கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
எனது கற்பனை மலர்ந்தது மலர்ந்தது தமிழ் ஈழம் தமிழ் மக்களின் மனதில் தனி ஈழம் முத்தென முத்தெனப் பிறந்தது அலை கத்திடும் கடலில் பிறக்கவில்லை செத்திடச் செத்திடப் பல உயிர்கள் அங்கே சினமாய்ப் பிறந்தது தமிழ் ஈழம் கொடியினில் கொடியினில் புூக்கவில்லை கொடுந்தீ என்னும் போரில் பிறந்தது தமிழ் ஈழம் துணையெனத் துணையென நாம் கண்ட பல சொந்தங்கள் எமைப் பிரிந்திடவே பலமாய்ப் பிறந்தது தமிழ் ஈழம் அரிதென அரிதெனப் பலர் சொன்னார் அதுவும் இன்று உருவாச்சு அரியணை அரியணை ஏறியது ஐ. நா சபையில் அமர்ந்திடவே துணையெனத் துணையென நாம் கண்ட துணைகள் மீண்டும் திரும்பாது துணையெனத் துணையெனத் தானிருப்பாள் என்றும் என்றும் எம் தமிழ் அன்னை. உற்சாகமும் விருப்பமும் தான் சராசரியானவரை…
-
- 12 replies
- 2.6k views
-
-
காரணம் என்ன? அசட்டுத்தனமான பேச்சுக்கும் அசட்டுத்தனமான வாழ்க்கைக்கும் என்ன காரணம் ? புரியாத சில பாசங்களுக்கும் அறியாத சில கேள்விகளுக்கும் என்ன காரணம் ? முடியும் என்றொரு துணிவிற்கும் வானைத்தொடும் ஓர் உணர்விற்கும் என்ன காரணம் ? இதை அறிந்தவர்க்கு நரகம் அறியாதவர்க்கு சொர்க்கம் மனித வாழ்விற்கு இது ஓர் மகுடம் இது இல்லை எனில் பார் கூட வெறும் மாயை இதை அறிந்தும் அறியாமையில் செல்வர். புத்தி கூறியும் வருடாமல் போனவர் பல பேர் பருவத்தின் தேடல் இதை அறியத்துடித்தவர்கள் பண்டைய காலத்தில் நாகரிகமாக தேடியவர்கள் நட்பு என்ற ரீதியில் வரும் போது நடுக்காட்டில் விட்டுச் சென்றவர் ஆயிரம் அனுபவித்துச் சொல்லியும் ஆயிரம் இருந்தும் அனுபவிக்காது மாற்றம் கொண்டவர் எவரும…
-
- 12 replies
- 1.8k views
-
-
என்னவளின் டயறி ---கண்களால் காதல் தந்து ....நினைவுகளை மனதில் சுமந்து ....வலிகளால் வரிகளை வடித்து ....என்னவளின் காதல் டயறி ....கண்டெடுத்தேன் கணப்பொழுதில் ....என் மீதுகொண்ட கவலைகளை ....தன் காகிதத்தில் பதிந்திருக்கிறாள்....காகிதங்கள் கூட ஈரமாய் இருக்கிறது ....அவைகூட அழுதிருக்கிறது ....!!!+காதல் நினைவுகளும் காதல் டயறியும்என்னவளின் பக்கம்( 01) உயிரற்ற காகித்தத்தில் ....உயிர் கொண்டு எழுதினேன் ....உதயனே உயிரானவனே ......!!!காகிதம் கூட உயிர் பெற்று ....உன்னையே எழுத சொல்கிறது ....!!!என் கையெழுத்தை தவிர ....அத்தனையும் உன் நாமமே ....கவலைகளை கண்ணீரால் ...வரிகளாய் எழுதுகிறேன் .....!!!+காதல் நினைவுகளும் காதல் டயறியும்என்னவளின் பக்கம்( 02) என்னவளின் டயறியிலிருந்து ......03 …
-
- 12 replies
- 2k views
-
-
