Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. முன்னபோனா முட்டுது பின்னவந்தா உதைக்குது மிஸ்டுகால் பார்த்து ரிங்குனா அப்பா இருக்கார் அப்புறம் பண்ணு சாயங்காலம் பாக்கலாமா சாரி அம்மாவோடு கோயிலுக்கு போறேன் நேத்து ஏன் பார்க்க வரலை நேரமில்லையா? நெனைவு இல்லையா? சிகரெட்டு புடிப்பியா தண்ணி அடிப்பியா செருப்பால அடிப்பேன் தறுதலை ப்ளூகலர் ட்ரெஸ் நல்லாருக்கா? ஏய் அந்த ப்ளாக் சுரிதாரை சைட் அடிக்காதே! புது ரிசப்ஷனிஸ்ட் என்னைவிட அழகா? கண்ணை நோண்டிடுவேன் முண்டக்கண்ணா சம்பளம் வந்திடுச்சா மாயாஜால் போலாமா எம்ஜிஎம் போலாமா எனக்கு சத்யம் கூட ஓக்கேதான் மாப்பிள்ளை பார்த்திருக்காங்க செம ஸ்மார்ட் டேக் ஹோம் 80கே எனக்கு டபுள் ஓகே ம்ம்ம்ம்.... …

  2. மீண்டும் மீண்டும்........ இன்னுமா....உறக்கம்? இடியேறு உன்னில் விழ.. ஈழத்தில் உன்னினம் அழிப்பு. இங்கு நீ இன்னும்..... இதமாய் உறங்கு! ஊருக்கொரு சங்கமென்று கூறுபோட்டதுதான் மிச்சம் ஊர்ச்சனத்தின் வாழ்வு உனக்கெதற்குப் போய் உறங்கு! நிலம்விட்டு வந்த உந்தன் புலன்போற திக்கைப் பார்த்து புல்லரிப்புப் பொங்குது! பூரிப்பாக் கிடக்குது! புளுகுக்குச் சொல்லவில்லை பக்குவமா உறங்கு! எல்லாம் முடிந்த பின்னால் எங்கே?....... ஏது பிழை? ஆயிரமாய்க்கூடி அங்கலாய்க்க வேண்டுமே.. அதற்காக உறங்கு! கறுப்புப் படிந்துவிடக் கதவோரம் நிற்கிறது களையாகக் கைகூப்பி வரவேற்க நிற்கவேணும் இப்போது கண்ணுறங்கு! பிடறியில கொண்டு வந்து வெடிகுண்டைப் போட்டாலும் புண்ணாக்குத் தி…

    • 3 replies
    • 1.2k views
  3. கவிதையின் கவிதைகள் http://crisedangoiss...eux-300x200.jpg [size=4]என் வாழ்வின் அன்றாட நிகழ்வுகள், அதியுச்ச நம்பிக்கைகள் கூட... என் மிச்சம் மீதிகளையும் மிதித்துக்கொண்டு எனைக் கடந்து தொலைந்து போயின...! இனியொன்றும் இல்லை...! எதுவுமே தேவையில்லை...! என்ற மனநிலைகள் நிலைமாறும் காலவோட்டத்தில் தடுமாறலாம் - ஆனால், என் நினைவுகளில் பதிந்துபோன வலிகளின் தடங்களென்றும் மாறாது... மறையாது! தொடரும் என் பயணங்களும்... என் எதிர்பார்ப்புக்களோடு, தொலைந்துபோன நம்பிக்கைகளை தேடியலைந்துகொண்டிருக்கும்... இறுதிவரை![/size]

