கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
[size=5] [/size] [size=5]சிற்றலை ஓடிவர சிறுநண்டு குழிபுக சிதறுண்டு கிடந்த சோகி சிறுகை கொண்டு சேர்த்தேன். பொறுக்கிய சோகி சேர்த்து பொதுவில வைத்து விட்டு பொத்தலானவென் பையிலிருந்த பொரி முறுக்கை விற்று வந்தேன். கடற்கரை ஓரத்தில் காலாற நடந்துவந்த கனவான்களிடம் தான் காசாக்கினேன் என் பொரி முறுக்கை. சிக்கடித்த தலையுமாய் சீரற்ற உடையுமாய் சில்லறைக்கு முறுக்குவிற்கும் சிறுபையன் தான் நான். இருக்கின்ற முறுக்கு விற்று இனிதாய் திரும்பும் வேளை இருக்குது சில்லறை இவளவும் உனக்கென்றான். எனக்கேன்றதாலோ என்னவோ ஏழைமனம் விரும்பியது எதையும் பார்க்காது ஏங்கியபடி போனதவன்பின்னே. போனவன் சேர்ந்தான் பொ…
-
- 11 replies
- 4k views
-
-
தூரம் அதிகமில்லை துயரம் இனியுமில்லை கைகட்டி நிற்பதனால்.. தமிழன்கை சோரவில்லை பொறுமையைக் காப்பதனால் பொறுப்புணர்வு மறையவில்லை.. நூறாண்டு இழப்புகள் தேடித்தரப்போவதை.. ஓராண்டு இழப்பால் உருக்குலைத்தல் விவேகமில்லை தலைவர் வீரத்தை தரம் பேசும் தகுதி தரணியில் எவர்க்குமில்லை உறவைப்பிரிந்த உயிர் உரம் கண்டதேயொழிய சோரவில்லை வீரம் மாறவில்லை மக்கள்வரிப்பணத்தால் மகிந்த கந்தக அரிவாள் செய்து தமிழனை அரிவதற்கு.. துணைபோகும் இனத்துரோகியர் வாழ்நாட்கள் நீளமில்லை கீபீர் போட்ட குண்டுகள் கிண்டிய குழிகளில் எங்கள் வயலுக்கு நீர் வார்க்கும்- சிங்களவன் பறித்த உயிரெல்லாம் போராளி ஆன்மாவில் புகுந்து உரம் சேர்க்கும்.. எரிந்த கொட்டில்கள்.. அடுக்குமாடி…
-
- 11 replies
- 2.2k views
-
-
பூ விழுந்த மனசு இன்னும் வெளிவராத கவிதைத்தொகுப்பில் இருந்து சில கிறுக்கல்கள். 1. எனக்கென உனக்கென பங்குபோட போராட்டமென்ன நிலமா ? சூரியன் கிரணம் படுமிடமெல்லாம் விரும்பி அருந்தி கொள்ளலாம் 2. மேற்கில் கரைந்து கிழக்கில் பரவும் கிரணங்கள் போல்த்தான் போராட்டமும் வெற்றி தோல்வி நிரந்தரமல்ல 3. விலைவிட்டு வளர்ந்த நகம் விரைவிலேயே ஓடிவது போல் உன்னை விட்டு விலகியதால் ஓடிந்து மடிந்து போகின்றேன் 4. வானவில்லிற்கு வண்ணமோர் வரப்பிரசாதம் என் வாசல் தேவதையே எனக்கு நீதான் வரப்பிரசாதம் 5. இரவின் சுவடுகளை தேடுவதுபோல் - இழந்துவிட்ட இளமையை தேடுகின்றோம் விரிந்து கிடக்கும் வாழ்நாளை விரயமாகவே கழிக்கின்றோம் 6. …
-
- 11 replies
- 1.9k views
-
-
