கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
அப்பற்றை சைக்கிள் அருமந்த சைக்கிள் குப்பைக்குள் புரண்டு கோடிக்குள் கிடந்தது நாப்பது வருச காலம் நான்தானே சுமந்தனான் இப்பதான் தெரியுதோ என்று ஏக்கத்துடன் கேட்டது அப்பரோடு இருந்த காலம் அது என்ர வசந்தகாலம் எப்படியெல்லாம் வச்சிருந்தார் எங்கெல்லாமோ சுத்தி திரிஞ்சம் கொப்பரும் கொம்மாவும் கல்யாணம் கட்டின நேரத்தில எப்பவும் எல்லா இடமும் என்னைதான் கூட்டிப் போவினம் செக்கன்ட் சோ சினிமாவுக்கும் சாமத்தில் போய் வருவம் சொக்கன் கடை தேத்தண்ணிக்கும் சட்டென்று போய் வருவம் வாட்டப்பம் இழுப்பதுவும் …
-
- 2 replies
- 708 views
-
-
எங்க நாடு கிடக்கிற பாடு எப்படிச் சொல்லுவம் நாங்க பாணுக்கும் பாலுக்கும் நாம படுகிற துன்பத்தைப் பாரும் சோத்துக்கும் கஞ்சிக்கும் நாங்க தூங்கிறம் றோட்டில பாரும் எண்ணைக்கும் காஸ்சுக்குமாக எத்தனை சண்டைகள் இங்கு ஊழலும் லஞ்சமுமாக பாழ்பட்டுக் கிடக்குது நாடு ஆளுக்கு ஒரு பங்காய் அரசியல் வாதிகள் எல்லாம் அறுத்து தின்றனர் நாட்டை அந்த பெரிய பெரிச்சாளிகள் போல எங்கள் உழைப்பெல்லாம் சுரண்டி அந்த பூசுவா கூட்டங்கள் போலே பொல்லாத திருடர்கள் இவர்கள் சிலர் போலி சோஷலிசக்காரர் இனவாதம் எல்லாம் பேசி இருந்ததை எல்லாம் குழப்பி இனத்துக்க குரோதத்தை வளர்த்து இப்போ இருக்குது நாடு கவுண்டு வீழ்த்தினோம் தமிழனை என்றும் வெற்றி விழாக…
-
- 4 replies
- 464 views
-
-
பெத்த மனம் தூங்கலையே பிள்ளை மனம் ஏங்கலையே பார்த்துப் பல நாளாச்சு பங்குனியும் பிறந்தாச்சு வந்து கூப்பிடுவானு வாசல் வந்து நின்னாச்சு விக்கல் வந்தாலும் நீ தான் நினைக்கிறனு வெசனத்த மறந்து பித்துக் கொள்ளும் தாய்மையடா தாய்ப்பால அதிகம் சுரக்குமுனு பத்தியம் பல இருந்தேன் கசக்கும் வைத்தியத்தை கற்கண்டாய்ச் சுவைச்சேன் பேச்சு வரலையினு மண்சோறு சாப்பிட்டேன் டா காத்துக் கருப்பு தீண்டும்னு அப்பா கருப்பசாமிக்கு நேந்துகிட்டார் பள்ளிக்கூடம் போக காலு வலிக்கும்னு அப்பா பத்துக்காதம் தொலவுத் தூக்கி வருவார் மண்ணுக்குள்ள போகும் முன்னே என் மகராசா வந்துடுடா சீக்கிரம் வந்தாக்கா உன்னத் தொட்டு உச்சி முகந்துடுவேன் பார்த்துப் பல நாளாச்சு …
-
- 0 replies
- 918 views
-
-
