கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
மறக்கத்தெரியவில்லை ........ உயிரே உயிரே ஏன் மறந்தாய் எனை ? உறவுகள்தான் சொந்தமில்லை நீயும் இல்லையா எனக்கு? உன்னுடன் பேசாவிட்டால் நான் ஊமையடி உன்னை பார்க்காத கண்களும் குருடே எனக்கு ஆலையில் இட்டவை அழியாமல் வந்திடுமோ ? காதலில் விழுந்த மனம் காயமில்லாமல் போய்விடுமோ ? காவியக் காதலது காதலே கேட்டது கண்டதும் காதலது அனுபவித்துப் பார்த்தது என் உயிரது மூச்சினிலே இருக்குமென்றால் மூச்சது உன் பேச்சினிலே இருக்குதடி மௌனம்தான் உன் பதிலா எனக்கு மரணமே அதற்கு பரிசு எனக்கு உன் பேச்சு கூட்டியது என் ஆயுளை இப்போது உன் மௌனம் கொல்கிறது என் ஆயுளை போகின்றாயே எனை விட்டு நெடுந்தூரம் போய்விட்டது என் மனம் அத்தூரம் பிடிவாதம் மறைக்கின்றதா உன் கண்ணை பிடி…
-
- 42 replies
- 6.5k views
-
-
முரண் இறைவனின் வாகனம் என்றான் நாயை அவதாரம் என்றான் பன்றியை இறைவனே என்றான் குரங்கை இவனே திட்டினான் என்னை ~நாயே!பன்றியே!குரங்கே!
-
- 42 replies
- 10.1k views
-
-
சிறையிலே வாடும் பெண்புலிக் கூட்டங்கள்........ கவிதை - இளங்கவி..... மனதிலே பட்டாம் பூச்சிகள் பறக்கும் நினைவுகள்..... காளைகள் பேச்சில் கிறங்கும் உணர்வுகள்..... பொத்தி வைப்பதில் பெட்டகம் போல் ஆசைகள்...... காதல் நினைவில் தென்றல் போல் குளிர்ச்சிகள்.... திராட்சை கண் கொண்டு ஓர் தினுசாய்ப் பார்ப்பாள்... நாம் ஓடிய சயிக்கிளும் உடைந்து விழுந்திடும்.... ஒழித்து நின்று மெதுவாகச் சிரிப்பாள் பசியால் ஒட்டிய வயிறும் உணவால் நிரம்பிடும்.... ஒரே பார்வையில் வா என்றும் சொல்லுவாள்..... போ என்றும் கலைப்பாள்...... அது புரியாமல் நம் சித்தம் கலங்கிடும்...... இப்படிச் சிக்க வைத்து சிரிக்க வைக்கும் வைத்தியம் தெரிந்த…
-
- 42 replies
- 5k views
-
-
ஜீவனே வா..! உயிரதில் ஒளிந்து கிடக்கிறான்.. எந்தன் உறக்கத்தை கொன்று தொலைக்கிறான்... எனை கைப்பிடிக்க பிறந்த கண்ணன்-அவன் கமலம் போல் நிறம் கொண்ட கள்ளன்! என் மனசின் ஓசை அறிவானோ? தன் மனசில் சிறை ஒன்று தருவானோ? உதிரமாய் என்னுள் வருவானோ? தன் உயிரினில் பாதி தருவானோ? தவமிருக்கும் நந்தவனமென்றானேன் நீ தந்துவிடு உன்னை.... மழை சலவை செய்த மல்லிகை மொட்டு என்றாவேன்... ஜீவனே வா.... என் உயிரை முழுதாய் எனக்கு திருப்பி தா...!
