கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5129 topics in this forum
-
இல்லாதவர்களின் கனவு மீள் எழுத்து : தீபச் செல்வன் அவர்கள் பெருங்கனவுடனே மரணத்தை முத்தமிட்டனர். கடைசியில் அவர்களின் ஞாபகம் நிரப்பிவிடப்;பட்ட கல்லறைகளும் நம்மிடம் இல்லை. தாய்மார்கள் தீப்பந்தங்களையும் தமது பிள்ளைகளுடன் இழந்து விட்டனர். மனைவிமார்கள் தங்கள் புன்னகையுடன் கல்லறைமீதான தமது சொற்களையும் இழந்து விட்டனர். கனவின் அளவற்ற ஞாபகத்தில் வானம் முட்டிக்கிடக்கிறது. இம்முறை எந்தப் பூக்களும் மலரவில்லை. இலைகளில் குருதி ஒழுக பூமரங்களின் வேர்கள் அறுக்கப்பட்டிருக்கின்றன. தலைகளை மின்கம்பத்தில் மோதி இல்லாதவர்களை அழைக்கிறது நம்பிக்கையற்ற மனம். கனவை உறிஞ்சி எடுத்துக்கொண்டு அவர்களை தின்று முடித்துவிட்டது உலகம். அவர்கள் மீதெழுதப்பட்ட மரணப்பாட…
-
- 0 replies
- 679 views
-
-
ஸ்ரீலங்கா தேசிய கீதம் தமிழில் பாடுவது தடை செய்யப்பட்டு விட்டது. இனி அங்கு வாழும் சிங்களம் தெரியாத தமிழர்கள் என்ன செய்வார்கள்? அவர்கள் பாடுவதற்கு ஒரு தேசிய கீதம் வேண்டாமா? அவர்களுக்காக எனது சிறிய முயற்சி: --------------------------------------------- ஸ்ரீலங்கா பேயே நம் ஸ்ரீலங்கா நமோ நமோ நமோ பேயே தமிழரின் தலை கொண்டு புதைகுழிகள் யாவும் நிறைப்பாய் வெறி லங்கா ஞாலம் இகழ இனவெறி மதவெறி கொலை வெறி தமிழ் இரத்தம் கொள் லங்கா தமிழரின் கொலைக்களம் என ஒளிர்வாய் நமதருமை பேயே எக்கடன் பட்டும் கொலை தொடர்வோமே நமோ நமோ நமோ பேயே நம் ஸ்ரீலங்கா நமோ நமோ நமோ பேயே http://gkanthan.wordpress.com/index/anthem/
-
- 1 reply
- 852 views
-
-
கட்டிளம் காளை இது... தலைக்கனம் இருந்தது நேற்று வரை..!! கண்கள் செய்த சதியால் சித்தம் குழம்பிய காளை.. காலை ஒன்றில் சுபமுகூர்த்த வேளையொன்றில் கறவை ஒன்றின் கழுத்தில் ஏற்றியது நாண்.!! அடுத்த நொடியே காளையது... நான் எனும்.. திமிரிழந்தது. அடுத்த மணியில் காளை எனும் உணர்விழந்தது. அடுத்த நாளில் அடிமாடாய் போனது அதன் நிலை..! காலக் கழிவினில் அடிமாடு நிலையும் கழிய பூம்பூம் மாடாக.. கூடிப் பெருத்த கறவைக் கூட்டம் கூட்டமாகிப் பெருகி நின்று துரத்துது..!! தனித்துவிட்ட நேற்றைய காளை.. கிழடாகி தோலுக்கும் தசைக்கும் பெறுமதியற்று சுடலை ஏகுது..! இதுவே கலியுகத்தில் காளைகளாய் திமிரெடுத்த உயிர்களின் வாழ்க்கை எனும் வட்டமாகும்..!!! வேண்டுமா எனியும் இந்த நிலை.. புதிதாய் ஓர் விதி செய்…
-
- 33 replies
- 2.8k views
-
-
கண்டுணர்! அண்டமெங்கும் ஆண்டவெங்கள் தண்டமிழை நண்டெழுத்து ஆள உண்டுடுத்து வாழ்வதோ? கண்டமெங்கும் கண்டவெங்கள் வண்டமிழர் கூட்டம் கண்டவர்க்கும் காலமெலாம் தொண்டு செய்து சாவதோ? இதை கண்டுணர்ந்து தண்டெடுத்து குண்டெடுத்து ஈழமதை கொண்டு வந்தால் பண்டுலகர் போற்றுவர் - இல்லை விண்டவரும் தூற்றுவர்!