நான் உன்னைத் தொலைத்து நீ தேட நீ என்னைத் தொலைத்து நான் தேட இருவரும் தேடினோம் எங்கெங்கோ? இதுவரை கிடைக்கவில்லை நாமெங்கோ! உணர்வுக்குள் சென்று உயிருக்குள் நனைந்து உறவாடி மகிழ்ந்த நாமெங்கே? என்னை அழைத்து அளாவிப் பேசிய ஆருயிர் அன்பே நீயெங்கே! உன்னை அணைத்து உள்ளம் நனைத்த உன்னுயிர் அன்பே நானெங்கே? நம்மை இணைத்த நல்மனம் எங்கே? நன்றி சொல்வோம் தினம் இங்கே! அல்லும் பகலும் உன் நினைவு அழுது துடிக்குதே என் உணர்வு சரவிபி ரோசிசந்திரா
-
- 0 replies
- 872 views
-
-
மகிழ்ச்சியாய் வாழ அழகாய் வழிகாட்டுகிறது அன்பு சரவிபி ரோசிசந்திரா
-
- 0 replies
- 916 views
-
-
தாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு.. தலைக்கு மேல் /* நான் தூக்கி கொஞ்சிய /* என் தங்க மகன்/* என் தலைக்கு மேல் /* வளர்ந்து நிற்கிறான் /* ஒரு பயம் எனக்கு /* எப்போதாவது ஒருநாள் /* என் விசயத்தில் தலையிடாதே /* என்று சொல்லிவிடுவானோ என்று /* மகனே மறந்தும்/* அப்படி சொல்லிவிடாதே /* மரணித்து போய்விடுவேன் /* சின்ன வயதில்/* நீ அடிக்கடி கேள்விகேட்ப்பாய் /* நான் சலிக்காமல் பதில் சொல்வேன் /* என் வயதான காலத்தில்/* நானும் உன்னிடம் குழந்தை போல்/* வினா எழுப்பக்கூடும் /* கத்தாதே வாயை மூடு /* என்று சொல்லிவிடாதே /* வலி தாங்க முடியாத…
-
- 3 replies
- 825 views
-
-
ஒவ்வொரு தோட்டாவுக்கும் கணக்கு பார்த்து மௌனமானவர்கள் மீண்டும் தேடப்படுகிறார்கள். அடிக்கொரு குண்டு போட்டு நாடு பிடித்தவர்கள் விரட்டப்படுகிறார்கள்👏
-
- 2 replies
- 452 views
-
-
-
மனிதனாக எவரும் இங்கு வாழவில்லையே தனியுடமை இன்னும் இங்கு போகவில்லையே பொதுவுடைமை எங்கும் இங்கு வரவுமில்லையே பொல்லாத உலகம் இது மாறவில்லையே எல்லோர்க்கும் எல்லாமே கிடைக்கவில்லையே உழைப்பவன் கை இன்னும் உயரவில்லையே உனக்கும் எனக்கும் சமத்துவம் எதுகுமில்லையே சமூக நீதி வந்ததாக தெரியவில்லையே மாற்றம் இன்னும் இங்கு மாறவில்லையே அது வரும் என்ற நம்பிக்கைதான் கையில் இருக்குது. பா.உதயன் ✍️
-
- 1 reply
- 937 views
-
-
நான் தான் கொரோனா கொல்லுறன் என்று நாடுகளை எல்லாம் நாசம் செய்கிறேன் என்று வீட்டுக்குள்ள பூட்டி இருந்து போட்டு ஊசியை போட்டு என்னை ஓட வச்சுப் போட்டு சத்தம் இல்லாமல் கிடந்த நீங்கள் இப்போ யுத்தத்தை கொண்டு வந்திட்டியள் பேயை விரட்டிறம் என்று இப்போ பிசாசை எல்லா கொண்டு வந்திட்டியள் என்ன செய்வது எனக்கே சிரிப்பாய் கிடக்கு எட என்னை விட பெரிய கொரோனாக்கள் இருக்குது உலகத்தில என்னைப்போலவே இதுகும் கொல்லும் என்னைப்போலவே எல்லாத்தையும் அழிக்கும் சொல்லப்போனால் சும்மா விடாது சுய நலன்கள் கொண்ட கொரோனாக்கள் நான் இனம் மதம் சாதி சமயம் எந்த நாடு என் நலன் என்று பார்க்காமல் எல்லோரையும் கொன்றே…