-
- 42 replies
- 6k views
-
-
பின் மண்டையில் சுடுபட்டு... நான் வீழ்ந்தபோது, என் மூளைநரம்புகளின் அதிர்வுகளை... நீங்கள் புரிந்திருக்க வாய்ப்பில்லைத்தான்!!! வெறும் செய்தியாகத்தான்.... அதுவும் உங்களுக்கு இருந்திருக்கலாம்!!! சாகப் போகின்றோம்.... எனும்போது, "கடைசி ஆசை" என்றொன்று..... எனக்கும் இருந்தது! இயலாமையுடன் எதிர்ப்பட்ட எண்ணங்களில்... யாரேனும் எம்மை காப்பாற்ற வரமாட்டார்களா? எனக் கூட, எண்ணத் தோன்றவில்லை! அனாதையாகி நிற்கும் தாய்மண்ணில்.... நாங்களும் நாதியற்றுத்தான் நின்றோம்!!! பிரடி மயிரைத் தொட்டு... கனலாய் வந்த தோட்டா.... விரைவாகத் துளைபோட்டு... மெதுவாகச் சுழன்று, என் மூளை திருவி... வலக்கண் வழியே, வெளியே வர.... பீறிட்ட இரத்தம்... தொடர்ந்தோடியும், எனக்கு வலிக்கவேயில்…
-
- 42 replies
- 4.7k views
-
-
சொல்வனம் படம்: கே.ராஜசேகரன் அன்பு எனும் நான் என் அன்பு ஒரு குருட்டுப் பிச்சைக்காரனின் கைத்தடி மனமுவந்து பெறும் திருநங்கையின் ஆசி குஷ்டரோகியின் நாற்பட்ட புண்ணுக்கான களிம்பு நிறைமாதக் கர்ப்பிணியின் மசக்கை முதிர்கன்னி எதிர்நோக்கும் ஆளரவமற்ற தனிமை ஊமைச்சிறுமி யாசகம் பெற்ற ஐந்து ரூபாய் பணம் மடி முட்டிக் கவ்வும் மறியின் காம்பு இளங்கன்று மேனியை வருடும் பசுவின் நா வானம் பார்த்த வறண்ட பூமியின் முதல் தூத்தல் கால்கடுக்கக் காத்திருக்கும் முதியவளின் கடைசிப்பேருந்து தடம் மறந்த குட்டியானைச் செவிமடுக்கும் தாய் யானைப் பிளிறல் சத்தம் கலைமான்கள் அருந்தும் காட்டுச்சுனை இணைக்கென பாதியிரவில் பார்சலாகும் மூன்று பரோட்டா முதுகாவலாளியின் குட்டித் தூக…
-
- 41 replies
- 18.8k views
-
-
கரை தேடும் அலை மீண்டு(ம்) கடல் சேர்கிறது இலைஉ திரும் மரம் மீண்டும் துளிர் விடுகிறது மண் வீழும் நீரும் ஆவியாய் விண் மீள்கிறது என்ன தான் விசித்திரமோ? பிரிந்து போன நம் காதல் மட்டும் இன்னும் உயிர்ப்படைய வில்லை தரித்து நிற்கும் புகைவண்டி மீண்டும் பயணிக்கிறது இடைவேளைக்குப் பின்னரும் திரைப்படம் தொடர்கிறது நின்று போன யுத்தம் மீண்டும் நிகழ்கிறது என்ன தான் விசித்திரமோ? நின்று போன நம் காதல் மட்டும் மறுபடி தொடரவே யில்லை :wink:
-
- 41 replies
- 4.5k views
-
-
தோற்றுப்போனவர்களின் பாடல் சிங்களத்தில்; மொழிபெயர்ப்பு: அஜித் ஹேரத் பிரசுரம்: ஜேடிஎஸ் சிங்களம் பாசனா அபேவர்த்தன http://www.jdslanka....-05-27-13-16-53 POEM WITH DHEPAM TV INTERVIEW Listen My poem and interview http://www.facebook.com/reqs.php?fcode=56c1a1166&f=1281801813#!/profile.php?id=826038684&v=app_2392950137 தோற்றுப் போனவர்களின் பாடல் எல்லா திசைகளில் இருந்தும் எழுந்து அறைகிறது வெற்றி பெற்றவர்களின் பாடல். பாடலின் உச்சம் எச்சிலாய் எங்கள் முகத்தில் உமிழ் படுகிறபோதும் அவர்கள் அஞ்சவே செய்வார்கள். ஏனெனா? அவர்களிடம் தர்மத்தின் கவசம் இல்லையே.. எரிந்த மேச்சல் நிலத்தின் சாம்பரில் துளிர்க்கும் புற்களின் பாடலைப்…