-
- 3 replies
- 1.2k views
-
-
காதலியே... காதலியே... கண்களுக்கு இன்று வரை தென்படாத காதலியே.. என்று வருவாய் என் வாழ்கையில் வசந்தம் வீச.. அதிகம் பேசியவன் அல்ல நான் பெண்களிட்ம். அது குறித்து கவலையும் இல்லை என்னிடம்.. அனால் என்னை நம்பி வந்த என்னுடைய உயிர் என்று காக்கும் திற்மை உள்ளது என்னிடம்... குடும்பம என்ற கூடாரத்துக்குள் வர.. உனக்க்காக என்ன செய்யவேண்டும் உனக்க்காக என்ன செய்ய கூடாது.. அன்பே நீ வெங்காயத்தையும் நறுக்கவேண்டாம்.. வெள்ளை பூண்டையும் உரிக்கவேண்டாம் அனைத்தையும் நான் பார்த்து கொள்வன். கடவுளை நம்புபவனில்லை நான்.. இயற்கையை நம்புபவன்.. எகிறிய பந்து மீண்டும் வரும் என்ற புவியீர்ப்பு விசை உண்மையெனில்... இந்த உலகத்தில் நியமிக்கபட்ட பிறப்ப…
-
- 12 replies
- 2.1k views
-
-
ஒரு நிலவாய்!! இரு கரங்கள் நடுவே குலுங்கிய வளையலிடை ஒரு இடி ஜனனம் கொள்ளுமென்று எவர் கண்டார்? அடுக்களையில்...... அக்கினி சீண்டலின் மடியில்...... இதுதான் வாழ்க்கை என்று கிடந்தவள் எரிமலையாய் வெடிப்பாள் என்று எவர் கண்டார்?! பசு என்றே பாடினர் புலவர்.. காளைக்கும் சேர்த்தே ஒரு கனவுலகம் காண செத்தேதான் போவாளென்றே எவர் நினைத்தார்? நங்கை என்றார்.. நாணல் என்றார் மெல்ல நட.. அல்லி இடை ... மிடுக்காய் நடந்தால்... அது முறியுமென்றே இனிப்பாய் சொல்வார்... அவர்க்காய் புனை கதை !! போகட்டும் விடடி..! சூரியன் தான் ஆணா ...? ஆனாலும்தான் என்ன ? சொல்லடி கிளியே அவர்க்கு...... பூமியி…
-
- 9 replies
- 1.8k views
-
-
-
- 27 replies
- 6.8k views
-
-
அடர்ந்த பனிக் கூதலில் நட்சத்திரங்களின் மெல் ஒளியின் படர்தலில் இரவின் நிசப்தத்தை இரசித்துக்கொண்டு இரண்டு இதயங்கள் தொலை தூரப் படபடப்பில் இமைகளை மூடிவிட சாளரம் வளியே முத்மிடும் சாரல் காற்றின் ஸ்பரிசத் தக தகப்பில் மூச்சுக்காற்றின் சுகந்தம் அறிதல் உற கொம்பொன்றில் கொடிபடரும் பேரழகாய் கரை தடவும் மெல்லலையில் மணல்க் கோடாய் மாண்ட நடு இரவின் பொழுதுகள்தான் பொய்த்தனவே ஏக்கத் துடிப்பான எண்ணங்கள் இணைந்துவிட
-
- 1 reply
- 645 views
-
-