-
- 9 replies
- 733 views
-
-
எனது தலைமையில் நடந்த பொங்கல் தினச் சிறப்புக் கவியரங்கம் நன்றி -தியா-
-
- 8 replies
- 951 views
-
-
எனக்கு உள்ளே ஒரு நெருப்பு கனன்று கொண்டிருக்கின்றது. மன அழுத்தம், சிதளூரும் காயங்கள், மற்றும் நெஞ்சு நிறைந்த வலிகள், எல்லாம் ஒன்றுகூடி ஒவ்வொரு நொடியும் என்னை விரட்டுகின்றன. இருள் ஆழமாக, அதிகமாக என்னைப் பின்தொடர்ந்து வருகிறது. மிகவும் சிக்கலான கோடுகள் என்னைச் சுற்றி வரையப்பட்டன. என் சுதந்திரம் சிறைபிடிக்கப்பட்டபோது யதார்த்தம் செத்துப்போனது. நட்சத்திரங்கள் ஒன்றன்பின் ஒன்றாக உதிர்ந்த பின்னிரவில், நிலவு மறைந்து போனது, மீளா இருள் எங்கும் வியாபித்தது. மின்மினிகள் ஒன்றன்பின் ஒன்றாக வரிசை கட்டிப் பறந்தன. நீரோடி வியாபித்த நீர்நிலைகள் வற்றி வறண்டன. பள்ளத்தாக்குகள் சுக்குநூறாகப் பிளவுபட்டன. கண்ணுக்கெட்டிய திசையெங்கும் கந்தகப் பு…
-
- 10 replies
- 836 views
-
-
கவிஞர்வை வைரமுத்து மரங்கள் குறித்து பாடிய கவிதை மரங்களை பாடுவேன்வாரும் வள்ளுவரேமக்கட்பன்பில்லாதவரை என்ன சொன்னீர்,மரம் என்றுமரமென்றால் அவ்வளவு மட்டமா.!!வணக்கம் ஒளவையேநீட்டோலை வாசியான் யாரென்றீர்மரமென்றுமரமென்றால் அத்தனை இழிவா !!பக்கத்தில் யாரவர் பாரதிதானேபாஞ்சாலி மீட்காத பாமரரை என்னவென்றீர்நெத்தை மரங்கள் என்றீர்மரங்கள் என்றால் அவ்வளவு கேவலமா !!மரம் !!!!!!சிருஷ்டியில் ஒரு சித்திரம்பூமியின் ஆச்சரிய குறிநினைக்க நினைக்க நெஞ்சூறும் அனுபவம்.விண்மீனுக்குத் தூண்டில் போடும் கிளைகள்சிரிப்பை ஊற்றிவைத்த இலைகள்உயிர் ஒழுகும் மலர்கள்மனிதன்தரா ஞானம் மரம் தருமெனக்குமனிதன் தோன்றும் முன் மரம் தோன்றிற்றுமரம் நமக்கு அண்ணன்அண்ணனை பழி…
-
- 1 reply
- 4.5k views
-
-
கடமையைச் செய்ய.... மேனி ஒடுங்கி மெல்லிய நடையொடு ஒரு கையிலே துணிப் பையொன்று மறு கையிலே நெய்ப் பந்தமொன்று திருநகரிலிருந்து கனகபுரம் நோக்கி அன்னையவர்கள் நடந்துகொண்டிருந்தாள்! இது அவனுக்காய் விளக்கேற்றும் பன்னிரெண்டாவது ஆண்டு விடுமுறை கிடைத்தால் ஓடி வருவான் அவனுக்காகவே சமைக்கத் தோன்றும் சேர்ந்து உண்டு மகிழ்வான் அவன் வெளிநாட்டில் இருந்து பணம் தருவார்கள் மனம் தருவது அவன் மட்டுமே குடிசையைக் கூட கோவிலாக்குவான்! இரு குழைந்தைகளுக்கு அப்பா அவன் தாய்வீடு வந்தால் அவனே குழந்தை விடைபெறும் நேரம் விழிகொண்டு பாரான் தொடர்ந்து சென்று வாசலில் நின்றால் திரும்பிப் பார்த்து கவனம் என்பான்! அவன் உடலை தொட்டு அழவும் கொடுப…