-
- 41 replies
- 10.5k views
-
-
காற்றே நலமா? என்னை தாங்கி நின்ற தாய் நிலமே நலமா? கடலே நலமா? அலையே நலமா? கரை தூங்கும்-கட்டுமரமே நீ- சுகமா? மரத்தடி பிள்ளையாரே நலமா? எங்கள் மனங்களில் வாழும் மறவர் குலமே நீங்களும் நலமா? ஒற்றை பனை மரமே - நலமா? உயிர்வாழ பால் தந்த பசுவே நீயும் நலமா? பள்ளிக் கூடமே நீ நலமா? பாடம் சொல்லி தந்த - குருவே நீங்களூம் நலமா? முரட்டு வீதியே நீ நலமா? அதில் முக்கி முக்கி போகும் மாட்டுவண்டிலே நீ நலமா? தோழர்களே நீங்க நலமா? தோழியரே நீரும் சுகமா? முச்சை கயிறு அறுந்து போக ஓடி போன நான் விட்ட பட்டமே நீ நலமா? எங்கு நீ இருந்தாலும் என்னையும் கேளேன் "நீ நலமா?" வயல் வெளியே நலமா? வரம்புகளே நீங்கள் சுகமா? ஆழக்கிணறே நீ ந…
-
- 41 replies
- 6.6k views
-
-
சேலைத் தலைப்பில்தான் சேரத் தொடங்கினோம்! சூடான பாலை-வனத்திலே .... நீராடினோம்!! என் அங்கத்தில் ஒரு கை மட்டுந்தான் அங்கிருந்தது! மற்றையவை எல்லாம் மற்றவை நாடி... தேடத் துணிந்தது!! தடுத்தவள் கைகளில் உணர்ந்த நாற்குணமும் - என் முற்றுந்துறந்த "போர்க்குணத்தில்" அடங்கிப் போனதோ என்னவோ??? பெண்மையை புதிதாய்..... பார்த்த துடிப்பு! பருவங்களுக்கே.... உரிய வெடிப்பு!!! இதுவரை விஞ்ஞானம் கண்டுபிடிக்காத வேகத்தில், நம் பயணம் தொடர்ந்தபோதும்..., சொர்க்கம் அருகில் வந்து நின்றபோதும்..., பயண நேரங்கள் நீடிக்க வேண்டுமென பேராசைப்பட்டது ஆசை!! மூடியும் மூடாத விழிகள்... தேடிடும் வழிகள்... அந்நியம் பார்க்காமல் எழுப்பிய ஒலிகள் - அத்தோடு பாதி தெரிந்த உருவங்கள்... தெறி…
-
- 41 replies
- 3.3k views
-
-
மனைவி என்பவள் மனித வடிவில் தெய்வம் .................................................. அன்னை ஒரு பிறவி தருவாள் அடுத்தடுத்து பல பிறவி.... உன் மேல் ஆசை கொண்டவள் தருவாள். மண்ணில் தன் வாழ்வு முடியும் வரை உன்னை சுத்தி சுத்தியே வந்து.. உனக்கு முன்னமே தான் சாக நினைப்பாள் தன்னை உனக்கு தந்தவளை... தரணியே நீதான் என்று வழ்பவளை.. தருணம் கிடைக்கும் போதெல்லாம் நாய் பேய் என்று நாக்கிழந்து பேசும் மனிதா ஒரு வேளை அவளுக்கு முதலாய் உன் ஆவி பிரிந்தால் உண்மையாய் உனக்காய் அழ உலகில் ஒருத்தி அவள் மட்டுமே இருப்பாள்! போ.. போ....? நரம்பில்லா நாக்கு ஆயிரமும் பேசும்.அதற்கு மேலும் ...!
