கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5129 topics in this forum
-
காகித எழுதி. தேர்ந்த கவி ஒருவனின் கைகளில் சிக்கிக்கொண்ட காகித எழுதி கன வேகமாக நிரப்பிக்கொண்டிருந்தது காகிதத்தின் வெற்றிடங்களை கனமான பொருளோடு... சிறந்த சிந்தனாச் சிப்பியின் கைகளில் சிக்கிய சிறிய தூரிகை கிறுக்கிய அகண்ட நெடிய ஓவியத்தைப்போல் நிறைத்து வழிந்தன கவிதைகள் வெற்றிடத்தில் இருந்து வெற்றிடத்தைப் பற்றியதாக... சூனியத்தில் இருந்து வெறுமையில் இருந்து பிறந்துகொண்டிருந்தது பெருமைகளின் சிந்தனை பிரசவிக்கும் தாயின் முக்கலும் முனகலும் இல்லாமலே பிரசவித்துக்கொண்டிருந்தது காகித எழுதி கவிதையை நியாங்களில் இருந்து நிஜங்களில் இருந்து வெறுமையை நிரம்பிக்கொண்டு பிறந்துகொண்டிருந்தது அந்தக் கவிதை தேன் நிறைந்த பூவின் வாசமாக கிறங்க வைத்தன வெற்றிடத்தைப் பற்றி …
-
- 2 replies
- 729 views
-
-
ஊர விட்டு வந்த நானும் ஊரை பற்றி எண்ணும் நேரம் உண்மைகளை சொல்ல போனால் ஊருக்குள்ள ரொம்ப சோகம் 5லட்சம் உழைச்சாலும் 5காசு கையில் இல்ல காருக்குள்ள திரிஞ்சாலும் கால்கடுப்பு போகவில்ல நாலுபேர தெரிஞ்சாலும் நல்லதொரு வாழ்க்கையில்ல தாய்கொடுத்த பாசமிங்க தந்துவிட யாருமில்ல. பள்ளி நண்பன் தூரம் இல்ல தேடி போக நேரம் இல்ல துள்ளி விளையாடவில்ல தூக்கமது போதவில்ல கூலி வாழ்க்க கூட அது ஊர போல இல்லடா கேடு கெட்ட வாழ்க்க வெளிநாட போல எங்கடா சொல்லி பாரு ஊரில் சொன்ன வார்த்த கூட போலிடா சொந்த பந்தம் நேரில் என் தாய பார்த்து கேலிடா காதலிச்ச கன்னி அங்க கண்ணீரோடு நானுமிங்க என் மனசு ஏங்குதிங்க மன்மதன்னு பேருதாங்க காதலிச்சா கூட அவ காச தான பாக்கிறா காதலது வந்தா நீ மனசுக்குள்ள பூட்டுடா ஆச…
-
- 4 replies
- 1.1k views
-
-
எப்போதும் நான் ஜன்னல் ஒன்றை தூக்கிக்கொண்டு பயணிக்கின்றேன் அவ்வப்போது கம்பிகளினூடாக காலைக் கருக்கலையும் பொழுதுபடுதலையும் பார்ப்பேன் போறவாற ஆக்களையும் பார்ப்பேன் கம்பிகளினூடாக பர்க்கும் பேதே என்னால் எதையும் எவரையும் புரிந்துகொள்ள முடிகின்றது போற போற இடங்களில் தற்காலிக வீடுகளிலெல்லாம் இருக்கும் ஜன்னலோடு என்ர ஜன்னலையும் பிணைத்துவிடுவேன் வேற ஆட்கள் செய்த ஜன்னலால் பார்த்த மாதிரி இருக்காது ஊரில் தொலைத்த வீடுகள் வளவுகள் உறவுகள் தென்னைமரங்கள் அவை எல்லாம் இல்லாத குறையின்றி ஜன்னல் என்னை பாதுகாக்கின்றது. என் ஜன்னலால் பார்க்கும் போது coniferous மரங்களும் பனைக் கூடல்களாக தெரியும் நான் ஒரு நாடோடி ஆனால் …
-
- 8 replies
- 1.1k views
-
-
