு மருங்கும் மரங்கள் நிறைந்த வீதி ஓரம் என் கால்கள் நடந்தன வெகு தூரம். 'ஏ... கால்களே, நாம் போகும் இடம் எதோ?' வேதனையான மனம் கால்களைக் கேட்டது. 'ஏதுமறியா என்னை மூளை தான் ஏவியது' வேலையாள் கால்கள் சொன்ன பதிலிது. எண்ணிவிட்ட கருமத்தில் மூளை முழு மூச்சாக, புண்பட்ட மனமோ வேதனையில் சோர்வாக, நீண்ட தூர பயணத்தால் கால்களும் தடுமாற விண்ணுயர்ந்த மலைச்சாரலை அடைந்தது என் பயணம். நுரை ததும்ப சலசலத்துப் பாயும் மலையருவி, இலையுதிர்த்து பூக்களை மட்டும் தாங்கி நிற்கும் மரங்கள், இவற்றிடையே மனதை வருடும் சிரு குருவிகளின் இனிய கானம் இயற்கையின் இவ்வெழிலில் தனை மறந்தது எந்தன் மனம்! 'என் சோகத்தை மறக்க…
-
- 2 replies
- 1.1k views
-
-
https://fb.watch/sMOjOYe7Et/?mibextid=0NULKw&fs=e&s=TIeQ9V கேட்டுப் பாருங்கள்
-
-
- 1 reply
- 629 views
- 1 follower
-
-
மெய்ப்படும்…………. உங்கள் உயிரீந்தீர் எங்கள் வாழ்வுக்காய் உங்கள் உயிரீந்தீர் எங்கள் இருப்புக்காய் உங்கள் உயிரீந்தீர் நிலத்தின் மீள்வுக்காய் உங்கள் உயிரீந்தீர் தமிழினத்தின் மலர்வுக்காய் உங்கள் உயிரீந்தீர் தமிழ்த் தேசியத்திற்காய் உங்கள் ஈகத்தினாலே உலகெங்கும் இருந்து - நாம் உணர்த்தெழும் நாளிலே உங்கள் கனவும் எங்கள் கனவும் மெய்ப்படும் மாவீரரே! மெய்ப்படும் மாவீரரே! (நன்றி : குமாரசாமியவர்களே)
-
- 0 replies
- 619 views
-
-
அகரத்தில் தொடங்கி ஆயுத எழுத்தானது என் இனம் . சிகரத்தை தொட்டே சிங்க பரம்பரையை சிதறச்செய்தது ஒருகாலம் . மெல்லினமாய் நின்ற என் இனத்தை வல்லினமாக்கினான் ஒருவன் . பல்லினம் கொண்ட நாட்டில் ஏன் ஓரினத்திற்கு மட்டும் நாடு வேண்டும் ??? என்று கச்சைகட்டின பலதேசங்கள் . மலினப்பட்ட மானிடக்கொலை மலிவாகவே மலிந்தது என்தேசத்தில் . நீதியும் நியாயமும் இறுக மூடின தம் கண்களை . சிங்கத்திற்கு நேரடியாக வேட்டையாடும் பழக்கம் இல்லை . மறைந்திருந்தே சூது செய்து இரை கௌவ்வும் . வல்லினமாய் நின்று மெல்லினமான என் இனம் மீண்டும் வல்லினமாக , சொல்லும் செயலும் நேர் கோட்டில் வந்தாலே வல்லினமாகும் . இல்லையேல்!!!!!!!!!!!!!!!!!
-
- 12 replies
- 967 views
-
-
உன்னை விட்டு - நான் ஒரு கணமும் விலகவில்லை விலக நினைத்தாலும் -அது என்னால் முடியவில்லை என் முன்னும் பின்னும் என்னைத் தொடர்கிறாய்- ஆனால் மௌனமாக இருக்கிறாய் - மௌனமாகவே துரத்துகிறாய் என்னுடன் பேசாமல் மௌனமாக இருந்ததேன் ?? என் முன்னும் பின்னும் என்னைத் தொடர்ந்ததேன் ?? என்னை விடாமல் துரத்தியதேன் ?? ஏன் ?? ஏன் ?? ஏனெனில் நீதான் எந்தன் நிழல் நான் உந்தன் நிஜம் !!!