-
- 40 replies
- 8.6k views
-
-
தம்பி பாத்து மெதுவா ஆடு- உன் காலடிக்கு கீழே இன்னொரு “கிருசாந்தி” புதைக்கப்பட்டிருக்கலாம். நீ பிடித்திருக்கும் “பியர்” போத்தலுக்குள்ளே கனடாவில் குளிரிலும் பனியிலும் நித்திரையில்லாமல் ஓடி ஒடி உழைக்கும் - உன் அண்ணனின் வியர்வை இருக்கிறது. சிந்தாமல் வீணாக்காமல் குடி..!!! கனடாவில் உன் அண்ணன் கடற்கரை பக்கம் போனதேயில்லை... அதற்கு நேரமும் இல்லை ... நிம்மதியும் இல்லை...!! “கசூறினா” கடற்கரையில் “கையேஸ்” வாகனம் “கயர்” பண்ணி நீ காற்று வாங்கு... உன் அண்ணன் மூச்சு வாங்கி உழைக்கும் காசில்...!!! என் தம்பி “கம்பஸ்” என்று கருவத்தோடு உன் அண்ணன் அவன் தம்பி நீயோ ஒண்டரைக்காலில் “பைலா” பாடு.. நீ “கலோ” என்றால் உனக்கு “காசு” வரும். அந்த காசைத்தேடி நாலு “கூட்டு” வரும். …
-
- 40 replies
- 3.1k views
-
-
இலக்கிய உலகில் நாயை அடிப்படையாக வைத்து பலர் கவிதை எழுதியிருக்கிறார்கள். இந்த நாய்க் கவிதைகள் பல சர்ச்சைகளுக்கும் ஆளாகி இருக்கின்றன. ஞானக் கூத்தன் எழுதிய ஒரு நாய்க் கவிதை அடிதடிவரை கொண்டு போய் விட்டது. ஈழத்தில் என்னுடைய ஊரில் இருந்த ஒரு நாய் பற்றி நானும் ஒரு கவிதை எழுதியிருக்கிறேன். படித்துவிட்டு கருத்துச் சொல்லுங்கள் நாய்க் கவிதை அது ஒரு அழகிய கிராமம் அங்கே மனிதர்களோடு ஒரு நாயும் இருந்தது நன்றியுள்ளவை என்ற அடைமொழிக்குள் தன்னையும் அடைத்துக்கொண்ட அந்த நாய் ஒரு விசர் நாய் என்பது பின்புதான் புரிந்தது அந்த நாய் வருவோரையும் கடித்தது போவோரையும் கடித்தது - உணவு தருவோரையும் கடித்தது ஊர்மக்கள் பொறுப்பானவர்களிடம் முறையிட்டார்கள் பொறுப…
-
- 40 replies
- 16.7k views
-
-
குதிரைக்கு கொம்பு முளைத்த காலமிருந்து கற்பனைக் குதிரைகளின் இனப்பெருக்கத்திற்கும் குறைவில்லை..! களத்தில் அன்று ஒரு லங்காபுவத்..! கடல் கடந்த தேசங்களில் இன்று எல்லாமே அதுவாய்…! இல்லாத… பிரபா அணி கிட்டு அணி சண்டை..! இருந்த… கிட்டு மீது பொட்டு தாக்கு பொட்டு மீது மாத்தையா தாக்கு மாத்தையா மீது யோகி தாக்கு யோகி மீது கரடி தாக்கு….. இப்படியே திண்ணைப் பேச்சில் பொழுது கழித்த கூட்டம் புலம்பெயர்ந்து மட்டும் திருந்தவா போகுது..??! இறுதியில்… சூசை மகன் மீது பிரபா தாக்கு பிரபா மீது சூசை கடுப்பு… அன்ரன் மீது பிரபா விசனம் விசனம் மீது பிரபா கொலைவெறி… போராட்டம் நெடுகிலும் எம்மவரின் கற்பனைக் குதிரைகளின் தடாலடி ஓட்டப் போட்டிகளுக்கும் குறைச்சலில்ல…
-
- 40 replies
- 3.1k views
-
-