சில வாரங்களின் முன்னொருத்தியின் உடலையும் அவள் அணிந்த ஆடைகளையும் அநியாயத்தின் சாட்சியமென ஆளுக்காள் படம்காட்டி செய்தியாய் செவ்வியாய் செத்துப்போனவளை பலதரம் கொன்று புதைத்தோம்….. இன்றொருத்தி 17வயதுப் பள்ளிமாணவி 76பேருடன் உடலுறவு கொண்டாளாம்….. அடி சக்கை அந்தமாதிரிச் செய்தி….. ஆளாளுக்கு விளக்கங்கள் அடங்கொய்யாலா அதுவும் சாதனைதான். மெளதீக யுத்தம் உயிர் ஆயுதம் அச்சாப் பொருத்தமான ஒப்பீடுகளும் ஒப்பனைகளும் பதின் வயது தாண்டாத 17வயதுச் சிறுமியைக் கூட விட்டு வைக்காத இனம் நாங்கள். நமக்கெல்லாம் சமூகமும் அக்கறையும் அதிகம் தான். விட்டுத் தொலையாத நாற்றங்கள் முட்டிக் கிடக்க சொகுசுக் கதிரைக்குள் சுகமாய் தட்டச்சி ஒரு தமிழச்சியைக் கூறுபோடும்…
-
- 11 replies
- 1.9k views
-
-
ஏக்கம் ஏக்கம் ஏக்கம் மனிதன் வாழ்வில் என்றும் ஏக்கம் தாய் நாட்டைப் பிரிந்த ஏக்கம் தாய் தந்தையைப் பிரிந்த ஏக்கம் தங்கை தம்பியைப் பிரிந்த ஏக்கம் வெளி நாடு போய் சேர்ந்து விட வேண்டும் என்ற ஏக்கம் வெளி மொழியைக் கற்று விட வேண்டும் என்ற ஏக்கம் வேலை ஒன்று கிடைத்து விட வேண்டும் என்ற ஏக்கம் வீடு ஒன்று வாங்கி விட வேண்டும் என்ற ஏக்கம் உறவுகளை மறந்து ஏக்கத்துடனே வேலைக்கு ஓட்டம் ஏக்கத்துடனையே எததனையோ மனதுகள் தூக்கம் ஏக்கம் ஏக்கம் மனிதனின் கடைசி மூச்சு வரை ஏக்கம் துளசி
-
- 11 replies
- 2.5k views
-
-
(விடுதலைப்புலிகளின் யாழ் மாவட்ட முன்னாள் தளபதி கேணல் கிட்டு மாமா நினைவாக...) வெடியோசை எழுந்தது எங்கள் நெஞ்சோசை அழிந்தது களத்தோடு களமாடி கோட்டைக்குள் அடித்தெழுந்த அந்தப் புயலும் ஓய்ந்தது...! தங்க தமிழீழ வேங்கையது வங்கக் கடல் நடுவே சரிந்தது...! அசோகச் சக்கரத்தின் அகோரத் தாண்டவம் - எங்கள் மாமாவின் உடல் கிழித்தது...! ஆதிக்க வெறி பிடித்த அகிம்சா தேசமது அவன் ஆன்மா குடித்துக் குதூகலித்தது...! தமிழீழ அன்னையவள் கொடிதனைச் சுமந்தவன் ஆழி தன் அலையோடு மீண்டிட்டான் தமிழ் மண்ணை...! குரலோசை எழுந்தது - அது அவன் புகழோசை சொன்னது விடியலின் தாய் மகன் விடிவெள்ளியான கதை முடிவின்றிச் சொன்னது....! தர்மம் வெல்லும் என்பது காலத்தின் கோலம் என்றத…
-
- 11 replies
- 1.9k views
-
-
ஒரு தேநீர் விடுதியும் இரு நாற்காலிகளும் ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ 324, காலி வீதி , வெள்ளவத்தை, கொழும்பு -06 சில வேளைகளில்.... சில இடங்களையும் சில சம்பவங்களையும் கூட காதல் தொற்றிக்கொள்கிறது! அதன் இனிய நினைவுகளால்... மனம் கொஞ்சம்... தன்னைத்தானே தேற்றிக்கொள்கிறது!! காத்திருப்புக்களும் சந்திப்புகளும் கைகுலுக்கிக்கொள்ளும் அழகான