  4. அன்புக்குரிய யாழ்க்கள, தமிழ் இசை, கவிதை நண்பர்களுக்கு, அன்பு வணக்கம். காதல் கடிதம் (02.08.2003) - காதல் மொழி(14.05.2006) - காதல் வானம்(25.06.2008 ) வசீகரனின் வரிகளில், வி.எஸ்.உதயாவின் வசந்த இசையில் 25.06.2008 அன்று நோர்வேயில் காதல் வானம் வெளியீட்டு விழா நிறைவாக நடைபெற்றது. காதல் வானம் இறுவட்டு ஈழத்தமிழ் மக்களின் வாழ்வைப் பிரதிபலிக்கின்ற பல பாடல்களுடன் வெளிவந்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. இப்படைப்பை இறுவட்டாக பெற்றுக் கொள்ள PAYPAL சிறந்த முறை. இறுவட்டு பாதுகாப்பாக அஞ்சலில் அனுப்பி வைப்பேன். காதல் வானம் இசைத் தொகுப்பின் குறுந்தககட்டுப் பிரதி வேண்டுகிறவர்கள் தொடர்புகொள்ளலாம் : vaseeharan@hotmail.com (Paypal Account). Vaseeharan:…

  5. Started by pakee,

    [size=4]நீ பேசும் பேச்சு,நான் வாங்கும் மூச்சு.. நீ கொடுத்த முத்தம்,என் இதயத்தில் ரத்தம்.. உயிரில்லாத என் உடலுக்கு,உயிர் கொடுத்தவள் நீ.. துடிக்காத என் இதயத் துடிப்பை,துடிக்க வைத்தவள் நீ.. என் உயிரை நீ அழிக்கலாம், உன் மீது கொண்ட காதலை ஜென்மத்திற்கும் அழிக்க முடியாது...[/size]

    • 3 replies
    • 612 views
  6. வேலைக்காய் ஓடாதே விடியலுக்கு நேரமாச்சு... கவிதை.... என் உறவுகளே நிறுத்துங்கள் நீங்கள் ஓடுவதை நிறுத்துங்கள்...... உலகெங்கும் மக்கள் வெள்ளம் இருந்தும் நீங்கள் கொஞ்சம் வேலைக்காய் ஓடுகிறீர்...! வேண்டுமென்றா ஓடுகிறீர்...? உன் பெற்றோர் வன்னியிலே இருந்துவிட்டால் ஓடுவீரா...? உன் உறவு உயிர்பிரிந்து உருக்குலைந்தால் ஓடுவீரா...! எழுபது விழுக்காடு எழுச்சிகொண்டு எழுந்திருக்க முப்பது விழுக்காடு முயற்சியற்று தூங்குகிறீர்...! உன் உறவின் பாதுகாப்பை உறுதிசெய்ததாய் நினைத்துவிட்டு பணம்சேர்க்கும் முயற்சியிலே தமிழில் பாசமற்று ஓடுகிறீர்..... ஆனால் ஒன்றுமட்டும் மறக்காதே நீர் எல்லோரும் தமிழென்று என்றைக்கு இருந்த…

  7. Started by சுஜி,

    கரும்புலிகள் என்று பெயர் எடுத்து எமக்காக உயிரை குடுக்க வந்த அன்பு செல்வங்களே.. என்ன என்று எழுவது உங்கள் பற்றி உங்களை பற்றி கவிதை எழுத எங்களால் முடியாது நீங்கள் எமக்காக வந்த தியாக செல்வங்கள் அல்லவா? ஏழு ஏழு ஜென்மம் எடுத்து வந்தாலும் உங்கள் போல் நம் நாட்டின் செல்வங்களை பெற முடியுமா? நம் நாட்டின் தெய்வங்கள் என்று சொன்னால் உங்களை அல்லவா நாங்கள் பூசிக்க வேண்டும் நம் நாட்டுக்காக இன்னூயிர்களை குடுக்க வந்த தியாக செல்வங்களே.. உங்களுக்காய் இரம் கரம் கூப்பி தலை வணங்குறேன்