நேற்றுத்தான் மொட்டானேன்.. ஆயிரம் கனவுகள் தாங்கி விடிகாலை சூரியத் தழுவலில்.. பூவானேன்..! பனிக் குளியலில் மலர்ந்த என் தளிருடல்.. கூவி வரும் சிங்களத்தான் வீசும் செல்லுக்குக் கருகிய ஈழத்தமிழ் பிஞ்சாய்.. பெப். 14 நாளில் கசங்கிக் கருகிப்போகும். மனித விதி சமைத்த வேளை வரும் பரிசுப் பொருளாக பறித்துப் பரிமாற பாடையேறும் என் உடல்..! சோடி சோடியாய் அலையும் மனிதப் பதர்களின் கரங்கள் கசக்க.. கால்களில் மிதிபடும்..! மனசெல்லாம் கள்ளம் வைத்து நடக்கும் காதல்.. குத்தாட்டம் என் இறுதி யாத்திரையில்…! அது தான் வலண்டைன்ஸ் டே என் சாவுக்கு குறித்த நாள்..!! எங்கோ ஒரு மூலையில…
-
- 40 replies
- 6.6k views
-
-
[size=5]மண்ணின் வாசனை,[/size] [size=5]மனதை நெருடுகின்றது![/size] [size=5]நினைவுகள் பின்னிப் பிணைந்து,[/size] [size=5]கண்ணாமூச்சி விளையாடுகின்றன![/size] [size=5]உப்புக் கலந்த காற்றின் நினைவில்,[/size] [size=5]நாசித் துவாரங்களின் அடைப்புக்களும்,[/size] [size=5]விலகி வழி விடுகின்றன![/size] [size=5]ஏனிந்தப் பிணைப்பு என்பதை,[/size] [size=5]அறிய மனது துடிக்கிறது?[/size] [size=5]அந்த மண்ணின் நினைவில்,[/size] [size=5]உடம்பின் உழைவுகள் கூட,[/size] [size=5]ஒவ்வொன்றாய் விடை பெறுகின்றன![/size] [size=5]காலைப் பொழுதின் புதுமையில்,,[/size] [size=5]கெக்கலித்துச் சிரிக்கும் பறவைகளே![/size] [size=5]உங்கள் கீதங்களில் உயிர்ப்பு இல்லை![/size] [size=5]எங்கள் குயில…
-
- 40 replies
- 3.4k views
-
-
என்னைச் சுற்றிப் பெண்கள் அம்மா உயிர் உலுக்கி உலகுக்குள் கொண்டு வந்தாள்.. ஊனை உருக்கிப்பருகத்தந்தாள்.. என்னைச் செதுக்கித் தமிழனாய் செய்தாள்!.. தங்கை எனக்காக அழுவாள்.. என்னையும் அழவைப்பாள்.. என் எச்சம் அருந்தியவள்.. ஆருயிர் நண்பியாயும் அழகிய உறவாயும் வந்த...என் தாய்வீட்டுக் கடமை. நண்பி அவசரமாய் வரும் ஆறுதல் வார்த்தைக்கு சொந்தக்காரி..என் வெற்றிக்கு குதூகலிக்கும் முதல் நலன்விரும்பி.. கல்யாணமான பின்தான் காணாமல் போய்விட்டாள்!! காதலி வற்றாத தமிழ் வார்த்தைககடலில் குதித்தாள்;..கரைந்து போகாத என் காதலை கவிதையாய் கண்டெடுத்தாள்.. தான் மட்டும் படித்து பெரும் சுயநலவாதியானாள்!! மச்சாள் அனுமதி இல்லாமல் என்அறைக…
-
- 39 replies
- 5.2k views
-
-
இரண்டடிக்குள் இரண்டரை கோடி! நேற்றுத்தான் அவன் வீடு கட்ட கண்டேன்..... குடும்பத்தோடு வந்து இன்று குடிபுகுந்து விட்டான்! அவனும் கறுப்பு ..அவளும் கறுப்பு.. மகனும் கறுப்பு..மகளும் கறுப்பு... ஆடம்பரம் ஏதுமற்ற வீடு... அருகில் நடப்பதை பற்றி எந்த அக்கறையும் அங்கில்லை... மின்சாரம் இல்லையென்ற கவலை இல்லை.. மேதாவி தனமான பேச்சுகளும் அங்கில்லை... பசி என்று வந்துவிட்டால்- காதலுடன்.. அவன் இதழால் அவளுக்கு ஊட்டிவிட.. தான் பெற்றதை பிஞ்சுகளுக்கும்- இதழாலேயே பரிமாற ஒரு அள்ளு உணவுக்குள் நான்கு உயிர்கள் பசியாறுமா? அழகில்லைத்தான்..அசிங்கம்தான் .. ஒளித்திருந்து பிறர் வாழ்வை பார்ப்பது.. உதவாத பழக்கம் தான்... இருந்தும் மனம் ஏங்கியது........... …