-
- 31 replies
- 4.5k views
-
-
மே 1 தொழிலாளர் தினம் உழைப்பவன் காவும் இந்த உலகத்தில் இல்லாமை என்றோர் காலம் இல்லாது இருக்க வேண்டும் எங்குமே சமத்துவமாய் வாழ்வு வேண்டும் எப்போதும் சுரண்டல் ஒழிய வேண்டும் உழைப்பவனுக்கே உலகமதாக வேண்டும் எல்லோர்க்கும் இவ்வுலகில் உணவு வேண்டும் ஒரு போதும் யுத்தம் இல்லா உலகு வேண்டும் இனி எப்பவுவே தர்மமாய் நீதி கொண்டு உலகு சுழல வேண்டும் எங்குமே குழந்தைகளின் பாடல் அது இசைக்க வேண்டும் எப்போதும் ஒரு பூ பூப்பதோடு உலகமது விடிய வேண்டும். பா. உதயன் சக்தி படைத்த முதலாளித்துவவாதிகள் உழைக்கும் ஏழை மக்களின் உழைப்பை சுரண்டுகின்றான். Dominant capitalists group within society exploit the proletariat social group. …
-
- 6 replies
- 483 views
-
-
கவனம் தமிழா! கவனம்! வைகாசித்திங்கள்( ஆங்.) 18ம் நாள். முள்ளிவாய்க்கால் படுகொலை என்று அறியப்பட்டதினம் இது! அறிந்தும் அறியாததுபோல் - தெரிந்தும் தெரியாததுபோல் உலகமே கண்ணைமூடிக் கொண்டிருக்க, இந்தியக்கோட்டான்களும் சிங்களக்குரங்குகளும் சேர்ந்து ஆயிரக்கணக்கான அப்பாவித்தமிழர்களை உயிரோடு புதைத்ததினம் இது!! தமிழுறவுகளைத்தொலைத்தமையை எண்ணி, முழுத்தமிழினமுமே கலங்கிநிற்கும் நாள் இது! மனிதத்தைத்தொலைத்தமைக்காக முழு உலகமுமே வெட்கித்தலைகுனியவேண்டிய நாள் இது! தமிழனாகப்பிறந்த ஒவ்வொருவனும் தலையிலடித்துக்கதறியழ வேண்டிய நாள் இது!! அழுவதோடு நிறுத்திக்கொள்ளாமல் ,அன்னைதமிழ் துயர்போக்கும் அடுத்தகட்ட நகர்வுக்காக வீறுகொண்டெழவேண்டியநாள் இது !!! …
-
- 1 reply
- 974 views
-
-
நண்டலையும் கடற்கரையில் அன்று நாம் நின்று கதறியதை வேவு வண்டு விமானம் படமெடுக்க கண்ட பின்னும் சிங்கள தேசம் குண்டுகள் ஏவியெம்மைக் குதறியது. உலக நாடுகளின் தாராள மனசு அள்ளிக் கொடுத்த ஆயுதத்தை முள்ளிவாய்க்கால் நிலம் மீது சொல்லியழித்தார் தமிழினத்தை சிங்களதேசக் கொலைஞர்கள். சிதறிய சதைத்துண்டுகளுள் சிக்கிக் கிடந்த அடையாள அட்டை அது அப்பாவை அடையாளம் காட்டியது. ஐயோவென்று கதறிய அம்மா கையிலிருந்த அடையாள அட்டையோடு – அவள் கையும் பறந்தது. அருகிருந்த தங்கையோ அனுங்கியனுங்கிக் குனிந்து கொண்டே அவள் கிழிந்த வயிற்றுக்குள் குடலை அனுப்பினாள். நான்கு நிமிடத் துளிகள் கடந்து நான் கண்டேன் பேரவலம் அம்மாவும் தங்கையும் சதைத்துண்டங்களாய் ந…
-
- 0 replies
- 579 views
-
-
மே 18 முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு நாள் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை முடிந்;து ஆண்டுகள் நான்காச்சு எந்தக் கொலையும் நடக்கவில்லை- என்ற சிங்கள அரசின் கதை தொடராச்சு எந்தக் கொலையும் செய்யவில்லை யெனில் எப்படி அவைகள் படமாச்சு மாவீரர் தூபிகளை மண்ணாக்கி மக்களை எப்படி அங்கே சிறைபிடித்தார் ஊருக்கு உபதேசம் செய்பவர்கள் உண்மை நிலையை உணராரா சோற்றுக்குள்ளே பூசணிக்காயை மறைத்தவர் கதையும் இதுதானா பாலியல் கொடுமையால் பல பெண்கள் படுகொலைசெய்ததோ அதிக ஆண்கள் கொன்று குவித்த இளசுகளோ பெருங்கும்பல் குவியியல்குவியலாப் புதைத்ததோ எண்ணிலடங்கா குழவி குழந்தை மடந்தை மாணவி இளைஞன் இளைஞி கிழவன் கிழவி - என பாலகர் உட்பட படும்கிழம்வரை கொன்றே குவித்து கொடூரம் செய்தார் எந்நாளும் எம…