இன்ப மிது வன்றோ ஐந் திரு மாதங்களா யென்மணி வயிற்றில் நிந்தனை யோடே சுமந்தே னென் கருவை -இந் நாள் மட்டுமதை என்குழந்தை யென்றுணரவில்லை நான் பெற்றுக் கொள்ளவுமதை விரும்பிடவில்லை... என் னைபுதைத்து முளைத்தெழுந்த குழந்தாய் நின் சோகக் கருவாய் ஏனிங்கு மலர்ந்தாய் -விண் மழை போலொரு கண்ணீர்க்கதை எனக்குண்டு மனம் விட்டுசொல்லிடவே மனமொன் றிங்கில்லை... ஊர்வாய் களையிழுத்து மூடிடவே எனதுறவுகள் பேர் காப்பாற்றிக் கொள்ள மண்ணிலே -வேர் விட்டு போனதம் கெளரவம் காத்திடவேயென் விடலை பருவமதை வீணாக்கிய விரோதக்கருவிது... மணவாளனது பேருமறியா முகமறியா பேதையாய் கனவினில் ஜொலித்த யென் கற்பனைகள் -என தாசையின் தா…
-
- 0 replies
- 859 views
-
-
எதைக் கேட்டாலும் வெட்கத்தை தருகிறாய் வெட்கத்தை கேட்டால் விட்டத்தை நோக்குகிறாய் விட்டத்திலா இருக்கிறது என் காதல்? * - * - * - * - * மார்கழி மாசம் வாசலில் கோலம்! நடுவிலே சாணம் சாணத்திலே பூசணிப்பூ! அது பூவல்ல என் இதயம்! உன் இதயத்தை சாணத்தில் தான் வைத்தாளா என்று கேட்காதீர்! சாணம் கூட சந்தனமானது சந்தியாவின் விரல்பட்டு! * - * - * - * - * 'லவ்'டப், ‘லவ்'டப் சிலகாலமாக இதுதான் என் இதயத்தின் ஒலி! சண்டாளி தயவுசெய்து என்னை சாகடிச்சிட்டு போடி!! * - * - * - * - * நீ நெருப்பு நான் பஞ்சு காதல் ஊழிப்பெருந்தீயாய் பற்றியெரிவோம் வாடி! * - * - * - * - * எனக்கு கொடுக்க உன்னிடம் …
-
- 8 replies
- 2k views
-
-
ஒரு பிடி ................................வேண்டும் தலைவனின் மண்மீட்பில் ஒரு பிடி மண் வேண்டும் மண்கொண்ட அன்னையின் நினைவாக ஒரு பிடி முத்து மண்ணில் நான் போட்ட கோல மண் முன் வீட்டு மாமியின் வேலிக்கும் ஒரு பிடி மாமர நிழாலில் மண் வீடு கட்டிய என் தோழி மலர்விழி மண் மீட்பில் மாண்டு விட்டா மாமா வின் கடைசி மண் மீட்க போய்விட்டான் நான் நட்ட மாங்கன்று கிளை விட்டு பழ்ம் கொடுத்து என் பிள்ளை ருசிபார்த்து ,பசியாற மண் வேண்டும் கோமத்யின் இரு நாள் பசுகன்று பார்க்க வேண்டும் கோழியும் குஞ்சுமாக ஒரு கூட்டம் காணவேண்டும் கோவில் மணி ஒலி என் துயில் எழுப்ப வேண்டும் . வயல் வரம்பில் காலரா நடை பயில வேண்டும் விளைந்துநிட்கும் நெற்கதிர் அளைந்து வரவே…
-
- 4 replies
- 1.8k views
-
-