  8. வார்த்தைகள் யாவும் வலுவிழந்து போகின்றன கார்த்திகை வானம் போல மனம் கனத்துக் கிடக்கின்றது நேற்று வரை எம்மோடு இருந்த நீ இல்லை என்ற சொற்கேட்டு இடி விழுந்த கோபுரம் போல இதயம் நொருங்கிக் கிடக்கின்றது ஆற்றல் மிகுந்த பேராசானே! நீ ஆக்கி வைத்த இலக்கியங்கள் இன்னும் நூறு தலைமுறைக்கு ஈழத் தமிழர் கதை சொல்லி வாழும் பழகிட இனித்திடும் வெல்லமே பார்வையாலே பேசும் பெருமகனே ஈழத்தமிழர் பெயர் சொல்லி எவர் இரந்து கேட்டாலும் இல்லை எனாமல் நிறைந்து வளங்கும் வள்ளலே உன்னால் உயர்ந்தவர் பலர் - எம் உள்ளத்தில் என்றும் நீ இருப்பாய் பெரும் கனலாய் வருகின்ற எம் படைப்புக்களின் இனியும் நீ வாழ்ந்து கொண்டேய் இருப்பாய்... #ஈழத்துப்பித்தன் 2002 காலப்பகுதிகளி…

    • 0 replies
    • 1.5k views
  9. நானாக வரப்போவதில்லை... எல்லோரையும்விட உன்னையதிகம் நேசித்திருப்பினும், என்கைப்பிடித்தபடி கூடவே வரும் உரிமையை உனக்கு கொடுத்தபின்னும் மனமுறித்துப் போதலேன்பது நீ நிகழ்த்தியது. எனவே, நானாக வரப்போவதில்லை. உன் பிரிவையிட்டு நான் வருந்தியதைவிட, நம் பிரிவையிட்டு அதிகம் வருந்தியிருக்கும் காதல். உன்னோடினிப் பேசுவதில்லை என்கிற பொல்லாவிரதம் முறிக்க இந்த பின்னிரவுகள் பிரயத்தனப்படுவதை நீ அறியமாட்டாய். பரவாயில்லை.... வழமைபோல இப்போதும் நீ என்னை திமிர் பிடித்தவன் என்றே கடந்துபோகலாம். எனினும், நானாக வரப்போவதில்லை.

    • 11 replies
    • 982 views
  10. ஏமாற்றி அணிவிக்கப்பட்ட சங்கிலியுடன் வறட்டு ஓலமிடும் நாய் எப்போதேனும் எலும்புத்துண்டுகள் அவ்வப்போது மிச்ச சோறும்... சில அடிகளும் ஏமாந்த வெறியுடன் பகைத்துக் குரைக்கும் நாய் சுதந்திரமாய் விடப்படும் சில நாழிகையில் மூளைச்சலவையில் எஜமானனுக்கு வாலாட்டியபடி அவனது பின்புறம் பம்மிப் பதுங்கும் சங்கிலி மாட்டிய த்ருணத்தில் இழந்த சுதந்திரமெண்ணி வெற்றாய் முனகும் மீண்டும் அடுத்த எலும்புத்துண்டுக்காய்க் காத்திருக்கும் வாலாட்டி. * தி. பரமேசுவரி

  11. விடைபெறும் ஆண்டே விதைத்து விட்டு போகிறாய் பலவற்றை எம் வயல்களில்... அறுவடைக் காலத்திற்காய் காத்திருக்கும் வலிமையையும் விளைவுகளை சாதகமாக்கும் திண்மையையும் தந்துவிட்டு போ.... கண்ணீரின் கனதி சுமந்த காற்றும் கலைந்த கனவுகளின் ஓலங்களும் பேரிருள் ஏறிய உறைவிடங்களில் நிறைந்துபோக, ஏக்கங்களும் ஏமாற்றங்களும் யுகாந்திர காத்திருப்புக்களும் மௌனமாக வாழ்விடங்களில் நிலைத்துப்போக, இயலாமை சுமந்து விடை கொடுக்கிறோம். கருவழிந்த காலத்தின் குறியீடே... உயிர்ப்பினை ஒளித்துவிட்டு சாம்பல் பூசி அடங்கிக்கிடக்கும் கிளைகள் மீதினில் மோதட்டுமுன் ஊழியின் பெருங்காற்று. மக்கிப்போகாத எலும்புகள் மீதும் மண்தின்ற தசைத் துண்டங்கள் மீதும் இறங்கட்டுமுன் பிரளயம். இனி பகை கொண…