அன்னையர் தினம்..! அகிலத்தின் அன்னையர்களுக்கு…, இது ஒரு தினம் ! என் தேசத்து அன்னையருக்கு.., இது ஒரு செய்தி! எம்மை ஈன்றவளை ஒரு நிமிடம், நினைத்துப் பார்க்கையில்…! இதயத்தின் ஆழத்தில் …, எங்கோ ஒரு மூலையில், இலேசாக வலிக்கின்றது! அப்பா என்னும் ஆண் சிங்கம், பிடரி சிலிர்க்கும் போதெல்லாம்.., அடங்கிப் போன அம்மா! பிரசவங்களின் போதெல்லாம்,, மரணத்தைத் தரிசித்து…, மீண்டு வருகின்ற அம்மா! ஆண் என்றாலும். பெண் என்றாலும், ஆண்டவன் தானே தருகின்றான் என்று, ஆறுதல் கொள்ளும் அம்மா! அவளுக்கென ஆஸ்பத்திரியும் இல்லை, ஆறுதல் சொல்லத் தாதிகள் இல்ல…
-
- 12 replies
- 5.8k views
-
-
விழித்தெழு தமிழா விழித்தெழு- நீ விடியலின் எல்லையில் விழித்தெழு... பகையவர் கோட்டைகள் சரித்திடுவோம்- புலியென ஆகியே புறப்படுவாய்... இது வரை இருந்தாய் இது போதும் இனியும் எழுவாய் புயலென நீயும்... பதுங்கும் புலியது பாய்வது முறையே படுக்கைக்கு போகுமா பாருக்கு உரைப்பாய்... கிளி பிள்ளை வந்தின்று கிண்டல்கள் பொழியுது பார்த்தே சிரித்து புலியது பதுங்குது... அர்த்தங்கள் புரிவாய் அணியாய் திரள்வாய் பறையது அடித்து பட்டாசு கொளுத்து.. பொய்யா பகையதின் பொய்யதை எறிவாய்... உன் தமிழ் வெல்லும் உரித்துடன் ஏற்ப்பாய்...
-
- 12 replies
- 2.3k views
-
-
நகர்ந்து-போன-நாட்க்கள், ஓலிவடிவில்............. நட்பாய் என்னில் அமர்ந்து காதலாய் என்னில் உறங்கி இன்று கானலான எனது நாட்குறிப்பின் நனைந்து போன பக்கங்கள் கண்ணீரில்.... இனியும் மறக்கவில்லை .. உனை பார்த்த அந்த முதல் நாளை ... நல்ல நட்பு... நல்ல நண்பன் ... இப்படிதானே இறுமாப்போடு இருந்தேன் நானும்... நல்ல தோழியாய் நானும் உன்னில்... நடை பயில்கையில் ... நாளொரு நாடகம் பொழுதொரு கவிதையென . நீயும் என்னை சுற்றி.. பூமியும் நிலவை சுற்றுமென எனக்கும் காட்டி தந்தாயே ... உன்னோடு பேச ஆரம்பித்த பின்தானே . பூக்கள் உதிரும் ஓசை கூட கவிதையாய் தெரிந்தது என் கண்களுக்கு ... உனது தோழனின் காதலுக்கு …
-
- 12 replies
- 2.4k views
-
-
மறக்கலாமா நீ தமிழா உனக்கு இங்கிலீசு நன்றாகக் கதைக்கத் தெரிந்ந்து விட்டால் நீ என்ன வெள்ளைக் காரன் ஆகிவிட முடியுமா..??? அல்லது திராவிடர் தோற்றம் தான் உன்னை விட்டுப் போய்விடுமா???? வெள்ளையர் கூட நம்மைக் கண்டு விட்டால் தம் மொழியில் ஹாய் சொல்லி சிரித்து விட்டு செல்கின்றனர் உனக்கு என்ன செருக்கா...??? தமிழனைக் கண்டு விட்டால் எதிரியைக் கண்டது போல் முகத்தை திருப்பி வைத்துப் போகின்றாயே..... தமிழனுடன் தமிழில் கதைக்க உனக்கு என்ன கேவலமா..???? நன்றி கெட்டவர்களே உமக்கு நம் மொழி இழக்காரமாகிவிட்டதா???? வெள்ளையரைத் தாண்டிச் செல்லும் போது கதைக்காமல் போகின்றாய் நீயும் தமிழரைத் தாண்டிச் செல்லும் போது ஆங்கில…
-
- 12 replies
- 2.1k views