தேடுகிறேன் என் செந்தமிழை தேசம் விட்டு தேசம் வந்து தேடுகிறேன் என் செந்தமிழை செல்லுகின்ற தெருவெல்லாம் கேட்பதெல்லாம் செந்தமிழா...? என்னுடன் படிப்பவர் கதைப்பதெல்லாம் செந்தமிழா...? தமிழ் வகுப்பு மாணவர்கள் கதைப்பதெல்லாம் செந்தமிழா...? குழந்தை இன்று தாய்தன்னை அழைப்பதுதான் செந்தமிழா...? நம்மவர் கடை என்று நாம் சென்றால் அவர் கதைப்பதெல்லாம் செந்தமிழா...? நம்மை விட மூத்தவர் கதைக்கிறார் செந்தமிழா...? அன்றவர் எம்மண்ணில் ஆங்கிலேயம் அடிமை வந்த எம் இரத்தம் இன்று என்ன சும்மாவா விட்டு வைக்கும் ...? உடம்பெல்லாம் ஓடுது எம்மவர்கள் உடம்பெல்லாம்!! அம்மாவும் கதைக்கி…
-
- 10 replies
- 2.2k views
-
-
ஏய் அப்பு! ஏன் உனக்கு மப்பு? நானொரு வப்பு! ஆடாத எங்கூட தப்பு! பத்திரமா ஓடித் தப்பு! போட்டிடுவன் ஆட்டுக்காலு சூப்பு! அந்தாபாரு லொலி பப்பு! வச்சிடுவன் உனக்கு ஆப்பு! சும்மா சும்மா பம்பலுக்கு!
-
- 2 replies
- 657 views
-
-
[color=green]அழுகிறாள்.... தலையை முட்டி கண்ணீர் கொட்டி கதறியழுகிறாள்... அந்த கயவர் செய்த செயலால் ஜய்யோ பதறி துடிக்கிறாள்.... பட்ட மரமாய் விழுந்த பிள்ளை கட்டி அழுகிறாள்.... பிய்ந்த பிள்ளை உடலை பார்த்து வெம்பி அழுகிறாள்.... ஆறாத்துயரில் ஜய்யோ பாவம் அலறி அடிக்கிறாள்..... அந்த கோர பகையை இன்றே அவளும் திட்டி தீர்க்கிறாள்... சுத்தி வந்த பிள்ளையின்று சுடலை போகிறாள்.... பெத்தமன வயிறை இன்று தட்டி அழுகிறாள்.... செஞ்சோலை மீதான தாக்குதலின் போது தாயொருத்தி தலையில கைiயை வைத்து கதறும் காட்சிக்கு எழுதப்பட்டது யாராவது முடிந்தால் அந்த படத்தை இதில் இணைத்து விடவும…
-
- 3 replies
- 1.3k views
-
-
ஹைக்கூ இதுவென நம்பி நான் எப்போதோ எழுதிய சில ஹைக்கூக்கள் (?!) -------------------------------------------------------------------------------------------- செருப்பு சகிப்புத் தன்மைக்கு சரியான சாட்சி ----------------------------- சீச்... சீ... வெட்கப்பட்டது குடை! உள்ளே காதலர்கள் ------------------------------- தீக்குச்சி தலைக்கவசம் இருந்தும் தான் தப்ப வழியில்லை! ------------------------------- கறுப்பு மேகத்தை கழுவ இயற்கைச் சேவகன் அள்ளித் தெளிக்கும் நீர் மழை! --------------------------------------- நன்றி -------------------- http://kaviyarankam.blogspot.com/
-
- 8 replies
- 9.1k views
-
-