  12. வீர நாய்கள் – தீபச்செல்வன்:- எனது வீதிகளில் தடுத்து நிறுத்தி மேற்கொள்ளும் எல்லா விசாரணைகளையும் அழைக்கப்படும்போதெல்லாம் சென்று வாக்குமூலங்கள் அளிப்பதையும் எனது வீடுகளில் எந்த வேளையிலும் சோதனைகள் நடத்துவதையும் அந்நியத்தை உணர்த்தும் தேசிய கீதத்தை கேட்டபடி என்னைப் பிரதிபலிக்கா கொடியின் முன்பாய் நிற்கவும் எனது மொழி தவறாய் எழுதப்படும்போதும் எனது வரலாறு தவறாக பேசப்படும்போதும் எனது தோழி குளிப்பதை இராணுவச் சிப்பாய் ஒருவன் பார்த்துச்செல்லும்போதும் துஷ்பிரயோகிக்கப்பட்ட யாரோ ஒரு குழந்தையின் ம…

    • 1 reply
    • 1.2k views
  13. பொல்லாப் பிறப்பும் புளுதியில் எறிபட்ட மீன் குஞ்சுகளும் வல்ல அசுரர்களின் கால்களில் புளுவாய் துடிக்கும் போதிலும் எல்லா வலியும் பொறுத்தருள் என்ற கடவுளுக்கு அரோகரா சொல்லித்திரியும் தெருப்பண்டார பரதேசிகளின் கூச்சல்கள் உலக மூலை முடுக்குகளில் ஓங்கி ஒலிக்கின்றது. கோவணத்துடன் சிலுவையில் அறையப்பட்ட கத்தருக்கு உடல்முழுக்க ஆடையணித்து தோத்திரம் சொல்லும் தேவதூதர்களை அம்மணமாக சிலுவையில் அறையப்பட்டிருப்பவர்கள் குறை உயிருடன் அரைக்கண்ணால் புரியாமல் பார்க்கின்றார்கள் கடவுளால் கைவிடப்பட்டவர்களின் திருவோடுகளில் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் விழையாடும் பந்துகள் தான் தவறி விழுகின்றது அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு அனைத்தும் கலந்து பீத…

  14. Started by nunavilan,

    கொழும்பு எனது காயங்களை ஆற்றக்கூடிய எனது வார்த்தைகளை புரிந்துகொள்ளக்கூடிய எனது நியாயங்களை ஏற்றுக்கொள்ளக்கூடிய நண்பர் ஒருவரை இந்த நகரத்தில் சந்திக்கக்கூடுமென எதிர்பார்க்கிறேன் தலையற்ற பனைகளுக்குள் வடலிகள் முளைக்குமென பறிக்கப்பட்ட வீடுகளுக்கு நாம் திரும்பவேண்டுமென அழிக்கப்பட்ட நகரங்கள் உயிர்க்குமென சிதைக்கப்பட்ட கிராமங்கள் செழிக்குமென சொல்லக்கூடிய ஒருவரை கடற்கரை இருக்கைகளில் தேடுகிறேன் காணாமல் போனவர்கள் திரும்ப வேண்டுமெனவும் பிள்ளைகளை இழந்த தாய்மாரின் கண்ணீர் துடைக்கவேண்டுமெனவும் கொல்லப்பட்டவர்களின் கனவு மெய்யாகவேண்டுமெனவும் சொல்லக்கூடிய ஒருவரை இந்தத் தெருக்களில் சந்திக்க காத்திருக்கிறேன் யாவற்றின் பிறகும் எனது தாய்மொழியை மதிக்கும் ஒருவரை எனத…