-
-
''சுவிஸ் மாப்பிள்ளை....'' கட்டை பாவாடையுடன் ரெட்டை பின்னலும் ஒட்டுப் பொட்டும்வைத்து ஒய்யாரமாய் சைக்கிளில் உல்லாசமாய் திரிந்தேன்! சனியன் போல வந்தான் ஒருவன் அவன்தன் கல்யாணதரகன் சுவிஸ் மாப்ப்pள்ளையாம் சுவீற்றான பெண் என்றால் பொன் ஒன்றும் வேண்டாமாம்! வாயை பிளந்து கொண்டு வீட்டிலும் சம்மதம் சொல்ல நடந்தது கலியாணம் தெருவெல்லாம் ஊhர் கோலம்! ஆசை கனவுகளில் சுவிசில் கால் பதித்தேன் வெளிநாட்டு மாப்பிள்ளை குடித்து விடடு; நடுறோட்டில்கிடக்கின்றான்! சுற்றியது தலை மட்டுமல்ல வருடமும் தான் கையிலும் காசின்றி மனதிலும் திடமின்றி செல்லவும் வழியின்றி கண்ணீரில் தவிக்கின்றேன்! கண்ணீரில் கரைந்தது கண்மை மட்டுமல்ல என் இளமையும் தான…
-
- 12 replies
- 2.1k views
-
-
நீர்தேடச் சென்று தொலைந்து போனவற்றைத் தேடி மணற்பாதைகளில் சங்கமிக்கின்றன கால்தடங்கள். ஊதமுடியா சங்குகள் வெடித்துப் போய் இருக்கின்றன திங்கமுடியா பிணங்கள் ஆங்காங்கே கிடக்கின்றன உச்சி வெயில் உக்கிரத்தில் பாதமும் வெளுக்கிறது பிழிந்த வியர்வைகள் மகிழ்கின்றன இன்றாவது இங்கே இருக்கிறோமே என்று.. தொண்டை அடைத்த ரணத்தோடு ஓவியங்கள் படர்ந்த பாதங்கள் வீடு திரும்ப, பாதச்சுவடுகளை அழிக்கமுடியா விரக்தியில் ஊர் கதைப் பேசி திரிகுதுகள் பிளவுபட்ட கரைகள்.
-
- 12 replies
- 2k views
-
-
[size=4]உயிரொன்று கரைகிறது...[/size] [size=3]கவிதை - இளங்கவி[/size] பெயரில் சிவந்தன் - அவன் தமிழீழத்தின் சிவந்தமண்... தன் இனம் சிறிது சிறிதாய் அழிவதைப் பார்க்கமுடியாமல் தம் உயிரையே உருக்கி நம் உரிமையை உரக்கச் சொல்லத் துணிந்தவன்..... அன்று... ஆயிரம் மைல்கள் நடந்தான் அவன் உடலிலன்று வலுவிருந்தது.... இன்று.... உணவையும் நீரையும் மட்டும் கொண்டு இயங்கும் உயிர்க் கோளத்தையே உருக்கத்துணிந்து விட்டான் அதை உயிரின் எல்லைவரை உருக்கியும் விட்டான்... பெற்றோரை மறந்து... மணம் கொண்ட மனையாளை மறந்து.... தன் உயிரணுவில் உதித்த பிள்ளையையும் மறந்து...... உரிமையை இழந்து தவிக்கும் உனக்கும் எனக்குமாய் திலீபன் வழினின்று த…
-
- 12 replies
- 951 views
-
-
காசுதான் வாழ்வா ???? வெண்பனிப் புகார் அடர்த்தியாய் மண்டியிருக்க பைன் மரத்துக் காடுகளில் பையப் பைய நடக்கையிலே உன் நினைவும் என்னை ஊஞ்சலாய் ஆட்டுகின்றது...... காலப் பெருவெளியில் உன்னைக் காசுக்காய் தொலைத்தவனுக்கு காலம் தந்த தண்டனை காலத்தால் அழியாதது..... என்மீது நீ கொன்ட அன்பு சுத்தமானது , அதை நான் அசுத்தமாக்கியது என் பிழைதான் பெண்ணே ....... என்னிடம் வந்தவளோ என் காசைக் கணக்குப் பாக்க , பாலை மணல் வெளியில் வழியைத் தொலைத்த வழிப்போக்கனைப் போல நானோ அவளிடம் அன்பைத்தேடி அலைகின்றேன்........ அன்பை மட்டுமே அள்ளித் தரத் தெரிந்த உனக்கு என்னைப் போல் வண்டுக் குணம் இல்லைத்தான் வாழ்க்கையில் வெற்றி... வெற்றி ....... என்று மார்தட்டிய எனக்கு காலம் …