எனக்கும் அவனுக்கும் வாழ்கையென்னும் விடுதலையில்லா சிறைச்சாலைக்குள் புரிந்துகொள்ளா முரண்பாடு விரக்தியான நாட்கள் கண்ணீர் சிந்தும் கோலங்கள் முகமூடியால் மறைத்துக் கொள்ளும் முரண்பாடு போலியான உறவிற்கள் மலர்ந்து நிற்கும் சின்ன மலர்கள் சிக்கித் தவிக்கின்றது பாசமென்னும் முரண்பாட்டுக்குள் யாரோடும் சொல்ல முடியாச் சோகங்கள் எம் முரண்பாட்டால் நாளைய முதியோர் இல்லத்திற்காய் தயார்ராகின்றது
-
- 16 replies
- 4.3k views
-
-
இன்றைய கவிதை 06.08.2007 ஆண் பெண் படைத்து அங்கம் வேறாக்கி அந்தரங்க உறவு காட்டி அற்புதங்கள் செய்தவன் யார் ? பார்க்கும்போதே ஈர்க்கும் சக்தி பார்வையாலே பேசும் மொழி கண்ணை மூட கற்பனை கண்திறந்தால் அற்புதம் படைத்தவன் யார் ? சிறிய குறிப்பு இது தினம் ஒரு கவிதைக்கான தலைப்பு இதற்கான விமர்சனங்கள் உங்கள் கருத்துக்களை அதற்கான தலைப்பின் கீழ் இட்டுக்கொள்ளுங்கள். விரும்பிய உறவுகள் உங்கள் கவிதைகளையும் தினம் ஓரு கவிதையாக இங்கு இடலாம் நட்புடன் பரணீதரன்
-
- 38 replies
- 9.6k views
-
-
-
அ ன்பு உள்ளங்களே..... அ ன்பு காலை வணக்கம் .....அ திகாலை எழுத்தவன் ......அ திசக்தி ஆதவ்னையே.....அ ருகில் வரவைப்பான்......!!!அ ன்பினால் ... அ கிலத்தையே வெல்லலாம் ....அ ங்கிகள் தொடக்கம் ...அ ருகில் உள்ள உயிர்வரை ... அ ன்பு செலுத்துங்கள் .....!!!அ ற்புதங்கள் என்பது ....அ திசயம் செய்வதல்ல ...அ ன்புக்கு கட்டுபட்டு ...அ ண்ட சராசரத்தோடு ....அ டக்கமாவதே .........!!!அ ன்று சொன்னதை செய்ததை ....அ ன்றே மறப்பவனே ....அ தி உயர் மனிதன் ....அ தையே நினைத்துகொண்டிருந்தால் ...அ ன்றைய இன்பத்தை இழப்பாய் ....!!!அ ந்தி சாயும் நேரம் ....அ ன்றைய நிகழ்சிகளை ...அ சைபோட்டுபாருங்கள் ....அ ருவருப்பான செயல் எது ...?அ ரவணைப்பு செயல் எதுவென .....!!!
-
- 3 replies
- 2.3k views
-
-
பட்டும் படாமல் இருப்போரை எல்லாம் தட்டிக் கொடுத்து தன் பக்கம் ஈர்க்காமல் - தலைகனத்து கொட்டிடும் தேல் எனவே கொட்டி கொட்டி வெட்டி விடுவதுதான் விடுதலைக்கு பங்களிப்பா? பெயருக்கு தலைவராக இருப்போரெல்லாம் பெரிய தலைவர்களை எல்லாம் சரியாக பகைத்து கொண்டே இருந்தால் யார் பக்கம் சாய்வார் அவர்? பட்ட மரமென்று ஒன்று இருந்தால் விட்டு வெட்டினால், வேர் விட்டு வெட்டினால் சட்டெனெ பெய்யும் மழையில் சடுதியில் துளிர்த்துவிடும் ஒட்ட வெட்டினால் நட்டம் நமக்கல்லவா? உயிர் காக்கும் பிரச்சனைகள் இருக்கும் போது மயிர் காட்டி கட்டுரை வரைவதும் - பதிலுக்கு வயிற்று பிழைப்பிற்க்கெ வக்காலத்து வாங்குகிறார் என்பதும் உயிர் காக்குமா? நம் தமிழர் உயிர் காக்குமா? எலி கூட்டமல்ல க…
-
- 10 replies
- 2.9k views
-
-