  15. Started by வர்ணன்,

    வரிப்புலி ஊர்வலம்! ----------------- ஆடிவரும் கடலையே - சொல்லு எங்கள் தேச ஆளூமை கொண்டவனை -எங்கே ஒளித்து வைத்தாய்? காற்றே வா மெல்ல எம் கதவு திற- பனியிலும் மழையிலும் - சுட்டெரிக்கும் வெய்யிலிலும் சுதந்திரமே பெரிசென்று சுழன்று திரிந்த சுந்தரனை- எங்காவது பார்த்தீயா? சொல்லி போ! சிங்களத்தின் மடியில் ஒரு இடியாய் வெடித்தவன் - சிறுத்தை இனத்தின் தலையில் மணிமுடியாய் உயிர்த்தவன் படை நடத்தும் வீரர்கெல்லாம் ஒரு பாடமாய் இருந்தவன் அவனை வெல்வதற்கு யார்க்கும் ஒரு வழியுமில்லை- விடை சொல்லாமல் போனானே அதுதான் - ஏனென்று இன்னும் தெரியவில்லை! எம்மை அடித்தவனை அடியோடு எரித்த பெரு நெருப்பு- எங்கள் அண்ணன் அணைத்து வளர்த்த அக்கினி குஞ்சு- கிட்டண்ணா - தமிழன்…

  16. கருத்தடைக்கு முயலும் ஒரு தாய்க்கு... நிறுத்து! நீ உட்கொள்வது மருந்தல்ல கருவறையில் கல்லறை கட்ட கச்சிதமாய் அனுப்பும் செங்கட்டிகள்! வளையே வலையாவது கடுமை! கூடே கூண்;டாவது கொடுமை!! குற்றம் செய்தது நீ தண்டனை மட்டும் குழந்தைக்கா? ஆபத்து என்றால் பிள்ளை அம்மாவை நாடும் அம்மாவே ஆபத்து என்றால் அதன் மனம் வாடும். நீ கம்சனிலும் கொடியவள் கம்சன்கூட குழந்தைகளை பிறந்தபின்தான் கொன்றான். நீ பிறக்கும் முன்னமே அழிக்கின்றாய். பிறப்புச்சான்றிதழை எதிர்பார்த்திருக்கும் குழந்தைக்கு இறப்பைச் சான்றிதழாகக் கொடுப்பது என்ன நியாயாம்? பிறந்தவுடன் சுதந்திரம் பறிபோவது வழமை பிறப்பதற்கே சுதந்திரம் மறுக்கப்படுவது கொடுமை ஆட்சி கலைந்தால் அம…

  17. Started by slgirl,

    ஏன் படைத்தாய்? என்னை ஏன் படைத்தாய்? பெண்ணாக ஏன் படைத்தாய் இறைவா? பெண்ணாக ஏன் படைத்தாய் என்னை பெண்ணாக ஏன் படைத்தாய் பூமியிலே? பெரும் துயரம் தாங்குவேன் என்று எண்ணியா என்னை பெண்ணாக நீ படைத்தாய்! என்னால் முடியவில்லை இன்று-இறைவா என்னால் முடியவில்லை இன்று என்னுள் இருக்கின்ற சோகங்கள் என்னை விட்டு நீங்கமாட்டாதா? ஏமாற்ற என்று எத்தனையோ உயிர்கள் இருக்கும் போது ஏமாற என்று எனை ஏன் படைத்தாய் ? அரக்கர்கள் மத்தியில் இரக்கதோடு எனை ஏன் படைத்தாய்? எல்லொரும் நல்லாயிருக்கனும் என்றென்னும் எண்ணதை ஏன் கொடுதாய்? ஏனக்கு என்று நினைக்காத மனம் ஏன் எனக்கு கொடுதாய்? அன்பாக பேச ஏன் வைத்தாய்? அடுத்தவரையும் நேசிக்…