-
- 2 replies
- 792 views
-
-
-
- 1 reply
- 451 views
-
-
சுஐப் எம். காசிம்- ஒவ்வொரு வருடத்தின் ஒக்டோபர் இறுதிதினம் நெருங்கி வரும் நாட்களிலே நெஞ்செல்லாம் வலியெடுக்கும் நினைவெல்லாம் தடுமாறி நீர் நிறையும் கண்களிலே உணர்வெல்லாம் தத்தளித்து உதிரம் அலையெழுப்பும் தாயகத்தின் நினைவெழுந்து தவிதவித்து மனம் கதறும் வேகாத உடலோடு வெந்த உயிர் தொங்கி நின்று பிறந்த தாய் மண்ணினைவில் பிரிவில் துடிதுடிக்கும் "இன்னுயிர்த் தாய் ஈன்றெடுத்த இரட்டைக் குழந்தைகள் போல் நூறு பலஆண்டுகளாய் நோகாதும் நொடியாதும் ஒருயிராய், ஈருடலாய் ஒன்றிணைந்து வாழ்ந்த அந்தக் காலத்தின் நினைவெழுந்து கண்கள் குளமாகிவிடும் ஓர் புலத்தில் தான் வாழ்ந்…
-
- 0 replies
- 655 views
-
-
நெடு நாளாய் கவிதைப் பக்கம் போகவில்லை. காரணம் கவிதை வரவில்லை. தமிழினத்தின் பரிதாப நிலைதான் அதற்கான காரணம். எரிகின்ற வீட்டில் குளிர்காய முற்பட்டது போல எல்லோரும் தலைவர்களாக முற்படும் அவலம் மனத்தை என்னவோ செய்கின்றது. இது எனது பழைய கவிதை. முகநூல் நினைவூட்டியதால் பகிர்கிறேன். தொகையறா பிடி கழன்ற வெட்டரிவாள் மொட்டைக் கத்தி பெயரிழிந்த ஊர் பேயன் மந்த புத்தி அடி கழன்ற சட்டி அன்பற்ற தாய்மை அவனியிலே இன்று தமிழினத்தின் சால…
-
- 0 replies
- 446 views
-
-
தீரா விடம் – சித்தி கருணானந்தராஜா தெள்ளுதமிழினுக்கு திராவிடமென்றொரு தீக் கொள்ளியை வைத்தாரடி கிளியே கொடுமை புரிந்தாரடி உள்ளத்தில் நாம் தமிழர் உண்மை அதை உணர்ந்தும் பள்ளத்தில் வீழ்ந்தோமடி கிளியே பற்றை இழந்தோமடி ஆரியச் சங்கரரும் ஆங்கிலக் கால்டுவெல்லும் பேரிதை வைத்ததனால் கிளியே பெருமையிழந்தோமடி ஆரிவர் எங்குளரென் றனைவரும் விழித்திடத் தா கூரும் அழைத்தாரடி கிளியே கூற்றிடம் வீழ்ந்தோமடி நாம்தமி ழர்கள் என்று நம்மினத் தார்க்கும் சொல்ல நாத்தடுமாறுதடி கிளியே நகைப்புக்குள்ளானோமடி ஏன் தமிழர்க்கு இந்த இழிநிலை என்றுலுகம் எம்மை இகழுதடி கிளியே இதுவென்ன மாயமடி சாதிகள் தன்னைக்கொண்டு சமத்துவம் என்னும்…
-
- 4 replies
- 1.3k views
-
-