இடம்தான்.... அந்த தேநீர்விடுதி! வழமையான அந்த மேசையும் நாற்காலிகளும் அந்த இருவருக்காகவே காத்திருக்கும்...! காதலர்களை அமரவைத்து அழகுபார்ப்பதில் அதற்கும் கொள்ளைப் பிரியம்...!! அங்குள்ள பணியாளரைப்போலவே இவற்றிற்கும் இவர்கள் நன்கு பரிட்சயம்!!! அவளுக்காகக் காத்திருந்த பலதடவைகளில் நான் பார்த்திருக்கிறேன்.....…
-
- 11 replies
- 1.4k views
-
-
அப்பா மின்னல் அம்மா மழை குடும்பசண்டை ^^^ அம்மாவுக்கு குரங்கு அவனுக்கு தெய்வம் அவன் காதலி ^^^ இருந்தால் மனிதன் இறந்தால் பேய் உயிர் ^^^ உறவினருக்கு தேனீர் இடைக்கிடையே பேச்சு விளம்பர இடைவேளை ^^^ சந்தோசமாக இருப்பது எப்படி ..? தம்பதிக்கு கற்று கொடுக்கிறது தொலைக்காட்சி ^^^ கவிப்புயல் இனியவன் சென்ரியூ
-
- 11 replies
- 1.1k views
-
-
வான் பரணி -வ.ஐ.ச.ஜெயபாலன் மழையே வா என்கிறது என் தாய் மண். வருணா வருணா என்ற பாடல்களுடன். ஓடைகள் வற்றி வரால் மீன்கள் மூக்குளிக்கும்போது எதிரி தாங்கிகளில் நுழைந்துவிட்டான். ஜாதிய அரக்கனுக்கெதிராக நானும் தோழர்களும் எழுந்த ஊர்களில் காவல் தெய்வங்களாய் எம் பிள்ளைகள், நாம் தரத் தவறிய இரத்ததுக்கு அவர்களிடம் கந்து வட்டியும் கேட்கிறது வரலாறு, கூந்தலுட் பேனாய் யானைகள் ஊருமென் வன்னிக் காட்டு வழிகளில் தூங்கும் மலைப்பாம்புகளாய் கிடக்கும் கோடை ஆறுகள் மீது அதிருது வானம், தட்டி எழுப்புது மின்னல். இனி பறங்கி, பாலி ஆறுகள்கூட விழித்திடும். போர்கள் வென்ற கும்பகர்ணனாய் வாகைகள் பூத்த கனகராயன் ஆறு சோம்பல் முறிப்பதை போருக்கெழுமென் பிள்ளைகள…
-
- 11 replies
- 2.8k views
-
-
உன் மென் சிரிப்பால் மெய்மறந்து கண்கள் மயங்க.... உன் மென் ஸ்பரிசங்கள்... உணர்வுக்குள் ஊடுருவி உலுப்பி நிறுத்த... நாளங்களின் அதிர்வுகள் நாதங்களாக.... இன்ப சங்கீதமாக... என் உதிரத்தை உன் இதழ்களுக்கிடையே சுரக்க... உயிருக்குள் இன்பமாய் வலிக்க.. தமிழ் சினிமாவில் தந்தையே வில்லனாவது போல்.... நமக்கிடையேயும் ஒரு வில்லன்.... தட்டி உலுப்புகிறான் “ஏய் ஊட்டிக் கொண்டே உறங்கி விடாதே... பிள்ளைக்குப் புரைக்கேறும்..” அது உன் அப்பா... http://poonka.blogspot.co.uk/2009/11/blog-post_2903.html
-
- 11 replies
- 1.6k views
-
-