    • 4 replies
    • 1.4k views
  18. செந்தமிழ் தாயே... செந்தமிழ் தாயே - நீ அந்தமின்றி வளர்க.... பைந்தமிழ் இனிமை... எந்நாளும் பெருமை - என்றும் உலகிலோங்கி வளர்க... தமிழ்த்தாயே..நீயும் வாழ்க-இந்த தரணி வணங்க வாழ்க... தமிழின் பெருமை மறந்து தமிழன்..... தாய் நாட்டிலும்... வாழ.. தமிழை மறந்து.. தரத்தையிழந்து.. வேற்று நாட்டிலும் வாழ... வெறும் பிழைப்புக்காக பேச்சு என்ன பேச்சு.... தமிழ்த்தாயின் பிள்ளை தமிழ் மறந்து போச்சு... சங்கத்தமிழ் வந்து யாதென மொழிய-தமிழ்க் கொற்றவன் காத்த முத்தமிழே..எவ்வகையறிய... அழகுதமிழை.. ஆசைமொழியை பேசவென்ன வெட்கமா.... கொஞ்சும் நடையை.. கோலத்தமிழை..பிஞ்சுவிதழ்கள் பேசத்தடையா... இலக்கியநூல்களைத் தூசு தட்ட இலக்க…

  19. முப்பால் வேந்தனுக்கு முற்சந்தியில் சிலை முடிந்தது எம்கடமை, முதலிரண்டு பாலும் முயற்சிக்கவில்லை எனவே முடியவில்லை மூன்றாம் பால் முயற்சிக்காமல் முடிந்தது,இப்பால்- மூவிரண்டில் புரியாமல் தவிப்பு மூவைந்தில் புரிந்து தவிர்ப்பு முவெட்டில் புரிந்தது தணிந்து,தொடர்ந்து மூவிருபதில் உடல் தளர முதலிரண்டுபாலும் முக்கியமென்று முடிவுகட்டும்போது மூச்சு நின்று நம் கதையும் முடிந்திடுமே

    • 12 replies
    • 1.6k views
  20. (முல்லை செஞ்சோலை வளாகத்தில் சிறீலங்காவின் வான் படையினரால் 61 சிறுமிகள் கொல்லப்பட்டதின் எதிரொலி... ) கண்மணிகள் சோலை மீது வான் பறவை பறந்தது! வடிவான வளர் இளம்பிறைகளை வாடி வதங்கச் செய்தது! தலைவன் அடி தாங்காது ஓடி மறையும் கோளைகாள்... பேடித் தனம் செய்தனீர்! - உம் கோர முகம் காட்டினீர்! கொலர் உயர்த்திக் கொக்கரிக்காதீர்... மலர்களைப் பறித்த உங்களுக்கு மரணப் படுக்கை ரெடி! 'கலர்' கனவு ஏதேனும் இருந்தால் தீர்த்துக் கொள்ளும்! உம் 'உயிர்'ப்பறவை பறக்குமடா சீக்கிரம்! அழுது வடிவதால் ஏதும் ஆகாது தோழரே! சர்வதேச அரச மேடைகளில் குருத்துகளில் குருதி பூசியவன் …

    • 1 reply
    • 1.4k views
  21. சலனம் இன்றி மெதுவா பாயும் நீர் .. பாலைவனத்தையும் பசும் சோலையாக்கும் .. நீ என்னை கடந்து போகும் தருணம் அதுபோல் .. திரும்பி பார்க்கும் நேரத்தில் என் மனவெளி ... உன் நினைவில் பூத்து குலுங்குவது இவ்வாறே .. சோகங்கள் இழையோட கண்களில் நீர் நிரம்பி .. வழி எங்கும் என்னை பார்த்திருக்கும் நேரத்தை .. நீ சொல்ல வரமுன் உன் கண்கள் சொல்லிவிடும் .. காதலை நேசித்த வித்தை தெரிந்தவள் அதனால் .. என்னை உன் விழி வளையத்துள் வைத்து .. கண்காணிக்கும் உன் காதலை மட்டும் .. நான் காதலிக்கிறேன் காதலே .