-
- 0 replies
- 1.6k views
-
-
மே 18!!! குற்றுயிராய் ஒரு உயிர் குடல் கிழிந்து ஒரு உயிர் பாதி எரிந்தபடி ஒரு உயிர் உருக்குலைந்து ஒரு உயிர் அழுகுரலோடு ஒரு உயிர் அனாதையாய் ஒரு உயிர் நஞ்சுண்டபடி ஒரு உயிர் கடந்து ஓடினோம் உணர்வும் செத்து உயிரும் செத்து முள்ளிவாய்க்கால் வரை!!! எல்லாம் தின்று ஏப்பம் விட்டு நந்திக்கடலில் கறை படிந்த கை கழுவி ஒன்றுமில்லை என்றான் புத்தன்!! மே மாதம் நினைவழியா மாதம் இன்றும் பிண்வாடையும் கந்தகவாசமும் நாசில் அரிக்கும் மாதம்... சூட்சிகள் செய்து மனட்சாட்சிகள் இல்லா கொலைக்களம் சாட்சிகள் ஆனவர் நாக்குகள் அறுத்து ஊமைகள் ஆன சோகம் செங்குரிதி ஓடி வெந்தணல் ஆன எம்மவர் நினைவுகள் அழியா மாதம் இது ஊழிக்கூத்து நிகழ்ந்த மாதம்! அடி மனதோடு…
-
- 3 replies
- 838 views
-
-
மே 18....!!! எங்கள் தேசம் எரிந்து போனது.. எங்கள் உறவுகள் கருகிப்போனார்கள்.. எங்கள் கனவுகள் கலைந்து போயின... எங்கும் சாவீட்டு சத்தமே காதில் விழுந்தது. எத்தனை நாட்கள் வலி சுமந்தோம்! எத்தனை நாட்கள் உயிர் கருகினோம்! எத்தனை நாட்கள் பசியில் துடித்தோம்! எத்தனை நாட்கள் கதறி அழுதோம்! துண்டுதுண்டாய் சிதறிப்போனது சின்னப்பிஞ்சு கண்முன்னே பிள்ளையின் உயிர் பிரிய கட்டியணைக்க கையில்லா அம்மா குண்டு துளைத்து குடல் கிழிந்து தொங்கி குற்றுயிராய் குழறி அழுதாலும் கண்கள் பிதுங்கி விழுந்து மரண ஓலம் எழுப்பினாலும் நின்று துயர் தீர்க்க நேரம் இன்றி உயிரை மட்டும் கையில் கொண்டு ஓடினோமே!!! முலையில் பால் வற்றி குருதி வடியும் அதையும் பசியால் பிஞ்சு குடிக்க வலியால்…
-
- 2 replies
- 948 views
-
-
மே 18க்கு……! அழைத்தாலா வருவாய்? யார் யாரை அழைப்பது? அழைத்தாலா வருவாய் யார் யாரை அழைப்பது அறியத் தருவாயா ஊரூராய் பிணக்காடாய் உன் உறவும் பிணமாக போனதந்த நாளினிலே எதுவும் கேட்காதே புறப்பட்டு வாவென்று சொல்ல வேண்டுமெனில் வினாவொன்று இருக்கிறது நீ தமிழனா! வெற்றியிலே பங்கேற்று வீரமுடன் வீறுகொண்டாய் வீழ்ச்சியிலே யாரென்று விலகி நிற்பதென்ன காலத்தின் நகர்வுகளோ காட்சிகளாய் விரிகிறது அன்னை மண்ணிருந்து அழகாய் வளர்ந்தவனே உன்னை உருவாக்கி உலகில் வாழவைத்த அன்னை மண்பட்ட அவலம் உரைப்பதற்கு அழைப்பு உனக்கெதற்கு அழைப்பு வேண்டுமெனில் வினாவொன்று இருக்கிறது நீ தமிழனா! நீ தமிழனா இல்லை மனிதனா மனிதம…
-
- 4 replies
- 1.3k views
-
-
என் உழைப்பை உறிஞ்சும் வரிப் பணத்தில் கொடிக்கம்பம் நட்டு கொடி ஏற்றும் தினமே மே தினம்..! பஞ்சமும் பட்டினியும் வேலை இன்மையும் கூலி இன்மையும் இன்றும் தொடர்கதை தான் ஆண்டுகள் தோறும் ஒப்புக்குத் தோன்றும் மே தினம் போல்..! ஊழலும் ஏய்ப்பும் நிறைந்த உலகில் இன்னொரு புரட்சி புதிய அடக்குமுறை தாண்டி வெடிக்கும் வரை வராமல் போ கொடுமைகள் மறைக்கும்.. மே தினமே..!