ஆட்டம் காண்கிறதா சிறி லங்கா-பா.உதயன் அன்னியச் செலாவணி கையில இல்லையாம் அத்தியாவசிய பொருளும் வாங்கவும் முடியாதாம் எல்லாப் பொருளும் இப்போ தங்கத்தின் விலையாம் பண வீக்கம் கூடி பாணுக்கும் பாலுக்கும் பஞ்சமாம் நாட்டில ரோட்டில நிற்கினம் சனங்கள் இப்போ சரியான பொருளாதாரக் கொள்கையும் இல்லை நாட்டில இப்போ கால் ஊண்டிப் போட்டான் சீனாக் காரான் சிறி லங்காவில அரைவாசியை வேண்டியும் போட்டான் இவன் வட்டிகள் எல்லாம் குட்டி போட்டு கடனைக் கட்டவும் காசும் இல்லை லங்காவிடம் எடுத்த கடனும் இப்போ கூடிப் போச்சு இனி எடுக்கவும் முடியாது கொடுக்கவும் முடியாது மத்திய வங்கியும் சொல்லியும் போட்டுது கையில இப்போ…
-
- 1 reply
- 644 views
-
-
ஐந்திணை விக்ரமாதித்யன் குறிஞ்சி கண்ணில் தெரிவதெல்லாம் மலை முகடுகள் ஒரு நறுஞ்சுனை தொலை தூரத்தில் சிற்றாறு மரம் செடி கொடிகளில் கனி சுமந்த கிளைகள் உச்சியில் கொம்புத் தேன் கூடுகள் அதிசயமாய் துலங்கும் அருவிகள் மெளனமே இருப்பான சித்தர்கள் முன்னை பழங்குடிகள் வானம் தொடும் மஞ்சுக்கூட்டம் தண்ணீர் பட்டுத் தெறிக்கும் தேக்குகள் மூங்கில்கள் பக்கத்திலேயே பாக்குமரங்களும் ஏலக்கொடிகளில் எச்சமாய் மணம் சிந்திக் கிடக்கும் மலை முந்திரி படர்ந்து தழுவும் மிளகுக் கொடிகள் வேரில் பழுத்துக் கிடக்கும் பலாக்கள் தேன் கதலிகள் வேட்டுவ வள்ளியின் விழிப்பார்வைக்கும் எச்சில் முத்தத்துக்கும் யாசித்து நிற்கும் வடிவேலன் …
-
- 0 replies
- 734 views
-
-
கதையைக் கேட்டியேடி கமலா மாமி கந்தையற்ற பொடியன் கணக்கில பெயிலாம் பொன்னையா வாத்தியின் கடைசிப் பொட்டை பொடியனைப் பிடிச்செண்டு ஓடிற்றாளாம் யாருக்குத் தெரியும் இவ்வளவு காசு எப்படி வந்ததெண்று இந்தப் பெரிய வீடு கட்டுகினம் மல்லிகா டீச்சரின் மகள் இத்தினை வயசாப் போச்சு இன்னும் இருக்கிற கட்டாமல் ஏழிலை செவ்வாயாம் என்னமோ நடக்குது ஒன்றும் சொல்லுகினம் இல்லை கன பேர் வந்து போகினம் அவளுக்கு வாய் கூட விட்டிட்டு இருக்கிறாளாம் வெளியில தெரியாமல் ஏதோ பெரிசா கதைக்கினம் எப்ப வந்தது இவைக்கு எல்லாம் இவை எந்த ஊர் எந்தப் பேர் வழி என்று எங்க போய் விழுந்தவை எங்களுக்கு தெரியாதா அடுத்த வீட்டு அம்பிகா …
-
- 6 replies
- 870 views
-
-