ஒரு அகவையை தாண்டுவதே ..... இயந்திர வாழ்கையில் .... சாதனையாக காணப்படும் .... காலத்தில் பதினெட்டாவது .... அகவையை அடையும் - யாழ் .... இணையத்தை பாராட்டாமல் .... இருக்கவே முடியாது .....!!! மண்ணுக்காக மடிந்த .... மைந்தர்களை மாவீரர் நினைவுகள் ... பகுதியிலும் .....!!! உள்ளூர் புதினங்களை ஊர் புதினம் பகுதியிலும் ..... வெளியூர் புதினத்தை ... உலகச்செய்தி பகுதியிலும் ..... சமூக பிரச்சனைகளை .... சமூக சாரளம் பகுதியிலும் .....!!! கவிஞருக்கு கவிதை பூங்காடு .... கதாசிரியருக்கு கதை கதையாம் ... தனியாக வகுத்து செய்திதரும் .... யாழ் இணையத்தை பாராட்டாமல் .... இருக்கவே முடியாது .....!!! யாழ் மண்ணுக்கு மகிமையுண்டு .... யாழ் இணையத்துக்கு வ…
-
- 1 reply
- 696 views
-
-
நாள்.. நட்சத்திரம் சொல்லி ஒரு கல்யாணம் அடுத்து வந்த ஆண் பெண் உடல் கலவி கூட அடுத்தவன் சொல்லி வைத்த சுப முகூர்த்தத்தில்.. தென்னிந்திய சினிமா பார்த்து வளைகாப்பு அது கூட சுப நேரத்தில்..! "இது அதிஸ்டக் குழந்தை" ஊராரின் வாழ்த்தொலிகளோ கரு முதல் தொட்டில் வரை..! முதல் பிறந்த தினம் வெகு கொண்டாட்டம்.. குடும்பக் "குண்டுமணிக்கு" குதூகலத் திருவிழா..! பட்டென்ன பள பளக்கும் நகையென்ன..! அழகு கொஞ்சும் என் மேனி முத்தமிடா இதழ்களில்லை பதியாத கரங்களில்லை ஜொலிக்கும் நட்சத்திரமாய் அன்று நான்..! அடுத்து வந்த ஆண்டுகளும் அளவில்லா மகிழ்ச்சி தான். பள்ளிப் பருவத்தில் சுட்டிக் குழந்தை புளுகாத ஆசிரியர் இல்லை புகழாத ஊரார் இல்லை.…
-
- 24 replies
- 1.9k views
-
-
[size=5]ஒரு கோப்பை தேநீர்... [/size] மண்புழுவினும் அதிகமாக மண்ணில் நாங்கள் உழன்றதால் எங்கள் சதைப் பிண்டங்கள் நீங்கள் வளர்க்கும் தேயிலைக்கு உரமானது. செழித்து வளர்ந்ததால் சந்தோசமாயிருந்தீர்கள்... அட்டை உறிஞ்சியது போக மிச்சமுள்ள எங்கள் குருதியேறி செம்மண் இன்னும் சிவப்பானது. மண்ணின் நிறமும் அதனால் தேயிலையின் தரமும் சேர்ந்து உயர்ந்ததையெண்ணி கர்வமடைந்தீர்கள்... உடல்சோர்வு நீங்க நீங்கள் பருகும் தேநீர் எங்கள் வியர்வையில் குளித்து வளர்ந்ததால் கொஞ்சம் உவர்ப்பாயிருந்தது. பருகுவது எங்கள் குருதியில் வளர்ந்த வியர்வையாதலால் புதுசுவையென இன்னும் இன்னும் அதிகம் பருகுனீர்கள்... அப்படியே உங்கள் பதிவேட்டில் எங்கள் எல்லோரது ப…
-
- 7 replies
- 1.4k views
-
-
எனக்கும் உனக்கும் நீதி சொல்லும் பிரதம நீதி தேவதை இன்று நீதி கேட்டு புத்தரிடம் தமிழர்களுக்கு நீதி மறுக்கும் புத்தர் கண் திறப்பாரோ ?