-
- 2 replies
- 507 views
-
-
மேதினியில் உயிர்களது மேன்மை பற்றிப் பேசுகின்ற மேற்பூச்சுப் பூசிய மேலான நாடெல்லாம், காதிருந்தும் செவிடனாக கண்முன்னே இனஅழிவை வாய்மூடிப் பார்த்திருந்த வரலாற்றுத் துயரநாள். பூர்வீக நிலம்தனிலே பூச்சரம் போல்வாழ்ந்த மக்கள் தார்மீக நெறிகளற்று தரக்குறைவாய் அழித்தநாள். கோணிகளை அவிழ்த்துக் குப்பைகளைக்கொட்டுதல்போல் வானிருந்தும் நிலமிருந்தும் வளம் கொழிக்கும்கடலிருந்தும் குண்டுகளைக் கொட்டிக் கொலை புரிந்த கரிநாள் குஞ்சென்றும் கிழவியென்றும் கொஞ்சுமிள நங்கையென்றும் இஞ்சித்தும் இரக்கமின்றி வஞ்சம் கொண்டு அழித்தநாள் மே பதினெட்டு மேதினியில்…
-
- 0 replies
- 582 views
-
-
மே மே மே... என்ன சத்தம் அங்க.. போதும் போதும் முயலு கதை.. கேளுங்க என் சோகக் கதை..! எனக்கு மொத்தம் நாலு காலு.. மகிந்த சொன்னா மூனு காலு நானு சொன்னே நா நா நா.. அடிச்சுப்புட்டா ஆட்லறி ஆக்கிப்புட்டா மூனு காலா..! மனிசப்பயலா மகிந்த நீ.. ஆட்டுக்குட்டிக்கு அடைக்கலந் தந்தா புத்தனு.. வெள்ளை வேட்டிக் கள்ளனு நீயோ சொல்லுறா புத்தன் வழின்னு புத்தி கெட்டு..! பாரு மகிந்த பாரு காலு கூட இல்ல நானு நிக்கிற மண்ணில..! இது புலி பிறந்த மண்ணு.. சோரத்தான் முடியுமா சோகம் தான் கூடுமா எழுந்து நிக்கிற பாரு.. படையெடுத்து வரும் சிங்கத்துக்கும் வைப்ப ஒரு நாள் ஆப்பு..! மனிசப் பயலா மகிந்த நீ..! போடாத கூத்து ஆடாதே ஆட்டம்.. வைப்ப …
-
- 21 replies
- 3.2k views
-
-
எனக்கொரு முகவரி தேடிஇரவினைப் புரவிகளாக்கிசாட்டையில் புறத்தினை தோய்துதனிமையில் சொர்ப்பணம் கொண்டாள் இருதயம் துடித்திடும் போதுஎன் கணம் நீண்டிடும்போதுவிடத்துடன் நாகத்தை தேடிவிடை கொடு உடலிம் உயிரேசருகினில் பற்றிய தீயேகொடியிடம் செந்நிறம் கொண்டாய்புலவியில் பிதற்றளும் முறையேபுன்னகை கொண்றிடும் மனமேதிதியது நெரிங்கிடும் நேரம்கனிகளும் விதைகளாய் விழுமேகாந்தளின் தொடுகையில் விழவேமேகமும் கரையுது நிலவேகுறையது நிறையதைக் கொள்ளும்குற்றமும் தண்டனை தூக்கும்இரு நிலை இயங்கியல் உலகில்இடைவெளி சேர்தலின் காளமேஇறந்திடாத் தூடித்திடு மனமே
-
- 0 replies
- 751 views
-
-