-
- 12 replies
- 1.1k views
-
-
மலர் கொண்டு வருவன் .......... புலம் பெயர் நாட்டிலே என் தாய்க்கு ஒரு நினைவலை தாலாட்டு பத்து மாதம் சுமந்து பெற்று பண்புமிகு பாசமுடன் பேறு எடுத்த கடைக்குட்டிபேட்டை நான் ,பாலுட்டி தாலாட்டி பண்புடன் ,நல்ல பழக்கமுடன் பாங்கை அனைத்து வளர்த்திடாள் பள்ளி சென்று நானும் படிகையிலே பக்குவமாய் இ பாடங்கள் பலதும் சொல்லிதந்தவளிகாட்டி கடை குட்டி என் மீத கூடிய கரிசனம் கண்ணன் மணி போல காத்து கல்லூரிக்கு அனுய்பி வைத்தாள்விடுதி விட்டு வீடு வந்தால் விசேடமாய் சாப்பாடு விதவிதமாய் பல்கலைக்கு காலடி நான் வைத்த போது கண் கான தேசம் கவனமடி கன்ன்மனியே கருத்தாக படித்து பட்டமும் பெறப்பட்ட போது .................
-
- 12 replies
- 2.2k views
-
-
அகரத்தில் தொடங்கி ஆயுத எழுத்தானது என் இனம் . சிகரத்தை தொட்டே சிங்க பரம்பரையை சிதறச்செய்தது ஒருகாலம் . மெல்லினமாய் நின்ற என் இனத்தை வல்லினமாக்கினான் ஒருவன் . பல்லினம் கொண்ட நாட்டில் ஏன் ஓரினத்திற்கு மட்டும் நாடு வேண்டும் ??? என்று கச்சைகட்டின பலதேசங்கள் . மலினப்பட்ட மானிடக்கொலை மலிவாகவே மலிந்தது என்தேசத்தில் . நீதியும் நியாயமும் இறுக மூடின தம் கண்களை . சிங்கத்திற்கு நேரடியாக வேட்டையாடும் பழக்கம் இல்லை . மறைந்திருந்தே சூது செய்து இரை கௌவ்வும் . வல்லினமாய் நின்று மெல்லினமான என் இனம் மீண்டும் வல்லினமாக , சொல்லும் செயலும் நேர் கோட்டில் வந்தாலே வல்லினமாகும் . இல்லையேல்!!!!!!!!!!!!!!!!!
-
- 12 replies
- 966 views
-
-
தூல உடல் துறந்தோரின்.... ஆலயமழித்தோர் அரன்மனையும் கால நெருப்பில் கட்டாயம் அழியும். இது கார்த்திகை மாதம் பூவேந்தி எம் புதல்வரின் பொன்முகம் காணும் காலம் மண்மடியில் குடிபுகுந்த புனிதர்களைப் புதுக்குவித்து, எண்சாண் மெய்சிலிர்த்தெம் உயிர் உருகும் நேரம். காலப்பெருவெளியில் ஈழக்கதை எழுதிய இளவேணில்கள் - தம் உறவுகளைக் காணக்காத்திருக்கும் திருமாதம். தூல உடல் துறந்தோரின் ஆலயம் அழித்தோர் அரன்மனையும் கால நெருப்பில் கட்டாயம் அழியும். ஈனமா… இனத்திற்கா… இன்னுயிரை ஈந்தோமென தோழ ஆத்மாக்கள் தொய்தொடுங்கக்கூடாது. ஆழத்தாய்மடியின் அணைப்பிற்குள் இருக்கும் எங்கள் காலப்புதல்வர் கண்கலங்கக்கூடாது. ஞாலப் பரப்புகளில்……. உறவுகளே! காலச்சி…
-
- 12 replies
- 1.8k views
-
-
நிலவதனை தழுவிநின்ற முகிலவன் -ஏன் கண்ணீரைச் சொரிகின்றான்....? இன்று.... மதியதனைக் காணாது அவனும் -(நிம்)மதி இழந்து போனானா..