ஒற்றையடிப் பாதை கன்னங் கரிய இருட்டு சில் வண்டின் ரீங்காரம் உடலை சிலிர்க்க வைக்கும் குளிர் தூரத்தில் கோட்டானின் கதறல் பக்கத்தில் இருந்த பதிந்த மரக்கிளையில் தொங்கி விழிகளை உருட்டிய வௌவால் எதிரே தெரிந்த நிமிர்ந்த மரம் தந்த ஏகாந்தப் பேயை ஏற்றிடும் தோற்றம் எதையும் இவன் இலட்சியம் செய்யவில்லை இலட்சியம் எல்லாம் எதிரே தூரத்தில் ஏதிலியாய் நின்ற ஒற்றைக் குடிசை. இன்றோ நாளையோ இடிந்து விழுவேன் என்றே சொல்லிய குடிசை மண் மதில் அந்த சுவரில் ஊதுபத்தி சூட்டில் எரிந்தும் எரியாததுமான மங்கலான கலண்டர் முருகன் படம் விடிந்தால் சூரியன் விழுந்தடித்து உள்ளே வரும் வித்தியாசமான ஓலைக் கூரை மூலையில் கிடந்த முழுசாய் கிழிந்த ஓலைப் பாயில் முழங்கால் முகத்துக்கு நேரே நீட்டி முழுவட்டமாய் …
-
- 2 replies
- 1.3k views
-
-
அவைக்கஞ்சா சிங்கமே! அண்ணன் பாலசிங்கமே! இதயத்தில் இடி விழுந்தது! எம் தேசத்தின் குரல் ஒடிந்தது! விடியும் வேளையில் விளக்கு அணைந்தது!-புலிக் கொடியும் இறங்கி அரைக் கம்பத்தில் பறந்தது! ஈழத்தின் அரசியல் யாப்பை எழுத வேண்டியவனே! எப்படித் தாங்குவோம் உன் இழப்பை! தமீழீத்தில் இன்னொரு சுனாமியாய் உன் இழப்பு! நீ இல்லாத பேச்சுவார்த்தைக் களம்!-அது நீர் இல்லாத குளம்! நோய் வந்த போதும்-புலிக்கு ஓய்வு மரணத்தில் தான்!-என்று சிரித்தபடியே நீ செப்பியதை! நினைத்துப் பார்க்கவே முடியவில்லை!-நான் நினைக்கிறேன் இனிப்பேச்சு வார்த்தை இல்லை! பேச வேண்டியதெல்hம் நீ பேசி விட்டாய்! பேச்சுக்கு இனி ஓய்வு-அதனால் தானோ-நீ எடுத்து விட்டாய் ஓய்வு!-நீ பேச வருகின்றாய் என்றால் எ…
-
- 23 replies
- 3.9k views
- 1 follower
-
-
காற்றில் கரையும் இலையின் பனித்துளி போல் இந்த வருடமும் இனிதாய் நகர்ந்தது சுயநலத்தில் கரையும் மனிதநேயம் சொந்தங்களுக்காக வாழும் இரவல் வாழ்க்கை... மனசுக்கும் செயலுக்கும் இடையே செயற்க்கையாக செய்யப் பட்ட நாகரீக மதில்சுவர் – இவைகளின் மத்தியில் இந்த வருடமும் இனிதாய் நகர்ந்தது ... ஏழையின் வயிற்று பசி போக்காத இறை வழிபாடு... மனிததுவம் வளர்க்காத மானிட வளர்ச்ச்சி... அகம் மறை(ரு)க்கும் அறிவியல் வளர்ச்சி... பூவின் இதழினை ரசிக்க புள்வெளி பனித்துளி ருசிக்க அம்மாவின் அன்பில் மயங்க மனித வாழ்வின் உன்னதம் உணர இடமளிக்காத அவசர உலகில் இந்த வருடமும் இனிதாய் நகர்ந்தது ... மனதை ரணமாக்கும் கெளரவ கொலைகள்... கண்ணெதிரே மறையு…
-
- 0 replies
- 513 views
-
-
நான் நினைத்தேன் பெரிய கனவு ஒன்று.. என் கனவில் பெரிய நட்சத்திரம் ஒன்று வெளியானாது அது என் வாழ்வின் தூரம் என்று புத்தி கெட்ட என் மனசுக்கு அவன் என்னை விட்டு சென்ற பின்புதான் புரிந்தது ..