மேஜர் சிட்டு 16ம் ஆண்டு நினைவோடு நாங்கள் காற்றாய் வருகிறாய் தேசக்கனலாய் திரிகிறாய்…! காற்றலையின் இளையெங்கும் கவிதையாய் வாழ்கிறாய்…! ஊற்றாய் இசையின் மூச்சாய் உலகெங்கும் உலவித் திரிகிறாய்….! எங்கள் காதுகளில் உன் கானம் தீமூட்டி எழுவிக்கும் தீர்க்கமாய் ஒலிக்கிறாய்…..! ‘மேஜர் சிட்டுவாய்’ தமிழ் வாழும் உலகெங்கும் தமிழிசை வாழும் திசையெங்கும் தமிழர் வாழும் வரை வாழ்வாய்…..! அரும்பு மீசைக்கனவறுத்து ஆழ்மனக் காதல் நினைவறுத்து ஈழக்காதல் இதயத்தில் சுமந்து இலட்சியக்கனவோடு போன புலியே….! வருவாயொரு பொழுது மீண்டும் பாடியும் பகிடிகள் விட்டும் பல கதைகள் பேசியும் கரைந்த பொழுதொன்றை எதிர்பார்த்து….! இன்றுன் நினைவுகள் கரையும் 16ம் ஆண்டு மீள…
-
- 11 replies
- 890 views
-
-
முதுபெருந் தலைவர்கள் முன்னைநாள் முதல்வர்கள் வெட்டிப் பேச்சளக்கும் அரசியல் கனவான்கள் கோணங்கிகள் கோமளிகள் என்று வேற்று நாட்டவனிடமே சாட்டையடி வாங்கிய பழுத்த அரசியல் மேதைகள் களங் காணும் தருணம் இது... "பாதணிகள் கழிவு விலை *கொசு வலைகள் மலிவு விலை" விளம்பரங்கள் தூள் கிளப்பும் பிரசாரப் புறநகர்கள். கிட்ட நின்று பேசினால் எச்சிலால் உமிழலாம் என்ற பயத்தினால் பந்தல் வைத்து பக்கத்தில் வர மறுக்கும் பெருந்தலைமைக் கூட்டங்கள்.... மேடையேறும் நாடகங்கள் மீண்டும் தெருக்கள் தோறும். செருப்பால் எறிவார்கள் என்ற பயத்தினால் *கொசு வலையின் பின்புறத்தில் கூச்சலிடும் தலைமைகளே பதில் சொல்வீர் "நாளை பாதணிகள் போட்டுவந்தால் பாயுமா? உங்கள…
-
- 0 replies
- 798 views
-
-
மேய்ப்பனின் ஆடுகள் கொல்லப்படுகின்றன மேய்பனை தேடி வல்லூறுகள் அலைகின்றன மேய்பனுக்காக ஆடுகள் கொல்லப் படுகின்றன ஆடுகள் கன்றுக் குட்டிகள் பாலருந்துகையில் கொல்லப் பட்டன கன்றுக் குட்டிகள் துள்ளி விளையாடுகையில் கால்கள் துண்டிக்கப் பட்டு தெருவில் அலைந்தன மேய்பனி்ன் நிழலில் பதுங்க முற்பட்ட ஆடுகள் அறுக்கப் பட்டு கடைகளில் விற்கப் பட்டன தாய் ஆடு சாக மிச்சம் இருந்த குழந்தை குட்டிகளும் வாயில் பாலின் சுவடுகள் படிய விற்கப் பட்டன மேப்பனின் கூடாரத்திற்குள்ளும் ஆடுகள் ஒதுங்க முடியவில்லை வாங்குவோர் கூட்டம் அலை மோதின சட்டி எரிக்க ஒரு துளி நெருப்பற்றவர்களும் தம் இளம் சந்ததியின் உடல்களை தின்றும் பசி தீராது புத்தனின் …
-
- 7 replies
- 2k views
-
-
வென்றால் சிரி.............. வெள்ளம் கால் நனைத்தால்..... சிரி............ முழங்கால்மேலது உயர்ந்தால்........... முற்றும்போனதென்று புலம்பு...! ஒண்டும் காணம் ... ஒண்டும்காணமென்றே அழு.,... ஏதும் நடந்தால்...... இடுப்பை குலுக்கி குலுக்கி........ என்னமோ பண்ணு...... நான் என்ன சொல்ல.......... சிலவிடத்தில்........ சத்தம் போட்டு அழுவதை விட... மெளனமாய் சிரிப்பது மேலாம்!
-
- 1 reply
- 823 views
-