தமிழீழம் மலர்ந்து விடும்......!!! கோட்டை பகை கோட்டைக்குள்ளே கொடியேறும்..... புலி கொடியேற்றி ஆளும் ஒரு காலம் வரும்.... பலம் கொண்ட படையாகி பாய்ந்து வரும்.... பாரெல்லாம் மக்கள் ஆடி பாடும் காலம் வரும்.... பகை பிச்சை கேட்டு உலகெல்லாம் ஏறி ஓடும்.... பிணமாகி பகை உடல்கள் அங்கு விழும்... ஜந்தாண்டு முடிவிற்குள்ளே அவை நடக்கும்..... ஜந்தாயிரம் படைகள் அங்கு அழிநதொழியும்..;... அவலத்திலே தென்னிலங்கை மூழ்கியெழும்... ஆத்திரத்தில் அந்த மக்கள் பொங்கியெழும்... அதை ஆக்கிவித்த ஆட்சிகளை கலைத்தெறியும்... வேண்டமது யுத்தமென்று வேண்டியழும்.... தானக வந்துயதே தானே த…
-
- 11 replies
- 1.7k views
-
-
[size=3] [/size] [size=3] பெண் ஒன்று கண்டேன்… மழையில் நனைந்தவொரு மான் மரத்தடியில் ஒதுங்கியதுபோல் மான்விழி மங்கையவள் மருண்டோடி மாமரத்தடியில் மறைந்து நின்றாள். கார்மேகம் அசைவது போல்- அவள் கருங்கூந்தல் ஆடியது. கண்வைத்தேன். காய் வேல்கள் பாய்ந்தவைபோல்- அவள் கரு விழிகள் என்மீது வேல்பட்டு வீழ்ந்த வேங்கைபோல் நான் ஆனேன் மீண்டும் வெருண்டசைந்து அப்; பக்கம் மெதுவாகப் பாதி விழிவைத்தேன். கோபங்கொண்டென்மீது கொதித்தெழுந்தாள். ஆடையெல்லாம் பாவை உடலழகில் ஒட்டியது அழகு மயில் நனைந்ததுபோல் அதில் நீர் கொட்டியது தோகைமயில் சிறகுவிரித்துபோல் உடல் அசைக்க துளித்துளியாய் நீர்மணிகள் என்மீது சிதறினவே. பனித்துளி பட்டுச் சிலிர்த்த மலர்போலே- நான்…
-
- 11 replies
- 1.1k views
-
-
இன்று தமிழ்த்தேசத்தின் புதல்வன் பாலச்சந்திரன் பிறந்தநாள். சிங்களக் கவிஞர் மஞ்சுள வெடிவர்த்தன பாலச்சந்திரன் நினைவாக எழுதிய கவிதை இது. # பாலச்சந்திரன் சிறு நிலா சிறு நிலாவா? அதைச் சொல்லவும்கூடுமோ? பத்துத் திக்கும் சுடரொளி வீசிய சூரியனைக் கொன்றது சிங்கம் தாய்நிலத்தைச் சூழ்ந்த குருதியால் சுவரோவியங்கள் வரையப்படுகின்றன சினத்துடன் சிங்கம் சிறிய நிலாவையும் கொன்றபோது முகில்களின் திரையைக் கிழித்து உள்ளே ஒளிந்தது நிலா பயத்தில் ஒடுங்கின நட்சத்திரங்கள் இருளின் சஞ்சாரம் நிலா சூரியனாக மாறுகிற ஒரு நாள் வரும் அப்போது எங்களுக்கு ஒளிவதற்கும் இடம் கிடையாது. https://www.facebook.com/parani.krishnarajani?hc_location=stream
-
- 11 replies
- 1.6k views
-
-
நெஞ்சு (உ)ரசிய பூவே... --------------- செவ்வானச் சிவப்புக் கன்னம் சிந்தாகும் முல்லைச் சிரிப்பு முன்னாடும் இரண்டு கண்கள் முத்தாடும் செவ் விதழ்கள் தள்ளாடும் வாழைக் கால்கள் தடுமாறும் அந்த நினைவு பந்தாடும் உந்தன் அங்கம் பஞ்சாகும் எந்தன் இதயம் முகம் துடைக்கும் காற்றில் முந்தானை அது சரிய தீ வளர்த்த மெழுகாய் தீப்பிடித்து நான் உருக கண் மூடி ரசிப்பதேன் காதல் நோயை வளர்ப்பதேன் மனம் அமிழ்ந்து போகுமட்டும் மது நிரப்பி வைப்பதேன் சொல் ஆடும் சுந்தரம் செதுக்கி வைத்த சிற்பமிது வில் ஆடும் புருவம் விளை யாடும் பருவமிது கொன்று கொன்று போகிறாய் கொஞ்சம் மீதி வைக்கிறாய் நெஞ்சு (உ) ரசிய பூவே கொஞ்சி இருக்க வந்துவிடு -எல்…