-
- 6 replies
- 603 views
-
-
எட்டு ஆண்டானாலும் அவலம் மாறாத நிலை வேண்டும் என்று செய்து வேடிக்கை பார்த்தாயோ கடலம்மா தாய் என்று மதித்தோர்க்கு தயவற்ற செயல் செய்தாய் பேயாக நீமாறி பெருந்துயர் இளைத்தாயே கடல் அம்மா என்று வாயார வாழ்த்திய மக்களை வசைபாட வைத்தாயே உன் நியாயமற்ற செயலால் நடுத்தெருவில் எத்தனை பேர் நாதியற்று தனிமரமாய் சிறியோரும் பெரியோரும் சின்ன பச்சிளம் சிறாரும் சிதறி எத்தனை பேர் போனவர்கள் வருவார்கள் என பொய்த்த வரவுக்காய் வழியை வழிபார்த்தபடி எத்தனை ஆண்டுகள் ஆனாலும் கூட ஆழாத் துயருடன் இன்றும் எத்தனை உள்ளங்கள் நன்றி : முகநூல்
-
- 2 replies
- 739 views
-
-
உறுதி குலையாமல் உயிர; ஈந்த உத்தமன் திலீபன் நினைவு சுமந்து திலீபன் அழைப்பது சாவையா-இந்த சின்னவயதில் அது தேவையா இன்னும் எங்கள் காதுகளுக்குள் ஒலிக்கும் உயிரின் உணர;வு வலிகள் இனியும் தொடர;ந்துவரும் துயர;தோய்ந்த நினைவு வரிகள் 26ஆண்டுகள் ஓடி மறைந்துவிட்டன இன்று போல் உள்ளது நல்லைநகர; கோவில் முன்றலில் எங்கள் தேசப்புதல்வன் தீரன் திலீபன் நீதி கோரி உயிர; ஊற்றி யாகம் புரிந்ததும் நெஞ்சு பொறுக்காமல் நாங்கள் விம்மி அழுததும் இன்று போல் உள்ளது நல்லுhர; கோவில் வீதியெங்கும் கண்ணீர; சுமந்த மக்கள் வௌ;ளமாய் நிறைந்திருந்ததும் தியாகி தீலீபன் உயிரைக் காத்திட தமிழீழப்பரப்பெங்கும் பொங்கி எழுந்து மக்கள் எழுச்சிப்போராட்டங்கள் நடத்தியதும் இன்று போலுள்ளது இதயம் கனக்கின்றது முன்வைத்த கோரிக்கை…
-
- 5 replies
- 837 views
-
-
அந்த நாட்கள் அதிகாலைச் சூரியனும் அழகுநிலவும் அணைத்துக் கொண்ட நாட்கள் பசுமை தேடிய புற்களுக்கு பால் வடித்த கண்ணீர் மழையாகி உயிர் நனைத்த நாட்கள் வழி தொலைத்த பறவைகள் கூடிக்களிப்படைந்து வெறுமையான நாட்களுக்கு இதயப் பூக்களால் அர்ச்சனை புரிந்த நாட்கள் சிதறி உடைந்த கண்ணாடித் துண்டுகளிலே சிக்கிய விம்பங்கள் போலே அவன் வடித்த புன்னகைகளில் என் முகம் புதைந்துபோன நாட்கள் அவை சந்தித்தபோதேல்லாம் பேசமொழி மறந்து விழிமொழி பேசியதுண்டு அவ்வப்போது மெளனம் துணைக்கு வந்துபோனதுண்டு.. ஏழு ஜென்ம வாழ்க்கை அந்த நாட்களுடன் ஐக்கியமானதுண்டு.. திசைமாறும் பறவைகள்தான் எனினும் இதயத்தின் பரிபாசைகளில் இணைந்து…
-
- 1 reply
- 863 views
-
-