-
- 0 replies
- 539 views
-
-
இனிய நண்பர்களே! என் மனதில் நட்பின் வலியில் பிறந்த ஒரு கவிதை. உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பிரியப்படுகிறேன். அன்றொருநாள் ஒரு சின்னப் பையன் மாலைப்பொழுதின் மயக்கும் இசையில் உள்ளம் மகிழ்ந்து ஓடி வந்தான் தென்றல் ஒன்று தவழ்ந்து வந்தது முல்லைச் செடியும் அணைத்துக் கொண்டது எத்தனை வண்ணம், எத்தனை வாசம் தன்னை மறந்து ஒவ்வொரு பூவாய் கட்டி அணைத்து முகர்ந்து கொண்டான் முல்லைச் செடியும் அன்பை பொழிந்தது காலைப் பொழுதில் கண்கள் திறந்து முல்லைப் பூவை கண்டு மகிழ்வான் மதிய நேரம் முல்லை இல்லா உணவும் உண்ணான் அடம் பிடிப்பான் அந்திப் பொழுதில் முல்லை பூவுடன் காதல் பேசி கண்கள் சிமிட்டி நடுநிசி தன்னில் முல்லை செடியுடன் ரகசியம் பேசி தூங்கி போவான் …
-
- 3 replies
- 1.2k views
-
-
யார் இவர்கள்? இவர்கள் ஏன் சாகவேணும்? ஏன்? ஏன்? இவர்கள் உயிராயுதம் எடுத்துக் களமாடுகையில் நாமெல்லாம் ஸ்கோர் பார்த்துக்கொண்டிருந்தோம்.! அனைவருமே ஆட்டமிழந்து வெளியேறினர்! பாவம் இவர்களைச் சுமந்த உதரங்கள்! அவை இன்னும் ஆட்டமிழக்கவில்லை இயலாமை எனும் செருக்களத்தில்! நாங்களும் தான் மாறவில்லை காத்திருக்கோம் அடுத்த இன்னிங்ஸ் தொடங்கும் வரை! அநுராதபுரம் வான்படை தாக்குதலின் காவியமான கரும்புலிகள் நினைவாக.
-
- 5 replies
- 830 views
-
-
எம்தமிழ் தேசத்திலே ஏற்றமுடன் நாம் இருந்தோம் செந்தமிழ் தேசத்திலே சேர்ந்து நாம் வாழ்ந்திருந்தோம் அத்தனை உறவுகளும் ஆவலாய்க் காத்திருந்தோம் அண்ணன் பிரபாகரனின் ஆணையில் வாழ்ந்திருந்தோம் விடுதலை விலங்ககலும் வேளைதான் பார்த்திருந்தோம் விதி செய்த வலையினதில் வெந்தே நாம் வீந்துவிட்டோம் அஞ்சி அஞ்சி நாம் அடிமையாய் வாளோமென அன்னை மண்ணின் அடிமை விலங்கொடிக்க வெஞ்சினம் கொண்டே வேங்கைகள் எழுந்தனர் போராட்ட வீரராய் போர்க்கோலம் பூண்டனர் சொத்து சுகங்கள் சொந்தங்கள் இழந்தனர் பருவ வயதின் பற்றெல்லாம் துறந்தனர் அன்னை மண் காத்திட அத்தனை பேரும் ஆயுதங்கள் தாங்கி ஆணைகள் காத்தனர் புன்னகையுடன் அன்று பொருதிடச் சென்றனர் புறநானூறு படைத்தே புனிதராய் நின்றனர் சுதந்திரம் வேண்டி சுவாசத்தைச் …
-
- 17 replies
- 3.5k views
-
-
'உனையிழந்தெம் தேசம் அழுகிறது..."" நேசத்து உறவாகி எம் தேசமதில் உலவியவன்... தேசத்துரோகிகளால் தெருவினிலே வீழத்தப்பட்டான்.... எம் தமிழர் துடிக்கையிலே பொங்கியவன் எழுந்தவனே.... உலகத்தை தட்டியவன் நீதிதனை கேட்டவனே.... சிங்க கோட்டையுள்ளே சீறி புலியாய் எழுந்தவனே.... அலரி மாளிகையிலும் ஆர்ப்பாட்டம் நடத்டதியவன்... மும்மொழியில் தேர்ச்சி பெற்றான்.... முன்னுதாரணம் பல சொல்வான்... அச்சம் இன்றியவன் அவலங்களை எடுத்து உரைப்பான்... துச்சமதாய் உயிர் மதித்து துனிந்து நின்று குரல் கொடுப்பான்.... எண்ணில்லா பணிகளதை எங்களுக்காய் அவன் அழித்தான்... கதிரவெளியினிலே எம் தமிழர்…