-
- 12 replies
- 2.7k views
-
-
நான் லிங்கமாலா ஆனேன் ஜுனில் வெளிவந்த ராவய பத்திரிகையில் அதன் ஆசிரியர் குழுவிலுள்ள மஞ்சுள வெடிவர்தன எழுதி, செல்வர் என்பவரால் தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட கவிதை இது. சிங்கள வாசகர்களை நோக்கி எழுதப்பட்ட இந்த கவிதை மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட கவிதை. சிங்கள பேரினவாத சக்திகள் மத்தியில் சர்ச்சையையும் கிளப்பிவிட்டிருந்த கவிதை இது. மஞ்சுள வெடிவர்தனவின் கன்னி மரியா எனும் சிறுகதைத் தொகுதி சென்றவருடம் இலங்கை அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டது. அது இன்னமும் நீதிமன்ற விசாரணையில் சிக்கியிருக்கிறது. ”பறை” வாசகர்களுக்காக மீண்டும் அவரது கவிதை. வெசாக்தின முழுநிலவு தலையில் கைவைத்து அழுகிறது அதன் மூக்குச் சளி சாரளம் வழியால் தெறிக்கின்றது அயல்…
-
- 12 replies
- 2.2k views
-
-
ஏய்.. உலகமே விழித்துக்கொள்.. இரும்புக்கம்பிகள்.. நம்மை என்ன செய்யும்.. உலகமெலாம் தமிழனை உருட்டுவதேன்.. சிறைகள்.. வெறுமையாகும்.. நேரமெல்லாம்.. அப்பாவித்த தமிழனையா உள்ளே... அடைப்பது.. அடிப்பது... உதைப்பது... மனிதாபிமானத்துக்குள்.. அடங்காத மனிதனா கேட்பாரில்லாத.. குடிமகனா தமிழன்... மகிந்த மேய்க்கின்ற மந்தைகளா தமிழன்.. சொந்த நாட்டிலேயே.. அகதியான.. பாவியா தமிழன்.. ஏய் உலகமே.. விழித்திரு.... எங்களைப் பாதுகாக்க.. நீ வரவில்லை.. எங்களை நாங்களே பாதுகாக்க நீ விடவில்லை.. ஒரு கண்ணில் எண்ணெய்.. எம் துயர் உனக்கு தெரியமாலிருக்கலாம்.. என் தங்கையின் அழுகுரல்.. குழந்தைகளின்.. ஓலம்.. தாயின் விசும்பல்.. உன் காதுகளில் விழவில்லை.. கா…
-
- 12 replies
- 2k views
-
-
பழைய மொந்தையில் புதிய கள்ளோ புதிய மொந்தையில் பழைய கள்ளோ யானறியேன். மௌனம் நெஞ்சையழுத்த மௌனமாய் பதிந்துள்ளேன் மௌனம் பேசுகின்றேன் - உன் மனதோடு பேசுகின்றேன் மழைமேகமாய் மலர்வாசமாய் மௌனமாய் பேசுகின்றேன் மண்வாசம் நாசமாகி மாண்டவுடல் மண்ணாகி மாண்புமிகு தமிழினம் மழிகின்றதே - நான் மௌனம் பேசுகின்றேன் தோன்றிய முதல் குடியாய் வீழ்ந்த முதல் குடியாய் வெற்றிவாகை சூடி மறைந்து போகுதே எம்மினம் - நான் மௌனம் பேசுகின்றேன் என் மனதோடு பேசுகின்றேன் புல்பூண்டு பூவையே புணரத்துடிக்கும் பேரினவாதத்தால் பூந்தையர் எல்லாம் கருகி மாள - நாமோ புலம்பெயர்ந்து புலனறுந்து வழிமாறி மொழிமாறி மெனம் பேசுகின்றோம் நட்படன் என்.பரணீதர…
-
- 12 replies
- 2.2k views
-
-