-
- 11 replies
- 1.9k views
-
-
காதலின் வலி நீண்டிருந்த கடற்கரை மணல் வந்து கரையை தொட்டு விட்டு மீளும் அலை கடலை அள்ளி தின்று ஏப்பம் விடத் துடிக்கும் வானம் கடலுடன் கைகோர்த்தபடி கட்டித் தழுவியது நடுக்கடலில் தவிக்குது துடுப்பிழந்த ஒரு படகு கரைசேரும் ஆவலுடன் காதலில் விழுந்த என் இதயம் போல - தியா -
-
- 11 replies
- 2.8k views
-
-
மறுவாழ்வு பச்சை வர்ண ஆடைகட்டி பல நிறத்தில் மலர்கள் சூடி பார்ப்பவர்கள் நெஞ்சத்தினை பறித்திழுக்கும் அழகிகள் காலம் செய்த கோலத்தால் கட்டழகு தளர்ந்து பூவிழந்து பொலிவிழந்து போர்த்திருந்த போர்வை கழன்று ஆண்டிக்கோலம் கொண்டு: அல்லவையாய் நின்றபோது வெள்ளாடை கொடுத்து விதவைக்கோலம் ஆக்கினான் ஒருவன். ஏன் இந்த நிலையென்று ஏக்கமாய் நான் பார்த்தபோது வேடிக்கை பார்க்காதீர்; - நாங்கள் விதவையாக்கப்பட்டவர்கள் பூத்துக் குலுங்கி புதுப்பொலிவு பெற காலம் கைகொடுக்கும் அதுவரை காத்திருப்போம் என்றார்கள். செண்பகன் 23.10.13
-
- 11 replies
- 1.2k views
-
-
மாசி வந்தால் மனசில் ஒரு படபடப்பு .. மயங்காத மங்கை மனதை உடைக்க முன் .. மறுபடியும் போட்டுருவம் ஒரு விண்ணப்பம் ... கண்ணே என்று தொடங்கவா ;இல்லை பெண்ணே ... என்று பழைய பல்லவி பாடவா ,என் செல்லமே .. எல்லோரும் தாமரைக்கு ..ரோஜாக்கு ஆசைப்பட ... நான் மட்டும் செந்தாமரைக்கு ஆசைப்பட்டது தப்பா .. சேறு உன்னை சுற்றித்தானே இருக்கு உன்னில் இல்லையே .. உன்னை பறிக்குவரை என்னிலும் ஒட்டி பிடிக்கும் .. உன்னை கைப்பற்றி விட்டால் நான் கழுவி விடுவேன் .. உள்ளம் அது என்னது மெய்யடி நீ எந்தன் கவியடி .. காதலர் தினம் வேஷம் உன் அப்பன் மனது விஷம் .. என் அப்பத்தா பார்ப்பா தோஷம் நானோ உன் பாசம் .. என்னை கைகழுவி போகாதே மழை மேகமே ...நான் நெருப்பை உண்ணும் கோழியே உனக்கு கட்டுவேன் தாலியே .. ஜா…
-
- 11 replies
- 1.2k views
-
-