வாடா வாடா வாடா தோழா நம்ம யாழ் களம் வந்து பார்டா தோழா.. எழுதிப் பார்ப்பம் எழுதிப் பார்ப்பம் வாடா நீயும் நானும் நீயும் நானும் ஒன்னா சேர்ந்து எழுதினா இந்த உலகம் நம்ம கையிலடா..! உன்னோட உயர்வுக்கு உன்னோட எழுத்து என்னோட உயர்வுக்கு என்னோட எழுத்து யார் எழுத்தையும் யாராலும் தடுக்க முடியாதடா யாரும் கெடுக்க முடியாதடா..! அடுத்தவன் வாயைப் பார்க்காம வாடா வாடா வந்து சுய ஆக்கமா எழுதிப் போடடா இது உன்னோட களமடா..! வாடா வாடா வாடா தோழா நம்ம யாழ் களம் வந்து பார்டா தோழா.. எழுதிப் பார்ப்பம் எழுதிப் பார்ப்பம் வாடா நீயும் நானும் நீயும் நானும் ஒன்னா சேர்ந்து எழுதினா இந்த உலகம் நம்ம கையிலடா..! அடுத்தவன் காக்காவை காவடியை தூக்கிப் போடடா …
-
- 8 replies
- 1.7k views
-
-
பூக்கள் பூப்பதற்கு காத்திருப்பதைப் போல உன் அழைப்புக்களுக்காக விழிகள் பூத்திருப்பேன்! இந்த உலகத்தில் பறக்கும் அத்தனை பட்டாம்பூச்சிகளும் என்னைச் சுற்றியே பறப்பதாய் உணர்வேன்... நீ என்னோடு பேசிக்கொண்டிருக்கும் தருணங்களில்! இத்தனை இனிமை இருப்பதாய்க் கேள்விப்பட்டால்... தேனீக்கள் உன்னை மட்டும் சுற்றியே வட்டமிடும்! நிலவும் உன்னைப் பார்க்கப் பூலோகம் வரும்! தென்றலும் உன்னைத் தேடி தெருத்தெருவாய் அலையும்! கடலலைகள் உன் காலடியில் தவங்கிடக்கும்! என்னைப் போலவே....!
-
- 0 replies
- 608 views
-
-
பல்லவி பெண்கள் இல்லாத உலகத்தில் வாழ பேயும் விரும்பாதே Girlfriend இல்லாத boysஇன் வாழ்க்கை என்றும் இனிக்காதே Tim Hortenபோகாத ஆண்களுக்கு ஒரு உற்சாகம் பிறக்காதே அட நம்பர் கொடுக்காமல் நீங்கள் போனால் Friendship வளராதே சரணம் 1 E-மெயில் அனுப்பி இன்சல்ட் செய்து disturbe disturbe செய்வோமே sms செய்து உங்களை எழுப்பி Dating Dating கேட்போமே பாரப்பா பழனியப்பா வெளிநாட்டு girls பாருங்கப்பா ஊரெல்லாம் பெரிசப்பா போடுகிற dress தான் சிறுசப்பா yahoo chat இலே searching செய்யாத handsome handsome boys நாங்கள் தானே Girlsஐ கண்டாலே wallet open பண்ணாத Good boys Good boys என்றும் நாங்கள் தானே கார்மோன் துடிப்பில் புது வைரஸ் கிருமியாய் நுழைவோம் …
-
- 8 replies
- 1.5k views
-
-