-
- 1 reply
- 726 views
-
-
http://www.youtube.com/watch?v=5WOSPyV1-dI&feature=related
-
- 0 replies
- 539 views
-
-
மூச்சடங்கிப்போன இறுதிப்பொழுதுகள் ஆண்டுகள் ஆறானதோ? எங்கள் உறவுகள் அணுஅணுவாய் வதைபட்டு அல்லல்கள் பலபட்டு துடிதுடித்து சாவடைந்து ஆண்டுகள் ஆறானதோ? இரசாயன நெருப்புக்குள் வெந்து கருகி மடிந்தும் பச்சிளங்குழந்தைகள் பாழும் குண்டுகளால் பரிதவித்து இறந்தும் ஆண்டுகள் ஆறானதோ? சதிவலை பின்னியநாடுகளை இறுதிவரை நம்பி காத்திருந்து உயிர் பறிக்கப்பட்டு ஆண்டுகள் ஆறானதோ? பதுங்குகுழிகள் வெட்டி உயிரை பாதுகாக்க முடியாத வலயத்துள் பல நூறாயிரம் எறிகணைகள் வீழ்ந்து பதைபதைத்து எம் உறவுகள் துடிதுடித்துசாவடைந்து ஆண்டுகள் ஆறானதோ? நம்பிக்கை வைத்த நாடுகள் தான் கூடிச் சதி புரிந்தது தெரியாமலும் அயல்நாட்டு அரசின் பக்கபலத்துடன்தான் இனவாத சிங்கள அரசு இனப்படுகொலை செய்கின்றது என்பதை அறியாமலும் அன்று எம்உ…
-
- 1 reply
- 643 views
-
-
-
மரமென்றும் சொல்ல முடியாத தமிழன் ஏ... மரங்களே! ................................ என்ன பார்க்கிறீர்கள்? உங்களை அல்ல... மரங்களைத்தான். உங்களிடம்தான் பதவி மோகம் பஞ்சோத்தித் தன்மை காட்டிக் கொடுப்பு கழுத்தறுப்பு நடவடிக்கை போட்டி பொறாமை பொருள் தேடி அலைச்சல் நெஞ்சில் வஞ்சம் நேர்மையில்லாத் தன்மை சாதி சமய பேதம் சதி நடவடிக்கைகள் இப்படிப் பல... அதனால்தான்... உங்களை அல்ல... நீங்கள் நாட்டுக்கு என்ன செய்தீர்கள்? நம் மக்களுக்குத்தான் என்ன செய்தீர்கள்? அவர்களுக்கு ஒரு நேர உணவுக்கு உதவுங்கள் என்றால் ஓலமிட்டு ஒப்பாரி வைக்கிறீங்கள் அவர்களுக்காக ஆர்பாhட்டம் செய் என்றால் ஐஐயோ... வேலை என்பீர். ஆனால் மரங்கள் அப்படியில்லையே! அதனால்தான் உங…
-
- 1 reply
- 650 views
-
-
வேர்க்கும் குளிர் இரவுகளில் கோர்த்துக்கொள்கிறது விழிகளில் நீர் ....... நிசப்த யுத்த விளைவுகளின் வெப்பம் எரிக்கிறது கணங்களை ................ விரித்த சிறகுகளை மடக்கி திணிக்கப்பட நிகழ்வுகளை சுமந்து நேற்றைய வீற்றிருப்பின் கற்றைகளை சுமக்கையில் நாளைய வரவில் வல்லையில், எந்தநூர் வயல் வெளிகளில் , சந்நிதியில் , உப்பாற்றங்கரைகளில், வல்வைச்சந்தியில் , என்ன நிகழ்விருக்கும்? வரப்புகளில் நடைபோகும் நாரைகள் உரத்துக்கத்தும் ஊளைக்கிடாய் ௬ட்டம் பால்மொச்சையடிக்கும் சிறு குட்டியாடு பருவகால தும்பிகள் வண்ணாத்துப்பூச்சிகள் எல்லாமிருக்குமோ ? முற்றத்து மல்லிகை வேலியோர எல்லைப்பனை நாயுருவி சுமக்கும் தேன் ௬டு அகலபடந்த அறுகி…
-
- 1 reply
- 2.3k views
-