மேஜர் சிட்டு 16ம் ஆண்டு நினைவோடு நாங்கள் காற்றாய் வருகிறாய் தேசக்கனலாய் திரிகிறாய்…! காற்றலையின் இளையெங்கும் கவிதையாய் வாழ்கிறாய்…! ஊற்றாய் இசையின் மூச்சாய் உலகெங்கும் உலவித் திரிகிறாய்….! எங்கள் காதுகளில் உன் கானம் தீமூட்டி எழுவிக்கும் தீர்க்கமாய் ஒலிக்கிறாய்…..! ‘மேஜர் சிட்டுவாய்’ தமிழ் வாழும் உலகெங்கும் தமிழிசை வாழும் திசையெங்கும் தமிழர் வாழும் வரை வாழ்வாய்…..! அரும்பு மீசைக்கனவறுத்து ஆழ்மனக் காதல் நினைவறுத்து ஈழக்காதல் இதயத்தில் சுமந்து இலட்சியக்கனவோடு போன புலியே….! வருவாயொரு பொழுது மீண்டும் பாடியும் பகிடிகள் விட்டும் பல கதைகள் பேசியும் கரைந்த பொழுதொன்றை எதிர்பார்த்து….! இன்றுன் நினைவுகள் கரையும் 16ம் ஆண்டு மீள…
-
- 11 replies
- 889 views
-
-
என் முறை வரும்போது... கருவுக்குள் என்னைச் சுமந்து கருச்சிதையாமல் என்னைக் காத்து பத்திரமாய் இப்புவிதனில் பூக்கவைத்து ஆடும் தொட்டிலுக்குள் ஆடவிட்டாயே அம்மா காலில் சக்கரத்தை கட்டினாற் போன்று வேலை வேலை என்றே நிதம் நீங்கள் இருக்க பால் போத்தலுடன் நான் இங்கே... பால் மணம் மாறா மலர் படுக்கைமீதினிலே அழத்துடிக்கும் என் வாய்க்குள் சூப்பியே பூட்டுகளாக நானும் காப்பகத்தின் கைகளில் அழுதபடியே நிழல்களாய் தொடர்ந்த காட்சிதனைக் காண அழும் எந்தன் கண்ணீரும் திரையாகிப்போனது என் முறை எனக்கும் வரும்போது அங்கே என் நிலையில் நீங்களும் அங்கே காப்பகத்தில் வருவேன் நானும் பால்போச்சியுடன் அல்ல வாசம் பரப்பிய மலர்ச்செண்டுடன்
-
- 11 replies
- 2.2k views
-
-
சிங்கள அரசின் பொருளாதாரத்தை சிதைப்போம்_அவன்... சிரசுக்கு வைப்போம் ஆப்பு சிலேடையாய் இணையத்தில் மட்டும்... சிங்கம் போல சிலிர்ப்போம் சிந்திய ரத்தம் காயும்முன்னே... சிங்களவனுக்கு சீர் பல கொடுப்போம் நலன்புரிமுகாம் எனும் நரகத்தில்..... நம் உறவுகள் படும் துன்பத்திலும் நம்மில் சிலர் செய்யும் செயலை.. நான் எப்படிச் சொல்ல.........? நாற்பதாயிரம் ரூபா கொடுத்தால்... நாளைக்கே ஆளைக்காட்டுவனாம். இருபதாயிரம் கொடுத்தால்... இருசில நிமிடம் போனில் கதைக்கலாமாம் ஜந்து லட்சம் கொடுத்தால் வெளியே விடுவானாம்... காலைப் பிடிச்சுக் கெஞ்சிக்கதறினால் சாப்பாடு கொடுக்கலாமாம்.... விடுவோமா நாம்...? ஆடடிச்சு குழம்பு வச்சு... பூநகரி மொட்டைக்க…
-
- 11 replies
- 1.6k views
-
-
அதிர்ஸ்டம் என்பது ஒரு ஆண் தனது மனைவியின் முதல் காதலனாக இருப்பது.. அதிர்ஸ்டம் என்பது ஒரு பெண் தனது கணவனின் கடைசி காதலியாக இருப்பது... இந்த இரண்டு வசனங்களிளும் ஏகப்பட்ட கருத்துகள் இருக்கின்றன....உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்... வாழ்க்கையில் அனுபவமுள்ளவர்களின் கருத்துக்கள் இளையோருக்கு நல்ல அறிவுரையாக அமையும் என நம்புகின்றேன்.