சட்டெனத் தூறிய மழைத்துளியில், முற்றாக நனைந்து போனேன்...! சாயம் போனவன் போலாகி... - காயமாகி, அம்மணமாய் அழுது நின்றேன்! வழமையாய்... நான் பேசினால், பத்து ஊருக்கு பவ்வியமாய்க் கேட்கும்...! ஆனால், பேச இயலாத ஒருவனாய்... - அகதியாய், எங்கேயோ தொலைந்து போனேன் ..! என் தாயின் முகம் மலர... மாற்று நாமம் சூடிக்கொண்டேன்! பல முகமூடி போர்த்திக்கொண்டேன்...! - ஆனால், உண்மையான என் முகம் தொலைத்து நின்றேன்! நெருப்பாய் இரு... எரிக்காதே! கனலாய் இரு ...கருக்காதே! கருத்தாய் இரு.... வருத்தாதே!!! - இறுதியில், அர்த்தமற்ற பிழையாய் ... நின்றேன் ! என் மானங்காக்க.... அழகாய் உடுத்திக்கொண்டேன்! என் பெண்டிர் விருப்பம்போல்.... வாங்கிக் கொட…
-
- 5 replies
- 1.3k views
-
-
தேம்ஸ் நதியின் புன்னகை வ.ஐ.ச.ஜெயபாலன் பாலத்தின்கீழே வாழிய தேம்ஸ் நதியே என்றபடி இறங்கியபோது `நீர் லில்லி` இலைகள் பரப்பிய உன் கரை கண்ணாடியாய் நெழிய அன்னங்களின் கீழே நீ அன்று தூக்கத்தில் நடந்தாய் தேம்ஸ். மென்காற்றில் குனிந்து வசந்தப் பூ முகம் பார்க்க நெரியும் கரையோர மரங்களின்கீழ் நடந்துவந்தோம். கழுத்தை நெழித்து சிறகை அகட்டி நீர்மீது ஓடி வான் எழுந்த அன்னப் பறவை ஒன்றின் கர்வத்தோடு மோனத் தவத்தில் முகில்களின்மீது எந்தன் கவிமனசு. சிறுமியோ நனவுகளின் புல்வெளியில் நடக்கின்றாள். நானோ தேம்ஸ் அமைதியின் தேவதை என்றேன். ”என் அம்மா மாதிரி நம்ப முடியாதவள் மாமா” என்று அந்தச் சிறுமி உன்னைக் கிண்டல் செய்தாள்.. இதே தேம்ஸ் இதே இதே இதே தே…
-
- 2 replies
- 1.8k views
-
-
தமிழ்க் குரலில் வாரவாரம் வரும் பொன்.காந்தனின் வெள்ளிப் பொழுது 02.08.2019 வெள்ளிப்பொழு 'கல்' எனும் தலைப்பில் சொற்களின் திருவிழா... பொன்.காந்தனுடன் தமிழகத்தில் இருந்து ஈழக்கவிஞர் சிவ.திவாகர் மற்றும் கவிஞர் செல்வா. 'மை' 16-08-2019 அன்று தமிழ்க் குரலில் ஒலிபரப்பாகிய பொன்.காந்தனின் வெள்ளிப் பொழுது
-
- 1 reply
- 668 views
-
-
நிழல்கள் தீண்டிய மனவறை நியங்களின் தாண்டவத்தால் நிசப்தமாகி கிடக்கிறது நிரூபனமாகிவிட்ட சில நிறுவல்கள் நியத்தை தாண்டி நிகழ்காலத்தை கூறுகின்றன இறக்க போகும் என் எதிர்காலம் நடப்புக்காலத்தால் ஆழப்படுகிறது இறந்த காலத்தின் வடுக்களும் வரும் காலத்தின் ஏக்கமும் பிண்ணிப் பிணைந்து கிடக்கிறது தலைவிரி கோலமாய் எழுந்து எதிர்காலம் அச்சமூட்டுகிறது பிணைத்திருக்கும் பிணம் தின்னும் கழுகுகளின் கர வலிமையை எண்ணி திராணியற்று போகிறது எதிரியின் நெஞ்சம் பாட…
-
- 1 reply
- 815 views
-