  22. பொய் சொல்லவத்தில்லை.... ஆனால் நடந்த தெரிந்த புரிந்த .... உண்மையை மறைத்திருகிறோம்.... இதை விட கொடுமை பாதி உண்மை.... பேசியிருக்கிறோம் - கொடுமையில்.... கொடுமை பாதி உண்மைபேசுவது... இதை எல்லாம்செய்து விட்டு நன்றாக நடிக்கிறோம் ..... நல்லவனாக நடிக்கிறோம் .....!!! தப்பு என்று தெரிந்து கொண்டு... தப்பு செய்திருக்கிறோம் .... மற்றவர்கள் செய்யாத தப்பையா....? நான் செய்கிறேன் -சமுதாயத்தை அடமானம் வைத்துதப்பு செய்கிறோம் .... நன்றாக நடிக்கிறோம் .... நல்லவனாக நடிக்கிறோம் ....!!! திட்ட மிட்டு பிறர் காசை திருடியது இல்லை ஆனால் வழியில் கிடந்த பணப்பையை யாரும் உரிமை கோராதபோது எம் பணமாக்கி செலவு செய்கிறோம் மனட்சாட்சிக்கு பதில் சொல்கிறோம் வழியில் கிடந்த காசு பொது சொத்து யாரும் பயன்படுத்தலாம் …

  23. மரணம்! ஆண்டுத்திவசத்தோடு மறந்துவிடுகிறோம் விபத்து! காயத்துக்கு கட்டுப்போட்ட கையோடு மறந்துவிடுகிறோம் இழப்பு! நிவாரணம் கிடைத்ததும் மறந்துவிடுகிறோம் தேர்தல்! விரல் மை காயமுன் மறந்துவிடுகிறோம் விடுதலை! அற்ப சொற்ப சலுகைகள் கிடைத்ததும் மறந்துவிடுகிறோம் தியாகம்! நவம்பர் 27 இல் தீபங்கள் அணைத்ததும் மறந்துவிடுகிறோம் ஒற்றுமை! கூட்டம் முடித்து காரில் ஏறியதும் மறந்துவிடுகிறோம் துரோகம்! செய்தவனையே மறந்துவிடுகிறோம் மறதி!!! ஈழத்தமிழனுக்கு கிடைத்த வரமும்... சாபமும்...!!! -தமிழ்ப்பொடியன்-

    • 2 replies
    • 849 views
  24. Started by Sembagan,

    சுயநலவாதிகளே! இது மக்கள் நலனுக்காக நடப்பட்ட மரம். அதில் நீங்கள் மலர்களைக் கொய்யுங்கள். கனிகளைப் பறியுங்கள். காய்களைப் பிடுங்குங்கள் கிளைகளையும் வெட்டி எடுங்கள். ஆனால் அடிமரத்தை மட்டும் வெட்டிவிடாதீர்கள். வேர்களை நம்பி அது வாழட்டும்.

    • 5 replies
    • 1.3k views
  25. Started by ANAS,

    வாழ்வு தொடர்பான கவிதை சூன்ய வாழ்வுகள் எல்லாவற்றிலும் இது அமைகிறதாக்கும். அடரிருள். தெளிவின்மைக்குள் தோற்றுப் போகின்ற ஒவ்வொரு நொடிகளும் மிக மிகக் கனமானவை. பொழுத ஒவ்வொன்றும் கடந்து கடந்து போகையில் செங்குருதியாய், மரணமாய், அச்சமாய், சோகமாய் தெரிகிறது. அதுவேதான். எல்லா சோகங்களுக்குமப்பால் காலம் மனிதனை அறுத்து வீசுகிறது. வாழ்தல் தொடர்பான எல்லா நம்பிக்கைகளும் துடைத்தெறியப் படுகின்ற நிமிஷங்கள் மட்டுமே முன்னாலும் எதிர்காலத்திலும் தெரிகிறது. வாழ்தலைத் தீர்மானிக்கிறவர்கள் அவர்கள், மற்றும் துப்பாக்கிகள், சன்னங்கள் எல்லா நகர்வுகளையும் அவதானிக்கின்றன மரணத்தின் கண்கள். பாதையில், வீட்டில், வாழ்விடத்தில் இருட்டில், பகலில் என்று …

    • 4 replies
    • 1.6k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.