-
- 11 replies
- 2.2k views
-
-
என் இதயத்துக்குள் இன்னொரு இதயம் சுகமாய் வீழ்ந்த அந்த நொடிப் பொழுது அவன் சுவாசம் எனைத் தீண்ட என் மனது காதலை பூத்த அந்த நாழிகை அவன் பார்வைகளால் என் இதயத்துக்குள் சித்திரம் வரைந்த அந்த மணித்துளிகள் அவன் நினைவுகள் என் மனதுக்குள் இறங்கிய தருணங்கள் இவை எல்லாவற்றையும் நினைத்திடும் பொழுது அவன் நினைவுகள் உயிர் பெற்று என் பொழுதுகளை அவிய வைத்து பசியாறிக் கொள்கின்றது... இரக்கமின்றி.. அவன் நினைவுகள் என் இதயத்தை தீண்டி விடாமல் வேலி போடுகின்றேன் - இருந்தும் அவை இதயத்தை தாண்டி -என்னை முழுவதும் ஆக்கிரமித்து படர்கின்றதே... ஒரு வேளை அவன் நினைவுகள் பாதீனியம் போலவோ? நான் அழிக்க அழிக்க மீண்டும் முளைக்கின்றதே.. என் …
-
- 11 replies
- 1.2k views
-
-
வார்த்தை தவற விட்டால் ........... வார்த்தை வழி தவறி விட்டாய் இதயம் வலிக்கிறது ,தெரியுமா? சொன்ன சொல்லுக்கு நீ அடிமை சொல்லாத சொல் உனக்கு அடிமை புரிகிறதா உன் வாய் சொல் இதயத்தின் நிறைவால் வாய் பேசும் பேசும் வார்த்தயில் நயமிருக்கும் கனி இருக்க ஏன் தான்காய் உனக்கு முனிவன் ஒருவன் அறிவாளியை காட்டு வழியில் சந்தித்தான் பிடித்து வா ஒரு கோழி இத்தூரம் இருந்து அத்தூரம் வரை என்னுடன் கூட நடந்து வா வரும் போது ஒவ்வொரு சிறகை பிடுங்கி விடு ....அத்தூரம் வரை முனிவனும் அவிதம் செய்த்ட்டான் அத்தூரம் அடைந்ததுமே தோலுரித்த கோழிக்கு கொண்டுவா சிறகேலாம் காற்றில் பறந்த சிறகுக்கு முனிவன் எங்கே போவான் .... (தொப்பி அள…
-
- 11 replies
- 2.7k views
- 1 follower
-
-
(ஆறுவருடங்கள் முதல் எழுதிய கவிதையிது. இன்று பழைய தூசுதட்டியதில் கண்ணில் எட்டியதை இணைக்கிறேன்) ஞாபகங்களுடன் இன்றும்.... மீண்டும் சந்திப்பதாய் ஒரு மாலைநேர ஈரக்காற்றின் உவர்ப்போடு அழுததாய் ஞாபகம். தாஜ்மகால் பற்றியும் தலைசிறந்த காதல் இலக்கியம் தந்த ஜிப்ரான் பற்றியும் நிறையவே பகிர்தல்கள். ஒரு தாஜ்மகால் ஒரு முறிந்த சிறகு எங்களுக்காயும் எழுதப்படுமெனும் எண்ணமேயில்லை கௌரவப் பிரிதலாய் அது நீண்டதொரு தசாப்தம் நிறைவாகிறது. என்றாவது நினைவு வரும் சிறுவயது ஞாபகம் போல் எப்போதாவது வந்துபோகும் ஞாபகங்களுடன் இன்றும்.... காதலென்ற …
-
- 11 replies
- 1.6k views
-
-
காதலில் தொலைந்தேன்...... கவிதை வலியாக- -இளங்கவி அந்திப் பொழுது அழகன பூஞ்சோலையில்... ரோஜா குளியலில் நான் திழைத்திருக்க மல்லிகைக் குவியலாய் என் மனங்கவர அவள் வந்தாள்.... என் முன்னால் முட்செடியில் ரோஜாக்கள்... முழு நிலவாய் அவள் முகம்... மூன்றாம் பிறை நிலவு... நான் முனிவனா என்ன முகங்குனிந்து செல்ல...! சனங்கள் நெரிசலிலும் அவள் நடையை அழகாய் ரசித்திருக்க...... யாரோ ஒருவன் அடித்துவிட்டான் என் மணிபேசை... அதைத் தேடவா..? அவளைத் தொடர்வதா...? மனதில் உடன் பதில் உடனே தொடர் என்று.... காரணம்..கணப்பொழுதில் உன் கண்களினால் உன் மனதைச் சென்றடைந்தவள்... அவளுக்காய் உனை மறந்து உன் உடமையைத் தொலைத்தவன்... எனவே அவள் …
-
- 11 replies
- 1.2k views
-