நான் ஒரு இஸ்லாமியன் இஸ்லாமியக் குடியரசுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை நான் ஒரு இஸ்லாமியன் எனக்கும் எந்திரத் துப்பாக்கிகளுக்கும் பெண்களை இருட்டறையில் பூட்டுவதற்கும் அமெரிக்க டாலர்களுக்கும் கல்லால் அடித்துக்கொல்வதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை நான் ஒரு இஸ்லாமியன் இறைவனை நம்புகிறவன் அதனாலேயே கருணையை நம்புகிறவன் கடவுளினால் நீதி மறுக்கப்பட்டால் அந்தக் கடவுளை சந்தேகிக்கவும் தயங்காதவன் சமாதானத்திலும் சுதந்திரத்திலும் இறைவனை தொட்டு உணர்கிறவன் மசூதியை இடித்தவனை எப்படி வெறுக்கிறேனோ அவ்வாறே புத்தரின் சிலையை வெடிவைத்து தகர்ப்பவனையும் வெறுக்கிறேன் எல்லா பழங்கால தண்டனைமுறைகளும் அழித்தொழிக்கப்பட வேண்டும் என்று நம்புகிறேன் நா…
-
- 2 replies
- 674 views
-
-
அம்மாவின் சேலை நினைவலைகள்.... அருமையான வரிகள். மறைந்து போன சிறப்பான குரல்... 😰 https://m.facebook.com/story.php?story_fbid=10220735760246759&id=1319608745&wa_logging_event=video_play_open
-
- 4 replies
- 1.8k views
-
-
புலிகளை வாழ்த்துவோம் புத்தெழில் கொஞ்சும் தமிழீழத்தில் தித்திப் பளிக்கும் முஸ்லீம் சிறுவரின் முத்தம் வாங்கி முழங்கு போர்க் களத்தே இத்தமிழ் விடுதலைப் புலி எழுகின்றான்…. எங்கள் சிறிய பிள்ளைகள் எழுச்சி பொங்கிப் படைக்கும் புலிகள் தோளில் தொங்கி ஆடத் துடிக்கும் காலம்… மதங்கள் வேறுதான் மனங்கள் நூறு விதங்களா? இல்லை! தமிழினம் ஒன்றே! கற்றவர் மலிந்த கலையாழ் மண்ணும் அற்புத மீனிசை அமைந்த தேனாடும் நெற்கதிர் குலுங்கும் வன்னி நிலமும் நற்றமிழ் முதுபுகழ் மாந்தை நன்னாடும் உற்ற கோணமா மலையும் மக்கள் பற்றிவாழ் காத்தான் குடிப்பட்டணமும் கற்குடாக் கடலும் நாட்டுக் கவிதை முற்றிப் பழுத்த அக்கரைப் பற்றும் விற்பனை மடுவின் விரிந்த காடும் பற்றி…
-
- 1 reply
- 689 views
-
-
நீங்கள் மெல்லச் சாகத் தொடங்குகிறீர்கள், நீங்கள் பயணம் செய்யாவிட்டால், நீங்கள் வாசிக்காவிட்டால், நீங்கள் வாழ்வின் ஓசைகளைக் கேட்காவிட்டால். உங்களையே நீங்கள் பாராட்டிக் கொள்ளாவிட்டால். நீங்கள் மெல்லச் சாகத் தொடங்குகிறீர்கள், நீங்கள் உங்கள் தன்மதிப்பைக் கொல்லும்போது, பிறர் உங்களுக்கு உதவி செய்ய அனுமதிக்காதபோது. நீங்கள் மெல்லச் சாகத் தொடங்குகிறீர்கள், அதே பாதைகளில் தினமும் நடந்து… நீங்கள் உங்கள் பழக்கங்களுக்கு அடிமையாகும்போது, உங்களது வழக்கமான செயல்களை மாற்றாமல் இருக்கும்போது வெவ்வேறு வண்ணங்களை நீங்கள் உடுத்தாதிருக்கும்போது உங்களுக்குத் தெரியாதவர்களோடு நீங்கள் பேசாத…
-
- 13 replies
- 1.6k views
-