இவள் முகம் பார்த்தால் இவனுக்குள் காதல் இல்லையேன்று மறுத்திட இதயமில்லை என்னிடம் இனியவளின் வார்த்தை இதமாய் தானிருக்கும் இடிகள் விழும் காலமும் இனியாய் தானிக்கும் இது என் காதலின் ஆரம்பம் இவள் முடிவின் இறுதியாகுமோ? இமை மூடி திறந்தால் -என் இமைகளை தாண்டி நீர் சொறியும் இசையதை கேட்டால்- அதில் இனிமையின்றி இருக்கும் இப்படியேன் ஆகிவிட்டேன் இறைவனிடம் கேட்டேன் இன்று வரை பதில்லை -அருகில் இருப்பவரிடம் கேட்டேன் இது என்ன கேள்வி என்றார் இப்படியேன்னை சாகவிட இனியவளே நான் என் செய்தேன் இதயமதை கேட்டதற்க்கு இறக்கும் வரம் தருவதா? இதிலுனக்கென்ன ஆனந்தம் இன்றும் நம்புகின்றேன் இறுதிவரை பார்க்கமாட்டேன் இன்னோருவள் முகமதை இருக்கிறேன் உனக்காக இவ்வ…
-
- 12 replies
- 2.6k views
-
-
-
மீள் ஆயுள் ஓலிவடிவில்... உன் தோள்களை விட்டு நகர்ந்தால் என்னை இழுத்து இழுத்து அணைத்தவனே இரவில் உலாப் போக பிடிக்கும் என்பதால் நிலாவை ஓய்வெடுக்கச் சொன்னவனே உனக்கு பிடித்த பகலை இரவாக்கி காத்திருக்கின்றேன் என் மரணத்திற்க்காய் வாழ்வின் இறுதி நாளில் தொலைத்த உன்னைத் தேடுகின்றேன் நீ தொலைந்ததை மறந்து யார் செய்த பாவமடா? யார் தந்த சாவமடா? உன்னை காதலித்தபடி இந்த ஆயுள் என்னை மறு ஆயுளுக்காக அழைக்கின்றது நான் சென்று வருகிறேன் -இனியவள்
-
- 12 replies
- 3.9k views
-
-
சுதந்திரம் நோக்கிப் பயணித்து சூனியத்தை அடைந்த சூட்சுமத்தில் தான் இன்னும் எமது வெட்கம்கெட்ட இறுமாப்பு உயிர்வாழ்கின்றது முகங்கள் தொலைந்த உருவங்களில் என்னும் அழுகை சிரிப்பு சத்தங்கள் அதைவிட மேலான கோபங்கள் ஆவேசங்கள் வெறியோடு நெஞ்சு மயிரைப் புடுங்கி அண்ணாந்து ஊதியபோதும் முகத்தை உணரமுடியவில்லை நாம் தொலைந்து போனோம் எம்முடன் எடுத்துவந்த சாப மூட்டைகளில் தலையை சாய்த்து புலம்பிக்கொண்டிருக்கின்றோம் சாப மூட்டையுடன் தலைமுறை தலைமுறையாக நடந்து ஒருவழியாக மயானத்தை அடைந்துவிட்டோம் சுடலைஞானம் தனக்கு தனக்குதான் பிறந்துவிட்டது என்று அங்கேயும் குத்துப்பாடு நடக்கின்றது விசும்பலும் வெளிப்படும் கண்ணீரும் பிரசவ வலிகளும் நாதியற்றுப்போனது …
-
- 12 replies
- 1.6k views
-
-
-
முதன்முதலாய் உன்னருகே நான். உன் போதை விழிகள் என் உடலில் எழுதின எனக்கான தலைவிதி. உன் மனமெப்படியோ அப்படியே செல்ல என் வாழ்க்கை பயணிக்கும் போது இடையிடையே இரவுத் தீண்டல்களில் பாதை தடுமாறும். உனக்காக பட்டினி கிடந்தேன் பல நாட்கள் மனநிறைவாய் வருவாய். எனக்கென இருநாட்கள்கூட உன் மனம் தாங்காது சலித்துப் போய் நடுநிசியில் யாருமில்லாத வானத்தை வெறுப்பாக பார்ப்பதும் கொண்டாட்டமில்லா இரவுகளை அடியோடு தொலைப்பதும் இன்றைய சூழ்நிலையாக்கினாய். உன் விஷமம் அறிந்தும் உன்னுயிரோடு ஒட்டுகிறேன் பிளாஸ்டிக் பை நீராக... நீ என்னோடு எழுதிய கவிதைகள் என் அருகே உறங்குகின்றனவே!
-
- 12 replies
- 2k views
-
-
படத்தைப் பெரிதாக்கி வாசிப்பதற்கு : http://www.kathala.net/gallery/albums/user...lood-Flower.jpg படம் சிறிதாக்கப்பட்டுள்ளது. - இணையவன்
-
- 12 replies
- 2.5k views
-