-
- 39 replies
- 6.2k views
-
-
1988ஆம் ஆண்டு மார்ச் மாதம் பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களால் ராஜிவ்காந்திக்கு இடப்பட்ட சாபம் இது அவர் அறம் பாடியது போலவே ராஜிவ்காந்தி உடல் சிதறி இறந்தார். 'இட்ட சாபம் முட்டுக' என்ற பாடலை இங்கே இணைக்கிறேன். இப்பாடல் ராஜீவ் காந்தி கொலைசெய்யப்படுவதற்கு சுமார் மூன்று ஆணடுகளுக்கு முன்பே, ராஜீவ் அவர்களின் சாவு இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற சினத்துடன் பாவலரேறு அவர்களால் அறம் பாடப்பட்டது என்பதைக் கவனிக்க. மே 21, 1991 அன்று இன்றைக்குச் சரியாக இதே நாளில் ராஜீவ் கொலை நடைபெற்றது. வரலாறுகள் என்றும் மறப்பதற்கு அல்ல. சிங்களக் கொலைஞன் செயவர்த்தனன் எனும் வெங்கணன் விரித்த வலையினில் விழுந்து செந்தமிழ் இனத்தைச் சீரழித்திடவே முந்து 'இரா சீவ்' எனும் முன்டையின…
-
- 39 replies
- 6.3k views
-
-
¿£í¸û ´Õ Ò¾¢Â À¡¼¨Ä Ó¾ýӨȡ¸ §¸ðÌõ§À¡Ð ¯í¸Ç¢ý ¸ÅÉò¨¾ ®÷ôÀÐ ±Ð? þ¨ºÂ¡ þø¨Ä Åâ¸Ç¡ ӾĢø þú¢ì¸ôÀθ¢ýÈÐ? ¯í¸û ¸Õò¨¾ þí§¸ À¡÷ô§À¡õ. PS: þí§¸ ¿¡ý "´Õ À¡¼ø À¢ÃÀøÂõ ¬ÅÐ ±ôÀÊ?" ±ýÚ §¸ð¸Å¢ø¨Ä. «¾É¡ø "¿øÄ þ¨ºÔõ ¸Õò¾¡É źÉí¸Ùõ Ó츢Âõ" ±ýÀ¨¾ §º÷ì¸Å¢ø¨Ä.
-
- 39 replies
- 5.9k views
-
-
உடைந்த நிலாக்கள் பாகம் 3 - பா. விஜய் எழுதிய கவிதை தொகுப்பை தொடராய் தருகின்றேன் படித்து மகிழுங்கள்) ரோமா புரியின் காதல் தேவதை....தொடர் 1 இந்த புமியின் வரலாற்றில் இருக்கும் நெருப்பும். முதுகில் இருக்கும் நிலச்சரிவுகளும் தோளில் இருக்கும் மலைகளும்... கைய்யில் இருக்கும் மலர்களும்... யாருடைய வாழ்க்கையாவது கதையாய் - பாடலாய்க் காற்றிடம் சொல்லி கொண்டேதான் இருக்கும். ஓர் இலையின் நுனியில் பனி சருக்கி விழும் நேரத்திற்க்குள் முடிந்து போன சரித்திரங்களும் உண்டு. விண்கற்களின் வயதை போலக் காலம் கடந்து வாழும் வாழ்விலும் உண்டு ! ஓர் உலக பேரழகியின் உயிரோட்டமான உணர்சி குவியல் இது ! ""கிளியோ பாட்ரா "" சொன்னால் உதடுகளை …
-
- 39 replies
- 15.3k views
-
-
முன்னர் சகாறா அக்காவின் ஒரு திரியில் எனது கவிதைகளை காட்சிகளுடன் பகிர்ந்தேன்...ஆனால் அங்கு பகிர்ந்த ஒன்றையும் காணவில்லை..எல்லாம் தொலைந்துவிட்டன..அவற்றின் பிரதிகளும் என்னிடம் இல்லை...அதனால் அதன் பின்னர் எழுதியவற்றை இந்த புதிய திரியினூடு பகிர்கிறேன்... அலுப்பூட்டும் உரையாடல்களில் இருந்தும், மனிதச் சுமைகளில் இருந்தும் இலக்கியம்களும்,இயற்கையின் பாடல்களும், குழந்தைகளுமே மனதை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன....மனதை அதன்வழியில் பேசவிட்டு வழிந்த மொழிகளை நெஞ்சுக்கு இனிமையை தந்த இந்த படங்களினூடு இங்கு பகிர்கிறேன்...மொழிக் குமிழிகள் உடைந்து சிந்திய என் கவிதைக்குழந்தையின் காலடித்தடங்களின் சுவடுகளை மீட்டிப்பார்க்கிறேன் இந்த திரியினூடு.. படித்துவிட்டு யாரோ சிந்தும் கண்ணீர்த் துளிக…
-
- 38 replies
- 3.4k views
-
-
தோற்றவன் நான் (ஒருபேப்பருக்காக கோமகன் ) சோகங்கள் ஆயிரம் மனதில் இருந்தாலும் சோம்பியே இருக்க விடவில்லை புலத்து வாழ்க்கை......... எல்லோரையும் போல விசைப்பலகையில் தேசியம் பேச எனக்கு தெரியவில்லை. தோற்றுப் போனோம் என்ற வரியில் நானும் பங்காளிதானே........ உண்மை இதை மறந்து விசைப்பலகையை உடைப்பதில் யாருக்கு என்னபயன் ???????? ஆனாலும், புலத்தில் உண்மையை மறைத்தால் தான் கதாநாயக வேடம்.... நன்றாகத்தான் கட்டுகின்றார்கள் புலத்தில் ஒருசிலர் கதாநாயக வேடங்களை......... வந்தாச்சு வந்தாச்சு கோடைகாலமும் வந்தாச்சு இடத்துக்கு இடம் உல்லாசப் பயணமும் வந்தாச்சு பண்ணை வீடுகளில் பார்பர்கியூ பார்ட்டியும் வந்தாச்சு வாட்டிய இறைச்சில் என் தேசியமும் அரைபடும் ......... தோற்ற …
-
- 38 replies
- 3.1k views
-
-
இன்றைய கவிதை 06.08.2007 ஆண் பெண் படைத்து அங்கம் வேறாக்கி அந்தரங்க உறவு காட்டி அற்புதங்கள் செய்தவன் யார் ? பார்க்கும்போதே ஈர்க்கும் சக்தி பார்வையாலே பேசும் மொழி கண்ணை மூட கற்பனை கண்திறந்தால் அற்புதம் படைத்தவன் யார் ? சிறிய குறிப்பு இது தினம் ஒரு கவிதைக்கான தலைப்பு இதற்கான விமர்சனங்கள் உங்கள் கருத்துக்களை அதற்கான தலைப்பின் கீழ் இட்டுக்கொள்ளுங்கள். விரும்பிய உறவுகள் உங்கள் கவிதைகளையும் தினம் ஓரு கவிதையாக இங்கு இடலாம் நட்புடன் பரணீதரன்
-
- 38 replies
- 9.5k views
-
-
அடிமை வாழ்வு வாழ்வதற்கு அகதியாதல் மேலதாம் அறிவு மெல்ல உந்தி நிற்க அணியணியாய்ப் பறந்தவர் அனைத்தையுமே துறந்து இங்கு அன்னியராய் நிற்கையில் அணைத்துச் செல்ல இணையவழி தந்தவரை நினைக்கிறேன். திசை தெரியாப் பயணம் தந்த திகில் நிறைந்த வேளையில் தவித்த எங்கள் தாகம் தீர்க்க தரணியிலே ஓர் களம் தமிழால் மட்டும் சேர்ந்து நிற்க தனித்துவாய் யாழ் களம் தந்த எங்கள் மோகன் அண்ணா விருட்சமாகத் தெரிகிறார் யாவரையும் அரவணைத்து கருத்துகளைப் பகிர்ந்திட யாழ்களத்தை அமைத்து எம்மை உணர்வினாலே இணைத்தவர் யாருமில்லை என்ற எங்கள் மனக்கிலேசம் தகர்த்தவர் யாதுமாகி நின்று களத்தை வழிநடத்தி வந்தவர் ஆண்டு பல சென்று விட்ட அகாலமான போதிலே அறிவுடனே ஆட்சிசெய்த அதிசயத்தை வியக்கிறேன் அடுத்தவரை நொந்திடாமல் …
-
- 38 replies
- 3k views
-